வியாழன், 8 ஏப்ரல், 2010

கணினி - விளையாட வரியா நீ?

ஒரு பழைய விக் கம்மொடோர் கம்பியூட்டர் [!!] பரணை ஒழிக்கும் முயற்சியில் நம் கண்ணில் பட, நம் புதை பொருள் ஆராய்ச்சி வல்லுநர் ஆனந்த் அதன் கேம் காசெட்டுகளையும் எங்கிருந்தோ தேடிப் பிடித்துக் கொண்டு வந்து விட ஒட்டடை, சிலந்தி - மற்ற பூச்சி வற்றல்கள்(!) இவை எல்லாவற்றையும் அகற்றி தொலைக் காட்சிப் பெட்டி கிரிக்கெட், சீரியல் இவற்றிலிருந்து மீண்டிருக்கும் ஒரு சுப யோக சுப வேளையில் இணைக்கப் பட்டு இயக்கப் பட, மோல் அட்டாக் ஓட ஆரம்பித்தது.  விளையாட்டு என்னவோ ரொம்ப எளிமையானது தான்.


TYU, GHJ,VBN இந்த ஒன்பது எழுத்துக்களுக்கு நேரே தலை அல்லது வால் எழும்பி வரும். அது தலையாக இருந்து அந்த எழுத்தைத் தட்டினால்,  உங்கள் ஸ்கோர் அதிகமாகும்.  வாலாக  இருந்து அந்த எழுத்தை அமுக்கி விட்டீர்களானால் உங்கள் ஸ்கோர் குறையும்.  இதில் யார் நிறைய ஸ்கோர் செய்கிறார்களோ அவர்கள் ஆட்டத்தில் வல்லுநர் என்பது தவிர நாங்கள் ஒரு பாட்டேர்ன் (pattern) பார்த்தோம்.  நிறைய ஸ்கோர் செய்பவர்கள் வேகமாகப் படிக்கவும் செய்கிறார்கள் என்பது தான் அது.  வழக்கம் போல அங்கிதாவுக்கு வரும் 'கோழியா / முட்டையா எது முதலில்?'  (வேகப் படிப்பா / நிறைய ஸ்கோரா- எது முதலில்?) என்ற சந்தேகம் எங்களுக்கும் வர, நாங்கள் பார்த்த வரை,  விளையாடும் நேரம் அதிகரிக்கும் பொழுது குழந்தைகள் படிக்கும் வேகமும் அதிகமானது.  நீங்கள், உங்கள் குழந்தைகள் விளையாடும் ஆட்டங்களை சற்று கவனித்து, எந்த ஆட்டங்கள் இது மாதிரி வரவேற்கத் தக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதை - வழக்கம் போல - பின்னூட்டங்களில் சொல்லுங்களேன்.

பி.கு. : விக் கம்மொடோர் மியூசியங்களில் மட்டும் தான் கிடைக்கும் என்கிறார் அறிவு. ஆகையால், மற்ற கம்பியூட்டர், பிளே ஸ்டேஷன் கேம்கள்தான் உங்களுக்குக் கிடைக்கக் கூடும். 

12 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. /////TYU, GHJ,VBN இந்த ஒன்பது எழுத்துக்களுக்கு நேரே தலை அல்லது வால் எழும்பி வரும். அது தலையாக இருந்து அந்த எழுத்தைத் தட்டினால், உங்கள் ஸ்கோர் அதிகமாகும். வாலாக இருந்து அந்த எழுத்தை அமுக்கி விட்டீர்களானால் உங்கள் ஸ்கோர் குறையும். இதில் யார் நிறைய ஸ்கோர் செய்கிறார்களோ அவர்கள் ஆட்டத்தில் வல்லுநர் என்பது தவிர நாங்கள் ஒரு பாட்டேர்ன் (pattern) பார்த்தோம். நிறைய ஸ்கோர் செய்பவர்கள் வேகமாகப் படிக்கவும் செய்கிறார்கள் என்பது தான் அது/////


    புதுமையான தகவல்தான் நண்பரே . பகிர்வுக்கு நன்றி !தொடருங்கள் மீண்டும் வருவேன்

    பதிலளிநீக்கு
  3. //விளையாடும் நேரம் அதிகரிக்கும் பொழுது குழந்தைகள் படிக்கும் வேகமும் அதிகமானது.//

    அப்படியா!!!!!!!!

    பதிலளிநீக்கு
  4. /விளையாடும் நேரம் அதிகரிக்கும் பொழுது குழந்தைகள் படிக்கும் வேகமும் அதிகமானது/

    ஆமாம் சார். கில்லாடிப்பசங்க. எல்லாம் படிச்சாச். ஹோம்வர்க் இல்லைன்னு சொல்லிட்டு விளையாட போய்டுவாங்க. செம ஸ்பீடு:))

    பதிலளிநீக்கு
  5. //நிறைய ஸ்கோர் செய்பவர்கள் வேகமாகப் படிக்கவும் செய்கிறார்கள் என்பது தான் அது//

    நல்ல வேளை என் பசங்களுக்கு தமிழ் படிக்க தெரியாது.

    இன்னும் நிறைய வீடியோ கேம் ஆடுவாங்க

    ஆனா ஒண்ணு, நான் ஏன் ரொம்ப நல்ல படிக்கவில்லை என்பது நன்றாக புரிந்துவிட்டது. என் அப்பா அந்தக்காலத்தில் வீடியோ கேம் வாங்கி கொடுக்கவில்லை.

    பதிலளிநீக்கு
  6. Typing tutor is not a game - but while teaching children how to type and increase their skills one noticeable side effect is increase in speed of reading

    பதிலளிநீக்கு
  7. Rangar Sir

    Typing Tutor is it ? Oh Oh. My Bad

    I went to typewriting institute in early 80's as a visionary knowing that I going to work in IT Industry from 1988 to use computer / laptop !!

    Actual truth is some of the good looking girls near my Anna Nagar flat went to that institute and hence me !!

    பதிலளிநீக்கு
  8. நீங்கள், உங்கள் குழந்தைகள் விளையாடும் ஆட்டங்களை சற்று கவனித்து, எந்த ஆட்டங்கள் இது மாதிரி வரவேற்கத் தக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதை - வழக்கம் போல - பின்னூட்டங்களில் சொல்லுங்களேன்.

    ...... Educational games have this effect. The violent games with bloody scenes numb the minds of the children.
    http://findarticles.com/p/articles/mi_m0816/is_6_21/ai_n9772319/

    பதிலளிநீக்கு
  9. http://www.ovinebydesign.com/index.php/2003/07/24/mole-attack/

    is the url where mole attack is available modified and ready to use with win OS. Sometimes it may be necessary to reset the screen resolution after the game. Why not give it a try?

    Highest score in "engal" community had been 175.

    பதிலளிநீக்கு
  10. மோல் அட்டாக் விளையாட்டை தரவிறக்கம் செய்ய, எங்கள் பிளாக் இடது பக்க மேல் பகுதி லிங்க் உதவும். கிளிக்கிப் பயன் பெறுங்கள்.

    பதிலளிநீக்கு
  11. ஒரு பழைய விக் கம்மொடோர் கம்பியூட்டர் [!!] பரணை ஒழிக்கும் முயற்சியில் நம் கண்ணில் பட, நம் புதை பொருள் ஆராய்ச்சி வல்லுநர் ஆனந்த் அதன் கேம் காசெட்டுகளையும் எங்கிருந்தோ தேடிப் பிடித்துக் கொண்டு வந்து விட ஒட்டடை, சிலந்தி - மற்ற பூச்சி வற்றல்கள்(!) இவை எல்லாவற்றையும் அகற்றி தொலைக் காட்சிப் பெட்டி கிரிக்கெட், சீரியல், (பதிவு போடும் வேலை) இவற்றிலிருந்து மீண்டிருக்கும் ஒரு சுப யோக சுப வேளையில் இணைக்கப் பட்டு இயக்கப் பட..

    அப்பாடா.. ஒரிஜனல் விளையாட்டு ஆரம்பிப்பதற்கு முன் தான் எத்தனை சாமகிரியைகள்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!