ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023

நான் தரிசனம் செய்த கோவில்கள்: நெல்லைத்தமிழன் : வைரமுடி யாத்திரை 10

 

வைரமுடி யாத்திரை ஹொசஹொலாலு, மாண்ட்யா பகுதி 10


கோவில் வெளிப்புறத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சிற்பங்கள் இருக்கின்றன என்று சொல்லியிருந்தேன். அதில் விஷ்ணுவின் சிற்பம் மாத்திரம் 20க்கும் மேல் இருக்கின்றன. இது தவிர, பிள்ளையார், மஹிஷாசுரமர்த்தினி, நடனமாடும் சரஸ்வதி போன்ற பல்வேறு சிற்பங்களும் இருக்கின்றன. இந்தச் சிற்பங்களின் செய்நேர்த்தி என்னை வியக்கச் செய்தது. இதுபோன்ற ஆனால் கடல் காற்றால் பழுதுபட்ட சிற்பங்களை நான், கங்க்ரோலி துவாரகையில் ருக்மணி கோவில் கோபுரத்தில் பார்த்திருக்கிறேன். ஹொசஹொலாலுவில் சிற்பங்கள் பெரும்பாலும் சேதமடையவில்லை. ஆனால் கங்க்ரோலி த்வாரகையில் சிற்பங்கள் உடைந்து, அரித்துக்கிடக்கின்றன.






நட்சத்திர வடிவில் கூர்மையாக முடியும் இடத்திலும் சிற்பங்களின் மேன்மை. 











லக்ஷ்மி நாராயணர் மற்றும் விஷ்ணு சிற்பங்கள். 




இன்னும் நிறைய படங்கள் உண்டு. ஒவ்வொரு படத்தையும் கூர்ந்து கவனித்தால், அதில் உள்ள சிற்பங்கள் என்ன என்ன என்பதை நீங்களே கண்டுபிடிக்கலாம். இதை எப்படித் திட்டமிட்டுச் செய்திருப்பார்கள், எவ்வளவு நாட்கள்/மாதங்கள் ஆகியிருக்கும், ஓரிருவர் வேலையா இல்லை மிகப் பெரும் குழுவா, முழு கோவிலும் இப்படித்தான் இருந்ததா இல்லை சில பல பகுதிகளை நாம் இழந்திருக்கிறோமா? இவ்வளவு அருமையான கலைச்சிற்பத் தொகுதியுடன் அமைந்த கோவிலுக்கு நுழைவாயில் பிரம்மாண்டமாக இல்லையே, கோவிலைச் சுற்றி புல்தரை மட்டுமே இருக்கிறதே என்றெல்லாம் பல கேள்விகள் நமக்கு எழும்அடுத்த வாரம் பார்ப்போமா?


(தொடரும்) 

 

63 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. சிற்பங்களின் நுணுக்கம் வியப்பூட்டுகிறது. ஆனாலும் சிற்பங்களில் ஒரு பாவம் இல்லை. எல்லாம் ஒரு bland look கொண்டுள்ளது போல் இருக்கிறது.

    சும்மா ஒன்று கூகிள் செய்தபோது மதுரையில் இருந்த மதன கோபாலசாமி கோயில் மண்டபத்தையே எடுத்து அமெரிக்க ம்யூஸியத்தில் வைத்திருப்பதை அறிந்தேன். சுட்டி தந்திருக்கிறேன். சிலைகளில் ஒரு உயிர்ப்பு காணமுடியும்.

    https://philamuseum.org/calendar/exhibition/collection-highlight-temple-hall


    https://www.thehindu.com/society/history-and-culture/madurai-to-philadelphia-journey-of-the-temple-stones-art-historian-darielle-mason-compiles-findings-in-new-book/article65835823.ece

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மதுரையில் இருந்த மதன கோபாலசாமி கோயில் மண்டபத்தையே எடுத்து அமெரிக்க ம்யூஸியத்தில் வைத்திருப்பதை அறிந்தேன்.//இதைப் பற்றி ஏற்கெனவே இரண்டு மூன்று முறை சொல்லி/எழுதி இருக்கேன்.

      நீக்கு
    2. ஜெயகுமார் சார்...தாமதமாக பதிலெழுவதற்கு மன்னிக்கவும். நிறைய வேலைகள், எல்லாம் நல்ல நிகழ்வை நோக்கி. சென்னைக்குப் பிரயாணம் செய்திருந்தேன். தொடர்ந்து வேலைகள்.

      நான் மதனகோபாலஸ்வாமி கோவிலுக்கு சில மாதங்களுக்கு முன்பு சென்றிருந்தேன். அந்தக் கோவிலில் உபந்நியாசங்கள் நடப்பதை யூடியூப் வாயிலாக அறிந்து, உபந்நியாசம் செய்பவருடைய பேச்சுக்களை வரவழைத்துக் கேட்டிருந்தேன். மிக அழகிய கோவில். ஆனால் பல சிதைவுகளைக் கண்டேன்.

      இந்தக் கோவிலின் மண்டபத்தையே சுருட்டிக்கொண்டு சென்றிருப்பதை நீங்கள் பகிர்ந்ததைக் கண்டு அறிந்தேன். பாரதத்தின் கலைப் பொக்கிஷங்கள் இப்படிப் பல்வேறு வகையில் களவு போயிருக்கின்றன. அமெரிக்காவில் அது பல்வேறு மக்கள் வந்து அறிந்து கொள்ளும் நிலையில், பாரதத்தின் பெருமைசாற்றும் என்பது மனதுக்கு ஆறுதல்

      நீக்கு
  3. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. இத்தனை சிற்பச் செல்வங்களையும் ஆழ்ந்து அனுபவிக்க இத்தணூண்டு மனிதப் பிறவி போதுமோ என்று தோன்றுகின்றது..

    பதிலளிநீக்கு
  5. பிரமிக்க வைக்கிறது கலை நுணுக்கம்.

    பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  6. பாட்டு எழுதிப் பேர் வாங்கும் புலவர்கள் இருக்கின்றார்கள்.. குற்றம் கண்டு பிடித்தே பேர் வாங்கும் புலவர்களும் இருக்கின்றார்கள் - என்கின்ற மாதிரி,

    இப்படியான கலைச் செல்வங்களை இடித்துத் தரைமட்டமாக்கி சுகம் காணும் மனிதர்களும் இருக்கின்றார்கள்..

    இத்தகையோர்களின் அடிவருடி வயிறு வளர்க்கும் கஸ்மாலங்களும் நம்மிடையே இருக்கின்றன..

    அழகிய லக்ஷ்மி நரசிம்ம திருமேனியைச் சிதைக்கவும் மனம் வந்திருக்கின்றதே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது பொதுவாக முஸ்லீம் படையெடுப்புகளில் நடைபெற்றவைதான். ஸ்ரீரங்கம் கோவிலில், அந்நியப் படையெடுப்புக்குச் சற்று முன்பு, ஸ்ரீரங்கம் நாச்சியாரை (மூலவரை) அருகில் மகிழ மரத்தடியில் பெரிய குழி தோண்டிப் புதைத்துவைத்ததும், ஸ்ரீரங்கம் மூலவர் சந்நிதியையே கல் கொண்டு முழுவதுமாகச் சுவர் எழுப்பி மறைத்ததுவும் நடந்த நிகழ்வுகள்தானே

      நீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  8. பதிவு மிகவும் அருமை.
    படங்கள் எல்லாம் அழகாய் இருக்கிறது.
    நீங்கள் சொல்வது போல நேர்த்தியான சிற்பங்கள் தான்.
    சேதமடையாமல் காலத்தை வென்று இன்னும் அழகாய் காட்சி அளிப்பது வியப்புதான்.
    சிற்பங்கள் ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்கிறது. சிறிய சிற்பங்களும் மிக அழகாய் கலை நுணுக்கத்தோடு செய்து இருக்கிறார்கள்.
    பளிங்கு சிற்பத்தில் செய்வது போன்ற அழகிய வேலைப்பாடு.
    போன பதிவை காலதாமதமாக படித்தேன்.
    வீட்டில் உறவினர் வருகை, திருமணம், புதுமனைபுகுவிழா என்று உறவினர்கள் வந்து இருந்தார்கள். நேற்றும் இன்றும் உறவினர் இருந்தார்கள் இப்போதுதான் கிளம்பி போனார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம்.

      சிற்பங்களும் கோவில்களும் காலத்தை வென்று நம் இந்தியப் பாரம்பர்யத்தைப் பறைசாற்றுகின்றன. என்ன ஒன்று, அந்தச் சிற்பிகள் யார் என்று நமக்குத் தெரியாது, ஆனால் இவற்றைச் செய்யும்படியாகச் செய்த அரசரை நமக்குத் தெரியும்

      நீக்கு
  9. ஓ மை!!!!!! பாத்து பாத்து முடியலை நெல்லை. என்ன ஒரு நுணுக்கம். இத்துனூண்டு இத்துனூண்டு வடிவில் எப்படிச் செதுக்கியிருப்பாங்கன்னு வியபப இருக்கு. அப்படிச் செதுக்கும் போது கற்கள் உடையாமல் அதுவும் விளிம்புப் பகுதி மூக்கு, கண்ணு என்று பூக்கள்...அன்னம் அலகு இப்படி. ஆச்சரியம் அதை நமக்கு யாரென்றும் எது என்றும் தெரியும் வண்ணம் செதுக்கல்கள் பிரமிப்புதான். மிகவும் ரசித்துப் பார்த்தேன், நெல்லை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடுமையான கற்கள் அல்ல, சிற்பங்களைச் சுலபமாகச் செதுக்கக்கூடிய கற்கள் (சோப் ஸ்டோன்) என்று சொல்கிறார்கள். எனக்கென்னவோ நல்ல கற்களாகவே தோன்றியது.

      நீக்கு
  10. சில சிற்பங்களில் முகங்கள் கொஞ்சம் அரித்திருப்பது போலத் தெரிகின்றது.

    கையில் கிளி, கண்ணாடி பார்க்கும் சிற்பம், அடுத்தடுத்து எடுத்து தள்ளியிருக்கீங்க. நானும் இப்படித்தான் எடுத்துத் தள்ளிடுவேன். ஆனா சேமிக்கத்தான் இடம் தேட வேண்டியிருக்கும். இப்ப.

    காளிங்க நர்த்தனம், விஷ்ணு, நரசிம்மர் பல பொஸிஷன்களில்...ஒவ்வொன்றும் கூர்ர்ந்து கிட்ட பார்த்தால் என்ன என்று தெரிகிறது, நெல்லை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்லின் தன்மையால் அரித்திருப்பது போலத் தோன்றுகிறது கீதா ரங்கன். அந்த அத்துவானமான இடத்தில் இப்படிப்பட்ட அழகிய கோவிலா?

      நீக்கு
  11. இப்பலாம் பல வீடுகளில் டைனிங்க் ஹாலையும் ஹாலையும் பிரிக்க மரத்தினால் ஆன ஒரு தடுப்பு மடிந்து மடிந்து இருப்பது போல வைக்கிறாங்களே அது போல மடிச்சி மடிச்சு - வாமன அவதாரம் படங்களுக்கு கீழ ...சான்ஸே இல்லை மனதைக் கவர்கின்றன

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா. . எங்க வீட்டிலும் மடிப்பு மடிப்பு வச்சு பண்ணலாம்னு ஆரம்பிச்சு அப்புறம் பண்ணலை

      நீக்கு
  12. மடிப்பு அமைப்புஎல்லாமே பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. எப்படி இப்படிச் சின்ன சின்ன மடிப்புகள் ஒரு விரக்கடை இருக்குமா மடிப்பு?! ....சான்ஸே இல்லை. நான் போனேன் என்றால் தனியாகத்தான் போணும் இல்லைனா கூட வரவங்களுக்குப் பொறுமை நிறைய வேண்டும்!!!! ஆனால் குறித்துவைத்துவிட்டேன் லிஸ்டில். நடக்குதோ நடக்கலியோ...வைச்சுக்குவோம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா ரங்கன். இதை எழுதும்போது உஸ்மான் ரோடு தனிஷ்க் ல இருக்கேன். விலை கண்ணைக் கட்டுது

      நீக்கு
    2. ஓ இதுதான் அதுவா?:) நான் எங்கட தனுஷ் பற்றியும் ரி ஆர் டி பற்றியுமெல்லோ கீழே சொல்றீங்கள் என நினைச்சிட்டேன் ஹா ஹா ஹா .
      //விலை கண்ணைக் கட்டுது//
      ஹா ஹா ஹா நீங்க கண்ணைக் கட்டிக்கொண்டு பில்லைப் பே பண்ணுங்கோ:) அண்ணி செலக்ட் பண்ணுவா:).

      நீக்கு
    3. வாங்க அமைதி அதிரா (ஹா ஹா ஹா. இந்தப் பெயர் எனக்கு மாத்திரம்தான் தெரியுமாக்கும்..க்கும்..க்கும்)

      நான் துபாயில் 93ல், முதன் முதலாக எனக்கு ப்ரேஸ்லட் வாங்கிக்கொண்டேன் (தங்கம்). அதற்கு கிராமுக்கு 35 திர்ஹாம் (அல்லது 3.5 தினார்) கொடுத்தேன். (அப்போவே ஓரிரண்டு கிலோ வாங்கியிருக்கணும்). பஹ்ரைனில் அவ்வப்போது வாங்குவேன். என் மனைவியின் பிடிவாதத்தால் தங்கச் செயின்கள் வாங்கவில்லை (நெக்லஸ் கேட்டபோது செய்கூலி அதிகம் என்று வாங்காமல், அதற்குப் பதில் தங்கச் செயின் நிறைய வாங்கிக்கோ என்று சொன்னேன்..கேட்கலை ஹா ஹா). இப்போ சில பல கிராமில் இருக்கும் நகைகளைக் கூசாமல் ஒரு லட்சம் ரூபாய்னு சொல்றாங்க. வயிற்றெரிச்சலா இருக்கு.

      நீக்கு
    4. அங்கு இருந்தபோது, தங்கத்தின் தரத்தை அறிய இருக்கும் ஒரு மெஷின் இருந்தது. அங்கிருந்தவர் சொன்னார், உங்களிடம் இருக்கும் தங்க நகையைக் கொடுத்தால், இந்த் மெஷினில் அதன் க்வாலிட்டியைப் பார்த்து, உருக்கி, அதற்கு அன்றைக்குள்ள விலையில் எடுத்துக்கொள்வோம் என்றார். எங்களுக்கு முன் இன்னொருவர் அவருடைய நகையைத் தரம் பார்த்தபோது 84 சதம் தங்கம், 7 சதம் வெள்ளி, 8-9 சதம் காப்பர் என்று காண்பித்தது. உடனே ஆசையில் என் மனைவி, நான் பலப் பல வருடங்களுக்கு முன்பு துபாயில்/பஹ்ரைனில் வாங்கிய ஒரு வளையலைக் கழற்றி தரம் பார்த்தபோது 94 சதம் தங்கம், 5க்குச் சற்று மேல் காப்பர் என்று வந்தது. கடைக்காரர் இது நல்ல குவாலிட்டி தங்கம் என்றார்.

      நீக்கு
    5. இதுக்குப் பதில் கீழே தருகிறேன்.. எனக்கு லேட்டாத்தான் பல்ப் எரிஞ்சது:)... அது காசி விசுவநாதர் அமைதியாக்கிட்டார் அதிராவை:).. அவரை எட்டிக் குனிஞ்சு தடவிட்டேன் எல்லோ ஹா ஹா ஹா...

      நீக்கு
  13. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.

    பதிவு அருமை. கோவிலின் வெளிப்பிரகார சிற்ப படங்கள் அனைத்துமே நன்றாக உள்ளது. எவ்வளவு கலை நுணுக்கத்துடன் பொறுமையாக செதுக்கி உள்ளார்கள் என வியப்பாக உள்ளது. நட்சத்திர வடிவ மடிப்புகளிலும் அம்சமாக கலை நுணுக்கத்தை அவர்கள் கொண்டு வந்த திறன் பிரமிக்க வைக்கிறது. இறைவனார்களின் உருவங்களை கண்டு நமஸ்கரித்து கொண்டேன். எல்லாமே நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலாக்கா நலம்தானே, நான் இப்போ ரொம்ப அமைதியாகிட்டேன் தெரியுமோ:))

      நீக்கு
    2. கமலா ஹரிஹரம் மேடம்...நிறைய இறையனார்களின் உருவங்கள் வரும் வாரங்களில் வரும். தொடர்ந்து வாருங்கள்

      நீக்கு
  14. அற்புதமான சிற்பங்கள் . அதன் நேர்த்தி பார்க்கவே வியப்பாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  15. எங்கின விட்டேன் ஜாமீஈஈஈ... பத்து எனப் போட்டிருக்கிறார், நான் எப்போ வந்தேனோ அந்தக் காசி விசுவநாதருக்கே வெளிச்சம்...:)

    சிற்பங்கள் சிலைகள் எல்லாமே அழகு, படத்தில் பார்ப்பதில் பாதிதான் தெரியும், நேரில் தான் அதன் உண்மை அழகு புரியும்.

    இப்போ இலங்கை போனபோது, அங்கு, வட பகுதியில்.. ஒரு வித்தியாசம் தெரிந்தது, ஊர்களில் மக்கள், வீடுகள் குறைவாக இருக்குது, ஆனா அடிக்கடி கோயில்கள் தெரிகின்றன, அத்தனையும் அழகிய சிற்ப வேலைகளோடு கூடிய அழகிய கலர்கலராக கோபுரங்கள்...
    அது என்னவெனில், பொதுவாக இலங்கையில் முக்கால்வாசி தமிழ் மக்களும் வெளிநாட்டில் தான் இருக்கின்றனர், இப்போ சண்டை முடிந்தமையால், பணம் அனுப்பி அனுப்பி தம்மூர்க் கோயில்களை எல்லாம் பெரிசாக்கி விட்டிருக்கின்றனர், நம்மூர் மக்கள் ஆருக்குச் செய்கினமோ இல்லையோ, கோயில் என்றால் கொட்டிக் கொட்டிப் பணம் அனுப்புகிறார்கள், அதனால சின்னதாக இருந்த கோயிலெல்லாம் இப்போ கோபுரத்துடன் மிளிருது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் கோவில்களுக்குச் சென்று நெல்லைத்தமிழன் மாதிரி அழகழகாக படம் எடுத்துக் போடுங்களேன்...  ரசிப்போம்.

      நீக்கு
    2. கோவில் ஏன்பது நம் கலாச்சாரம். நம் வாழ்வுடன் பின்னிப் பிணைந்தது. அது சிதைந்தால் அடுத்த தலைமுறைக்கு நம் வாழ்வியலைக் கடத்த முடியாது

      நீக்கு
    3. ஆஆஆ இதுக்குத்தான் அப்பப்பவாவது அதிரா வரோணுமாக்கும் ஹா ஹா ஹா[பேஸ்ன்மெண்ட் வீக்கூஊஊ எண்டாலும் ஸ்ரெடியா நிற்பேனாக்கும்:]...

      அது ஒரேயடியா நிறையத் தரிசனம் செய்தோம் ஸ்ரீராம், வானில்[இது வேற வானாக்கும் வானம் அல்ல கர்ர்ர்ர்:)] போவது வாசலில் இறங்குவது, கோயில் திறந்திருந்தால் சுத்திக் கும்பிடுவது, பெரும்பாலும் நம் நேரத்துக்கு மூடியே இருந்தது, அதனால வாசலில் கற்பூரம் ஏற்றி விழுந்து கும்பிட்டு விட்டு ஓடிவந்து ஏறி அடுத்த கோயில் போவது இப்பூடித்தான் ஸ்ரீராம், ஆனாலும் முக்கிய பிரசித்தி பெற்றவைகள் வீடியோ எடுத்தேன்..

      புளொக்கிலும் போடுவேன் ஆனா அது எப்பவென்பது அந்த விசுவநாதரைத்தான் கேட்கோணும்:)

      நீக்கு
    4. அது உண்மைதான் நெல்லைத்தமிழன், ஆனா இது கொஞ்சம் போட்டியும் அதிகம், நம்மூர்க் கோயில் பெரிசாக இருக்கோணும் என எண்ணுகிறார்களோ என எண்ணத் தோணுமளவுக்கு கோயில்கள்...
      யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் திருக்கேதீஸ்வரம் போனோம், இப்போ சூப்பர் மெயின் ரோட் போட்டிருக்கினம், போகப்போக வீடுகள் மக்களைக் காணவில்லை ஆனா கோபுரங்கள் அழகழகாக மின்னின.

      ஊரில் குட்டியாக இருந்த கோயில் எல்லாம் இப்போ பெரிய கோயிலாக மாறியிருக்கு. எங்கு போவது எதைக் கும்பிடுவது என்றாகியிருந்தது..

      நீக்கு
    5. நானும் நிறைய புனருத்தாரணம் (சீரமைப்பு செய்து வண்ணப் பெயிண்டுகள் அடித்த) செய்த பல கோவில்களைப் பார்த்தேன். மன்னார்குடி அருகிலுள்ள கோவில்களின் கோபுரங்களை உற்றுப் பார்த்தபோது, அதில் ஒரு பேட்டேர்ன் தெரிந்தது. அதாவது கோபுரத்தின் ஆரம்பத்தில் வலது புறம் என்ன சிற்பம், மத்தியில் என்ன சிற்பம். இடது புறத்தில் என்ன சிற்பம் என்பது கிட்டத்தட்ட ஒன்றே போல இருந்தது. அதற்கான சிற்ப சாஸ்திரங்கள் இருந்திருக்கின்றன. ஆனால் சிற்பங்களின் அழகில் ஒவ்வொரு கோபுரத்திற்கும் வித்தியாசம் தெரிந்தது. கலைக்கண்களோடு இங்க வாங்க. எபி ஆசிரியர்கள் (வேற யாரு.. நம்ம கழுகுக் கண் கௌதமன் சார்) அனுமதித்தாங்கன்னா அவற்றின் படங்களைப் பகிர்கிறேன்.

      நீக்கு
    6. //குட்டியாக இருந்த கோயில் எல்லாம் இப்போ பெரிய கோயிலாக மாறியிருக்கு.// - அதிரா.... நம்ம ஊர் நிலம், நம்ம ஊர் கலாச்சாரம்.. நாம்தான் அங்கே வாழ வழியில்லாமல் புலம் பெயர்ந்துவிட்டோம்..அதற்காக அவற்றை அப்படியே விட்டுவைத்து மறைந்துவிடும்படியாகச் செய்துவிடக் கூடாது என்று புலம் பெயர்ந்தவர்கள், தாங்கள் உழைத்துச் சேர்த்த பணத்திலிருந்து தங்கள் வேர்கள் இருந்த ஊரின் கோவில்களைச் சீர் படுத்துகிறார்கள், பெரிதுபடுத்துகிறார்கள். நிச்சயமாகப் பாராட்ட வேண்டிய செயல். அவர்களை என் மனம் வாழ்த்துகிறது.

      நீக்கு
    7. நல்ல விஷயங்களில் போட்டி இருப்பது நல்லதுதானே அதிரா? போட்டி இல்லாவிட்டால், இரண்டு பேர்கள் ஓடிய 1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் உங்களை முந்திக்கொண்டு ஒருவர் முதல் பரிசு வாங்கியிருக்க முடியுமா?

      நீக்கு
    8. //இரண்டு பேர்கள் ஓடிய 1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் உங்களை முந்திக்கொண்டு ஒருவர் முதல் பரிசு வாங்கியிருக்க முடியுமா?//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நீங்க அதை இன்னும் மறக்கவே இல்லை:), அது என்னை ஆரும் முந்தவில்லையாக்கும்:), நான் 3 வதாகப் போய்க் கொண்டிருந்தேன், முக்கால்வாசித்தூரத்தில் 2 வதாக ஓடிய பிள்ளை கால் தடக்கி விழுந்திட்டா:), அப்போ நான் எடுத்தேன் பாருங்கோ ஒரு ஸ்பீட்டூஊஊஊஊ ஹா ஹா ஹா அதனால 2 வதாக வந்திட்டேனாக்கும்.. இதைத்தான் விதி என்போம் ஹா ஹா ஹா.

      நீக்கு
    9. கோயில்கள் பற்றிய உங்கள் கருத்து உண்மைதான். ஆனா குறை சொல்ல முடியாது, நம்மவர்கள் வெளிநாட்டில் இருந்து நிறைய ஊர் மக்களுக்கும் உதவுகின்றனர், இம்முறை நாமும் பல இடங்கள் சென்று அவர்களைச் சந்தித்தோம், பணம் கொடுத்தோம், அவர்களும் தாம் செய்யும் கைவினைப் பொருட்கள், மிளகாய் வடகம் இப்படி எல்லாம் தந்தார்கள், இப்படியானோரை ஊக்குவிக்கி வெளிநாட்டில் பழைய மாணவர் சங்கம் அமைச்சு இயங்கிக் கொண்டிருக்குது. நிறையச் சொல்லலாம்... இங்கு எதுக்கு என விட்டிடுறேன்.

      நீக்கு
  16. என்ன இது வரவர நெல்லைத்தமிழன் ஸ்ரீராம் மாதிரி மாறிட்டார்ர்...:)

    ஒருவரிப் பதிலுக்குச் சொன்னேன்.. எனக்கெதுக்கு ஊர் வம்பு, மீ காசிக்குப் போய் ரொம்ப அமைதியாகிட்டேனாக்கும்... சரி சரி மீண்டும் சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் அடுத்தடுத்த சுற்றுப்பயணத்தில் இருக்கிறார் சந்திராயன்..  அதுதான் பிஸியாக்கும்!

      நீக்கு
    2. அமைதி அதிரா... நலமா? நான் சென்னைக்கு வந்திருக்கிறேன். நிறைய வேலைகள். நாளை இரவு எல்லோருக்கும் எழுதுவேன்

      நீக்கு
    3. ஒரு பெயரை வைத்துக்ஙொண்டபின் பதிவு எழுதாமல் புதுப்பெயர் வைத்துக்கொள்ளக்கூடாது

      நீக்கு
    4. //
      ஸ்ரீராம்.27 ஆகஸ்ட், 2023 அன்று பிற்பகல் 6:59
      /// சந்திராயன்.. //
      ஹா ஹா ஹா ஆவ்வ்வ்வ்வ் இப்போ என் செக் இங்கின இல்லையே.... காதில தேனாப்பாயுதே என் புயுப் பேர்:)..

      நெல்லைத்தமிழன் ரிரயேட் ஆகிட்டார்போல எங்களுக்குச் சொல்லாமல்[பிறகு வயசாகிட்டுது எனச் சொல்லிட்டாலும் எனப் பயம்:)] அதனாலதான் இப்போ ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறார்போலும்.. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்பு மீ ரொம்ப அமைதியான பொண்ணூஊஊஊஊ:)

      நீக்கு
    5. ஆ நெல்லைத்தமிழனை வரவச்சிட்டேன்... யேச்ச்ச்ச் மீ இப்போ ரொம்ப அமைதியாகிட்டேன்:)... வேலைகளை முடிச்சிட்டு வாங்கோ பழகலாம் சே சே டங்கு ஸ்லிப்பாகுதே பேசலாம்:)..

      //ஒரு பெயரை வைத்துக்ஙொண்டபின் பதிவு எழுதாமல் புதுப்பெயர் வைத்துக்கொள்ளக்கூடாது//
      ஆமா ஆமா கூடாதுதேன்:) அந்தப் பழக்கம் எங்கட பரம்பரைக்கே கிடையாதாக்கும் ஹா ஹா ஹா... இது இடையில ச்சும்மா வச்சேன், ஒரிஜினல் பெயர் வரப்போகுது பாருங்கோ புதுப் போஸ்ட்டுடன்:)..[ஆண்டவா அது எப்போ அரங்கேறுமோ:)]

      நீக்கு
    6. //அதனாலதான் இப்போ ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறார்போலும்.. // இது மகளுக்கான பிரயாணங்கள். நேரம் வரும்போது தெரிவிக்கிறேன். ஆனால் அதற்கு அடுத்த தமிழ் வருடம் வரை காத்திருக்கவேண்டும்.

      நீக்கு
    7. /இது இடையில ச்சும்மா வச்சேன், ஒரிஜினல் பெயர் வரப்போகுது பாருங்கோ// - ஹல்ல்ல்ல்ல்லோ... "அமைதி அதிரா' என்று பெயர் வைத்துக்கொண்டீர்கள். ஆனால் ஒரு பதிவும் எழுதாமல், சட் என்று 'சந்திராயன் 4? அதிரா' என்று வைத்துக்கொண்டுவிட்டீர்களே. ஒருவேளை சந்திராயன் 4ஐ அனுப்பும்போதுதான் அடுத்த பதிவு என்று முடிவெடுத்துவிட்டீர்களோ?

      நீக்கு
    8. என்னாது அடுத்த தமிழ் வருடம் எனில் சித்திரையோ தையோ தெரியல்லியே:)))... அது சந்திராயன் 4 அனுப்புவது பற்றி மோடி அங்கிளோடு காசியில வச்சுப் பேச்சு வார்த்தை நடத்திப் போட்டு வந்தேனாக்கும்:)

      நீக்கு
  17. ஆஆஆஆஆ இங்கின நான் போட்ட பெரிய கொமெண்ட்டைக் காணம்.. ஸ்ரீராம் உள்பெட்டியைச் செக் பண்ணுங்கோ பிளீஸ்ஸ்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரோவரை விட்டு தேடி கொண்டு வந்து போட்டுட்டேன் சந்திராயன்...

      நீக்கு
    2. ஹா ஹா ஹா பெயர் கூப்பிடுவது பார்க்க சந்தோசம் பொயிங்குதே... அந்த 4 ஐ விட்டிட்டீங்க ஸ்ரீராம்:)

      நீக்கு
  18. நான் நாளை இரவு பெங்களூர் வந்து சேருவேன். பிறகு பதிலெழுதறேன். நல்லி ஜிஆர்டி தனுஷ்க் என்று நான் பிசி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நல்லி ஜிஆர்டி தனுஷ்க் என்று நான் பிசி.///

      இதென்ன இது கோயில்ப் பெயர்கள்தான் வாயில நுழையாமல் எழுதுறார் எனப் பார்த்தால் இதுவும் உச்சரிக்க முடியல்லியே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. சே சே இதாலதான் தமனாக்கா விட்டிட்டுப் போயிட்டாபோல :) ஹையோ ஆண்டவா மீ ரொம்ப அமைதியான பொண்ணு:)

      நீக்கு
    2. நல்லி குப்புசாமி செட்டி கடை - சென்னையில் மிக மிகப் பெயர்பெற்ற பட்டுபுடவைக் கடை. (இந்திராகாந்திக்கு இங்கிருந்துதான் புடவைகள் வாங்கி அனுப்புவாங்களாம்). அங்கு போய் புடவைக் கடலைக் கண்டு, நம்மாலான ஆலோசனைகளை மகளுக்குச் சொல்லி, அவளும் வாங்கி, பிறகு இரவில், உங்களை ஒபினியன் மட்டும்தானே கேட்டேன், இந்தப் புடவை சூப்பர் இதுவே வாங்கு என்று ஏன் சொன்னீர்கள், சில நாட்களுக்கு முன்னால்தான் இதுபோல நிறமுடைய புடவை வாங்கினேன், எனக்கு லைட் வயலெட் நீல நிறமுடைய புடவைதான் பிடித்திருந்தது என்று குண்டைப் போட்டு, என் 'கர்ர்ர்ர்ர்ர்ர்' வாங்கி, மறுநாள் காலையில் போய் மாற்றிவந்தோம்.

      தனுஷ்க் - டாடாவின் தங்க நகைக்கடை. Just 21 percent making charges என்று மகள் சொன்னால். எனக்கோ 'அடப்பாவீ' என்று தோன்றியது. கொள்ளையடிக்கவே பல கடைகள் சென்னையில் உருவாகியிருக்கின்றன.

      ஜி.ஆர்.டி தங்க நகைகள் - நான் 90ல் முதல் வேலைக்குப் போன போது 4 மாதங்கள் பணம் சேர்த்து 10,000 ரூபாய்க்கு ஒரு நவரத்ன மோதிரம் வாங்கினேன். அதனால் ஜி.ஆர்.டி கடை எனக்குப் பிடித்தமானது.

      நீக்கு
    3. இந்தக் கடைகளில் நயனதாரா பிராண்ட் அம்பாசிடராக இருக்காஹ. வயசான திரிஷா இருக்காஹ... ஆனால் தமன்னாவைப் பார்க்க முடியவில்லையே.

      நீக்கு
    4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    5. எதுக்கு கீசாக்கா போட்டிட்டு எடுத்திட்டா கர்ர்ர்ர்ர்ர்ர்:))
      //////////////////////////////////////////////////////////////////////////////////.

      நெல்லைத்தமிழன்///
      //நல்லி ஜிஆர்டி தனுஷ்க் என்று நான் பிசி.///

      அது நெல்லைத்தமிழன் இடைவெளி , கமா எதுவும் போடாமல் பெயர் போட்டமையால மீக்குப் புரியல்லே:)..

      நல்லி, ஜி ஆர் டி.. எனக்குத் தெரியாது, ஆனா தனுஸ்க் தெரியுமே.. அங்கு நான் வாடிக்கையாளராகிட்டேன் தெரியுமோ ஹா ஹா ஹா.

      டெல்லியில் ஒரு மோல்போல 3 மாடிக் கட்டிடம் இருக்குது, செக்கியூரிட்டி எல்லாம் போட்டு ஒரு அளவான மோல். அங்கு முழுவதும் நகைக்கடைகள், மெயினா டைமன் வாங்க அங்குதான் போவார்கள். அங்கு தான் தனுஸ்க் இருக்குது, கல்யாணி ஜூவலரியும் இருக்குது[பெயர் சரி எனத்தான் நினைக்கிறேன்]..
      அந்த தனுஸ்க் இல் தான் டைமன் நெக்லெஸ் எனக்கு கிடைச்சு, என் ஆசை பூர்த்தியாகிட்டுது ஹா ஹா ஹா. அத்தோடு, தோடு, சங்கிலி என கொஞ்சம் நகைகள் வாங்கினேன், கிவ்ட்டுக்காகவும், அவை கல்யாணியில், ஏனெனில் தனுஸ்க் இல் டைமன் செலக்சன் அதிகம், கல்யாணியில் தங்கம் பற்றன்ஸ் அதிகமாக எனக்கு தெரிஞ்சுது.

      நீங்க சொன்னதைப்போல, என் கணவரின் சித்தப்பா ஒருவர் அவர் எஞ்சினியராக பல வருடம் சவூதியில் வேலை பார்த்து இப்போ ரிரயேட் ஆகி, கனடாவில் இருக்கிறார். எங்கட திருமணத்துக்கு சவூதியில் இருந்து வாங்கி, 4 பவுணில் ஒரு சங்கிலி எனக்குப் போட்டார்..
      அதை இப்போ கொடுத்துப் புதுச் சங்கிலி வாங்கினேன், அந்த கல்யாணியில், அவர்களும் சங்கிலியைப் பார்த்தவுடன் ஒரு விலை மதிப்பு போட்டார்கள், பின்பு உள் அறைக்குள்ளே கூட்டிச் சென்று, அதைக் கண்முன்னே உருக்கி[எவ்ளோ கவலையாக இருந்தது தெரியுமோ:(..., இத்தனை வருடமாக வைத்திருந்ததை இப்படி பொசுக்கென உருக்கீனமே என..] குட்டி பிஸ்கட் போல காட்டிச்சினம்.

      பின்னர் கழிவு இல்லை என்பதைப்போல சொல்லி[சரியாக நினைவில்லை].. பார்த்ததும் சொன்ன விலையை விட, விலையைக் கூட்டி எடுத்தார்கள்...

      இம்முறையும் தனுஸ்க் போய் அம்மாவுக்குத் தோடு வாங்கிக் கொடுத்தோம் கிவ்ட்டாக.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!