Monday, April 12, 2010

வயலில் அவல் அகோனிபோரா !அட இன்னொரு முறை படித்தாலும் அதே தான், அவளல்ல - அவல் - வெறும் வாயை மெல்லுவதற்குப் பதில்.

ஆனா செய்தி என்னவோ மெய்தாங்க.   அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள திட்டாபார் ஆராய்ச்சி நிலையத்தில் இருக்கும் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள "கோமல் சௌள்" (Komal saul) என்னும் புது அரிசி வகை பற்றி அறிய நேர்ந்தது.

இந்த ரக அரிசி மற்ற வகைகளைப் போலவே ஒரு ஹெக்டேருக்கு நான்கு முதல் ஐந்து டன் வரை கண்டு முதல் தரக் கூடியது.  வயலில் விளையும் காலம் மட்டும் நூற்று நாற்பது அல்லது நூற்றைம்பது நாட்கள்.  அவல் என்று சொல்லிவிட்டு நெல், அரிசி என்று ஏதேதோ சொல்கிறீர்களே, இது நியாயமா என்கிறீர்களா, இதோ விஷயத்துக்கு வந்து விட்டோம்:

அரிசிக்குக் கடினத் தன்மை கொடுக்கும் அமைலோஸ் (amylose) என்னும் பொருள் வேறு ரகங்களுடன் ஒப்பிடும் பொழுது ஐந்தில் ஒரு பங்கு தான் இதில் இருக்கிறது. அதனால்... 

"அதனாலென்ன? சீக்கிரம் சொல்லேன்யா, இன்னும் நாலு ப்ளாகு பார்க்கப் போக வேண்டாம்?" 

"அட கொஞ்சம் பொறுமையா இருங்க ஏன் இப்படி ராப்பிச்சைக்காரர் மாதிரி பறக்குறீங்க?" 

"சரி சொல்லுங்க - அரிசி, சோறுன்னு வந்ததும் ராப்பிச்சை ஞாபகம் வந்துடுச்சா!" 

இந்த அரிசியை அரை மணி நேரம்  குளிர்ந்த நீரில் ஊற வைத்தால் போதும் - சாப்பிட முடியும்.  ஹார்லிக்ஸ் மாதிரி அப்படியேயும் சாப்பிடலாம் என்கின்றனர் இதைத் தோற்றுவித்த பிரம்மாக்கள். - அதனால் தான் அவல் என்றோம்.

நம் வாழ்க்கையில் இதன் தாக்கம் எவ்வாறிருக்கும் என்று யோசித்ததில் ,

1. சமையல் நேரம் குறைந்து, வீட்டில் சமைப்பவர்களுக்கு சற்று சங்கடக் குறைவு.

2. சமையல் நேரம் குறைவதால் எரிபொருள் செலவு குறைவு.

3. எரி பொருள் உபயோகம் குறைவு என்பதால் கரியமில வாயு உற்பத்தியும் குறைந்து, பூமியின் வெப்பமாதல் குறையும் வாய்ப்புகள் அதிகம் [பின்னே இருக்காதா ? - உலக ஜனத்தில் பாதிப் பேர் அரிசி சாப்பிடுபவர்கள் ஆயிற்றே! ]

4. உணவகங்களில் காத்திருத்தல் குறையும். 

5. அப்படியே சாப்பிடும் சாத்தியம் இருப்பதால், பிரயாணங்களில் கெட்டுப் போய் விடும் என்ற பயமின்றி எடுத்துச் செல்லலாம். [மூட்டை முடிச்சு அதிகம் ஆனாலும் - செலவு குறையும் ]

6. உணவுப் பொருள் வீணாவது குறையும்!

இட்டிலி தோசை போன்ற பண்டங்கள் தரம் மாறாமல் இருந்தாலும், தட்டை, முறுக்கு போன்ற பண்டங்கள் ரப்பர் மாதிரி இருக்குமோ?

நம் ஆராயச்சியாளர்களிடமிருந்து இது போன்ற வரவேற்கத் தக்க கண்டுபிடிப்புகளை மேலும் எதிர்பார்க்கிறோம்.   

15 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

அப்போ இனிமே யாரும் வெறும் வாயில
அவல் மெல்ல வேண்டியதில்லை :))

அப்பாதுரை said...

அப்படியே சுத்தமான குளிர்ந்த நீருக்கும் வழி ஏதாவது கண்டுபிடிச்சிருக்காங்களானு நம்ம கோமல் காரங்களைக் கேட்டுச் சொல்லுங்க. இல்லே காத்துல வேகுற அரிசியோ அவலையோ கண்டுபிடிக்கச் சொல்லுங்க. புண்ணியமா போகும். எனக்குத் தான்.

அப்பாதுரை said...

>>>அகோனிபோரா !

யாரைத் திட்டுறீங்க?

எங்கள் said...

அப்பாதுரை சார் - அது அந்த அரிசியின் பெயராம். Aghonibora.

பாஸ்கரன் said...

"வயலில் அவள் - அகார ஃ போபியா "
என்று ஒரு ஹைக்கூ எழுதி விட்டீர்களோ என்று படித்து வியந்து போனேன். எப்பொழுது சந்தைக்கு வரும் ?

meenakshi said...

//இந்த அரிசியை அரை மணி நேரம் குளிர்ந்த நீரில் ஊற வைத்தால் போதும் - சாப்பிட முடியும்.//
அப்ப கணிசம் இருக்குமா? கணிசம் இல்லாட்டி கட்டுபடியாகதே!

குரோம்பேட்டைக் குறும்பன் said...

'எல்டாம்ஸ்' ரோடை 'கமல்ஹாசன்' ரோடு என்று மாற்றுவதைவிட, அவ்வை சண்முகம் ரோடுக்கு அடுத்த ரோடை அவ்வை ஷண்முகி சாலை என்று மாற்றிவிட்டுப் போகலாம்.

Chitra said...

Genetically altered rice? mmmmm.......

Anonymous said...

There is a difference between gene mod and cross pollination. Please do not confuse this with BT brinjal or BT cotton.

அப்பாவி தங்கமணி said...

//இந்த அரிசியை அரை மணி நேரம் குளிர்ந்த நீரில் ஊற வைத்தால் போதும் - சாப்பிட முடியும்//

எங்க கெடைக்கும்னு கொஞ்சம் சீக்கரம் சொல்லுங்க... கேக்கவே நல்லா இருக்கு. தினமும் நீ அரிசி வெய்யி இல்ல நீயே வெய்யினு இனிமே சண்டையாச்சும் கொறையும். நெஜமாவே ஒரு புது விசயம் சொல்லி இருக்கீங்க நன்றி

thenammailakshmanan said...

இட்டிலி தோசை போன்ற பண்டங்கள் தரம் மாறாமல் இருந்தாலும், தட்டை, முறுக்கு போன்ற பண்டங்கள் ரப்பர் மாதிரி இருக்குமோ?.//

நல்ல சந்தேகம் பாஸ் தெளிவு படுத்துங்க அதையும் கேட்டு

தமிழ் உதயம் said...

செய்தி நல்லா சுவையா இருக்கு. சாப்பாடும் இதே மாதிரி சுவையா இருந்தா சந்தோஷம்.

ஹேமா said...

ஸ்ரீராம் வந்திட்டேன்.எல்லாரும்
...எங்கள் புளொக்ல எல்லாரும் சுகம்தானே.

அப்பா...மீனு நீங்களும் சுகம்தானே !

என்ன ஒரு சோத்துக் கண்டுபிடிப்பு !அதுக்கு வச்ச பேரும் நல்லாத்தானிருக்கு.எதைச் சாப்பிட்டாலும் "இது ஒரு சாப்பாடா" என்று திட்டும் சோறு தின்னும் கூட்டம் எங்களுக்குத்தான் கொண்டாட்டம்.

meenakshi said...

வாங்க ஹேமா!
நாங்கள் சுகமே, சுகமே! நீங்களும் சுகம்தானே! உங்கள் பயணம் எப்படி இருந்தது? நேத்திக்கு கூட நீங்க வந்தாச்சான்னு தெரிஞ்சுக்க உங்களோட ப்ளாக் போய் பாத்தேன். உங்களோட கவிதை படிச்சு நாளாச்சு, இல்லையா!

ஹுஸைனம்மா said...

சாதாரண அரிசியைப் போல வேகவும் வைத்து உண்ணலாமாம் (கணிசம் அதிகமாகும்).

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!