திங்கள், 14 ஆகஸ்ட், 2023

"திங்க"க்கிழமை : கறிவேப்பிலைப்பொடி -  துரை செல்வராஜூ ரெஸிப்பி 

 கறிவேப்பிலைப்பொடி

*** *** *** *** *** ***

கறிவேப்பிலை மிகவும் நல்லது. இளநரை  ஏற்படாமல் தடுக்கிறது.  செரிமான பிரச்னைகள் உண்டாவதில்லை..

பொதுவாக கருப்பு உளுந்து எலும்புகளை உறுதி ஆக்குகின்றது..  இதனால் முதுமையில் மூட்டு வலி போன்ற பிரச்னைகள் ஏற்படுவதில்லை..

பருவமடைந்த பெண்களின் பிரச்னைகளுக்கு உளுந்தங்களி எவ்வளவு உகந்ததோ அந்த அளவுக்கு இளைஞர்களுக்கு தாது விருத்தியாக உளுந்தம்பால் நல்லது..

ஆனால் அதற்கு வேறு குறிப்பு உள்ளது..
 
இந்த வகையில் ஆரோக்கிய செய்முறை ஒன்று..

கறிவேப்பிலை 300 கிராம்..
(உத்தேசமாக)
தோல் நீக்கப்படாத
முழு உளுந்து 150 கிராம்
மிளகு 2 tbsp (30 gr)
சீரகம் 1 tbsp (15 gr)
கல் உப்பு தேவைக்கேற்ப

கறிவேப்பிலையை சுத்தம் செய்து கழுவி நிழலில் உலர்த்திக் கொள்ளவும்..

முழு உளுந்து மிளகு சீரகம் இவற்றையும் சுத்தம் செய்து கொள்ளவும்..

உடைத்த  உளுத்தம் பருப்பு தான் இருக்கின்றது என்றாலும் சரியே..

இரும்பு வாணலியில் மிதமான சூட்டில் கறிவேப்பிலையை வறுத்துக் கொண்டு மற்ற அனைத்தையும் தனித் தனியே வறுத்துக் கொள்ளவும்..

சூடு ஆறியதும் மிக்ஸியில் எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டு நன்றாக அரைத்துக் கொண்டால் கறிவேப்பிலைப் பொடி தயார்..

இந்த முறைக்கு  வற மிளகாய்  தேவையில்லை..

பெருங்காயத்தூள் கலப்படமாக வருகின்றது என்கின்றார்கள்.. எனவே அது உங்கள் விருப்பம்..

சுடு சாதத்தில்  பசு நெய்யுடன் சேர்த்து சாப்பிடலாம்.. இட்லி தோசைக்கும் நல்லெண்ணெய்யுடன் வெளுத்துக் கட்டலாம்..

எல்லா நாட்களும் உணவில் சேர்த்துக் கொள்வதால் நன்மையே என்றாலும் வாரத்தில் மூன்று நாட்கள் போதும்..

இந்த செய்முறைக்கு - தோல் நீக்கப்படாத உளுந்து மட்டுமே!..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்!..

***

38 கருத்துகள்:

  1. அனைவருக்கும் காலை வணக்கம்.

    கறிவேப்பிலைப்்பொடி நன்று. நல்ல செய்முறைக் குறிப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை அவர்களின் அன்பு வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. இன்று சமையற் கூடத்திற்கு வருகை தரும் அன்பு நெஞ்சங்களுக்கு அன்பின் நல்வரவு..

    இன்று எனது குறிப்பினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  5. பயனுள்ள குறிப்புகள் நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஜி..

      நீக்கு
    2. அன்பு வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  6. பயன்படுத்தப்பட வேண்டிய குறிப்பு, முறை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பு வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஐயா..

      நீக்கு
  7. நல்ல செய்முறைக் குறிப்பு, துரை அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
  8. நானும் தொலி உளுந்து - முழுசும், தொலி உளுந்து உடைத்த பருப்புமாகப் பெரும்பாலும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உளுந்தின் தோலினை நீக்குவதால் பயனில்லை..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. ரோட்டோரத்தில் அவசர அவசரமாக எதையாவது விழுங்கிவிட்டு ஸ்கூட்டர், பைக்குகளில் பறக்கும் இளசுகள், அவசியம் கவனிக்கவேண்டிய பண்டம் இந்தக் கறிவேப்பிலைப் பொடி. வாரம் ஒருமுறையாவது, இதை சாதத்தில், நல்லெண்ணெய்யோடு கலந்து, (வீட்டு நெய் இருந்து சேர்த்துக்கொண்டால் இன்னும் விசேஷம்), பிசைந்து, வாயில் போட்டு மென்று, ரசித்து விழுங்கினால் நல்லது பயக்கும் . அப்போது மொபைல் பக்கத்தில் இல்லாதிருப்பது உத்தமம்.

    எதையோ நினைத்துக்கொண்டு, எங்கோ பார்த்துக்கொண்டு,என்ன சாப்பிடுகிறோம் என்கிற பிரக்ஞையே இன்றி எதையாவது சாப்பிடுவதற்கு, சாப்பிடாமலேயே இருந்துவிடலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// எதையோ நினைத்துக் கொண்டு, எங்கோ பார்த்துக் கொண்டு,என்ன சாப்பிடுகிறோம் என்கிற பிரக்ஞையே இன்றி எதையாவது சாப்பிடுவதற்கு, சாப்பிடாமலேயே இருந்துவிடலாம்!.. ///

      ஏகாந்தன்
      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு
    2. ஏகாந்தன் பதிவு அருமை. உறவின் முக்கியத்துவம் பற்றிச் சொல்லி இருப்பது நன்று. பலரும் இப்போதெல்லாம் உறவுகளை மதிப்பதில்லை. அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் இதைக் குறிப்பிட்டு இளைய சமுதாயத்துக்கு அறிவுரை கூறி இருப்பது மிக நன்று. உங்கள் பக்கத்தில் என்னால் கருத்துச் சொல்லவே முடிவதில்லை. இன்றைய பதிவுக்கு எப்படியும் சொல்ல வேண்டும் என இங்கேயே சொல்லிட்டேன்.

      நீக்கு
    3. @ கீதா சாம்பசிவம்: நான் எங்கே இங்கே பதிவைப் போட்டேன் என ஒரு கணம் குழம்பிவிட்டேன்! கருத்தைச் சொன்ன உங்களுக்கும், பதிவிட்ட எபி-க்கும் நன்றி, நன்றி.

      என் பக்கத்தில் உங்களால் ஏன் கருத்திட முடிவதில்லை எனப் புரியவில்லை. வர்ட்ப்ரெஸ் சிலசமயம் மெய்ல் ஐடி , அது, இது என்று கேட்டு ஓவராக அலட்டிக்கொள்ளும். ஆனால் கடைசியில் பதிந்துவிடுமே. உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்வதில் அதற்கென்ன அப்படி ஒரு சங்கடம் ?

      குழப்பத்துக்குப் பஞ்சமில்லா உலகமிது..!

      நீக்கு
    4. ..இளைய சமுதாயத்துக்கு அறிவுரை கூறி இருப்பது மிக நன்று. //

      இளம் வயதில் அறிவுரைகளை அப்படியே ஏற்றுக்கொண்டதில்லை. கன்ஸிடர் செய்ததுண்டு! இப்போது யாருக்கும் புத்திமதி சொல்வதில்லை. கேட்கப்படாமல் வார்த்தைகள் காற்றில் கலப்பதில் இஷ்டமில்லை எனக்கு. இருந்தாலும், எழுதுகையில் சிலவரிகள் அறிவுரை போன்ற தோற்றத்தைக் கொண்டுவிடுகின்றன...

      நீக்கு
  10. நல்லதொரு குறிப்பு. பயனுள்ளதும் கூட. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்,
      வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி.

      நீக்கு
  11. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  12. எங்கள் வீட்டில் குழந்தை பெற்ற அம்மா காரம் சேர்க்க கூடாது என்பதால் மிளகு சேர்த்து செய்து தருவார்கள் இது போன்ற கருவேப்பிலை பொடி.
    உளுந்து சேர்க்காமல், மிளகும் கருவேப்பிலையும் போட்டு பொடித்து பசும் நெய்விட்டு கொடுப்பார்கள் இட்லிக்கு.(பேறுகால சமயத்தில்)
    மிளகாய் சேர்க்காமல் மிளகு சேர்த்து செய்வது எப்போதும் நல்லதுதான்.
    நல்ல பயனுள்ள குறிப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// மிளகாய் சேர்க்காமல் மிளகு சேர்த்து செய்வது எப்போதும் நல்லது தான்.. ///

      மிளகாயை குறைத்துக் கொள்வது நல்லது தான்..

      அன்பின் ,
      வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்கள். எல்லாமே நலமாக நடந்தேறிடும் வண்ணம் இறைவன் எப்போதும் துணையாக இருப்பார் . நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாமே நலமாக நடந்தேறிடும் வண்ணம் இறைவன் எப்போதும் துணையாக இருப்பார் .
      மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  14. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

    இன்றைய திங்கள் பகிர்வில் கறிவேப்பிலை பொடி பக்குவம் அருமையாக செய்துள்ளீர்கள். தோலுடன் இருக்கும் உளுந்தம் பருப்பு உடம்புக்கு நல்லது. தோல் நீக்கப்பட்ட உ. பாவை விட வறுக்கவும் போது அதில் நல்ல மணமும் இருக்கும். அதே போன்று மிளகாய் காரத்தை விட மிளகின் காரம் உடல் நலத்திற்கு நல்லது. மிளகு சளி தொந்தரவை நீக்கி, ஜீரண சக்தியையும் தரும். சீரகம் நம் அகத்தை சீர் படுத்தும் வேலையை தன் திறனால் செய்யும் தன்மை பெற்றது. இவற்றுடன் கூட்டு சேரும் கறிவேப்பிலையின் மகிமையே தனி. அனைத்தையும் சேர்த்து பயனுள்ள ஒரு சமையல் குறிப்பாக பகிர்ந்த விதம் அருமையாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "வறுக்கும் போது." என்பது "வறுக்கவும்" என்பதாக பிழை வந்து விட்டது. மன்னிக்கவும்.

      நீக்கு
    2. அன்பின் ,
      வருகையும்
      விவரமான கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  15. மிளகு, மிளகாய் வற்றல், உளுந்து சேர்த்து/சேர்க்காமல் என இரு முறைகளிலுமே பண்ணி வைச்சுப்பேன். பருப்புப் பொடியும் இருக்கும். சமயங்களில் மிளகு குழம்பு வேணும் போல் தோன்றினால் கொஞ்சம் புளியைக் கரைத்து அந்த ஜலத்தில் இந்தப் பொடிகளைக் கலந்து உப்பு தேவையானால் சேர்த்துக் கொதிக்க வைத்து எடுத்தால் வாய்க்கு ருசியான புதுவிதமான மிளகு குழம்பு தயார். ஒரு வாரம் வைச்சுக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் ,
      வருகையும் மேலதிகக் குறிப்பும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி அக்கா..

      நீக்கு
  16. எளிய, சத்தான, சுவையான குறிப்பு. இதைப்போன்ற ஈசியாக செய்யக்கூடிய பண்டங்களைக் கூட கடையில்தான் வாங்குகிறார்கள் இளைய தலைமுறையினர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// இதைப்போன்ற எளிதாக செய்யக் கூடிய பண்டங்களைக் கூட கடையில்தான் வாங்குகிறார்கள் இளைய தலைமுறையினர்.///

      காலக் கொடுமை...

      அன்பின் ,
      வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!