Wednesday, March 21, 2018

180321 புதன் புதிர் ஆதியும் அந்தமும் !


சினிமா அந்தாதி: 

ஒரு படப்  பெயரின் முடிவில் இன்னொரு படத்தின்பெயர் துவங்கும். 

1. சேரனோடு மிஷ்கின் போட்ட சண்டையில் ரஜினிக்கு அவ்வப்பொழுது சித்தம் கலங்கியது.

2. கமல் இதை முத்தமிடும் சத்தம்.

3. ஜெமினி, கமல், ரஜினி மூவரும் சம்பத்தப்பட்ட மூன்று படங்கள் இரண்டு வார்த்தைகளில்.

4. மாதவன் கட்டிய கோட்டை 

5. ____ தங்கை _______ கல்யாணம் பண்ணி _____  ___ தீரும். 
 (கோடிட்ட இடங்களை பொருத்தமான தமிழ் சினிமா பெயர்களால் நிரப்பவும். அவை ஒரு அர்த்தமுள்ள வாக்கியத்தை உருவாக்க வேண்டும்)

உபயம்: திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன். 

32 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

இன்று காலை எழுந்ததும் (வழக்கம் போல் ஏழு மணிக்கு மேல்தான்) புதிரைக் காணாதது புதிராக இருந்தது. அதைவிட ஆச்சரியம் இப்போது வரை யாரையுமே காணாதது. வேலை பளுவோ? நானும் இன்று முதலில் வருவது எனக்கே வியப்பைத்தருகிறது.அனைவருக்கும் காலை வணக்கம். லேட்டாக எழுந்ததினால், வேலைகள் விரைவாக அழைக்கிறது.புதிருக்கு யோசித்து எழுத இயவில்லை.பிறகு யோசித்து பதில் தருகிறேன். நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

KILLERGEE Devakottai said...

கொஞ்சம் யோசிக்கணும் வருகிறேன்...

Thulasidharan V Thillaiakathu said...

கௌ அண்ணா வந்தாச்சு...விடைகளுக்குக் கமென்ட் மாடரேஷன் கிடையாதா....இதோ யோசித்துவிட்டு வருகிறேன்...மாடரேஷன் வையுங்க அண்ணா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

கமலா ஹரிஹரன்..அவர்களுக்கு இன்று பு பு லேட்டாக வரும்னு தெரியும்...இருந்தாலும் 6.30 வரை பார்த்துட்டு அப்புறம் கடமைகள் ஆற்றிவிட்டு....

அதிராவின் முதல் வருகை தந்தோரை வாழ்த்துவோர் சங்கத்திலிருந்து வாழ்த்துகள்!!!! ஹா ஹா ஹா ஹா ஹா...

கீதா

துரை செல்வராஜூ said...

ஓ...

சினிமா புதிரா!...

அப்புறமா வாரேன்!...

Thulasidharan V Thillaiakathu said...

பானுக்கா ரூம் போட்டு நல்லாவே யோசிச்சுருக்கீங்க ஹா ஹ் ஆ ஹா ஹா ஹா

கீதா

கோமதி அரசு said...

ஒரு படப் பெயரின் முடிவில் இன்னொரு படத்தின்பெயர் துவங்கும்.//

திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன். புதிரை நன்றாக தயார் செய்து இருக்கிறார்.


Thulasidharan V Thillaiakathu said...

ஒரு படப் பெயரின் முடிவில் இன்னொரு படத்தின்பெயர் துவங்கும். //

பானுக்கா இது முதல் கேள்விக்கு மட்டுமா அல்லது 1 ந் முடிவில் 2 இன் விடை தொடங்குமா....அப்படியே 5 வரை போகுமா? 5 தனிக் கேள்வியா?

கீதா

Bhanumathy Venkateswaran said...

இல்லை, ஒன்று முதல் நான்கு வரை தனித்தனி. ஓவ்வொன்றிலும் இரண்டு படங்கள். ஐந்தாவது தனி. அதை தெளிவாக குறிப்பிட்டிருக்கிறைனே.

Bhanumathy Venkateswaran said...

ரூம் போட்டு யோசிக்கவெல்லாம் நேரம் இல்லை. வீட்டில் விருந்தாளிகள்,சட்டென்று தோன்றியதை எழுதி அனுப்பி விட்டேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

நண்பர் முரளிதரன் அவர்களின் புதிரே பரவாயில்லை....!

Thulasidharan V Thillaiakathu said...

1. தர்ம யுத்தம்-யுத்தம் செய்

இது எளிதாகக் கண்டு பிடிக்க முடிந்தது மற்றதெல்லாம் யோசித்து யோசித்து யோசித்து.....கொஞ்சம் கூகுளாரையும் நாட வேண்டியுள்ளது ஹிஹிஹி

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

2. புன்னகை மன்னன்-மன்னன்

இதுவும் எளிதாக வந்துவிட்டது

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

இன்னும் கூகுளாரை நாடவில்லை.நான்...பானுக்கா...நாடினால் அதையும் சொல்லிவிடுவேன் இங்கு...ஓகேயா...பானுக்கா!!

கீதா

Kamala Hariharan said...

அன்புள்ள கீதா சகோதரி, நான் எப்போதுமே "எங்கள் ப்ளாகில்" லேட்தான். சுருங்க கூறினால் கடைசி பெஞ்சுதான்.ஹா.. ஹா. இன்று காலை பார்த்ததும் யாரையும் காணவில்லையே! என்ற ஆசையில் முதல் பெஞ்சுக்கு தாவி அமர்ந்து விட்டேன்.

/அதிராவின் முதல் வருகை தந்தோரை வாழ்த்துவோர் சங்கத்திலிருந்து வாழ்த்துகள்!!!! ஹா ஹா ஹா ஹா ஹா.../

ஹையோ! இன்றைக்கு நானும் தங்களால் ஒரு வாழ்த்தைப் பெற்று விட்டேன். விருது கிடைத்த மகிழ்வைத் தருகிறது. தங்களுக்கும், மு.வ.த.வா.சங்கத்தை உருவாக்கிய சகோதரி அதிராவுக்கும் நன்றி.நன்றி.

பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களின் புதிர்கள் எனக்கு புரிபடவில்லை. இருப்பினும், இரண்டாவது கேள்விக்கு பதில் "மன்னாதி மன்னன்' என நினைக்கிறேன்.பாக்கி ஒவ்வொன்றாய் யோசிக்கிறேன். மிக்க நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

இன்று என்னாச்சு கல்லா களை கட்டவில்லை!!???

3 இது கொஞ்சம் குழப்புகிறது...ஜெ, க, ர மூவரும் சேர்ந்து நடித்தது என்றால் அலாவுதீனும் அற்புதவிளக்கும்...இது இரண்டு வார்த்தைப் படமா...இல்லை மூன்று வார்த்தையா...???!!...மூவரும் சேர்ந்து நடிச்ச படங்கள் வேறு உண்டானு தெரியலை கூகுளாரைத்தான் கேட்கணும்..

க, ஜெ சேர்ந்து நிறைய நடிச்சிருக்காங்க....அதே போல ர, க சேர்ந்து நடிச்சதும் நிறைய இருக்கு..

வேலை செஞ்சுகிட்டே.....யோசிக்கிறேன்...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அன்புள்ள கீதா சகோதரி, நான் எப்போதுமே "எங்கள் ப்ளாகில்" லேட்தான். சுருங்க கூறினால் கடைசி பெஞ்சுதான்.ஹா.. ஹா. இன்று காலை பார்த்ததும் யாரையும் காணவில்லையே! என்ற ஆசையில் முதல் பெஞ்சுக்கு தாவி அமர்ந்து விட்டேன்.//

ஹா ஹா ஹா ஹா...லேட்டானால் என்ன சகோதரி!!! ஜாலியாக இருப்பதுதானே....நீங்களும் கலந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி...

//மு.வ.த.வா// அட இனி இப்படியே போட்டுருவோம்..!!! ஸ்ரீராமின் மொழி!!! எபி யில் இது சகஜம்...ஹா ஹா ஹா ஹா...

நானும் யோசிக்கிறேன் யோசிக்கிறேன்...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

4. காதல் கோட்டை - கோட்டைப்புரத்து வீடு

3 வதற்கும், 5 வதற்கும் கூகுளாரைக் கேட்டேன் ஒன்றும் பிடிபடவில்லை முயற்சி செய்கிறேன்...ஹிஹிஹி

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

4. மாதவன் படம் என்றால்..விடை ....உன்னால் முடியும் தம்பி - தம்பி ??

கீதா

Bhanumathy Venkateswaran said...

என்ன பார்ட்டிசிபேஷன் ரொம்ப குறைச்சலா இருக்கு? எல்லோரும் தெறிச்சு ஓடிட்டாங்களா? அவ்வளவு கஷ்டமாகவே இருக்கு?
ஒருவேளை எப்படி அணுக வேண்டும் என்று புரியவில்லையா?
கீதா ரங்கன் ஒரு மாதிரி நெருங்கி வந்துட்டாங்க.

Bhanumathy Venkateswaran said...

என்ன பார்ட்டிசிபேஷன் ரொம்ப குறைச்சலா இருக்கு? எல்லோரும் தெறிச்சு ஓடிட்டாங்களா? அவ்வளவு கஷ்டமாகவா இருக்கு?
ஒருவேளை எப்படி அணுக வேண்டும் என்று புரியவில்லையா?
கீதா ரங்கன் ஒரு மாதிரி நெருங்கி வந்துட்டாங்க.

ஐந்தாவது கேள்வியில் 'பண்ணி' என்பது conjunction. கடைசி படம் சிவாஜி நடித்தது.

Bhanumathy Venkateswaran said...

டாக்டர் என்ன தேம்ஸில் மூச்சடக்கி உட்கார்ந்துட்டாங்களா?
நெ.த. என்னவானார்? பால கணேஷ்..? கீதா அக்கா இல்லாமல் ஒரு கை குறைகிறது. சினிமா பற்றி தெரியவே தெரியாது என்று சொல்லிக் கொண்டே விடைகள் சரியாக சொல்லுவார். கோமதி அரசு பாராட்டி விட்டு ஒதுங்கிக் கொண்டு விட்டார்.

Bhanumathy Venkateswaran said...

பொற்கிழி கீதா ரங்கனுக்குத்தானா?
MTR குலாப் ஜாமூன் விளம்பரம் நினைவுக்கு வருகிறது.

Bhanumathy Venkateswaran said...
This comment has been removed by the author.
வல்லிசிம்ஹன் said...

மூளை ஸ்லோ வா இருக்கு. எல்லாரும் சொல்லுங்கோ. நான் பார்க்கிறேன்.

Bhanumathy Venkateswaran said...

விடைகள் இதோ:
1. தர்ம யுத்தம், யுத்தம் செய்
2. கொஞ்சும் சலங்கை, சலங்கை ஒலி
3. புன்னகை மன்னன், மன்னன்(புன்னகை என்பது ஜெமினி நடித்த கே.பி படம்)
4. தம்பி, தம்பி கோட்டை
5. என் தங்கை கல்யாணி(க்கு) கல்யாணம் பண்ணி பார்த்தால் பசி தீரும்.

Bhanumathy Venkateswaran said...

இதில் 2 1/2 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பெற்ற கீதா ரங்கனுக்கு எல்லோரும் ஜோராக ஒரு முறை கை தட்டுங்கள்👍💐🏅

athira said...

பொய் சொல்ல மாட்டேன்ன்.. விடியப் புதிர் படிச்சேன்ன் ஆனா எதுவுமே புரியவில்லை.. பேசாமல் போயிட்டேஎன் அப்படியே நேரம் கிடைக்கவில்லை திரும்பிவர...

//இதில் 2 1/2 மதிப்பெண்கள் பெற்று//

ஹா ஹா ஹா.. இது எத்தனைக்கு எனச் சொல்லவேயில்லை:))

G.M Balasubramaniam said...

எனக்கெல்லாம்படம் பார்ப்பது என்பதே ரசிக்க மட்டுமே பானுமதி படங்களில் ஒரு தீசிஸே எழுதுவார் போல

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

புதிரைத் தொடர்ந்து, விடை வருமல்லவா? காத்திருக்கிறேன்.

Bhanumathy Venkateswaran said...

விடை எழுதி அனுப்பி விட்டேன். அதிராவின் கமெண்டுக்கு முன்னால் பாருங்கள் சார்.

Geetha Sambasivam said...

ஹூம், உடனே விடைகளைச் சொல்லிட்டீங்க போல! மாடரேஷன் வைச்சிருக்கலாமோ? கிட்டத்தட்ட எல்லாமும் எளிதாகவே இருந்தது. சரி பார்த்துக் கொண்டேன். 4 ஆவது மட்டும் புரியலை. தம்பி னு படம் வந்திருக்கா? தம்பி கோட்டையும் தெரியாது. மற்றவை சரியாக இருந்தது. :)

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!