வியாழன், 17 ஆகஸ்ட், 2023

ஒரு அராபிய இரவு...

 சாதாரணமாகவே எனக்கு நாலுகால் செல்லங்களைப் பிடிக்கும்.  நான் செல்லும் இடங்களில் உள்ள செல்லங்களைப் பார்க்கும்போது அவை என்ன செய்கின்றன என்று கவனிப்பது வழக்கம்.  அவற்றைத் தாண்டும்போது அன்பாக குரல் கொடுத்து விட்டு - விசாரித்து விட்டு - வருவேன். 

இந்த குரலே அவைகளுக்கு பழக்கமாகி சில சமயம் என்னைக் கண்டதுமே வாலை ஆட்டி வரவேற்கும் செல்லங்கள் உண்டு.    விரோத மனப்பான்மை இல்லாவிட்டாலும், வாலாட்டாமல் முறைப்பாகவே தாண்டிச் செல்லும் செல்லங்களும் உண்டு.  இவை சற்று முன் ஜாக்கிரதை முத்தண்ணாக்கள்..  

காலை நடைப் பயிற்சியின்போது சுமார் ஏழெட்டு தெருக்களைக் கடக்க வேண்டி இருக்கும்.  எங்கள் ஏரியாவில் செல்லங்கள் கொஞ்சம் ஜாஸ்தி.  (ஜாஸ்தி என்பது தமிழ் வார்த்தை இல்லை என்று நினைக்கிறேன்.  எந்த வார்த்தையிலிருந்து இந்த வார்த்தை உருவாகி இருக்கக்கூடும்?) 

ஜாஸ்தி என்றாலும் ஒரே இடத்தில் அவைகளை பார்க்க முடியாது.  எல்லை பிரித்துக் கொண்டுள்ளன.  தெருவுக்கு நான்கைந்து, இல்லை சமயங்களில் ஒன்றிரண்டு கூடவே இருக்கும்.  சற்றே நீண்ட தெரு ஆயின், நடுவில் ஒரு குறுக்குத் தெரு வந்து சேரும் அல்லவா அந்த இடத்தை எல்லையாக வைத்துக் கொண்டு இரண்டு குழுக்கள் இரண்டு பக்கமுமாய் காணப்படும்.

ஒருநாள் நடைப்பயிற்சியில் நான் பார்த்த காட்சி என்னை அசத்தியது.  அதுவரை யு டியூபில் மட்டுமே நான் கண்டிருந்த காட்சி.  இருங்கள்..  கற்பனையை கன்னாபின்னா என்று ஓடவிடாதீர்கள்.

எங்களுக்கு பால் போடுபவர் பெயர் கவாஸ்கர்.  (ஆனால் Kawaskar என்று K போட்டு தொடங்கும் பெயர்.  ஒருநாள் அவரை ஏன் அந்தப் பெயர் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்க வேண்டும்)  ஒரு சிலரைப் பார்த்ததும் நமக்குத் தோன்றும் அல்லவா..  இவர் பழகுவதற்கு எளியவர், இவர் கடுமையானவர் என்றெல்லாம்..  பெரும்பாலும் சரியாகவே கணிப்பேன்.  இவர் விஷயத்தில் அப்படி அல்ல! அவரை ஒரு முறைப்பாளராக நினைத்து கண்டுக்காமல் சென்று விடுவேன்.  இங்கு இருந்த பால் போடுபவர்களில் இரண்டு பேர்களிடம் கசப்பான அனுபவங்களை பெற்றபிறகு இவருக்கு மாறினேன்.  அப்போதுதான் தெரிந்தது, எளிமையான, இனிதான, வெள்ளந்தியான மனிதர் என்று.  வயதும் குறைவுதான்.

சில விஷயங்கள் கேள்விப்படும்போது நமக்கு மகிழ்ச்சியைத் தரும்.  அதுவும் நம் சம்பந்தப்பட்ட விஷயங்கள்! நான் அவரிடம் அறிமுகமாகி பால் வாங்குவதற்கு முன்னரே அவர் என்னைப்பற்றி அறிந்து வைத்திருக்கிறார் என்பது ஆச்சர்யம்தானே!  நான் அந்த ஏரியாவுக்கு புதுசு வேற!

என் பையன் அவர் கடையில் (அதே ஏரியாவில் ஒரு கடையும் வைத்திருக்கிறார்) ஏதோ பொருள் வாங்கச் சென்று ஜி பே வேலை செய்யாத நிலையில், "அங்கிள்..  இங்கதான் வீடு..  இதோ கொண்டு வந்து விடுகிறேன்.." என்று சொல்லி இடம் சொல்ல, "அட..  நம்ம ஸ்ரீராம் ஸார் வீடு..  அதைச் சொல்ல வேண்டாமா நீங்க?" என்று பையனை ஆச்சரியப்படுத்தி, அவன் மூலம் என்னையும் ஆச்சர்யப்படுத்தியவர் அவர்.  "அவரோட பேசி இருக்கியாப்பா நீ" என்று கேட்ட மகனிடம் இல்லையென்று தலையாட்டினேன்.  ஆனால் அவர் எப்படி அறிந்திருப்பார் என்று ஓரளவு புரிந்தது.  

என் ஆஸ்தான ஆட்டோக்காரர் அந்த ஏரியாவில் பிரபலம்.  அந்த ஏரியா முன்னாள் தலைவர் இறந்தபோது அவர் உடலை மருத்துவமனையில் இருந்து சீக்கிரம் வாங்க உதவி இருந்தேன்.   சாதாரணமாகவே என் ஆ ஆ என்னை பற்றி பார்ப்பவர்களிடம் எல்லாம் உயர்வு நவிற்சியில் அறிமுகப்படுத்திக் கொண்டிருப்பார்.

எதையோ சொல்ல வந்து எதையோ சொல்கிறேன் என்று உங்களுக்குத் தோன்றலாம்.  அப்படியே எனக்கும் பழகி விட்டது.  ஆனால் ஒரு விஷயத்தைச் சொல்லும்போது மொட்டையாக சொல்லாமல் பின்னணியோடு சொன்னால் நன்றாய் இருக்கும் என்று பட்டது.  அதுதான்....

சொல்ல வந்ததை விட்டுட்டு 'ஜவ்'..வா இழுக்கறியே...  
இதே சோலியா வச்சுக்காதப்பா... அடுத்த வாரமாவது முடிச்சுடுவியா செல்லம்...

==============================================================================================================================

முன்னாள் முதல்வர் கருணாநிதி மரணப்படுக்கையில் இருந்தபோது எழுதியது.  தினமும் ஒரு செய்தி..  சுற்றி நின்று 'முடிந்து போய்விட்டாரா' என்று பார்(கா)த்திருந்த உறவுகளும் நண்பர்களும்..'அண்ணன் எப்போ சாவான்..  திண்ணை எப்போ காலியாகும்' உணர்வும் அதில் இருந்தது என்று தோன்றியது அப்போது.  அதையே கடைசி பாராவுக்கு முதல் பாராவில் சொல்லி இருந்தேன்.  அவர் மறைந்த பின்னும் ஒன்று எழுதி இருந்தேன்.  முதலில் பேஸ்புக்கிலும், அவர் மறைந்தததும் ஆகஸ்ட் எட்டாம் தேதி எங்கள் தளத்திலும் வெளியிடப்பட்டது மீள் பதிவாய்...


எழுதத் துடிக்கும்
விரல்களின் துடிப்பு
எனக்கு மட்டும்தான் தெரிகிறது.
எழுத்து என்று நின்றுபோனதோ
அன்று கொஞ்சம் இறந்துபோனேன்.
படித்த புத்தகங்களும்
படைத்த புத்தகங்களும்
படிக்கக் காத்திருக்கும்
புத்தகங்களுடன்
சுற்றி நின்று
பார்த்துக் கொண்டிருக்கின்றன.
படிப்பு என்று நின்று போனதோ
அன்று கொஞ்சம்
இறந்துபோனேன்.
எதிரில் இருப்பவரிடம்
எண்ணங்களை வார்த்தையாக்கிப்
பேச முடியாமல்
மூச்சுத் திணறுகிறது.
குரல் என்று நின்றுபோனதோ
அன்று கொஞ்சம்
இறந்துபோனேன்.
விரும்பியோ விரும்பாமலோ
நேசிப்பவர்கள் கூட
என் மரணத்துக்காகக்
காத்திருக்கிறார்கள்
கண்ணீருடனும்
கதை வசனங்களுடனும்.
மூச்சு நின்று உடல் இயக்கம்
நிற்பதுதான் மரணமாம்...
இனிதானா இறப்பு? [ஜூலை 27, 2018]


என்னதான் சொன்னாலும் அந்த நேரத்தில்
ஒரு தாக்கம் வந்துடுதுய்யா...

=============================================================================================

சற்றே நீளமாக இருந்தாலும் 'சுவைத்து'ப் படிக்கலாம். Face Book ல் Kongu Foods என்கிற பக்கத்திலிருந்து எடுத்தது. விட்டுப்போன அக்கடை ஒன்றின் பெயரை நானும் அங்கு கமெண்ட்டில் குறிப்பிட்டிருந்தேன்.

“சைவத்தை இழந்த மதுரை”
சாப்பாடுன்னா மதுரை தான்யா! அதை அடிச்சிக்க தமிழ்நாட்டில் ஒரு ஊரே இல்லன்னு பல பேர் சொல்லுவாங்க! அது வெள்ளையா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான் என்பதை நம்பினா மாதிரி! விதவிதமான அசைவ உணவுகளுக்கும் புரோட்டா கடைகளுக்கும் தள்ளுவண்டி & நடைபாதை இட்லி கடைகளுக்கும் மதுரை இன்றும் புகழ் பெற்ற ஊரு தான்! கறி தோசை, நண்டு ஆம்லெட்..
அயிரைமீன் குழம்பு, வெங்காயக் குடல், விரால்மீன் ரோஸ்ட்னு வித விதமா அசைவத்தில் பட்டையை கிளப்பும் மதுரையில் இப்போ சைவ உணவுகளுக்கு ஏன் அந்தளவு முக்கியத்துவம் தரவில்லை! சைவத்தில் அந்தளவு வெரைட்டி இல்லியா? இல்ல மக்கள் எல்லாம் அசைவத்துக்கு மாறி ட்டாங்களா? அதெல்லாம் ஒன்றுமில்லை வித விதமான சைவ உணவுகளிலும் ஒருகாலத்தில் மதுரை தான் டாப்!
உண்மையில் சமணம் ஒழித்து சைவம் தழைத்த மாமதுரையில் இன்று சைவத்திற்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது! ஆம் புகழ் பெற்ற நல்ல சைவ ஓட்டல்கள் எதுவுமே தற்போது மதுரையில் இல்லை என்பது தான் கசப்பான உண்மை. ஒரு காலத்தில் திண்டுக்கல் ரோடு என்று அழைக்கப்படும் நேதாஜி ரோட்டில் மாடர்ன் ரெஸ்டாரெண்டில் இருந்து எழும் சாம்பாரின் மணமே சாம்பிராணி போட்டது போல..
அத்தெருவெங்கும் மணக்கும்! அதிகாலையில் ஃபில்டர் காபியின் மணம் அங்கு பகல் டியூட்டியிலிருக்கும். மாடர்ன் ரெஸ்டாரெண்ட் என்றாலே பலருக்கு இன்றும் நினைவில் ருசிப்பது மதுரை மல்லி போன்ற ஆவி பறக்கும் மென் பஞ்சு இட்லிகளும் அதற்குத் தரும் பருப்பு சாம்பாரும், தாளிப்பு மணக்கும் தேங்காய் சட்னியும், வெங்காயச் சட்னியும், முறுகலான நெய் ரோஸ்ட்டும் ஆனியன்..
ரவா தோசையும், சூடான பூரியும், வெண்ணை போன்ற கிழங்கு மசாலாவும் பொன்னார் மேனியன் போல உளுந்தை அரக்கிசைத்த உளுந்து வடையும், நெய் மணக்கும் வெண் பொங்கலும் அடடா! அதிகாலையில் மீனாட்சியம்மனை தரிசிக்க நிற்கும் அதே கூட்டம் தரிசனம் முடிந்து மாடர்ன் ரெஸ்டாரெண்ட் வாசலில் வந்து விதவிதமான சைவ உணவுகளை தரிசிக்க நிற்கும்!
மாடர்ன் ரெஸ்டாரெண்ட் கூட்டத்தை விரும்பாதவர்கள் மேலமாசி வீதி உடுப்பி ஓட்டலுக்கு படை எடுப்பார்கள். அதிகாலையிலேயே நெய் ஒழுக, வறுத்த முந்திரிகள், திராட்சைகள் தூவி கண்ணைப் பறிக்கும் ப்ளோரசெண்ட் ஆரஞ்சு நிறத்தில் தரும் கேசரி இருக்கிறதே, அதுவே பாண்டிய மன்னர்களுக்கு கேசரி என்ற பெயர் வந்ததற்கு காரணம் என்றால் சட்டென நம்பிவிடலாம்!
ஒரு ப்ளேட் கேசரி ஒரு வெள்ளையப்பம், ஒரு ஃபில்டர் காபி இது மூன்றை மட்டுமே காலையில் உண்டு உயிர் வாழ்ந்த ஜீவன்கள் இன்றும் மதுரையில் தங்கள் உடலின் சர்க்கரை அளவை சரி பார்த்துக் கொண்டு நினைவில் அதை ருசித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றன! உடுப்பியின் சாம்பார் லேசாக இனிக்கும்! சாம்பாரைக் கொண்டே கடையின் பெயரைச் சொல்லுமளவுக்கு..
அந்த காலத்தில் மாடர்னும், உடுப்பியும் செட் தோசைகளாக இயங்கி வந்தன! எம்ஜிஆர் சிவாஜி ரசிகர்கள் போல இதற்கும் தனித்தனி ரசிகர்கள் இருந்தனர்.! மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகில் கோபு அய்யங்கார் கடை டெண்டுல்கர் இந்திய அணியில் ஆடிய போது உடன் இருந்த ஷேவாக் போல அதிரடி காட்டியது! கோபு அய்யங்காரின் நெய் மினுக்கும் ரோஸ்ட், ஜீரா போளி..
வெள்ளையப்பம், மிளகாய் சட்னி வகைகள் தனித்துவம் மிக்கவை. இந்த உணவுகளின் மீது ஆசை வந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்தக் கடைக்கு முதுகு காட்டி கோவிலில் அம்மன் வீற்றிருப்பதாக ஐதீகம் என்றால் நம்பிவிடலாம். பட்டணம் பக்கோடா, காரக்கறி கிழங்கு, மிளகு சேவு, சீரணி, தவள வடை, இனிப்பு அப்பம், முட்டாசு, நெய் இட்லி சாம்பார், போண்டா..
இப்படி மதுரையின் புகழ் சொல்லும் சைவ ஓட்டல்களும் அந்த மெனுக்களும் உணவுகளும் ஏராளம்! சிற்றன்னங்கள் எனப்படும் தக்காளி, லெமன், புளியோதரை, வெண் பொங்கல், மல்லி சாதம் போன்ற சாத வகைகளுக்கு என்றே சவுராஷ்டிரா நண்பர்கள் வசிக்கும் மஹால், அலங்கார் தியேட்டர், தினமணி டாக்கீஸ் பகுதிகளில் பல பொங்கல் கடைகள் துவங்கி அதில் சில..
இன்றும் தங்களது உணவுச் சேவையை ஆற்றி வருகின்றன. இத்தனை உணவு களேபரங்களுக்கு நடுவில் 1950களில் சத்தமே இல்லாமல் மேலகோபுரத் தெருவில் மதுரை நாக்குகளை சமோசா, கச்சோரி, வித விதமான சப்பாத்தி சப்ஜி, மசாலா டீ என வடநாட்டு உணவுகளைக் கொடுத்து தன் வசப்படுத்தி இருந்தது மதுரை மண்ணுக்கு துளியும் சம்மந்தம் இல்லாத டெல்லி வாலா ஸ்வீட்ஸ்!
பின்னாளில் இதே மாடர்ன் ரெஸ்டாரண்ட்டுக்கும், உடுப்பி ஓட்டலுக்கும் நடுவில் வந்து கம்பீரமாக வந்து அமர்ந்த ‘ஆரியபவன் உணவகத்தின் தாய்வீடு தான் டெல்லி வாலா! ஆரியபவன் மதுரையில் துவங்கப்பட்ட பின்பு தான் அல்வா, லட்டு, மைசூர்பாக், ஜிலேபி தவிர வேறு இனிப்புகளும் இருக்கின்றன என மதுரை மக்கள் ஞானம் பெற்றனர். ஆரியபவன் நோக்கி படையெடுத்தனர்.
பட்டிக் காட்டான் மிட்டாய் கடையை பார்த்தது போன்ற எனும் பழமொழி உண்மையானது! இட்லி, பொங்கல், தோசை என்று இல்லாது ஆலு சப்பாத்தி, கீரை சப்பாத்தி, முள்ளங்கி சப்பாத்தி என சப்பாத்திகளில் பல வகை, பாலிலேயே அரிசியை வேக விட்டு செய்யும் பால் பொங்கல், அரைத்துவிட்ட சாம்பார், பெசரட் & செட் தோசைகள், பாண்டிய நாட்டில் சோளாப்பூரி & சென்னா..
என்று ஆரியபவன் வெரைட்டி வெரைட்டியாக பல உணவுகளை அறிமுகப்படுத்தியது! இதுவரை ஸ்வீட் காரம் காபி எனில் உடுப்பியின் கேசரியும், வெள்ளையப்பமும், ஃபில்டர் காபியும் குடித்துப் பழகிய மதுரை மக்கள் இப்போது பாஸந்தியும், சமோசாவும், மசாலாபாலும் என்று ஆரியபவனுக்கு ஆதரவு தந்து தமிழருவியானார்கள். ஆரியபவன் ஸ்வீட்ஸ், செயின் ஓட்டல்கள்..
என விரிவடைந்து பை நைட் என்று தூங்கா நகரின் இமையை இழுத்துப் பிடித்து நிறுத்தியது! நவரத்தின குருமாவும், மில்க் பரோட்டாவும், பால் பொங்கலும், சாம்பார் வடையும், தயிர் வடையும், ஸ்பெஷல் ரவா எனப்படும் ஆனியனும் மசாலாவும் கலந்த மெகா முருகல் ரவா தோசையும், பெசரட்டும், உப்புமாவும், கேரட் குருமா செட் தோசையும் மதுரை நாவுகளை பல ஆண்டுகளுக்கு..
அடிமைப்படுத்தி வைத்திருந்தன! மதிய சாப்பாடெல்லாம் தெய்வ லெவலில் இருக்கும் 1989இல் ஒரு அன்லிமிடெட் சாப்பாடு ₹20 தான்! நெய்யில் ஆரம்பித்து இறுதியில் பாயாசம் வரை அப்படி அத்தனை மெனுக்கள்! இடையில் இதே உடுப்பி தங்கள் கடையை ஆரியபவனிடம் தந்துவிட்டு தங்கள் கொடியை வாலண்டியராக இறக்கிக் கொண்டனர்! அந்த இடத்தில் ஆரியபவன் தங்களது..
மதிய மீல்ஸ் செக்‌ஷனை ஆரம்பித்து வெகு நாட்கள் வெற்றிக் கொடியை பறக்கவிட்டனர்! மதுரையில் ஆரியபவன் எனும் கோஹினூர் வைரத்தின் பேரொளியிலும் மனோரமா ஓட்டல், பெரியார் பேருந்து நிலையம் அருகில் கே.பி.எஸ், அசோக் பவன், வசந்த பவன், பரசுராம் என தனக்கென்று தனித்துவ உணவு வகைகளை கொண்ட பல சைவக்கடைகள் மினுக்கிட்டன!
உடுப்பி போல ஆரியபவனின் கொடியும் ஓர் நாள் கீழிறிங்கியது.! அவர்கள் இப்போது அந்தத் தொழிலிலேயே இல்லை! மாடர்ன் ரெஸ்டாரெண்ட் மட்டும் இன்னும் பழைய ஜமீனாக வலம் வருகிறது! கோபு அய்யங்கார் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் சரணடைய மனோரமாவும் இப்போது கைமாறிவிட்டது! இன்று மதுரையில் சபரிஷ், டெம்பிள் சிட்டி, நடிகர் பரோட்டா சூரியின் அம்மன்..
போன்ற உணவங்கள் இருந்தாலும், அந்த காலத்து உடுப்பி, மாடர்ன் போல அல்லது சுனாமியாய் வந்த ஆரியபவன் போல உயர் தரமான சைவ ஓட்டல்களோ அல்லது விதவிதமான ருசி மிகுந்த சைவ மெனுக்களோ மதுரையில் அருகிவிட்டது! பாரம்பரியம் மிக்க சிறந்த சைவ உணவுகளுக்கு ஒரு நல்ல கடை மதுரையில் தற்போது இல்லை என்பதே நெஞ்சம் கனக்கும் உண்மையாகும்!
{இதே காலகட்டத்தில் மதுரையில் இருந்த வேறு சைவ ஓட்டல்களின் பெயர்கள் இப்பதிவில் விட்டுப் போயிருந்தால் விபரம் அறிந்தவர்கள் கமெண்ட்டில் தெரிவிக்கவும்}

வெங்கடேஷ் ஆறுமுகம் - Face Book -KonguFoods Page .

"எங்க ஊர்யா அது.. எப்படி மறக்க முடியும்?"

===================================================================================================

Face Book ல் படித்த இன்னொரு சுவையான தகவல்...

மேஜை டிராயரைத் திறந்து ஒரு கடிதத்தை எடுத்துக் கொண்டு எனக்கு அருகில் வந்தார் மெளனி. அது அமெரிக்காவிலிருந்து வந்த கடிதம்; அதன் தலைப்பு
நுனிகள் இரண்டையும் விரல்களால் கெட்டியாகப் பிடித்தபடி கடிதத்தை என்னிடம் காட்டி, இதைப்படி என்றார் அவரிடம்

'கடிதத்தை என்னிடம் கொடுங்கள், சார், படிக்க சுலபமாக இருக்கும்', என்றேன்.
அவர் கொடுக்கவில்லை. "இப்படியே படி”, என்றார்.
'கடிதத்தைத் துக்கிக் கொண்டு ஓடிவிட மாட்டேன். இங்கே கொடுங்கள்...... என்று சிரித்தேன்.
அவர் கடிதத்தை தன் கையிலிருந்து விடுவிக்க விரும்பவில்லை: சும்மா இப்படியே படி, வெங்கட்ராம்!”
- அமெரிக்காவிலிருந்து ஆல்பர்ட் ஃபிராங்களின்
எழுதிய கடிதம் அது. தமிழில் தேர்ச்சி பெற்ற அந்த அமெரிக்கர் மெளனியின் சிறு கதைகளின்பால் பெரு மோகம் கொண்டார். மெளனியின் இரண்டு சிறுகதைகளை அவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். 'கருமேகங்களுக்கு இடையில் ஒரு மின்னல்’ என்று மெளனியை அமெரிக்க வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்; இரண்டு கதைகளும் நியூயார்க்கர் என்னும் அமெரிக்கப் பத்திரிகையில் வெளியாயின. தன்
உத்தியோகத்துக்கு ஒரு வருடம் சம்பளம் இல்லாத லீவ் போட்டு விட்டு, மெளனியின் மற்ற சிறுகதைகள் அனைத்தையும் மொழி பெயர்க்கப் போவதாய் ஆல்பர்ட் ஃப்ராங்ளின் கூறியிருந்தார். இந்தத் தகவல்களை மெளனியும்,
க. நா. சு.வும் என்னிடம் கூறியிருந்தார்கள்.
--- அந்த அமெரிக்கர் எழுதிய கடிதத்தைத்தான் என் கண்களுக்கு முன்னால் காட்டிப் படிக்கும்படி சொன்னார் மெளனி. அவருடைய ஒரு கதையை மீண்டும் படித்ததாகவும், அது இந்தியத் தத்துவத்தை நுட்பமாகவும், அழகாகவும் பிரதிபலிப்பதாயும் ஃப்ராங்களின் பாராட்டி எழுதியிருந்தார். நானும் பிரகாஷூம் படித்தானதும், கடிதத்தை ஜாக்கிரதையாக மேஜை டிராயரில் வைத்து விட்டு மெளனி உட்கார்ந்தார்.
எம்.வி.வெங்கட்ராம்
நன்றி: அழியாச்சுடர்கள்
பெருமையான விஷயம்யா..

==============================================================================================

இன்றைய நிலையில் தக்காளி கிலோ 80 ரூபாய்க்கு இறங்கி விட்டது. கடந்த இரண்டு மாதங்களில் தக்காளி விற்று கோடீஸ்வரர்கள் ஆனவர்கள் பற்றியெல்லாம் படித்தோம். அந்த ஸ்டேஜில் வெளியிட்டிருக்க இருக்க வேண்டிய துணுக்கு இது! இது பார்த்ததில் ரசித்தது!



என்னமா ஐடியா பண்ணியிருக்கு பயபுள்ள...


======================================================================================================

ஒரு அராபிய இரவு...

பேசாம துபாய்க்கே திரும்பிப் போயிடலாம் போல...

=============================================================================

நியூஸ் ரூம் - பானுமதி வெங்கடேஸ்வரன்

- எளிதில் கிடைக்கும் போலி பாஸ்போர்ட் கள், எப்படி தடுப்பது என்று புரியாத அதிகாரிகள். 

- கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைந்த பட்ச இருப்புத் தொகையை பராமரிக்காதது, கூடுதல் ஏ.டி.எம்.பரிவர்த்தனைகளை மேற்கொண்டது மற்றும் குறுஞ்செய்தி சேவைகள் வழங்கப்பட்டது ஆகியவற்றுக்காக வசூலித்த வகையில் ரூ.35,000 கோடி வங்கிகள் எட்டியுள்ளன.

- பொதுமக்கள், தொலைத்த, திருடு போன போன்கள் குறித்து www.sancharsathi.com என்னும் இணைய தளத்தில்I I M.E.I என்ற எண்ணை உள்ளீடு செய்து புகார் அளிக்கலாம். பின்னர் 14422 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பினால் அந்த ஃபோன் பயன்பாட்டில் உள்ளதா? டவர் போன்ற விவரங்கள் அனுப்பப்படுமாம். அதைக் கொண்டு சைபர் கிரைம் உதவியோடு மீட்கலாமாம். வீட்டில் ஒரே ஒரு ஃபோன் தான் உள்ளது என்பவர்கள் என்ன செய்வார்கள்?

- சென்னை விரைவு ரயில்களில் 30 சவரன் நகை கொள்ளை.

- எவரெஸ்ட் சிகரத்தில் வெளிநாட்டவர் ஏற்றுவதற்காக கட்டணத்தை ரூ.12 லட்சமாக உயர்த்த நேபாள அரசு முடிவு செய்துள்ளது.

- உயர் மதிப்பு கொண்ட இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டதில் வங்கிகளுக்கு வாடிக்கையாளர்களை விட, வணிக நிறுவனங்களிடமிருந்தே அதிகம் பெறப்பட்டது தெரிய வந்துள்ளது. - அதுதானே சாத்தியம்

- பெங்களூரின் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் கஃபே என்னும் ஹோட்டலின் எல்லா கிளைகளிலும் தினமும் அனைத்து ஊழியர்களும் தேசிய கீதம் பாடிய பிறகே வியாபாரம் துவங்குகிறதாம். ஜெய் ஹிந்த்! வாழ்க வளமுடன்!



==============================================================


95 கருத்துகள்:

  1. இன்னும் முழுமையாகப் படிக்கவில்லை. மதுரை வரை ரசனையாகச் செல்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை...  மதுரை வரை ரசனையாகச் செல்கிறது என்றால் முதல் பகுதி பாஸ்!

      நீக்கு
  2. மதுரை மீனாட்சிபவன் உணவு காலேஜ் ஹவுஸ் டிபன் ஆஹா.. இப்போ உருப்படியான சைவ ஹோட்டல் நஹி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதைய ட்ரெண்ட் கௌரி ஷங்கரும், சபரீஷ் ஹோட்டலும்!

      நீக்கு
    2. காலேஜ் ஹவுசெல்லாம் எப்போவோ காணாமல் போச்சு

      நீக்கு
  3. என் எண்ணம் பிராமணர்கள் அடர்த்தியா இல்லாத இடங்களில் சைவம் காணாமல் போய் விடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு சின்ன திருத்தம்:

      பிராமண சைவர்களும், சைவப் பிள்ளைமார்களும் அடர்த்தியாய் இல்லாத இடங்களில்

      நீக்கு
    2. இப்போது எல்லா இடங்களையுமே பிரியாணியும் மசாலா வாசனையும் ஆக்கிரமிக்கிறது!

      ஹா..  ஹா..  ஹா..  ஜீவி ஸார்..

      நீக்கு
  4. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  5. அது சரி ஸ்ரீராம், நீங்க ஒவ்வொரு தெருவா வாக்கிங்க் போறா மாதிரி சப்ஜெக்ட்!!! கொண்டு போய் கடைசில நம்ம வீட்டுக்குத்தானே வந்தாகணும் அப்படி போகுது!!!!! ஹாஹாஹாஹா அந்தக் காட்சி என்னன்னு சொல்லவே இல்லையே...ஓ! இன்னும் வீட்டுக்கு வந்து சேரலையா!!! அடுத்த வியாழன்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அந்தக் காட்சி என்னன்னு சொல்லவே இல்லையே...ஓ! இன்னும் வீட்டுக்கு வந்து சேரலையா!!! //

      தினமும் வீட்டுக்கு வந்து சேர்ந்துடறேன்!  இன்று கதம்பப்பகுதியில் என் எல்லை முடிந்து விட்டது!  அதுதான்.

      நீக்கு
  6. கவிதை செம....தாக்கம் வருதுதான்...எல்லாத்துக்கும் வவே மீம்ஸ் நல்லாருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  7. இந்தக் கவிதை - ஆஹா ஹைஃபைவ்! நான் எழுதும் ஒன்றிற்கான சப்ஜெக்ட்! ஸோ......என்ன பண்ணிருப்பேன் சொல்லுங்க!!! (ஹூம் பெரிய சஸ்பென்ஸ்!!!!!!!!பார்ரா இவளை!!)

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி..   புரியுது...   இது உங்கள் வழியா மறுபடி வெளிவரும்!

      நீக்கு
  8. ஒரு குத்து மதிப்பாய் சொல்லுங்கள் ஸ்ரீராம்.

    அழியாப் புகழ் பெற்ற
    மெளனி எழுதிய மொத்த சிறுகதைகள் எவ்வளவு இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 24.  புதுமைப்பித்தனால் சிறுகதையின் திருமூலர் என்று அழைக்கப்பட்டவர் இவர்.  எங்கள் ஊர் செம்மங்குடிக்காரர்.  செட்டிலானது சிதம்பரத்தில்.

      நீக்கு
    2. ஹி....ஹி....
      பரீட்சை கேள்விக்குப் போல பளீர், பளீர் பதில்!;

      நீக்கு
  9. ஹூம் மதுரை - சுவையான பதிவுதான்.....ரசித்து வாசித்தேன். எல்லாம் மாறிப் போச்சு...மாற்றம் ஒன்றே மாறாததுன்னு சொன்னாலும் இப்படியா மாறணும்!!!

    பரவால்ல இங்க இப்போதைக்கு. சென்னையும் பரவால்லையோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாதும் ஊரே யாவையும் ஒரே சுவை என்றாகி விட்டது!

      நீக்கு
  10. மதுரையில் புலால் உணவகங்கள் பெருத்திருப்பதற்கு யார் காரணம்?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்புங்கள்.. சத்தியமாக நான் இல்லை.

      நீக்கு
    2. இதுபற்றி நிறைய எழுதலாம். மக்கள் எடுப்பார் கைப்பிள்ளை. இந்த மாறுதலில் நிறைய திட்டமிடல் உண்டு

      நீக்கு
    3. கலாச்சாரத்தை சீரழித்தால்....   அதுதானே?

      நீக்கு
  11. ஒரு காலத்தில் ஓட்டல் சாப்பாடு என்றாலே கேவலமாகப் பார்ப்பார்கள்..

    இத்தனைக்கும் நேர்மையும் நியாயமும் சிறந்திருந்த காலம் அது!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக்கால நேர்மையையும், நாணயத்தையும் அலட்சியம் செய்ததின் விளைவே, இப்போது நாம் வந்தடைந்திருக்கும் பொற்காலம். தகுதிக்கேற்ற வெகுமதி...!

      நீக்கு
    2. உண்மை.. உண்மை..
      அற்புதமான கருத்து..

      காமராஜரைக் கவிழ்த்து விட்ட பாவமே இன்னும் தொடர்கின்றது..

      நீக்கு
    3. ஓட்டல் சாப்பாடு என்றால் வெகு சில ஐட்டங்கள் இருந்த காலம்.  அனால் நேர்மையாய் சுத்தமாய் கிடைத்த காலம்.

      நீக்கு
  12. சமீபத்தில் தஞ்சாவூர் சென்றிருந்தபோது, அங்கே பாப்புலரான ஆரிய பவனில் சாப்பிட்டேன். அதன் இணைப்பான கீழ் ஃப்ளோர் திவ்யம்-ல் ஸ்வீட்டுகள் வாங்கினேன். ஃபில்டர் காப்பி குடித்தேன். நன்றாக இருந்தது. தஞ்சை ஆரியபவன், அந்த முன்னாள் மதுரை பவனின் தொடர்ச்சியோ என்னவோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா!... மகிழ்ச்சி..

      என் மனதிலுள்ளதை சொல்லியிருக்கின்றீர்கள்..

      தஞ்சை ஆரியபவன்,
      தஞ்சை ஆரியபவன் தான்!..

      நீக்கு
    2. தஞ்சை ஆரிய பவனின் -
      திவ்யம் புதியது..

      எங்கே?..

      ஜங்ஷன் அருகிலா..
      மங்கள புரத்திலா?

      நீக்கு
    3. தஞ்சை ஆர்ய பவன்..   பழைய பஸ் ஸ்டேண்டின் பின்புறம்?  ராஜா மிராசுதார் ஆஸ்பத்திரி எதிர்புறம் திருவள்ளுவர் தியேட்டர் இருந்த இடம் தாண்டி வலது புறம் திரும்பினால்?  

      நீக்கு
    4. மங்களபுரம் எனக்குத் தெரியாது. தஞ்சாவூரைப் பழக்கப்படுத்த இப்போதுதான் முயற்சிக்கிறேன்!

      நான் குறிப்பிட்ட பவன் ஜங்ஷனுக்கு அருகில். Dhivyam Sweets ஆரியபவனோடு சேர்ந்தது. மேலே ஆரியபவன் - சாப்பாடு, டிஃபன். கீழ் தளம் திவ்யம் என்கிற போர்டோடு ப்ரகாசமாகக் காட்சி தருகிறது. ஸ்வீட்ஸ்டால் - பலவகை இனிப்புப் பதார்த்தங்கள், புதிதாகத் தயாராகும் பாதாம் மில்க், ஃபில்டர் காஃபியுடன். உட்கார்ந்து நிதானமாக அனுபவிக்கலாம்.

      நீக்கு
    5. அப்போ மேரீஸ் கார்னர் பக்கமோ...  புதுசு போல..  ஒரு நடை தஞ்சாவூர் போயிட்டு வரணும்.

      நீக்கு
  13. இனி வரும் காலத்தில் - எவரேனும் புலால் உணவை விட்டு விட்டேன் என்று சொன்னால், அவர்களை இழுத்துப் போட்டு அடிக்கப் போகின்றார்கள்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இலட்சியம் செய்ய மாட்டார்கள்.  ஏனெனில் அவர்கள் அளவில் மிகச்சிறியவர்கள்.

      நீக்கு
  14. Kongu Foods தகவல்கள்
    பிற்கால மதுரை பற்றி சொல்வதாகத் தான் கொள்ள வேண்டும்.
    60 -- 70 ஆண்டுகளுக்கு முன் ஹோட்டல்கள் என்றாலே சைவ ஓட்டல்கள் தாம். சைவ ஓட்டல்களில் பிரசித்தமானது உடுப்பி ஹோட்டல்கள்.

    மதுரை மட்டுமல்ல கிட்டத்தட்ட தமிழகம் பூராவும் தான்.
    அந்தக் காலத்து சைவ ஓட்டல்களில் பிராமணாள் கபே, ஆங்கிலத்தில் Brahmins Cafe என்றிருக்கும். இந்த பிராமணாள் எழுத்துக்களை அழிக்கவே ஈ.வெ.ரா. தனிப் போராட்டம் நடத்தியிருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அதுவும் உண்டு.உடுப்பி க்ரூப் பேஸ் கர்நாடகா.  தஞ்சையில் வாசவி கஃபே என்றிருந்தது.  நன்றாய் இருக்கும்.

      நீக்கு
  15. பார்த்து. உங்களுக்கு செல்லங்களைப் பிடிக்கும் என்று தெரிந்த செல்லங்கள் உங்களை பிடித்து விட போகின்றன. 14 ஊசி!

    இரங்கற்பா நன்றாக உள்ளது. செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்பது போல் ஏதாவது சன்மானம் கிடைத்ததா?

    மதுரை என்றில்லை. பொதுவாகவே சைவம் அசைவமாகி விட்டது. காரணம் உணவாகும் உயிரினங்கள் வளர்ப்பு என்பது ஒரு பெரிய தொழிலாக தொழில் அதிபர்களின் கையில் சென்று விட்டது .தான். முட்டை, கோழி, மீன் போன்றவை எளிதில் கிடைப்பதால் மக்களின் ரசனையும் இவற்றின் பால் சென்று விட்டன.

    அமெரிக்கர் தமிழ் படித்து மௌனியின் கதைகளை மொழி பெயர்த்தது பாராட்டிற்கு உரியது. சிறுகதைகளில் கலாச்சாரமும் மறைமுகமாக கலந்திருக்கும். மொழிபெயர்க்கும்போது கலாச்சாரங்கள் என்ன என்பதும் படிப்பவர்களுக்கு விளங்க வேண்டும். அப்படிப்பட்ட மொழிபெயர்ப்பு செய்வது கடினம் தான்.

    அடுத்தவாரமாவது கொஞ்சம் பொக்கிஷத்தை எடுத்து விடுங்கள்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செல்லங்கள் ஏற்கெனவே என்னை மூன்று முறை பிடித்திருக்கிறார்கள் - வெகு ஆண்டுகளுக்கு முன்.  உண்மையிலேயே தொப்புளை சுற்றி ஊசி போட்டுக் கொண்டேன்.   என் தொப்புளை சுற்றிதான்!   ,இடுப்பில் போட்டுக் கொள்ளலாம்!

      இரங்கற்பாவுக்கு சன்மானம் யார் கொடுக்கப் போகிறார்கள்?  படித்து ரசித்தவர்கள் கொடுத்த பாராட்டே சன்மானம் - இப்போதும்!

      பொக்கிஷம் -  அடுத்த வாரம் கட்டாயம் முயற்சிக்கிறேன்.

      நீக்கு
  16. மௌனி பற்றிய செய்தி பெருமையான விஷயம், ஸ்ரீராம். அது பொக்கிஷம்!!! அதான் மற்றவர்கள் யாரையும் அதைத் தொட விடவில்லை அவர்! மதிப்பு மிக்கது இல்லையா சிறு குழந்தை போன்று!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக.. படைப்பாளனுக்குத்தானே படைப்பின் பெருமை தெரியும்?

      நீக்கு
  17. தக்காளி விலை என்று எழுதினீங்க ஸ்ரீராம்? நேற்றா? இங்கு கிலோ 45, 40 இதோ இன்று காலை வாங்கினேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கும் 60, 50 ரூபாய்க்கு வந்து விட்டது கீதா..   என்ன செய்ய..  சில ஜோக்குகள் காலம் கடந்து வெளியாகி மதிப்பிழக்கின்றன.

      நீக்கு
  18. தக்காளி மேட்டர்!!!! சிரித்துவிட்டேன்! என்ன ஐடியா பாருங்க!! இப்பவும் ரசிக்கலாம்தான்!!! 5 ரூபாய்க்கு ரெண்டு/மூன்று வருஷம் முன்ன கூட இங்கு சந்தையில் வாங்கின நினைவு!

    கீதா

    பதிலளிநீக்கு
  19. அந்த பில் ஆஆஆஆஆ மயக்கமே வந்துவிட்டது. இருக்கற கொஞ்சம் நஞ்ச சொத்தே போச்சே!!! இதை வாசிச்சதும் எனக்கும் வெற்றிக் கொடிகட்டு காமெடி நினைவுக்கு வந்தது! Same pinch!

    கீதா

    பதிலளிநீக்கு
  20. ஃபோன் திருடு/தொலைப்பது கணினி மூலமும் இந்தத் தளத்தை அணுகலாம் ஆனால் எனக்குப் பயனளிக்கவில்லை. ஒரு வேளை இப்ப இன்னும் பல விஷயங்கள் மேம்படுத்தப்பட்டு இருக்கலாம்.

    பயணம் செய்யும் போது நகைகளுடன் பயணம் செய்வதோ, அதிகமாக நகைகள் அணிந்து செல்வதோ நல்லதில்லை. மக்கள் இதைப் புரிந்துகொண்டால் நல்லது

    கீதா

    பதிலளிநீக்கு
  21. வடிவேலு அனைத்து இடங்களிலும் பொருந்துகிறார்...

    பதிலளிநீக்கு
  22. ஜாஸ்தி - மராட்டி மொழி சொல். மராட்டியில் ஜாஸ்த் என்றால் அதிகம் என்று பொருள். தஞ்சாவூர் பகுதியை மராட்டிய அரசர்கள் ஆண்ட காலத்தில் இந்த சொல் பேச்சு தமிழில் கலந்திருக்கும் என நினைக்கிறேன்.

    மதுரை மட்டும் அல்ல, எல்லா ஊர்களிலும் சைவ ஹோட்டல்கள் குறைந்துவிட்டதாகவே தோன்றுகிறது. ஒருவேளை அசைவ ஹோட்டல்கள் பெருகிவிட்டதால், இரு கோடுகள் தத்துவம் அடிப்படையில் நமக்கு அப்படி தோன்றுகிறதா?

    இருக்கும் சில பெயர்பெற்ற சைவ ஹோட்டல்களிலும் உணவின் தரம் முன்பு போல் இல்லை. குறிப்பாக இட்லி தோசைக்கு தரப்படும் சாம்பார். ஒருகாலத்தில் ஹோட்டல் சாம்பாருக்கு என்று இருந்த அந்தத் நிறம், மணம் மற்றும் சுவை தற்போது எந்த சென்னை ஹோட்டலிலும் இல்லை, எனக்கு தெரிந்தவரை. தற்காலத்தில் ஹோட்டலில் தரப்படும் சாம்பார் வட மாநில ஹோட்டல்களில் தரப்படும் சாம்பார் போல கெட்டியாக பிரவுன் நிறத்தில் அதிக காரத்துடன் (பெரும்பாலும்) உள்ளது.

    அதேபோல் தயிர் வடை அருகிவரும் உணவுப்பொருள் ஆகி வருகிறது. அது கிடைக்கும் ஹோட்டல்களிலும் அதன் தரம் சிலாகிக்கும்படி இல்லை. இதைப்போல இன்னும் பலவற்றை சொல்லிக்கொண்டே போகலாம். இதைப்பற்றி ஒரு தனியாக ஒரு பதிவே போடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தஞ்சாவூர் தயிர் வடை!..

      போட்டு விடுவோம்!..

      நீக்கு
    2. ஆம்.  இட்லி, தோசைக்கு தரப்பப்டும் சாம்பார்தான் அதன் சுவையை நிர்ணயிக்கிறது.  அது கிட்டத்தட்ட எல்லா ஹோட்டல்களிலும் ஒரே சுவையாய் இருக்கிறது.  மிக மிகச்சில ஹோட்டல்களில்தான் மாறுபட்டு இருக்கிறது.  அவற்றிலும் சுவையாய் இருப்பது என்று பிரித்தெடுத்தல் எண்ணிக்கை ஒற்றை படையில் தான் வரும்!  தயிர் வடையில் எனக்கு பெரிய நாட்டமில்லை என்பதால் என்னை அது பாதிக்கவில்லை!!

      நீக்கு
  23. தக்காளி ஜோக் படித்தவுடன் நினைவுக்கு வந்தது முகநூலில் படித்த இன்னொரு ஜோக். அதன் தலைப்பு - மனைவிகள் எத்தனை பெரிய அறிவாளிகள்.

    ஒருவர் கால யந்திரத்தை கண்டுபிடிக்கிறார். ஆனால் அதில் ஏதோ கோளாறு ஏற்பட்டு எந்த வருடம் எந்த இடம் தேர்ந்தெடுத்தாலும் நாற்பது வருடத்திற்கு முன் இருந்த அவரது தெருக்கோடியில் மட்டுமே கொண்டுபோய் விடுகிறது. அதனால் அவர் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார். ஆனால் அதை அறிந்த அவர் மனைவி தினமும் அந்த கால யந்திரத்தில் ஏறி நாற்பது வருடத்திற்கு முன் சென்று அவர்கள் தெருக்கோடியில் இருக்கும் காய்கறி கடையில் கிலோ ஒரு ரூபாய் என்ற விலையில் இரண்டு கிலோ தக்காளி வாங்கிக்கொண்டு பத்து ரூபாயை கொடுத்துவிட்டு மீதி சில்லறை வாங்காமல் வருகிறார். அதை கண்ட அந்த கடைக்காரர் தன் மனைவியிடம் நம் பகுதியில் யாரோ புதிதாக ஒரு கோடீஸ்வர பெண்மணி குடிவந்திருக்கிறார் போல. தினமும் நிறைய தக்காளி வாங்கிக்கொண்டு பத்து ரூபாயை கொடுத்து மீதி பணத்தை கூட வாங்காமல் போய்விடுகிறார் என்று சொன்னாராம்.

    எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே...   புதுமையான சிந்தனை.  ஆனால் தக்காளி மட்டும்தானா?  அது சரி, வாங்கிக்கொண்டு நாற்பது வருடங்களைத் தாண்டி வந்தால் தக்காளி அழுகி இருக்காதோ!!

      நீக்கு
  24. இங்கும் தஞ்சையில் எல்லோருக்கும் நாக்கு மரத்து விட்டது என்ற நினைத்துக் கொண்டு அதிகப்படியான மிளகாய்த்தூளைப் போட்டு சாம்பார் என்கின்றனர்.. என்ன புளிரசத்துக்கு ஜீன்ஸ் போட்டு விட்ட மாதிரி இருக்கும்...

    இவர்கள் எல்லாம் பஞ்சத்துக்கு கரண்டி பிடிப்பவர்கள்..

    அம்மியைத் தூக்கிப் போட்டதோடு அனைத்து சுவைகளும் பறி போய் விட்டன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை, நம் நாக்குதான் ஒரே சுவையைப் பிடித்துக் கொண்டு அதையே எதிர்பார்க்கிறதோ..  அம்மா சமையல்தான் பெஸ்ட் என்பது போல!

      நீக்கு
  25. முதல் பகுதிக்கு வடிவேல் படம் ரசிக்க வைத்தது ஜி.

    அரேபிய பில் இதுபோல் அங்கு பார்த்து இருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த அளவு அவர்களிடம் பணம் இருக்கிறது.. இல்லையா ஜி?

      நீக்கு
  26. அட.. நம்ம ஸ்ரீராம் ஸார் வீடு.. அதைச் சொல்ல வேண்டாமா நீங்க?"//

    நீங்கள் சமயத்தில் செய்த உதவியை மறக்காமல் இருக்கிறார்கள், நல்ல மனிதர்கள். உங்கள் புகழ் ஆட்டோக்காரர் உங்கள் நல்ல குணங்களைதானே சொல்லி இருப்பார் அதை ஏன் உயர்வு நவிற்சி என்று நினைக்கிறீர்கள்.!

    வடிவேல் சொல்வது நன்றாக இருக்கிறது.

    //மூச்சு நின்று உடல் இயக்கம்
    நிற்பதுதான் மரணமாம்...
    இனிதானா இறப்பு? //


    கவிதை அருமை.
    நம் கடமையை நம்மால் செய்ய முடியவில்லை என்றாலே மரணம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் எப்படி ஓவராக சொல்கிறார் அப்புறம் வாட்ஸாப்பில் சொல்கிறேன்!  கவிதை பற்றி நீங்கள் சொல்லியிருப்பது சரி.  அதைத்தான் சொல்ல முயன்றிருக்கிறேன்.

      நீக்கு
  27. தக்காளீச் சட்னி சாப்பிட்டே பல மாதங்கள் ஆகி விட்டன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன்?  தக்காளி சட்னி சாப்பிடக்கூடாது என்று மருத்துவர் சொல்லி விட்டாரா?!

      நீக்கு
    2. இப்போ வர தக்காளி எல்லாம் அழுத்தமாகச் சாறே இல்லாமல் இருக்கே! அதில் சட்னி பண்ணினால் என்னமோ குறைகிறாப்போல் இருக்கு. நாக்கு நாலு முழ நீளமோ?

      நீக்கு
    3. ஹிஹிஹி.. அப்படிதான் தோணுகிறது! நாமெல்லாம் ஒரே ரகம்!

      நீக்கு
  28. இங்கே சைவம் மட்டும் கொடுக்கும் ஓட்டல்கள் இருந்தாலும் சுவை மோசம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவை இப்படி இருக்கவேண்டும் என்று எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சுவைத்துப் பாருங்கள்.  கொஞ்சம் ஓகே என்றிருக்கும்.

      நீக்கு
  29. இப்போச் சாப்பாடு கொடுக்கும் காடரர் மாலை டிஃபனில் சொதப்பல். ;(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வசிஷ்டர்கூட போனாப்போறதுன்னு விசுவாமித்திரரை பிரம்ஹரிஷின்னு ஒத்துண்டுட்டார். கீதா சாம்பசிவம் மேடம் ஒரு காடரர் சூப்பர்னு கனவிலும் ஒத்துக்க மாட்டாங்க

      நீக்கு
    2. காட்டரர்கள் கொடுக்கும் சாப்பாட்டை விட டிஃபன் பொறுத்துக்க கொள்ளும் ரகமாகத்தானே இருக்கும்.?

      நீக்கு
    3. மசால் தோசைனு பெயரில் கொடுமைப் பண்ணறாங்க தம்பி!:( வீட்டில் அழகாக நான் பண்ணறேன்னு சொல்லி மாவு அரைச்சு வைச்சால் வேண்டாமாம். எனக்கு ஓய்வு கொடுக்கறாங்களாம். :(

      நீக்கு
    4. ஆனால் மசால் தோசை என்றுமே எனக்குப் பிடிக்காது!  ஹிஹிஹி...

      நீக்கு
  30. செல்லங்கள் எனில் இப்போ அவ்வளவாக் கவரவில்லை.

    பதிலளிநீக்கு
  31. ஸ்ரீரங்கம் வந்தது பத்தி எழுதுவீங்கனு நினைச்சிருந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...  (மைக்கேல் மதனகாமராஜன் ஊர்வசி சொல்வது போல ஓ சொல்லவும்!)   சீனியாரிட்டியில் அதற்கு முன்னாலேயே இன்னொரு கோவில் இருக்காக்கும்!

      நீக்கு
  32. //சைவத்தை இழந்த மதுரை”//

    வெங்கடேஷ் ஆறுமுகம் கட்டுரை படித்தேன்.
    வீட்டு முறையில் சைவ உணவு செய்து தரும் மெஸ்கள் நிறைய இருக்கிறது இப்போது வீடுகளுக்கு கொண்டு தருகிறார்கள் .

    மெளனி அவர்கள் பகிர்வு படித்தேன்.
    அவரை பற்றி பகிர்ந்து கொண்ட விஷயம் பெருமையான விஷயம் தான்.

    தக்காளி போன வாரம் கிலோ 100 என்று வாங்கினேன்.

    சந்தோஷமாக வீடு செல்ல "தக்காளி கிலோ 5 ரூபாய்" பகிர்வு
    பகிர்வு அருமை.

    தலைப்பின் பெயர் காரணம்(பில்) மதிப்பு வாய்ந்தது என்று தெரிகிறது.

    பானுமதி வெங்கடேஸ்வரன் செய்தி பகிர்வுக்கு வடிவேல் பத்திரிக்கை படிக்கும் படம் பொருத்தம்.





    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  மெஸ்களில் சைவம் இருக்கிறது.  அசைவ மெஸ்களும் உண்டு!  வடிவேல் இணைப்புகளை ரசித்ததற்கு நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  33. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான மாலை வணக்கங்கள்.

    இன்று கொஞ்சம் தாமதம். (இன்று மட்டுமென்ன..! இப்போது கொஞ்ச நாட்களாக ஏதோ ஒரு காரணத்தால் இந்த தாமதந்தான்.. என ம. சா. இடிக்கிறது.)

    கவிதை அருமை. பொதுவாக இது எல்லோருக்குமே பொருந்துகிறது. ஆயினும் எழுத்தையே தன் சுவாசமாக கொண்ட அவருக்கு மிகப் பொருந்துகிறது. நடிகர் வடிவேலு அவர்கள் கூறுவது போல் எந்த சமயத்திலும் இக்கவிதையை படித்தால் மனதுக்குள் ஒரு தாக்கம் எழுவது உறுதி. . இன்று எல்லாவற்றிலும் இவரின் (வடிவேலு) கமெண்ட்ஸ்தான் முதலிடமா? தொகுப்பு அருமை. இன்னும் முதலில் இருந்து படித்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாமதமாக வருவதால் தவறில்லை கமலா அக்கா..   இத்தனை வேலை, சிரமங்களுக்கிடையிலும் வந்து படித்து கருத்துகளை அழகாக சொல்கிறீர்களே...  அதுவே பெரிது.  கவிதை பற்றி நீங்கள் சொல்லி இருப்பது சரி அக்கா.

      நீக்கு
  34. மௌனி, வெங்கட்ராம் .. இனிய காலம் ஒன்றின் இலக்கியப் படைப்பாளிகள். அவர் ப்ரகாஷ் என்று குறிப்பிட்டது தஞ்சை ப்ரகாஷ் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  35. அடுத்த வாரம் தொடரும் பொழுது, மறக்காமல் முன் கதை சுருக்கம் போடுங்கள். இன்றைக்கே எதை சொல்லத் தொடங்கினீர்கள் என்று யோசிக்க வேண்டியிருந்தது.
    கவிதை அருமை!
    ஏதோ குறைகிறதே என்று நினைத்தேன்... பொக்கிஷம். அனுஷ்காவிற்கு மிஞ்சி அழகியில்லை என்று நினைத்து விட்டீர்கள் போல.

    பதிலளிநீக்கு
  36. சமீபத்தில் ஒரு வாட்ஸாப் செய்தி ஒன்று, ஊரில் இத்தனை அசைவ உணவகங்கள் இருக்கிறதே? அதற்கு ஒரு நாளைக்கு எத்தனை ஆடு, கோழி வெட்ட வேண்டும்? அவ்வளவு இருக்கிறதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதான் இதர இரண்டு, நாலு கால்கள் இருக்கின்றனவே!..

      நீக்கு
    2. ஆமாம்.  நாயை எல்லாம் வெட்டி சமைத்து  ஆடு என்று விற்று விடுகிறார்களாம்.

      நீக்கு
  37. நாலு கால் செல்லங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் பிரியம் அறிந்ததே. முடிவில் இருக்கும் மைண்ட் வாய்ஸை வழிமொழிகிறேன்:)! கவிதை வெகு சிறப்பு. தக்காளி ஜோக் அருமை :)! தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ராமலக்ஷ்மி.

      //முடிவில் இருக்கும் மைண்ட் வாய்ஸை வழிமொழிகிறேன்:)!//

      ஹிஹிஹி...

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!