ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023

நான் தரிசனம் செய்த கோவில்கள்: நெல்லைத்தமிழன் : வைரமுடி யாத்திரை 09

 

வைரமுடி யாத்திரை – ஹொசஹொலாலு, மாண்ட்யா – பகுதி 9


 ஹொசஹொலாலு என்ற இடம், மாண்ட்யா மாவட்டத்தில் உள்ளது. இங்கு பொது ஆண்டு 1250ல் கட்டப்பட்ட லக்ஷ்மிநாராயணர் கோவில் உள்ளது. இது எப்போது கட்டப்பட்டது என்பதற்கு சரியான ஆதாரம் இல்லை. இருந்தாலும் இது ஹொய்சாளர்கள் கட்டிட பாணியில் இருப்பதால் 13ம் நூற்றாண்டு என்று சொல்லப்படுகிறது. அதற்கு முற்பட்டதாகவும் இருக்கலாம். இது தொல்லியல் துறையின் கீழ் வரும் கோவில். இந்தக் கோவிலின் சிறப்பு, நகைகளில் வேலை செய்திருப்பதைப் போன்று, கோவிலின் உள்ளும் புறமும் இழைத்திருக்கிறார்கள். ஹொய்சாளர்களின் காலம் 1050-1300 என்று சொல்கின்றனர். அந்தக் காலத்தில் அவர்களின் சிற்பத் திறமைகளுடன் கூடிய கோவில்கள் (ஹொய்சாள கட்டிடக்கலை) என்று பேளூர், ஹளபேடு மற்றும் ச்ருங்கேரியில் உள்ள கோவில்கள் என்கிறார்கள். ஹொசஹொலாலு லக்ஷ்மி நாராயணர் கோவிலைப் பார்த்த நான், இதற்கே இவ்வளவு மயங்கிவிட்டால், மற்ற மூன்று இடங்களில் உள்ள கோவில்களும் எப்படி இருக்கும்? என்று யோசித்தேன். நிச்சயம் அந்த மூன்று இடங்களுக்கும் வரும் காலங்களில் சென்று புகைப்படங்களையும் அனுபவத்தையும் பகிர்ந்துகொள்வேன்.

இந்தக் கோவிலைக் கட்டியது, வீர சோமேஸ்வரா என்ற ஹொய்சாள மன்னன் (1250). கிழக்கு நோக்கிய கோவிலில், மூன்று பிரதான சந்நிதிகள் இருப்பதால், த்ரிகூட விமான அமைப்பு என்று சொல்லப்படுகிறது. இடது பக்கம் ஸ்ரீவேணுகோபாலர் சந்நிதி, வலது பக்கம் லக்ஷ்மி நரசிம்மர் சந்நிதி, நடுவில் கிழக்கு நோக்கி நாராயணர் சந்நிதி உள்ளது. ஸ்ரீவேணுகோபாலர் மற்றும் நரசிம்மர் சந்நிதிகள், ரங்க மண்டபம் என்று சொல்லப்படும் முன் மண்டபத்தோடு இணைகின்றன.  கோவிலை, சுமார் 1 ½  மீட்டர் உயரமுள்ள கல் மேடையில் அமைத்திருக்கின்றனர். கோவிலைச் சுற்றி, கல் மேடையிலேயே வலம் வரும்படியாக இடம் விட்டுக் கட்டியிருக்கின்றனர். இந்தக் கல் மேடையின் நான்மு புறங்களிலும் யானைச் சிற்பங்கள் உள்ளன. ஏறுவதற்கு படிகள் அமைப்பு கிடையாது.

 

கோவில் பகுதி, ஆறு பட்டைகள் கொண்ட பகுதி, அதன் மேல் விதானம் என்று அமைந்துள்ளது. இதைச் செய்வதற்கு Soap Stone எனப்படும் கற்களை உபயோகித்திருக்கிறார்கள். ஆனால் அந்தக் கற்களே, இழைத்து இழைத்து கருங்கல் போன்று ரங்க மண்டபத்தில் இருக்கிறது. கோவில் வெளிப்புறத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சிற்பங்கள் இருக்கின்றனவாம். அதில் பெரும்பகுதி, வைணவத்தைச் சார்ந்த சிற்பங்கள். சைவம், சாக்தம் சார்ந்த சில சிற்பங்களும் இருக்கின்றன.

 

கோவில் மண்டபத்தில் நாராயணர் சந்நிதிக்கு இருபுறமும், பிள்ளையார் மற்றும் மஹிஷாசுர மர்த்தினி சந்நிதிகள் மிகச் சிறிய அளவில் இருக்கின்றன.

 

ஆறு பட்டைகள் (வரிசைகள்) கொண்ட வெளிப்புறத்தில், மேலிருந்து கீழாக, அன்ன வரிசை, புராணத்தில் வரும் மகர வரிசை,  இராமாயண மஹாபாரத, பாகவத புராண நிகழ்ச்சிகளைச் சிற்பங்களில் சொல்லும் வரிசை, அழகிய இலைகள் கொண்ட வரிசை, குதிரைகளின் வரிசை மற்றும் கடைசியாக யானைகளின் வரிசைகளைக் கொண்டுள்ளது.  இந்த வரிசைகள் ½ அடிக்கும் குறைவான உயரம் கொண்டவை.

 

ஒவ்வொரு சந்நிதியின் முகப்புப் பகுதியிலும் (நுழைவாயிலின் மேற்புறப் பகுதி), உள்ளே இருக்கும் இறைவனின் சிறிய சிற்பம் உள்ளது.  

 

கோவிலின் வெளிப்புறத்தைப் பார்த்த பிறகு கோவிலின் உட்புறத்தைக் காணலாம் என்று தோன்றியது. நான் முதலில் (முழுக் கூட்டமும் கோவிலுக்குள் வருவதற்கு முன்பு) கோவிலுக்குள் சென்று இறை தரிசனம் பெற்று, தீர்த்தம் வாங்கிக்கொண்டேன் (அப்போதான் படங்கள் எடுக்க எனக்கு நேரம் கிடைக்கும்.) சென்ற வருடம் போயிருந்தபோது கோவிலின் உள்ளே நிறைய நேரம் செலவழித்தேன், சிற்பங்களை மற்றும் சந்நிதிகளைப் பார்ப்பதில். பிறகு வெளியே வந்து கோவிலைப் பிரதட்சணம் செய்யலாம் என்று நினைத்தபோதுதான் வெளிப்புறச் சிற்பங்களின் சிறப்பு எனக்குப் புலப்பட்ட து. நிறைய நேரம் கிடைக்காததால், 20-30 படங்கள் எடுத்திருந்தாலே அதிகம். இந்த முறை, யாத்திரை நடத்துபவரிடம் என் ஆசையை முன்பே கூறியிருந்ததால், நீங்கள் முழுவதுமாக படங்கள் எடுத்த பிறகு வந்தால் போதும், நான் காத்திருப்பேன் என்று சொல்லியிருந்தார். அதனால் வேண்டிய அளவு புகைப்படங்கள் இந்த முறை என்னால் எடுக்க முடிந்தது. இதை எழுதும்போது அவருக்கு மனதால் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

கோவிலின் முகப்பு. நுழைவாயிலைக் கடந்ததும் த்வஜஸ்தம்பம், பிறகு கோவில். மிகச் சாதாரணம் தோற்றம். இதனைப் பார்த்துத்தான் சென்ற முறை (2022 மார்ச்) நான் கோவிலின் உள்ளேயே இருந்தேனே தவிர, வெளியில் வந்து கோபுரம் பார்ப்போம் என்றெல்லாம் தோன்றவில்லை. கோவிலின் எதிரே நீண்ட வீதி. முன் காலத்தில் பிராமணர்கள் குடியிருக்கும் இடமாக (அக்ரஹாரா என்று சொல்கின்றனர்) இருந்திருக்கும். நாங்கள் சென்றது மதியம் என்பதால் அதையெல்லாம் முழுமையாக கவனிக்க எனக்கு நேரமில்லாது போனது.



முழுமையான விமானம், கருவறைக்கு மேல் அமைந்துள்ளது. ஆனால் கீழிருந்து பார்த்தால் முழுமையாகத் தெரியாதபடி. நல்ல ஓவியர் வண்ணம் தீட்டியதுபோல மிக அழகாகச் செதுக்கப்பட்டுள்ள சிறிய சிற்பங்கள்.

 










கருங்கல் தளத்துக்கு மேல் கோவில் அமைப்பு. தளத்தில் வியக்கும்படியான எந்தச் சிற்பமும் இல்லை. படிப்படியாக அமைக்கப்பட்டுள்ள தள அமைப்புதான். யானையின் சிற்பம்கூட சாதாரணமாகத்தான் உள்ளது.

எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை உண்டுபண்ணியது, தரைத்தளத்திலிருந்து முதல் வரிசையில் யானைச் சிற்பங்கள், அடுத்த வரிசையில் குதிரைச் சிற்பங்கள் (பலவித pose/நிலைகளில்) எப்படிச் செதுக்கியிருப்பார்கள்? புடவை நெய்வதுபோல இருந்தன.

அடித்தளத்திலிருந்து இருக்கும் 6 பட்டைப் பகுதி (கீழே யானையிலிருந்து ஆரம்பித்து 6வது பகுதியாக ஹம்ஸத்தில் முடியும்)

கோவிலின் வெளிப் ப்ராகாரத்தில் உள்ள சிற்பங்களை அடுத்த வாரம் காணலாம். அதன் பிறகு கோவிலின் உள்ளே நுழையலாம். கோவில் பகுதியாக எழுதிவிட்டு, பெருமாள் படம் இல்லாமலிருக்கலாமா? அதற்காக, கோவிலின் ஸ்ரீவேணுகோபாலர் படம்.

ஸ்ரீவேணுகோபாலர் – ஹொசஹொலாலு கோவில்.

( தொடரும்) 

58 கருத்துகள்:

  1. கோயில் அமைப்பு விவரங்கள் வர வர எழுத்தில் கூடி வருவது
    கட்டுரைத் தொகுப்பிற்கு பலம் கூட்டி வருகிறது.
    மகிழ்ச்சி, நெல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜீவி சார்... எழுத்து நம் வசப்பட தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தால்தான் சாத்தியம் அதற்கான வாய்ப்பு எனக்கு மிகவும் குறைவு.

      நீக்கு
  2. //கோயில் வெளிப்புறத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சிற்பங்கள் இருக்கின்றனவாம். //

    ஏன் வாம்? நீங்கள் சென்று பார்க்கவில்லையா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுதும்போது பலர் சொல்வதை எழுதினேன். படங்களைப் பார்த்தபோது அவை புரிந்தன.

      நீக்கு
  3. அன்ன வரிசை புராணத்தில் வரும் வரிசை....

    இதெல்லாம் கோயில் வெளிப்புறத்தில் தானே?
    அப்போ பார்த்து விட்டீர்கள் போலும். ஆக அந்த 'வாம்'க்கு அவசியமில்லாது போயிற்று. வாசிப்பவர்களுக்கும் திருப்தி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஜீவி சார். ஆனால் இவற்றைப் பார்த்தாலும், பல சிற்பங்களின் நிகழ்வை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. புராண மற்றும் இதிஹாசங்களில் எனக்கு முழுமையான தெளிவு இல்லை. நிகழ்வுகள் பல மறந்துவிட்டன.

      நீக்கு
  4. ஆஹா.. கோயில் மண்டபத்தில்
    நாராயணர் சந்திக்கு முன்னால் பிள்ளயார் சந்நிதி...

    வாசிப்பினூடே பீறிட்ட சந்தோஷம் ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தச் சிற்பங்களையும் பார்த்தால்.... அனைத்தும் வரும் வாரங்களில் பகிர்கிறேன்.

      நீக்கு
  5. அடித்தளத்திலிருந்து ஆரம்பித்து ஆறு பட்டைகளில் பதிந்திருந்த
    சிற்ப லாவண்யம் கண்கொள்ளாக் காட்சி.

    நேர்த்தியான தரிசன அனுபவத்தை வாசிக்கக் கொடுத்தமைக்கு நன்றி, நெல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கு நூற்றுக்கணக்கான கோவில் படங்களையும் (இந்தக் கோவில்) வரும் வாரங்களில் பகிரப்போகிறேன். பார்க்காத, பகிராத சிற்பங்களே இல்லெ எனும்படியாக

      நீக்கு
  6. குழலூதும் மணிவண்ணன்
    கொள்ளை அழகு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜீவி சார். அங்கு நான் பார்த்த சிற்பங்கள் அழகுப்்பெட்டகங்கள்.

      நாம் கடவுளர் சிற்பங்களை ஆடை, அலங்காரங்களுடன்தான் தரிசிப்போம். ஆனால் இயல்பான சிற்பங்களில் ஆட் அலங்காரத்துடன் மிக மிக நேர்த்தியாக சிற்பிகள் செதுக்கியிருப்பர். அதனைக் கீணும் வாய்ப்பு மிக மிக அபூர்வம் (சாதாரணர்களுக்கு வாய்ப்பில்லை).

      மிகச் சமீபத்தில் வடுவூர் இராமரைத் தரிசித்தேன். சிற்பி இடுப்பு வளைவு, தொப்பூழ் என்று மிக அழகாக்க் காண்பவர் மனம் கொள்ளைகொள்வதுபோலச் செய்திருக்கிறார் வாய்ப்பு வரும்போது பகிர்கிறேன்.

      நீக்கு
    2. பகிருங்கள்.
      பார்த்துக் களிக்கிறோம்.

      நீக்கு
  7. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  8. துவஜஸ்தம்பம் பின்னாலிருந்து பார்த்தால் ரேஷன் கடை போலிருக்கிறது.  நெருங்கிப் பார்க்கையில் கண்ணில் விரிகிறது நுணுக்கமான சிற்பங்களைக் கொண்ட கோபுரக் கட்டிடங்கள்.  இத்தனூண்டு இத்தனூண்டு இடத்தில் இவ்வளவு சிற்பங்களா?  சந்தத்துக்குள் வார்த்தைகளைத் திணிக்கும் டி ஆர்  ஆர் பாடல்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா... ஸ்ரீராம்...சிறிய கோவிலில் இவ்வளவு கலைச்சிற்பங்களா என்று அயர்ந்துபோகும் அளவு பல வாராங்கள் வரும் இந்தக் கோவிலின் படங்கள். நான் முதன் முதலில் சென்றபோது அதன் வீர்யம் தெரியாததால் உள்ளே சன்னிதியைச் சேவிப்பதில் நெடுநேரம் கழித்தேன்.

      நீக்கு
  9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  10. நல்ல வெயிலில் படம் பிடித்திருக்க்கிறீர்கள். அதனால் சிற்பங்களின் துல்லியம் கட்சிதமாகத் தெரிகிறது. எப்படித்தான் கால் சூட்டைப் பொறுத்துக் கொண்டு படம் பிடித்தீர்களோ என்று வியக்க வைக்கிறது.

    படங்கள் மட்டும் அல்லாமல் கட்டுரையும் பாடம் போல் அமைந்து பதிவுக்கு பொலிவூட்டுகிறது.

    Jayakumar​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜெயக்குமார். வெயில் சூடு இருந்தது. ஆனால் சில சிற்பங்களை நான் தேடினேன். நிறைய படங்கள் எடுக்கும் எண்ணம் இருந்தது. அதனால் சூட்டினைப் பற்றி நான் கண்டுகொள்ளவில்லை (முதலில் மேடையில் ஏறுவதற்கு படிகள்லாம் கிடையாது)

      நீக்கு
  11. ஹோய்சல சாம்ராஜ்யம் எப்படி இருந்திருக்கவேண்டும் என அழகாக இன்னும் பரப்புரை செய்கின்றன அவர்கள் கட்டிவைத்த கோவில்கள். சிற்பிகளைக் கொண்டாடிய அரசர்கள் என நன்றாகத் தெளிவாகிறது.

    சிலவருடம் முன்பு மாண்ட்யா வழியாக மேல்கோட்டே சென்றிருக்கிறேன். செல்வநாராயணரையும், குன்றின்மேல் குடிகொண்ட நரசிம்ஹரையும் தரிசிக்க என. பதிவுகளையும் எழுதியிருக்கிறேன்.

    ஆனால் இங்கெல்லாம் செல்லவில்லை. தெரிந்திருக்கவில்லை.
    நீங்கள் காட்டியிருக்கும் ஹொஸஹொலாலு மயக்குகிறது. விரும்பி அழைக்கிறது! ஒரு வட்டம் அடித்துவிடவேண்டியதுதான்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேல்கோட்டைக்குச் செல்லும் பாதையில்தான் இந்த ஊரைத் தேடிச் செல்லவேண்டும் ஏகாந்தன் சார். நிச்சயம் கோவில் வெளிப்புற இடமோ இல்லை நுழைவாயிலோ வெகு வெகு சாதாரணமாக இருக்கும். கொஞசம் காலை நேரத்தில் சென்றால் ஒவ்வொரு சிற்பத்தையும் பார்த்து, அது சொல்லும் புராணக் கதைகளை யோசித்து என்று நேரம் போவதே தெரியாது.

      இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு (8 நூற்றாண்டுகளுக்கு முன்பும்) ஓஹோ என்று இந்த இடங்கள் இருந்திருக்கவேண்டும். அழிந்தது போக எஞ்சியவையே நம்மை மயக்குகிறது

      நீக்கு
  12. ஹோய்சால கோயில்களில் மாத்திரம் சுவர், மற்றும் கோபுரங்கள் என்று ஒரு இடம் பாக்கி வைக்காமல் சிற்பங்களால் நிறைந்திருக்கும். இது கோயில் சாதாரணமாக கட்டிமுடித்தபின் சுவர்களிலும் கோபுரத்திலும் செதுக்கினார்களா அல்லது சிற்பங்கள் செதுக்கப்பட்ட ஒரே அளவு கற்களை அடுக்கி சுவர் எழுப்பினார்களா என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

    இந்த சந்தேகம், நமது தமிழ் நாட்டில் கோயில்களில் சுவர்களில் சித்திரம் இருக்கும் அல்லாது சிற்பங்கள் இருக்காது என்பதை அறிந்த பின் எழுந்தது.

    என்றாலும் நிறைய சிற்பங்கள் எனும்போது கொஞ்சம் சலிப்பு தட்டுவதும் உண்டு, நிறைய மிட்டாய்களை காண்பது போல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கொஞ்சம் சலிப்பு தட்டுவதும் // - இது உண்மைதான் (ஓவியர் மாருதி வரைந்த 50 பெண்களின் முகத்தை ஒரே பதிவில் காண்பதைப் போல). ஆனால் நிச்சயம் ரசிக்க முடியும்.

      இன்னும் சில வாரங்களில் இதற்கு விடை கிடைக்கும் (எப்படிச் செதுக்கினார்கள் என்று)

      நீக்கு
  13. சிறப்பான பதிவுகளில் இதுவும் ஒன்று..

    கல்லையும் கனிவித்தார் கலை கண்டு வந்து
    நெல்லையும் அணிவித்தார்
    எழில் மாலை இன்று..

    பதிலளிநீக்கு
  14. சிறப்பான பதிவுகளில் இதுவும் ஒன்று..

    கல்லையும் கனிவித்தார் கலை கண்டு வந்து
    நெல்லையும் அணிவித்தார்
    எழில் மாலை இன்று..

    பதிலளிநீக்கு
  15. இப்படியான திறமையெல்லாம் கல்வியில் சேருமா சேராதா?..

    ஏனெனில் இங்கே தமிழகத்தில் வறட்டுத் தவளைகள் இன்னமும் கதறிக் கொண்டு கிடைக்கின்றன - கொள்ளையடிக்க வந்தவனால் தான் எல்லோருக்கும் கல்வி சாத்தியமாயிற்று என்று!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிற்பக் கல்வி, (அதிலும் கற்சிற்பம், உலோகச் சிற்பம் என்று பல வகைகள்), கோவில் கட்டுமான சாஸ்திரம், வான சாஸ்திரம், ஜோசியம், நோய்க்கான மருந்து சாஸ்திரம்-ஆயுர்வேதம் என்று பலவித கல்விகள் இருந்த தலம் பாரதம்.

      வராஹ மூர்த்தியின் மூக்கு நுனியில் உருண்டையாக பூமியைச் செதுக்கி கோவில் கட்டினார்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு. ஆனால் நவீனப் பேராசிரியர்கள், உலகம் உருண்டைனு இவர் கண்டுபிடித்தார், கிறித்துவ நூல்களின் பிரகாரம் உலகம் தட்டை என்றே அனைவரும் நம்பினர் என்று நமக்கு ஜல்லியடிக்கிறார்கள்

      நீக்கு
    2. //இப்படியான திறமையெல்லாம் கல்வியில்// நல்ல கல்வி கற்றவர்கள் என்று நினைத்துக்கொண்டிருப்பவர்களை வயல் வெளியில் நாற்று நடும் கிழவிகளிடம் பேசிப்பார்க்கச் சொல்லுங்கள். பயிரிடும் முறை எப்போ எது வளரும், எப்படி களைகளை எடுப்பது, பூச்சி பொட்டு அண்டாமல் நாற்று நடுவது, விவசாயம் செய்வது எப்படி என்று 'கற்றறிந்தவர்களுக்கு' பாடம் எடுப்பார்கள்.

      நீக்கு
  16. ..தமிழகத்தில் வறட்டுத் தவளைகள் இன்னமும் ..//

    தவளைகளின் தனிப்பெரும் தன்மை
    கத்திக்கொண்டிருக்கும் ஆனந்தமாக
    பாம்புகள் இறங்கி நெருங்கும்வரை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்..

      அவரை விஷப் பாம்பு என்று வர்ணித்து பூரித்துப் போய் இருக்கின்றனர்..

      நீக்கு
  17. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கத்தை மதிய நேரத்தில் சொல்லும் கமலா ஹரிஹரன் மேடத்துக்கு நல்வரவு...ஹா ஹா ஹா

      நீக்கு
    2. ஹா ஹா ஹா. 7. 48. உங்களூரில் மதிய நேரமா? நான் முற்பகல் வணக்கம் என சொல்லியிருக்கணும். ஆனால், இன்று ஞாயறாகையால், காலையே எனக்கு ஏழு மணிக்குத்தான் . :))) விடுமுறை என்பதால் இன்று என்னவோ கொஞ்சம் சிரம பரிகாரம். நன்றி.

      நீக்கு
  18. படங்கள் அனைத்தும் வழக்கம் போல மிகவும் அழகாக இருக்கிறது.

    தகவல்கள் சுவாரஸ்யமாக இருக்கிறது தமிழரே...

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    இன்றைய ஞாயிறு கோவில் பதிவு அழகான அருமையான பதிவு. வழக்கம் போல அழகான படங்கள். அதனை விவரிக்கும் வார்த்தைகள் அழகு. அனைத்தையுமே ரசித்தேன்.

    ஆறு பட்டை போன்ற வரிசையான கற்களில் செதுக்கிய சிற்பங்களின் நுணுக்கங்கள் வியக்க வைக்கின்றன. அதுவும் நீங்கள் சொல்வதை புரிந்து கொண்டு, படங்களையும் பார்க்கும் போது நேரிலேயே அத்தனையையும் கண்டு களித்த ஒரு மகிழ்வு வருகிறது. எப்படித்தான் இத்தனைப் பொறுமையாக சிற்பங்களை வடித்தனரோ அந்த சிற்பிகள்... அதை விட அவ்விடங்களைக் குறித்த விபரங்களை எங்களுக்கு எடுத்துரைக்க நீங்கள் கையாண்ட பொறுமைக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி.

    குழலூதும் வேணுகோபாலின் சிலையின் முகபாவத்தில்தான் என்னவொரு கருணை...! இறைவனை தரிசித்துக் கொண்டேன். இது கருவறையில் உள்ளதா? இல்லை ஒவ்வொரு சந்நிதியில் முகப்பு வாயிலில் காணப்படும் சிறிய சிற்ப்பங்களில் ஒன்றா? ஏனெனில் மூலஸ்தானத்தில் படம் எடுக்க அனுமதி உண்டா என்ற சந்தேகத்தில் கேட்கிறேன்.

    உங்கள் பதிவின், அழகிய படங்களின் மூலம் அறியாத கோவிலைப்பற்றிய ம், அதன் அழகிய வேலைப்பாடுகள் குறித்தும் அறிந்து கொண்டேன். இனியும் தொடர்கிறேன். அழகான இந்தப் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். மிகவும் பொறுமையாகவே செதுக்கியிருக்கின்றனர்.

      இந்தக் கோவிலில் சென்ற முறை டக் டக் என்று படம் பிடித்தேன் (கோவிலின் உள்ளே). பிறகு இணையத்தில் பல படங்களையும் காணொளியையும் கண்டபிறகு இந்தத் தடவை மூலஸ்தானத்திலும் சில படங்கள் எடுத்தேன். எல்லாம் வரும். (ஆனால் நியாயமாக நாம் கருவறையை படம் எடுக்கக் கூடாது)

      நீக்கு
  20. எனக்கு நிறைய வேலைகள். இனி வரும் காலங்களிலும் நிறைய கடமைகள் இருக்கின்றன (ஒரு மாதத்துக்காவது). அதனால் உடனுக்குடன் என்னால் கருத்து தெரிவிக்க முடிவதில்லை.

    பதிலளிநீக்கு
  21. பல கருத்துகள் எப்போதும்போல காணாமல் போய்விட்டன. எபி ஆசிரியர்கள் இழுத்துக்கொண்டு வந்தால்தான் உண்டு

    பதிலளிநீக்கு
  22. கோயில் நோட்டட்....சிற்பம் நிலை நிறுத்தி வைக்கிறது.

    முதல் படத்தில் கோயிலைப் பார்த்தால் அதுக்குள்ளா இப்படி? இதெல்லாம் எங்கே இருகின்றன முதல் படத்தில் ஒன்றுமே தெரியலையே...

    எல்லாப் படங்களும் அட்டகாசம், நெல்லை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதா ரங்கன். கோவிலைச் சுற்றினால்தான் அதன் பெருமை தெரியும். சென்றமுறை நேராக உள்ளே சென்று தரிசனத்தில் இறங்கிவிட்டேன். நன்றி

      நீக்கு
  23. என்னா நுணுக்கமப்பா....ஹையோ நெருக்கி நெருக்கி, ஹொய்சாள சிற்பங்களே தனிதான். 6 பட்டை பாருங்க ...யம்மாடியோவ் எப்படி பொறுமையா இவ்வளவும் எத்தனை பேர் சேர்ந்து செதுக்கிருப்பாங்க!!!! இவ்வளவு ஆண்டு காலம் இருக்குனா அது எவ்வளவு பெரிய விஷயம்.!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவில் அடிப்பகுதி முதல் கோபுரம் வரை (அப்படீன்னு சொல்ல முடியாது. அடிப்பகுதி முதல் 15 அடிகள் வரை) சிற்பங்களின் தொகுப்பு. ஆனால் கோவிலைப் பெயர்த்தெடுத்து சாதாரண கருங்கல் தளத்தில் நிறுத்தி வைத்தாற்போன்ற தோற்றம். எப்படிச் செய்திருப்பார்கள் என்று யோசிக்கவே முடியவில்லை

      நீக்கு
  24. ஆமா தளத்தில் சிற்பங்கள் இல்லை அது மேடை என்பதால் இருக்குமோ படி படியா வைச்சிருக்காங்க. ஆமாம் யானை கூட சாதாரணமாகத்தான் இருக்கு...கருங்கல் தெரிகிறது. தளம் கூடக் கொஞ்சம் கொஞ்சமா உருமாற்றம் அடையுது..

    சிற்பங்களைப் பராமரிக்கிறோம் என்று எதுவும் செய்திடாம இருக்கணும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருங்கல் தளத்தின் மீது இருக்கும் கோவில் பிரமிக்க வைக்கிறது. நான் ரொம்ப உயர்வு நவிற்சியாகச் சொல்லவில்லை. ஒவ்வொரு சிறிய சிற்பமும் ஒரு புராண நிகழ்ச்சியைக் கூறுகிறது. வரும் வாரங்களில் புரியும்

      நீக்கு
  25. யானை ஹெவி யில்லையா அதனால அதை கீழ தரைத்தளத்தோடு போட்டிருப்பாங்களா இருக்கும்!!!!!!!!!!!!!!!!!!!!!! அதுக்கு மேல குதிரை...காலாட்படை வேற இடைல இருக்காப்ல இருக்கு..

    ஒவ்வொரு தெய்வ உருவச்சிற்பத்தைச் சுற்றி பூக்கள் இருக்காப்ல திருவாச்சி போல செஞ்சிருக்காங்க பாருங்க....அது என்னா டிசைன் நான் பேனாவால/பென்சிலால கை போன போக்குல போட்டு கோலத்துல போடறாப்ல ஹையோ எப்படிச் செதுக்கியிருக்காங்க!! செம ...உச்சில இருக்கறது செம...ஃபோட்டோலயே இப்படி ...நேர்ல பார்த்தா எப்படி இருக்கும்...ஹையோ மயங்கி அங்கேயே நிற்போம்னு நினைக்கிறேன்...

    யானைக்கு இடைல ராஜா மாடத்துல இருக்காப்லயோ அலல்து பல்லக்கா? அப்படியும் இருக்கு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசித்ததற்கு நன்றி. இன்னும் க்ளோசப் படங்கள் வரும்பொழுது இன்னும் தெளிவாகத் தெரியும். உண்மையில் பேப்பரில் டிராயிங் வரைவதுபோலச் செதுக்கியிருக்கிறார்கள்

      நீக்கு
  26. பார்த்து முடியலை, நெல்லை. செமை....அட்டகாசம். ம்ம்ம்ம் நேரில் போய்ப் பார்க்க ஆசைதான். ஆனால் இப்போதைக்கு வாய்ப்பு இல்லை

    எல்லாமே ரொம்ப ரசித்துப் பார்த்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாய்ப்புலாம் கிடைக்கும் கீதா ரங்கன். ரசித்ததற்கு நன்றி

      நீக்கு
  27. நுணுக்கமான சிற்பங்கள். மேல்கோட்டை போனாலும் இதெல்லாம் தெரிஞ்சிருக்கவில்லை. ஆகவே இங்கெல்லாம் போகலை. மீண்டும் வரேன் சிற்பங்களைக் காண்பதற்கு.

    பதிலளிநீக்கு
  28. படங்களுடன் அவற்றின் விளக்கம் அருமை...

    பதிலளிநீக்கு
  29. //யாத்திரை நடத்துபவரிடம் என் ஆசையை முன்பே கூறியிருந்ததால், நீங்கள் முழுவதுமாக படங்கள் எடுத்த பிறகு வந்தால் போதும், நான் காத்திருப்பேன் என்று சொல்லியிருந்தார்.//

    நல்ல மனிதர் அவர் சிறப்பு அனுமதி கொடுத்ததால் அருமையான படங்கள் மூலம் தரிசனம் செய்ய முடிந்தது எங்களுக்கு .யாத்திரை நடத்துபவருக்கு நன்றி.

    படங்கள் எல்லாம் மிக அருமையாக இருக்கிறது.

    கோவில் படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

    ஸ்ரீவேணுகோபாலர் தரிசனம் மிக அருமை.
    கோவில் கலைநுட்பம் நிறைந்து இருக்கிறது. ஒரு படம் மட்டும் வரவில்லை.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம். வருகைக்கு நன்றி.

      நீங்க பயணத்தில் இருப்பதாக நினைத்தேன்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!