வியாழன், 3 ஆகஸ்ட், 2023

எழுக வருக பொலிக

 ஒரு சம்பவம் எத்தனை பாடங்களை சொல்லும்?  எத்தனை நினைவுகளைக் கிளறி விடும்?

நடக்கும்போது தெரிவதில்லை, இது பின்னர் பல நாட்களுக்கு நினைக்கப்படும் என..நாமே உணர மாட்டோம்.  அந்த சமயத்தில் அந்தப் பிரச்னையை சமாளித்தால் போதும் என்று நினைப்போம்.

வரும் உலகக் கோப்பை ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவு அணி விளையாடாது என்கிற செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.  அந்த அணி நெதர்லாண்ட்ஸிடம் தோற்றது ஒரு மகா அதிர்ச்சி.

முன்னர் இருந்த மேற்கிந்தியத்தீவு அணிகளை நினைத்துப் பார்க்கிறேன்.  லாயிட், காளிச்சரன், கிரீனிட்ஜ், ஹெயின்ஸ், லோகி, ரிச்சர்ட்ஸ், அம்ப்ரோஸ், வால்ஷ் , பீட்டர்சன், மார்ஷல், ஜோயல் கார்னர்...

சமீபத்தில் படித்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம்.

1988 ம் வருடம் மேற்கிந்தியத்தீவு அணிகளுடன் பரீட்சை விளையாட்டு - ஹிஹிஹி  டெஸ்ட் மேட்ச்சைச் சொல்றேன் - விளையாட பாகிஸ்தான் அணி பார்படோஸ் சென்ற சமயம்.

முதல் சோதனை விளையாட்டில் -  ஹிஹிஹி இப்பவும் டெஸ்ட் மேட்சைதான் சொல்றேன் - பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தோல்வி என்பதையே பார்த்திராத மேற்கிந்தியத் தீவுகள் அணியை பாகிஸ்தான் வென்று விடுகிறது.  காயம் பட்டிருந்ததால் அதில் சிங்கம் விளையாடவில்லை.  சிங்கம் என்றால் யார் தெரியும்தானே?  விவியன் ரிச்சர்ட்ஸ்.

அணியின் நிலையைப் பார்த்து இரண்டாம் டெஸ்ட்டில் அவர் விளையாட வந்து விடுகிறார்.  அந்த டெஸ்ட் டிரா ஆகிறது.  அந்த டெஸ்ட்டில் ஒரு சம்பவம்.

ரிச்சர்ட்ஸ் வந்ததும் அவரை அவுட் எடுக்க போராடுகிறார்கள் பாகிஸ்தான் பௌலர்கள்.  அது அவ்வளவு எளிதல்ல.  ரிச்சர்ட்ஸ் பற்றி தனியாக நாலைந்து போஸ்ட் போடலாம்.  அவ்வளவு ரசிக்க வைக்கும் ஆட்டக்காரர் அவர்.  (யாருங்க நீனா குப்தான்னுல்லாம் குரல் கொடுக்கறது...   தள்ளிப் போங்க...  )

ஒரு கட்டத்தில் ரிச்சர்ட்ஸுக்கு பந்து வீச வாசிம் அக்ரமை அழைக்கிறார் பாகிஸ்தான் கேப்டன் இம்ரான்.  அக்ரமுக்கு வயது அப்போது 21.  அப்போதுதான் உள்ளே நுழைந்திருந்த இளங்கன்று, இளம் புயல்.

பௌன்ஸர்களாக வீசி ரிச்சர்ட்ஸை நிறுத்தி வைக்கும் அக்ரம், ஸ்லெட்ஜ் எனப்படும் வார்த்தை விளையாட்டிலும் இறங்குகிறார்.  பந்து வீசிய பின் ரிச்சர்ட்ஸ் அருகில் சென்று எரிச்சலைத் தூண்டி விடக்கூடிய வார்த்தைகளை உதிர்க்கிறார்.

"ஏய் கிழடு..  உள்ளே போ..  இனி உன்னால் எல்லாம் ஆடமுடியாது.." என்பது போன்ற வார்த்தைகளை எல்லாம் உதிர்க்கிறார்.

ரிச்சர்ட்ஸ் "அப்படி எல்லாம் பேசாதே...  தவறு" என்று எச்சரிக்கிறார்.  கேப்டன் இம்ரான் அக்ரமை ஊக்குவிக்கிறார்.  "நீ செய் ராஜா..  நானிருக்கேன்" என்கிறார்.

அக்ரமும் வார்த்தைத் தாக்குதல்களைத் தொடர, ஒருமுறை ரிச்சர்ட்ஸ் அணிந்திருந்த தொப்பி, வாசிம் வீசிய பந்து பட்டு பறக்கிறது.  இங்கு சொல்ல வேண்டிய விஷயம் என்ன என்றால் ரிச்சர்ட்ஸ் எந்த நாட்டு பௌலர்கள், எவ்வளவு அச்சுறுத்தும் வகையில் பந்து வீசினாலும் தலைக்கவசம் அணியும் வழக்கமில்லாதவர்.  தொப்பி கீழே விழுந்ததே பெரிய விஷயம்.

வாசிம் அடுத்த முறை வார்த்தைகளை விரயம் செய்தபின் அருகில் வந்த ரிச்சர்ட்ஸ் "உன்னை கிரௌண்டுக்கு வெளியே பார்த்துக் கொள்கிறேன்" என்று சொல்லி விட்டு விளையாடி இருக்கிறார்.

மாலை அன்றைய ஆட்டம் முடிந்து உடை மாற்றும் அறைக்கு அணிகள் சென்று விட, திடீரென வாசிம் அக்ரம் காதில் ஒரு குரல் கேட்டது..  "வாசிம்..  வெளியே வா... "  ஒருமுறை அல்ல, இருமுறை அல்ல பல முறை குரல் கேட்டதும் வாசிம் வெளியே பார்க்க, அங்கு ரிச்சர்ட்ஸ் பேண்ட்ஸ், சட்டை, பனியன் அணியாமல்,---  இருங்கள்...  இருங்கள்..   டிராயர் மட்டும் அணிந்து கையில் பேட்டுடன் நின்றிருக்கிறார்.

பதறிப்போன வாசிம் இம்ரானிடம் ஓடி, 'உதவுங்கள்... என்ன செய்வது?' என்று கேட்க, 'என்னைக் கேட்டால்? அது உன் பிரச்னை..  நீ பார்த்துக் கொள்' என்று கைகழுவி விட்டாராம்.

ரிச்சர்ட்ஸ் கூப்பிட்டுக் கொண்டே இருக்க, வாசிம் மெல்ல அடிமேல்அடி வைத்து வெளியே வந்தாராம்.

மெல்ல ரிச்சர்ட்ஸ் அருகே சென்றவர், இனி வரும் காலங்களில் இதுபோல கட்டாயம் நடக்காது என்று உறுதி கொடுத்தாராம். அதே போல அப்புறம் ரிச்சர்ட்ஸிடம் அவர் வார்த்தையாடவில்லை.  ரிச்சர்ட்ஸ் கொஞ்ச நேரம் வாசிமை உறுத்துப் பார்த்து விட்டு, "செயயாதே..  செய்தே...  கொன்னுடுவேன்" என்று சொல்லி விட்டு நகர்ந்தாராம்.  வேறு எவரிடமாவது அப்புறம் வாசிம் அக்ரம் இப்படி ஸ்லெட்ஜ் செய்தாரா என்றும் நினைவில்லை.  ஆனால் இது தனக்கு சரியான பாடம் என்று பல இடங்களில் சொல்லி இருக்கிறார் வாசிம்.


எனக்கு ரிச்சர்ட்ஸை ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.  வாசிமையும் பிடிக்கும்.

இப்போ சில கேள்விகள்..

ரிச்சர்ட்ஸ் இப்படி ட்ரெஸ்ஸிங் ரூம் சென்று மிரட்டியது, சண்டைக்கு அழைத்தது சரியா?  அதற்கு முன்னால் வாசிம் செய்தது சரியா என்று கேட்டால், தவறு என்றாலும் நிறைய பௌலர்கள் செய்வதுதான்.  பாடிலைன் கேம்ஸே பார்த்தவர்கள் நாம்!

இம்ரான் கைவிட்டது சரியா?  கைவிடவில்லை, வாசிமுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தார்.  தன் பிரச்னைகளை தானே சமாளிக்கக் கற்றுக் கொடுத்தார் என்று சொல்வோர் உண்டு.

சட்டென சரண்டர் ஆனது வாசிமின் ராஜதந்திரமா, பயமா, நாகரீகமா?

சமீபத்தில் நடந்த கோலி, காம்பிர் சண்டை நினைவுக்கு வருகிறது.  கேவலமாக அடித்துக் கொண்டார்கள்.  இன்சமாம் ஒருமுறை பேட்டை எடுத்துக் கொண்டு ஒரு ரசிகரை அடிக்க, கேலரிக்குள் நுழைந்து, சேர்களில் ஏறி சென்றதும் நினைவுக்கு வருகிறது.

இந்த சம்பவம் சுவாரஸ்யமானதுதான்.  இதை விடுங்கள்.  மற்றவர்களை இப்படி அணுகுவது பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன?

இன்னொரு சுவாரஸ்யமான கிரிக்கெட் சம்பவமும் சொல்ல ஆசைப்படுகிறேன்....

=========================================================================================


1973இல் திண்டுக்கல் இடைத்தேர்தல் நடந்தபோது, பழ.நெடுமாறன் மதுரை மாவட்டத் தலைவராக இருந்தார். அந்த பகுதியில் சுந்தர ராஜன் சேர்வை என்று ஒருவர் இருந்தார். திண்டுக்கல் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்கென்று பொறுப்பு ஒப்படைக்க பட்டவர்களில் நானும் ஒருவன். திண்டுக்கல் இடைத்தேர்தல் 1973 மே மாதம் 20ஆம் தேதி நடந்தது. அதற்கு ஏழு நாட்களுக்கு முன்பு, பாலமேட்டின் பக்கத்தில் அலங்காநல்லூரில் இருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் மாணிக்கம்பட்டி என்ற ஊரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம். நான் அலங்காநல்லூரில் ஒரு லாட்ஜில் தங்கி இருந்தேன். எனக்குத் தனியாக ஒரு கார் கொடுத்திருந்தார்கள். நான் சாயந்தரம் கிளம்பி ஏழு எட்டுக் கூட்டங்களில் பேசி விட்டு இரவு அலங்காநல்லூர் லாட்ஜுக்கு வந்து விடுவேன்.
மாணிக்கம்பட்டியில் ராத்திரி 11 மணிக்கு பொதுக் கூட்டத்தில் நான் பேசிக் கொண்டிருந்தேன். 40 - 50 பேர் கூட்டத்தில் அமர்ந்திருந்தார்கள். அப்போது திடீரென்று ஒரு அம்பாசிடர் கார் வந்து நின்றது. அந்தக் காரில் இருந்து காமராஜர் இறங்குவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. காரில் இருந்து இறங்கி நேராக மேடையில் வந்து உட்கார்ந்தார்.
காமராஜரை நான் கூட்டங்களில் பார்த்திருக்கிறேன். மாநாடுகளில் தலைவர்கள் எல்லாம் வருவதற்கு முன் பேசி இருக்கிறேன். அதன் பின் பெருந்தலைவர் வந்து அமர்வார். சற்று தூரத்தில் இருந்து பார்த்திருக்கிறேன். குமரி அனந்தன் அய்யாவோடு பல கூட்டங்களில் பேசி இருக்கிறேன்.
பெருந்தலைவர் நான் பேசும் கூட்டத்தில் அருகில் வந்து அமர்வார் என்று நான் நினைக்கவில்லை. அவர் வந்து அமர்ந்த உடன் அவரது ஆட்சிகால சாதனைகள் அனைத்தையும் தொகுத்து கவிதை நடையில் அழகாகப் பேசினேன். அவர் என்னைப் பாராட்டுவார் என்று நினைத்து ஆக்கிரோசமாகப் பேசினேன்.
என்னைப் பாதியில் நிறுத்தி விட்டு மைக்கை வாங்கி பேசினார். மைக் செட் சரியாக வேலை செய்யவில்லை. மைக் செட் காரரைத் திட்டி விட்டு, ஒரு வழியாகப் பேசி முடித்தார்.
பிறகு என்னை விசாரித்தார். எந்த ஊர் என்ன செய்கிறாய் என்று கேட்டார். அதன் பிறகு எப்படி போகப் போகிறாய் என்று கேட்டார். எனக்கு கார் இருக்கிறது என்றேன். "உன் கார் பின்னால் வரட்டும், நீ என்னுடன் வா!" என்று சொல்லி தன்னுடைய காரில் ஏற்றிக் கொண்டார். அப்படி ஒரு நல்ல வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை.
காரில் போகும் போது என்னைப்பற்றிக் கேட்டுக் கொண்டே வந்தார். அந்த இரவில் அவருடன் பயணித்த அந்த 20 நிமிட நேர பயணத்தில் என் வாழ்க்கை தலை கீழாக மாறியது.
அவர் என்னிடம் என்ன சொன்னார் தெரியுமா? "இப்போது என்ன சுதந்திரப்போராட்டமா நடக்கிறது?" என்று கேட்டார்."உன்னை மாதிரி வயதில் இருக்கும் பத்தாவது படிக்கிற ஒருத்தன், எல்லா வேலையையும் விட்டுவிட்டு, ராத்திரி பதினொரு மணிக்கு மீட்டிங் பேச வேண்டிய தேவை என்ன?" என்று கேட்டார்.
அதற்கு நான், "உங்களால் ஈர்க்கப்பட்டு தான் தேர்தல் வேலை செய்கிறேன். என் தந்தை உங்களைப்பற்றி உங்கள் நேர்மையைப் பற்றிச் சொல்லிச் சொல்லி என்னை வளர்த்தார்." என்றேன்.
உடனே அவர், "உனக்கெல்லாம் கார் கொடுத்துக் கெடுத்து விட்டார்கள்." என்றார். பிறகு, "நாங்கள் எல்லாம் பள்ளியில் படிக்காமல் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டோம். இப்போது சுதந்திரப் போராட்டமா நடக்கிறது? ஒரு இடைத்தேர்தல் தானே நடக்கிறது!" என்றார்.
பொதுவாக அந்த வயதில் நான் மேடையில் பேசினால் மாலை போட்டு, பொன்னாடை போர்த்தி, இவ்வளவு சின்னப்பையன் அருமையாகப் பேசுகிறானே என்று சந்தோஷப் படுவார்கள். ஆனால் அன்று என்னை பாராட்டாதது மட்டுமின்றி, திட்டிக் கொண்டே வந்தார்.
"உன்னைப் போன்றவர்களை தவறாக வழி நடத்தி விட்டோமோ என்று கவலைப் படுகிறேன்." என்று சொல்லிக் கொண்டே வந்தவர் என் முக வாட்டத்தைக் கவனித்தோ என்னவோ, திடீரென்று, "உனக்குப் பொது வாழ்க்கையில் அக்கறை இருக்கிறதா?" என்று கேட்டார். அதற்கு நான்,"ஆமாங்க அய்யா!" என்றேன். "அப்படியென்றால் ஒன்று செய். இந்த மாதிரி வேலைகளையெல்லாம் விட்டு விட்டு, நல்லா படிச்சி ஐஏஎஸ் எழுது. ஒரு கலெக்டர் ஆகிவிடு!" என்றார். அதன்பிறகு அவர் எப்படி ஐஏஎஸ் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பார் என்பதை விளக்கினார்.
அப்போது நான் அரைக்கால் சட்டை போட்டிருந்த பையன். என்னைப் பார்த்து முதன்முதலாக ஐஏஎஸ் என்ற வார்த்தையை என் காதுகளில் உச்சரித்த ஒரே மனிதர் அவர்தான். இன்று வரை யோசித்து, யோசித்துப் பார்க்கிறேன். அவரைப் பற்றிப் பேசும்போது என் கண்களில் நீர் வந்து விடக் கூடாதே என்று கட்டுப்பாடாகப் பேச முயற்சி செய்வேன்.
இன்று வரை நான் யோசித்து யோசித்துப் பார்ப்பதுண்டு. அவர் ஏன் அப்படி என்னிடம் சொன்னார்! அவர் என்னைப் பாராட்டவில்லை. நன்றாகப் பேசினேன் என்று சொல்லவில்லை. நான் பேச வந்ததற்காகக் கண்டித்தார்.
ஒரு சின்னஞ்சிறுவனிடம் ஐஏஎஸ் எழுதச் சொன்னார். அதன் பின் நான் வளர்ந்து, படித்து, முதல்முயற்சியிலேயே ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றேன். அதுவும் பி.ஏ.தமிழ், எம்.ஏ.தமிழ் என்று தமிழ் இலக்கியம் படித்து ஐஏஎஸ் எழுதிய முதல் மாணவன் என்ற வரலாற்றைப் படைக்கக் காரணமாக இருந்தவர் பெருந்தலைவர் காமராஜர். அவரது ஒற்றைச் சொல் தான் என்னை ஐஏஎஸ் அதிகாரி ஆக்கிற்று.
அலங்காநல்லூரில் நான் தங்கி இருந்த லாட்ஜின் முன்னால் ஒரு கால்வாய் மீது சின்ன பாலம் உண்டு. அந்த பாலத்தின் அருகில் கார் நின்றது. "இங்கிருந்து நான் போய் விடுகிறேன் அய்யா!" என்றேன். என்னுடைய கார் பின்னால் வருகிறதா என்று சற்று நேரம் காத்திருந்து, கார் வருவதை உறுதி செய்து கொண்டு, அதன் பிறகு புறப்பட்டுச் சென்றார்.
அவர் கார் சென்ற பின்பும், அந்த பிரமிப்பில் இருந்து மீளாதவனாக சற்று நேரம் நின்றிருந்தேன். என்னையே நம்ப முடியவில்லை.
காரில் வரும்போது திண்டுக்கல் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்று கூட என்னிடம் சொல்லி விட்டார். ஆனால் அதை நான் யாரிடமும் சொல்லவில்லை. அவருடனான எனது அந்த சந்திப்பு இன்று வரை என் வாழ்க்கையை வழி நடத்திக் கொண்டிருக்கிறது.
ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்
இணையத்தில் இருந்து எடுத்தது  நன்றி R கந்தசாமி சார்...

==============================================================================================

சென்னையில் பார்த்த தனியார் பேருந்தில் எழுதி இருந்த வாசகம்..


கோராவில் பார்த்து, படித்து ரசித்த ஒரு ஜோக்...


=======================================================================================================

இணையத்தில் படித்த ஒரு பழைய பாடல்  பாசுரம் முதல் வரியே என்னை ஈர்த்து, இதை எழுத வைத்தது...

வருக வருக வருக 
தண்மேகங்கள் வானில் மிதந்து 
தாய் தன் குழந்தைக்கு அமுதூட்ட 
விரைவது போல கடுகி வந்து 
இனியும் வறட்சியில்லை, வறுமை இல்லை என 
தருக தருக தருக 
பசித்த குழந்தைக்கு பாலாய் 
பசித்த வயிற்றுக்கு சோறாய்
வறண்ட நிலங்கள் ஈரமாய் நனைய 
பொழிக பொழிக பொழிக 
மனம் குழைய மண் குழைய 
மரம் செடிகொடி வளர்ந்து தழைத்து 
பாங்குடனே பசுமைக்காடாய் பூமி மாற 
வறண்டுபோன நிலத்தில் வாழ்ந்து 
மறந்துபோன மனிதம் மறுபடி மனதில் 
உருக உருக உருக 
வெப்பத்தால் வெறுப்பால் நிரம்பிய மனங்கள் 
தட்பத்தால் மண் இளகியது போல 
மனமும் இளக காருண்யம் பெருக 
தண்மையாலும் நன்மையாலும் உலகம் முழுவதும் 
பொலிக பொலிக பொலிக 
அறம் தழைக்க நல்லெண்ணம் வேண்டும் 
மரம் வைத்தால் நல்மழை கூடும் 
வளங்களால் நாட்டைச் செழிக்க வைக்க 
உள்ளங்களை உண்மையால் நிறைத்து 
ஏ இளைய சமுதாயமே 
இனிவரும் காலம் நம் காலம் 
மண்ணைக்காப்போம் மணலைக் காப்போம் 
மழைநீரை சேமிப்போம் 
நா நிலம் முழுவதும் நம் ஒரு வீடாய் நினைப்போம் 
சண்டை மறுப்போம் சமாதானமாய் வாழ்வோம் 
ஜாதியின்றி மதமின்றி மாச்சர்யங்களின்றி 
எழுக எழுக எழுக 
வருக வருக வருக 
பொலிக பொலிக பொலிக 

============================================================================================


நியூஸ் ரூம் 
பானுமதி வெங்கடேஸ்வரன் 
இந்தியாவிலேயே புலிகள் எண்ணிக்கையில் மத்திய பிரதேசம் முதலிடம் வகிப்பதில் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பெருமிதம் 

காரைக்குடியில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின்‌ இறுதியில் அம்மன் பாடலை ஒலிபரப்பிய பொழுது அருள் வந்து ஆடிய பெண்கள்; அவர்களுக்கு கற்பூர ஆரத்தி எடுத்து கும்பிட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் - நல்ல திராவிட மாடல்தான்!

இனி சவுதி அரேபியாவோடு நம் நாட்டு கரன்சியிலேயே வியாபாரம் செய்யலாம்.

சமூக வலைத்தளத்தில் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியதை அடுத்து 18 வயது காதலனை தேடி 21 வயது சீனப் பெண் பாகிஸ்தான் சென்றுள்ளார்- கௌதம் மேனன் படங்கள் நிறைய பார்ப்பாரோ?

நாடு முழுவதும் 2019-2021 ஆண்டுகளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போய் உள்ளனர் என தேசிய குற்ற ஆவண காப்பக தகவலின் தெரிவிக்கப்பட்டுள்ளது - அதிர்ச்சி!

சாதாரணமாக ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படும் பொழுது எண்கள் வரிசையாக இருக்கும். அதே நேரத்தில் அந்த ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதில் ஏதாவது தவறு இருந்தால் எண்களுக்கு முன்பு ஒரு நட்சத்திர குறி அச்சிடப்படும் இப்படி நட்சத்திர குறியிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும், அவை கள்ள நோட்டுக்கள் என்றும் ஒரு தவறான நம்பிக்கை மக்களுக்கு இருந்தது. அவை செல்லும் என்ற ரிசர்வ் பேங்க் அறிவித்துள்ளது.

சென்னை அருகே போலீஸை தாக்கிய ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை.

தங்கள் எட்டு மாத குழந்தையை இரண்டு லட்சத்துக்கு விற்ற பெற்றோரை கோல்கத்தா காவல்துறை கைது செய்தது.  விற்க காரணம்?  வறுமை, சாப்பிட வழி இல்லாமல்...  அதெல்லாம் இல்லை.  ரீல்ஸ் போடவேண்டுமாம், அதுவும் ஆப்பிள் போனில் போட வேண்டுமாம்...

ஒடிசாவில் ஒரு நம்பிக்கை.  முதல் பயணியாக பெண்ணை பஸ்ஸில் ஏற்றுவதில்லை கண்டக்டர், டிரைவர்கள்.  அப்படி ஏற்றினால் விபத்து நடக்குமாம், அல்லது டிக்கெட் விற்பனை மோசமாக இருக்குமாம்!  போராட்டம் நடக்கிறது!  கனிமொழியின் கனிவான கவனத்திற்கு...

கொரோனா காலத்தில் மருந்துப்பொருட்கள், உபகரணங்கள் என்னென்ன எவ்வளவு வாங்கினீர்கள், ரசீது எங்கே என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்ட மத்திய பிரதேசக்காரருக்கு 40,000 பக்கங்களில் பதில் கொடுத்து வியக்க அல்லது அதிர வைத்துள்ளது சம்பந்தப்பட்ட துறை!

இறந்து விட்டதாகக் கருதிய தாயுடன் 35 வருடங்களுக்குப் பின் அழுகையுடன் தாடியும், டர்பனுமாக சேர்ந்த மகன்.

வடநாட்டில் தக்காளி விற்று கோடீஸ்வரர் ஆன கதை போல திருப்பூரில் ஒரே நாளில் ஒன்றரை லட்சத்துக்கு தக்காளி (மட்டும்) விற்ற திருப்பூர் விவசாயி.  அடுத்தடுத்த நாட்களில் இரண்டு லட்சம்,, மூன்று லட்சம் என்று சம்பாதித்த விவசாயிகள் பற்றிய செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன...!

இன்னொரு தக்காளி செய்தி... தக்காளி வண்டியை கடத்தி லட்சங்களுக்கு விற்ற தமிழக தம்பதியை பெங்களுருவில் கைது செய்தார்களாம்...  வெட்கம்!
========================================================================================

பொக்கிஷம் : -
ஆ....


76 கருத்துகள்:

  1. காமராஜர் பற்றி செய்தி படித்ததும் "இரவு 11 மணிக்கு மேல் பொதுக்கூட்டங்கள் நடத்தக் கூடாது என்று உங்களுக்கெல்லாம் தெரியாது?" என்று கண்டித்திருப்பார் என்று நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த சட்டம் பின்னாட்களில் ஏற்பட்டது என்றுநினைக்கிறேன்.

      நீக்கு
    2. ஆனால் அதைவிட பெரிய விஷயம் இங்கு அவர் செய்திருப்பதாக கூறப்படும் சம்பவம். இல்லையா?

      நீக்கு
    3. 'கூறப்படும்' என்பது தான் உங்கள் பதிலில் முக்கியமான வார்த்தை.

      நீக்கு
    4. 125 கி.மீ. வேகத்திலேயா? அதுவும் தமிழக ஹைவேலேயா? அப்பாலே சடன் ப்ரேக் வேறையா?

      "என்னய்யா கிண்டலா பண்ணுகிறீர்கள்?" என்று அந்தப் பெண் கேட்டிருந்தால் நிச்சயம் லைசன்ஸ் கிடைத்திருக்கும்.

      வண்டி ஓட்டறதை விட RTO வேலை ரொம்ப ஈஸி போல இருக்கு.

      நீக்கு
    5. // 'கூறப்படும்' என்பது தான் உங்கள் பதிலில் முக்கியமான வார்த்தை. //

      இங்கு சம்பந்தப்பட்டவரே சொல்லி இருப்பதால் ஏற்கலாம்.  ஆனால் சில மறைந்த பிரபலங்கள் பற்றி நிறைய கதைகள் உலாவுவதைக் கண்டிருக்கிறோம்.  அப்துல் கலாம், மஹா பெரியவா, காமராஜர், அண்ணா...

      நீக்கு
    6. ஹைவேயில் நாங்களே 100 கிலோம்மீட்டரைத் தாண்டி ஓட்டுகிறோம்.  எங்களை விட திறமையாளர்கள் ஓட்டமாட்டார்களா என்ன!.  மேலும் அப்படி அந்தப் பெண் கேட்டால், தனது அறியாமையை மறைக்க எதிராளியின் பேச்சில் குற்றம் கண்டு பிடிக்கிறார் என்றே எண்ண வைக்கும்.

      நீக்கு
    7. 125 கி.மீ. என்பது தமிழக ஹைவேக்களில் கூட நினைத்துப் பார்க்க முடியாத வேகம்.

      அந்த வேகம் தண்டனைக்குரிய குற்றம்.

      நீக்கு
    8. இதெல்லாம் ஹைவேக்களில் மதிக்கபப்டுவதில்லை!

      நீக்கு
  2. என்ன பாடலோ?
    என்ன முதல் வரியோ?
    ஆவ்....

    பதிலளிநீக்கு
  3. நேற்று மாலை வந்த திடீர் நினைப்பு இது.

    பொக்கிஷம் பகுதியில்
    'ராகி' யின் ஜோக்குகள்
    போடுங்களேன்.

    பழைய குமுதம், கல்கண்டுகளின் பொக்கிஷம் அவர்.

    பதிலளிநீக்கு
  4. கிரிகெட் திறமையில் நம்பிக்கையில்லாத திறமையற்ற வீணர்கள் மாத்திரமே ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடுவார்கள். ஆட்டக்காரர்கள் தாங்கள் பேட்டை ரௌடிகள்தாம், நாகரீகம் அற்றவர்கள் என்பதை இப்படிக் காண்பித்துக்கொள்வார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் இந்த இருவருமே கிரிக்கெட்டில் மிக திறமையானவர்கள்.  அதிலும் விவ் ஒரு சிங்கம்.

      நீக்கு
  5. நம் ஸ்பின் ட்ரையோ இருந்தபோது 7 விக்கெட் விழுந்தால் மத்தவங்க தாங்களாகவே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பயந்து விக்கெட்டை விட்டுக்கொடுப்பார்கள். காவஸ்கர்தான் முதலில் சூப்பராக விளையாடிய இந்தியர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.  ஆனால் நிறைய விமர்சனத்துக்கும் உள்ளானார்.  அவர் ஒரு ஸ்டைலிஷ் கிரிக்கெட்டர்.  தினேஷ் சூட்டிங் விளம்பரத்திலும் நடித்தார்.

      நீக்கு
    2. //தினேஷ் சூட்டிங் விளம்பரத்திலும் நடித்தார்.// அதில் மட்டுமா? அவர் மனைவி ஒரு பேட்டியில்,"என் கணவர் கிரிகெட் விளையாடுவார், டி.வி.க்கு பேட்டி கொடுப்பார், விளம்பரப் படங்களில் நடிப்பார், இதையெல்லாம் மீறி நேரம் இருந்தால் ஆஃபிஸுக்கும் போவார்" என்று கூறியிருந்தார். நான் இவர் ஆட்டத்தை மிகவும் ரசிப்பேன்.

      நீக்கு
  6. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜூ அண்ணா..  முருகன் நம்மைக் காக்கட்டும்.

      நீக்கு
  7. நலம் எல்லாம் பெருகட்டும்..

    அனைவருக்கும் ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  8. /// நாடு முழுவதும் 2019-2021 ஆண்டுகளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போய் உள்ளனர்.. ///

    நாடு முழுவதும் 2019 - 2021 ஆண்டுகளில் காணாமல் போய் விட்ட 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களைக் கண்டறிய இயலாத நிலை உள்ளது..

    சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லட்சணம் என்ற கடைசி வார்த்தையை
      விட்டு விட்டீர்களோ?

      ரொம்பவும் அழுத்திக் கேட்டால் இந்திய பெண்கள் ஜனத்தொகையில்
      இது ஒரு பொருட்டாகக் கூட
      எடுத்துக் கொள்ள முடியாத எண்ணிக்கை என்பார்கள்!

      வெட்கக்கேடு!

      நீக்கு
    2. லட்சணம் என்ற கடைசி வார்த்தையை
      விட்டு விட்டீர்களோ?

      ரொம்பவும் அழுத்திக் கேட்டால் இந்திய பெண்கள் ஜனத்தொகையில்
      இது ஒரு பொருட்டாகக் கூட
      எடுத்துக் கொள்ள முடியாத எண்ணிக்கை என்பார்கள்!

      வெட்கக்கேடு!

      நீக்கு


    3. @ ஜீவி அண்ணா..

      அந்த ஆச்சர்யக் குறிக்குள் இருக்கின்றது லட்சணம்...

      எதாவது எழுதப் போய்.... வீடு தேடி வரும் - என்றாகி விடும்..

      இன்று கூட தினமலரில் ஒரு செய்தி - சிறைக்குள் மரணம் - தென்னகத்தில் தமிழகம் முதலிடமாம்!..

      வாழ்க வளம் -
      வாயை மூடிக் கொண்டு!..

      நீக்கு
  9. சுவாரஸ்யமான கிரிக்கெட் விடயங்கள்

    காமராஜர் அவர்களுடனான சந்திப்பு அருமை.

    பதிலளிநீக்கு
  10. ஸ்ரீராம், முதல் பகுதி 1970 களின் பின்பகுதி மற்றும் 80களின் தொடக்க காலத்தின் கிரிக்கெட் நினைவுகளை எழுப்பிவிட்டது. ரிச்சர்ட்ஸ், லாரா, காளிச்சரன் மறக்க முடியாதவர்கள். இது கூட எனக்கு என் அத்தையின் வரவால் அந்த வாண்டுகளுடன் இருந்ததால் டிவி உண்டு. இது கூட நான் எழுதி முடிக்காமல் வைத்திருக்கிறேன் கிரிக்கெட் பத்தி அல்ல அதனால் வீட்டில் நிகழ்ந்த சிலவற்றின் நினைவுகளை....

    எழுதுகிறேன். நன்றி, ஸ்ரீராம் நினைவுபடுத்திட்டீங்க...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுதுங்க..  ரசிக்கலாம்.  துளஸிஜியும் சில நினைவுகள் வைச்சிருப்பார்.

      நீக்கு
  11. வாஸிம் அக்ரம் அப்ப இளங்கன்று பயம் அறியாத டெரர்..அவர் உதிர்க்கும் வார்த்தைகள்...ஹையோ......அவர் இறங்கினாலே வீட்டில் திட்டுகள் நிகழும். அவர் உதிர்க்கும் வார்த்தைகளை விட...வீட்டில் எழும் ஹாஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசிம் மட்டும் அல்ல, ஆஸ்திரேலியாவின் ரீட், மக்ராத் போன்றோரும் விதி விலக்கல்ல.  ஏன், அதே வெஸ்ட் இண்டீசின் சில பௌலர்களும்!

      நீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்கள். அனைவருக்கும் ஆடிப் பெருக்கு நல்வாழ்த்துக்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  13. விளையாட்டில் வெகுமதிகளும் பரிசுகளும் கூடக் கூட விளையாட்டுகள் "போர்" ஆகிவிட்டன. இவை தனிப்பட்ட விளையாட்டாகட்டும், குழு விளையாட்டாகட்டும் இரண்டுக்கும் பொருந்துகிறது. இதன் பிரதிபலிப்பே அக்ரம் ரிச்சர்ட்ஸ் மோதல். இனி எங்கிலும் விளையாட்டு விளையாட்டாக கருதப்படும் என்று நம்புவோம்.

    காமராஜர் என்றும் படிப்பிற்கு முக்கியத்துவம் தந்தவர். அப்படி படித்தவர்கள் தற்காலத்தில் அவரை மறந்து எப்படி ஊழல் செய்யலாம் என்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர். ஆக படிப்பு ஊழலுக்கும் ஒரு வழிகாட்டியாகி விட்டது.

    ஓட்டுநர் உரிமம்: சில பிழைகள்: 1. தேர்வு கணினியில். நேர்முகத் தேர்வு கிடையாது. 2. 125 கி மி வேகத்தில் செல்லும்போது உடன் பிரேக் இட்டால் கார் பல்டி அடித்து காரில் உள்ளவர்களுக்கு இறப்பு உட்பட பாதிப்புகள் நிகழும்.

    கவிதை புதுக்கவிதையாகவும் இல்லை, மரபுக் கவிதையாகவும் இல்லை,. எதுகை மோனை வரும் இடங்களில் வார்த்தைகளை மடக்கிப் போட்ட ஒரு நோட்டீஸ் போன்று உள்ளது.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெயக்குமார் ஸார்..  நான் சொல்லி இருக்கும் கிரிக்கெட் சம்பவமே பல வருடங்களுக்கு முன் நடந்ததுதான்!

      காமராஜரின் தவறல்ல அது!

      ஜோக்கில் லாஜிக் பார்க்கக் கூடாது!

      கவிதை பற்றிய கணிப்பு - சரிதான்.

      நீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. கிரிகெட் வீரர்கள் பற்றிய முதல் பகுதி அறிந்து கொண்டேன். போட்டிகளில் வெற்றி பெற இந்த மாதிரி அறச்சொற்கள் பயன்படுத்தும் தவறான போக்குகளை அப்போதே இங்கிதமாக கிரிகெட் வாரியம் கண்டித்திருக்கலாம். ஏன் செய்யவில்லை? தனி மனித சுதந்திரத்தில் தலையிட விரும்பவில்லையா?

    இந்த காலகட்டத்தில் மகன்களுடன் இந்தப் போட்டிகளை நானும் விடாமல் பார்த்து ரசித்துள்ளேன். அது ஒரு காலம். இப்போது டி. வி பக்கமே செல்ல இயலவில்லை.. மகன்களும் நீங்கள் குறிப்பிட்ட இதையெல்லாம் குறிப்பிட்டுள்ளார்கள்.

    தாங்கள் இயற்றிய கவிதை இன்றைய தினத்திற்கு பொருத்தமாய் அருமையாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​கிரிக்கெட் வாரியம் இதுபோன்ற விஷயங்களில் கம்மென்று இருந்து விடும். அதற்குத் தேவை காசு!

      நீக்கு
  15. இருவரின் செய்கையுமே Modest அல்ல அதுவும் கிரிக்கெட்டில் புலிகள். திறமைசாலிகள். ஆனால் முதலில் பொதுவெளியில் ஆரம்பித்தவர் வாஸிம். அப்போதே இம்ரான் அதைக் கண்டித்திருக்க வேண்டும் ஆனால் ஊக்குவித்திருக்கிறார். ஒரு இளம் வீரர், ஆரம்ப நாட்கள் வளரும் பருவம் எனவே இம்ரான் ரூமில் கைகழுவி விடுவதற்குப் பதில் முதலில் கண்டித்திருக்க வேண்டும் ஒரு அணியின் தலைவராக. அப்படி அங்கு செய்யாமல் கை கழுவி விட்டிருக்கிறார் அது என்னதான், 'பட்டு அறியட்டும்...அவரே தன் பிரச்சனைகளைக் கையாள வேண்டும் என்பதற்காக என்றாலும்..." க்ரவுன்ட் பொது இடம்...எனவே அங்கு தலைவர் என்ற அதிகாரம் செல்லும்.

    ரிச்சர்ட்ஸ் க்ரவுண்டிலேயே தன் ஆட்டத்தை சற்று நேரம் நிறுத்தியிருக்கலாமோ? வாஸிம் வார்த்தைகளை உதிர்க்காமல் இருந்தால்தான் விளையாடுவேன் என்று? அப்படிச் சிலர் செய்ததுண்டு. கிரிக்கெட்டில்தான் டக்கென்று சம்பவமும் பெயர்களும் நினைவுக்கு வரவில்லை. ஆனால் பாகிஸ்தான் அணியுடன் நம் அணி விளையாடும் போது என்று லேசாக நினைவு...

    பொதுவாகவே நம் அணி மட்டுமின்றி பிற அணிகளும் பாகிஸ்தான் அணியின் அதுவும் வாஸிம் பற்றிய புகார்கள் உண்டு. ஸோயத் அக்தர்? ஜாவட் மியாண்டாட்? பற்றியும் கேட்டதுண்டு. விக்கெட்டில் இருந்துகொண்டு இந்தியாவை திட்டிக் கொண்டே...

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  ஜாவேத் மியான்தத் நல்ல ஆட்டக்காரர்.  ஆனால் பொறுக்கித்தனமாக நடந்து கொள்வார்!  இதைப் பாருங்கள்!https://www.youtube.com/watch?v=S5wROqJVPwM

      நீக்கு
  16. எது எப்படியோ வாசிம் அதில் பாடம்கற்றுக் கொண்ட விஷயம் நலல்து...சில அனுபவங்கள் இப்படி நடந்துதான் பாடம் கற்பிக்கும் என்பதும்...

    வாசிம் கு ரிச்சர்ட்ஸ் திறமையானவர் என்ற மரியாதை இருந்திருக்கும், தன் எதிர்காலம் போய்விடக் கூடாது என்ற பயம் இருந்திருக்கும் ராஜதந்திரமும்....

    சில விஷயங்களில் carrot policy உதவுவதில்ல்லை என்றும் stick policy தான் பயன்படுத்த வேண்டியிருக்கு என்றும் சொல்வதுண்டு. இது ரிச்சர்ட்ஸின் ஈகோவைச் சுரண்டிப் பார்த்த சம்பவம்!! என்பதால் அவர் பொய்ங்கிட்டாராக இருக்கலாம். நல்ல காலம் மைதானத்தில் செய்யவில்லை! நாகரீகம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரிச்சர்ட்ஸும் இனி நாமும் இப்படி நடந்து கொள்ளக் கூடாது என்று நினைத்திருக்கலாம்!

      நீக்கு
  17. விவியன் ரிச்சர்ட்ஸ் போல இங்கும் ஒரு சிங்கம் "சேவாக்"

    பதிலளிநீக்கு
  18. ஆர் பாலகிரு,ஷ்ணன் - அவர் தலைவர் பத்தி பேசறப்ப கண்ணீரை அடக்கிக் கொள்கிறார் என்பதை உணர்வுபூர்வமாக அறிகிறேன். எனக்கும் கண்ணீர் என்னை அறியாமல் வந்தது. என்ன ஒரு அருமையான தலைவர்!! இல்லையா! நெகிழ்ச்சியான சம்பவம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  19. தனியார் பேருந்து வாசகம் கவர்ந்தது.

    பெண் லைசென்ஸ் வாங்க வந்ததை பெண்களின் ஓட்டும் திறனை நக்கலடிக்கும் ஜோக்!

    கீதா

    பதிலளிநீக்கு
  20. வருக பொலிக....அருமையா எழுதியிருக்கீங்க ஸ்ரீராம். ரொம்ப ரசித்து வாசித்தேன். இடையில் காருண்யம் பெருக பெருக பெருக.....ன்னும் வந்திருக்கலாமோ...சும்மா அந்த ரைமிங்க் !

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா.  சற்று நீண்டு விட்டது.  சுருக்கி இருக்கலாம்.

      நீக்கு
  21. நாடு முழுவதும் 2019-2021 ஆண்டுகளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போய் உள்ளனர் என தேசிய குற்ற ஆவண காப்பக தகவலின் தெரிவிக்கப்பட்டுள்ளது //

    அதிர்ச்சி. வெட்கக் கேடு. நம் சமுதாயச் சூழல்கள், சட்டங்களின் அலங்கோல லட்சணம். காணாமல் போன காரணங்கள் தெரிந்தால் இதில் வீட்டின் பங்கு வளர்ப்பு முறையும் அம்பலமாகும்..

    கீதா

    பதிலளிநீக்கு
  22. //யாருங்க நீனா குப்தான்னுல்லாம் குரல் கொடுக்கறது... தள்ளிப் போங்க... )//
    Haaaaaahaaa 🤣🤣🤣🤣🤣

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ ஏஞ்சல் எப்படி இருக்கீங்க? சம்மர் வெகேஷனா?

      நீக்கு
    2. gregor mendel ,ஜெனிட்டிக்ஸ் பாடம் டீச்சர் நடத்திட்டிருக்கும்போது ஒரு பொண்ணு பின்னாலிருந்து நினா குப்தா விவியன் ரிச்சர்ட்ஸ் எக்ஸாம்பிலா சொன்னா ..அது நினைவுக்கு வந்துச்சி :)))

      நீக்கு
    3. ஹாய் பானுக்கா :) நலமா இருக்கீங்களா .சம்மர் வெகேஷன்  யூகே பள்ளி குழந்தைகளுக்கு  ஆனா எனக்கில்லை .டைம் இருந்துச்சி எட்டி பார்த்தேன் 

      நீக்கு
    4. ஹா.. ஹா.. ஹா.. நன்றி ஏஞ்சல்.. நீனாவை நினைவு வைத்திருக்கிறீர்கள். உங்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது.

      நீக்கு
  23. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்
    ஆடிப்பெருக்கு நல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அக்கா. ஆடிப்பெருக்கு வாழ்த்துகள்.

      நீக்கு
  24. அண்ணனுடன் , கணவருடன், பிள்ளைகளுடன் கிரிகெட் நிகழவுகளை , கேட்டு, பார்த்து மகிழ்ந்த காலங்கள் உண்டு. இப்போது பார்ப்பதே இல்லை. பெரிய பேரன் சிறு வயதில் கிரிகெட் ரசிகன், இப்போது கால்பந்து விளையாட்டு வீரன் அவன் அதை பற்றி மட்டும் தான் பேசுவான். சின்ன பேரனுக்கு கிரிகெட் மீது ஆர்வம் இல்லை.
    உங்கள் பகிர்வில் நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.

    ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்களின் தமிழ் ஆய்வுகள் அதுவும் மதுரையை பற்றி பேச்சுக்கள் கேட்டு இருக்கிறேன், நன்றாக பேசுவார்.
    அவரின் இளமைகால பேச்சு , காமராஜரின் அறிவுரை அதன்படி அவர்
    ஐஏஎஸ் அதிகாரி ஆனது கேட்டு மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னொரு சம்பவம் சீக்கிரம் பகிர்கிறேன். அது வேறு நாடு, வேறு ஆட்கள்! நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  25. பசித்த குழந்தைக்கு பாலாய்
    பசித்த வயிற்றுக்கு சோறாய்
    வறண்ட நிலங்கள் ஈரமாய் நனைய
    பொழிக பொழிக பொழிக //

    கவிதை அருமை.
    ஆடிப்பெருக்கு சமயம் கவிதை பொருத்தம்.

    //அதெல்லாம் இல்லை. ரீல்ஸ் போடவேண்டுமாம், அதுவும் ஆப்பிள் போனில் போட வேண்டுமாம்...//

    //நாடு முழுவதும் 2019-2021 ஆண்டுகளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போய் உள்ளனர் என தேசிய குற்ற ஆவண காப்பக தகவலின் தெரிவிக்கப்பட்டுள்ளது - அதிர்ச்சி!//

    நியூஸ் ரூம் செய்திகள் கவலை அளிக்கிறது.

    பொக்கிஷபகிர்வு பயம் அளிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கலந்து அனைத்துக்கும் கருத்து சொன்னதற்கு நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  26. மாணவர்கள் மீது நிஜமான அக்கறை கொண்ட காமராஜ் போன்ற தலைவர்கள் இனிமேல் வருவார்களா?
    ஆர்.டி.ஓ. ஜோக் அரதப் பழசாயிற்றே?
    கவிதையை விட, கவிஞரின் ஆதங்கம், நல்லெண்ணம் பாராட்டப்பட வேண்டியது.

    பதிலளிநீக்கு
  27. ம்க்கும் ரெண்டுமே நரிகள் இதில் கைவிட்டார் என்பதெல்லாம் ஏற்புடையதல்ல .என்னிக்கும் சிங்கம் சிங்கம்தான் விவியன் .
    அங்கே பொதுவெளியில் விளையாட்டுக்கு தடை ஏற்படாம நடந்தது நாகரீகம் .சரண்டர் ஆனது குள்ளநரித்தனம் aka ராஜ தந்திரம் .இன்னமும் அவர் அதை சொல்லி வரார்னா அப்போ மரண பயத்தை ஏற்படுத்தியிருக்கார் விவியன் .அப்புறம் எனக்கு ரிச்சர்ட்ஸை மட்டுமே பிடிக்கும் :)

    // மற்றவர்களை இப்படி அணுகுவது பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன?//
    எது வாசிம் செய்ததா ? அது மனோ ரீதியாக ஒருவரை வீக் ஆக்கினா அவரால் விளையாட முடியாம போகும்னு நினைச்சிருப்பார் வாசிம் .இதெல்லாம் ஒரு tactics பலருக்கு  .ஆனா அது மென்டலி எதிராளியை நிலைகுலைய வைக்கும் 90 சதவீதம் .அதையும் தாண்டி கடந்து அவை பொது வெளி நாகரீகம் ,மற்றும் அப்போதைய முக்கிய கடமை ஆகியவற்றை கருத்திற்கொண்டு ரிச்சர்ட்ஸ் செய்தது சரி.இந்த இருவரை விடுங்க கவலையே இல்லாம நீயே  பார்த்துக்கொள்னு  விட்டார் பாருங்க இம்ரான் அவரை  எந்த கேட்டகிரியில் வைப்பது :) 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு பாகிஸ்தானில் ஜஹீர் அபபாஸ், இம்ரான், வாசிம் அக்ரம்,  போன்றோரை பிடிக்கும். ஏன் ஜாவேத் மியான்தத் ஆட்டத்தையும் பிடிக்கும்.  ஆட்டத்தை மட்டும்!

      நீக்கு
    2. ஏதோ... கடவுள் கை கொடுத்தார். நாம 1983ல கப்பை ஜெயித்தோம். அப்போதிருந்த WI வேகப்பந்து வீச்சாளர்கள், விவியன் போன்ற லெஜென்ட் WI வெற்றிகளுக்குக் காரணம்.

      நீக்கு
  28. முதலில் வாசிம் செய்தது தவறு. அதில் கற்றுக் கொண்டது சரியான வாழ்க்கைப் பாடமே. நானிருக்கிறேன் என ஊக்கம் கொடுத்த கேப்டன் பின்னர் பின்வாங்கியதில் பெரிய பாடம் இருக்கிறது. ரிச்சர்ட்ஸை குற்றம் சொல்ல இயலாது. எல்லா சம்பவங்களிலும் மற்றவர்களும் கற்றுக் கொள்ள நிறைய உள்ளது.

    பெருந்தலைவர் பற்றி ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸின் பகிர்வு சிறப்பு. நெகிழ்வு.

    தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு
  29. இப்பொழுதெல்லாம் கிரிக்கெட் பார்ப்பதில்லை.
    பெண்கள் காணாம‌ல் போவது கவலை அளிக்கிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!