ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

நான் தரிசனம் செய்த கோவில்கள்: நெல்லைத்தமிழன் : வைரமுடி யாத்திரை 08

 

வைரமுடி யாத்திரை – சாளக்ராமம், மாண்ட்யா – பகுதி 8

கல்லஹல்லி Bபூவராகஸ்வாமி கோவில் தரிசனத்திற்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டோம். 11 ½ மணிக்கு, நாங்கள் சென்ற இடமான மிதுன சாளக்ராமம்,  இராமானுஜரின் கர்நாடக விஜயம் சம்பந்தப்பட்ட இடமாகும். அப்போது சோழ நாட்டில் சைவம், வைணவம் என்று இரு பெரிய மதங்கள் இருந்தன. இராமானுஜர், வைணவத்தை வளர்த்தார். சோழ அரசன் (யார் என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. குலோத்துங்க சோழன்-II என்று சிலர் சொல்கின்றனர். ஆனால் அவன் காலம் 1133-1150 என்கின்றனர். இராமானுஜரின் 50-60 வயதில் நிகழ்ந்த நிகழ்ச்சி இது. இராமானுஜர் 1137ல் மறைந்தார். அதனால் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் இது நிகழ்ந்தது என்று நான் நினைக்கிறேன். அவன் காலம் 1070-1120) குலோத்துங்க சோழன், சைவ மதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தான். சைவப் பெரியோர்களின் தூண்டுதலாலோ அல்லது சிவபெருமானிடம் கொண்ட அதீத பக்தி காரணமாக,  இராமானுஜரை சைவ-வைணவ விவாதத்திற்கு,  தன் அவைக்கு அழைக்கிறான். இதில் ஏதோ சூது இருக்கிறது என்று எண்ணி, இராமானுஜரின் சீடர் கூரத்தாழ்வான், இராமானுஜரை ஸ்ரீரங்கத்திலிருந்து கிளம்பச் சொல்லி, தான் இராமானுஜர் வேடமிட்டு, இராமானுஜரின் ஆச்சாரியர்களுள் ஒருவரான பெரிய நம்பியுடன் அரசவைக்குச் செல்கிறார்.  அங்கு, சிவனே பெரும் தெய்வம், சைவமே பெரிய மதம் என்று ஒப்புக்கொண்டு ஓலையில் கையெழுத்திடச் சொல்கின்றனர். அதற்கு ஒப்புக்கொள்ளாததால், கூரத்தாழ்வாரின் கண்கள் பறிக்கப்படுகின்றன (இராமானுஜர் என்று எண்ணி). அவருடன் வந்த பெரிய நம்பியின் கண்களும் பறிக்கப்படுகின்றன.

இந்தச் சமயத்தில், இராமானுஜர், தன்னுடைய மருமகனும், தன் சீடனுமான தாசரதி என்ற பெயரைக் கொண்ட, முதலியாண்டானுடன், சோழநாட்டை விட்டு விலகி, ஹொய்சாள நாட்டுக்கு (தற்போதைய கர்நாடக) இடம் பெயர்கிறார். அவர் முதலில் வந்த இடம் சாளக்ராமம் என்று அழைக்கப்படும் இந்த இடம். இங்கிருந்த மக்கள் ஜைன சமயத்தைத் தழுவியவர்கள். அவர்கள் இராமானுஜருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இராமானுஜர், தன்னுடைய சீடனான முதலியாண்டானை, அங்கிருந்த மக்கள் உபயோகப்படுத்தும் திருக்குளத்தில் முதலியாண்டானின் பாதங்களை வைக்கச் சொல்கிறார்.  அதன் பிறகு அந்தக் குளத்து நீரை உபயோகித்தவர்கள் தாமாகவே மனம் மாறி இராமானுஜரை ஏற்றுக்கொண்டு வைணவர்களாக ஆனார்கள் என்று குருபரம்பரை ப்ரபாவம் சொல்கிறது. (இராமானுஜர், லக்ஷ்மணருடைய அவதாரம் என்றும், அவருக்கு சீடரான அவருடைய மருமகன் இராம அவதாரம் என்றும் சொல்கின்றனர்.) இந்த ஊரில் இராமானுஜருக்கு நிறையபேர் சீடர்களாக ஆனார்கள் (அவர்கள் ஹொய்சாள நாட்டைச் சேர்ந்தவர்கள், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் அல்லர் என்பதை நினைவில் வைக்கணும்).

இராமானுஜர் இந்த ஊருக்கு வந்ததே, அவருடைய கனவில் வந்த நரசிம்மர் சொல்லியதால், என்று சொல்கின்றனர். இந்த ஊரில் (சாளக்ராமம்) ஒரு யோக நரசிம்மர் கோவில் இருக்கிறது. அது 4800 ஆண்டுகளுக்கு முற்பட்ட து. அங்கு இராமானுஜர் சென்று வழிபாடு செய்தார். அப்போது அந்தக் கோவிலின் பூஜாரி வடுகநம்பி, இராமானுஜரின் சீடராக ஆகி வைணவத்தைத் தழுவினார்.  இவர்தான் இராமானுஜரின் முதன்மை சீடர். இராமானுஜருக்கு உதவியாக அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் கடைசி வரை சென்றவர்  (இவர், இராமானுஜர், கேரள திவ்யதேசங்களில் பூஜை முறைகளை தமிழகத்தைப் போல மாற்றுவதற்காகச் சென்றபோது அவருடன் சென்றிருந்தார். அந்தக் கதை, திருக்குறுங்குடி என்ற திவ்யதேசத்துடன் தொடர்புடையது. அந்தப் பயணங்களைப் பற்றி எழுதும்போது வரும்).

இராமானுஜர், சாளக்ராமம் என்ற இடத்திலேயே சிறிதுகாலம் தங்கியிருந்தார். பிறகு தொண்டனூர் என்ற பகுதியில் இருந்த ஜைன அரசனுடைய பிரச்சனையைத் தீர்த்து அவனை வைணவனாக்கினார். அவனைத் தொடர்ந்து அந்த ஊர் மக்களும் வைணவத்தைத் தழுவினர்.  இது பின்னால் வரும்.

சாளக்ராமம் என்ற இடத்தில் இராமானுஜர் தங்கியிருந்தபோது, அவருடைய திருவடி நிலைகளை அந்த இடத்தில் பதித்து, சிறிய மடம் போன்ற ஒன்றை வடுக நம்பி ஸ்தாபித்தாராம். தினமும் அந்தத் திருவடியை அலம்பி, அந்தத் தீர்த்தத்தை, அவருடைய சீடர் வடுகநம்பி, ஒரு சிறிய இடத்தில் விட்டுவந்தார். (சிறிய pond ஆக அந்த இடம் இருந்திருக்கலாம்). இது இப்போது சிறிய நீர்த்தொட்டி போல அமைந்து “இராமானுஜர் ஸ்ரீபாத தீர்த்தம்’ என்று வழங்கப்படுகிறது.

நாங்கள் சாளக்ராமத்தில் முதலில் சென்ற இடம் இராமானுஜர் திருப்பாதங்கள் சமைக்கப்பட்ட மடம் மற்றும் அதன் எதிரில் இருக்கும் இராமானுஜ ஸ்ரீபாத தீர்த்தம் மற்றும் முதலியாண்டான் குளம். இதில் முதலியாண்டான் தன் பாதங்களை வைத்த திருக்குளம், மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருக்கிறது. அந்த இடங்களை இப்போது சீர்செய்யத் துவங்கியிருக்கின்றனர். இராமானுஜர் மடம் மற்றும் ஸ்ரீபாத தீர்த்தம், தொல்பொருள் இலாகாவின் பாதுகாப்பில் உள்ளது.

முதலியாண்டான் தீர்த்தம் என்று அழைக்கப்படும் திருக்குளம்.







இந்த இடத்திலிருந்து நடக்கும் தூரத்தில் இருந்த யோக நரசிம்மர் கோவிலுக்குச் சென்றோம்.  இந்த யோக நரசிம்மர், 4800 ஆண்டுகளுக்கு முன்பு கௌதம ரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டார். உக்ர மூர்த்தியாக இருந்த நரசிம்மரை, இராமானுஜரின் வழிபாடு சாந்தமாக்கிற்று என்கின்றனர். இராமானுஜர், அரவிந்தவல்லித் தாயாரை, மூலவரின் அருகில் பிரதிஷ்டை செய்தாராம். இந்த நரசிம்மருக்கு மூன்றாவது கண், இரண்டு புருவங்களுக்கு இடையே சிறியதாக அமைந்திருக்கிறது.  (முக்கண் கொண்ட நரசிம்மஸ்வாமி, சிங்கப் பெருமாள் கோவிலில் இருக்கிறார்)

இந்தக் கோவிலுக்கு சுற்றுவட்டார முஸ்லீம் மக்களும் வருகின்றனர் (எனக்குத் தோன்றியது, அவர்கள் மதம் மாற்றப்பட்டவர்களாக இருப்பார்கள். அவர்களின் முன்னோர்கள் வழிபட்ட பிரகாரம், இப்போதும் இந்தக் கோவிலுக்கு வருவார்களாயிருக்கும். இறைவன் ஒருவனே அல்லவா?)

என்ன காரண தெரியவில்லை. இந்தக் கோவிலின் பழமையான நரசிம்ம மூர்த்தி சிலை, பின்பக்க பிரகாரத்திற்கு மாற்றப்பட்டு, புதிய மூலவரை சிலவருடங்களுக்கு முன்பு செய்து பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.  ஏதேனும் Bபின்னப்பட்டிருந்ததா என்று தெரியவில்லை.


யோக நரசிம்ம ஸ்வாமி கோவில், சாளக்ராமம். 







யோக நரசிம்மர்,  யோக நரசிம்மர் ஆலயம், சாளக்ராமம். நான்கு திருக் கைகளுடன், சங்கு சக்ர தாரியாக யோகம் செய்யும் நிலையில். இரண்டு கண்களுக்கும் இடையில் உள்ள சந்தனப் பொட்டு இருக்கும் இடம்தான் மூன்றாவது கண் என்று சொல்கிறார்கள்.

 

ஸ்வாமி சிலாரூபத்தின் பின்னால் 17, 13 என்று போட்டுள்ள கற்பலகைகளைக் காணலாம். பொதுவாக பழமையான கோவில்களில் இந்த மாதிரி, கற்களுக்கு நம்பர் போட்டிருப்பார்கள். ஏதாவது நேர்ந்து சிதிலமடைந்தால், பழைய நிலையில் கற்களை அடுக்குவதற்காகவும், இன்னொரு இடத்தில் வைக்க நேர்ந்தால், பழைய மாதிரியே கற்களை அடுக்கவும் இதனைச் செய்கிறார்கள். அடுத்த முறை பழைய கோவில்களுக்குச் செல்லும்போது இப்படி இருக்கிறதா என்று பாருங்கள்.

 

கோவில் தரிசனம் முடிந்த பிறகு, அந்தக் கோவில் பிராகாரத்திலேயே கதம்ப சாதம் (சாம்பார் சாதம்), வற்றல் மற்றும் தயிர் சாதம் சாப்பிட்டோம். பிறகு அங்கிருந்து மதியம் 1 மணிக்குக் கிளம்பி சுமார் 30 கிமீ தொலைவில் இருக்கும் ஹொசஹொலாலு என்ற இடத்தை 1 ¾ க்கு அடைந்தோம். எங்கள் திட்டப்படி, மாலை 4 மணிக்குள்ளாக மேல்கோட்டையை அடையவேண்டும். அதை நோக்கித்தான் எங்கள் பயணம். ஹொசஹொலாலு என்ற இடத்தில் என்ன பார்த்தோம் என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.


(தொடரும்) 

77 கருத்துகள்:

  1. எல்லாருக்கும் இனிய காலை வணக்கம்.

    நெல்லை, செம க்ளிக்ஸ்! அதுவும் கருடர், பிராகாரத்தில் இருக்கும் நரசிம்மர் - வாவ்! Clarity!! அழகு!

    இவங்கதான் முதல்ல கண்ணுல பட்டாங்க! ஒவ்வொன்றாகப் பார்த்து வாசித்து வருகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன்(க்கா). ஞாயிறு மாத்திரம் யோகா வகுப்பு, காலை 11 மணி வகுப்புகள் கிடையாது. அதனால் 6 மணிக்குத்தான் சில நாட்கள் எழுந்துகொள்வேன்.

      காலை வணக்கம். அதிலும் என்றும் சுறுசுறுப்பாக எழுந்துவிடுகிறீர்கள்.

      நீக்கு
    2. அதிலும் என்றும் சுறுசுறுப்பாக எழுந்துவிடுகிறீர்கள்.//

      ஹாஹாஹாஹா தொட்டில் பழக்கம்!!!! நெல்லை!

      அதுவும் இப்பல்லாம் 3.30, 4 மணிக்கு எழுந்தாதான் என் கை காலை அசைத்து சமையல் வீட்டு வேலைகள்....வேறுவேலைகள் அதாவது மொழிபெயர்ப்பு, பட வேலைன்னு இல்லைனா.. சில நாட்களில் சமையலைப் பொருத்து காலைல இங்கு எட்டிப் பார்க்க முடியும். இன்று ஞாயிறாச்சா...சமையலை முடிச்சுட்டு, வெளியில் போகணுமே! சுற்ற! அதான் இங்கு வந்து எட்டிப் பார்த்தாச்சு. வேறு யாரெல்லாம் பதிவுன்னு பார்க்கணும்...இல்லைனா வந்துதான்.

      கீதா

      நீக்கு
    3. 6 மணி ஒன்னும் ரொம்ப தாம்தமில்லையே நெல்லை. சூரியனோடு எழுந்திருக்கணும் அவ்வளவுதானே

      கீதா

      நீக்கு
    4. அதிகாலையில் எழுந்திருப்பவர்களுக்கு மாத்திரமே அதன் பயன்கள் புரியும்.

      இன்று எங்கு பயணம்? நான் ஓரிரு நாட்களில் நான்கு நாட்கள் பயணமாக மன்னார்குடிக்குச் செல்கிறேன். இந்தத் தடவை தரிசிக்கும் கோவில்கள் பற்றித் தொடர் எழுதுவேன்.

      நீக்கு
  2. இராமானுஜரின் காலத்தில் நிகழ்ந்த நிகழ்வை வருட விளக்கங்களுடன் விவரமாக எழுதியிருக்கீங்க.

    அனுவும் தொடர் பதிவாக எழுதிட்டு வராங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனு ப்ரேமின் தொடர்பதிவு கண்ணுல படலையே. திருக்கோளூர் பெண்பிள்ளை வைபவத்துல எழுதறாங்களா? அவருடையா கயா காசி தொடர் படித்துவருகிறேன்.

      வேலைகளுக்கிடையிலும் தொடர்ந்து எழுதுவது, எனக்கு வியப்பாக இருக்கும்.

      நீக்கு
    2. ஆமாம், நெல்லை.. திருக்கோளூர் பெண் பிள்ளை வைபவம்தான். நேத்து இந்த நிகழ்வுதான் நீங்கள் சொல்லியிருக்கும் நிகழ்வுதான் அதோடு வேறு விவரங்களும் நிகழ்வுகள் எழுதியிருந்தாங்க

      கீதா

      நீக்கு
    3. ஆமாம் நெல்லை அனு டக்கென்று போட்டுடுவாங்க..சுறு சுறுப்பாக. எனக்கு அப்படி முடிவதில்லை...எழுதுவதில் படங்கள் கோர்ப்பதில் ரொம்ப ஆமை வேகம்தான். சுறு சுறுப்பு ரொம்பக் கம்மி...

      கீதா

      நீக்கு
    4. கருத்துகல் மறைங்கின்றன....ஆசிரியர்களே கவனிக்க!!!!

      கீதா

      நீக்கு
    5. அனுப்ரேம், அவர்களுக்கு வரும் கோவில் படங்களையும் கோர்த்து, உடனுக்குடன் பதிவு வெளியிட்டுடுவாங்க. இல்ல வேலைகளுக்கிடையில் பெண்கள் பதிவு எழுதி/வெளியிடுவது என்பது கடினம்தான்.

      நீக்கு
  3. இயற்கைச் சூழல், அந்தத் தென்னைமர ஷாட்! செம.

    படங்கள் எல்லாமே ரொம்ப அழகாக இருக்கின்றன

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா ரங்கன். பல படங்கள் எடுக்கும்போது சில படங்கள் நன்றாக அமைந்துவிடும்.

      இந்தத் திருக்குளத்தைச் செப்பனிட்டு சுத்தமாக வைக்க முயற்சிக்கிறார்கள்.

      நீக்கு
    2. அடுத்த கருத்துகீழ சொல்ல நினைச்சேன்...திருக்குளம் ரொம்ப அழகா இருக்கு அதுவும் இராமானுஜர் பாதம் பட்ட சின்ன திருக்குளம். அப்படித்தான் எங்க ஊர்ல புஷ்கரணி என்று...சின்னதாகக் குளத்திலேயே ஒரு தடுப்பு போட்டு பெருமாளுக்கு அபிஷேகத்துக்கும், திருவிழா 10 வது நாள் நீராட்டும் அங்குதான் நிகழும். நீங்க இந்தப் புஷ்கரணிய பார்த்திருப்பீங்க கோயிலுக்கு நேர இருக்கும்...பெரிய திருக்குளத்தோடு சேர்ந்து. புஷ்கரணில அது ஆண்களின் படித்துறையுடன் ஒட்டி இருந்தாலும் யாரும் கால் வைக்க முடியாது மற்ற படித்துறைகளில் குளிக்கலாம்

      கீதா

      நீக்கு
  4. இனி பழைமையான கோயிலுக்குப் போறப்ப இப்படிக் கற்கள் இருந்தால் அதில் நம்பர் இருக்கான்னு பார்க்கிறேன். நெல்லை, இப்படிச் சன்னதியில் படம் எடுக்க விடுவாங்களா? நம்பர் எல்லாம் க்ளியரா இருக்கே உங்க படத்துல. ஆனா புதுப்பிச்சிருந்தா இப்படி நம்பர் எல்லாம் இருக்குமா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூலவர் சன்னிதியில் படங்கள் எடுக்க விடுவதில்லை. இது பிரகாரத்தில் இருந்ததால் படம் எடுத்தேன். சில கோவில்களில் மூலவர் சன்னிதானத்தைப் படங்கள் எடுக்க அனுமதிக்கிறார்கள். நான் மூலவரைப் படம் எடுக்கத் தயங்குவேன்.

      இந்தக் கோவிலில் கல்லால் ஆன த்வஜஸ்தம்பம் பார்த்தீர்களா? கர்நாடகத்தில் உள்ள கோவில்களில் அனேகமாக இப்படி இருக்கும்.

      நீக்கு
    2. அப்ப, இந்தக் கோயில் போகலையே நெல்லை. ஆனால் மற்ற கோயில்களில், வீட்டின் அருகில் உள்ள கோயிலில் ஆனால் அது சமீபத்தில் கட்டப்பட்ட கோயில் சிவன் கோயில் அதில் கல்தூண் தான் கொடிமரம். அப்புறம் வேறு சில கோயில்களிலும் பார்த்திருக்கிறேன் பழமை என்று சொல்ல முடியாட்டாலும் கொஞ்சம் பழைய கோயில் ஆனால் படம் எடுக்கவில்லை...டக்குன்னு என்ன கோயில் என்று நினைவில்லை.

      மூலவரை எடுக்க நானும் தயங்குவேன். பிராகாரத்துல எடுக்க முடியும் நானும் க்ளிக்கிடுவேன். இனி இப்படிச் செல்லும் போது பார்க்கிறேன் நினைவு வைத்துக் கொண்டு.

      கீதா

      நீக்கு
    3. த்வஜஸ்தம்பம் என்பதில் மரமும் அதைச் சுற்றி உலோக்க் கவசமும் அதன் இடையே வரகு போன்ற தானியங்களும் இருக்கும். பொதுவாக பனிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டியிருக்கும். அதனால் கற்றூண் வைக்கும் பழக்கம் பல கோவில்களில் வந்திருக்கலாம்.

      நீக்கு
    4. ஆமா, நெல்லை, மரத்தைச் சுற்றி உலோகக் கவசம்...இப்பல்லாம் தானியம் எங்க? மரம் எங்க அதான் கல் தூண் வைக்கறாங்க போல..

      கீதா

      நீக்கு
  5. ஹொசஹொலாலு - அங்க என்ன விசேஷமோ? அடுத்த பதிவில்வந்திருமே...

    படங்களும் விவரங்களும் சூப்பர், நெல்லை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த பதிவிலா இல்லை அடுத்து பலப் பல பதிவுகளிலா? காத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

      நீக்கு
  6. கோயிலுக்கு நல்ல வெயிலில் சென்றுள்ளீர்கள். வெக்கை அனல் வீசுகிறது. 4800 வருடம் என்பது மிகை படுத்தப்பட்டதாக தோன்றுகிறது. படங்கள் பெரிதாகவே வெளியிட்டது நன்று.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா.... வாங்க ஜெயகுமார் சார். கொதுவா கர்நாடகத்தில் வெயிலின் தாக்கம் குறைவு. வேர்வை வழிந்துகொண்டெல்லாம் கஷ்டப்படும்படி இருக்காது.

      ஆண்டுக்கணக்கில் எனக்கு மிகைப்பட்டதுபோலத் தெரிவதில்லை. நான் இப்போது எழுதும் இடங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இராமானுசர் வந்துபோனவை. அதற்கு முன்பான அரசர்களின் வரலாறு இருக்கிறது. தஞ்சையில் கல்லணை கட்டிய கரிகால் வளவனின் ஆண்டு என்னவாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?

      நீக்கு
  7. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த நாள் இனிய நாளாக அனைவருக்கும் அமைவதாக, துரை செல்வராஜு சார்.

      நீக்கு
  8. ஆ...   குலோத்துங்கன் கொடியவனா?  இல்லை அங்குள்ள அறிஞர், அமைச்சர் கொடியவரா?  என்ன ஒரு பாதகச்செயல்... 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவனுடைய மகன், தேவையில்லாததற்கு தன் அப்பா எவ்வளவு உழைப்பையும் அரசாங்கப் பணத்தையும் வீணடித்திருக்கிறார் என்று உணர்ந்து இந்த மாதிரி சமயத்தை அரசியலில் கலக்கும் செயலை விட்டு நீங்கினான் என்று படித்திருக்கிறேன். குலோத்துங்கள் பிற்காலத்தில் தொண்டையின் தொற்றுக்கிருமியினால் பாதிக்கப்பட்டு, கஷ்டப்பட்டு பிறகு மரணத்தைத் தழுவினான். அவர் பெயர், கிருமி கண்ட (கழுத்து) சோழன் என்று பெயராயிற்று.

      நீக்கு
    2. எனக்கு உங்கள் கருத்தைப் படித்தவுடன், காசை வாங்கிக்கொண்டு அரசாங்கத்திற்கு அல்லது கட்சிக்கு அல்லது தலைமைக்குப் பாதிப்பு வரும் என்பதற்காக பல செய்திகளை மறைக்கும் இன்றைய ஊடகங்களும், தெரிந்தே அநியாயங்களுக்குத் துணை போகும் அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் போன்றோரின் நினைவு வந்துபோயிற்று

      நீக்கு
  9. சைவமோ, வைணவமோ ஜைனமோ எல்லாமே இறைவனை நோக்கிய பயணம்தானே...   இதில் உன் பாதையிலிருந்து மாறி என் பாதைக்கு வா என்று ஏன் மாற்றவேண்டும்? என் பாதை உன் பாதையை விட உயர்ந்தது என்கிற மனோபாவமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேர்மையாக எழுதுவதென்றால், 'நான் கண்ட பாதை மிக நல்லது, தெளிவானது' அதனால் அந்தப் பாதைக்குத் திரும்புங்கள் என்று நல்ல எண்ணத்தில் சொல்வது ஒரு விதம். அதிகாரத்தால், இந்தப் பாதைக்கு வா, இல்லையென்றால் இது தண்டனை என்று மிரட்டி பாதை மாறவைப்பது ஒரு விதம். ஆசை காட்டி, அல்லது மாறுவதால் வரும் சொந்த நன்மையை முன்னிட்டு மாற்றுவது ஒரு விதம். சில நேரங்களில் சொந்த அனுபவத்தை முன்னிறுத்தி பாதை மாறுவதும் உண்டு.

      நீக்கு
    2. ஸ்ரீராம் எனக்கும் இதே கருத்து உண்டு. கோயிலுக்குச் சென்றாலும், நான் இறைவனை அரூபசக்தி ரூபமாகத்தான் பார்க்கிறேன். இது சிறு வயதிலிருந்து வந்துவிட்டது. என் தனிப்பட்ட எண்ணம், பிரார்த்தனை முறை....

      கீதா

      நீக்கு
  10. //இந்தக் கோவிலுக்கு சுற்றுவட்டார முஸ்லீம் மக்களும் வருகின்றனர்  இறைவன் ஒருவனே அல்லவா? //

    அவர்கள் நம்ம தெய்வங்களை வணங்க வந்தால் இறைவன் ஒருவனே என்று சிலாகிக்கிறோம்.  நம்மவர்கள் அங்கு சென்றால் மதத்துரோகம் என்று கொந்தளிக்கிறோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி யாரும் சொல்லுவதாக எனக்குத் தெரியவில்லை ஸ்ரீராம். எந்தக் காரணத்திற்காக மதம் மாறுகிறார்கள் என்பதைப் பொறுத்து நம் opinionகள் உருவாகின்றன. பொதுவாக திருமணத்திற்காக மதம் மாறுபவர்களும், பணத்திற்காக மதம் மாறுபவர்களும்தான் தற்காலத்தில் மிக அதிகம்.

      நீக்கு
  11. பொதுவாக பார்க்கும்போது நீங்கள் பார்த்துள்ள இந்த இடங்களை எல்லாம் நானும் பார்க்கும் ஆவல் வருகிறது.  பார்க்க வேண்டிய இடங்களை எந்த அடிப்படையில், என்ன வரிசையில் தெரிவு செய்கிறீர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில நேரங்களில் வரலாறு சம்பந்தப்பட்ட நிகழ்வு (படித்தது) அல்லது கோவிலின் சிற்ப, கட்டிடச் சிறப்பு போன்றவை தூண்டுகோல்களாக இருந்தாலும், என்னைப் பொறுத்தவரையில் வைணவ திவ்யதேசங்கள், அபிமானத் தலங்கள் மற்றும் புகழ் வாய்ந்த கோவில்கள் அனைத்தையும் (திருவையாறு, திருவானைக்காவல்....என்று மிகப் பெரிய லிஸ்ட் உள்ளது) தரிசிக்க எனக்கு ஆவல் உண்டு. ஒரு காலத்தில் கயிலாய தரிசனமும் செய்யணும் என்ற எண்ணம் இருந்தது, அது நிறைவேறவில்லை. வரும் வருடத்தில் இரண்டாவது முறையாக சாளக்ராமம்/முக்திநாத் கோவிலுக்குச் செல்லும் எண்ணம் உள்ளது.

      நீக்கு
  12. காலையில் ஸ்ரீ நரசிம்ம தரிசனம்.. மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  13. வழக்கம் போல சிறப்பான தகவல்களுடன் அழகிய படங்கள்..

    ஸ்ரீ நரசிம்ம
    ஜெய நரசிம்ம
    ஜெய ஜெய நரசிம்மா..

    பதிலளிநீக்கு
  14. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  15. கோவில் வரலாறு, மிக அருமை. விரிவான விளக்கம்.
    மிதுன சாளக்ராமம் தரிசனம் கிடைத்தது இன்று.
    படங்கள் எல்லாம் கோவிலை தரிசனம் செய்த உணர்வை தந்தன.
    யோக நரசிம்மர் கல் திருவாச்சி மிக அழகு.

    //ஸ்வாமி சிலாரூபத்தின் பின்னால் 17, 13 என்று போட்டுள்ள கற்பலகைகளைக் காணலாம். பொதுவாக பழமையான கோவில்களில் இந்த மாதிரி, கற்களுக்கு நம்பர் போட்டிருப்பார்கள். ஏதாவது நேர்ந்து சிதிலமடைந்தால், பழைய நிலையில் கற்களை அடுக்குவதற்காகவும், இன்னொரு இடத்தில் வைக்க நேர்ந்தால், பழைய மாதிரியே கற்களை அடுக்கவும் இதனைச் செய்கிறார்கள். அடுத்த முறை பழைய கோவில்களுக்குச் செல்லும்போது இப்படி இருக்கிறதா என்று பாருங்கள்.//

    நான் பார்த்து இருக்கிறேன். கற்களில் நம்பர் போட்டு இருப்பதற்கு காரணத்தை என் கணவரிடம் கேட்டு தெரிந்து கொண்டு இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருவாச்சியை ரசித்ததற்கு நன்று கோமதி அரசு மேடம். சில நேரங்களில் கோவில் சிதிலமடைய நேர்ந்தால், கற்களின் எண்கள் திரும்ப அவற்றை வைக்க உதவியாக இருக்கும்.

      நீக்கு
  16. @ அன்பின் ஸ்ரீராம்..

    /// அவர்கள் நம்ம தெய்வங்களை வணங்க வந்தால் இறைவன் ஒருவனே என்று சிலாகிக்கிறோம்.  நம்மவர்கள் அங்கு சென்றால் மதத்துரோகம் என்று கொந்தளிக்கிறோம்!.. ///

    இங்கே யாரும் கொந்தளிக்க வில்லையே!..

    அவர்களுடைய பூர்வதேசத்தின் புனித தலத்தில் ஸ்ரீராம் ஸ்ரீராமாக இருக்கும் வரை நுழைவதற்கு அனுமதி இல்லை என்பது தெரியுமா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது அந்த அந்த மதங்களின் நெறிகள் மற்றும் நிர்வகிப்பவர்களின் கண்டிப்பு போன்றவைகளின் காரணமாகத்தான். பொதுவா சனாதன மதம் என்று சொல்கின்ற இந்துமதம், 'உண்டு' 'இல்லை' என்பதையும் கருத்தாகத்தான் பார்க்கிறது. 'இதைச் செய்', 'இதைச் செய்யாதே' என்று சொன்னாலும், அதை மிரட்டி கடைபிடிக்க வைக்க யாரையுமே authority என்று சொல்வதில்லை. அதனால்தான் விருப்பம் இருந்தால் கோவில் செல்கிறோம், விரும்பினால் வணங்குகிறோம், இல்லையென்றால், வயதானபின் பார்த்துக்கொள்ளலாம், இப்போ ஜெயிலர் படத்துக்கு முண்டியடி என்று இருந்துவிடுகிறோம். ஹா ஹா

      நீக்கு
  17. ஆடுதுறைக்கு பக்கம் நரசிங்கம் பேட்டை யில் யோக நரசிம்மர் கோவில் இருக்கிறது. அங்கு நேர்ந்து கொண்டு தேங்காய் கட்டுவார்கள். மூலவர் யோக நரசிம்மரை மூன்று முறை வலம் வருவார்கள். காரிய சித்தி அனுமனை 11 முறை வலம் வருவார்கள்,
    இப்படி வேண்டி கொண்டு தேங்காய் கட்ட முஸ்லீம் மக்களும் வருவார்கள். வேண்டுதல் நிறைவேறி இருப்பதாக சொல்வார்கள்.
    நம் மக்கள் பள்ளி வாசல் போய் வணங்கி வருவார்கள். அங்கு தெளிக்க படும் நீர், மயில் இறகு வருடல், சாம்பிராணி புகை குழந்தைகளுக்கு நல்லது என்று அழைத்து போய் முடிகயிறு கட்டி வருவார்கள். எந்த மதமாக இருந்தாலும் இறைவன் மேல் நம்பிக்கை வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கோமதி அரசு மேடம். நானும் வேளாங்கன்னி போன்ற கிறித்துவ ஆலயங்களுக்கும் நாகூர் தர்கா போன்ற இடங்களுக்கும் முன்பு சென்றிருக்கிறேன். பக்தியும், அங்கும் நம் 'அபிமான தெய்வ உருவை' வணங்கும் மனமும் இருந்தால் போதுமானது.

      நீக்கு
    2. கோமதிக்கா, நெல்லை நானும் சென்றிருக்கிறேன். இறை எனும் சக்தியை நினைத்தால் போதுமே!!

      கீதா

      நீக்கு
  18. இங்கே கிரிவலப் பாதையில் யாரும் பிரியாணிக் கடை வைக்கலாம்.. பெரிய கோயிலில் பிரகாரத்தில் கோழி 65 தின்னலாம்.. பழனியில் பாதி எங்களுக்கு என்று பேசலாம்.. சொக்கநாதர் பெயரைக் கூட மாற்றலாம்..

    அதற்கு நாலுபேர் ஜால்ரா அடிக்கலாம்..

    காரணம் இதெல்லாம் சுற்றுலா இடங்கள்..

    அங்கே அதெல்லாம் முடியாது..

    இறைவன் ஒருவன் தான்..
    உண்மை..

    யாருடையவன் என்பது தான் பிரச்னை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ...இங்கே கிரிவலப் பாதையில் யாரும் பிரியாணிக் கடை வைக்கலாம்..//

      சற்றுமுன் The Hindu-வில் படித்தேன்: Ban on non-vegetarian hotels on Girivalam path in Tiruvannamalai not possible: Minister E.V. Velu
      (திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அசைவ ஹோட்டல்களைத் தடுக்க வாய்ப்பில்லை- மந்திரி இ.வி.வேலு.

      கோவில் வளாகத்துக்குள்ளேயே யாராவது அசைவ உணவகம் திறந்தாலும், அதைத் தடுக்க வாய்ப்பில்லை என்று மாண்புமிகுகளால் சொல்லப்பட்டாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

      நீக்கு
    2. இந்துக்களுக்கும், கோவில்களுக்கும் அதன் நடைமுறைகளுக்கும் எதிரானவர்களுக்கு, இப்படித்தான் சிந்தனை தோன்றும். கிரிவலப்பாதையாவது, இந்துக்களின் உணர்வாவது.

      நீக்கு
  19. @ அன்பின் கோமதிஅரசு

    /// எந்த மதமாக இருந்தாலும் இறைவன் மேல் நம்பிக்கை வேண்டும்..///

    நாம் நமக்குக் காட்டப்பட்டிருக்கும் இறைவனிடம் நம்பிக்கை வேண்டும்..

    பதிலளிநீக்கு
  20. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  21. படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது பிறகு கணினியில் காணவேண்டும்.

    தல வரலாற்று தகவல்கள் சிறப்பு

    பதிலளிநீக்கு
  22. யோக நரசிம்ம ஸ்வாமி கோவில், சாளக்ராமம். தென்னமரம் சூழ இருக்கும் படங்கள் அனைத்தும் அழகு. பலாமரங்கள் காய்த்து தொங்குவதை பார்த்ததும் திருவாவடுதுறை கோவிலில் இப்படி காய்த்து தொங்குவதை படம் எடுத்து பதிவில் போட்டது நினைவுக்கு வருகிறது.
    திருக்குளங்கள் படங்கள் எல்லாம் அருமையாக இருக்கிறது.
    படங்கள் மூலம் கோவிலை தரிசனம் செய்து கொண்டேன்.
    நன்றி.


    பதிலளிநீக்கு
  23. இந்தக் கோயில்கள் எல்லாம் இப்போத் தான் தெரிந்து கொண்டேன். இரண்டாம் குலோத்துங்கன் காலத்திலே தான் நீங்க சொன்ன சம்பவம் நிகழ்ந்திருக்குமோ என நினைக்கிறேன்.அனைத்துப் படங்களுக்கும் கோயில் பற்றிய வரலாற்றுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      நலமா? உங்களை ரொம்ப நாட்களாக காணவில்லையே என தேடிக் கொண்டிருந்தேன். நலமாக இருக்கிறீர்களா? விஷேடங்களுக்காக வெளியூர் பயணமாக இருக்குமோ எனவும் நினைத்தேன். தாங்கள் இன்று இங்கு வந்ததும் தங்களை இன்று கண்டதும் மிக்க மகிழ்ச்சி. நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. வாங்க கீதா சாம்பசிவம் மேடம். அத்தி பூத்தாற்போல்தான் இப்போதெல்லாம் இணையத்துக்கு வருகிறீர்கள். நலமா?

      நீக்கு
  24. வணக்கம் சகோதரரே

    இன்றைய கோவில் பகிர்வு அருமையாக உள்ளது. நான் இன்னமும் பதிவை முழுமையாக படிக்கவில்லை. ஞாயறாகையால் தாமதமாகும் வேலைகளை முடித்து விட்டு மதியம் வாக்கில் இன்று அனைவரின பதிவுகளும் கோவில்களாக இருக்கவே நிதானமாக படித்து கருத்திடலாம் என இருந்தேன். ஆனால், இன்று வீட்டிற்கு ஒரு உறவின் வருகை என காலையில் தகவல் வரவே வேலைகள் மும்முரமாக உள்ளது. அதனால் அது கூட இயலாமல் போகும் என நினைக்கறேன். நாளை அனைவரின் (சகோதரிகள் கோமதி அரசு, கீதாரெங்கன் சகோதரர்கள் துரைசெல்வராஜ், கில்லர்ஜி , மற்றும் அனைவரின் பதிவுகளுக்கும் வருகிறேன்.இன்று வர முடியாமைக்கு மன்னிக்கவும்.) நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதனாலென்ன கமலா ஹரிஹரன் மேடம். மெதுவாக வாருங்கள். இன்று காலை நடைப்பயிற்சி முடித்து லால்பாக் சென்று (மனைவியுடன்) நம் மூத்த பதிவரை (க்கா) அவரது கணவருடன் கண்டு (லால்பாக் பூக்கள் கண்காட்சிக்காக வந்திருப்பார்கள் போலிருக்கிறது) மகிழ்ந்தேன். அவரது பதிவு விரைவில் சில மாதங்களுக்குள் எதிர்பார்க்கலாம், அழகிய பூக்கள் படங்களுடன்.

      நீக்கு
    2. சிரித்துவிட்டேன் நெல்லை....அதுவும் சில மாதங்களுக்குள் எதிர்பார்க்கலாம் - பலன்னு சேர்த்துக்கோங்க!!! ஹாஹாஹாஹாஹாஹா...எனக்கும் மகிழ்ச்சியே. வீட்டுக்காரரைப் பார்க்கணும்னு லால்பாகிற்கு வந்தீங்களே அதுவே பெரிய விஷயம் நெல்லை, உங்க ஹஸ்பன்ட் செமையா கலாய்க்கறாங்க...கூடவே நீங்க ரொம்ம்ம்ம்ம்ம்ப பிஸின்னும் தகவல் கொடுத்தாங்க...நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
    3. வணக்கம் சகோதரி

      இன்று நீங்கள் மலர் கண்காட்சிக்கு அவசியம் செல்லக்கூடுமென நேற்றே ஊகித்தேன். அதனால் இன்று காலையிலேயே சீக்கிரம் எழுந்து வேலைகளை முடித்து விட்டதாகவும், வெளியில் செல்ல வேண்டுமெனவும் வேறு நீங்கள் பதிவின் கருத்துக்களில் கூறியிருப்பதை கவனித்தேன். நாங்களும் வந்தால் உங்களை அங்கு எங்காவது சந்திக்கலாம் என்று கூட மகளிடம் சொன்னேன். (எந்த தொடர்பும் இல்லாமல் அவ்வளவு கூட்டத்தில் எப்படி இது சாத்தியம் என்றும் ஒரு ஐயம். .) ஆனால், வழக்கப்படி இன்று பயங்கர கூட்டமிருக்கும் என வீட்டில் மலர் கண்காட்சிக்கு செல்வதை தவிர்த்து விட்டார்கள்.

      சகோதரர் நெல்லைத்தமிழர் அவர் குடும்பத்துடன் வந்து தங்களை சந்தித்தது மகிழ்ச்சி. அவர் பதிவுகளின் மூலமாகவும், தங்கள் பதிவுகளின் மூலமாகவும் விரைவில் இந்த வருடத்திய கண்காட்சியின் அழகிய மலர்களிளுடனான அணிவகுப்புகளை காண ஆவலாக இருக்கிறேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  25. மறையும் கருத்துகளை எபி யின் 'காவல் பூதங்கள்' அழைத்து வருமா?

    பதிலளிநீக்கு


  26. வேளாங்கண்ணி கிறித்துவ ஆலயத்தில் ஏன் நமது இறை உருவை சிந்திக்க வேண்டும்?..

    நம் 'அபிமான தெய்வ உருவை' வணங்கும் மனமும் இருந்தால் போதுமானது.

    ஒருகாலத்தில் நானும் இப்படித்தான் இருந்தேன்..

    பதிலளிநீக்கு
  27. வேளாங்கண்ணியிலும்
    நாகூரிலும் பழைமையான சிவன் கோயில்கள் இருக்கின்றன.. நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் அந்த சிவ ஆலயங்கள்?..

    வேளாங்கண்ணி கிராமத்தின் நுழைவாயிலில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு நேர்ந்த இன்னல்கள் எத்தனை எத்தனை?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட ஆண்டவா! இப்படியெல்லாம்வேறு நடந்திருக்கிறதா வேளாங்கண்ணியில்? தமிழ்நாட்டில் இன்னும் என்னென்ன நடக்கவிருக்கிறதோ..

      நீக்கு
    2. வேல் நெடுங்கண்ணி, அங்கே இருந்த அம்பிகை

      நீக்கு
  28. தகவல்கள் மற்றும் படங்கள் அனைத்தும் சிறப்பு. தொடரட்டும் கோயில் உலா.

    பதிலளிநீக்கு
  29. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    இன்றைய கோவில் தரிசனங்கள் பகுதி பதிவும் படங்களும் நன்றாக உள்ளது.

    ஸ்ரீ யோக நரசிம்மரையும், கோவிலையும் தரிசித்துக் கொண்டேன். ஸ்ரீ இராமானுஜர் பற்றிய செய்திகளும் அவரின் இந்த கோவில் பணிகளையும் பற்றி தெரிந்து கொண்டேன். ஒரு இறை அடியவரை துன்புறுத்த அவர் அந்த இறைவனருளால் செல்லும் ஒவ்வொரு இடத்திலும் அங்குள்ள அரசருக்கும் முற்பிறவி கர்மாக்கள் வந்து அமையும் போலிருக்கிறது. அதன் மூலம், அந்த அரசரையும், தன்னையே எப்போதும் நினைத்திருக்கும் அடியார்களையும் இறைவன் மேன்மைபடுத்தி நல் வழிகளை காண்பிக்கிறார். இதை காலங்காலமாக படித்து தெரிந்தும், படித்து உணர்ந்தும் வளரும் விஞ்ஞான யுகத்தில் இறைசக்தி பொய்யெனக் கூறும் மனிதர்களும் இருக்கின்றனர். என்ன விந்தை..! இறைவனின் படைப்பக்களில் என்ற எண்ணம் வருகிறது.

    தாங்கள் குறிப்பிட்ட ஸ்ரீ இராமானுஜரின் பாதம் அலம்பிய தீர்த்தக்குளமும், அவர் சீடரின் கால் பட்ட குளத்தின் தீர்த்தமும், வற்றாமல் அதே நிலையோடு இன்று வரை இருப்பது ஒரு தெய்வ சக்திதானே ..! அவ்விடங்களை கண்டு தரிசித்துக் கொண்டேன். ஸ்ரீ இராமானுஜரின் பாதங்கள் பதிந்த கோவிலையும் வணங்கிக் கொண்டேன்.

    படங்களும், அதன் விளக்கமும் எப்போதும் போல நன்றாக எடுத்துள்ளீர்கள். இயற்கை படங்களும் அருமை. தென்னை மரங்கள் நம் முகம் பார்த்து நலம் விசாரிக்கும் படம் அருமையான கோணம். ரசித்தேன்.

    அடுத்து சென்ற இடங்களைப் பற்றியும் அறிய ஆவலாக உள்ளேன். தெரியாத கோவில்கள், அதன் விபரங்கள் என நீங்கள் தொகுத்துத் தரும் இந்தப் பதிவுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா ஹரிஹரன் மேடம். இன்று வடுவூர் சஹஸ்ர கலசாபிசேஷகத்தில் கலந்துகொள்ளும் பேறு. பிறகுவிளக்கமா எழுதறேன்

      நீக்கு
  30. படங்களும் கோவில் விபரணங்களும் அருமை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!