திங்கள், 28 ஆகஸ்ட், 2023

"திங்க"க்கிழமை : உளுந்துப் பொடி  -  துரை செல்வராஜூ ரெஸிப்பி 

 உளுந்துப் பொடி

*** *** *** *** *** *

முழு உளுந்து 200 கிராம்
கறுப்பு எள் 100 கிராம்

இரண்டையும் சுத்தம் செய்த பின் இரும்பு வாணலியில் மிதமான சூட்டில் தீய்ந்து விடாமல் தனித்தனியே வறுத்துக் கொண்டு ஆறியதும் மிக்ஸியில் ஒன்றாகப் போட்டு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்..

அவ்வளவு தான்.. 

வாரம் இரண்டு முறை இந்தப் பொடியில் 4 tbsp எடுத்துக் கொண்டு தேங்காய்த் துருவல் 2 tbsp, சுத்தமான (நாட்டுச்) சர்க்கரை 1 tsp சேர்த்துப் பிசைந்து உருண்டைகளாக்கிச் சாப்பிடலாம்.. தேங்காய்த் துருவலின் ஈரம் மட்டுமே போதும்..

வேறு ஒன்று:

பச்சைப் பயறு 200 கிராம்
வறுக்கப்பட்ட நிலக்கடலை
அல்லது பொட்டுக் கடலை 100 கிராம்

பச்சைப்பயறு சுத்தம் செய்த பின் இரும்பு வாணலியில் மிதமான சூட்டில் தீய்ந்து விடாமல் வறுத்து எடுத்துக் கொண்டு  - ஆறியதும் மிக்ஸியில்  அரைத்துக் கொள்ளவும்..

வாரம் இரண்டு முறை இந்தப் பொடியை 4 tbsp எடுத்துக் கொண்டு தேங்காய்த் துருவல் 2 tbsp , (விரும்பினால்) நாட்டுச் சர்க்கரை 1 tsp சேர்த்துப் பிசைந்து உருண்டைகளாக்கிச் சாப்பிடலாம்..

இவைகளுக்கு தேங்காய்த் துருவலின் இனிப்பே போதும்.. நாட்டுச் சர்க்கரை என்பது மேலதிக சுவைக்கே!..

" எதுக்குடா சாமி இந்தக் கஷ்டம்?.. கடலை மிட்டாயையும் எள் உருண்டையையும் காசு கொடுத்து வாங்கித் தின்று விடலாமே!.. " - என்று நினைப்பவர்களுக்காக -

இது இதுதான்..

அது அதுதான்!..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்!..

***

20 கருத்துகள்:

  1. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. செய்முறை சுலபமாக இருக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முருகா சரணம்

      திருச்செந்தூரில் இருக்கின்றேன்..

      நீக்கு
    2. திருச்செந்தூர் முருகனிடம் அனைவருக்கும் வேண்டி வாருங்கள்.

      நீக்கு
    3. நல்லது.. அப்படியே செய்கின்றேன்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  4. உளுந்துப் பொடி நன்றாக இருக்கிறது.நல்ல சத்தான பொடி.
    பொடியை செய்து வைத்து கொண்டால் எளிதாக செய்து கொடுத்து விடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் மேலதிக கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. உளுந்துப் பொடி சூப்பர், துரை அண்ணா.

    நம் வீட்டில் செய்வதுண்டு. இது தோசை இட்லிக்கு கூடத் தொட்டுக் கொள்வதுண்டு

    இதில் உளுந்து அளவில் எள்ளும் எள்ளு அளவில் உளுந்தும் போட்டும் செய்வதுண்டு அதுவும் தொலி உளுங்கு.

    அடுத்துகொடுத்திருக்கும் பொடியும் செம .நல்ல சத்தான பொடி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நீக்கு
  6. உளுந்துப் பொடி சூப்பர்.

    அதைவிட கடலை உருண்டை, பொரி உருண்டை, எள்ளுருண்டை சூப்பரோ சூப்பர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடலை உருண்டை, பொரி உருண்டை, எள்ளுருண்டை எல்லாம் சிறப்பு..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. திருச்செந்தூர் முருகன், கடல், உடன்குடி கருப்பட்டி, சுக்குக் கருப்பட்டி, பனங்கல்கண்டு..... ஆஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.. எல்லாம் சந்தோஷம் தான்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. ஆரோக்கியத்துக்கு உகந்த சத்தான பொடிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. இந்த உளுந்து, எள் வறுக்கும்போது கொஞ்சம் சிவப்பு மி.வத்தலும், உப்பும் சேர்த்து வறுத்து மிக்சியில் பொடித்துக் கொண்டால் சாதத்தில் சேர்த்தும் சாப்பிடலாம் இட்லி, தோசைக்கும் தொட்டுக்கலாம். புரட்டாசி சனிக்கிழமைகளில் தனி எள்ளை வறுத்துக் கொண்டு அதோடு மி.வத்தல், உப்புச் சேர்த்துப் பொடித்து எள்ளுச் சாதம் கலந்து பெருமாளுக்கு சர்க்கரைப் பொங்கலோடு நிவேதனம் செய்யலாம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!