புதன், 21 அக்டோபர், 2020

மறதி எனப்படுவது யாதெனில் ..




வல்லிசிம்ஹன் : 
மறதி என்பது வியாதியா? அசிரத்தையா?
முக்கியமானது இல்லை என்று மறப்பதா?

$ சிறு வயதில் சிரத்தையின்மை
மத்ய வயதில் முக்கியமின்மை
வயோதிகத்தில் தேய்மானம். 

# அசிரத்தை எனும் வியாதி !
மூப்பு காரணமாக சமீபத்திய விஷயங்களை எளிதில் மறக்க நேரிடுகிறது. இது அசிரத்தை அல்ல. வியாதியும் அல்ல. 
குறித்து வைப்பது, எந்தப் பொருளையும் ஒரே இடத்தில் வைத்திருப்பது போன்ற உபாயங்கள் உதவக்கூடும். 
"அதுவா, அலமாரி மூன்றாம் தட்டு.."

& இந்தக் கேள்விக்கு சரியான, அற்புதமான, அழகான பதில் ஒன்று இருக்கு. அதை இங்கே சொல்லிவிடுகிறேன். அந்த பதிலைப் படித்து நீங்க நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க. ரொம்ப நாள் யோசித்துக் கண்டுபிடித்தேன். அது என்ன என்று கேட்டீர்களானால் .. -- .. '  அது வந்து --- மறந்து போயிடுச்சு --- ' 


பானுமதி வெங்கடேஸ்வரன் : 

நம்மிடையே உறவினர்கள் யாராவது இறந்து விட்டால் தீட்டு காப்பது என்று ஒரு பழக்கம் இருக்கிறதே அதன் தாத்பர்யம் என்ன? நான் பார்த்தேயிராத ஒருவர் என்னதான் உறவினர் என்றாலும் இறந்து விட்டார் என்பதற்காக நான் பண்டிகைகள் கொண்டாடக் கூடாதா? என்ன அபத்தம் இது? (என்கிறான் என் மகன்.)

# இதற்கு விடை அளிப்பதற்கான தகுதி எனக்கில்லை. குடும்ப உறுப்பினர்கள் ஒரு சிறிய வட்டத்துக்குள் (ஒரே கிராமம்) வாழ்ந்திருந்த சூழலில் ஒரு வீட்டில் சோகம் இன்னொன்றில் கொண்டாட்டம் என்பது அபத்தமாக இருக்கும் என்பதாலோ, இறந்தவர் ஆவி சில நாட்களுக்கு அங்கும் இங்குமாக அலைந்த வண்ணம் இருக்கும் என்ற நம்பிக்கை காரணமாகவோ இந்த மாதிரியான நியதிகள் விதிக்கப் பட்டிருக்கலாம். பழகி விட்ட காரணத்தால் கைவிட இயலாத நிலையில் இருக்கிறோம்.

& என்னைக் கேட்டால், பண்டிகைகள் என்பது, ஒரு குழுவாக அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் சந்தோஷமாக கழிக்க வேண்டியவை. நாம் பார்த்தேயிராத உறவினர் இறந்துவிட்டார் என்றால் அதற்காக பண்டிகைக் கொண்டாட்டங்களை அறவே விலக்கவேண்டும் என்று இல்லை. என் அப்பா அவர் வாழ்ந்த காலத்தில் ஓர் அற்புதமான விளக்கம் எனக்கு சொல்லியிருக்கிறார். "பண்டிகை காலத்தில், குழந்தைகள் சந்தோஷமாக இருக்கவேண்டும். நம் குடும்பத்தைப் பொறுத்தவரை, அம்மா அப்பா உயிரோடிருக்கும் நிலையில், எந்தக் குழந்தையும் பண்டிகைகள் கொண்டாடாமல் இருக்கக்கூடாது. அம்மாவோ அப்பாவோ இறந்துவிட்டார்கள் என்றால், அவர்களின் மகனோ, கல்யாணமாகாத மகளோ வேண்டுமானால் ஓர் ஆண்டு பண்டிகைகள் கொண்டாடாமல் இருக்கலாம். ஆனால் இறந்தவர்களின் பேரக்குழந்தைகள் பண்டிகை கொண்டாடாமல் இருக்கவேண்டாம். " இதுதான் சரியான நிலைப்பாடு என்று எனக்குத் தோன்றுகிறது. 

======

மின்நிலா தீபாவளி மலருக்காக சில கேள்விகளை facebook  ல கேட்டு வருகிறேன். facebook  கணக்கு இல்லாதவர்கள் இங்கே பதில் சொல்லுங்க. எல்லா பதில்களையும் தொகுத்து மின்நிலா தீபாவளி சிறப்பிதழில் (9.11.2020) வெளியிடுவோம்.   

(அங்கே ஏற்கெனவே பதில் அளித்துள்ளவர்கள் இங்கு மீண்டும் அந்த பதிலை சொல்லவேண்டியதில்லை.) 


01 :  பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூக தளங்களால் விளையும் நன்மை என்ன, தீமை என்ன?

 




=====


123 கருத்துகள்:

  1. பா வெ எப்பவும் நம்ம ரூட்ல க்ராஸ் பண்றாங்களே. எதுனால? அவங்க கேட்டிருக்கும் கேள்வி அப்படி

    பதிலளிநீக்கு
  2. கூட்டுக் குடும்ப காலம். முதல் வருடம் நிறைய க்ரியைகள் உண்டு. அதனால கொண்டாட்டங்கள் கிடையாது. எனக்கும் தீட்டு, கிச்சன் உபயோகம் கூடாது என்பதிலெல்லாம் (உறவினர் இறந்தால்) கால மாற்றத்தால் கேள்விகள் வருது

    பதிலளிநீக்கு
  3. ஆனா,, நாம follow பண்ணுவோம், அடுத்த ஜெனரேஷன் அவங்களுக்கு தோணுவதைச் செய்துகொள்ளட்டும் எனத் தோணுது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுவும் சரியே! நமக்கு எது சரி எனப் படுகிறதோ அதை நாம் செய்வோம். ஆனால், இதுதான் சரி என்று எதையும் சந்ததியினருக்கு சொல்லவேண்டாம்.

      நீக்கு
    2. ///ஆனா,, நாம follow பண்ணுவோம், அடுத்த ஜெனரேஷன் அவங்களுக்கு தோணுவதைச் செய்துகொள்ளட்டும் எனத் தோணுது//

      நெல்லைத்தமிழனின் இந்தக் கொள்கையை, மீயும் படு பயங்கரமாக, படு வன்மையாக வழிமொழிகிறேன்:)).. அதாவது வருங்காலத்தை நினைத்து, இப்போதிருக்கும் காலத்தையும் எதுக்குக் கோட்டை விட வேண்டும்...

      ஒரு பயமொயி:) நினைவுக்கு வருது
      “குளம் அங்கிருக்க, கோ...தை இங்கு கழட்டாதே” என்பது ஹா ஹா ஹா..

      அப்படித்தான் எதிர்காலத்தில் நம் சந்ததி இதை என்ன கடைப்பிடிக்கப் போகுதோ இல்லைத்தானே அதனால நாமும் இப்பவே மாறிவிடுவோம் என, ஊரில வெள்ளி செவ்வாயில் உபவாசம் இருந்து இரவில மட்டும் சாப்பிட்ட சிலர், வெளிநாடு வந்ததும்... இன்று வெள்ளியா? ஆஆ நான் அதை எல்லாம் மறந்திட்டேன்.. இன்று முட்டைப்பொரியல் சாப்பிட்டேன் எனச் சொல்வோரையும் பார்த்திருக்கிறேன்.

      நாம் நம் கடமையைச் செய்வோம்.. வருங்காலம் எப்படி ஆகுமோ அப்படி ஆகட்டும்...என்பதுதான் எங்கள் கொள்கையும்.

      ஆனால் நம்மைவிட வருங்காலம் அதிகம் நம் மூதாதையர்போலவும் மாறலாம்.. எங்கள் வீட்டில் சைவ நாட்கள் எனில் சொல்லி வைப்பேன் நாளை வெஜிடேரியன் டே என... ஆனா சாதாரண வெள்ளி செய்வாய் நாட்களில் நான் நுணுக்கம் பார்க்க மாட்டேன்.. நம் மகன்கள்.. ஒரு சொக்கலேட்டைக்கூட எடுத்து இன்கிறீடியன்ஸ் படிச்சு.. இதில் முட்டை வெள்ளைக்கரு போட்டிருக்கிறார்கள்.. சாப்பிடக்கூடாதெல்லோ என்பினம்...

      நீக்கு
    3. நீண்ட, விளக்கமான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    4. நேற்று எந்த ஊருக்கு விடுமுறை பயணம் போவது நல்லது என்ற பேச்சு (எப்பவாச்சும் போக) வந்தபோது, லண்டனுக்கு ஒரு வாரம் பசங்களுக்குள்ள கடமைலாம் முடித்தபின் அழைத்துப் போகணும்னு சொன்னபோது, பலர், ஸ்காட்லாந்து அருமையாக இருக்கும், லண்டன்னா வெறும் சிட்டி லுக்தான் இருக்கும்னு சொன்னாங்க. அப்போ உங்க நினைவு வந்தது. வாழ்க வளமுடன்

      நீக்கு
    5. //அப்போ உங்க நினைவு வந்தது///

      ஸ்கொட்லாண்ட் என்றாலே அதிரா நினைவுக்கு வராமல் கீசாக்காவா நினைவுக்கு வருவா?:) இல்ல அப்படி வரத்தான் விட்டிடுவனோ நான் ம்ஹூம்ம்ம்:)) ஹா ஹா ஹா... ஸ்கொட்லாந்து பலருக்கு கனவு உலகமாம் என சொல்லியிருக்கினம்.. லண்டனில் வசிப்போர் கூட... ஏனெனில் ஸ்கொட்லாண்டில் இருப்போர் லண்டன் சுற்றிப் பார்க்காதோர்/போகாதோர் இருக்க மாட்டினம், ஆனா இங்கிலாந்தில் இருப்போரில் முக்கால்வாசிப்பேருக்கு ஸ்கொட்லாண்ட் தெரியாது...:).. நான் அஞ்சுவைச் சொல்லல்லே:))

      நீக்கு
    6. யாரோ என் பேரை சொன்ன மாதிரி அதுக்கு பெங்களூர்லருந்து ஹாஆஹா னு  பெரும் சிரிப்பு சிரிச்சது எல்லாம் எனக்கு நைட் கனவில் வந்துது ..இதோ வந்துட்டேன் :)

      நீக்கு
    7. @நெல்லைத்தமிழன் அண்ட் கௌதமன் சார் . லண்டனுக்குத்தான் நிறையபேர் வருவாங்க ராணியே இங்கே தானே இருக்காங்க லண்டன் என்பது தல நகரம் அது எப்பவும் பிசியா தான் ருக்கும்  ..
      ஸ்கொட்டிஷ் கரன்சியை எங்க லண்டன்  / இங்கிலாந்தில் வாங்க மாட்டாங்க கடைகளில் அதை ஸ்கொட்டிஷ்க்காரமாவே உங்களுக்கு சொல்லனாலும் நான் சொல்லுவேன் :) பிரிட்டிஷ் பவுன்சுக்கு தன மதிப்பூ :)

      நீக்கு
  4. இனிய காலை வணக்கம்.
    மறதிக்குப் பதில் சொன்ன அழகு நன்றாக இருக்கிறது.
    அழகாக வயது வாரியாகச் சிந்திக்க வைத்து விட்டீர்கள்.

    சொல்ல வந்ததையே மறந்து விட்டவர் நிலையில் தான் நான் இப்போது இருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  5. மூப்பு காரணமாக சமீபத்திய விஷயங்களை எளிதில் மறக்க நேரிடுகிறது. இது அசிரத்தை அல்ல. வியாதியும் அல்ல.//////////
    பழையதெல்லாம் நினைவில் பளிச்சென்று இருக்கிறது.
    புதிது தான் மறந்து போகிறேன்.

    குறித்து வைத்துக் கொள்கிறேன். மிக மிக நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கவேண்டியது இருக்கும்
      போகவேண்டியது போய்விடும்
      இதுதான் மனமென்பது..

      நீக்கு
    2. super * பஞ்ச் டயலாக் போல இருக்கே!

      நீக்கு
    3. ஏகாந்தன் சார்...

      போகவேண்டியது இருக்கும்
      இருக்க வேண்டியது பறந்துவிடும்
      அதுதான் மனம்

      இல்லையா?

      நீக்கு
    4. தூசென நினைப்பதெல்லாம்
      பறக்காமல் வந்து ஒட்டிவிடும்,
      ஆனா பறக்கவே பறக்காது என நினைக்கும்
      பாறாங்கல்லெல்லாம் பறந்திடும்...

      ஹா ஹா ஹா எங்களுக்கும் வருமெல்லோ... அதுதான் மேலே கெள அண்ணன் சொன்ன பஞ்சு:))

      நீக்கு
  6. பெரியவர்கள் இருந்த வரையில் கும்பகோணம்
    பெரியப்பா, அவர் மனைவி, பாப்னாசம் சித்தப்பா ,அவர் மனைவி என்று தீட்டு வந்து கொண்டிருக்க

    பாட்டி அலுத்துப் போய் பசங்களுக்கு
    உடை எல்லாம் எடுத்து
    தீபாவளி கொண்டாடுஙோ,
    நீங்கள் அடுத்த நாள் உடுத்திக் கொள்ளலாம் என்று ரூலை மாற்றினார்.

    மாமனாருக்கு கசின் வகையில் 40 நபர்கள்:)
    தெரிந்தவர் என்றால் நமக்கே மனசாகாது.
    அத்ற்காக துக்கத்தை நிறையக் கொண்டாடுவது என்றும் சொல்வார்.

    ஃப்ரீயா விடு கொள்கைதான்.

    பதிலளிநீக்கு
  7. முதல் கேள்வி என்ன?
    இரண்டாம் கேள்விக்கு
    நான் சந்திக்காத மிகப் பிடித்தவர்கள்
    அனேகம்.நம் அன்பு திரு கலாம் முக்கியமானவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 01 : பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூக தளங்களால் விளையும் நன்மை என்ன, தீமை என்ன?

      நீக்கு
    2. பல நல்ல விஷயங்கள் கிடைக்கின்றன. வேண்டாத செய்திகள் விலக்கி விடலாம். முக நூலைச்சொல்கிறேன். வாட்ஸாப். நட்பை வளர்ப்பதாகவே நினைக்கிறேன்.
      எல்லோருடனும பேச நல்ல இடம் அரசியல் பேசாதவரை நன்மை தான்.

      நீக்கு
  8. மூன்றாம் கேள்விக்கு
    மிகப் பிடித்தது நான் தூங்கும் இடம்.

    பதிலளிநீக்கு
  9. மிகப் பிடித்த தொலைக்காட்சி சானல்

    மூவீஸ் சானல்கள்.

    பதிலளிநீக்கு
  10. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...

    நலம் வாழ்க என்றென்றும்...
    நன்மைகள் சூழ்க எங்கெங்கும்!...

    பதிலளிநீக்கு
  11. வாழ்வியலோடு இணைந்த கேள்விகளும் பதில்களும்..

    அருமை...

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் காலை வணக்கம். மறதி பற்றிய கேள்விக்கு & பதிலை மிகவும் ரசித்தேன். ரேவதி சங்கரனிடம் நையாண்டி தர்பாரில் யூகி சேது,"உங்களால் மறக்க முடியாத அனுபவங்கள் ஏதாவது உண்டா?" என்று கேட்ட பொழுது, "நிறைய இருக்கிறது, ஆனால் மறந்து விட்டது.." என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட ! நீங்க நல்லா ஞாபகம் வெச்சுருக்கீங்களே ! சூப்பர்!

      நீக்கு
  13. பதில்கள்
    1. இன்றைக்கு புதன் கிழமை என்பதை மறந்துவிட்டேன்.
      கஞ்சி காப்பி கடைகள் முடிக்க இவ்வளவு நேரமாகிவிட்டது.
      கு கு வுடன் பேசிக்கொண்டிருந்தேன்
      கிர் ர் ர் ர் ர் ர் ர்
      இதில் எதையாவது assume செய்துகொள்ளுங்கள் !

      நீக்கு
    2. என்னைத் தேடிய ரேவதிக்கு நன்றி. பதிலளித்த கேஜிஜிக்கும் நன்றி. உண்மையாவே இன்று குட்டிக் குஞ்சுலு ஆறரை மணிக்கே வந்து விட்டது. அதுக்கப்புறமாத்தான் குளிக்கப் போனேன். ஏற்கெனவே நேற்றோ/முந்தாநாளோ, முந்தாநாள் தான் நெல்லைக்குச் சொன்னாப்போல் காலை வேலைகள் முடிச்சுக் குளிச்சு சுந்தரகாண்டப் பாராயணத்தை முடிச்சுட்டு நிவேதனம் பண்ணி, சமையல் வேலை/சாப்பாடு வேலை. சமையலறை சுத்தம் செய்யும் வேலை எல்லாத்தையும் முடிச்சுட்டுப் பூ இருந்தால் தொடுத்துட்டு சுமார் ஒன்றரை மணிக்கு வரேன் பூ இல்லை எனில் பனிரண்டரைக்கு வருவேன். திங்கட்கிழமை விஜயதசமி வரை காலையில் வர முடியாது.

      நீக்கு
    3. ரேவதி தொலைபேசியில் அழைத்துப் பேசி விட்டார். பாவம், ரொம்பக் கவலைப் பட்டிருக்கார் போல! காணோமே, என்னனு புரியலையேனு குழப்பம் வேறே! :((((( நான் ஏற்கெனவே சொல்லிட்டேனேனு நினைச்சுட்டேன். அவங்க பார்க்கலை போல!

      நீக்கு
  14. பொதுவாக எந்தப் பொருளையும் சரியான இடத்தில் வைத்து எடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் மறதிகள் குறைய வாய்ப்புண்டு.

    நான் செருப்பை வாசலில் போடுவேன் திரும்ப அவசியப்பட்டால் அதே இடத்தில் எடுத்துக் கொள்வேன்.

    அதேபோல் பணம், நகை, வைரம், வைடூரியங்களை பீரோவில்தான் வைத்து எடுப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், அதுதான் சிறந்த வழி. A place for everything and everything in it's place.

      நீக்கு
    2. கில்லர்ஜி அந்த வைரம், வைடூரியங்கள் இருக்கும் பீரோக் கீ எங்கிருக்குது எனக் கொஞ்சம் ஜொள்ள முடியுமோ?:)

      நீக்கு
    3. அடுத்த டைட்டில் என்ன? அதி(ர)ருடி அதிரா ?

      நீக்கு
    4. //பீரோ கீ எங்கிருக்குது எனக் கொஞ்சம் ஜொள்ள முடியுமோ ?//

      அதை ஜேம்ஸ் ஊரணிக்குள்ளே வீசி விட்டுட்டேனே...

      நீக்கு
    5. அச்சச்சோ நமக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:)

      http://www.larkmead.co.uk/sites/larkmead.co.uk/files/white-cat-running%20comp.jpg

      நீக்கு
    6. ///கௌதமன் 21 அக்டோபர், 2020 ’அன்று’ பிற்பகல் 12:26
      அடுத்த டைட்டில் என்ன? அதி(ர)ருடி அதிரா ?///

      இப்பத்தான் வோட்டிங் நடக்குது:)).. விரைவில தெரிஞ்சிடும்:))

      நீக்கு
    7. ஸ்மைலி மட்டும் போடுவது வன்மையாகத் தடை செய்யப்பட்டுள்ளது வலை உலகில்:).... ஜொள்ளிட்டேன் ஆமா:)

      நீக்கு
    8. ஆஆஆஆ இதென்ன கொடுமை இதூஊஊ:)... விடுங்கோ என் கையை விடுங்கோ நான் தேம்ஸ்க்கே ஓடிடுறேன்:)...

      நீக்கு
  15. ஃபேஸ் புக், வாட்ஸாப் போன்றவைகளால் உறவினர்களோடும், நண்பர்களோடும் தொடர்பில் இருக்க முடிகிறது. முதியவர்களுக்கு நல்ல கம்பானியன். ஃபேஸ் புக்கில் இருக்கும் குழுக்களால் நமக்கு கிடைக்கும் அங்கீகாரம் அலாதி திருப்தி.
    பாதகம் என்றால் தடியெடுத்தவன் தண்டல்காரன் என்பது போல ஒரு ஆண்ட்ராய்ட் ஃபோன் இருந்தால் போதும்,யார் வேண்டுமானாலும்,என்னவேண்டுமானாலும் எழுதலாம், நோ சென்சார் என்னும் நிலை.
    ஃபேஸ்புக் மூலம் நட்பு கொள்வதால் ஏற்படும் பாதகங்கள், சைபர் க்ரைம்.
    ப்ரைவசி இல்லாமல் போவது,நம்மை அறியாமலேயே நம்மை யாரோ கண்காணிக்க வாய்ப்பளிக்கிறோம் போன்றவை.

    பதிலளிநீக்கு
  16. இதுவரை சந்திக்காத எனக்கு மிகவும் பிடித்த நபர் ஒருவர் இல்லை, பலர் இருக்கிறார்கள். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் லா.ச.ரா., குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. ரா.கி.ரங்கராஜன் போன்றவர்களை கூறலாம்.

    பதிலளிநீக்கு
  17. 03. எப்போதும் புத்தகங்கள்,இப்போது மடிக்கணிணி

    பதிலளிநீக்கு
  18. 05. அப்படி குறிப்பிட்டு சொல்லும்படி எந்த சேனலும் இல்லை. யூ ட்யூபில் சாய் வித் சித்ரா, சுகி சிவம், பர்வீன் சுல்தானா போன்றவர்களின் சொற்பொழிவுகள், குறும்படங்கள் போன்றவற்றை விரும்பி பார்ப்பேன். கச்சேரிகளும் கேட்பதுண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா! ஆனால் நீங்க சொல்லியிருப்பவைகளில் பல - சன் டி வி யில் மட்டும் வருகிறது.

      நீக்கு
    2. சன் டி.வி. பார்ப்பதே இல்லே. Chai with Chitra(laksman), சன் டி.வி.யில் வருகிறதா??

      நீக்கு
    3. சுகி சிவம், பர்வீன் சுல்தானா இவர்களை நான் சன் டி வி தவிர வேறு எதிலும் பார்த்ததில்லை.

      நீக்கு
    4. சுகி சிவம், பர்வீன் சுல்தானா போன்றவர்கள் கலந்து கொள்ளும் பட்டிமன்றம் விஜய் டி.வி.யில்தான் வரும். மேலும் சுகி சிவம் அவர்களின் அபிராமி அந்தாதி, லலிதா ஸஹஸ்ரநாம விளக்கம், பர்வீன் சுல்தானாவின் மோட்டிவேஷனல் உரைகள் போன்றவை  போன்றவை சன் டி.வி.யில் வருமா என்ன? 

      நீக்கு
    5. இப்போது நான் அந்த இரண்டு சானல்களுமே பார்ப்பதில்லை. ஆகவே தற்போது என்ன நிலை என்று எனக்குத் தெரியாது.

      நீக்கு
  19. 01. வாட்ஸ்-ஆப் நன்மைக்காகத்தான் கண்டு பிடிக்கப்பட்டது ஆனால் மனிதர்கள்தான் அதை தவறான வழிகளுக்கு பயன் படுத்துகின்றார்கள்.

    02. திரைப்படக் கூத்தாடி ரஜினிகாந்த்தின் உடன் பிறந்த சகோதரர் திரு. சத்யநாராயணா அவர்கள்.

    03. எனது கணினி.

    04. தி கிரேட் தேவகோட்டை

    05. சில தருணங்களில் மக்கள் தொலைக்காட்சி.

    பதிலளிநீக்கு
  20. மறதிக்கு நல்ல பதில்கள் தந்துள்ளீர்கள்.
    முக்கியமான பொருள் என்றால் செல்போன்தான் ஏனென்றால் அது இல்லாமல் அவசரத்துக்கு ஒருவருடனும் தொடர்பு கொள்ள முடியாதே :)
    தற்போது டிவி பக்கம் எட்டிப்பார்க்க நேரம் கிடைப்பதில்லை.

    பதிலளிநீக்கு
  21. இன்றைய கேள்வி பதில்கள் பார்த்து, நான் ஞானி நிலையிலிருந்து நழுவி முத்தி நிலைக்குச் சென்று விட்டேன்....:)..

    1. எப்படியும் வாழலாம் எனச் சிலரும், இப்படித்தான் வாழவேண்டும் எனச் சிலரும் வாழ்கின்றனரே... இதில் எது நல்லதென நினைக்கிறீங்க?

    2. ஒருவர் நமக்கு நன்மை செய்து கொண்டிருக்கும்வரை, அவரை நல்லவர் வல்லவர் என, உச்சியில் தூக்கிப் பிடிக்கும் சமுதாயம், பின்னாளில் அவரால் இனி நமக்கு நன்மை இல்லை எனும் ஒரு நிலை வரும்போது, பழைசை எல்லாம் மறந்துவிடுகின்றதே... ஏன் மனிதருக்கு இப்படி ஒரு மனநிலை?

    3. இன்று ஒருவர் தன் குடும்பத்தைப் பாதியில் விட்டுவிட்டு, குடி, அல்லது வேறு பாதையில் போனால், அவரைக் கெட்டவர் எனத் திட்டுகின்றனர், ஆனால் அந்நாளில் ஞானி துறவி, நாட்டுக்குத் தியாகம் செய்தோர் என, இன்று நம்மால் போற்றப்படும் பலரும், பாதியில், சிவனே என தம் குடும்பத்தைத் தவிக்கவிட்டுவிட்டுப் போனோர்தானே? ஆனா அவர்களைப் போற்றுகிறோமே? இதுவும் ஒருவித சுயநலம்தானே?

    பதிலளிநீக்கு
  22. சிலவற்றுக்கு மட்டும் பதில்கள்.
    3. என் கைத்தொலைபேசியேதான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)

    4.எப்பவும் நான் எங்கிருக்கிறேனோ அதுவே எனக்குச் சொர்க்கமாகத் தெரியும்.. இப்பவும் இப்போ நாம் இருக்கும் இந்த இடமே எனக்கு மிகவும் பிடித்த ஊர்:)).

    5. செலக்ட் பண்ணிப் பார்ப்பதில்லை எதையும்... நேரம் கிடைக்கும்போது எது கண்ணில் படுகிறதோ, எது நன்றாக இருக்கிறதோ அதை அப்போது பார்ப்பது வழக்கம்.

    பதிலளிநீக்கு
  23. மறதி என்பது சிலவற்றில் மட்டும் ஏற்படும். சிலருக்குப் படிப்பில், சிலருக்குச் சமைக்கையில் சிலருக்கு அன்றாட வேலைகளிலேயே! இதுக்கு வயது வித்தியாசம் ஏதேனும் இருக்கா என்ன? வயதானால் வரும் மறதி வேறே! அது சில காரணங்களால் ஏற்படுவது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், உண்மைதான். நான் வாங்கிய கடன் எல்லாவற்றையும் மறந்துவிடுவது வழக்கம். ஆனால் கொடுத்த கடனை மறக்கவே மாட்டேன்!

      நீக்கு
  24. இந்தத் தீட்டு, பண்டிகைகள் கொண்டாடுவது பற்றி விரிவாக எழுதினால் பெரிய பதிவாகி விடும். ஆனால் சுருக்கமாகச் சொன்னால் யார் இறந்து போகிறாரோ அவருக்குக் காரியங்கள் செய்யும் கர்த்தாவின் குடும்பம், கூடப் பிறந்தவங்க இருந்தால் அவங்க மட்டும் இதைக் கடைப்பிடிச்சால் போதும். இன்னும் சொல்லப் போனால் ஒரு சமயம் எங்க அப்பா வீட்டிலே வரிசையாப் பெரியப்பா 2 பேர், பெரியம்மா ஒருத்தர்னு இறந்து தொடர்ந்து 3 வருஷங்கள் பண்டிகை கொண்டாட முடியலை. என் அப்பா குழந்தைகள் வரை எதுவும் பார்க்க வேண்டாம் என்பார். ஆகவே என் அண்ணா குழந்தைகளை எங்க வீட்டுக்கு அழைத்து வந்து பண்டிகையில் கலந்துக்க வைச்சோம். இதை எங்க அம்மா இறந்தப்போவும் கடைப்பிடிச்சோம். அங்கே பண்டிகை கொண்டாடவில்லை. ஆனால் அண்ணா, தம்பி குழந்தைகளை முதல்நாளே எங்க வீட்டுக்கு வரச் சொல்லிட்டுப் பண்டிகையை எங்களுடன் கொண்டாட வைச்சோம். தாயாதிகள் இறந்தாலும் ஆறு மாதத்துக்குள்ளாகப் பண்டிகைகள் வந்தால் கொண்டாடுவது இல்லை. ஆறு மாதம் ஆகிவிட்டால் பரவாயில்லை என ஒரு பாயசம், ஒரு இனிப்பு எனப் பண்ணிக் குழந்தைகள் வரை கொடுத்துக் கொண்டாட வைப்போம். குழந்தைகளைப் பண்டிகைக்கு மறுநாள் புதுத்துணி உடுத்தச் சொல்லுவதுண்டு. தொடர்ந்து பண்டிகையை ஒரு வருஷம் தட்டினால் அடுத்தடுத்து 3 வருஷங்கள் தட்டிக் கொண்டே இருக்கும் என்பார்கள். முக்கியமான விஷயங்களான பிரார்த்தனைகள் நிறைவேற்றுதல், மாவிளக்குப் போடுதல், சமாராதனை பண்ணுதல், சுமங்கலிப் பிரார்த்தனை பண்ணுதல், குலதெய்வம் கோயிலுக்குப் போவது, கடற்கரைக் கோயில்கள், மலைக்கோயில்கள் போவது என்பதை எல்லாம் நிறுத்திக்கணும். மற்றக் கோயில்கள் போகலாம். கர்த்தாவாக இருந்தால் எந்தக் கோயிலுக்கும் போகக் கூடாது. முக்கியமாய் ஆகம சாஸ்திரப்படியான கொடிமரம் உள்ள கோயில்களுக்குப் போகவே கூடாது. க்ருகத் தீட்டு என்பார்கள். ஒரு வருஷம் ஆனால் தான் அது கழியும். கர்த்தாவின் சகோதரிகளுக்கு எதுவும் இல்லை. என் அம்மா இறந்தப்போ எங்க புக்ககத்தில் எல்லாப் பண்டிகைகளும் கொண்டாடினார்கள். நான் மட்டும் ஒதுங்கி இருந்தேன். முக்கியமாய்க் கார்த்திகை விளக்கு ஏற்றும்போது மாமியார் ஏற்றி முடித்ததும் பெயருக்கு ஒரு விளக்கு ஏற்றினேன். அதே போல் பொங்கலுக்குப் பொங்கல் பானை மாமியாரே வைத்தார். நான் அப்புறமாப் போய்க் கொஞ்சம் போல் பாலை விட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.

      நீக்கு
    2. //
      Geetha Sambasivam21 அக்டோபர், 2020 ’அன்று’ பிற்பகல் 1:42
      இந்தத் தீட்டு, பண்டிகைகள் கொண்டாடுவது பற்றி விரிவாக எழுதினால் பெரிய பதிவாகி விடும். //

      ஹையோ ஆண்டவா இப்ப மட்டும் என்ன குட்டிப் பதிவோ இது?:) ஹா ஹா ஹா சே சே என் வாய்தேன் நேக்கு எதிரி நமக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:))

      நீக்கு
    3. நீங்க இதைப்பற்றி பதிவு எழுதியிருந்தால் சுட்டி கொடுங்க. இதுதான் வழக்கங்கள், நாங்க இப்படி டீவியேட் பண்ணிச் செய்தோம் (அது சரியான முறை என நம்பியதால்) என்பது போன்று

      நீக்கு
  25. தாயாதிகள் இறந்தால் கூட வரலக்ஷ்மி விரதத்தில் கலசம் வீட்டில் வைத்துப் பூஜை செய்யக் கூடாது. சத்யநாராயண பூஜை போன்றவை செய்து கொண்டிருந்தாலும் தொடரக் கூடாது. வரலக்ஷ்மி விரதத்துக்குக் கட்டாயம் நோன்பு செய்ய வேண்டும் என்பதால் நம் வீட்டு அம்மன் முகத்தைக் கலசத்தோடு அல்லது கலசம் இல்லாமலோ அக்கம்பக்கம் யார் வீட்டில் பூஜை செய்கிறார்களோ அவங்களிடம் கொடுத்து வைக்கச் சொல்லி நாம் பூஜையில் கலந்து கொண்டு சரடு கட்டிக் கொள்ளலாம். சரடு கட்டாயமாய்க் கட்டிக் கொள்ளவேண்டும். சத்யநாராயண பூஜைக்கு மிகவும் மடி, ஆசாரம் தேவை என்பதால் அதை ஒரு வருஷம் செய்யாமல் இருப்பதே நல்லது. காரடையார் நோன்பெனில் அன்று வீட்டில் ஸ்வாமி அலமாரியில் ஏதேனும் ஒரு இனிப்பு மட்டும் செய்து (கேசரி மட்டும் பண்ணலாம்) வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காயுடன் சரடைப் பூக்களோடு சேர்த்து வைத்து நிவேதனம் பண்ணிட்டுக் கட்டிக்கொள்ளவேண்டும். மற்றபடி பெரிய அளவில் விஸ்தாரமாய்க் கொண்டாடாவிட்டாலும் பண்டிகையைக் குறை வைக்கக் கூடாது என்பதே முக்கியம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ.... இதைப்பற்றி நிறைய கீசா மேடத்திடம் கேட்டுத் தெரிந்துகொள்ளத் தோணுது...

      நீக்கு
    2. @ Nellai! மாமியார் வீட்டை விட அப்பா வீட்டில் இதெல்லாம் அதிகம் பார்ப்பார்கள். சமாராதனை எனில் ஒவ்வொரு வருஷம் பண்ணும் புரட்டாசி சனிக்கிழமை சமாராதனை கூட சுமார் 100 பேர்கள் சாப்பிடுவார்கள். பூஜை முடித்து "ஓ ஏவம் வேதா" என ஆரம்பித்து மந்த்ரபுஷ்பம் சொல்லிப் பாட்டுப்பாடி பஜனை செய்து முடிச்சுட்டு ஆரத்தி எடுத்த பின்னர் தான் இலை போடுவாங்க! காலை எட்டுக்கு ஆரம்பிச்சால் முடியும்போது பனிரண்டு, பனிரண்டரை ஆகும்.. இதில் என் பெரியப்பா எல்லாம் நாங்கல்லாம் பஜனையில் கலந்து கொண்டு கட்டாயம் பாடணும். வழிமுறைகள் காரண, காரியங்களோடு விளக்குவார். அதன் பலன் தான் கல்யாணம் ஆகி வந்தப்போவே இதெல்லாம் தெரிஞ்சிருந்தது. ஆனால் புக்ககத்தில் ரசிக்கவில்லை. :)))))) பஜனை எல்லாம் அங்கே அவ்வளவு பிடித்தம் இல்லை. பின்னாட்களில் குறைந்து போய்க் கடைசியில் சுத்தமாய் இப்போது இல்லைனே சொல்லணும்.

      நீக்கு
    3. ஸ்ரீவத்ஸ ஜெயராம சர்மா எழுதிய புத்தகம் இணையத்தில் கிடைக்குதானு பாருங்க நெல்லை. இல்லைனா தி.வா.விடம் கேளுங்க. இந்த சாஸ்திர விளக்கம் புத்தகம் பற்றி அவர் சொல்வது சரியா இருக்கும். அவரே எழுதியும் இருக்கார்.

      நீக்கு
  26. உங்கள் கேள்விகளுக்கு எல்லாம் முகநூலிலேயே பதில் சொல்லிட்டேன். அதோடு இன்னிக்கு நிறையவே சொல்லியாச்சு. இந்த அழகில் நான் கேட்க நினைத்த கேள்விகளைக் கொஞ்சம் நினைவூட்டிக்கணும். பின்னர் வரேன். கணினி சார்ஜ் தீர்ந்திருக்கும். :)))))

    பதிலளிநீக்கு
  27. 1. இப்போதைய குழந்தைகளுக்கு அறிமுகமே செல்ஃபோனில் பாட்டுக் கேட்பது, பார்ப்பது, கார்ட்டூன்கள் பார்ப்பது இவை தான்! எனக்குத் தெரிந்து 3, 6 மாசக் குழந்தைகளே பார்க்கின்றன. மோகன் ஜி கூட இதைப் பத்தி எழுதி இருந்தார். இது நல்லதல்ல என்று என் கருத்து! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

    2. குழந்தைகள், பெரியவர்கள், அப்பா, அம்மா எல்லோருமே செல்ஃபோனில் மூழ்கி இருப்பது போல் ஒரு வீடியோ வாட்சப்பில் உலா வருகிறது. அவரவர் பிறரைப் பற்றிய நினைவே இல்லாமல் மூழ்கி இருப்பார்கள், சின்னக் குழந்தை உட்பட. அவங்களுக்கெல்லாம் பசி, தாகம்னு வந்தால் என்ன செய்வாங்க?

    3. செல்ஃபோனால் நன்மையா, தீமையா? பட்டியல் கொடுங்க.
    4. யாரைப் பார்த்தாலும் கையில் செல்ஃபோன் இல்லாமல் இருப்பதில்லை. பலரும் மணிக்கணக்காய்ப் பேசவும் செய்கிறார்கள். எனக்கெல்லாம் அப்படி யாரும் பண்ணுவதே இல்லை. நானும் யாருடனும் பேசுவது இல்லை! தப்பு என் மீதா? அல்லது இது சரியானதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன கீசாக்கா இப்பூடிச் சொல்லிட்டீங்க.. எனக்கு ஆர் போன் பண்ணினாலும் குறைந்தது 45- 60 நிமிடங்கள் பேசாமல் ஃபோனைக் கட் பண்ண மாட்டினம்... நானும் எனக்கு வேலை எனினும், அதைப் பெரிசு படுத்தாமல் பேசுவது வழக்கம்.

      நீக்கு
    2. அல்லிராணி, என்னை யாரும் கூப்பிட்டுப் பேசுவதில்லை. அதோடு வேலை இருக்கும்போது மணிக்கணக்கா எப்பூடிப் பேசறதாம்? அதான் கேட்டேன், தப்பு யார் மீதுனு!

      நீக்கு
    3. கீசாக்கா இதில தப்பு கரெக்ட்டூ என எதுவும் இல்லை ஆனா என்னில் ஒரு பழக்கம்... நெருக்கமான உறவுகளை அப்பப்ப விசாரிச்சு நலம் கேட்பேன்... அது ஒரு மணிநேரம் தாண்டியும் உரையாடல் தொடரும்.... அதைவிட ரெகுலர் கஸ்டமேர்ஸ் இருக்கினம்... டெய்லி பேச வேண்டும்:)... அதில் ஒருவர் அம்மா:)... ஒரு மணிநேரம் ஒதுக்கினால்தான் அம்மாவுக்கு ஹப்பி...

      ஒரு ரிப் சொல்லட்டோ:)... ஓய்வாக இருக்கையில் அது பமிலி ரைம் புளொக் ரைம் ரிவி ரைம் இப்படித்தான் செலவு செய்வேன்.... அந்த நேரத்தை போன் பேசி செலவு செய்ய விரும்புவது குறைவு... போன் பேசுவது பெரும்பாலும் வேலை செய்து கொண்டுதான்:)... ஒரு கல்லில் இரு மாங்காய்கள்:)... கோல் எடுப்போருக்கும் இது தெரியும்... அந்நேரம் பார்த்தே எடுப்பினம்... பழக்கிட்டேனெல்லோ:)...

      நீக்கு
    4. அதிரடி அல்லி ராணி, சும்மாவே நமக்குக் கிழமை மறந்து போகும், சமைக்கும்போது இதெல்லாம் கவனிச்சால் சாம்பாரில் புளி விட்டோமா, உப்புப் போட்டோமானு சந்தேகம் வரும்! ஏற்கெனவே இதெல்லாம் இப்போதெல்லாம் கொஞ்சம் நினைவில் இருப்பதில்லை. சந்தேகம் வந்தால் உப்பே போடாமல் வைச்சுட்டு நிவேதனம் பண்ணி வாயில் விட்டுப் பார்த்துட்டு இல்லைனா அப்புறமாச் சேர்க்கிறேன். இந்த அழகில் நான் ஃபோன் வேறே பேசினால்! அன்னிக்கு லங்கணம் தான் மாமாவுக்கு! :)))))) பத்திலிருந்து பதினோரு மணிக்குள்ளாகத் தொலைபேசியில் அழைப்பவர்கள் யாரும் இல்லை. அப்படியே வந்தாலும் மாமாவைப் பேசச் சொல்லிடுவேன்.

      நீக்கு
  28. கேள்விகளும், பதில்களும் அருமை.

    //அம்மாவோ அப்பாவோ இறந்துவிட்டார்கள் என்றால், அவர்களின் மகனோ, கல்யாணமாகாத மகளோ வேண்டுமானால் ஓர் ஆண்டு பண்டிகைகள் கொண்டாடாமல் இருக்கலாம். ஆனால் இறந்தவர்களின் பேரக்குழந்தைகள் பண்டிகை கொண்டாடாமல் இருக்கவேண்டாம். " இதுதான் சரியான நிலைப்பாடு என்று எனக்குத் தோன்றுகிறது.//

    என் மாமியார் அப்படித்தான் சொல்வார்கள்.

    பதிலளிநீக்கு
  29. எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்க பழகி விட்டாலே மறதி கொஞ்சம் குறையும். தினம் ஒரு இடம் என்றால் மறதி வருவது சகஜம்.

    எதோ பொருள் எடுக்க போய் விட்டு என்ன எடுக்க வந்தேன் என்று தடுமாறி அப்புறம் நினைவு வருவது உண்டு.

    மறதி கேள்விக்கு விடையும் அருமை.

    பதிலளிநீக்கு
  30. பேஸ்புக், வாட்ஸ் ஆப் எல்லாம் அளவோடு வைத்து கொண்டால் நல்லதுதான்.

    பொதிகை, மக்கள், Z தமிழ், புதுயுகம் , சன் லைப் , சங்கரா பார்ப்பேன் மிகவும் பிடித்தது என்று சொல்ல மூடியாது, எனக்கு பிடித்த நிகழச்சிகள் எந்தசேனலில் .வைத்தாலும் பார்ப்பேன்.

    பதிலளிநீக்கு
  31. அதிராவுக்கு முன்னாடி நானே போட்டுடறேன் இதுதான் நூறாவது கமெண்ட் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஆஆஆஆ நோஓஓஓஓஓ சத்தியமாக, 100 வந்திருக்குமே கூக்குரல் போட்டிடலாம் என கீழே வந்தேனா.... கெள அண்ணன் குதிச்சிட்டார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)....

      நீக்கு
  32. சிறப்பான கேள்வி பதில்!..

    காலையிலேயே சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்..

    கொடுத்து வைத்த புதன்...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!