வெள்ளி, 22 டிசம்பர், 2017

வெள்ளி வீடியோ 171222 : காசுபணம் சந்தோஷம் தருவதில்ல வைரக் கல்லுக்கு அரிசியோட ருசியுமில்ல     2007 இல் வெளிவந்த படம் ஒன்பது ரூபாய் நோட்டு.  பரத்வாஜ் இசை.  ஸ்ரீனிவாஸ் பாடிய பாடல் என்று நினைவு.  

     முன்னர் காட்சியுடன் பார்த்திருக்கிறேன்.  இப்போது எவ்வளவு தேடினாலும் கிடைக்கவில்லை.  இப்போது கிடைத்திருக்கும் வீடியோ கூட யாரோ ஒரு நண்பர் தன்னை வைத்து எடுத்து பாடலை இணைத்திருக்கிறார்.

     பாடலை முழுமையாகக் கேட்டு ரசிக்கலாம்.  பாடலும் வரிகளும்தான் முக்கியம்.
     தங்கர் பச்சான் தானே எழுதிய பாடல் என்று நினைக்கிறேன்.

     காட்சியுடன் ரசிக்க வேண்டும் வேண்டும் என்றால் இந்த சுட்டிக்குச் சென்று  Forward செய்து அதில் 9.00 லிருந்து கேட்கவேண்டும்.  மொத்தமே 11.47 அளவுதான். 

மார்கழியில் குளிச்சுப்பாரு குளிரு பழகிப்போகும் 
மாதவனா வாழ்ந்துபாரு வறுமை பழகிப்போகும் 
உப்பில்லாம குடிச்சுப்பாரு கஞ்சி பழகிப்போகும் 
பாயில்லாமப் படுத்துப்பாரு தூக்கம் பழகிப்போகும் 
வறுமையோட இருந்துபாரு வாழ்க்கை பழகிப்போகும் 
சந்தோஷத்தை வெறுத்துப்பாரு சாவு பழகிப்போகும் 

என்னோட சொத்தெல்லாம் தொலைச்சுப்புட்டேன்  - இப்ப 
என்பேரில் உலகத்தையே எழுதிகிட்டேன்.
துறவிக்கு வீடுமனை ஏதுமில்லை 
ஒரு குருவிக்கு தாசில்தார் தேவையில்லை 
சில்லுன்னு காத்து சித்தோட ஊத்து 
பசிச்சா கஞ்சி படுத்தா உறக்கம் 
போதுமடா போதுமடா போதுமடா சாமி 
நான் சொன்னாக்க வலம் இடமா சுத்துமடா பூமி   [ மார்கழியில் ]

காசுபணம் சந்தோஷம் தருவதில்ல 
வைரக்கல்லுக்கு அரிசியோட ருசியுமில்ல 
போதுமென்ற மனசைப்போல செல்வமில்ல 
தன் பொண்டாட்டி போல ஒரு தெய்வமில்ல 
வேப்பமர நிழலு விசிலடிக்கும் குயிலு 
மாட்டுமணி சத்தம் வயசான முத்தம் 
போதுமடா போதுமடா போதுமடா சாமி அட 
என்னப்போல சொகமான ஆளிருந்தா காமி  [ மார்கழியில் ]


67 கருத்துகள்:

 1. இனிய வெள்ளிக்கிழமை காலை வணக்கம் துரை அண்ணா ,ஸ்ரீராம் ,கீதா அண்ட் கண்ணழகி :)

  பதிலளிநீக்கு
 2. ஆஹா ஆஹா!!

  கொக்கரக்கோ !!! கொக்கரக்கோஓஓஓ.சேவல் வந்து கூவிருச்சா?!!!!!!...இங்கயும் சேவல் கூவிருச்சே!!

  செவலுக்குக் காலை வணக்கம்

  ஸ்ரீராம், துரை சகோ காலை வணக்கம்!!

  கீதா

  பதிலளிநீக்கு
 3. சேவலே உங்கள் பெயர் அருமையாக இருக்கிறதே!! இப்படி தூயத்தமிழில் பெயர் வைத்துக் கொள்ளக் கற்றுக் கொடுத்தவர் யாரோ?!! ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 4. என்ன இருந்தாலும்
  சேயிழை காத்து வளர்த்த சேவல் இல்லையா!...

  அதான் காலையிலேயே கூவி விட்டது!..

  பதிலளிநீக்கு
 5. நன்றி ஏஞ்சல்... வாக்களித்து, லிங்க் பதிவிலும் இணைத்துவிட்டேன்.

  பதிலளிநீக்கு
 6. அங்கேயும் போய் பார்த்துக்கேட்டேன் ..இனிமையான பாடல்

  பதிலளிநீக்கு
 7. வலைத்தளக் கடமை ஆற்றியாச்சு!!! ஹா ஹா ஹா..

  இப்படம் பற்றிக் கேள்விப்பட்டதுண்டு ரொம்ப அருமையான படம் என்று. ஆனால் பார்த்ததில்லை. பாடலும் கேட்டதில்லை....கேட்டுவிட்டுப் பின்னர் வருகிறேன்....

  கீதா

  பதிலளிநீக்கு
 8. @ஸ்ரீராம் :) அடிச்சி பிடிச்சி துரை அண்ணா வரதுக்குள்ள ப்ரெசென்ட் போட்டேன் :)
  hhaha :)

  பதிலளிநீக்கு
 9. எல்லாருக்கும் bye :) நாளைக்கு வரேன்

  பதிலளிநீக்கு

 10. என்ன காக்கா சேவல் எல்லாம் நைட்ல தூங்காம இங்க உலா வருகிறது

  பதிலளிநீக்கு
 11. ஆமாம்... இன்று நீங்கள் முதல் ஆளாய் வருகை! முதல் லிங்க்கில் பாடல் பாதிதான் இருக்கும். ஆனாலும் இனிமையான பாடல். மனதைத் தொடும் வரிகள். குட்நைட் ஏஞ்சல்.

  பதிலளிநீக்கு
 12. எல்லாமே மனதில்தான் உள்ளது.
  மனம் காலியாகிவிட்டால்.இன்பமும் இல்லை துன்பமும் இல்லை. அமைதி மட்டும்தான்.

  பதிலளிநீக்கு
 13. வாங்க பட்டாபிராமன் ஸார்... அபூர்வ வருகை. நன்றி.

  பதிலளிநீக்கு
 14. வாங்க மதுரை... அதென்னவோ உங்கள் பின்னூட்டம் என் மெயில் பாக்சில் காட்டுவதேயில்லை.

  பதிலளிநீக்கு
 15. அருமையான பாடல். நன்றி. காலை வணக்கம்.

  பதிலளிநீக்கு
 16. மதுரையின் பின்னூட்டம் என்னோட மெயில் பாக்ஸுக்கும் வராது. குலுக்கிப் பார்த்தால் தான் கிடைக்கும். ஒன்பது ரூபாய் நோட்டுப் படம் பார்த்தது இல்லை. பாட்டு மட்டும் எப்படிக் கேட்டிருப்பேன்? ஹிஹிஹிஹி

  பதிலளிநீக்கு
 17. இந்தப் படம் பார்த்திருக்கிறேன்.
  இந்தப் பாடல் கேட்டது மறந்து விட்டது. மிக அருமை. நன்றி ஸ்ரீராம்.
  இளங்காலை வணக்கம்.

  பதிலளிநீக்கு
 18. வாங்க வல்லிம்மா... காலை வணக்கம். நல்ல பாடலை ரசித்தமைக்கு நன்றிம்மா..

  பதிலளிநீக்கு
 19. வாங்க கீதா அக்கா... படம் பார்த்திருக்கிறேன். மறந்து விட்டது. ஆனால் மறக்க முடியாத பாடல். கேளுங்கள்.

  பதிலளிநீக்கு
 20. வாங்க சம்பத் கல்யாண். முதல் வருகை? நன்றி.

  பதிலளிநீக்கு
 21. நல்லதொரு பாடல். கேட்டிருக்கிறேன். படம் பார்த்ததில்லை.

  பதிலளிநீக்கு

 22. அதீதமாய்ப் பனிகொட்டும் மார்கழியில்
  அதிகாலையில் அவசரமாய் எழுந்து
  நடுக்கும் குளிரில் நன்னீராடியும்
  நாயகனை நினைக்காது ஒரேபாடாய்ப்
  படுத்தும் மனதைக் கொஞ்சம் அடக்கி
  பவ்யமாக அவனை வணங்கி – உனக்கு
  ஈடாக உண்டோ யாரும் என நினைத்து
  சூடாக வெண்பொங்கலை உள்ளே தள்ளி
  போடாத தாளத்தையெலாம் போட்டே பாடினேன்
  ஆடாத மனமும் ஆடுதே
  ஆனந்த கீதம் பாடுதே . .

  பதிலளிநீக்கு
 23. @ Pattabi Raman:

  //..மனம் காலியாகிவிட்டால் இன்பமும் இல்லை துன்பமும் இல்லை. //

  அது சரி. மனம் காலியாகுமுன், மனிதன் காலியாகிவிடுகிறானே !

  பதிலளிநீக்கு
 24. என்னோட சொத்தை எல்லாம் தொலைச்சுப்புட்டேன்.

  "சரி"

  இப்ப என்பேரில் உலகத்தையே எழுதிக்கிட்டேன்

  "யாரைக்கேட்டு எழுதினான் ?"

  பிறகு காணொளி காண்கிறேன்.

  பதிலளிநீக்கு
 25. வாங்க ஏகாந்தன் ஸார்.. form வந்துட்டீங்க போல! வெண்பொங்கலா? நடத்துங்க.... நடத்துங்க....

  //து சரி. மனம் காலியாகுமுன், மனிதன் காலியாகிவிடுகிறானே ! //

  ஆமாம்.. உண்மைதான்.

  பதிலளிநீக்கு
 26. வாங்க கில்லர்ஜி...

  //இப்ப என்பேரில் உலகத்தையே எழுதிக்கிட்டேன்

  "யாரைக்கேட்டு எழுதினான் ?"​//


  ஹா... ஹா.... ஹா... அவர் சொல்றது "அன்புநிறை" உலகை! வரிகளை ட்யூனோட ஒருதரம் கேளுங்க.

  பதிலளிநீக்கு
 27. பாடல் வரிகள் நன்றாக இருக்கு. படம் அந்தக்காலத்துலயே விலை கொடுத்து வாங்கி இன்னும் பார்க்கவில்லை. சத்தியராஜின் பெயர் சொல்லும் படம் என்று நண்பர்கள் சொல்லுவார்கள்.

  பதிலளிநீக்கு
 28. ஏஞ்சலின் - இன்னும் "மாட்டைக் காத்த மான்விழியாள்", "ஆட்டைக் காத்த ஆயிழை", "கோழியைக் காத்த கோமகள்", "நாயைக் காத்த நாரீமணி", "கிளியைக் காத்த கிளிமொழியாள்" பட்டம்லாம் பாக்கியிருக்கு, உபயோகப்படுத்திக்குங்க. (அதிராவினால் அமைந்த அநியாயம் இது. எல்லோருப் பேர் வச்சுக்க ஆரம்பிச்சாச்சு)

  பதிலளிநீக்கு
 29. வாங்க நெல்லைத்தமிழன்... அழுகாச்சி படம்! இந்தப் பாடல் எனக்குப் பிடிக்கும்.

  பதிலளிநீக்கு
 30. // "மாட்டைக் காத்த மான்விழியாள்", "ஆட்டைக் காத்த ஆயிழை", "கோழியைக் காத்த கோமகள்", "நாயைக் காத்த நாரீமணி", "கிளியைக் காத்த கிளிமொழியாள்" //

  கீதா அக்கா, அதிரா.... பெயர் மாற்றிக்கொள்ள பட்டம் தேவை என்றால் நெல்லையை அணுகவும்!!

  பதிலளிநீக்கு
 31. இதோ இன்னும் கொஞ்சம்..

  கழுகைக் காத்த காரிகை!..
  ஆந்தையைக் காத்த ஆரணங்கு!..

  முயலைக் காத்த முத்தழகி!..
  முட்டையைக் காத்த பொட்டழகி!..

  பூனையைக் (!) காத்த பூவிழி!..
  எலியைக் காத்த ஏந்திழை!..

  மைனாவைக் காத்த மான்மகள்!..
  புறாவைக் காத்த பொன்மகள்!..

  புறாவை ஏற்கனவே சிபி சக்கரவர்த்தி காப்பாத்திட்டார்..
  இருந்தாலும் சொல்லி வைப்போம்!...

  பொழுது விடிஞ்சி பார்க்கிறப்போ ஒரே களேபரமா - சலங்கைச் சத்தமா இருக்கும்...

  அதுக்குள்ளே நாம இடத்தைக் காலி பண்ணிடுவோம்!..

  பதிலளிநீக்கு
 32. வணக்கம் சகோதரர் ஸ்ரீராம்!

  உள்ளந் தொட்டது பாடலின் வரிகள்!
  உவமிக்க வேறேதும் தேவை இல்லை!

  ஆசைகளை அழிச்சுப்புட்டா
  ஆனந்தமே சூழும்!
  அத்தனையும் தெரிந்துகொள்ள
  ஆயுளுண்டா கூறும்..:)

  நல்ல பாடலும் பகிர்வும்!
  நன்றியுடன் நல் வாழ்த்துக்கள் சகோ!

  பதிலளிநீக்கு
 33. சத்ய ராஜின் பன்முகங்களில் ஒன்று கண்டேன் பாடலையும் ரசித்தேன்

  பதிலளிநீக்கு
 34. வாங்க துரை செல்வராஜூ ஸார்... சரியான போட்டி. பட்டங்கள் கொட்டுதே...

  பதிலளிநீக்கு
 35. வாங்க சகோதரி இளமதி..

  //ஆசைகளை அழிச்சுப்புட்டா
  ஆனந்தமே சூழும்!
  அத்தனையும் தெரிந்துகொள்ள
  ஆயுளுண்டா கூறும்..:)​//


  அருமையாகச் சொன்னீர்கள்.

  பதிலளிநீக்கு
 36. கீதா மதிவாணனின்.. திரை விமர்சனம் படிச்சு... ஆயிரம் ரூபா நோட்டு... படம் சமீபத்தில் பார்த்தேன்..

  இது 9 ரூபா நோட்டா.. கேள்விப்பட்டதில்லை... பாடல் சோகம் தவழ்ந்து நிக்குது.. பாடல் கேட்டதும் படம் பார்க்கோணும் எனும் எண்ணம் வந்து விட்டது...

  பதிலளிநீக்கு
 37. /// (அதிராவினால் அமைந்த அநியாயம் இது. எல்லோருப் பேர் வச்சுக்க ஆரம்பிச்சாச்சு)////

  ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:)) நான் என் கிட்னியை ஊஸ் பண்ணி ஒவ்வொன்றைக் கண்டுபிடிச்சா:) அதை ஓசியில ஊஸ் பண்ணிட்டுப் போயிடுறாங்க:).. இனி நான் கொப்பி வலது எடுத்து வைக்கப் போறேஏஏஏஏன்ன்ன்ன்ன்ன்:))...

  இன்னொன்று நெல்லைத்தமிழன்.. பெயர் மாத்துவது இப்போ ஓல்ட் பாஷன் ஆகிட்டுது:).. இனி ஏதும் புதுசா கண்டு பிடிக்கப் புறப்படுறேன்ன்ன்ன்:)).. ஹா ஹா ஹா

  பதிலளிநீக்கு
 38. //தங்கர் பச்சான் தானே எழுதிய பாடல் என்று நினைக்கிறேன்.//

  தங்கர்பாச்சான் என்றாலே எனக்கு எப்பவும் பார்த்தீபனைன் அப்படம் தான் நினைவுக்கு வரும்.. படப் பெயர் மறந்துபோச்சு ஆனா அந்த மயிலிறகு இன்னும் கண்ணுக்குள் நிக்குது...

  பதிலளிநீக்கு
 39. //இளமதி said...
  வணக்கம் சகோதரர் ஸ்ரீராம்!//

  ஆவ்வ்வ்வ் இளமதி மெதுவா நகரத் தொடங்கிட்டா.. வெல்கம் இளமதி... மகிழ்ச்சியா இருக்குது பார்க்க.

  பதிலளிநீக்கு
 40. வாங்க அதிரா... கண்ணை நினைச்சுக்க ரெடி என்றால் ஒன்பது ரூபாய் நோட்டு படம் பார்க்கலாம்!

  "கிட்னியை ஊஸ் பண்ணி" - இதையே ஒருத்தர் அடிச்சுட்டார்!!!!

  //தங்கர்பாச்சான் என்றாலே எனக்கு எப்பவும் பார்த்தீபனைன்//

  படம் பெயர் அழகி. நல்ல படம்.

  பதிலளிநீக்கு
 41. ஸாரி... நினைச்சுக்க இல்லை நனைச்சுக்க - கண்கள் நனைய பார்க்கலாம்!

  பதிலளிநீக்கு
 42. மிக அருமை பாடல் காணொளியும் கண்டேன்.... நன்றி பகிர்வுக்கு

  பதிலளிநீக்கு
 43. பாடல் இப்போதான் கேட்டேன்ஸ்ரீராம் நல்லாருக்கு....காட்சிகள் ரொம்ப அழகா இருக்கு..

  கீதா

  பதிலளிநீக்கு
 44. பாடல் வரிகள் அருமை!! மனசு என்னவோ பண்ணுது சில வரிகள்!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 45. துரை சகோ!!!! வாவ்!! என்ன சொல்ல!! செம அழகு பெயர்கள்!!! கலக்கிட்டீங்க போங்க!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 46. அதிரா ஆயிரம் ரூபா நோட்டு அப்படினு ஒரு படமா..ஆஆஆ!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 47. ஆஹா நெல்லை என்ன ஒரே பெயர் சூட்டல் விழாவா இருக்கு!!! ஹா ஹா ஹா ஹா.,..

  ஸ்ரீராம் சரிதான் நீங்க நெல்லை, துரை சகோ எல்லாரும் பெயர் சூட்டல் விழா வா...சூப்பர் போங்க...கலக்கல்தான்..சரி சரி எல்லாரும் மாமன் அல்லது சகோதர சீர்க் காசு வாங்கிருங்கப்பா...ஹா ஹா ஹா...சும்மா எல்லாம் பட்டம், பெயர் எல்லாம் வழங்கப்படாது ஆமாம்..!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 48. (அதிராவினால் அமைந்த அநியாயம் இது. எல்லோருப் பேர் வச்சுக்க ஆரம்பிச்சாச்சு)//

  ஹா ஹா ஹா ஹா நெல்லை நான், கீதாக்கா எல்லாம் பெயர் வைச்சுக்கலைப்பா!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 49. @நெல்லைத்தமிழன்

  //நெல்லைத் தமிழன் said...
  ஏஞ்சலின் - இன்னும் "மாட்டைக் காத்த மான்விழியாள்", "ஆட்டைக் காத்த ஆயிழை", "கோழியைக் காத்த கோமகள்", "நாயைக் காத்த நாரீமணி", "கிளியைக் காத்த கிளிமொழியாள்" பட்டம்லாம் பாக்கியிருக்கு, உபயோகப்படுத்திக்குங்க. (அதிராவினால் அமைந்த அநியாயம் இது. எல்லோருப் பேர் வச்சுக்க ஆரம்பிச்சாச்சு)  ஹாஹ்ஹா :) இதில் மாட்டை காத்த மைந்தன் எங்கப்பாக்கு இந்த பேரை எடுத்துக்கறேன்
  ஆட்டை காத்த ஆயிழை ..அது எனக்கு ..பாபு னு ஒரு ஆண் ஆடு 12 வயது வரைக்கும் இருந்தான் என்கூட
  அதனால் இந்த பட்டத்தை அக்செப்ட் செயிறேன்
  கோழியை காத்த கோமகள் ஓகே அதையும் ஏற்றுக்கொள்கிறேன்
  நாயை காத்த நாரீமணி :) தன்யனாளேன் :) மிக நன்றி
  கிளியை காத்த கிளிமொழியாள் :) கீச் கீச் தங்கீச் :)
  அப்புறம் இது அதிராவால் சமையலை இந்த ஆயிழை சேயிழை பட்டம் தந்தது ஸ்ரீராம் :)

  பதிலளிநீக்கு
 50. @

  //முயலைக் காத்த முத்தழகி!..
  முட்டையைக் காத்த பொட்டழகி!..

  பூனையைக் (!) காத்த பூவிழி!..
  எலியைக் காத்த ஏந்திழை!..

  மைனாவைக் காத்த மான்மகள்!..
  புறாவைக் காத்த பொன்மகள்!..//

  துரை அண்ணா உவகையுடன் இந்த பட்டங்களை ஏற்றுக்கொள்கிறேன் :))

  எலியை காத்த ஏந்திழை ?//!! உங்களுக்கு எப்படித்தெரியும் நான் சுண்டெலி வளர்த்தது அவன் பேரு எலி தம்பி :)

  பதிலளிநீக்கு
 51. மிகவும் அருமை பாராட்டுக்குரியது

  பதிலளிநீக்கு
 52. ஸ்ரீராம், எனக்கு கண்ணை நினைச்சுக்கிற:) ஹையோ வெரி சோரி:) கண்ணை நனைக்கிற மாதிரிப் படங்களும் ரொம்பப் பிடிக்கும்... உங்களுக்குத் தெரியாது .. சில படம் திரும்ப பார்த்து... பார்த்திடப்போகினமே என்னை என:) ஓடிப்போய் பார்த்ரூம் கதவைப் பூட்டிப்போட்டு ஓஒவென அழுததும் உண்டு ஹா ஹா ஹா...

  பார்த்தீபன் அங்கிளின் எல்லாப் படமும் கிட்டத்தட்ட பார்த்திருக்கிறேன்... குடைக்குள் மழை தவிர ஏனையவை சூப்பர்....

  அழகியும் சூப்பர் ஆனா நான் சொன்னது அதுவல்ல...

  ஒரு மகன் .. பார்த்தீபன் தான் அப்பா என தெரியாது... மயிலிறகுகள் சேகரிப்பதே அக்குழந்தையின் வேலை... படம் நினைவு வருதில்லை..

  பதிலளிநீக்கு
 53. ///ஹா ஹா ஹா ஹா நெல்லை நான், கீதாக்கா எல்லாம் பெயர் வைச்சுக்கலைப்பா!!!

  கீதா///
  “ பெயர் வைக்காத கீதா”... இது எப்பூடி?:)

  பதிலளிநீக்கு
 54. @athira ..அது தென்றல் படம் னு நினைக்கிறேன்

  பதிலளிநீக்கு
 55. ஆவ்வ்வ்வ் அஞ்சு அதேதான்.... அதேதான்... கிள்ளிவளவன்:)... அதுவும்ம் அழகிபோல ஒரு சோகப்படம்:(..


  https://www.youtube.com/watch?v=xpAzfAil3U0

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!