ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

நான் தரிசனம் செய்த கோவில்கள்: நெல்லைத்தமிழன் : வைரமுடி யாத்திரை 07

 

வைரமுடி யாத்திரை – பிருந்தாவன் கார்டன் – பகுதி 7


சென்ற வருடம் வைரமுடி யாத்திரைக்குச் சென்றிருந்தபோது பிருந்தாவன் கார்டனுக்குச் சென்றேன். நுழைவு அனுமதி 50 ரூபாய் என்று நினைவு. ஆரம்ப காலத்தில் தென்னிந்தியாவிற்கு இது புதிதாக இருந்திருக்கலாம். பலப் பல படங்களில் பாடல் காட்சிகள் இங்கு எடுக்கப்பட்டிருக்கின்றன. நான் வெளிநாட்டில் இதைவிட மேம்பட்ட தோட்டங்கள், இசை நீர்வீழ்ச்சிகள் போன்றவற்றைப் பார்த்திருப்பதால், பிருந்தாவன் தோட்டம் என்னைக் கவரவில்லை. இசை நீர்வீழ்ச்சி போன்றவற்றிர்க்கு நான் நிற்காமல் பேருந்துக்குத் திரும்பி வந்துவிட்டேன். இந்த வருடம் உள்ளேயே போகவில்லை.

கிருஷ்ணராஜ சாகர் எனப்படும் KRS Dam,  சர் விஸ்வேஸ்வரையா மேற்பார்வையில் 1924ல் கட்டப்பட்டது.  காவேரி, ஹேமாவதி, லக்ஷ்மண தீர்த்தம் என்ற மூன்று அணைகள் சந்திக்கும் இடத்திற்கு அருகில், கண்ணம்பாடி என்ற இட த்தில் காவேரியின் குறுக்காகக் கட்டப்பட்ட அணை இது.  ஆரம்பத்தில் கண்ணம்பாடி gகட்டம் என்று அழைக்கப்பட்ட து. பிறகு மைசூர் மஹாராஜா கிருஷ்ணராஜ உடையார் நினைவாக அவரது பெயர் வைக்கப்பட்டது. இந்த அணையின் கீழ்ப்பகுதியில் பிருந்தாவன் தோட்டம் அமைக்கப்பட்டதால் இது மிகவும் புகழ்பெற்றது.  (இந்த மாதிரி அணைகளையெல்லாம் தாண்டித்தான் காவிரி, தமிழகத்திற்குப் பாயவேண்டும். அது சரி… மழைக்காலங்களிலும் வெள்ளக்காலங்களிலும் காவிரியில் வரும் நீர் தமிழகத்தில் எங்கேயும் தேக்கிவைக்கப் படாமல் (மேட்டூர் தவிர) அப்படியே கடலுக்குப் போகிறதாமே)

இந்த யாத்திரையில் இந்த இடத்திற்கும் சென்றிருந்தோம் என்பதற்காக சில படங்கள் எடுத்தேன்.









கார்டனை விட்டு வெளியே கசகச கும்பலிலிருந்து தப்பிவந்து, ஒரு கடையில் மசால் வடை சாப்பிட்டேன் (போன வருடம்). இந்த வருடம், பலாச்சுளைகள் சாப்பிட்டேன். இரவு 8 மணிக்கு, எல்லோரும் வந்த பிறகு, ஸ்ரீரங்கபட்டினத்திற்குத் திரும்பினோம். இரவு உணவு 10 மணிக்குச் சாப்பிட்டோம்.  யாத்திரையில் மதிய உணவுடன் இனிப்பு உண்டு (அலங்கார தளிகை என்று பெயர்). இது தவிர, மாலை 4 மணிக்கு, ஒரு இனிப்பு, ஒரு காரம் உண்டு. இது மைசூர்பாக்/மிக்சர் அல்லது பாதுஷா/காராசேவ் என்று ஒவ்வொரு நாளும் வித்தியாசமாக இருக்கும்.

மறுநாள் அதிகாலை எழுந்து, தங்குமிடத்திலேயே குளித்துவிட்டு, 6 மணி காபிக்குப் பிறகு, 6 ½ க்கு ஸ்ரீரங்கபட்டினாவை விட்டுவிட்டு, மேல்கோட்டை நோக்கிப் பிரயாணிப்போம் என்றார்கள். யாத்திரைக் குழுவுடன் பயணிக்கும்போது, இரவு, நேரம் கழித்துத் தூங்குதல், அதிகாலை சீக்கிரம் எழுந்துகொள்வது என்று நம் ஷெட்யூல் எல்லாமே மாறிவிடும்.

மறுநாள் 3 ¾ க்கே எழுந்து, குளித்துத் தயாராகிவிட்டேன். பிறகு அன்றைய நடைப்பயிற்சியை ஆரம்பித்தேன். அங்கு ஒரு மரத்தில், ஏகப்பட்ட கிளிகள் இருப்பதைப் பார்த்தேன். அவைகளில் சில (காலை 4 ¾ )  அப்போதான் தூக்கம் கலைந்து எழுந்துகொள்ள ஆரம்பித்தன. காபிக்குப் பிறகு ஸ்ரீரங்கபட்டினத்திலிருந்து கிளம்பிவிட்டோம்.  குழுவில் சிலர், காலை 5 மணிக்கு காவிரி ஆற்றுக்குச் சென்று குளித்துவிட்டு வந்தார்கள். 


மரத்தில் அடர்த்தியாக கிளிகள். இதுபோல அங்கு சில பல மரங்களைப் பார்த்தேன்.

31 மார்ச் – காலை 6 ¾ க்கு ஸ்ரீரங்கபட்னாவிலிருந்து கிளம்பி மேல்கோட்டை நோக்கிச் செல்ல ஆரம்பித்தோம்.  மாலை 4 மணி சுமாருக்கு மேல்கோட்டை சென்று சேர்வோம். இடையில் மூணு நாலு கோவில்களையும் தரிசிப்போம் என்று சொல்லியிருந்தார்கள். 

முதலில் கல்லஹல்லி என்ற இடத்தில் இருக்கும் Bhooபூ வராக ஸ்வாமி கோவிலுக்குச் சென்றோம். 

கல்லஹல்லி Bபூவராக ஸ்வாமி கோவில். 

இந்த கிராமம் ஹேமாவதி நதிக்கரையில் உள்ள து. ஸ்ரீரங்கபட்னாவிலிருந்து மாண்டியா செல்லும் வழியில், 60 கிமீ தூரத்தில் உள்ளது. இந்த சிலா மூர்த்தி 2500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட தாம். கௌதம மஹரிஷியால் பிரதிஷ்டை செய்யப்ப ட்ட து. காலத்தால் இந்தச் சிலை புதையுண்டு போக, ஹொய்சாள அரசன் வீர Bபல்லால III ஆல் பூமியிலிருந்து எடுக்கப்பட்டு, சிறிய கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட து. (12-13ம் நூற்றாண்டு). அரசனின் மஹிஷி, தேவதேவியின் பெயரால் இந்தக் கோவிலைச் சுற்றி கலாசாலை 40 கிமீ சுற்றளவுக்கு இருந்ததாம்.  ஸ்வாமியின் பெயர், ப்ரளய வராஹஸ்வாமி. மூலவர், சாம்பல் கல்லால் (ஒருவகை எரிமலைப் பாறை) செய்யப்பட்டது. வராஹமூர்த்தியின் வாயிலிருந்து வரும் நீண்ட பற்கள் சிறிது வெளிர் நிறத்திலும், கண்கள் சிவப்பு கலந்த நிறத்திலும் உள்ளது. காலவெள்ளத்தில் கோவில் புகழ் வெளிச்சமில்லாமல், பாழடைந்த சிறிய சந்நிதியாக இருந்த இந்தக் கோவிலை, 18ம் நூற்றாண்டில், மைசூர் அரசர், மும்மடி கிருஷ்ணராஜ உடையார், பரகால மடத்திடம் இந்தக் கோவிலின் பொறுப்பை ஒப்படைத்தார். மூலவர், 15 அடிக்கும் அதிகமான உயரம், நான்கு கரங்களுடன், மடியில் பூதேவியுடன் காட்சியளிக்கிறார்.

பத்து வருடங்களுக்கு முன்பு, துபாய் தொழிலதிபர் கனவில் இந்த சிலா மூர்த்தி வந்ததாம். இந்தக் கோவில் எங்கு இருக்கிறது என்று பல முறை தென்னிந்தியாவிற்குப் பயணம் செய்து தேடினாராம். அப்படி ஒரு தடவை இந்த இடத்திற்கு வந்தபோது, பரகால மடத்தின் நிர்வாகிகள், மூலவரின் முழு உருவையும் காண்பிக்க, இந்தப் பெருமாள்தான் தன் கனவில் வந்தவர் என்று சொல்லி, பெரிய கோவிலைக் கட்ட, தன்னுடைய பங்காக 50 லட்சம் தந்தாராம்.  மிகப் பெரிய கோவிலாக இதனைக் கட்ட த் திட்டமிட்டு, பாறைகள், அதனைத் தூணாகச் சீர் செய்வது, அந்த இடத்தைச் சீர் செய்வது என்று சில வருடங்களாக கோவில் கட்டுமானப்பணி நடந்துகொண்டு வருகிறது. சென்ற வருடத்திற்கும் இந்த வருத்திற்கும் நிறைய முன்னேற்றம் காண முடிந்தது.  மாண்டியா மாவட்டத்தில் பலரும், வீடு கட்டுவதற்கு முன்பு இந்தக் கோவிலுக்கு வந்து வேண்டிச் செல்கின்றனர். தற்போது நவீன அன்னதானக் கூடம் ஒன்று செயல்பட ஆரம்பித்திருக்கிறது. 

இந்தக் கோவிலை நாங்கள் 8 மணிக்கு அடைந்தோம். கோவில் 9 மணிக்குத்தான் நடை திறக்கும் என்பதால், அருகிலிருந்த அன்னதானக் கூடத்திற்குச் சென்று, அங்கு நாங்கள் கொண்டுவந்திருந்த தக்காளி சாதம் சாப்பிட்டோம். (இன்று மாலை வரை பயணம் என்பதால் Bபால bபோgகம் என்ற வகையில் சிறிது தக்காளி சாதம்.  மதியம் இன்னொரு இடத்தில் கதம்ப சாதம் மற்றும் தயிர் சாதம். இரவுதான் முழு உணவு-மேல்கோட்டையில்)

கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்தோம். அருகிலிருந்த ஹேமாவதி ஆறு, அதிக நீரில்லாமல் ஓடிக்கொண்டிருந்தது. அங்கிருந்த கரும்புச் சாறு கடையில், தாகசாந்தி செய்துகொண்டோம்.




அருகில் ஓடும் ஹேமாவதி ஆறு.



அங்கிருந்து 10 ¼ க்குக் கிளம்பி, மிதுன சாளக்ராமம் என்று அழைக்கப்படும் இடத்திற்கு 11 ½ வாக்கில் போய்ச்சேர்ந்தோம். அந்த  இடத்தின் முக்கியத்துவம் என்ன என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம்.

( தொடரும்)  

 

53 கருத்துகள்:

  1. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. இனிய காலைப் பொழுதில்
    ஸ்ரீ லக்ஷ்மி வராஹப் பெருமாள் தரிசனம்..

    ஓம் ஹரி ஓம்..

    பதிலளிநீக்கு
  3. இரண்டிற்கு மேற்பட்ட இடங்களில் உணவுக் குறிப்புகள் வந்தாலும் தெய்வ தரிசனக் கட்டுரை கோர்வையாக இருந்தது.
    வாசிப்பு அனுபவமும் திருப்தியாக இருந்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாத்திரையில் உணவு உபசரிப்பு நன்றாக நடக்கும். தரிசனம் கோர்வையாக வந்திருப்பது பற்றிக் குறிப்பிட்டதுள்ளதுக்கு நன்றி.

      நீக்கு
    2. அதுவும் தவிர ஜீவி சார் கோயில் தரிசனம் முடிந்து கோவிலில் பிரசாதம் கிடைத்தால் இரட்டிப்பு மகிழ்ச்சிதான்

      நீக்கு
  4. எனக்கு ஒரு பழக்கம். பல சமயங்களில் பெயரோ, இடமோ அல்லது வேறு எது ஒன்றோ, ஒன்றை வாசிக்கும் பொழுது அதேமாதிரியான என் நினைவில் படிந்த இன்னொன்று தலை தூக்கும்.

    KRS Dam நான் இளமையில் வேலைபார்த்த இடமான KRP DAM தொடர்பான நீர்பாசன அலுவலகத்தை நினைவுக்கு கொண்டு வந்தது.

    ஏழாம் வகுப்பில் எனக்கு தமிழ்ப் பாடம் சொல்லித் தந்த அருமை ஆசிரியர் பூவராகன் ஐயா தப்பாமல் நினைவுக்கு வந்து விட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. @ ஜீவி அண்ணா..

      /// அருமை ஆசிரியர் பூவராகன் ஐயா///

      இனி இப்படியெல்லாம் பெயர் சூட்டுவார்களா என்பது தெரியாது..
      ஏதோ ஒரு பெயர் மருவி மருவி - மகி என்று ஆகி மகிஷா ஸ்ரீ என்று சமீபத்தில் படித்தேன்..

      டா, டூ, டோ,டை - என்றெல்லாம் நாம நச்சத்திரம் ( நட்சத்திரம்) சொல்கின்றார்கள்..

      சமஸ்கிருத எதிர்ப்பினால் தமிழ்ப் பெயர் சூட்டிக் கொண்டவர்கள் வீட்டிலேயே காக்கைப் பாடினியும் வெண்ணிக் குயத்தியும் காணப்படவில்லை..

      எல்லாம் அஸ்கு புஸ்கு தான்...

      என்னுடைய பேத்திகளுக்கு சமஸ்க்ருத பெயர் தான்..

      நீக்கு
    2. வாங்க ஜீவி சார்... ஶ்ரீமுஷ்ணம் (திருமுட்டம் எனத் தமிழில் குறிப்பிடுவர்) கோவில் மூலவர் திருநாம்ம் பூவராகர். நில சம்பந்தமாக வேண்டிக்கொண்டால் நடக்கும் என்பர். உங்கள் தமிழாசிரியர் இந்தப் பகுதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

      நீக்கு
    3. துரை செல்வராஜு சார்.... தமிழ் தமிழ் என்று அடித்துக்கொள்ளும் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் பேத்திகளுக்கு சமஸ்கிருதப் பெயர்கள்தாம். குழந்தையின் ஆசைக்குக் குறுக்கே நிற்கவில்லை எனத் தப்பிக்க முடியாத சமாச்சாரம் இது.

      நீக்கு
    4. ஸ்ரீ முஷ்ணம் கடலூர்
      மாவட்டத்தில் இருக்கிறது, இல்லையா, நெல்லை? இவர் தஞ்சை மாவட்டத்துக் காரர். திருவாரூர் என்று நினைவு.
      சொல்லப்போனால்
      கடலூரில் ஆரம்பித்து மாயவரம், சிதம்பரம், சீர்காழி, கும்பகோணம், தஞ்சை, திருவாரூர் என்று தொட்டுத் தொட்டு ஒரே மண்வாசனை தான். திருக்கோயில்கள் தாம்.

      நீக்கு
    5. ஆமாம் ஜீவி சார்... மலைநாட்டு திருப்பதிகள் என்று வழங்கப்படுகிற 13 வைணவத் தலங்களுக்கும் சென்று தரிசனம் செய்ய 4-5 நாட்கள் பிடிக்கும். ஆனால் சோழ நாட்டு திவ்யதேசங்கள் 40ஐயும் 5 நாட்களில் தரிசித்துவிடலாம். அருகருகே நிறைய கோவில்கள். கும்பகோணத்திலோ.... கோவில் நகரம் என்ற பெயருக்குப் பொருத்தமாக நிறைய கோவில்கள்.

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம்.

      இப்போதான் நான் நடைப்பயிற்சிக்குக் கிளம்புகிறேன். ஞாயிறு ஆனதால் யோகா வகுப்புக்கு விடுமுறை. பிறகு வந்து பதிலெழுதுகிறேன்.

      உங்கள் தளத்தில் புதுப் பதிவுகள் வரவில்லையே

      நீக்கு
  6. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    இன்றைய கோவில் தரிசனங்கள் நன்றாக உள்ளது. ஸ்ரீ லக்ஷ்மி சமேத ஸ்ரீ பூவராக மூர்த்தி தரிசனம் காலையில் எழுந்ததும் கிடைக்கப் பெற்றேன். நாராயணன் அனைவருக்கும் பல நலன்களை தர பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    பதிவில் பல தகவல்களை அறிந்து கொண்டேன். படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. பிருந்தாவன கார்டன் படங்களும், கல்லஹல்லி ஸ்ரீ பூவராக ஸ்வாமி கோவில் பணிகள் குறித்த படங்களும் நன்றாக உள்ளது. அணைகள் பற்றிய தகவல்களுக்கும் நன்றி. எத்தனை அறியாத கோவில்கள், காலப்போக்கில் அதன் சிறப்புக்கள் தாமாகவே வெளிப்படுதல் என்பதை படிக்க படிக்க வியப்பு மேலிடுகிறது.

    பயண விவரிப்பை சுவாரஸ்யமாக ஒன்றுபோல் தொகுத்து தருகிறீர்கள். அதுவே நாங்களும் உடன் பயணிக்கும் ஒரு உணர்வை தருகிறது. அந்த தொகுப்பின் சிறப்பிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள். அடுத்து சென்ற கோவிலைப் பற்றிய தகவல்களையும், அங்குள்ள இறைவனின் தரிசனத்தையும் காண ஆவலோடிருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      பதிவில் நிறைய கிளிகள் கூடி தங்கியிருக்கும் அந்த மரத்தின் படமும், ஹேமாவதி ஆற்றின் படமும் மிக அழகாக இருக்கிறது. இதைக் குறிப்பிட விட்டு விட்டேன். பொதுவாக தாங்கள் எடுக்கும் படங்களின் கோணங்கள் அனைத்துமே ஒரு தெளிவு. மிகச் சரியான கோணமும் அதன் தெளிவுமே படங்களின் சிறப்பிற்கு காரணம். தங்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். //காலப்போக்கில் அதன் சிறப்புக்கள் தாமாகவே வெளிப்படுதல்// - எவ்வளவு உண்மையான வார்த்தைகள்.

      ரொம்ப பாசிடிவ் ஆகவும், ஊக்கப்படுத்தும் விதத்திலும் எழுதறீங்க. நன்றிகள் பல

      நீக்கு
  7. படங்கள் பெரிது பண்ணி பார்க்கும்போது நன்றாக உள்ளன. தினமும் இப்படி ஸ்வீட் சாப்பிட்டால் சுகர் கண்ட்ரோல் என்ன ஆவது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார் சார்... இனிப்பின் மீது எல்லோருக்கும் ஆசை உண்டு. சுகர் இருப்பவர்களும், யாத்திரையின்போதுதானே என கொஞ்சமாவது சாப்பிடிவதைப் பார்த்திருக்கிறேன்.

      கஹ்ரைனில் வார இறுதியில் (வியாழன் இரவு) சத்சங்கம் (வைணவ சத்சங்கம்) உண்டு. அப்போ உணவில் இனிப்பு இருக்கும், இன்னும் இன்னும் எனக் கேட்டு நிறைய போடுவார்கள். அதனாலேயே பல வாரங்களில் சத்சங்கம் செல்வதைத் தவிர்த்திருக்கிறேன்.

      நீக்கு
  8. படங்கள் அனைத்தும் கணினியில் கண்டேன் சிறப்பு
    சிற்பங்களின் படங்கள் அருமை

    அருகில் ஓடும் ஹேமாவதி ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  9. காலையிலேயே கருத,துகள் மறைகின்றன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​அதாவது எ பி ஆசிரியர்கள் தூங்குகிறார்கள் என்கிறீர்களா??

      நீக்கு
    2. அவங்க பாவம். எத்தனையோ வேலைகளுக்கிடையில் இதனையும் கவனிக்கணும். பண்ணுவாங்க

      நீக்கு

  10. @ அன்பின் நெல்லை

    /// தமிழ் தமிழ் என்று அடித்துக் கொள்ளும் ///

    என்னைப் பொறுத்தவரை
    அன்பின் ஈர்ப்பினால் தான்...

    அரசியல்வாதிகளோடு நான் ஈடு இல்லை..

    அரசியல் - வாதி - சமஸ்க்ருதம் ஆயிற்றே.. அதற்கென்ன தமிழ்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் தமிழ் மொழியின்பால் மிக்க அன்பும் ஆர்வமும்

      நீக்கு
  11. https://divyadesamtempletour.com/article/id/4508/temple/328/divya-desam-tour-tamil-nadu-18-nights-19-days-from-chennai/sri-thiruvikrama-perumal-temple-cuddalore

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதைப் படித்துப் பார்க்கிறேன். ஜெயகுமார் சார்... நான் திவ்யதேச கோவில்களுக்குத் தனியாக (அதாவது நானும் மனைவியும் நாங்களே பயணத் திட்டத்தை வகுத்துக்கொண்டு) செல்வேன், அல்லது திருவல்லிக்கேணியிலிருக்கும் யாத்திரைக் குழுவுடன் செல்வேன். மற்றபடி வேறு யாத்திரை குழுக்களை முயற்சி செய்ததில்லை. திருவல்லிக்கேணி யாத்திரை நடத்துபவர் செம்மையாக நடத்துகிறார்.

      நீக்கு
  12. கோவில் தகவல்கள் அருமை...

    படங்கள் அழகு...

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  14. பிருந்தாவன் தோட்டம் பள்ளி சுற்றுலாவில் பார்த்தது. அப்புறம் நிறைய பழைய சினிமாக்களில் பார்த்தது.
    மீண்டும் உங்கள் பதிவில் பார்த்து விட்டேன்.
    பயணத்தில் மதியம் அலங்கார தளிகையில் இனிப்பு, மாலை டிபன் இனிப்பு, காரத்தோடு உபசரிப்பு நன்றாக இருக்கிறது. இனிப்பு பிரியர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். பயணத்தில் சிறு குழந்தைகள் வந்தால் மகிழ்வார்கள். குழந்தைகளை அழைத்து வரலாமா ?
    மரத்தில் எவ்வளவு கிளிகள்! பார்க்கவே மகிழ்ச்சி. இலங்கை பயணத்தில் இரவு நேரம் ஒரு மரத்தில் பறவைகள் இப்படி கூட்டமாக அமர்ந்து இருந்தது . அமிர்தசரஸ் குருத்துவாரவில் குருவிகள் எல்லா மரத்திலும் அமர்ந்து இருந்தது பார்க்கவே அழகு.

    கல்லஹல்லி ,பூவராக ஸ்வாமி கோவில் தரிசனம் அருமை. மூலவர் படங்கள், கோவில் படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    ஹேமாவதி ஆறு நீர் இருந்தால் மேலும் அழகாய் இருக்கும்.

    ஸ்ரீ முஷ்ணத்தில் பூவராக ஸ்வாமியை தரிசனம் செய்து இருக்கிறோம்.
    அவர் நின்றகோலத்தில் இருப்பார் இடுப்பில் கைகளை வைத்து இருப்பார்.

    //அங்கிருந்த கரும்புச் சாறு கடையில், தாகசாந்தி செய்துகொண்டோம்.//

    ஆலை கரும்பா எந்த கரும்பு அங்கு சாறுக்கு பயன்படுத்துகிறார்கள்?
    பதிவு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தைகளை அழைத்துவரத் தடையில்லை. ஆனால் பொதுவா யாத்திரையின் கடுமையான பயணம் மற்றும் அலைச்சல், தொடர்ந்து கோவில்களுக்குச் செல்வது போன்றவற்றைச் சிறியவர்கள் ரசிக்கமாட்டார்கள்.

      கர்நாடகாவில் கருப்பு கரும்பு பொங்கலின்போதுதான் பார்க்கிறேன். கரும்பு ஜூஸுக்கு ஆலைக் கரும்புதான். இங்கு கரும்பு ஜூஸ் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் தயார் செய்வார்கள் (கர்நாடகாவில்). 20 ரூபாய்தான்.

      ஹேமாவதி ஆற்றில் வெள்ளம் வந்தால் மிக மிக பிரம்மாண்டமாக ஆகிவிடும். ஆனாலும் நிறைய நீர் இருந்தது.

      நன்றி கோமதி அரசு மேடம்.

      நீக்கு
  15. நெல்லை, நான் பிருந்தாவன் எல்லாம் பல பல வருடங்களுக்கு முன்னர் பார்த்தது. அப்போதே என்னை அது ஈர்க்கவில்லை. இப்போதும் பிருந்தாவன் போலாமா என்று யாரேனும் கேட்டால் பெரிய நோ. மட்டுமில்லை யாருக்கும் நான் பரிந்துரைப்பதும் இல்லை. ஏனோ தெரியவில்லை.

    படங்கள் மிக அழகாக இருக்கின்றன நெல்லை. மைசூர் கார்டனை விட உங்கள் படங்களை ரசித்தேன்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிருந்தாவன் கார்டன்ஸ் என்னை ஈர்க்கவில்லை. நான் பார்த்தவைகளை ஒப்பிடும்போது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.

      நன்றி கீதா ரங்கன்

      நீக்கு
  16. கல்லஹல்லி பூவராகர் கோயில் போனதில்லை. இப்போதுதான் உங்க பதிவின் மூலம்தான் அறிகிறேன் நெல்லை. குறித்து வைத்துக் கொண்டேன். ஆனால் இப்போதைக்கு அவ்வளவு தூரம் போவது சிரமம். ஒரு அரை நாள் சுற்றல் அளவு தூரத்தில் உள்ள இடங்களுக்குத்தான் செல்ல முடிகிறது. பொதுப் போக்குவரத்தில் சென்று வருவதால். இன்றும் ஓரிடம் போய் வந்தோம்!!

    ஹேமவதி அழகாக இருக்கிறாள்!!! என்ன கொஞ்சம் மெலிந்து இருக்கிறாள்! பெரிய நிலப்பரப்பு தெரிகிறதே ஆற்றின் இடமோ? நிறைய தண்ணீர் வந்தால் அங்கெல்லாம் ஓடுமோ?

    கோவில் மிக அழகாக இருக்கிறதே கலை நயத்துடன். பூவராகரும் சூப்பர்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரிய நிலப்பரப்பு ஆற்றின் இடம்தான். வெள்ளம் வந்தால் கரைபுரண்டு நிற்கும்.

      கோவில் மிகப் பெரிதாகக் கட்டுவார்கள் என்று தோன்றுகிறது. சுத்து வட்டாரங்களில் இந்தக் கோவிலுக்கு வந்து வழிபட்டால் கட்டிடம், வீடு கட்டுவது நிலபுலன்கள் பிரச்சனை போன்றவை உடனே தீர்ந்துவிடுகிறது என்று எண்ணுவதால் நிறைய பக்தர்கள் வருகிறார்கள்.

      இப்போது ஹேமாவதி தமன்னா...நிறைய தண்ணீர் வந்தால் அனுஷ்கா என்று சொல்லலாம் என்றால், சமீபத்தைய தமன்னா படங்கள் பார்த்து நொந்துபோய்விட்டேன். அவருக்கு ரொம்பவே வயசாகிவிட்டது.

      நீக்கு
  17. மிதுன சாளக்கிராமம் - இதுவும் போனதில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  18. கோயில் புதிதாக இப்போது எழுப்பப்படுவது மிக அழகாக உருவாகி வருகிறது. கட்டி முடித்தவுடன் வாய்ப்பு கிடைத்தது என்றால் போய்ப் பார்க்க வேண்டும், பூவராகர் கோயில்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு கண்டிப்பாகப் போய் தரிசனம் செய்யும் வாய்ப்பு கிட்டும்.

      நீக்கு
  19. அதிகாலை நேரத்தில் அந்த மரத்தி கிளிகள்....இவ்வளவு அடர்த்தியாகவா!!!! ஆ ! சத்தம் போட்டிருக்குமே அதைக் கேட்க நன்றாக இருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அந்த கீகீ சப்தம் தாங்க முடியாமல்தான் என்ன இருக்கு என்று மேலே பார்த்தேன். மிக அடர்த்தியாக கிளிகள்.

      நீக்கு
  20. பல கருத்துகள் வந்துவிட்டுக் காணாமல் போகின்றன....ஆசிரியர்களில் யார் ஃபீரியோ எப்போதூ முடியுமோ அப்போது அவற்றைப் பிடித்து இழுத்துக் கொண்டாங்க இங்கு....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்போ வருவாரோ... எப்ப்ப்ப்ப்ப்போ வருவாவாவாரோ... எந்தன் கலி தீர...

      நீக்கு
  21. காலையில் லக்ஷ்மி பூவராக ஸ்வாமி தரிசனமே அருமை...

    ஸ்வாமியின் திருமேனி அழகோ அழகு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் துரை செல்வராஜு சார். எனக்குமே இன்று எபி தளத்தைத் திறந்ததும் அவர் தரிசனம் கிடைத்தது.

      நீக்கு
  22. கர்நாடக மாநிலத்தில் காண விரும்புவது கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையின் திருக்கோயில்..

    எப்போது வாய்க்குமோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாய்க்கும் வாய்க்கும். நானும் செல்ல நினைத்திருக்கிறேன்.

      நீக்கு
  23. கோவில்கள் தரிசித்துக் கொண்டோம். விரிவான விளக்கங்கள் .

    பதிலளிநீக்கு
  24. //காவிரியில் வரும் நீர் தமிழகத்தில் எங்கேயும் தேக்கிவைக்கப் படாமல் (மேட்டூர் தவிர) அப்படியே கடலுக்குப் போகிறதாமே)//

    அப்படித்தான் போயாகணும். இங்கே டெல்டா பகுதி முழுவதும் சமவெளியாகவே இருக்கும்.அங்கே தண்ணீர் ஓடத்தான் செய்யும். அங்கே செக் டாம்ஸ் எனப்படும் நீர்த்தேக்க அணைகள் மட்டுமே கட்டி நீரைத்தேக்க முடியும். கடலுக்குள் காவிரி நீர் பாய்ந்தே ஆகணும். சீனாவில் புத்திசாலித்தனமாக அதைத் தடுத்ததில் கடலில் நதி நீர் சேரும் இடத்தில் மணல் பாலவனத்து மணல் போல் ஆகி உப்புக் கரிக்கவும் ஆரம்பித்து விட்டது. இப்போது தான் அவங்க அதைப் புரிந்து கொண்டு அதற்கு மாற்று ஏற்பாடுகள் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இங்கே காவிரி நீர் கடலுக்குள் போவதைத் தடுத்தால் அதே கதி தான் நமக்கும் ஏற்படும் சுற்றுவட்டாரங்களில் உள்ள நிலத்தடி நீரின் தன்மை மாறி உப்புக் கரிக்க ஆரம்பித்துவிடும். இன்னும் சிலர் நீலகிரி மலையிலிருந்து பாயும் காவீரியின் ஆரம்பமானது கர்நாடகா போய்த் திரும்பி வந்து காவிரியாக வருவதால் அதை நாம் மலையிலிருந்து பாயும் வழியிலேயே தடுக்கலாம் எனவும் சொல்கின்றனர். தொழில் நுட்ப ரீதியாக அதுவும் முடியாது எனச் சில காலங்களுக்கு முன்னர் பைகாரா அணைக்கட்டில் வேலை பார்த்துப் பணி ஓய்வு பெற்ற பொறியாளர் ஒருவர் விபரமாகப் பத்திரிகைகளில் எழுதி இருந்தார்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!