கருத்து, கொள்கை அளவில் வேறுபாடு இருந்தாலும் சுபாஷ் போஸ் காந்தியை மிகவும் மதித்தார் என்பது வரலாறு. அதனால்தான் காந்தியை மதிப்பவர் என்று சொல்லாமல் பின்பற்றுபவர் என்று சொல்லி விட்டார் போல திரு கிருஷ்ணன்
ஜெர்மனி போயிருந்தபோது காந்திக்கு 'இப்போது வாய்ஸ் இல்லை' என்று சுபாஷ் போஸ் சொன்னபோது அதை மறுத்தாராம் ஹிட்லரின் வெளியுறவு மந்திரி.
35 .00 நிமிடத்திலிருந்து காந்தியை இந்தக் காலத்தில் .எதிர்ப்பவர்கள் பற்றி பேச்சு வருகிறது.
"வீட்ல வேலை செய்யறாங்களே.. அவங்களுக்கு ஏன் காபி கொடுக்கக் கூடாது? அவங்களுக்கு ஏன் துணி எடுத்துக் கொடுக்கக் கூடாது" என்று சின்ன வயசுலயே மனசுல தோன்ற வைத்ததற்கு காரணம் காந்திதான்." என்கிறார். (இப்போ வேற பேர் இல்ல சொல்லிகிட்டிருக்காங்க!)
கக்கூஸிலிருந்து, கட்சி அரசியல், கடவுகள் வரை பேசிய ஒரே தலைவர் காந்தி. ஊடகங்கள் இல்லாத அந்தக் காலத்தில் எல்லா உலகத்தலைவர்களுக்கும் அறிமுககமான, மதிக்கப்பட்ட ஒரே தலைவர் காந்தி.
இந்தக் கூட்டம் நேருவுக்காகத்தான் வந்தது என்று சர்தார் பட்டேலே சொன்னார். சுபாஷ் சந்திரபோஸை விட மக்கள் செல்வாக்கு அதிகம் பெற்றவர் சந்தேகமில்லாமல் நேருதான்" என்கிறார்.
படேலின் பிறந்த நாளன்று காந்தியும் அவரும் வேறு ஏதோ பேசிக்கொண்டிருந்ததில் காந்தி படேலின் பிறந்தநாளையே மறந்து விடுகிறார். அவர் சென்றதும் காந்தி வருத்தப்பட்டு அவருக்கு கடிதம் எழுதுகிறார். இதே நேருவுக்கு அப்படி செய்ய முடியாது. அவர் சின்னக்குழந்தை மாதிரி வருத்தப்படுவார்.
என்ன கருத்து வேறுபாடு இருந்தாலும் நேருவும் படேலும் காந்தி சொல்வதைத்தான் செய்தார்கள். நேரு மேல் படேலுக்கு மாறாத அன்பு இருந்தது. இன்றைக்கு இருக்கும் ஒரு வெறுப்பு அரசியல் அப்போது இல்லை. அவர்களுடைய விவாதங்களில் கோபம் இருக்கும். சூடு இருக்கும். ஆனால் வெறுப்பு இருக்காது. பரஸ்பர மரியாதை இருக்கும். படேல், நேரு, கிருபளானி,ராஜாஜி... ஏன், சுபாஷ் போஸே வெளிநாட்டிலிருந்து மகாத்மாவுக்கு கடிதம் எழுதும்போது தேசத்தந்தை என்றுதான் அட்ரஸ் செய்கிறார்.
விழுமியங்கள், கட்டமைத்தல் என்றெல்லாம் கடபுடா என்று பேட்டி சென்றாலும், காந்தியே சறுக்கிய இடம் 1937 ல் சுபாஷ் போஸை அவர் எதிர்த்தது. நேரு சுபாஷுக்கு ஆதரவாய் இருந்தாலும் போஸ் காந்தியை மதித்தார்,நேருவை கடுமையாய் எதிர்த்தார், விமர்சித்தார்.
மனிதகுலம் உள்ளவரை காந்தி நினைக்கப்படுவார். மனித வாழ்க்கை என்பது போராட்டங்களால் ஆனது. போராட்டம் இருந்துகொண்டே இருக்கும். எப்படி போராடுவது என்று கேள்வி வந்தால் காந்திய வழியில் என்று விடைவரும்.
=======================================================================================
இன்றைய ஸ்பெஷல் : காதலிக்கு ஒரு அப்பீல் !!
= = = = = = = = = =
காதலியின் காதல் பற்றி ஒரு வியப்பு!
= - = = = = = = =
மனிதகுலம் உள்ளவரை காந்தி நினைக்கப்படுவார்.... இதெல்லாம் டூ மச் இல்லையா?
பதிலளிநீக்குஅவர் சொல்லும் காரணம் ஏற்புடையது.
நீக்குநெல்லை:))))))
நீக்குகாந்திக்கு இருந்த அபரிமிதமான செல்வாக்கை மறுக்க இயலாது. பலரும் அவர் சொன்ன உடனேயே தாங்கள் அணிந்திருந்த நகைகளைக் கழற்றிக் கொடுத்திருக்கின்றனர். பலர் தங்கள் வாழ்வை இழந்திருக்கின்றனர்.
பதிலளிநீக்குஅத்தகைய மக்களா இன்று இந்தியாவில் இருக்கின்றனர்? தங்கள் கடமையைச் செய்யவே லஞ்சம் வாங்கும் திருமங்கலம் ஈரோடு கிழக்கு இருபது, முப்பது சதம் மக்கள் ஒரு சாம்பிள் இல்லையா?
இன்றைய அரசியல் காறித்துப்பும்படி இருக்கிறது. என்ன சொல்ல?
நீக்கு:(((
நீக்குபாரதியாரின் பாடல்களை மிக நன்றாக இசையமைத்திருக்கிறார்கள். நல்ல நினைவுகளை எழுப்பும் பாடல்கள் இவ்விரண்டும்.
பதிலளிநீக்குகாதல் வாழ்க...
நீக்குவாழ்க, வாழ்க!
நீக்குமுருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா.. வணக்கம்.
நீக்கு__/\__
நீக்குபாடல்கள் கேட்டு ரசித்தவை. முதல் காணொளி - பார்க்க முயல்கிறேன்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குகாணொளிகள் கண்டோம். காந்தி புத்தகங்கள் சிறுவயதிலேயே விரும்பி படித்திருக்கிறேன்.
பதிலளிநீக்குகாற்று வெளியிடை கண்ணம்மா........ இன்றைய நாளுக்கான பாடல் . :) அருமை.
நன்றி மாதேவி.
நீக்குசிறப்பான பதிவு..
பதிலளிநீக்குதகவல்கள் அருமை
வாழ்க நலம்..
நன்றி செல்வாண்ணா.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா... வணக்கம்.
நீக்குபொதிகையில் வெள்ளிக்கிழமை வாழ்விக்க வந்த காந்தி நிகழ்ச்சி பார்ப்பேன். இவர் என் சம்பந்தி அம்மா எதிர்வீட்டில் இருப்பவருக்கு அண்ணன். இவரின் தங்கை அண்ணன் பொதிகையில் பேசுகிறார் கேளுங்கள் என்று சொல்லி கேட்டு இருக்கிறேன்.
பதிலளிநீக்குகாந்தியின் புலன் அடக்க புத்தகத்தை சிறு வயதில் மதுரை காந்தி மண்டபத்தில் வாங்கி படித்து இருக்கிறேன். என் சித்தப்பா உனக்கு இந்த மாதிரி புத்தகம் சிறு வயதில் தேவையா? என்று கேட்டார்கள்.
காதலர் தினத்திற்கு பகிர்ந்த இரண்டு பாடல்களும் அருமையான பாடல்கள். ஒன்று சோகம் , ஒன்று ஆனந்தம்.
அட... ஆச்சர்யமான தகவல். திரு பி ஏ கிருஷ்ணன் கருத்து, பதிவுகள் எல்லாம் படித்திருக்கிறீர்களா?
நீக்கு//சுபாஷ் சந்திரபோஸை விட மக்கள் செல்வாக்கு அதிகம் பெற்றவர் சந்தேகமில்லாமல் நேருதான்// இது உறுத்தும் தலைப்பு. ஆட்டோ சங்கர், திண்டுக்கல் லியோனி, வயிரமுத்து போன்றவர்கள் பல படித்த மேதைகளைவிட மக்கள் செல்வாக்கு மிக்கவர்கள். ஏன் ஷகீலா கேரளத்தில் எல்லோரையும்விட மக்கள் செல்வாக்கு அதிகம் இருந்தவராக இருந்தார். ஆனால் அது ஒரு அளவுகோலா?
பதிலளிநீக்குஅதானே!
நீக்குஇனிய பாடல்கள்...
பதிலளிநீக்குநன்றி.
நீக்குமுதல் பகுதியில் மிகவும் கவர்ந்த விஷயம், அன்றைய அரசியல்....கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒருவருக்கொருவர் மரியாதையும் மதிப்பும் கொண்டிருந்தாங்க. அதுதான் நல்ல ஆரோக்கியமான விஷயம். இப்ப உள்ளதை நினைச்சா....ஹூம் என்ன சொல்ல?
பதிலளிநீக்குஅவர் சொல்லும் விஷயங்கள் சுவாரசியமாக இருக்கு, ஸ்ரீராம்.
கீதா
கருத்துரைக்கு நன்றி.
நீக்குஓஹோ இன்று வேலன்டைன்ஸ் டே ஸ்பெஷலா!!
பதிலளிநீக்குஇரு பாடல்களும் சூப்பர் பாடல்கள், ஸ்ரீராம்
கீதா
நன்றி!
நீக்கு