ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

மதுரைக்காரங்க விவரமானவங்க...





சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் திருக்கடையூர் சென்றபோது எடுத்த புகைப்படம்.  என்னுடைய நிக்கான் கேமிராவில் எடுத்தது.  ராமலக்ஷ்மி அப்போது ஒரு போட்டி வைத்திருந்தார்.  ஃப்ளிக்கர் டாட்காமில் என்று நினைவு.  அங்கு இந்தப் படத்தைப் பகிர்ந்திருந்தேன்.  ஒரு காலத்தில் இந்த வீடு எவ்வளவு சந்தோஷங்களையும், சங்கடங்களையும் சந்தித்திருக்கும்?  இப்போது?    ஓய்வுபெற்று,  நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் நிலையில்..    அப்போது பல எண்ணங்களை தோற்றுவித்த படம்.    பயந்து பயந்து அருகிலிருப்போர் ஏதாவது சொல்வார்களோ என்று பயந்து டக்டக்கென படம் எடுத்துவிடுவேன்!


அப்போது எடுத்த திருக்கடையூர் கோபுரம்.  நாங்கள் அங்கு சென்று சேர்ந்த நேரம் மாலை ஆகிவிட்டது.  அப்போது எடுத்த படம்.  சுகுமாருக்கு சஷ்டியப்த பூர்த்தி என்று அப்போது சென்றோம்.  (சுகுமார் யார் என்று கேட்பவர்களை பசித்த புலி தின்னாதிருக்கட்டும்!) 



இது நான் எடுத்த படம் அல்ல!!!!  இப்படத்தின் மூக்குப் பகுதியை மூன்று நிமிடங்கள் உற்றுப் பார்த்து எதிர் சுவரைப் பார்த்தால் ஒரு உருவம் தெரியும்.  அநேகமாக நீங்கள் எல்லோரும் இந்தப் படத்தைப் பார்த்திருப்பீர்கள், வைத்திருப்பீர்கள்!


'தூறல்கள்' புத்தகத்தின் அட்டைப்படத்துக்காக எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இரண்டு...   'தூறல்கள்' அட்டையில் இந்தப் படத்தை நீங்கள் வேறு பின்னணியில் பார்த்திருக்கலாம்!


தாத்தா அவனிடம் போஸ் எப்படிக் கொடுக்கவேண்டும் என்று குறிப்புகள் கொடுத்ததும் சிரிக்க ஆரம்பித்துவிட்டான் இந்த (அப்போதைய) பொடியன்.


செடியில் ஒட்ட வைத்தது போல பூக்கள்!  வித்தியாசமாய் இருந்ததால் கிளையை உடைத்து எடுத்துக்கொண்டு வந்து எடுத்த படம்!  நான்கைந்து வருடங்கள் முன்பு எடுத்தது.




அவ்வப்போது எங்கள் காம்பௌண்டில் இது மாதிரி செல்லங்கள் பிறக்கும்.  கொஞ்ச நாட்களில் சிலவற்றை வாண்டுகள் தூக்கிப் போவதால் மறையும்.  சில உடல்நலமில்லாமல் போதிய பாதுகாப்பு, போஷாக்கு இல்லாததால் மறையும்! 


இந்தச் செல்லங்களுக்குப் பின்னால் ஒரு பொந்து போலத் தெரிகிறதா?  அந்தப் பொந்திலிருந்து ஒரு சுப்புக்குட்டி (நன்றி கீதா அக்கா!) வெளியே வந்து தலைக்காட்டி, அது எங்கள் கண்ணில் பட,  அதை அங்கிருந்து குச்சி கொண்டு விரட்டினோம்!  (இதெல்லாமும் பழைய கதைகள்தான்...  இந்தக் குழுவிலிருந்து ஒரு செல்லம் சென்ற வாரப் படங்களில் இடம்பெற்றது நினைவிலிருக்கும்)


இதோ...  இந்த சுப்பு குட்டிதான்!  சுவரில் ஏறி ஓட முயன்று வழுக்கி மண்ணில் என் காலடியிலேயே விழுந்து ஓடியதை வீடியோ எடுத்து ஃபேஸ்புக்கில் அப்போது பகிர்ந்திருந்தேன்!


புதரில் சில சிறுமலர்கள்!  (இப்படி எல்லாம் புதர் இருந்தால் ஏன் சுப்புக்குட்டி வராது?!!)


மேலே கண்ட செல்லங்கள் பாசத்துடன் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த காட்சி!


அப்போது புதிதாய் வாங்கியிருந்த இந்த HTC அலைபேசியில்தான் மேற்கண்ட புகைப்படங்கள் எடுக்கப்பட்டன!


2014 இல் நானும் என் மாமா ஒருவரும் மதுரை சென்றிருந்தோம்.  அப்பா செயலற்று படுக்கையில் இருந்த நேரம்.  அவரைப் பார்த்துக்கொள்ள ஒருவரை நியமித்திருந்தோம்.  எனினும் அவர் அடை கேட்டார் என்று சென்னையிலிலிருந்த பாஸிடம் ஃபோன் மூலம் டிப்ஸ் பெற்று அடைமாவு அரைத்து அடை வார்த்தேன்.  'உதவி'  மதியமே சென்று விடுவார்.


அவர் (பாஸ்) உதவியின்றியே என் சொந்த முயற்சியில் அதற்குத் துணையாக சட்னியும் அரைத்து.....!    அப்பா அரை அடை   சாப்பிட்டார்.  அவர் அப்போது எடுத்துக்கொண்டிருந்த உணவு அளவுக்கு அதுவே அதிகம்....



நான்  சொல்லவில்லை?   மதுரைக்காரங்க விவரமானவங்க...   ஒரு அரிசியில் மூன்று பெயர்களாம்...   யார் யார் எழுதி வாங்கிக் கொண்டார்களோ!  மதுரைக் கடைத்தெரு.  

107 கருத்துகள்:

  1. ஹை நம்ம ஊரு! படிச்சுட்டு வரேன்.

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்னி, நன்னி, அப்புறமா வரேன், இன்னிக்கு அமாவாசை, வேலை இருக்கு. :)

      நீக்கு
    2. அமாவாசை... அதுதான் என் தாமத வருகைக்கும் காரணம்!

      நீக்கு
  3. எல்லாமே ஜூப்பரு. அடைக்குக் கருகப்பிலை கொத்துமல்லி போடலையோ? சட்னி காரமா இருக்குமோனு தோணுது. வத்தக்குழம்பு இருந்தா இன்னும் நல்லா இருக்கும். :)

    பதிலளிநீக்கு
  4. சுப்புக்குட்டிங்க எல்லாம் ஏன் இளைச்சிருக்கு? பாவம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே கீதாக்கா அப்படி கேளுங்க இந்த ஸ்ரீராம் பாருங்க கீதாக்கா வீட்டுல தானே உன் வாசம் இங்க எப்படி எதுக்கு வந்த போ அங்கேயே அந்த வீட்டுலதான் சாப்பாடு போட்டு வளப்பாங்க போ அங்க...என் செல்லங்கள் பாவம்னு துரத்தி விட்டுருக்கார்!! ஹா ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    2. கீதாக்கா உங்க பதிவு உங்க ஊர் படிச்சாச்சு எங்க வீட்டு நெட் 9 மணியானா ஹாவ் நு என்னை மாதிரி சாமியாடிடத் தொடங்கும்....அதான் கருத்து போட முடியலை...வாரேன்...அப்பால

      கீதா

      நீக்கு
    3. கீதாக்கா / கீதா ரெங்கன்.. இப்போ மறுபடி பார்க்கும்போது அது அடைமாவா, தோசை மாவா என்று சந்தேகம் வருகிறது! அடை என்றுதான் நினைக்கிறேன்! சுப்புக்குட்டி பயத்தில் இளைச்சிருக்கு போல!

      நீக்கு
    4. அடை மாவுதான் ஸ்ரீராம்..ஒரே ஒரு கறிவேப்பிலை மேல வந்து எட்டிப் பாக்குது பாருங்க..

      கீதா

      நீக்கு
  5. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா அப்புறம் வரும் பானுக்கா எல்லோருக்கும்...இனி அப்பாலதான் வருவேன்...ஹை கீதாக்காவின் சுப்புக்குட்டி இங்க உங்க வீட்டுக்கு விசிட்டா....ஹையோ செல்லங்கள் கோபுரம், பூ செடி என்று அதகளமாக இருக்கு ஞாயிறு!!!! அப்பால உங்க மதுரைக்காரங்க போல வெவரமா வாரேன்...!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  6. அருமை
    பழைய காலத்து வீட்டுப் படம் அருமை

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    அனைத்து படங்களும் மிக நன்றாக இருக்கின்றன. திருக்கடையூர் கோபுர தரிசனம் மிக அழகு தரிசித்துக் கொண்டேன். பாழடைந்த வீடு மேல் ஓடுகள் சரிந்தோடிய நிலையிலும், வெட்டிய பனை நுங்குகளின் பக்கபலத்தால் தாக்கு பிடிக்கிறது.

    செல்லங்கள் படங்கள் மிக அழகு. அதில் கருப்பு, பிரவுனும் கலந்த குட்டியை சென்ற வாரம் பார்த்திருக்கிறேன். அடையும். சட்னி யும் நல்ல பொருத்தம். அரிசியில் மூன்று பெயர்கள்.. ஆச்சரியம்தான்.. அரிசியில் நம் தலையெழுத்தை ஆண்டவன் எழுதி வைத்திருப்பதாக பெரியவர்கள் சொல்லி கேள்வி பட்டுள்ளேன். அனைத்தும் நன்றாக அருமையாக உள்ளது.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...

      ஆமாம்... அந்தச் செல்லத்தைத்தான் போன வாரம் பகிர்ந்திருந்தேன்.

      நாம் உண்ணும் அரிசியில் நம் பெயர் எழுதியிருக்கும் என்று உருது வாசகத்தில் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  8. பதில்கள்
    1. மாலை வணக்கம் வெங்கட்! கிட்டத்தட்ட இரவு வணக்கமே சொல்லவேண்டும்!

      நீக்கு
  9. முதலாவது படம் - எத்தனை சந்தோஷமான தருணங்களையும் மற்ற நேரங்களையும் தன்னுள் கொண்டிருக்கும் அந்த வீடு.

    மற்ற படங்களும் அழகு.

    பதிலளிநீக்கு
  10. பதில்கள்
    1. சுப்புக்குட்டி... ஆமாம்.. கீதா அக்கா சொல்ற வார்த்தை.. கடன் வாங்கியிருக்கிறேன்!

      நீக்கு
  11. சுகுமார் யாரென்று கேட்கப்பயமாக இருக்கிறது.

    இப்படி வீடுகள் நிறைய இருக்கிறது இவைகளில் பல குழந்தைகள் ஓடி விளையாண்டு இருப்பார்கள்.

    அரிசியில் பெயர் எழுதுவது வெகுகாலமாக உள்ளது ஸ்ரீராம்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே, அதே கில்லர்ஜி! சுகுமார் யார்னு கேட்க நினைச்சு பயந்துண்டு பேசாம இருந்துட்டேன்! :))))

      நீக்கு
    2. ஹை கில்லர்ஜி கீதாக்கா மீயும் அந்த லிஸ்டிலே சேர்த்துக்கோங்க!!!

      கீதா

      நீக்கு
    3. வாங்க கில்லர்ஜி.. சுகுமார் என் தூரத்து உறவினர் என்று தெரிவதற்கு முன்னரே என் நண்பர். உங்களுக்கு தெரிந்திருக்காது. ஆனால் கீதா அக்கா.. உங்களுக்குமா நினைவில்லை?!! மேலும் பசித்த புலி தின்னாதிருக்கட்டும் என்றுதானே சொல்லி இருக்கிறேன்! இந்தச் சுட்டியைப் பாருங்கள். சுகுமார் பற்றி அறியலாம்!

      https://engalblog.blogspot.com/2013/05/blog-post_22.html

      நீக்கு
  12. செல்லக்குட்டி சின்னக்குட்டி, அப்புக்குட்டி பப்புக்குட்டி -
    இதெல்லாம் போய் இப்போ சுப்புக்குட்டி வந்திருக்கு!..

    சுப்புக்குட்டிக்கு முட்டை விருந்தெல்லாம் வைக்கணுமே!...
    அவ்விடத்து விசேஷம் எப்படி!?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இஃகி, இஃகி, அப்புக்குட்டி இப்போ வளர்ந்துட்டா. குட்டிக் குஞ்சுலு தான் இப்போதைக்கு! :))))

      நீக்கு
    2. துரை அண்ணா நான் இன்னும் என் செல்லத்தை பப்பு அப்பு அம்புலு என்றுதான் விளித்துக் கொண்டிருக்கேன்..

      கீதா

      நீக்கு
    3. சுப்புக்குட்டி யார் கையையும் எதிர்பார்க்காது துரை ஸார்.. தன் வாயே தனக்குதவி என்று இருந்திருக்கும்!

      நீக்கு
  13. குச்சியில் ஒட்டிக்கொண்டிருக்கும் பூவை எங்கோ பார்த்திருக்கின்றேன்...

    இப்படிப் புதர் இருந்தால்!?...

    காடை கௌதாரிக்கு எல்லாம் சரணாலயம் ஆகிவிடுமோ?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இப்படிப் புதர் இருந்தால்!?...//

      துரை ஸார்.. சுப்புக்குட்டி என்ன, சுப்புப்பாட்டியே இருக்கும்!!!

      குச்சியில் ஒட்டியிருக்கும் பூவை அடையாளம் தெரிகிறதா?

      நீக்கு
  14. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  15. திருக்கடையூர் வீடு போல் நிறைய வீடுகள் பல கதைகளை சொல்லி கொண்டு இருக்கும்.
    படம் நல்லா இருக்கிறது. நானும் இது போன்ற வீடுகளை அந்த பக்கம் இருக்கும் போது படம் எடுத்து போட்டதற்கு கீதமஞ்சரி கவிதை எழுதினார்.
    'கோபுரதரிசனம் கோடி புண்ணியம்" நன்றி.
    //அநேகமாக நீங்கள் எல்லோரும் இந்தப் படத்தைப் பார்த்திருப்பீர்கள், வைத்திருப்பீர்கள்!//
    இப்போதுதான் பார்க்கிறேன் இந்த படத்தை.

    அப்போதைய சிறுவனின் முகபாவங்கள் அழகு.
    அப்பாவின் விருப்பத்தை நிறைவேற்றியது நெகிழ்வு.
    சுப்புக்குட்டி பதிவு போட்டது போல் இருக்கிறது.காணொளிதான் முகநூலில் என்று நினைக்கிறேன்.
    செல்லங்கள் நிலையை படிக்கும் போது மனது கஷ்டபடுகிறது. எடுத்து போய் வளர்த்தால் மகிழ்ச்சி.
    செடியில் ஒட்டவைத்தது போன்ற மலர் அழகு.

    ஒரு அரிசியில் மூன்று பெயர் பிரம்மாவை மிஞ்சியவர்கள்.
    ஒவ்வொரு அரிசி மணியிலும் ஒருத்தர் பேர் எழுதபட்டு இருக்கும் என்று சொல்வார்கள்.




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஆஆ கோமதி அக்காவையும் பார்த்திட்டேன்ன்.. யாரும் குறை நினைச்சிடாதீங்கோ.. இன்னும் கொஞ்சம் ரைம் எடுக்கும் என் நிலைமை பழைய பற்றனுக்கு வருவதற்கு:)...
      இந்த வீக்கும் ஓவ் ஆகி நெக்ஸ்ட் வீக் வர நினைச்சேன்., ஆனா இந்த வீக் ஒரு சுயநலம்:) இருக்கு எனக்கு:) அதனால வந்திட்டேன்:) வெயிட் அண்ட் சீ:)

      நீக்கு
    2. பூஸார் நைஸா எட்டிப் பார்த்துட்டு ஓடிட்டார்...

      அது என்னவோ சுயநலம் புரியுது இங்கருந்து ஃபோட்டோஸ் எடுத்து ஒரு பதிவு தேத்துவீங்க அதானே!!! ஹா ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    3. இந்தப் படத்தை இப்போதுதான் பார்க்கிறீர்கள் கோமதி அக்கா... சரி.. சுவரில் என்ன தெரிந்தது என்று நீங்கள் உட்பட யாருமே சொல்லவில்லையே...

      நீக்கு
  16. பதில்கள்
    1. என்ன ஆச்சு? எங்க வீட்டுப் பக்கம் காணோம்? பிசி?

      நீக்கு
    2. காலையிலேயே படித்துவிட்டேன். தலைப்பைப் பார்த்தவுடன் மீள் பதிவோன்னு தோன்றியது. இரவு எங்கு தங்கியிருப்பீர்கள், மறுநாள் காலையில்தான் அபிஷேகமா என்பதில் குழப்பம் இருந்தது. எழுதுகிறேன்.

      நீக்கு
    3. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்ன அநியாயம்? இத்தனை படங்களோடு எப்போப் பார்த்தீங்க? மீள் பதிவுனு சொல்லறதுக்கு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இன்னிக்கும் போட்டிருக்கேன். என்னவோ மனசிலே தோணி இது புதுசுனு தலைப்பிலேயே சொல்லிட்டேன். பார்த்தால் இங்கே நீங்க மீள் பதிவானு கேட்டிருக்கீங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    4. ஹா ஹா ஹா விடாதீங்கோ கீசாக்கா.. அழுகிற பிள்ளைதான் பால் குடிக்குமாக்கும்:)... நெல்லத் தமிழன் பறவாயில்லை போஸ்ட் படிச்சிட்டார்:).. நான் உங்கள் தலைப்பு மட்டுமே இப்போ பார்த்தேன்:)

      நீக்கு
    5. அதிரடி, நெல்லை படிச்சது நேத்தைய பதிவு. இன்னிக்குப் புதுசு போட்டாச்சாக்கும்! என்னனு நினைச்சீங்க நம்மளை!

      நீக்கு
  17. உண்மைதான் மதுரைக்காரங்க விவரமானவர்கள்தான் நான்பார்த்துப்பழகிய மதுரைக்காரர்களும் விவரமானவர்கள் அன்றைய ஸ்ரீ லுக்கிங் ஸ்மார்ட்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹிஹி, தாங்கீஸ், தாங்கீஸ்! மதுரைக்காரங்க விவரமானவங்கனு சொன்னதுக்கு! இதுக்கு முழுப் பாராட்டும் எனக்கு மட்டுமே! ஶ்ரீராமெல்லாம் மதுரைக்கு வந்தேறி தான்! :))))) நான் அப்படி இல்லையாக்கும்! :))))))

      நீக்கு
    2. //முழுப் பாராட்டும் எனக்கு மட்டுமே// - அதுனாலதான் அந்த ஊரை விட்டு வேற ஊருக்குப் போயிட்டீங்களா? எங்கேயோ படித்தேனே உங்க முன்னோர்கள் எல்லாம் நெல்லையைச் சேர்ந்தவங்கன்னு.....

      நீக்கு
    3. இஃகி, இஃகி, இஃகி, தப்புத் தப்பாச் சொல்றீங்க நெல்லை! எங்க முன்னோர்களைப் பத்தி ஒரு பதிவே எழுதி இருக்கேன். தேடினேன் கிடைக்கலை. மோகன் ஜி கேட்டார். முகநூலிலும் பகிர்ந்திருந்தேன். என் அப்பாவின் கொள்ளு/எள்ளுத் தாத்தா(யாரோ ஒருத்தர்) நர்மதை நதி தீரத்திலிருந்து பிரமசாரியாக பிக்ஷை எடுத்துக் கொண்டு ஊர் ஊராக வந்து கேரளத்தில் நம்பூதிரி பெண்ணை பிக்ஷையாகப் பெற்று மணந்து கொண்டு மதுரைப்பக்கம் மேல்மங்கலம் கிராமத்தில் அப்போதைய அரசருக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டு குடியமர்ந்தவர்! மேல்மங்கலம் ஒரு காலத்தில் சிற்றரசாக இருந்தது. ஆகவே நாங்க நெல்லை இல்லை. பெருமை உங்களுக்கு இல்லை! இஃகி, இஃகி!

      நீக்கு
    4. ஜிஎம்பி ஸார் அன்றைய ஸ்ரீ யா??? எங்க ஸார் இருக்கார்? ஹையோ ஹயோ இந்த பூஸாரின் கண்ணில் இது படலியே!!!!

      கீதா

      நீக்கு
    5. /பெருமை உங்களுக்கு இல்லை! இஃகி, இஃகி!// - கீசா மேடம்... எங்க முன்னோர்களும் காஞ்சீபுரத்தைச் சேர்ந்தவங்க. அவங்க இடம் பெயர்ந்து, கடைசியில் கோபால சமுத்திரம் சேர்ந்தாங்க. (நெல்லையிலிருந்து 30 கிமீ). அவங்களும் (முந்தைய தலைமுறை) மணந்தது திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பெண்ணைத்தான்.

      நீக்கு
    6. //மதுரைக்காரர்களும் விவரமானவர்கள் //

      என்று சொல்வதைவிட ரசனையானவர்கள் என்று சொல்லலாம்...

      //அன்றைய ஸ்ரீ லுக்கிங் ஸ்மார்ட்//

      அப்படியா? நீங்கள் எங்கே, எப்போது பார்த்தீர்கள்?

      நீக்கு
    7. // ஶ்ரீராமெல்லாம் மதுரைக்கு வந்தேறி தான்! //

      எல்லாருமே எல்லா ஊருக்குமே அப்படிதான் கீதா அக்கா...!!!!! ஆனால் நான் தஞ்சாவூர்க்காரன் என்றும் சொல்லலாம்.

      நீக்கு
    8. //ஹயோ இந்த பூஸாரின் கண்ணில் இது படலியே!!!!
      //

      என் கண்ணுலயே படலையே கீதா...

      நீக்கு
    9. அன்றைய ஸ்ரீ லுக்கிங் ஸ்மார்ட்// இதுதான் ஸ்ரீராம் ஜிஎம்பி ஸார் கொடுத்த கமென்டில கடைசி..பாருங்க...

      கீதா

      நீக்கு
    10. அன்றைய ஸ்ரீ என் கண்ணிலேயே படவில்லையே என்று சொன்னேன் கீதா... அந்த கமெண்ட்டுக்குதான் என் பதில் அது!!

      நீக்கு
  18. படங்கள் அழகு. சிதிலமாகியிருக்கும் அந்த வீடு ஏனோ மனதை கஷ்டப்பட வைக்கிறது. அது சுப்பு குட்டியா? நான் சற்றுப் பெரிய மண்புழு என்று நினைத்தேன் 樂

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நான் சற்றுப் பெரிய மண்புழு என்று நினைத்தேன்//

      இதைச் சொல்லி இருந்தால் அந்த பாம்பே அவமானப்பட்டு ஓடி இருக்கும் பானு அக்கா!

      நீக்கு
    2. ஹையோ பானுக்கா சுப்புக் குட்டியின் மானத்தை வாங்கிவிட்டாரே!!!!!இனி என்னை படமா போடாதீங்க ஸ்ரீராம்னு கெஞ்சப் போகுது...அப்ப கீதாக்கா சொன்னது சரிதானோ ஸ்ரீராம்...நீங்க அதை சரியா வளர்க்கலை மெலிஞ்சு இருக்குனு...ஹா ஹா ஹா

      ஸ்ரீராம் உங்க பதில் சிரிச்சுட்டேன்...

      கீதா

      நீக்கு
    3. ஸ்ரீராம் சுப்புக் குட்டி பானுக்காவின் கமெண்டை படிக்காம கிழிச்சுப் போட்டுருங்க...திரும்ப வந்து நீங்க இனி என்னை படமெடுக்க வேண்டாம் நானே எடுத்துக்கறேன்னு பயமுறுத்தப் போகுது!!! ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  19. அந்த பொடிப் பையன் உங்கள் மூத்த மகனா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதான் நானும் நினைச்சேன். ஆனால் நான் போனப்போ அவர் இல்லைனு நினைக்கிறேன். சொல்லப் போனால் பையர்கள் யாருமே இல்லையோ? கேஜிஎஸ் தான் வந்தார்!

      நீக்கு
    2. //அந்த பொடிப் பையன் உங்கள் மூத்த மகனா?//

      இல்லை பானு, கீதா அக்காஸ்... அது என் அக்காவின் இரண்டாவது பேரன்!

      நீக்கு
  20. "மதுரைக்காவுங்க விபரமானவங்க" என்றால் ???

    மற்ற திருச்சி, நெல்லை, சென்னை போன்ற ஊர்க்காரர்கள் வேறு மாதிரி நினைத்து கோபப்பட மாட்டார்களா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி உங்களை வுட்டுப் போட்டீங்களே!! கோடரிய தூக்கிட்டு மீசையை முறுக்கலையா??!!! ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    2. தேவகோட்டைக்காரங்க இன்னும் விவரமானவங்க கில்லர்ஜி... ஓகேயா?

      நீக்கு
    3. //கில்லர்ஜி உங்களை வுட்டுப் போட்டீங்களே!! //

      அதை என் வாயால சொல்ல வச்சிருக்காரு கீதா...

      நீக்கு
    4. ஹா அஹ ஹா ஸ்ரீராம் அவருதான் எதுக்கெடுத்தாலும் தேவகோட்டைனு சொல்றவராச்சேனுதான் ...

      கீதா

      நீக்கு
    5. இந்த லிஸ்டில் நானே தேவகோட்டையை சேர்க்ககூடாது காரணம் மதுரை லிஸ்ட்ல வரணும்.

      நீக்கு
  21. இந்த வாரம் படங்களும் செய்திகளும் வித்தியாசமாக இருக்கிறதே....!

    பதிலளிநீக்கு
  22. ஆஆஆ மீ ஒரு விரலை மட்டும் பதிக்கிறேன்:) முழுசா கால் பதிக்க இன்னும் ரைம் ஆகும்போல இருக்கே:)...

    அதூஊஊஊ “பொடியன்” இல்ல ஶ்ரீராம், “ பெடியன்” ஆக்கும்:)... ஹையோ வந்த வேகத்திலயே டமில் படிப்பிக்க வைக்கிறீங்களே திருப்பெருந்தூர் வைரவரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா... எங்கூர் பாஷைல பொடியன்தான்!

      நீக்கு
    2. ஸ்ரீராம் நாங்கல்லாம் டமில்ல டி யாக்கும்னு சொல்லிக்கறவங்க சொல்றத பாருங்க....ஹாஹா

      கீதா

      நீக்கு
  23. தலைப்புப் பார்த்து, இது சற்ற கிழமை போஸ்ட் எனவும், சூரிய டேக்கு போஸ்ட் போடல்ல எனவும் முடிவெடுத்திட்டேன்:)... பின்பு இல்ல ஒருக்கால் உள்ளே போய்ப் பார்ப்பமே என களத்தில குதிச்சேன் கரீட்டூஊஊ:)...

    எங்கட ஆட்கள் எல்லோருமே இங்கினதான் இருக்கினம்... சந்தோசம் பொயிங்குதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சற்ற கிழமை போஸ்ட் என்றால் என்ன? தலைப்பு பொருந்தவில்லையா? ஆனால் பாருங்க... இந்தத் தலைப்புக்கு ஆர்வத்தில் ரீடர்ஸ் எண்ணிக்கை பரவாயில்லாமல் இருக்கிறது!

      நீக்கு
  24. சுப்புக்குட்டி என்றதும் சுப்புத் தாத்தா நினைவுக்கு வருகிறார்.. அதுசரி அது குட்டியாஆஆ? என்னா பெரிசு இதைப்போய்க் குட்டி எனச் சொல்லலாமோ.. அப்போ ஶ்ரீராம் பா......பும் வளர்க்கிறார்:)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா அதிரா அவர் வளர்க்கலை துரட்டி விட்டுப்போட்டார் கீதாக்கா வீட்டிற்கு....அவங்கதான் அதை செல்லமா வளப்பாங்க...நு

      கீதா

      நீக்கு
    2. //என்னா பெரிசு இதைப்போய்க் குட்டி எனச் சொல்லலாமோ.. //

      நீங்க இப்படிச் சொல்றீங்க அதிரா ... பானு அக்கா பெரிய சைஸ் மண்புழு என்கிறார்... எதை எடுத்துக்கொள்ள?

      நீக்கு
  25. நானும் இந்த எச் ரி சி போன் 2011 இல வாங்கி, அது கொம்பியூட்டரில் கனெக்ட் ஆகாமல் குடுத்து திரும்ப புதுசு எடுத்து... அதுவும் ஏனோ மனதுக்கு அமையாமல் .. சவுண்ட் சிஸ்டம் நல்லாயில்லை... 6 மாதத்தில வேறு போனுக்கு போயிட்டேன்.. ஆனா இந்த போன் ஷேப் எனக்கு பிடிச்சிருந்துது.

    பதிலளிநீக்கு
  26. அப்பா ஒரு அடைதானே சாப்பிட்டிருப்பார் அதுக்குப் போய் எந்தாப் பெரிய அண்டாவில மா கரைச்சிருக்கிறீங்க ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது ஒரு கேள்வியா ஞானி? ஆடி வெள்ளிக்கிழமைக்கு ஒரு விளக்கு ஏற்றாமல், 8 மாவிளக்கு யாருக்கு வச்சீங்க (வச்சினீங்க). நீங்க சாப்பிடறதுக்குத்தானே. அதுமாதிரி, அப்பாவைச் சாக்கிட்டு....... ஸ்ரீராம் அவருக்குத் தயார் பண்ணியிருப்பாரோ? இல்லை அப்போ சமையலில் novice என்பதால், அவங்க சொன்ன அளவு ஒரு குடும்பத்துக்கா இருக்கும்.... ஹாஹாஹா

      நீக்கு
    2. நான் ஹெச் டி சி போன் வாங்கும்போது சந்தோஷமாக, பெருமையாகத்தான் வாங்கினேன். அப்புறம் மூன்றரை வருடங்களில் அது உயிரை விட்டு விட்டது!

      நீக்கு
    3. //அப்பா ஒரு அடைதானே சாப்பிட்டிருப்பார் /

      ஒரு அடைகூட இல்லை. அரை அடை! மிச்சமெல்லாம் நான், என் சகோதரர், மாமா... மீதியை ஃபிரிஜ்ஜில் வைத்து விட்டோம்!

      நீக்கு
  27. அந்த குட்டிச் செல்லங்களை இந்த சுப்புக்குட்டி ஒன்றும் பண்ணாதோ? பார்க்கவே பதறுது...

    மதுரைக்காரங்க விபரமானவர்களோ?.. கீசாக்காவைப் பார்த்தா அப்பூடித் தெரியல்லியே:) இஸ்கி இஸ்கி... நானும் சிரிச்சேன்ன்ன்ன்ன்ன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா... ஹா... மதுரைக்காரங்க விவரமானவங்களோ இல்லையோ, ரசனையானவங்க அதிரா...

      நீக்கு
  28. ஸ்ரீராம் முதல் ஃபோட்டோ செமையா இருக்கு....இப்படி ப் பல வீடுகள் கிராமங்களில் தங்கள் வயதைப் பறை சாற்றிக் கொண்டு தளர்ந்து விழுந்துவிடும் நிலையில் இருக்கின்றன...

    சுப்புக் குட்டி என்னா நீளமா இருக்கார்!!!! யம்மாடியோவ். பாவம் அந்தச் செல்லங்கள்..உங்க காலடியிலேயே விழுந்து ஓடினாரா...ஆஆஆஆஆஆஅ!!! துண்டைக் காணோம் துணியைக் காணோம்னு ஓடுறார் பாருங்க...பாவம்...அவருக்கு நீங்க ஒரு சட்டை கூட வாங்கிக் கொடுக்கலை நல்ல கலர்ஃபுல் சட்டை போட்டிருந்தா எங்களுக்கும் பார்க்க நல்லா தெரிஞ்சுருப்பாரு...டிசைனே இல்லை....ஹா ஹா ஹா....

    அது சரி இந்த சுப்புக்குட்டி நல்லவர் இல்லையோ?!!! பார்த்தா அப்படித்தான் தெரியுது ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  29. கோபுரம் அழகாக இருக்கிறது. அந்தப் பொடியர் செம க்யூட்!! ராகுல் போலத் தெரியுது!!! அட்டைப்படத்தில் எல்லா பெயரர்களும் இருப்பார்கள் இல்லையோ..!!

    அடை மாவு சட்னி ஆஹா பார்த்ததுமே நாளைய டிஃபன் அது என்று முடிவு செய்துட்டேன். அடை மாவில் காரம் இல்லை போல இருக்கு. (இலை தழைகள் எதுவும் போடலையோ (கீதாக்காவும் இதைக் கேட்டிருக்காங்க) ஆனால் சட்னி அடையில் இல்லா காரத்தை அதை காம்பன்சேட் செய்து விடும் போலத் தெரியுது!!!

    எல்லா படங்களும் செம ஸ்ரீராம் ரசித்தேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹல்லோ கீதா மா. நலமா.

      ஸ்ரீராம், அந்தக் குட்டிப் பையன் உங்கள் பையனோ.அழகுச் செல்லமா இருக்கான்.
      சுப்புக்குட்டி மறக்கிற அளவுக்கு வருஷங்கள் ஆகவில்லை.

      இப்பவாவது அந்தப் பொந்தை மூடிவிட்டீர்களா.

      அப்பாவுக்கு அடை ருசி தெரிந்ததா. திருப்திப் பட்டிருப்பார்.

      செல்லங்கள் வெகு அழகான நிறம் கொண்டு அருமையாக இருக்கின்றன. இடிந்து கொண்டிருக்கும் வீடு கதைகள் பல சொல்கிறது. எத்தனை பனம் பழங்கள்.
      திருக்கடையூர் கோபுர தரிசனத்துக்கு மிக நன்றி.

      நீக்கு
    2. சுப்பு குட்டி என் காலடியில் விழுந்து பதறி ஓடினார். அதை அடிக்க நான் பாய, என் பாஸ் வெள்ளிக்கிழமை அப்படிச் செய்யக் கூடாது என்று சொல்லி விட்டார் கீதா.. முன்பே பகிர்ந்திருந்தேன் - வீடியோவுடன்.

      நீக்கு
    3. //ராகுல் போலத் தெரியுது!!!//

      இல்லை கீதா.. இது என் அக்காவின் இரண்டாவது பேரன்.

      நீக்கு
    4. வாங்க வல்லிம்மா.. அந்த பொந்தெல்லாம் தானாகவே மூடிக் கொள்ளும். அப்புறம் புதிதாக உருவாகும்! அந்தக்குட்டிப் பையன் அழகா இருக்கான் எண்ணும்போதே தெரியவில்லையா, அது என் பையன் இல்லை என்று! அவன் என் அக்காவின் பேரன் வல்லிம்மா...

      அப்பா அடையை ரசித்தார் என்பதில் ஒரு திருப்தி.

      நன்றிம்மா.

      நீக்கு
    5. அந்த வீடியோவை எப்படி மிஸ் பண்ணினேன் ஸ்ரீராம் எனக்கு இதெல்லாம் நினைவு இருக்குமே!!!

      கீதா

      நீக்கு
    6. வல்லிம்மா நலம் நலம் அறிய ஆவல்!!! ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    7. ஒரு வேளை வீடியோ முகநூலில் மட்டும் பகிர்ந்திருந்திருப்பேனோ!

      நீக்கு
  30. சுவரைப் பார்த்தால் உருவம் தெரியுது...எங்க வீட்டுச் சுவர் இப்படியான நிறைய படங்களை மாட்டாமலேயே சுமந்து கொண்டிருக்கு ஹா ஹா ஹா ஹா

    நீங்க இங்க கொடுத்துருக்கற படத்துல ஒரு ஹார்ட் இருக்கு ஜெ இருக்கு....அல்லது நாய்க்குடைகாளான் என்று சொல்லலாம்...ம்யூசிக் சிம்பல் இருக்கு....பல டிசைன்கள்...

    எல்லாமே சூப்பர்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  31. /நீங்க இங்க கொடுத்துருக்கற படத்துல ஒரு ஹார்ட் இருக்கு ஜெ இருக்கு....அல்லது நாய்க்குடைகாளான் என்று சொல்லலாம்...ம்யூசிக் சிம்பல் இருக்கு....பல டிசைன்கள்...//

    கீதா... நான் கொடுத்திருக்கும் படத்தைச் சில நிமிடங்கள் கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு எதிரே உள்ள சுவரைப் பாருங்கள். அங்கு ஒரு உருவம் தெரியும்.... ஆப்டிகல் இல்லுஷன்!

    பதிலளிநீக்கு
  32. அனைத்து பதிவுகளும் நன்று பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  33. சுவாரஸ்யமான தொகுப்பு.

    முதல் படத்தைப் பார்த்ததுமே இது PiT (flickr அல்ல) போட்டியில் கலந்து கொண்டதாயிற்றே என நினைத்தேன். நீங்களும் அதையே குறிப்பிட்டுள்ளீர்கள். தலைப்பு “கைவிடப்பட்டவை”!

    அப்பாவின் ஆசைக்காக அடை செய்து கொடுத்தது நெகிழ்வு.

    பதிலளிநீக்கு
  34. படங்களும் நினைவுகளும் அழகு என்றுமே

    பதிலளிநீக்கு
  35. வீடு கட்டும்போது வெறும் செங்கல் மணல் சிமெண்ட் மட்டும் ஒன்று சேர்வதில்லை. அதை கட்டுபவரின் (உரிமையாளர்) உணர்வுகளும் தான். வீட்டை கட்டியவர் இந்த நிலையில் அதை பார்த்தால் என்ன நினைப்பார் என்று தான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

    நாய்க்குட்டிகள் என்றுமே அழகு.

    -மஹேஷ்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!