Friday, March 23, 2018

வெள்ளி புதிரோடியோ ! 180323


எச்சரிக்கை: 

புதன் புதிருக்கு இந்த  வாரம் எனக்கு சான்ஸ் கிடைக்காததால், வெள்ளி வீடியோவை ஒரு புதிராக்கி விட்டேன். 

=========================  ஆ!  என்னங்க இது ! மழை தண்ணி தேங்கி நிக்கிற இடத்தில் எல்லாம் ஈ , எறும்பு கூட்டமா இருக்கு? 


பாட்டை கேளு , காரணம் தெரியும்! 


இதோ இந்தப் பையனைக் கேட்டா  பதில் தெரியுமா பாக்கலாம். 


தம்பீ உன் பெயர் என்ன? 


ராமன். ரகு ராமன்! 


இங்கே ஏன் ஈ எறும்பு மழை தண்ணிய மொய்க்குது? 


ஹாங் ... என்னைப் போக விடுங்க.


எங்கே போறே? 


விளையாடப் போறேன். 


இங்கேயே விளையாடேன். 


நோ ... நோ .... அதோ அங்கே வைதேகி வீடு இருக்கே ... அந்த வீட்டில், வைதேகி முன்னேதான் விளையாடுவேன். 


போ போ காலம் கெட்டுக் கிடக்கு! 

வேறென்ன வேண்டும்! 


சரி, இப்பவாவது காரணத்தைச் சொல்லு. 


இந்தா. 


என்னங்க இது! எதுக்கு செவ்வாழைப் பழம்? 


இதைக் கால்களில் தடவிக்க.


அப்புறம்? 


ஒரு பெரிய பாத்திரத்தில் நிறைய பன்னீர் சோடா ஊற்றி, அதில் அந்த  கால்களை ஆட்டினால்.....


பாய் இருக்கா? 

இருக்கு. எதுக்கு? சுரண்டதான்! 

ஓடாதீங்க ! பாட்டை இங்கே பாருங்க, கேளுங்க! 
     

53 comments:

வல்லிசிம்ஹன் said...

Ahaaaaaaaa. me the first sollanumaa. arumai

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் எங்கள் ப்ளாக் தோழர்களுக்கும் தோழிகளுக்கும்.
திருச்சியில் இருந்த போது இரவுகளில் ட்ரான்சிஸ்டரில் கேட்போம்.
அருமையான பாட்டு. ஜானகி அம்மா. எஸ்பிபி ஜஸ்ட் சூப்பர்.

வல்லிசிம்ஹன் said...

ஓ பன்னீரில் ஆடும் செவ்வாழைக்கால்கள்//. வைதேஹியும் ரகுராமனும்
பாட்டில் வந்துவிட்டார்கள்.

வல்லிசிம்ஹன் said...

வானம் தேன் சிந்தினால் எறும்பு வராமல் என்ன செய்யும்.

kg gouthaman said...

The early bird catches many worms!

Angel said...

ஹையோ இன்னிக்கு நான்தான் third

Thulasidharan V Thillaiakathu said...

இன்னாபா இது வெள்ளி ஆரும் முழிக்காதப்ப முழிச்சுக்கிருச்சு!! இந்த எபி யோட படா பேஜாரா கீது!! ஒன்னுமே புரியலை!!மெர்சலாயிட்டேம்பா!!!!

ஹை வல்லிம்மா !!!!! சூப்பர்!! ஆஜர் வைச்சுட்ட்டாங்க!!

கீதா

ஸ்ரீராம். said...

காலை வணக்கம் வல்லிம்மா.... தென் கிண்ணமும், உங்கள் விருப்பமும் மறக்க முடியாத நாட்கள்!

Angel said...

நான்தான் செகண்ட்னு டைப்பி போடறதுக்குள்ள கௌதமன் சார் பின்ஊட்டிட்டார் :)

ஸ்ரீராம். said...

தேன் கிண்ணம் - திருத்தம்.

ஸ்ரீராம். said...

காலை வணக்கம் ஏஞ்சல்...

Angel said...

வல்லிமாக்கும் கௌதமன் சாருக்கும் இனிய காலை வணக்கம் ..நான் குட்டி தூக்கம் தூங்கிட்டு நாளைக்கு வரேன் :)

ஸ்ரீராம். said...

காலை வணக்கம் கீதா ரெங்கன்.

Angel said...

ஆவ் !! ஸ்ரீராமும் இங்கிருக்காரா :) இனிய காலை வணக்கம் உங்களுக்கும் சரியா 6 மணிக்கு வரப்போற துரை அண்ணா கீதாக்கா கீதாவுக்கும்:)

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ யெஸ் சொல்லுங்கமா...இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் துரை அண்ணா கீதாக்கா, பானுக்கா...எல்லோருக்கும்

இன்னிக்கு துரை அண்ணன் மெர்ஸல்!!! கீதாக்கா க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஸ்ரீராமுக்கே ஒன்னும் புரிஞ்சுருக்காது!! ஹிஹிஹிஹி

ஒன்னுமெ பிரிலிப்பா...என்னாமோ நடக்து....

கீதா

ஸ்ரீராம். said...

// வல்லிமாக்கும் கௌதமன் சாருக்கும் இனிய காலை வணக்கம் .//

பரவாயில்லை ஏஞ்சல்... பரவாயில்லை... ஊ......ம்.......ஊ..ஊ..ம்...

:)))

Thulasidharan V Thillaiakathu said...

ஏஞ்சல் வாங்க வாங்க...ஈஸ்டர் பிஸியா?!!...வணக்கம்...பூஸாருக்குச் சொல்லிடாதீங்க...ஹா ஹாஹாஹாஹா

கீதா

ஸ்ரீராம். said...

//ஸ்ரீராமுக்கே ஒன்னும் புரிஞ்சுருக்காது!! //

கௌ அங்கிள் பதிவு ஒண்ணு லேட்டா போடுவாரு... இல்ல.. இப்படி சீக்கிரமா...! டயத்துக்கு போடறாரா?!!!

Thulasidharan V Thillaiakathu said...

நானும் மெர்ஸலாகி டைப்பறதுகுள்ள ஏஞ்சல் வந்து புகுந்துட்டாங்க ஹா ஹா ஹா ஹா

இனிய காலை வணக்கம் கௌதம் அண்ணா...

கீதா

Angel said...

ஹாஹாஆ :) ஸ்ரீராம் உங்களுக்கே தெரியாம ஆட்டோ பப்லிஷ் ஆகியிருக்கும் நீங்க சரியா 6 மணிக்கு தன வருவீங்கன்னு நினைச்சேன் :)
ஓகே bye for now

Angel said...

@கீதா .ஈஸ்டர் பிஸி யெஸ் யெஸ் :)

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான பாடல்!!!

அது சரி புதிர் என்னா? ஓ மழைத் தண்ணீல வெளாடுறாங்க...பாடல் வரிகள்!!!!
கீதா

Thulasidharan V Thillaiakathu said...

கௌ அங்கிள் பதிவு ஒண்ணு லேட்டா போடுவாரு... இல்ல.. இப்படி சீக்கிரமா...! டயத்துக்கு போடறாரா?!!!//

ஹக்காங்க்!! ஸ்ரீராமு...இதுக்கு இன்னா ந்யாயம்....நம்ம ஆளுங்க எல்லாம் இன்னிக் மெர்ஸல்தான்...

நான் எபி வாசல்ல குந்திக்கினு கொடி புடிக்கப் போறேன்...வாங்கப்பு எல்லாரும்...

கீதா

Geetha Sambasivam said...

krrrrrrrrr grrrrrrrrrrrrrrrrrrrrrr grrrrrrrrrrrrrrrrrrrrrrrooooo grrrrrrrrrrrrrrrrஇது அநியாயமா இல்லையோ? கௌதமன் சார்? இன்னிக்குக் காஃபி சீக்கிரமாக் கிடைச்சுடுத்தா? தெரிஞ்சிருந்தால் எழுந்ததுமே வந்திருப்பேனே! :)))))) எப்படியோ ஏஞ்சல், தி/கீதா எல்லாம் வந்துட்டாங்க!

Thulasidharan V Thillaiakathu said...

வாங்க கீதாக்கா....ஆமாம் நான் எப்பவும் போல அஞ்சேகால் அஞ்சரைக்குள்ள சும்மா பாக்கறது வழக்கம்...மோஸ்ட்லி வெங்கட்ஜி, கில்லர்ஜி பதிவுகள் இருக்கும்...அப்படிப் பார்த்தா எபி இன்னிகு!!!! சரிதான்...என்ன ஆச்சு ஒருவேளை ஸ்ரீராம் செட் பண்ணும் போது கண்ணாடி போடாம செட் பண்ணிட்டாரோனு வந்தா கௌ அண்ணா வேலை!!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

எஸ் பி பி வாய்ஸ் தேன் கிண்ணமா குழையுது!!! என்ன ஃபீல் இல்ல?!! வாவ்!! ஜானகியின் இளம் வாய்ஸ்!!

கீதா

ஸ்ரீராம். said...

வாங்க கீதாக்கா.. காலை வணக்கம்.

Thulasidharan V Thillaiakathu said...

பாருங்க துரை அண்ணா இன்னிக்கு 6 ஆகியும் காணலை...ஒன்னுமே புரியாம ஸ்டன்ட் ஆகி இருப்பார்னு நினைக்கிறேன்...ஹா ஹா ஹா ஹா அண்ணா வாங்க காபி ஆறிப் போகுது!!

கீதா

ஸ்ரீராம். said...

// துரை அண்ணா இன்னிக்கு 6 ஆகியும் காணலை...//

துரை ஸார் கோவத்துல டூ விட்டுட்டாரோ!

வல்லிசிம்ஹன் said...

எப்பவும் நான் தான் கடைசிப் பின்னூட்டம் இட்டிருப்பேன். இன்று எபி விழித்துக் கொண்டு
விட்டதான்னு பார்க்க வந்தா. ஆச்சரியமோ ஆச்சரியம். தாங்க்ஸ் கௌதமன் ஜி.

KILLERGEE Devakottai said...

தேன் பாடல்தான்
மழையில் எறும்பு ஊறுமா ?

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

இனிமையான பாடல்

நெ.த. said...

வந்துட்டேன். வர்றேன்.

Govindarajapuram Krishnamoorthy said...

இன்று நான்தான் காலை வணக்கம் முதலில் சொல்ல வேண்டும் என்று அதிகம் ஆசைப்பட்டு விட்டேன் போலிருக்கிறது..ஆறு மணிக்கு ஃபோனை ஆன் பண்ணினால், ஏதோ பிரச்சனை ஃபோன் ஆன் ஆகவே இல்லை :((( டாக்டரிடம் எடுத்துக்கொண்டு போக வேண்டும்.

Govindarajapuram Krishnamoorthy said...

மேற்படி கமெண்ட் அனுப்பியது பானுமதி வெங்கடேஸ்வரன்(என் கணவரின் செல்லிலிருந்து)

துரை செல்வராஜூ said...

வாழ்க வளமுடன்....
அனைவருக்கும் வணக்கம்...

துரை செல்வராஜூ said...

சந்திராஷ்டமம்... தப்பித்து வர்றதுக்குள்ளே போதும் போதும்..ந்னு ஆகிடுச்சி....

மூனு நாள் வேலையை ஒரு நாள்..ல.முடிக்கணும்..ன்னா ரொம்பவும் களைப்பு....

பதிவு முன்னாடியே வெளியாகற மாதிரி கனா தான் கண்டேன்.....


அட போப்பா சேவலுக்கு கொம்பு முளைக்காது..ந்னு சொல்லிட்டு தூங்கிட்டேன்.....

கடைசியில...

துரை செல்வராஜூ said...

அதென்ன வெள்ளிகிழமை விடியக்காலை...யிலே...

தேன் சிந்துதே... மீன் துள்ளுதே...ந்னு பாட்டு....

சின்னப் பசங்களுக்கு குளிர் ஜூரம் வரட்டும்....ந்னு வேண்டுதலா!....

டபுள் ஸ்ட்ராங் காஃபி....ல்லாம் குடிக்காதேள்!!.....

கோமதி அரசு said...

காலங்கள் வாழ்க!
இளமையான குரல்கள் இனிமை.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான பாடல்...

Asokan Kuppusamy said...

இனிய பாடல்

athira said...

ஹா ஹா ஹா ...கிக்கீஈஈஈஈக்கீஈஈஈஈ குக்கூஉக்க்கூஊஊஊஊ என்னா முசுப்பாத்தியாக்கிடக்கு இண்டைக்கு எங்கள் புளொக்:).. ஸ்ரீராமே அலறியடிச்சு ஓடிவந்திருக்கிறார்:)...

கெள அண்ணனுக்கு ஒரு டயமண்ட் செயின் வோச் பிளேனில வருதூஊஊ:).. இப்பூடித்தான் போஸ்ட் போடோணும்:).. பின்ன எல்லோரும் எலாம் வச்சு 6 மணிக்கு ஜம்ப் பண்ணுவினமாம்ம்ம்ம்:) அதில 1ஸ்ட்டூ என சவுண்டு வேற... ஹையோ ஹையோ சந்தோசம் பொயிங்குதே... சந்தோசம் பொயிங்குதே... சந்தோசம் கண்ணில் பொயிங்குதேஎ:)... ஹா ஹா ஹா...

அதாரது மூலஸ்தானத்திலிருந்து கர்ர்ர்ர்ர்ர் சொல்றது:)... ஆஆஆஆவ்வ் எங்கட கீசாக்காவா ச்ச்ச்ச்ச்ச்ச்சோஓஓஒ லேட்டூஊஊஉ:)

athira said...

இண்டைக்குத் துரை அண்ணனை நினைச்சா:) அழுகை அழுகையா வருதூஊஊஊஊ:)... ஓடிவந்த வேகத்தில பாட்டைத் திட்டுறார்ர்ர்ர்ர்ர் ஹா ஹா ஹா பின்ன என்ன கெள் அண்ணனையா திட்ட முடியும்:) ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)...

கீதா ஏதோ தப்பித் தடுமாறி வந்திட்டா:)..

அது சரி குடுத்த வேலையை இன்னும் முடிக்காம என் செக்:) ஜாமத்தில இங்கின என்ன பண்றா:)...

athira said...

வல்லிம்மா இப்பூடித்தான் கண்ணில கண்டால் ஜம்ப் பண்ணிடோனும்:).. கீப் இட் மேலே:).

ஆஆஆங்ங் ஓடியோ எனச் சொல்லி வீடியோப் போட்டிருக்கிறார் கெள அண்ணன்:)... பாட்டு பறவாயில்லை... ஓ பறவாயில்லை.... ஓ.. பறவாயில்லை:)..

Angel said...

வீடே வெள்ளத்தில் சூழ்ந்தாலும் அதில் கப்பல் விடறவங்க எங்க தமிழ் சினிமா டைரக்டர்ஸ் தான் ஹ்ஹா :)
.கண்ணை மூடிட்டு பாட்டை கேட்டேன் ..awesome !!!

Angel said...

அது சரி குடுத்த வேலையை இன்னும் முடிக்காம என் செக்:) ஜாமத்தில இங்கின என்ன பண்றா:)...//ஆங் அய்யாங் என்னை விட்டுடுங்க ஜிவாஜி அங்கிள் படத்தை வேற யாருக்காச்சும் குடுங்க மியாவ் எனக்கு வேணாம் ..
இதனால் சகலமானோருக்கும் அறிவிப்பது தெரிவிப்பது கூறுவிப்பது ..அது உங்களை நோக்கி வருகிறது
அது = சினிமா விமர்சனம் பை மியாவ்

athira said...

அஞ்சூஊஊஊ நீங்க தப்பவே முடியாதூஊஊ பார்த்தே தீரோணும்:) சவாலே சமாளி:)... என்னா யூப்பர் தெரியுமோ?.. ஜிட்டுக்குருவிக்கென்ன:) டட்டுப்பாடூஊஊஉ டென்றலே உனக்கெங்கு ஜொந்த வீடூஊஊஊஊ:)...

Angel said...

//அஞ்சூஊஊஊ//இந்த பெயரில் உள்ளவர் இன்னும் 5 நிமிடங்களில் தொடர்பு எல்லைக்கு அப்பால் செல்லவிருக்கிறார் :)

ஏகாந்தன் Aekaanthan ! said...

எங்கள் ப்ளாகின் அடுத்த போஸ்ட் 00:01 -க்கு வெளிவரும் என்றெல்லாம் சொல்லிக்கொண்டா இருக்கமுடியும்? வெள்ளிக்கிழமையும் அதுவுமா எத்தன வேல கெடக்கு!

ஏகாந்தன் Aekaanthan ! said...

வீட்டுக்குள்ளே வெள்ளம்! சென்னை டிசம்பர் 2015 -பற்றி முன்பே தெரிந்திருந்ததோ!

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

அருமையான பாட்டு. வானம் சிந்தும் தேனெல்லாம் வெறும் வெல்லப்பாகு. எஸ்.பி.பி, எஸ் ஜானகியின் தேனினும் இனிய குரலை விடவா? அடிக்கடி கேட்டிருக்கிறேன். மற்றொரு முறை கேட்க வைத்ததற்கு நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Kamala Hariharan said...

வணக்கம் ஸ்ரீராம் சகோதரரே,

இன்று என் பதிவாக "வாழ்வின் இரு பக்கங்கள்' தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது வந்து படித்து கருத்திட்டால் மகிழ்வடைவேன். மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Bhanumathy Venkateswaran said...

அருமையான பாடல்! இந்தப் பாடலைப்பற்றி எஸ்.பி.பி. நிறைய முறை கூறியிருக்கிறார். இளையராஜா இந்தப் பாடல் வெளியான சமயத்தில் இசை அமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளராக பணியாற்றினாராம். பாட்டு டியூனை ஜி.கே.வெங்கடேஷ் கம்போஸ் செய்து விட்டு, கண்ணதாசனிடம் சிச்சுவேஷனை கூறி விட்டு, முதல் அடியை வசித்து காட்டினாராம், உடனே அவர், "தேன் சிந்துதே வானம்.." என்றாரம், அடுத்த அடிக்கான இசையை வாசிக்க, யோசனை எதுவும் செய்யாமல் உடனே "உனை எனை தாலாட்டுதே.." என்றாரம். இப்படி முழு பாடலுக்கான வரிகளும் கண்ணதாசனிடமிருந்து சட்டு சட்டென்று வந்து விழ நிமிடங்களில் முழு பாடலும் கம்போஸ் செய்யப் பட்டு விட்டதாம்.
கண்ணதாசனின் திறமையை வியப்பார் எஸ்.பி.பி. எனக்கும் மிகவும் பிடித்த பாடலிது.

என் பள்ளி நாட்களில் ஒரு ரவுண்ட் வந்த கதாநாயகி ஜெயசித்ரா. அவரின் நடிப்பும் பிடிக்கும். இந்தக் காட்சியில் கூட பாருங்கள், இறுதியில் நிஜமாகவே நன்றாகவே கூட்டியிருக்கிறார் (பெருக்கியிருக்கிறார்). பெரும்பாலான கதாநாயகிகள் இப்படிப்பட்ட காட்சிகளில் நடிப்பதை பார்த்தால் அவர்கள் கையிலிருந்து துடைப்பத்தை பிடுங்கி நாம் பெருக்கி விடலாமா என்று தோன்றும்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!