செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023

சிறுகதை - ரயிலடி மிக்ஸர் -- துரை செல்வராஜூ

 ரயிலடி ஸ்வீட் ஸ்டால்

துரை செல்வராஜூ

*** *** *** *** *** *** ***
.

மிச்சர் கடை..

ரயிலடி மிக்ஸர் கடை..

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு  இருந்த பாரம்பரியக் கடை....

இப்போது அந்தக் கடை இல்லை..  கால வெள்ளத்திற்குள் அழுந்திப் போயிற்று..

அந்த பட்சணக் கடையில் இருந்து பரவும் நறுமணத்தைக் கடப்பது  என்பது - ரயிலில் வந்து இறங்குவோர்க்கும் ரயிலடி ரோட்டில் வருவோர்க்கும் போவோர்க்கும் அவ்வளவு எளிதல்ல..

கடை என்றதும் பூட்டு திறப்பு  என்று நினைப்பு வருவது இயற்கை.. ஆனால் -

காலையில் ஆறு மணிக்கு அடுப்பு பற்றவைத்து பட்சணங்களைப்  பார்த்துப் பார்த்து பக்குவம் செய்து எடுத்து பித்தளைத் தாம்பாளங்களில் அழகாக அடுக்கி வைத்துக் கொண்டு கவனமாக வரும் மிட்டாய் வண்டி.. 

அந்த காலத்தில் இந்த மாதிரி வண்டிகள்  மிகவும் பிரசித்தம்... சுற்றிலும் - நீலம் பச்சை ஆரஞ்சு நிறக் கண்ணாடிகள் பதிக்கப்பட்டு பக்கவாட்டில் திறப்புக் கதவுகளுடன் அலங்காரமாக இருக்கும்..

டிங்டிங்.. டிடிங்.. - என்ற வெங்கல மணி ஓசை கேட்டதுமே காதுகளில் தேனூறும்.. 

' ஆகா.. ராவ் மிச்சர் ஸ்டால் வந்தாச்சுடா!.. ' - என்று எல்லாரிடமும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும்..

ராவ் மிச்சர் ஸ்டால் எனும் வண்டியை கால்கள் தேயத் தேய - தெருத் தெருவாக தள்ளிக் கொண்டு  நடந்து விளக்கு வைக்கும் நேரத்தில் ரயிலடியில் போய் நிறுத்தும் அவரது பெயர் மாரியப்பன்.. 
அப்புறம் எதற்கு ராவ் மிச்சர் ஸ்டால்..  - என்று?.. குருநாதர்  விட்டல் ராவ் நினைவாக அந்தப் பெயர்..

மிச்சர் ஸ்டால் என்றாலும்  காசி அல்வா, சந்திர கலா, அசோகா, பன்னீர் ஜாங்கிரி, பூந்தி, பால்கோவா,  மைசூர்பா, அதிரசம், கோயில்பட்டி சீனி முறுக்கு, சீனி சேவு -  என்று  இனிப்பு வகைகள் இருக்கும்.. 

கார பட்சணங்களில் நெய்யில் மிளகுப் பொடியுடன் வறுத்த  முந்திரி, ஓமப்பொடி, காரச் சேவு, மணிக் காராபூந்தி,  அரிசி முறுக்கு, வெங்காய பக்கோடா, ஓலை பக்கோடா, மசாலா பருப்பு, மிக்ஸர் - என்று சகலமும் இருக்கும்..

இதில் கடைசியாய் இருக்கும் மிக்ஸர் தான் கார பட்சண விற்பனையில் முன்னே நிற்பது..

பத்து காசு தான் ஒரு பொட்டலம்... ஒரு தூக்கு - அதாவது கிலோ - என்றால் முப்பது ரூபாய் தான்..

ஒரு கைப்பிடி அள்ளி வாயில் போட்டுக் கொண்டால் கடலை எண்ணெய் வாசத்துடன்  ஓமப்பொடி எல்லாமும் மதுரமாய் கரையும்.. மிச்சமாய் இருக்கும் பூந்தி முத்துகளும் கரைந்த பின் அவலும் பொட்டுக் கடலையும் நெய் முந்திரியும் வாயினுள் ஊடாடும் போது - அடடா!..

கடைசியாக பொட்டலத்துக்குள் இருக்கும் முறுகிய கறிவேப்பிலைகள் - அது தனி ஆவர்த்தனம்..

ராத்திரி சாப்பாட்டு நேரத்துக்கு என்று மிச்சர், பக்கோடா வாங்குகின்ற எவரும் ராத்திரி சாப்பாட்டுடன் மிச்சர் பக்கோடாவை சாப்பிட்டதாக சரித்திரமே கிடையாது..

சமையலுக்கு என்று கடலை எண்ணெய் மட்டுமே இருந்த அந்த காலத்தில் சன்னமாக ஓமப்பொடியை முதலில் பொரித்து விட்டு அவல், பொட்டுக் கடலை என்று ஒவ்வொன்றாகப் பொரித்தெடுத்துப் போடுவார்.. மணிமகுடம் மாதிரி முந்திரி கறிவேப்பிலையை நெய்யில்  போட்டு எடுக்கும்போது  தெரு முழுதும் மணக்கும்..

ஒரு நாளைக்கு பொட்டுக் கடலை, பூந்தி என்று மிக்சரில் இருந்தால் மறு நாளைக்கு பயறு, உலர் திராட்சை என்று இருக்கும்.. 

சேவு பகோடா வகையறாக்கள் சுருள் பொட்டலத்தில் இருக்க -
இனிப்பு வகைகளை வாழையிலையிலும் மந்தார இலையிலும் வைத்து - மாரியப்பன் மடித்துக் கொடுக்கும் அழகே அழகு.. 

எல்லாரும் மண்ணெண்ணெய் காடா விளக்கு எரித்த போது இவர் மட்டும் மெட்ராஸூக்குப் போய் ஜாம் பஜாரில் அலைந்து திரிந்து பெட்ரோமாக்ஸ் விளக்கு வாங்கிக் கொண்டு வந்து வண்டிக்குள் ஏற்றி வைத்திருந்தார்.. 

ராத்திரி நேரத்துச் சாலையில் இந்தப் பக்கம் அம்பது அடி அந்தப் பக்கம் அம்பது அடி ஜெகஜ்ஜோதியா இருக்கும்...

ராவ் மிச்சர் வண்டியால் -  சாயங்கால வடை வியாவாரம் விழுந்து விட்டதாக ரயிலடி டீக்கடைகளிடம் தனிப்பட்ட புகைச்சல்..

சம்பவமான அன்றைய சாயங்காலப் பொழுது.. எட்டாம் நம்பர் டவுன் பஸ் ரவுண்டாணாவைச் சுற்றிக் கொண்டு ரயிலடி வாசலில் நின்றது.. அதில் இருந்து அடித்துப் பிடித்துக் கொண்டு இறங்கியவர்கள் திருச்சிராப்பள்ளிக்குப் போகும் வண்டியைப் பிடிக்க ஸ்டேசனுக்குள் ஓடினார்கள்.. அந்த பாசஞ்சர் நாகூரில் இருந்து வருவது.. இன்றைக்கு இன்னும் வந்து சேரவில்லை.. அப்படியே வந்து விட்டாலும் மூன்றாவது பிளாட்பாரத்தில் ' சிவனே ' - என்று நிற்கும்.. திருச்சிராப் பள்ளியில் இருந்து மாயவரத்துக்குப் போகின்ற வண்டி ஒன்னாவது பிளாட்பாரத்துக்கு வந்து நின்று லைன் கிளியர் ஆனதுக்குப் பிறகு தான் - தஸ் புஸ் - என்று பெரிய சத்தத்துடன் கிளம்பும்..

திருச்சிராப்பள்ளி வண்டியும் இன்னும் வந்து சேரவில்லை.. 

திருச்சிராப்பள்ளி வண்டி வந்து விட்டால் அதிலிருந்து இறங்கும் உள்ளூர்க் காரர்களால் ஓரளவுக்கு ஏவாரம் ஓடும்..  அப்புறம் எட்டரைக்கு இன்னோரு பாசஞ்சர் வரும்.. அதுக்கு அப்புறம் சினிமா கொட்டாய் ல முதல் ஆட்டம் முடிஞ்சு வர்ற கூட்டம் தான்.. அத்தோடு மிச்சர் வண்டியும் நகர்ந்துடும்..

' ஊ ஊ... ஊவ்!... ' எஞ்சின் சத்தத்தினால் ரயிலடி வாசல் பரபரப்பானது.. 

திருச்சிராப்பள்ளி வண்டி வந்து விட்டது.. அந்தப் பக்கம் நாகூர் வண்டியும் ஸ்டேஷனுக்கு உள்ளே வந்து விட்டது.. ரெண்டு பாசஞ்சரும் பதினைஞ்சு நிமிசம் லேட்.. 

வண்டி மாடுகள் இன்னும் உறக்கம் கலையாது இருக்க வண்டிக்காரர்களிடம் இருந்து ஹை.. ஹை.. - என்ற சத்தம்..

ஜட்கா வண்டிகளில் பூட்டப்படிருந்த குதிரைகள் வடக்கு ராஜ வீதி பக்கமாகப் பாய்வதற்குத் துடியாய் இருந்தன..  

திபு திபு  - என ஜனங்கள்..  அக்கம் பக்கம் பார்த்தபடி அவரவர் பிரச்னைகளை  பேசிக் கொண்டு ஸ்டேசனில் இருந்து வந்தார்கள்.. 

ஆனாலும் அவர்களிடம் ஏதோ ஒரு பரபரப்பு.. என்ன என்று புரியவில்லை..

இதற்கிடையேயும் -

" வெண்ணாற்றங்
கரை மாமணிக் கோயிலுக்குப் போகணும்.. எவ்வளவு கேட்கிறாய்?.. "

"  மூனு மைல்  தூரம் வாயில்லா ஜீவன் ஓடணும்.. ரெண்டு ரூபாய் கொடுங்க சாமீ!.. "

"ரெண்டு ரூபாயா.. ஜாஸ்தியா.. ன்னா இருக்கு?.. "

" சீரங்கத்துல இருந்து எங்க ஊருக்கு வர்றீங்க.. பெருமாள் புண்ணியம் எல்லோருக்கும் ஆகட்டுமே!.. நாலணா குறைச்சுக்கங்க சாமி...  வண்டிலே ஏறி உட்காரும்மா குழந்தே!.. " - என்று அன்பின் பேரங்கள்
நடந்து கொண்டிருந்தன..

மெல்ல சிரித்துக் கொண்டார் மாரியப்பன்..  ஒரு சிலர் மட்டும் அல்வா, மிச்சர் காராசேவு, பக்கோடா - என்று வாங்கிக் கொண்டு நகர்ந்தனர்..

" என்ன மாரியப்பன்!.. "

" வாங்க சார்.. என்ன இன்னிக்கு லேட்?.. திருஸ்னாப்பள்ளி ல இருந்தா வர்றீங்க?.. " - என்றபடி முக்காலியை விட்டு எழுந்த மாரியப்பன் மிக்ஸர் பொட்டலம் ஒன்றை எடுத்து நீட்டினார்..

மப்டியில் வந்திருப்பவர் ஏட்டையா.. இங்கே ரயிலடி ரவுண்டானா பீட் ல நிக்கிறவர்..

அருகில் வந்த ஏட்டையா - "  இது இருக்கட்டும்..  இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் நடையைக் கட்டிடுங்க... " - என்றார்  மெல்லிய குரலில்..

" ஏன் சார்.. என்ன விஷயம்?.. " 

" வடக்கேயிருந்து வந்திருக்கற சேதி ஒன்னும் சரியில்லை..  நெலமை ரொம்ப சிக்கலா இருக்கு.. ஏதாவது ஒன்னு ஆயிடுச்சி.. ன்னா பிரச்சினை கிளம்பிடும்.. ன்னு டிபார்ட்மெண்ட் அலர்ட்டா இருக்கு.. "

" அப்படியா!.. "

" யார் கிட்டயும் எதுவும் பேசிக்காம வீட்டப் பார்க்க புறப்படுங்க.. நான் வர்றேன்.. உஷார்!.. " - என்ற ஏட்டையா -

" ரெண்டு நாளைக்கு ஏவாரம் ஒன்னும் வச்சிக்க வேணாம்.. " - என்று கூடுதல் சேதியும் சொல்லி விட்டு நகர்ந்தார்..

' நல்ல மனுசனத் தொட்டு சேதிய ரகசியமா சொல்லிட்டு போறார்.. '

செய்தி கேட்ட  தனக்குள் முணுமுணுத்துக் கொண்ட மாரியப்பன் முக்காலியை எடுத்து வண்டியின் கீழ் வைத்துக் கொண்டு மிக்ஸர் ஸ்டாலை நகர்த்தினார்..

அடுத்த நாளே, பெரிய சோகம். ரயிலடியில் கலவரம்.. 

" சிறு ஏவாரிகள் டீக்கடைகள்  பழக்கடைகளுக்கு பலத்த சேதமாம்.. ரகளை செய்தவர்கள் யாரும் பிடிபட வில்லையாம்.. " -  பொதுமக்கள் பேசிக் கொண்டார்கள்..

ரயில் வண்டியின் மேல் ஏறிக் கொண்டும் ஜன்னல் கம்பிகளில் தொங்கிக் கொண்டும் சென்றதால் .... என்று, ஆகாச வாணி  சொல்லிக் கொண்டு இருக்க - காலைச் செய்திகளுடன் வெளியாகிய மாலைப் பத்திரிக்கை எல்லாமே விற்றுப் போயிருந்தது..

ஒரு வாரத்துக்குப் பிறகு நிலைமை சீரானது.. ஆனாலும் ரயிலடி பக்கம் போவதற்கு மனசு இல்லை - மாரியப்பனுக்கு ..

வழக்கம் போல புறப்பட்டு பஸ்டாண்டு பக்கம் கொஞ்ச நேரம்  பிள்ளையார் கோயில் பக்கம் கொஞ்ச நேரம்  என்று நின்று விட்டு ராத்திரி எட்டரை மணி வாக்கில் மிக்சர் வண்டியுடன் வீட்டுக்குத் திரும்பிய மாரியப்பன் அதன் பிறகு ரயிலடி பக்கம் போகவே இல்லை...

ஃஃஃ

73 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பதற்கு பிரார்த்தனைகள்...

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதையின் விவரிப்பு நன்றாக உள்ளது. அதிலும், அந்த மிக்ஸரின் கலப்பு பற்றிய விபரங்கள் மனதுள்ளேயே மிக்க ருசியை தந்து மகிழ்விக்கிறது.

    இன்றைய தலைப்பும் சென்ற மாதம் ஒரு செவ்வாயன்று வெளிவந்த கௌதமன் சகோதரரின் கதையான ரவாலாடையும் நினைவுபடுத்தியது. இன்றும் திங்களா என சற்றே குழம்பும் சமயத்தில், தலைப்பில் "சிறுகதை" என்ற வார்த்தை செவ்வாய் என்பதை தெளிவாக்கியதும் தெளிந்தேன்,

    இனிப்பும், காரமுமான பட்சண உணவின் தரத்தை தன் எழுத்தின் மூலம் அருமையான வார்த்தைகளைக் கொண்டு கோர்த்து விட்ட சகோதரர் துரைசெல்வராஜ் அவர்களுக்கு பாராட்டுக்கள். கதையின் நடை நன்றாக உள்ளது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தாலும் பழையதை என்றுமே மறக்க இயலாது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. தங்களது அன்பினுக்கு மகிழ்ச்சி..

      மண்ணின் பாரம்பரிய பட்சணத்தைப் பதிவு செய்ததில் மகிழ்ச்சி..

      உண்மைச் சம்பவம் ஒன்றும் கதைக்குள் ஊடாடி வருகின்றது..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. /உண்மைச் சம்பவம் ஒன்றும் கதைக்குள் ஊடாடி வருகின்றது../

      அது என்னவென்று தெரியவில்லை. ஆனால் புரிந்தது.. எந்த காலத்திலும் காரணிகளால் ஊக்குவிக்கப்பட்ட சம்பவங்கள் ஏதோ ஒரு காரணங்களாக காட்டப்பட்டு காலப்போக்கிற்கும் மாறாத காரணங்களாகி நின்று விடுகின்றன.

      நீக்கு
    3. கமலா ஹரிஹரன் மேடத்தின் கடைசிக் கருத்து இலக்கியத்தனமாக மிளிர்கிறது. ஒவ்வொருவருக்குள்ளும் எவ்வளவு திறமைகள் இருக்கின்றன...

      நீக்கு
    4. நன்றி சகோதரரே. ஆனால், பாராட்டிற்கு நான் தகுதியானவளா என்பது தெரியவில்லை. ஏதோ எனக்குத் தெரிந்ததை சபையில் வந்து உளறுகிறேன் . அவ்வளவுதான். நன்றி.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதைக்கேற்றபடி கௌதமன் சகோதரர் வரைந்த ஓவியம் அருமை. சகோதரர் துரை செல்வராஜ் அவர்கள் கதையில் சுவை மிக்க பட்சணங்களை மனதுக்குள் கொண்டு வந்து அதை சாப்பிட்ட திருப்தியை தந்தது போல், பட்சணங்கள் வைத்த தள்ளு வண்டியையும், பட்சணங்கள் விற்பனை செய்யும் மாரியப்பனையும் கௌதமன் சகோதரர் தன் ஓவியத்தின் மூலமாக கண்ணெதிரே கொண்டு வந்து நிறுத்தி விட்டார். மற்ற படங்களும் கதைக்குப் பொருத்தமாக நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. ஒரு தலைப்பு தான்..
      ஒரே தலைப்பு தான்..

      மகிழ்ச்சி.. நன்றி ஏகாந்தன்..

      நீக்கு
  5. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  6. இன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அன்பு நெஞ்சங்களுக்கு அன்பின் நல்வரவு..

    இன்று எனது கதையினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும் கண் கவரும் படங்களுடன் எழிலூட்டிய சித்திரச் செல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  7. நிகழ்வுகளை தத்ரூபமாக
    வார்த்தைகளில் வரித்து அதை வரிகளாக்கும் உங்கள் சாமர்த்தியம் தான் கதையில்லாக் கதைகளையும் ரசிக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// கதையில்லாக் கதைகளையும் ரசிக்க வைக்கிறது.///

      கதையில்லாக் கதை.. என்னே. ஒரு நயம்...

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி அண்ணா....

      நீக்கு
    2. அண்ணா..

      இந்தக் கதைக்குள் சம்பவம் ஒன்றும் இருக்கின்றதே..

      தங்கள் நினைவுக்கு வரவில்லையா!?..

      நீக்கு
    3. பின்னூட்ட பதில்களில் எங்கேயானும் இலை மறை காயாகக் கோடி காட்டுங்கள்.
      கண்டுபிடித்து விடலாம்.

      நீக்கு
    4. ஓ.. 'அந்த' (மூணு எழுத்து) விஷயமா?

      நீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  9. ரயிலடி ஸ்வீட் ஸ்டால்... தலைப்பைப் படித்ததும் திருநெவேலி ஜங்ஷனில் இருந்த தாத்தா வீட்டின் அருகில் இருந்த பல பட்சணம் தயாரித்த இடங்கள் நினைவில் வந்துபோனது. மதியம் சுடச்சுட அங்கு தயாரிக்கப்படும் தவலடை, மிக்சர், காராசேவு என்று வாங்கிச் சாப்பிட்ட நாட்கள் நினைவில் வந்துபோயின.

    எதெதுக்கோ டைம் மெஷின் உபயோகிப்பதைவிட, டக் என்று அந்தக் காலத்துக்குச் சென்று சுத்தமான, அன்பான, நேர்த்தியுடன் தயாரிக்கப்பட்ட பட்சணங்களைச் சாப்பிடுவதற்கும், கரந்தை சார் பதிவில் படித்த திண்ணையில் உட்கார்ந்து அந்நியோந்யமாக ஊர்க்கதைகளைப் பேசும் வெள்ளந்தி மனிதர்களைப் பார்க்கவும் இந்தத் தலைமுறைக்குக் காட்டவும் உபயோகிக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// சுத்தமான, அன்பான, நேர்த்தியுடன் தயாரிக்கப்பட்ட பட்சணங்களைச் சாப்பிடுவதற்கும் ///

      நாம் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நெல்லை அவர்களுக்கு நன்றி ....

      நீக்கு
    2. நெல்லை, ஊர்க்கதைகள் பேசும் வெள்ளந்தி மனிதர்கள் - இது சரிதான் என்றாலும், நானும் சிறு கிராமத்தில் வளர்ந்ததால் சொல்கிறேன். இதனால் பாதிப்பும் வரும். அவங்க பாட்டுக்கு திண்ணைல உக்காந்து பேசிடுவாங்க. ஆனால் அதை அப்புறம் ஊர் முழுவதும் தங்கள் வார்த்தைகளையும் சேர்த்து - passing on the secret - போல பரவ விட்டு அது ஏற்படுத்தும் மன உளைச்சல்களும் சண்டைகளும் அனுபவத்தில் கண்டது.

      அதனாலேயே எங்கள் பாட்டி எங்களை ஊரிலுள்ள யாருடனும் பேச விடமாட்டாங்க. பேசினால் வம்பு வரும். மத்தவங்க கதைய நாம கேட்கலாம் சுவாரசியமா இருக்கலாம்....ஆனால் நம் வீட்டுக் கதை பேசப்பட்டால்? அதுவும் சும்மா காதில் விழுந்ததை வைத்து? அதுவும் காதில் சரியா வாங்கிக்காம?

      அதே போல நாங்க ஊர்க் கதைகள் ஏதேனும் தெரிஞ்சு வீட்டில் சொன்னால் அவ்வளவுதான்.

      இப்போது கூட ஊரில் கற்பனையில் ஒவ்வொருவர் வீட்டுக்கதைகளும் உலவுகின்றன. எங்கள் வீட்டுக் கதையும் காதை எட்டும் போது சிரிப்பாகவும் இருக்கிறது. நல்ல காலம் நாங்கள் அங்கு இல்லை என்பதோடு ஊரோடு அவ்வளவாகத் தொடர்பிலும் இல்லை.

      கீதா

      நீக்கு
    3. திருவனந்தபுரத்தில் கூட கோட்டைக்குள்ள கோயில்களைச் சுற்றியிருந்த தெருக்களில் முன்பு வம்பு உண்டு. சத்சங்கங்கள் நடப்பதுண்டு...அங்கும் மற்றவர்கள் வீட்டுக் கதைகள் பேசப்படும், திண்ணைகளிலும், கோயில்களில் சந்திக்கும் போதும். சாதாரண விஷயம் கூட இட்டுக்கட்டப்பட்டு பரவும். இப்போது குறைந்திருக்கலாம்.

      கீதா

      நீக்கு
    4. ஊரில், எந்த வீட்டில் யார் வீட்டிற்கு விலக்கு, என்று வீட்டினுள் வருகிறாள் என்பது முதல் பேசப்படும். கோயிலுக்குப் போகலைனா ஓ....அதான் என்று பேசுவாங்க...கோயிலுக்குப்போறப்ப ...இன்னிக்குதான் குளிச்சியான்னு கேப்பாங்க. அதுவும் ஆண்பிள்ளைகள் எல்லாம் இருக்கும் இடத்தில்....
      மேக்கால இருக்கால்லா அவொ மருமகளுக்கு இன்னும் ஒன்னும் வரலை....தெக்கால இருக்காலல மீனா அவொளுக்கு பொம்பிளைப் பிள்ளையாம்...நேத்து பொறந்திச்சாம்.........போ பொறந்தது பொண்ணா? சரியா போச்சு போ......அவ புருஷனுக்கே ஒன்னும் இல்லை இப்ப இது வேறயா...இதுக்கு சேக்கணும்லா.....என்று ரெண்டு வெள்ளந்திகள்???!! பேசிக் கொண்டிருக்கும்... இப்படி நிறைய...

      கீதா

      நீக்கு
    5. அப்போ பேசுவதற்கு எந்த வம்புப் பேச்சும் இல்லாததால் இதையெல்லாம் பேசியிருப்பாங்க. இப்போ அந்த இடத்தை தொலைக்காட்சி சீரியல்கள் ஆக்கிரமித்துக்கொண்டதால், 'பார்த்தயோ..பாக்யலட்சுமி சீரியலில் -அப்படி ஒன்று இருக்கிறதா, ரேவதி எவ்வளவு மோசமா பேசறா' என்றெல்லாம் பேசிக்கொள்வார்களாக இருக்கும்.

      ரஜினிகாந்தைப் பற்றிச் சொல்லும் ஒரு நல்ல குணம், அங்கு இல்லாதவரைப் பற்றி எதையும் அவர் பேசமாட்டார், பிறர் பேசுவதையும் காதுகொடுத்துக் கேட்காமல் அந்த இடத்தைவிட்டு அகன்றுவிடுவார் என்பதுதான்.

      நீக்கு
    6. இப்போ அந்த இடத்தை தொலைக்காட்சி சீரியல்கள் ஆக்கிரமித்துக்கொண்டதால், 'பார்த்தயோ..பாக்யலட்சுமி சீரியலில் -அப்படி ஒன்று இருக்கிறதா, ரேவதி எவ்வளவு மோசமா பேசறா' என்றெல்லாம் பேசிக்கொள்வார்களாக இருக்கும்.//

      ஹாஹாஹாஹா இது இப்ப நடக்கிறதுதான் ஆனால் எனக்குத் தெரிந்து கிராமங்களில். நகரங்களில் சில வீடுகளில்.

      ஆ!! ஆ!!! நெல்லை திருப்பதி கோயில், வேற ஒரு கோயிலில் கைங்கரியம், பிரபந்தம்னு பிஸின்னு பாத்தா ரேவதியாமே!!!!! ஹாஹாஹா....

      ஆமாம், நெல்லை ரஜனியின் இந்த நல்ல பத்திக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

      கீதா

      நீக்கு
    7. /// ஊர்க் கதைகள் பேசும் வெள்ளந்தி மனிதர்கள் - இது சரிதான் என்றாலும்... ///

      நல்லதும் கெட்டதும் கலந்து தான் இருக்கும்...

      வெட்டி அரட்டை என்றும் சொல்லிவிட முடியாது..

      கிராமத்து வாழ்க்கையில் இதுவும் ஒரு அங்கம்...

      நீக்கு
  10. மிக்ஸர் கடையை கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள்.
    கதை நன்றாக இருக்கிறது. நல்ல ஏட்டையாதான், நட்பின் காரணமாக இவருக்கு மட்டும் சொல்லி விட்டார் போலும்.

    //சன்னமாக ஓமப்பொடியை முதலில் பொரித்து விட்டு அவல், பொட்டுக் கடலை என்று ஒவ்வொன்றாகப் பொரித்தெடுத்துப் போடுவார்.. மணிமகுடம் மாதிரி முந்திரி கறிவேப்பிலையை நெய்யில் போட்டு எடுக்கும்போது தெரு முழுதும் மணக்கும்..//

    மணம் இங்கு வந்து விட்டது.


    மிக அருமையாக சொன்னீர்கள்.

    //நீலம் பச்சை ஆரஞ்சு நிறக் கண்ணாடிகள் பதிக்கப்பட்டு பக்கவாட்டில் திறப்புக் கதவுகளுடன் அலங்காரமாக இருக்கும்..//

    ஆமாம் அந்த மாதிரி வண்டிகளை பார்த்து இருக்கிறேன்,
    கெளதமன் சார் பொருத்தமாக வரைந்து விட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// மிக்ஸர் கடையை கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள். கதை நன்றாக இருக்கிறது.. ///

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. /// மணிமகுடம் மாதிரி முந்திரி கறிவேப்பிலையை நெய்யில் போட்டு எடுக்கும்போது தெரு முழுதும் மணக்கும்.. மணம் இங்கு வந்து விட்டது..///

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. கதையின் நடையும், கால விவரிப்பும், மனிதர்களுக்கிடையே இருந்த அன்பும், சிறப்பாக வெளிப்பட்டன. பாராட்டுகள் துரை செல்வராஜு சார்.

    கதையின் ஓவியம் நன்று என்றாலும் நான் பார்த்த பட்சணத் தள்ளுவண்டிகளை நினைவுபடுத்தவில்லை. இன்னும் சிறிதான, கண்ணாடிப் பெட்டிகள், உள்ளே என்னென்ன இருக்கும் என்பது தெரியும்.

    பதிலளிநீக்கு
  12. நெல்லை பாரம்பர்யம், நெய் அல்வா, கடலையெண்ணெயில் செய்த காரவகைகள், வனஸ்பதியில் செய்த இனிப்புப் பட்சணங்கள்.

    கதை, அவற்றையும் இழந்த காலத்தையும் நினைவுபடுத்தியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லையின் பாரம்பர்யம், போலவே தஞ்சையின் உணவு வகைகளும் பாரம்பர்யம் மிக்கவை..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நெல்லை அவர்களுக்கு நன்றி..

      நீக்கு
  13. ரசித்த இடங்கள்:

    அந்தக் காலத்தில் இந்த மாதிரி வண்டிகள் என்று ஆரம்பித்து நீலம், பச்சை, ஆரஞ்சு சதுரக் கண்ணாடிகள் பதித்த அந்தத் தள்ளு வண்டி மாடல் டயர் சக்கர வண்டிகளை கண்முன் நிறுத்திய இடம்.

    எட்டாம் நம்பர் பஸ் டவுண்டானாவைச் சுற்றிக் கொண்டு...

    நாகூர் பாஸஞ்சருக்கு ஒதுக்கப்பட்ட மூன்றாம் பிளாட்பாரம் --
    திருச்சினாப்பள்ளியிலிருந்து மாயவரத்திற்கு போகும் வண்டி ஒண்ணாம் பிளாட்பாரத்தில் வந்து நின்று தஸ்புஸ் என்று மூச்சு விட்டுக் கிளம்பி லயன் க்ளியர் ஆனவுடன் தான் நாகூர் பாஸஞ்சர் கிளம்பும் என்று அச்சு அசலான வர்ணிப்பு

    ஜட்கா வண்டியில் பூட்டப் பட்டக் குதிரைகள் வடக்கு ராஜ வீதிப் பக்கம் பாயத் துடியாய் இருந்தன.

    மூணு மைல் தூரம் வாயில்லா ஜீவன் ஓடணும்.. ரெண்டு ரூபா கொடுங்க சாமி.."

    மனசும் எழுத்தும் ஒன்றில் ஒன்று ஒன்றிப் போகும் போது தான் இந்த மாதிரி ரஸவாதங்கள் நிகழ்கின்றன. லேசுப்பட்ட சமாச்சாரங்கள் இல்லை
    தம்பி துரைக்கோ இதுவே கைவந்த கலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// மனசும் எழுத்தும் ஒன்றில் ஒன்று ஒன்றிப் போகும் போது தான் இந்த மாதிரி ரஸ வாதங்கள் நிகழ்கின்றன.///

      மிகவும் மகிழ்ச்சி அண்ணா..

      நீக்கு
  14. துரை அண்ணா, கதை அனுபவக் கதை போன்று, பழைய நினைவுகளை மீட்டெடுப்பது போன்று....நன்றாக உள்ளது.

    ஆமாம் அந்த வண்டியில் கண்ணாடிக்குள் தனி தனியாக வேறு எல்லாம் போட்டு அதெல்லாம் அப்போது வாங்கிக் கொடுக்கக் கேட்டாலும் கிடைக்காதவை. அதுவும் எங்கள் ஊர்ப்பக்கம் காரச்சேவு அருமையா இருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// அனுபவக் கதை போன்று, பழைய நினைவுகளை மீட்டெடுப்பது போன்று.. நன்றாக உள்ளது.. ///

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ...

      நீக்கு
  15. வர்ணனைகளை ரசித்தேன் ஜி

    பழைய உண்மைச்சம்பவத்தின் தொடர்பு தொட்டும், தொடாமலும் படர்ந்து வருகிறது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // பழைய உண்மைச் சம்பவத்தின் தொடர்பு தொட்டும், தொடாமலும்.. ///

      அது எது?..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி...

      நீக்கு
  16. எனக்கு ரொம்பப் பிடித்தவரி - //மூணு மைல் தூரம் வாயில்லா ஜீவன் ஓடணும்.. ரெண்டு ரூபா கொடுங்க சாமி.."//

    இது உங்கள் மன எண்ணம்....உங்கள் கருத்து ...அன்பின் வெளிப்பாடு என்றே எனக்குத் தோன்றுகிறது. தனக்கு உதவும் அந்த வாயில்லா ஜீவன்களையும் தங்களில் ஒருவராகப் பார்ப்பது என்பது சிறப்பான விஷயம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// உங்கள் கருத்து அன்பின் வெளிப்பாடு என்றே எனக்குத் தோன்றுகிறது..///

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நீக்கு
  17. இதை வாசித்ததும் கொரோனா சமயத்தில் வாசித்த செய்தி நினைவுக்கு வந்தது. கூலி வேலை செய்யும் பல குடும்பங்கள் தங்கள் சிறு கிராமங்களுக்குக் கால்நடையாகவே - பங்களூரில் இருந்து மஹாராஷ்டிரா எல்லை வரை - சென்ற குடும்பங்கள் தாங்கள் மட்டும் இடம் பெயராமல் தங்கள் செல்லங்களையும் கூடவே அழைத்துச் சென்றிருக்கின்றனர். வழியில் சென்ற ஏதாவது லாரிகளில் மக்களை ஏற்றிட லாரிக்காரர்கள் அனுமதித்தாலும் செல்லங்களை ஏற்கவில்லை என்றதும், இவர்களும் ஏற மறுத்துச் சென்ற செய்தி நினைவுக்கு வந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியான மனிதர்களும் இந்த பூமியில் தான்..

      மேலதிக செய்திகளுக்கு மகிழ்ச்சி..
      நன்றி சகோ

      நீக்கு
  18. மிக்ஸரின் மணமும் சுவையும், ரயிலடி வியாபாரமும் படிக்கும் போதே கண்முன்னே விரிந்து செல்கிறது பாராட்டுக்கள்.

    கதை மிக்ஸர் சாப்பிட்ட உணர்வை தந்தது. தள்ளு வண்டி படமும் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரயிலடி வியாபாரமும் படிக்கும் போதே கண்முன்னே விரிந்து செல்கிறது பாராட்டுக்கள்...

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. மாதேவி அவர்களுக்கு நன்றி...

      நீக்கு
  19. மறுநாள் நடந்ததை யாருமே யூகிக்க வில்லையே!..

    பதிலளிநீக்கு
  20. @ அன்பின் நெல்லை..

    /// சுத்தமான, அன்பான, நேர்த்தியுடன் தயாரிக்கப்பட்ட பட்சணங்களைச் சாப்பிடுவதற்கும் ///

    நாம் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்..

    அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நெல்லை அவர்களுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  21. கௌ அண்ணா துரை அண்ணா கதைல நீலம் பச்சை ன்னு சொன்னதுனால இப்படி போட்டிட்டீங்களா? அது சரி என்ன காரம், ஸ்வீட் எல்லாம் உள்ள இருக்கு!!!! சொல்லுங்க ஏதாச்சும் வாங்கிக்கலாம்னுதான்!!! ஒண்ணுமே தெரிய மாட்டேங்கி!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// கதைல நீலம் பச்சை ன்னு சொன்னதுனால இப்படி போட்டிட்டீங்களா?.. ///

      ஓவியம் சிறப்பு.. எனினும் அதைப் பற்றிய அலசல்களுக்கு இன்னும் நான் வரவில்லை..

      நீக்கு
  22. வழக்கம் போல புறப்பட்டு பஸ்டாண்டு பக்கம் கொஞ்ச நேரம் பிள்ளையார் கோயில் பக்கம் கொஞ்ச நேரம் என்று நின்று விட்டு ராத்திரி எட்டரை மணி வாக்கில் மிக்சர் வண்டியுடன் வீட்டுக்குத் திரும்பிய மாரியப்பன் அதன் பிறகு ரயிலடி பக்கம் போகவே இல்லை...//

    ஆ! முடிவு இப்படியாகிடுச்சே. இரண்டு ஊகங்கள்....ஒன்று அவர் இறைவனடி சேர்ந்துவிட்டார். இல்லைனா ரயிலடி பக்கம் போகலை வேறு பக்கங்களில் வியாபாரத்தை நடத்தினார்!! மனதில் முதல் ஊகம் தான் ஊர்ஜிதமானாலும் இரண்டாவதையே எடுத்துக் கொள்கிறேன்...!!!!

    இந்தக் கருத்தை காலையில போட்டு இப்ப தேடினா காணலை,...காக்கா உஷ்? உள்ளார மறையலைன்னு தெரியுது. இருந்தா பிடிச்சு இழுத்துக் கொண்டு வந்து போட்டிருப்பீங்களே

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை.. இல்லை... வெகு காலம் அவர் நல்லபடியாக வாழ்ந்தார்..

      ஹெட் கான்ஸ்டபிள் எதிர்பார்த்து சொல்லி விட்டுப் போன செய்தி என்ன என்பதுதான் புதிர்...

      அந்த நாளில் ரயிலடியில் கலவரம் நடத்தப்பட்டதும் ஒரு காரணம்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  23. @ ஜீவி அண்ணா..

    ஆன்மீக மலைக்கும் அப்போது ஆபத்து நேர்ந்தது...

    பதிலளிநீக்கு
  24. @ அன்பின் நெல்லை..

    //கதையின் ஓவியம் நன்று என்றாலும் நான் பார்த்த பட்சணத் தள்ளுவண்டிகளை நினைவு படுத்தவில்லை. இன்னும் சிறிதான, கண்ணாடிப் பெட்டிகள், உள்ளே என்னென்ன இருக்கும் என்பது தெரியும்...///

    இதே கருத்தை அன்பின் கோமதி அரசு அவர்களும் சகோதரி கீதா அவர்களும் சொல்லியிருந்தனர்..

    உண்மையில் நான்கு புறமும் பார்வைக்கு ஏதுவாகவும் அதற்கு மேல் முக்கால் அடிக்கு சதுரங்களாக வண்ணக் கண்ணாடிகள் பதிக்கப்பட்டிருக்கும்..

    கதையில் விவரமாக சொல்வதற்கு தவறி விட்டேனோ?..

    பதிலளிநீக்கு
  25. சில கருத்துகள் மறைந்திருப்பதாகத் தெரிகின்றது..

    அன்புடன் கவனிக்கவும்...
    நன்றி..

    பதிலளிநீக்கு
  26. இந்தக் கதையில் சொல்லப்பட்டிருப்பது வறுத்த முந்திரிப் பருப்புட்ன் கூடிய மிக்ஸர்... ஒரே ஒரு காரணத்துக்காக விட்டல் ராவ் நிலக்கடலையை மிக்ஸரில் சேர்ப்பதில்லை.. அதையே மாரியப்பனும் பின்பற்றி வந்தார் என்பது ஊரறிந்த விஷயம்...

    ஆனாலும் இங்கே மிக்ஸர் படத்தை சேர்த்து சிறப்பித்து விட்டார் சித்திரச் செல்வர்..

    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  27. /உண்மைச் சம்பவம் ஒன்றும் கதைக்குள் ஊடாடி வருகின்றது../
    ஐம்பது வருடம் முன் என்றால் 1983-84. எம்ஜியார் கிட்னி செயலிழப்பா? அல்லது இந்திரா காந்தி கொலை சம்பவமா?

    அருமையான வர்ணனைகள். மாட்டு வண்டிக்காரர் பேரம் பழைய நினைவுகளைக் கொண்டு வந்தது. 1960களில், எங்கள் ஊர் மாட்டு வண்டிக்காரர் ஐந்து ரூபாய் தினசரி வருமானத்தில் 30 - 40 சதம் "வாயில்லா ஜீவனுக்கு" வைக்கோல்/புண்னாக்குக்கே செலவழிப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கு மகிழ்ச்சி..

      தாங்கள் சொல்லியிருக்கும் இரண்டு சம்பவங்களும் இல்லை.. இதற்கும் முன்னால் அது..

      ///எங்கள் ஊர் மாட்டு வண்டிக்காரர் ஐந்து ரூபாய் தினசரி வருமானத்தில் 30 - 40 சதம் "வாயில்லா ஜீவனுக்கு" வைக்கோல்/
      புண்ணாக்குக்கே செலவழிப்பார்.. ///

      எங்கள் வீட்டருகிலும் ஒருவர் இப்படி இருந்தார்..

      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  28. ...மணிமகுடம் மாதிரி முந்திரி கறிவேப்பிலையை நெய்யில் போட்டு எடுக்கும்போது தெரு முழுதும் மணக்கும்.//

    அடடா! இந்த மாதிரி மனிதர்கள் எங்கே போனார்கள்?

    நானும் ஒரு ’மதராஸ்’ மிக்சர் ப்ரியன். (இப்படித் தனியாகச் சொல்லாவிட்டால் பாம்பே மிக்சர், குஜராத்தி மிக்சர், பிகானீர்வாலா என்று வரிசையாக வந்து நிற்கும் வாசலில்!)

    ஆனால் நல்ல, தரமான, முறைப்படி செய்யப்பட்ட நம்மூர் மிக்சர் அவ்வளவு எளிதாக வாயில் வந்து விழுவதில்லை இப்போதெல்லாம். அவலிருந்தால் பொட்டுக்கடலை இல்லை. பூந்தி இருந்தால் முந்திரியைக் காணோம். அப்படியே ஓரளவு அணி சேர்ந்திருந்தாலும், ஓவர் உப்பு. அல்லது பாடாவதி எண்ணெய் நெஞ்சுக்கரிப்பைக் கொண்டுவந்து விட்டுவிடும். கடவுளே...

    அப்படி ஒரு காலம் இருந்தது. அப்போது நாமும் இருந்தோம். ரசித்தோம், சுவைத்தோம் என நினைத்து அசைபோட்டுக்கொண்டு, ஆறுதல்பட்டுக்கொள்ளவேண்டியதுதான்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// அப்போது நாமும் இருந்தோம். ரசித்தோம், சுவைத்தோம் என நினைத்து அசை போட்டுக் கொண்டு, ஆறுதல்பட்டுக் கொள்ள வேண்டியது தான்..///

      அவ்வளவு தான்.. அது மட்டுமே நிம்மதி..

      நீக்கு
  29. கதை என்று பெரிதாக எதுவும் இல்லை, ஆனால் அது ஒரு குறையாக தெரியாதபடி வர்ணனை அமைந்துள்ளது. இதைப் படிக்கும் பொழுது சின்ன வயதில் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து எங்கள் ஊருக்கு 'மணீஸ் பேக்கரி' என்று எழுதப்பட்ட வண்டியில் பிஸ்கட்டுகள், மற்றும் திண்பண்டங்கள் வரும். அச்சு அசல் நீங்கள் வர்ணித்திருப்பதைப் போலவே இருக்கும் அந்த வண்டி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும்
      மலரும் நினைவுகளுடன் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  30. கடுகளவு கதை ஆனால் அதை நோக்கி அழைத்துச் சென்றவிதம் சிறப்பு. எங்களின் சிறு வயதில் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து எங்கள் ஊருக்கு 'மணீஸ் பேக்கரி' என்று எழுதப்பட்ட வண்டி வரும். அதன் நிறம், அதில் கட்டப்பட்டிருக்கும் மணி, எல்லாம் அச்சு அசலாக அப்படியே உங்கள் வர்ணிப்பு!

    பதிலளிநீக்கு
  31. @ பானுமதி வெங்கடேஸ்வரன்

    /// அறிஞர் அண்ணாவின் மறைவுதானே?.. ///

    நீங்கள் தான் சரியாக யூகம் செய்திருக்கின்றீர்கள்..

    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!