திங்கள், 21 ஆகஸ்ட், 2023

"திங்க"க்கிழமை : Schezwan Peas and Beans Fried Rice - JKC ரெஸிப்பி

 

Schezwan Peas and Beans Fried Rice
(by JKC)




வேண்டிய பொருட்கள்


1/ ஸ்செஸ்வான் சாஸ்,

2/ வடித்த புழுங்கல் அரிசி சோறு

3/ காய்கறி கடைகளில் கிடைக்கும் பச்சை பட்டாணி

4/ பச்சை பட்டர் பீன்ஸ்

5/ பச்சை சோயா பீன்ஸ்

6/ பச்சை நிலக்கடலை.


பச்சை பட்டாணி போன்றவை இல்லையேல் உங்கள் விருப்பத்திற்கேற்ப வேண்டிய உலர்ந்த பீன்ஸ் வகைகளை (ராஜ்மா, ஸ்வீட் கார்ன், சன்னா, பட்டாணி போன்றவை) எடுத்துக்கொள்ளுங்கள்.

சுவை கூட்ட முந்திரி, மற்றும் கிஸ்மிஸ் உபயோகிக்கலாம். அதே போல் வெங்காயம், சோயா சாஸ், ஸ்வீட் தக்காளி சாஸ் என்பவையும் சேர்க்கலாம்.

சோற்றுக்கு நான் உபயோகித்தது கர்நாடகா டீலக்ஸ் பொன்னி அரிசி

செய்முறை

ஒரு வாணலி அல்லது வோக்கை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் நெய் அல்லது எண்ணெய் ஊற்றிக்கொள்ளவும்.

வேக வைத்த பட்டாணி மற்றும் பீன்ஸ் வகையறாக்களை எண்ணையில் சிறிது நேரம் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். முந்திரி கிஸ்மிஸ் சேர்ப்பதானால் அதையும் சேர்த்து கொள்ளவும்.

பின்னர் சோற்றை வாணலியில் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டிக் கொள்ளவும்.

செஸ்ஸுவான் சாஸை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து தேவையான அளவு காரம் வந்தவுடன் நிறுத்தி உப்பு சேர்த்து நன்றாக பிரட்டிக்கொள்ளவும்.


இதற்கு தொட்டுக்கொள்ள ஜவ்வரிசி வடாம், lays, pringles, bingo, mad angles போன்ற சிப்ஸ் வகையறா, kurkure, fryums போன்றவை, அப்பளம், ரைத்தா, ஓமப்பொடி, காராபூந்தி போன்ற நம்கீண் வகையறா நன்றாக இருக்கும்.

இந்த வகை சோற்றில் பட்டை கிராம்பு போன்ற மசாலா பொருட்கள் இல்லை என்பதை கவனிக்கவும்.

10 கருத்துகள்:

  1. சுலபமான செய்முறை விளக்கம் அருமை ஐயா

    பதிலளிநீக்கு
  2. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. சுலப செய்முறை அருமை. நான் செஷ்வான் சாஸ் சாப்பிடும் வழக்கம் இல்லை

    பதிலளிநீக்கு
  4. ஒவ்வாமை பிரச்னை உடையவர்களுக்கு இந்த Sauce நல்லதல்ல..

    பதிலளிநீக்கு
  5. அடி பொளி! கேட்டோ! ஜெ கே அண்ணா.

    நம் வீட்டில் புதுசு புதுசா செய்வதை விரும்பும் கூட்டம். எது செஞ்சாலும் அஞ்சாமல் சாப்பிட்டுப் பார்ப்பாங்க. அப்படி இந்த Schezwan சாஸ் எனக்குத் தெரிய வந்த போது கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேல் இருக்கும் அப்ப செஞ்சு...சாஸும் வீட்டிலேயே செய்து....செய்ததுண்டு..

    கப்புல நீங்க வைச்சிருக்கறத பார்த்தவுடன்....ஆஹா கைக்கு எட்டலையேன்னு. சிவப்பு பீன்ஸ் பட்டர் பீன்ஸ் ரொம்ப தோஸ்த் இந்த வகை சாதத்துக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. பொதுவாக அப்பல்லாம் இப்படியானவை புதுசாக செய்வது உண்டு என்பதால் எல்லா வகை சாசும் தயாரித்து வைச்சுக்குவேன். இப்பவும் புதிதாகச் செய்வதை எதிர்பார்க்கறாங்கதான்....ஆனால் வீட்டில் சிறுதானிய பயன்பாடு. அதனால் எப்போதாவது என்றாகிவிட்டது.

    மேசை மேல இருக்கறதைப் பார்த்ததும் கொஞ்ச நாள் மறந்ததெல்லாம் நினைவு படுத்திட்டீங்களேன்னு. . பட்டர் பீன்ஸ் சிவப்பு பீன்ஸ் எல்லாம் கிடைக்குதே....செய்துவிடலாம்னும் ஆசை.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. கொண்டைக்கடலை, பட்டாணி, ராஜ்மா போன்றவை போட்டு இவ்வகை சாதங்கள் செய்தாலும் இந்த சாஸெல்லாம் பயன்படுத்தியது இல்லை. தக்காளி ப்யூரி எடுத்துக் கொண்டு வழக்கம்போல் காரப்பொடி, தனியாப்பொடி, ஜீரகப்பொடி பயன்படுத்திப்பேன். ஒரேயடியாக சாஸில் செய்யப் பிடிக்கிறதில்லை. மற்றபடி விருந்துகளில் இவ்வகை சாதம் சாப்பிட்டுப் பார்த்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
  8. நாவால் ருசிக்க முடியாதெனினும் கண்ணால் ருசித்து கருத்து சொன்னவர் யாவர்க்கும் நன்றி.
    Jayakumar

    பதிலளிநீக்கு
  9. மிக எளிமையான செய்முறை. படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!