புதன், 2 ஆகஸ்ட், 2023

வாரிசு நடிகர், நடிகைகளில் உங்களைக் கவர்ந்தவர் யார்?

 

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

வாரிசு நடிகர், நடிகைகளில் உங்களைக் கவர்ந்தவர் யார்? இந்த லிஸ்டில் இசைக் கலைஞர்கள், அரசியல்வாதிகளையும் குறிப்பிடலாம்.

# நடிகர் நடிகைகள் யாருமில்லை. இசைக் கலைஞர் வரிசையில், மகாராஜபுரம் சந்தானம் ஓரளவு சொல்லலாம்.

& நடிகைகளில், தேவிகா & கனகா என்று சொல்லலாம். நடிகர்களில் சிவாஜி, பிரபு என்று இருந்தாலும் தற்கால பிரபு ஏனோ எனக்குப் பிடிக்கவில்லை. சிவகுமார் & சூர்யா ஓரளவுக்குப் பிடிக்கும். இசைக் கலைஞர்களில், மதுரை மணி அய்யர் & (நேர் வாரிசாக இல்லாதபோதிலும்() டி வி சங்கரநாராயணன். 

மாற்றம் என்பது வளர்ச்சிதானே? பிறகு ஏன் நாம் வசித்த ஊர்கள் மாறும்பொழுது முன்பு போல் இல்லையே என்று வருந்துகிறோம்?

# முன்னேற்றமான மாற்றம் வரவேற்கத் தக்கது. 

எனினும் கிராமிய சூழல் மறைந்து நகரத்தின் நெரிசல் தலை தூக்கும்போது ஒரு சிறு வருத்தம் வரத்தானே செய்யும்?

மாறாக கடந்த காலத்தை விட நலிவுற்ற நிலையில் உள்ள சூழல் தரும் வலியும் சோகமும் கொடுமைதான்.

& நாகையிலிருந்து சென்னை வந்தபோது நான் சந்தோஷமாகத்தான் இருந்தேன். சென்னையிலிருந்து பெங்களூரு வந்ததும் இங்கேயும் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். ஆக, முன்பு போல் இல்லையே என்ற வருத்தம் எனக்கு இல்லை. 

ஜெயக்குமார் சந்திரசேகரன் : 

செயற்கை நுண்ணறிவு மென்பொருள் ஏதாவது உபயோகித்திருக்கிறீர்களா??  ChatGPT பற்றி சொல்ல முடியுமா? ஏன் எதற்கு எப்படி......

# ChatGPT யில் சில உள்ளீடுகள் கொடுத்து விடை சரி பார்த்தேன். சில சமயம் தவறான விடைகள் வருகின்றன. பல்வேறு வகையாக சோதிக்க இயலும் என்று தெரிந்து கொண்டேன்.

ChatGPT யில் பல வகை app இருக்கின்றன என்று நினைக்கிறேன். நான் சோதனை செய்ய நிறுவிய ஒரு ChatGPT app ல நான் கேட்ட கேள்வியும், அது கொடுத்த பதிலையும் கீழே கொடுத்துள்ளேன். 

நான் : ஜெயகுமார் சந்திரசேகரன் யார்? 

Chat GPT: ஜெயகுமார் சந்திரசேகரன் நம்பிக்கைக் கோவிலின் கோவில்சீதன்காரை நகரில் உள்ள கோவில்சீதன்காரை ஆசிரியர் மற்றும் பிராபிக ஜோதிட நிலையாளியான இந்திரன் சந்திரசேகரன் அவர்கள் ஆவார். இவர் ஜோதிட சாஸ்திரத்தில் அரசியல் ஜோதிடத்தின் உயர்நிலை நிலைமையை எடுத்து விட்டவர். இவர் மூன்று புராணங்கள் அரசியல், சங்க புராணம் மற்றும் அகத்தியர் புராணம் மேல் பாரம்பரிய அரசியல் ஜோதிடம் பற்றிய நிகழ்ச்சிகளை கைகளில் கொண்டவர்.

சரி, தமிழில் கேட்டால் எதையோ சொல்கிறது என்று - ஆங்கிலத்தில் கேட்டேன் ! 

அடக் கடவுளே! இந்த செயற்கை நுண்ணறிவு செப்டம்பர் 2021 க்குப் பிறகு காலேஜுக்குப் போகவில்லையாம்!! சரியான மண்டு! 

நெல்லைத்தமிழன் : 

மூன்று வாரங்களுக்கு முன் அதிகாலையில் வளாகத்தில் நடந்துகொண்டிருந்தபோது, பாதையில் வயதான புறா இருந்தது. நான் அதன் அருகில் நடக்கும்போதும் அசையவில்லை. நான் தொந்தரவு கொடுக்காமல் நடந்துகொண்டிருந்தேன். வயது அதிகமாகி இறக்கப்போகிறது என நினைத்தேன். இரண்டாவது சுற்று வரும்போது ஒரு காக்காய் அந்தப் புறாவைக் கொத்தியது. புறா சிறகை அசைத்து எனக்கு உயிர் இருக்குறது எனக் காட்டியது. காக்கை ஒரு சில முயற்சிக்குப்பின் பக்கத்து மதிலில் அமர்ந்திருந்தது. புறாவை மீண்டும் தாண்டிச் செல்லும்போது அதன் முதுகுல் காக்காய் அலகால் ஏற்பட்ட பல காயங்கள் இருந்தன. என் மனதில் என்ன செய்யலாம் என யோசித்தேன். புறாவை விரட்டினால் காக்காயின் உணவைப் பறித்த பாவம் வருமா இல்லை புறாவை (அப்போது) தப்பிக்கவிட்ட புண்ணியம் வருமா? இந்த மாதிரிச் சூழலில் என் செயல் என்னவாக இருக்கும் என யோசித்தேன். நம் வேலை இதில் தலையிடாமல் இருப்பதுதான், இது இயற்கையின் சங்கிலி என நினைத்தேன். அடுத்த சுற்று வரும்போது, எனக்கு முன்னால் சென்றுகொண்டிருந்தவர், அந்தப் புறாவைத் தூக்கி புதருக்குள் விட்டார். இது ஏன் எனக்குத் தோன்றவில்லை, அப்படிச் செய்வது சரியாக இருந்திருக்குமா என்ற யோசனை. புகைப்படங்களுடன் புதன் கேள்விக்கு அனுப்பலாம் என நினைத்தேன்.



& முன் காலத்தில், ஒரு யாத்ரீகர் வாழ்ந்து வந்தார். அவர் ஊர் ஊராக பயணம் செய்பவர். அவர் ஒருமுறை அப்படிப் பயணம் செய்தபோது வழியில், ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள மரத்தடியில் தன்னுடைய கட்டு சாதத்தை திறந்து சாப்பிட உட்கார்ந்தார். எல்லாம் தயார். ஆற்றில் கைகழுவி, குடிக்கத் தண்ணீர் கொண்டு வரலாம் என்று சென்றார். 

அந்த நேரத்தில், ஒரு கருடன், ஒரு பாம்பைப் பிடித்து வந்து மரக்கிளையில் உட்கார்ந்து, பாம்பைக் கொத்திக் கடித்தது. பாம்பு வலி தாங்காமல் வாயைத் திறந்து, விஷத்தைக் கக்கியது. 

அந்த விஷம் நேரே கீழே இருந்த யாத்ரீகரின் கட்டுசாதத்தில் விழுந்தது. 

யாத்ரீகர் வந்தார், உணவை உண்டார்; விஷம் தலைக்கேறி இறந்து போனார். 

யாத்ரீகரைக் கொன்ற பாவம் யாரைச் சேரும்? இதற்கு பதில் தெரிந்தால், உங்கள் கேள்விக்கும் பதில் கிடைக்கும். 

நிற்க. 

சில வருடங்களுக்கு முன்பு, நான் இந்தக் குடியிருப்பில் காலை நடைப்பயிற்சி சென்றபோது, குடியிருப்பின் நீச்சல் குளத்திற்கு அருகே ஒரு பூனை வேலி அருகே பதுங்கிப் பதுங்கி சென்றுகொண்டிருந்தது. ஏன் அப்படி செல்கிறது என்று உன்னிப்பாக கவனித்தபோது, நீச்சல் குள ஓரத்தில் ஒரு குருவி உட்கார்த்து, இப்படியும் அப்படியும் திரும்பி என்னவோ யோசித்துக் கொண்டிருந்தது. பூனையார், குருவிக்குப் பின்னே நெருங்கி வந்துகொண்டிருந்தார். 

உடனே தாமதிக்காமல், ஒரு சிறு கல்லை எடுத்து குருவியைப் பார்த்து வீசினேன். குருவி பறந்தது; பூனை ஏமாந்தது. இந்த சம்பவத்தில் பல தற்செயல் நிகழ்வுகள்! இதெல்லாம் இப்படி நடக்கவேண்டும் என்று விதி இருந்தால், அப்படித்தான் நடக்கும். ஒன்றும் சொல்வதற்கில்லை. 

= = = = = = = =

எங்கள் கேள்விகள் : 

1) சொந்தக்காரர் அல்லாத உங்களுக்கு மிக மிக பிடித்த நண்பர் அல்லது நண்பி யார்? 

2) தமிழில் சமீபத்தில் வந்த நல்ல நகைச்சுவைப் படம் என்று எந்தப் படத்தைச் சொல்வீர்கள்? 

= = = = =

KGG பக்கம் : 

ஐந்தாம் வகுப்பு படித்த சமயத்தில் வகுப்பில் என் பக்கத்தில் உட்கார்ந்து என்னுடன் கதை பேசிய இன்னொரு நண்பன் கிருஷ்ணமூர்த்தி. அவனுடைய பெயரை எப்பொழுதும் கிருட்டிணமூர்த்தி என்றுதான் சொல்லுவான், எழுதுவான். 

என்னுடைய வீட்டிலிருந்து நான் பள்ளிக்கு எடுத்துச் சென்ற சுடுகாய் (கல்யாணமுருங்கை மரத்தின் விதைகள்; பல்லாங்குழி ஆட பயன்படுத்தப்படும்!) மற்றும் கிழக்கோடி ( சரியான பெயர் இதுதானா என்று தெரியவில்லை. இது சரியான பெயர்தான் என்று அண்ணன் சொல்கிறார். இது ஒரு மருந்துப்பொருள். வீக்கம் குறைக்க இதை அரைத்துத் தடவுவார்களாம்.)  இவைகளை மிகவும் விரும்பியவன் கி மூர்த்தி. சுடுகாய் என்பது புளியங்கொட்டை நிறத்தில் இருக்கும் உருண்டை வடிவான காய். கிழக்கோடி சாம்பல் நிறத்தில் இருக்கும் உருண்டை வடிவான காய். இரண்டு காய்களுக்கும் எனக்குத் தெரிந்த ஒரே உபயோகம் - அவற்றை தரையில் கொஞ்ச நேரம் தேய்த்தால், அவை பயங்கர சூடாகும். அப்படியே யார் மீதாவது அந்த சூடான பகுதியை ஒரு ஒற்று ஒற்றினால்,  அவர்கள் சூடு தாங்காமல் அலறுவார்கள். 

கி மூர்த்தி - பண்டமாற்று முறையில் பல சுடுகாய்களை (பலப்பம் / தின்பண்டம் etc கொடுத்து ) என்னிடமிருந்து வாங்கிச் சென்றான். 

அவனுடைய வீடு நாகை கீரைக்கொல்லைத் தெருவில் இருந்தது. ஒருநாள், மதியம் வீட்டில் சாப்பிட்டபின்பு, அவனுடைய வீட்டிற்கு என்னைக் கூப்பிட்டிருந்தான். என் வீட்டிலிருந்து அருகேதான் இருந்தது அவனுடைய வீடு. அடையாளம் சொல்லியிருந்ததால், நேரே அவன் வீட்டுக்குச் சென்றிருந்தேன். 

அவனுடைய வீட்டில் என்னை, " சாப்பிடுகிறாயா? " என்று அவனுடைய அம்மா கேட்டார்கள். " இல்லை - இப்போதான் சாப்பிட்டுவிட்டு வந்தேன்" என்றேன். கி மூர்த்தியிடம், " வாடா - நாம் ஸ்கூலுக்குப் போவோம்" என்றேன். 

அந்த நேரத்தில், அவர்கள் வீட்டுக் கதவைத் திறந்துகொண்டு, ஒரு ஆஜானுபாகுவான போலீஸ்காரர் நுழைந்தார். 

அந்தக் காலத்தில் எனக்கு புலிக்கு அடுத்தபடியாக பயம் அளித்த விஷயம் ஒன்று உண்டு என்றால், அது போலீஸ். 'நான் என்னுடைய வீட்டிலிருந்து திருடிய உப்பு நார்த்தங்காய், சுடுகாய், கிழக்கோடி போன்ற விவரங்கள் போலீசுக்குத் தெரிந்தால், என்னைக் கொண்டுபோய் ஜெயிலில் போட்டுவிடுவார்கள்' என்ற பயம் அப்போது எனக்கு உண்டு. 

போலீஸ்காரரைப் பார்த்ததும் திடுக்கிட்டு எழுந்து திருட்டு முழி முழித்தேன். அவர் என்னிடம், " உக்காரு தம்பி. உன் பெயர் என்ன? " என்று கேட்டார். சொன்னேன். 

" அப்பா எங்கே வேலை பார்க்கிறார்? " 

சொன்னேன். 

" அய்யர் பையனா? " எனக்கு இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. 

அவர் இதற்கு பதிலும் என்னிடம் எதிர்பார்க்கவில்லை. 

கி மூர்த்தி பவ்யமாக அவரிடம், " அப்பா - எங்களுக்கு ஸ்கூலுக்கு நேரம் ஆயிடுச்சு, நாங்க போகணும்" என்றான். 

ஆ! கி மூர்த்தி போலீஸ்காரர் மகனா! எனக்குத் தெரிந்து அந்தக் காலத்தில் போலீஸ்காரர் என்பது மிகப்பெரிய உத்தியோகம். 

அன்றிலிருந்து நான் வீட்டில் திருடிய எந்தப் பொருளையும் கி மூர்த்திக்குக் கொடுக்கவில்லை. 

போலீஸிடம் மாட்டிக்கொள்ளக் கூடாது அல்லவா! 

= = = = = = =

82 கருத்துகள்:

  1. இன்று சீக்கிரமே எழுந்துவிட்டதால் பதிவைப் படித்தேன் (சில பகுதிகளை). கருத்து பிறகு எழுதறேன்.

    பூனை குருவி யோசிக்கவேண்டிய விஷயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். எல்லாவற்றிற்கும் ஏதோ ஒரு விதி இருக்கிறது.

      நீக்கு
    2. காட்டில் ஹௌலர் குரங்குகள், மான்கள் சுற்றிலும் மேய்ந்துகொண்டிருக்கும்போது, சிங்கம் புலி போன்றவற்றை ஸ்பாட் செய்தால் கத்தி, மான்கள் போன்றவற்றை அலர்ட் செய்யும். இயற்கையின் போக்கில் நாம் நுழையலாமா என்ற கேள்வி எழுகிறது.

      அப்படி எண்ணினால் வேகமாக ஆட்டோ அல்லது பஸ் வரும்போது, தெரியாமல் நடக்கும் குழந்தையைக் காப்பாற்ற முயல்வோமே... அப்கோது ஏன் அவரவர் விதி என்று நமக்குத் தோன்றுவதில்லை?

      இங்கு புறாவையோ குருவியையோ காப்பாற்றும்போது, காக்காய், பூனை ஆகியவற்றின் உணவை மறுக்கிறோமே என்று நினைத்தால், அதே பூனை நாம் வளர்க்கும் கிளியை கபளீகரம் செய்ய வந்தால், இல்லை மலைப்பாம்பு வருவது தெரிந்து குழந்தையை அப்புறப்படுத்தும்கோதும் நாம் அதைத்தானே செய்கிறோம் எனத் தோன்றுகிறது.

      நீக்கு
    3. ஆமாம்... கீதா சாம்பசிவம் மேடத்தைக் காணவில்லையே... அவர் நலமா? இல்லை பிரயாணத்திலா?

      நீக்கு
    4. கீ சா மேடம் பற்றி தகவல் தெரியவில்லை.

      நீக்கு
    5. கீதாக்கா பிஸி. வைத்தீஸ்வரன் கோயிலில் இருக்காங்க..

      கீதா

      நீக்கு
  2. ஐயோ chatgpt யில் போட்டு என்னை துவைத்து எடுத்து விட்டீர்கள். என் சாயம் எல்லாம் போயிடுச்சு.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  3. j k அண்ணாவை ஜோசியராகக் கற்பனை செய்து பார்த்து சிரித்துவிட்டேன். நெற்றி நிறைய விபூதி, நடுவில் சந்தனம், அதன் நடுவில் குங்குமப் பொட்டு,
    அண்ணா ஜோஸ்ஸ்யம் எப்படிச் சொல்லிருப்பார் என்றும் நினைத்து!!!!

    நல்லchatgpt!

    கீதா

    பதிலளிநீக்கு
  4. அது சரி இந்த chatgpt ல பதிவு செய்யணும் போல? 15 நாள் trial என்று வந்தது அப்போ அதன் பின் கட்டணம் கேட்குமோ?

    செயற்கை நுண்ணறிவு என் அறிவுக்கு எட்டியவரை இயற்கையை விஞ்ச முடியாது என்பதே. எபியில் ஒரு கதையும் வந்ததே...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செயற்கை நுண்ணறிவு இன்னும் எனக்கு சரியாக பிடிபடவில்லை!

      நீக்கு
  5. போலீஸ்காரன் மகன்! படிக்கவே த்ரில்லிங்கா இருக்கு!

    பதிலளிநீக்கு
  6. புறா....எனக்குத் தோன்றியது...காக்கைக்கு நிறைய உணவுகள் கிடைக்கும். புறாவைக் கொத்திதான் திங்க வேண்டும் என்று இல்லை. எனவே புறாவுக்கு உயிர் இருந்திருந்தாலும் அதை விரட்ட முடியாது பறக்க இயலாத நிலை. எனவே அப்படியான நிலையில் காப்பாற்றுவதே நல்லது. அதை வேறொருவர் புதருக்குள் விட்டது நல்லதுதான். பிழைத்தால் பிழைக்கட்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாய் கீதா :) சேம் பின்ச் .அதே பதில்தான் நானும் எழுதியிருக்கேன் hi 5

      நீக்கு
    2. வாங்க ஏஞ்சல்!!! Great!!!!!!! (Same) minds think alike!!!!!!!!!!!!!!!!!!!!!!! Hi 5

      கீதா

      நீக்கு
  7. வாரிசு கூத்தாடி, அரசியல்வாதிகளை எதற்காக ஆதரிக்கணும் ?

    இது, ரசிகன், தொண்டனின் சாபக்கேடு.

    புறாவை புதருக்குள் விட்டுச் சென்றவரின் செயல் சரியே... வளர்ப்பவர்களாக இருந்தால் வீட்டுக்கு எடுத்து செல்லலாம்.

    பதிலளிநீக்கு
  8. கிராமங்கள் மாறுவது என்பது எதைப் பொருத்து என்பதுதான். ஆசிரியரின் பதிலை டிட்டோ செய்கிறேன். அதன் கிராமிய மணம்மாறாமல் அதே சமயம் கல்வி அறிவு நல்ல சிந்தனைகள், பள்ளிக்கூடங்கள், நூலகம், குடிசைத் தொழில்கள், .....டாஸ்மாக் இல்லாமை, அதிகமான சினிமா தாக்கம் இல்லாமை இதெல்லாம் தான் வளர்ச்சி, முன்னேற்றப் பாதை.

    நிலங்களைக் கூறுபோடுவதும், கிராமங்களின் நுழைவாயிலில் கள்ளுக்கடை வைப்பதும் அல்ல.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. மாற்றம் என்பதற்கும் வளர்ச்சி என்பதற்கும் வித்தியாசம் இருக்கு என்று தோன்றும்.
    அவர் ரொம்ப மாறிட்டார் என்பத நாம் பேச்சு மொழியில் பயன்படுத்தினாலும் மாறிட்டார் என்பது நேர்மறை அல்லது எதிர்மறையாக இருக்கலாம். வளர்ச்சி, முன்னேற்றம் என்பது evolving a system or self என்பது என் புரிதல்.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. சூட்டுக்காய், மறக்கவே முடியாது. இரு வகைகளும் அப்போது உண்டு என்றாலும் சாம்பல் நிறக் காய்தா அதிகம் பயன்படுத்தியவை. தோழிகளுக்குள் சண்டை என்றால் இந்த சூட்டுக்காயை உரசி மற்றவருக்க்த் தெரியாமல் வைச்சுடுவாங்க. நான் மற்றவர்களுக்கு வைத்த்தில்லை எனக்குச் செய்து பார்த்துக் கொண்டதுண்டு ஆனால் மத்தவங்க என் மீது வைத்ததுண்டு அவங்களுக்கு என் மேல கோபம்னா...குறிப்பா பரீட்சையில் என் விடைத் தாளைக் காட்டலைனா....!!!!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //விடைத்தாளைக் காட்டலைனா// - காட்டியிருந்து, ரவர்கள் காப்பியடித்து, ரிசல்டுக்குப் பின் வைக்கவேண்டிய சூட்டுக்காயை முன்னாலேயே ஏன் வைத்துவிட்டார்கள்?

      புதன் கேள்வி... பள்ளித் தேர்வில் காப்பியடித்ததுண்டா? திருட்டுத்தனம் செய்ததுண்டா? பிட் போன்று.

      நீக்கு
    2. /விடைத்தாளைக் காட்டலைனா// - காட்டியிருந்து, ரவர்கள் காப்பியடித்து, ரிசல்டுக்குப் பின் வைக்கவேண்டிய சூட்டுக்காயை முன்னாலேயே ஏன் வைத்துவிட்டார்கள்?//

      ஹாஹாஹாஹாஹா ஹையோ சிரிச்சு முடிலைப்பா..நெல்லை!!!!! .கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      கீதா

      நீக்கு
    3. இதற்கு நான் போட்ட க்ருத்தை காணலியே....

      கீதா

      நீக்கு
  11. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  12. நண்பராக இருப்பதற்கு சொந்தக்கார்ராக இருக்கவேண்டிய அவசியமில்லை. நண்பரிடம் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ள முடியும்.

    எனக்கு ஒரே ஒரு நண்பன் என் 23ம் வயதில் அகப்பட்டான். 26 வருடங்கள், அவன் இறக்கும்வரை நட்புடன் இருந்தோம். எனக்கு மூன்று வருடங்களுக்கு முன்பு துபாய் போனான். அவன் போனபிறகு நாலு வருடம் கழித்து இந்தியா வந்தேன். அவனுடன் எனக்குப் பலவித அனுபவங்கள். ஒரே துறையில், கிட்டத்தட்ட ஒரே பொசிஷனில் இரு வேறு கம்பெனியில் பல வருடங்கள் வேலைபார்த்தோம்.

    பதிலளிநீக்கு
  13. புதன் வாசகர் கேள்வி... பார்க்கவேண்டிய நல்ல சீரியல்கள் ஓடிடி எந்தத் தளத்தில் என்ன சீரியல்கள், தொடர்பகுதிகள் என்று சொல்ல இயலுமா?

    பதிலளிநீக்கு
  14. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  15. கேள்விகளும் பதில்களும் அருமை.
    வெகு காலம் வசித்த ஊர் மனதை விட்டு அகலாது. அதன் மாற்றத்தை பார்த்தால் மனம் பழைய ஊரை நினைத்துப்பார்க்கும்.
    புறா படங்கள் மனதை என்னவோ செய்து விட்டது. புதருக்குள் விட்டு சென்றது சரி யென்றாலும் பூனை இருந்தால் அதை கவ்வி சென்று விடும். மருந்து தடவி சரியாகும் வரை ஒரு அட்டைபெட்டியில் வைத்து பாதுகாக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடி பட்ட புறாவை வைத்துக் காப்பாற்றுவது கடினமான விஷயம்.

      நீக்கு
  16. 'தெய்வ மச்சான்' என்ற படம் பார்த்தேன், நகைச்சுவையாக இருந்தது, அன்பு, பாசம் என்று கொஞ்சம் வந்தாலும் சிரிப்பு வருகிறது. விமல் நடித்த படம்.

    பதிலளிநீக்கு
  17. //'நான் என்னுடைய வீட்டிலிருந்து திருடிய உப்பு நார்த்தங்காய், சுடுகாய், கிழக்கோடி போன்ற விவரங்கள் போலீசுக்குத் தெரிந்தால், என்னைக் கொண்டுபோய் ஜெயிலில் போட்டுவிடுவார்கள்' என்ற பயம் அப்போது எனக்கு உண்டு. //

    சிறு குழந்தைகள் பயம் உண்மை. அந்த காலத்தில் சில குழந்தைகளை சாப்பிடவில்லை என்றால், தப்பு செய்தால் தாய்மார்கள் பயமுறுத்த உபயோகபடுத்தும் சொல் போலீஸ் மற்றும் ஒற்றை கண்ணன் தான்.

    KGG சார் பக்கம் பள்ளி பருவத்து மலரும் நினைவுகள் அருமை.

    பதிலளிநீக்கு
  18. KGG அவர்களது பள்ளி பருவத்து நினைவுகள் இயல்பானதே..

    அருமை..

    பதிலளிநீக்கு
  19. நான் கூகிள் ஆண்டவரிடம் என்னைப் பற்றிக் கேட்டேன். அவர் சிறுகதை : மொழிபெயர்ப்பு - தலைகுளத்தூர் ... என்று தந்தார்.

    பதிலளிநீக்கு
  20. ஆஹா இன்று ஒருவர் நம் கையில் அகப்பட்டார் .all lives are precious,  இயற்கையின் சங்கிலி என்று இதை ஒதுக்குவது சரியில்லை .
    இதே புறா காட்டில் மனித நடமாட்டமற்ற இடத்தில இருந்திருந்தா அது காகத்தின் இரை  விதி இயற்கையின் நியதின்னு எடுத்துக்கலாம் .ஒரு வயதான புறாவை காப்பது நமது கடமை .அதுவே பறக்கும் இளம் புறாவாக இருந்தா அந்த காகம்  அதை பிடித்திருக்க முடியாதே .அது வயதான புறா எனும் வரைக்கும் உங்களுக்கு தெரிந்திருக்கு .அப்படினா நீங்க அதுக்கு உதவி இருக்கலாம்னு தோணுது .காகத்துக்கு அந்த புறா மட்டுமன்றி வேறெவ்வளவோ இரை  கிடைக்க சாத்தியமுண்டு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யெஸ்ஸு....ஏஞ்சல் உங்க கருத்தை மேலே பார்த்துவிட்டேன்..!!!

      கீதா

      நீக்கு
    2. நீங்க எழுதியிப்பதைப் படித்தபிறகு, பக்கத்து புதருக்குத் துரத்தி விட்டிருக்கலாமோ என்று இப்போ தோணுது ஏஞ்சலின். சரியா தவறா என்று எண்ணிக்கொண்டே பலமுறை கடந்துவிட்டேன்.

      நீக்கு
    3. புறா ஒன்று; பார்வைகள் பல!

      நீக்கு
    4. ஏஞ்சல் உங்கள் நினைவு வந்தது, வந்து விட்டீர்கள்.
      புறாவை காப்பாற்ற "புளூ கிராஸில்' விட சொல்வீர்கள் என்று நினைத்தேன். பறவைகள், விலங்குகள் எல்லா வற்றையும் பாதுகாப்பார்கள் இல்லையா? முன்பு ஒரு தடவை சொன்னீர்கள்.

      நீக்கு
    5. நன்றி கோமதி அக்கா . பிளான் A  காகத்தை துரத்தி புறாவை காப்பாற்றுவது ப்ளூ க்ராஸ்ல்லாம்  அவரவர் விருப்பம் சூழல் பொறுத்து . சில இடங்களில் நம்மை எடுத்துக்கிட்டு வர சொல்வாங்க இல்லைன்னா அவங்க வரும் நேரம் வரைக்கும் காவல் இருக்கணும் .என்னால் முடியும் என்பதால் மற்றவர்களை நிர்பந்திக்க முடியாதது .அந்த சூழலில் எது சரியாவருமோ அதை செய்தாலே போதுமானது 

      நீக்கு
    6. பரவாயில்லை நெல்லைத்தமிழன் .சில நேரம் அப்படிதான் சரியா தவறானு யோசிச்சிட்டு மிஸ் பண்ணிடுவோம் .ஆனாலும் புறாவை அந்த மற்ற நபர் புதரில் பிடித்து விட்டுட்டார் .ஆனால் எனது சமீபத்து அனுபவத்தால் நான் கற்றுக்கொண்டது ஒரு விஷயத்தை செய்யணும்னு நினைச்சா உடனே செஞ்சிடனும் .இது எல்லா விஷயத்துக்கும் எல்லாருக்கும் பொருந்துமான்னு தெரியலை .ஆனால் ஒரு பெண்மணி எங்கள் வீட்டருகில் வசிப்பவர் இப்போ past tense . அவரிடம் ஒரு விஷயம் சொல்லணும்னு நினைத்து நினைத்து  விடுபடும் .பார்க்கும் போது நேரமின்மையால் சொல்ல முடியாம போயிருச்சு .இப்போ அவரும் இல்லை .அந்த விஷயத்தை சொல்லியிருந்தா அவர் மகிழ்ந்திருக்கக்கூடும் 

      நீக்கு
    7. இந்தக் கருத்தை வல்லிம்மா அடிக்கடி சொல்வார்.

      நீக்கு
  21. /யாத்ரீகரைக் கொன்ற பாவம் யாரைச் சேரும்?//
    எனது பதில் அதற்கு காரணம் அவர்தான் .அதென்ன உணவை திறந்து வச்சிட்டு  தண்ணீர் எடுக்க போறதா .இப்போ மாதிரி பிளேட்ஸ் கவர் இல்லைன்னாலும் அட்லீஸ்ட் இலையால் மூடியிருந்திருந்தா தப்பியிருப்பார் என்று மூளை சொல்கிறது .
    மானுட மனம் சொல்வது அதுதான் விதி 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹை 5. காலைல இதேதான்...மூடி வைத்திருக்கலாம் இலை போட்டு இலை போட்டு அதுக்கு மேல பாரமா கல்லு ஏதாச்சும் வைச்சுருக்கலாம்... .காத்துல இலை பறந்துருச்சுனா!!!!! இல்லைனா கட்டு சாதத்தை திறந்தவர் அப்படியே மூடி வைத்திருக்கலாம் இலையிலோ பாத்திரத்திலோதானே கொண்டுவந்திருப்பார்...

      இதை சொல்ல நினைச்சு போட்டு கருத்து போகலை...அப்புறம் சொல்ல விட்டுப் போச்சு காலைல....

      கீதா

      நீக்கு
    2. உணவு உண்ண ஆரம்பிக்கும்போது விக்கல் வந்ததால் அவசரமாக தண்ணீர் தேடி ஓடியிருப்பார்.

      நீக்கு
    3. ஆனால் பாருங்க அதே மரத்தடியில் அணில் பறவைகள்  வானரம் ,ஆடு மாடு என பல உயிரினங்கள்  இருந்திருக்கலாம் இவருக்கு விக்கல் வந்த நேரம் அவை உணவில் கை வாய் வைக்காமல் தப்பியதும் விதியன்றோ !

      நீக்கு
  22. பள்ளிக்கால நினைவுகள் ரசனை.
    கேள்விகளும் பதில்களும் கலகலப்பாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  23. கிழக்கோடி அல்ல, கழக்கோடி. கழக்கோடி, அம்மானை என்பதெல்லாம் பண்டைய விளையாட்டுகள். உடலில் எங்காவது சிறு வீக்கம் இருந்தால் கழக்கோடி போல வீங்கியிருக்கிறது என்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா! தகவலுக்கு நன்றி.

      நீக்கு
    2. கழக்கோடி ஏழு காய்கள்(சிறு கோலி போல இருக்கும்) அம்மானை சற்று பெரிய கோலி போல நான்கு இருக்கும். எங்கள் வீட்டில் இருந்தது. அம்மானை விளையாடும் பொழுது பாடும் பாடல்கள் கூட உண்டே. எங்கள் கொள்ளு பாட்டி அம்மானை நன்றாக விளையாடுவாராம்.

      நீக்கு
    3. அம்மானை ஆடும் விதம்: நாங்கு மர உருளை அல்லது கோலிகளை இரண்டு கைகளிலும் வைத்துக் கொண்டு, அவைகளை மேலே எறிந்து பிடிக்க வேண்டும். ஒரு பந்து மேலேயே இருக்க வேண்டும். அம்மானை பாடல்களை பாடிக் கொண்டே இதைச் செய்ய வேண்டும். என் கடைசி அக்கா அம்மானை விளையாட முயற்சித்து, வெற்றியும் கண்டாள்.
      கழக்கோடி விளையாடும்பொழுது மூன்று பந்துகள் மேலேயே இருக்க வேண்டும்.
      திருவரங்கத்தம்மானை என்று முடியும் பாடல் படித்திருக்கிறேன். இப்போது நினைவில் இல்லை.

      நீக்கு
  24. புறாவை காப்பாற்றியிருக்கலாம். தவிர்க்க இயலாமல் சிபி சக்ரவர்த்தி நினைவுக்கு வருகிறார்.

    பதிலளிநீக்கு
  25. அம்மானை அழகு மிகும் கண் மானை, ஆடிவரும் பெண் மானை.. என்று ஒரு அழகான சினிமா பாடல் உண்டு. சிவாஜி, உஷா நந்தினியா? சிவாஜி மஞ்சுளாவா? வெள்ளி விருப்பமாக கேட்டால் ஸ்ரீராம் ஏற்கனவே பகிர்ந்தாச்சே என்பார்.

    பதிலளிநீக்கு
  26. எனக்கு மிக மிக பிடித்த நண்பர் கே.வி.ஸ்ரீனிவாசன் என்னும் குடும்ப நண்பர். நல்ல நகைச்சுவை உணர்ச்சி கொண்டவர். நடிகர் பாலையா
    போலவே பேசிக் காட்டுவார். எஸ்.பி.ஐ.யில் பணியாற்றி ஓய்வு பெற்ற பின், ஜோதிடம் பார்ப்பதை தொழிலாக கொண்டிருந்தார். இப்போது அவர் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

    இன்னொருவர் என் சிறு வயதில் எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் இருந்த ஐயங்கார் மாமியின் மகள் ராதா. எங்கள் இரண்டு குடும்பங்களும் மிகவும் நெருக்கம். சிறு வயதில் என் முகம் வாடியிருந்தால் என்னை விட மாட்டார்."ஏண்டி, என்னவோ மாதிரி இருக்க? என்ன ஆச்சு?" என்று என் வாயைப் பிடுங்கி விஷயத்தை எடுத்து . என்னை சரி செய்வார். யாரிடமோ நான்," ராதா என் அக்கா மாதிரி" என்று கூறியபொழுது "அக்கா மாதிரியாம்.. அக்காதான்" என்றார். பல வருடங்களுக்குப் பிறகு சென்னையில் எங்கள் வீட்டிற்கு அருகிலேயே வந்தார், நான் பெங்களூர் வந்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
  27. 'நானும் ரௌடிதான்' படம் வந்து எட்டு வருடங்கள் இருக்குமா? அதுதான் தமிழில் கடைசியாக நான் ரசித்துப் பார்த்த நகைச்சுவைப் படம்.

    பதிலளிநீக்கு
  28. அமேசான் பிரைமில் பஞ்சாயத் என்று ஒரு ஹிந்தி சீரீஸ் ஒரளவுக்கு நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!