வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023

வெள்ளி வீடியோ : அரும்புவிழி குறும்புமொழி ஆட அழைக்காதோ என்னை

 இந்த வாரம் தனிப்பாடல் சூலமங்கலம் சகோதரிகள் பாடிய பாடல்.  

கருணை முகங்கள் ஓராறு
காக்கும் கரங்களோ ஈராறு
முருகன் வாழும் வீடாறு
முருகன் வாழும் வீடாறு
முகம் பார்த்து இரங்க வேறாரு -கந்தன்

துணை அன்றி ஐயனின் வடிவேலை
தொழுவதன்றி வேறென்ன வேலை
வினையை தீர்ப்பது குகன் வேலை
வேலை போற்றுதல் நாவின் வேலை (கருணை)

அடியார்கள் அகமே அவன் கோவில்
அன்பே ஆலய தலைவாயில்
குடியாய் இருப்பவன் குறை தீர்ப்பான்
குமரன் நம் குடியை வாழவைப்பான் -கந்தன்


=========================================================================================

1972 ல் வெளியான படம் தாய்க்கு ஒரு பிள்ளை. ஜெய்சங்கர், ஏ வி எம் ராஜன், சாவித்ரி நிர்மலா, சோ நடித்த படத்துக்கு இசை சங்கர் கணேஷ். வாலி, புலமைப்பித்தன், முத்து ஆகியோர் பாடல்கள் எழுதி இருக்கும் நிலையில் இந்தப் படத்திலிருந்து தலைவர் பாடல் தவிர இன்னொரு பாடலை இன்று பகிர்கிறேன். ஏ எம் ராஜா குரலில் பாடல்.

சின்னக்கண்ணனே நான் தந்தையென நீயும் பிள்ளையென
ஒரு பந்தம் வந்தது நெஞ்சில் பாசம் வந்தது
சின்னக்கண்ணனே நான் தந்தையென நீயும் பிள்ளையென
ஒரு பந்தம் வந்தது நெஞ்சில் பாசம் வந்தது
எந்த நாளிலும் நம் உறவு வாழட்டும்
எந்த நாளிலும் நம் உறவு வாழட்டும் -பிரிந்த போதிலும்
நினைவு வாழட்டும் (சின்னக்கண்ணனே)

அரும்புவிழி குறும்புமொழி ஆட அழைக்காதோ என்னை
சிறுகுழந்தை விளையாட்டில் தன்னை மறப்பாளோ அன்னை
அரும்புவிழி குறும்புமொழி ஆட அழைக்காதோ என்னை
சிறுகுழந்தை விளையாட்டில் தன்னை மறப்பாளோ அன்னை
அப்பா முதுகு பிள்ளைக்கேற்ற ஆனைவாகனம்
அப்பா முதுகு பிள்ளைக்கேற்ற ஆனை வாகனம்
நாளை இந்தப் பிள்ளை ஒரு ராஜாவாகணும் (சின்னக்கண்ணனே)

ஏடெடுத்து நீ படித்து தந்தை பேர்சொல்ல வேண்டும்
என்மகனே உன்புகழை நாளும் ஊர்சொல்ல வேண்டும்
ஏடெடுத்து நீ படித்து தந்தை பேர்சொல்ல வேண்டும்
என்மகனே உன்புகழை நாளும் ஊர்சொல்ல வேண்டும்
அன்னை நெஞ்சின் ஆசைகளை அளந்தவரில்லை
அன்னை நெஞ்சின் ஆசைகளை அளந்தவரில்லை
அதை நிறைவேற்று நீயோ அந்த தாய்க்கொரு பிள்ளை
அதை நிறைவேற்று நீயோ அந்த தாய்க்கொரு பிள்ளை (சின்னக்கண்ணனே)

29 கருத்துகள்:

  1. இரண்டு பாடல்களும் கேட்டு ரசித்து இருக்கிறேன் ஜி

    பதிலளிநீக்கு
  2. இரண்டாவது பாடல் கேட்டிருக்கிறேன்.
    முதல் பாடல் பக்தி வெள்ளம்.

    பதிலளிநீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா. வணக்கம். இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

      நீக்கு
  4. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  6. முதல் பாடலும் கேட்டிருக்கிறேன். அருமையான மனதை உருக்கும் பாட்டு! அந்த ராகம் அப்படி பக்தி ரசம் பொழியும் ராகம்!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. இரண்டாவது பாடலும் மிகவும் ரசித்த பாடல்ம். இப்பவும் ரசித்தேன் இப்பாடலையும் முதல் பாடலையும்!

    ஏம் எம் ராஜா என்றாலே ஜெமினி முகம் தான் நினைவுக்கு வரும். சீரான குரல் ஏம் எம் ராஜா அவர்களுக்கு .

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனாலும் ஏ எம் ராஜா அனைவருக்கும் பாடி இருக்கிறார்!  எனக்கும் ஜெமினி முகம்தான் நினைவுக்கு வரும்.

      நீக்கு
    2. முதல் பாடலைக் கேட்டிருக்கேன். இரண்டாவது பாடலும் தெரியலை, படமும் தெரியலை.

      நீக்கு
  8. நமது சமயத்துக்கே உரித்தான விஷயங்களுடன் கூடிய அற்புதமான பாடல் இன்றைய தனிப்பாடல்..

    சூலமங்கலம் சகோதரிகளை முதன்முதல் பார்த்தபோது நடந்த வேடிக்கையை இந்த வேளையில் - நினைத்துக் கொள்கின்றேன்..

    பதிலளிநீக்கு
  9. இரண்டு பாடல்களும் அடிக்கடி கேட்ட பாடல்கள்.
    பிடித்த பாடல்.

    ஏ எம் ராஜா பல வருடம் கழித்து பாடிய பாடல் இனிமையான பாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புகுந்த வீடு போன்ற படங்களிலும் பாடி இருப்பார்.

      நீக்கு
  10. // நமது சமயத்துக்கே உரித்தான விஷயங்களுடன் கூடிய.. //

    " வாத்யாரே!.. அது என்னா விஷயமுன்னு விவவரமா சொல்லாம சும்மா உதார் உடுறீங்களே.. "

    " இந்தப் பாட்டைப் பத்தி ஒரு பதிவே போடலாம்!.. "

    " அப்போ போட்டு விடுங்க!.. "

    பதிலளிநீக்கு
  11. இரண்டாவதான பாடல் அப்போது பலராலும் விரும்பிக் கேட்கப்பட்ட பாடலாகும்..

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல்கள் இரண்டும் அருமை.

    முதல் தனிப்பாடல் இதுவரை ஏனோ கேட்கும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. சூரமங்கலம் சகோதரிகள் உள்ளம் உருக பாடிய பாடல்களில் கேட்காத பல பாடல்களில் இதுவும் ஒன்று. அவர்கள் நிறைய பாடல்களை பாடி இறைவனை மனதால் அருகிலேயே கண்டவர்கள். இறைவன் அருள் பரிபூரணமாக அடையப் பெற்றவர்கள். நான் அப்படியல்லவே எனவும் நினைத்துக் கொள்கிறேன். இப்போது இந்தப் பாடலை கேட்டு ரசித்தேன். மிகவும் நன்றாக உள்ளது.

    "ஓராறு முகமும், ஈராறு கரமும் தீராத வினைதன்னை தீர்க்கும்." என்ற டி. எம். எஸ் அவர்களின் முருகன் பக்திப் பாடலை இதுவும் நினைவுபடுத்தியது.

    இரண்டாவது பாடல் அடிக்கடி சிலோன் வானொலியில் கேட்டிருக்கிறேன். படத்தின் பெயர், மற்றைய விபரங்கள் இப்போது தெரிந்து கொண்டேன். ஏ. எம். ராஜா அவர்களின் குரல் ஜெமினி அவர்களுக்கும் மிகவும் ஒத்து வரும். ஏ. வி. எம். ராஜனுக்கும் பொருந்தி வரும். சிறந்த பாடகர். எனக்கும் அவர் குரலில் பல பாடல்கள் பிடித்தமானது. இன்று பகிர்ந்ததும் நல்ல பாடல்
    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் குரல் பகுதி பாடல்களுக்காகவே அமையாதது என்று எனக்கும் தோன்றும். கொடுத்து வைத்தவர்கள் நாம்.

      நீக்கு
  13. என்ன ஆயிற்று?..

    பதிவு வரவில்லையே!..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!