இன்றைய தனிப்பாடல் TMS குரல் பாடலாக மலர்கிறது.
ஒரு தனி கதம்பமாக சில முருகன் பாடல்களை TMS பாடி இருந்தார். அதில் ஒன்று இந்தப் பாடல். இந்தப் பாடல் தமிழ் நம்பி எழுதியது. தமிழ்நம்பி எழுதிய இந்தப் பாடலுக்கு இசை அநேகமாக TMS அவர்களாகவே இருக்கும்.
மணிமுடி ஓராறு மலர்விழி ஈராறு
பணிபவர் துணை வரும் உன்னைத் தேடி
வரும் பக்தர்கள் தொகை பல நூறு கோடி (மணிமுடி)
சிவனுக்கு ஐந்தெழுத்து செல்வனுக்கு ஆறெழுத்து
அவனிக்கு அருள் தரச் செல்லும்பொது
உன் பவனியை விளக்கிடப் பாடல் ஏது (மணிமுடி)
கயிலையில் தாய் இருக்க கண்முன்னே நீயிருக்க
மயிலுடன் உலவிடும் ஆறு வீடு
உன் மனம் தனில் தொண்டர்க்கு கோடி வீடு
மனந்தனில் தொண்டர்க்கு கோடி வீடு (மணிமுடி)
கணபதி தலை வாசல் கந்தனுக்கு மலைவாசல்
கணபதி தலை வாசல் கந்தனுக்கு மலைவாசல்
துணைவியர் இருபுறம் உன்னைச் சேர
உடன் தொண்டர்கள் பல்லாண்டு வாழ்த்து கூற
தொண்டர்கள் பல்லாண்டு வாழ்த்து கூற (மணிமுடி)
=============================================================
இன்றைய பாடலான 'குயிலாக நான் இருந்தென்ன' பாடல் இடம்பெற்ற திரைப்படம் வெளிவந்து பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்த ஆண்டு 1967. கே வி ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் ஜெய்சங்கர், ராஜஸ்ரீ, ஸ்ரீகாந்த், நாகேஷ், மேஜர் ஆகியோர் நடித்த படத்துக்கு இசை எம் எஸ் விஸ்வநாதன். பாடல்களை கண்ணதாசனும் வாலியும் எழுத, இன்றைய பகிர்வான இந்தப் பாடலை எழுதி இருப்பவர் வாலி.
குயிலாக நான் இருந்தென்ன குரலாக நீ வரவேண்டும்
பாட்டாக நான் இருந்தென்ன பொருளாக நீ வர வேண்டும்
வர வேண்டும்
குயிலாக நான் இருந்தென்ன குரலாக நீ வரவேண்டும்
பாட்டாக நான் இருந்தென்ன பொருளாக நீ வர வேண்டும் வர வேண்டும்
பாட்டோடு பொருள் இருந்தென்ன அரங்கேறும் நாள் வர வேண்டும்
உன்னோடு அழகிருந்தென்ன என்னோடு நீ வரவேண்டும் வரவேண்டும்
பாட்டோடு பொருள் இருந்தென்ன அரங்கேறும் நாள் வர வேண்டும்
உன்னோடு அழகிருந்தென்ன என்னோடு நீ வரவேண்டும் வரவேண்டும்
செந்தாழை கூந்தலிலே செந்தூரம் நெற்றியிலே
செவ்வாழை பந்தல் தேடி மங்கை வருவாள்
கல்யாண மேளம் கொட்ட கண்பார்வை தாளம் தட்ட
பெண் பாவை மாலை சூடும் மன்னன் வருவான் (பாட்டோடு பொருள்)
பொன்மேனி தேர் அசைய என் மேனி தாங்கிவர
ஒன்றோடு ஒன்றாய் கூடும் காலமல்லவா
நில் என்று நாணம் சொல்ல செல் என்று ஆசை தள்ள
நெஞ்சோடு நெஞ்சம் பாடும் பாடல் சொல்லவோ
குயிலாக நான் இருந்தென்ன
குரலாக நீ வரவேண்டும்
பாட்டாக நான் இருந்தென்ன
பொருளாக நீ வர வேண்டும் வர வேண்டும்
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம்.
நீக்குமுதல் பாடல் ஒரு சில முறைகள் கேட்டு இருக்கிறேன்.
பதிலளிநீக்குஇரண்டாவது பாடல் பல முறைகள் இலங்கை வானொலியில் கேட்டு ரசித்து இருக்கிறேன் ஜி
ஓகே ஜி.
நீக்குபடத்துக்கு இசை எம் எஸ் விஸ்வநாதன். பாடல்களை கண்ணதாசனும் வாலியும் எழுத, இன்றைய பகிர்வான இந்தப் பாடலை எழுதி இருப்பவர் வாலி...//
பதிலளிநீக்குகுரல்கொடுத்த அப்பாவிகளின் பெயர்கள் ஏனில்லை!
மறந்துபோய் விட்டது! TMS சுசீலா.. லேபிளில் மறக்காமல் சேர்த்திருக்கிறேன்.
நீக்கு'உன்னோடு அழகிருந்தென்ன -- என்னோடு நீ வரவேண்டும்' -
பதிலளிநீக்குஎதற்கு? இருக்கிற அழகைக் கெடுத்துக் கொள்ளவா?
எப்போதும் அழகை (அதிகபட்சம் 60. ஒழுக்க வாழ்வு அதற்குப் பிறகும் முகத்தில் தேசாக மின்னும்) வைத்துக்கொள்ளணும்னா திருமணம் ஆக்க்கூடாது. அழகின் பொருளே ஆடவனுடன் திருமணம், இனிய வாழ்க்கை என்ற ஆணின் கண்ணோட்டத்தில் தவறேது ஜீவி சார்?
நீக்குஇருவருக்குள்ளும் காதல் உறுதியான நிலையில் அந்த அழகு என்னோடது என்று சொந்தம் கொண்டாடுகிறான் காதலன்.
நீக்குஇது ஒரு பெண்ணின் குரல் நெல்லை.
நீக்குபெண் மனம் புரிந்த
ஆண்களால் வாழ்க்கையின் எல்லா சுகங்களும் இருவருக்கும் இரட்டிப்பாகும் என்பது ஒரு பேருண்மை.
இப்படி இரட்டிப்பு இரகசியங்கள் வாழ்க்கையில் நிறைய இருக்கின்றன, நெல்லை.
நீக்குஒரு கை ஓசைகளால்
விரக்தியே எஞ்சும் என்பது இல்லற வாழ்க்கையின் பால பாடம்.
காக்க காக்க
பதிலளிநீக்குகனக வேல் காக்க..
பார்க்க பார்க்க
பாவம் பொடிபட..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
வாழ்க.. வாழ்க..
நீக்குஇரண்டாவது பாடல் பலமுறை கேட்டு ரசித்தது. மிக இனிமையான பாடல். சரணம் நினைவுக்கு வரலை. பாட்டைக் கேட்கிறேன்.
பதிலளிநீக்குகேட்டு ரசித்திருப்பீர்கள்.
நீக்குமுதல் பாடல் கேட்ட நினைவே இல்லை.
பதிலளிநீக்குஅடடே..
நீக்குபுதன் கேள்வி... பாடலினால் (வரிகள், இசை, பாடுபவரின் திறமை) புகழா இல்லை நடிகரின் வாயசைப்பு, காட்சியினால் புகழா? வெற்றியில் யாருக்கு எவ்வளவு சதவிகிதம்?
பதிலளிநீக்குபதிலளிப்போம்.
நீக்குமுதல் பாடல் அருமையானது
பதிலளிநீக்குஎனது சேமிப்பில் இருக்கின்றது..
பல முறை கேட்டிருக்கிறேன்..
நல்லது.
நீக்குஉன்னோடு அழகிருந்தென்ன -- என்னோடு நீ வரவேண்டும்' -
பதிலளிநீக்கு/// எதற்கு? இருக்கிற அழகைக் கெடுத்துக் கொள்ளவா?///
இருக்கின்ற அழகு பேரழகு ஆவதற்கு.
சகோதரி கீதா ரங்கன் சொல்ற மாதிரி - இது கற்காலத்தின் பாட்டு..
தற்காலத்தில் எடுபடாது..
இது டகர டப்பா பாட்டுகளின் காலம்...
பதிலளிநீக்குஅர்த்தமற்ற பாட்டாக இருந்தாலும் ஆலாபனை செய்கின்றேன்... கூடு கட்டி அடைகாக்கத் தெரியாத குயில் போல குடும்பம் நடத்தத் தெரியாமல் இருந்தாலும் உன்னை அரவணைத்துக் கொள்கின்றேன் என்று அன்புடன் வரும் கணவனை - கள்ளப் புருசனோடு சேர்ந்து கொண்டு கஜகஜா செய்து கதையை முடித்து விடும் காலம்!..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் முதல் பாடல் கேட்டதில்லை. இப்போது கேட்டு ரசித்தேன். வரிகள் பக்தியுடன் மிளிருகின்றன. இசையும், பாடலும் நன்றாக உள்ளது.
இரண்டாவது பாடல் அடிக்கடி வானொலியில் கேட்ட பாடல். ஜெய்சங்கர் சிறந்த நடிகராக இருந்த அந்த காலம் மறக்க முடியாதது. நடிகர்கள் ரவிச்சந்திரன் ஜெய்சங்கர் போன்றோர் அன்றைய இளைய தலை முறைகளை ரசிக்க வைத்த காலம். அவர்கள் நடித்த படங்களின் பாடல்களும் ,கல்லூரி மாணவர்கள் மாணவிகள் மனதில் மிகவும் இடம் பெற்ற பாடல்களாக இருந்த நேரம். இந்த மாதிரி இனிமையான பாடல்களை இப்போது அவ்வளவாக கேட்க முடிவதில்லை. இன்றும் பாடலை கேட்டு ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆமாம் கமலா அக்கா. நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅப்பாடா.....! காலையில் எழுந்தவுடன் முதல் ஆளாக வணக்கம் சொல்ல வந்தும், பதிவுக்கு இப்போதுதான் கருத்திடுவதற்கு முடிந்தது.
"கையோடு ஃபோன் இருந்தென்ன....!
கருத்தோடு நான் செல்ல வேண்டும்."என மனதுக்குள் வேலைகளுக்கு நடுவே பாடிக் கொண்டேயிருந்தேன்.
"கருத்தோடு அழகிருந்தென்ன.. காலத்தோடு நீ செல்ல வேண்டும்." என பதிலுக்கு மனசாட்சி கூவியபடி (குயிலாக) இருந்தது. ஒரு மட்டும் காலை உணவை சற்று புறந்தள்ளி வந்து விட்டேன். இப்படித்தான் சமயங்களில் அனைவரின் பதிவுக்கு வர தாமதமாகி விடுகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
// "கையோடு ஃபோன் இருந்தென்ன....!
நீக்குகருத்தோடு நான் செல்ல வேண்டும்." //
// "கருத்தோடு அழகிருந்தென்ன.. காலத்தோடு நீ செல்ல வேண்டும்." //
ஆஹா... கமலா அக்கா... ரசனை!
2. இனிமையான பாடல்...
பதிலளிநீக்குநன்றி DD
நீக்குநான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த பொழுது என் வகுப்பில் ஒரு பெண், அவள் "குயிலாக நான் இருந்தென்ன..? பாடல் பதிவை நேரில் பார்த்ததாகவும் அதில் பல்லவியை பி.சுசிலா மூச்சு விடாமல் பாடினார், டி,எம்.எஸ்.சால் பாட முடியவில்லை" என்று கூறியதோடு "யாராலும் பாட முடியாது" என்றும் கூறினாள். வகுப்பில் நாங்கள் எல்லோரும் முயற்சி செய்து தோற்றோம். நான் வீட்டில் போய் இதை சொன்னதும், என் அக்கா, அண்ணா எல்லோரும் மூச்சு விடாமல் பல்லவியை அனாயாசமாக பாடி அசத்தினார்கள். நான் இன்றுகூட முயற்சி செய்தேன், ம்ஹூம்! யாராவது பல்லவியை மூச்சு விடாமல் பாட முடிகிறதா என்று முயற்ச்சிக்கலாம்.
பதிலளிநீக்குஅப்படியா? ஆனால் டி எம் எஸ் இதில் பாடுகிறாரே. சுசீலா ஓரிரு இடத்தில் கண் இமைக்கும் நேரத்தில் breath எடுத்துவிட்டுப் பாடுவது தெரிகிறது. ஆனால் இருவருமே தொடர்ந்து பாடுவது போலத்தான் இருக்கு, பானுக்கா
நீக்குநான் இப்போது பாடிப் பார்த்தேன் பாட வருகிறது.
கீதா
கண்மணியே காதல் என்பது கற்பனையோ போன்று மூச்சு விடாமல் பாடுவதற்கு சோதனை செய்யும் பாடல் இன்னும் உண்டு.
நீக்குமுதல் பாடல் இன்றுதான் கேட்கிறேன், ஸ்ரீராம். ஏதோ ஒரு சினிமா பாடலை நினைவுபடுத்துகிறது. இதே மெட்டு ....பாடல் டக்கென்று வரமாட்டேங்குதே பழைய பாட்டு.
பதிலளிநீக்குகீதா
அப்படியா? என்ன பாட்டு என்று நினைவுக்கு வந்தால் சொல்லுங்கள்.
நீக்குஇரண்டாவது பாடல் ரசித்த பாடல். இப்போதும் ரசித்தேன். அருமையான பாடல். எம் எஸ் வியின் டிப்பிக்கல் conga/Bongo உடன்
பதிலளிநீக்குகீதா
நன்றி கீதா.
நீக்குமுதல் பாடல் எங்கள் வீட்டில் ஒலித்த பாடல்களுள் ஒன்று பல தடவை கேட்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குஇரண்டாவதும் கேட்டிருக்கிறேன்.
நன்றி மாதேவி.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குஇரண்டு பாடல்களும் அடிக்கடி கேட்ட பாடல்கள்.
பதிலளிநீக்குஇரண்டாவது பாடல் இலங்கை வானொலி , மற்றும் விவிதபாரதியில் அடிக்கடி ஒலிக்கும் பாடல். இனிமையான பாடல்.
டி.எம்.எஸ் ஜெயசங்கருக்கு ஏற்றமாதிரி குரலை மாற்றி பாடி இருப்பார். சுசீலாவின் குரலும் இனிமை.
இரண்டாவது பாடல் இப்போதும் பழைய பாடல் நிகழ்ச்சிகளில் தொலைக்காட்சி சேனல்களில் வைக்கிறார்கள்.
பதிலளிநீக்குசெந்தாழை கூந்தலிலே செந்தூரம் நெற்றியிலே
பதிலளிநீக்குசெவ்வாழை பந்தல் தேடி மங்கை வருவாள்..//
பாடலெனும் வடிவத்தில் எப்படியெல்லாம் எழுதப்பட்டிருந்தது ஒரு காலத்தில் தமிழ். திரைப் பாடல், ரசனை என்பதெல்லாம் அப்போது எப்படித்தான் இருந்தது.. என்றெண்ணிப் பெருமூச்சுவிட்டுக்கொள்ளும் நிலை இன்று...
இரண்டாவது பாடல் ஒரு காலத்தில் மிகவும் ரசித்த பாடல். ரொம்பப் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.. முதல் பாடல் கேட்டதே இல்லை. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்கு