புதன், 29 ஜனவரி, 2025

எங்கள் கேள்விகள் - ஒரு கேள்வியின் பதிலுக்கு பரிசு!

 

ஜெயகுமார் சந்திரசேகரன் : 

சனாதனம் எந்த மொழியில் உள்ள வார்த்தை. அதன் சரியான தமிழ் அர்த்தம் என்ன? அதற்கும் மதத்திற்கும் என்ன சம்பந்தம்?

# சனாதனம் என்றால் சமஸ்கிருதத்தில் "அழிவற்றது - மாற்றமில்லாதது" என்று பொருள்.‌

ஆதியில் ஒரே "மதமாக" இருந்ததால் பாரத தேசத்தின் "மதம்" (வேதம் சார்ந்த என்ற பொருளில் வைதிக மதம் என்றும்) மாற்றம் கொள்ளாதது என்ற பொருளில் சநாதனம் என்றும் குறிக்கப்படுகிறது.

நெல்லைத்தமிழன்: 
மழை வருவதை நாம் எல்லோரும் வரவேற்போம். ஆனால் பாருங்க, நெல் வயல்கள் விளைந்து அறுவடைக்குத் தயாராக இருக்கிறது. கும்பகோணம், நாகை பகுதியில் மழை பெய்தது. விவசாயிகளுக்குத் தூக்கம் இல்லை, இரவெல்லாம் முழித்து அறுவடை செய்கிறார்கள், கொஞ்சமாவது விளைச்சலைக் காப்பாற்ற. 

மழை நல்லதா கெடுதலா?

# மழை கெடுதல் அவ்வப்போது செய்வதும் உண்டு .‌ ஆனால் கெடுதல் செய்வதை விட நல்லது செய்வது அதிகம் .‌

1. உங்கள் பொழுது போக்குகள் என்ன என்ன? 

# என் பொழுது போக்குகள்: வேதாந்தம், அரசியல், இலக்கியம், சமயம், பிரயாணம் எல்லாம் யூடியூபில் பார்ப்பது.  சமீபத்தில் கதை எழுத முயற்சிப்பது. மிகச் சொற்பமாக படிப்பது. 

& blog தயாரிப்பு, மின்நிலா புத்தகம் தயாரிப்பு, wordle, சொல்லியடி, வார்த்தையோடு விளையாடு, ஆன் லைன் டிரேடிங் ( F & O) இப்படி நிறைய. 

2. எந்த வயதில் நம்மைவிடப் பொடியனான குழந்தைகள் சொல்லைக் கேட்டுக் கடைபிடிக்கிறோம்? 

# நமக்கு 70+ அல்லது இளையவருக்கு 25+ ஆகும்போது.

& அவர்களோடு விளையாடும்போது. 

3. நம் உடம்பிறந்தாங்களுடன் பேசுவதுபோல்  மனைவி/கணவன் உடம்பொறந்தான்களிடம் நெருக்கம் வருமா?

# அது இரண்டு பக்க மனநிலை சார்ந்தது.

& சொந்தத்தில் கல்யாணம் செய்துகொண்டதால், என்னைப் பொருத்தவரை இரண்டு பக்க உறவினர்களிடமும் சகஜமாக பேச முடியும்.  

4. இப்போதும் நம் பெற்றோர்களிடம் பேச பகிர்ந்துகொள்ள அன்பைக் காண்பிக்க விஷயங்கள் இருக்கிறதா? என்ன என்ன?

# முன்னோர்கள் பற்றிய தகவல்கள். அந்தக் கால வாழ்வு முறை - மதிப்பீடுகள் .சொந்தங்கள் பற்றி அவர்களது அனுபவம்.

& இருக்கும்; இருக்கிறது. இப்போதும் என்பதற்கு என்ன வயது லிமிட் ? நான் என்னுடைய பெற்றோர்கள் உயிருடன் இருந்தவரை அவர்களோடு நிறைய பேசியிருக்கிறேன். 

5. அடுத்தவர் எப்போது மறைவார் என்ற ரகசியம் தெரிந்தால் என்னவாகும்? அவருக்கே ஒரு வருடத்துக்கு முன்பே தெரிந்துவிட்டால் வாழ்வில் நிகழ்வுகளில் ஒரு ஒழுங்குமுறை வந்துவிடாதா?  எப்படி இறப்பு எனத் தெரியக்கூடாது.

# முதலில் ஒரு திகில் உணர்ச்சி. சில சமயம்‌ ஆழ்ந்த கவலை. முடிவு நெருங்க நெருங்க விரக்தி.‌

இது நான் சொல்லவில்லை.  எழுத்தாளர் சுஜாதா எழுதி ரஜினி சொல்லி இருக்கார்!

கே. சக்ரபாணி சென்னை 28

மேடைக்கச்சேரிகளில்  பாடகர்கள் பாடும் போது  மேடையில்   இசைக்குழு தலைவர்  இரண்டு  கைகளையும் ஆட்டிக்கொண்டே  சைகைகாட்டுவார்.  ஆனால் பாடகர்களோ  இசைக்குழுவை சார்ந்தவர்களோ  அதை கவனிக்கவே மாட்டார்கள். ஏனெனில்  ஏற்கனவே  பயிற்சி  எடுத்து தான்  மேடையில் வந்து பாடுகிறார்கள்.  மேடையில்  இதை பார்க்கும் போது  என்ன நினைப்பீர்கள்?

# நான் இந்த மாதிரி இசைக்குழு நடத்துபவர் கையசைத்து இசைக்கச் செய்யும் நிகழ்ச்சி எதையும் நேரில் பார்த்ததில்லை.  ஆனால் மேற்கத்திய இசைக்கு நடத்துபவர் ரொம்ப முக்கியம்.  அவர் பெயரும் புகழும்தான் ரசிகர்களை ஈர்க்கிறது.  எனவே இந்த அபிநயத்தில் நாம் அறியாத சூட்சுமம் இருந்தாக வேண்டும்.

முன்பெல்லாம்  நிறைய மருந்துகளின்  பெயர்கள்  My Sin  என்று முடியும்.  ஆனால்  இப்போதெல்லாம்  வரும் மருந்துகளின் பெயர்களில்   My Sin  என்று  வருவதில்லை  கவனித்தீர்களா.  இப்போதெல்லாம் யாரும்  பாவம் செய்யவில்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?

# உங்கள் பாபம் அல்லது என்னது என்றல்ல.  My sin அல்ல mycin.  பூசண வகை ( fungus ) முதலாகக் கொண்டதன் குறியீடாம்.‌ இப்போதும் பரவலாக உண்டு. 

& அந்த வகையில் எனக்குப் பிடித்த மருந்து 'எறி த்ரோ மை சின்'  (Erythromycin ) அதாவது எறி (throw) my sin !!
= = = = = = = =

எங்கள் கேள்விகள்: 

1) எந்த வயதிலும் மற்றவர்களின் பாராட்டுகளை விரும்புவது மனித குணம் என்று சொல்கிறார் என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர். எனக்கு அப்படித் தோன்றவில்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 

2) பாராட்டு போலியான பாராட்டு என்று தெரிந்தால் அதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? 

3) அப்படிப்பட்ட போலியான பாராட்டுகளால் என்ன நன்மை விளையும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? 

4) இது கணக்கு இல்லை; காமன் சென்ஸ் கேள்வி. 

என் தாத்தா படித்த, 'உலக மகா எழுத்தாளர்களின் ஒப்பற்ற சில  சிறுகதைகள்" புத்தகங்கள் - மொத்தம் ஏழு தொகுப்புகள். ஒவ்வொரு புத்தகமும், 14 மி மீ தடிமன் கொண்டதாக இருக்கிறது. புத்தகத்தின் அட்டை ஒவ்வொன்றும் 2 மி மீ தடிமன் அட்டை கொண்டது. அதாவது ஒவ்வொரு புத்தகத்திலும் அட்டைகள் (2 + 2 மி மீ,) + (10 மி மீ கனத்திற்கு பக்கங்கள் ) 
படம் பார்க்கவும் : 

இப்போ கேள்வி பகுதிக்கு வருகிறேன். தாத்தா காலத்து புத்தகம் என்பதால் அவை யாவும் தாத்தா காலத்து மர பீரோவில் படத்தில் உள்ளபடி வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன. 


இராமபாணம் என்று அழைக்கப்படும் புத்தகப் பூச்சி (புத்தகப் புழு?) ஒன்று பல காலமாக யாரும் தொடாமல் இருந்த இந்தப் புத்தகங்களை துளையிட ஆரம்பித்தது. 

முதல் தொகுதி, முதல் பக்கத்திலிருந்து, கடைசி ஏழாவது தொகுதியின் கடைசி பக்கம் வரை துளையிட்டு வைத்தது. 

இராமபாணம் பூச்சி, மொத்தம் எவ்வளவு நீளத்திற்கு துளைத்தது? (இந்தக் கேள்விக்கு சரியான பதில் சொல்லும் முதல் மூன்று பேர்களுக்கு பரிசு உண்டு. விடைக்கு, விளக்கம் எழுதவேண்டாம். )

= = = = = = = = = =

KGG பக்கம் :

29-12-24 மதியம் 2 மணி சுமாருக்கு பாண்டிச்சேரி ரிசார்ட் போய்ச் சேர்ந்ததும், எங்கள் ஏழு பேரையும் உட்கார வைத்து, ஆளுக்கு ஒரு தொப்பி கொடுத்து, பிறகு பச்சைக் கலரில் ஒரு திரவம் கொடுத்தார்கள். 

அந்த ஜூஸ் , நிறமும், மணமும் சுவையும் மாவடு ஜூஸ் போல இருந்தது! 

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து நேரே டைனிங் ஹால் - அங்கே கிடைத்தவைகளை கபகபவென்று அவரவர்கள் டேஸ்ட்டுக்கு ஏற்ப சாப்பிட்டு அதோடு ஒரு காபியும் குடித்தோம். 

அதற்குப் பின் சிறுவர்கள் விளையாடுமிடம், புல்வெளி எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்தோம். 




சறுக்கு மர விளையாடல்! 


ஃப்ளையிங் சாஸர் பறக்க விட்டு பிடித்தல்! 

அதற்குப் பிறகு ரிசார்ட் முதல் மாடியில் அமைந்துள்ள indoor games பகுதிக்கு சென்று அங்கே snookers மகன்&Co விளையாடுவதை பார்த்துக்கொண்டு இருந்தேன். 

மகன் வற்புறுத்தியதால், கம்பை கையில் வாங்கி, இடது கை கட்டை விரல் அருகே அதை position செய்து வலது கையால் கம்பை இழுத்து ஒரு வாங்கு வாங்கினால் ---- ஒன்றும் ஆகவில்லை! பந்துகள் ஒன்றோடு ஒன்று மோதி தாறுமாறாக ஓடி எதுவும் பாக்கெட்டில் விழாமல் என்னைப் பார்த்து சிரித்தன. 

ஏதோ நானும், "கம்பெடுத்து ஆடுவேன்; கலர் பந்தை போடுவேன்" என்று பாடி ஐந்து நிமிடங்கள் ஆடினேன். அவ்வளவுதான்!  

= = = = = = = = =

75 கருத்துகள்:

  1. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  2. இன்றைக்கு தை அமாவாசை..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  3. சிறப்பான கேள்வி பதில்கள் ஜி

    பதிலளிநீக்கு
  4. பாராட்டை விரும்புவது மனித குணம். அதற்கு வயது ஒரு பொருட்டல்ல.

    மிகச் சிறப்பான சாதனைகள் புரிந்தவனை/ளை எல்லோரும் பாராட்டுவதால், சாதாரணர்கள் பாராட்டுவதை அவன் கண்டுகொள்ளமாட்டான். அவன், தன்னைவிடப் பெரியவர்கள் பாராட்டும்போது மனம் மகிழ்வான். (உதா. கோஹ்லியைப் பார்த்து கேஜிஜி சார் கை கொடுத்து சூப்பரா விளையாடுறீங்கன்னு சொன்னா மதிக்கக்கூட மாட்டான். Note. இப்போ அவன் விளையாடற லட்சணத்துல இதை டிரை பண்ணா, கோபத்துல பேட்டாலயே அடிச்சுடுவான்)

    போலியான பாராட்டுகளை நான் ஏற்பதில்லை, உடனேயே மறுத்துவிடுவேன், இல்லைனா இவன் நம்மிடம் ஏதோ உதவி கேட்க அடிச்சுவிடறான், பக்கத்துலயே அண்டவிடக் கூடாதுன்னு நினைப்பேன். என்னுடைய திறமையினால் கிடைக்காத பாராட்டை மேடையிலேயே, யார் அதற்குக் காரணம் என்று சொல்லி, என்னுடைய பங்கையும் சொல்லிவிடுவேன். (ஆனால் வயிரமுத்து போன்ற ஜால்ராக்கள், புழுப்போல கூனிக்குறுகி கருணாநிதியை அளவுக்கு மீறி மேடையில் பாராட்டும்கோது, கருணாநிதி மனமகிழ்ந்து கேட்டுக்கொண்டிருந்ததும், பிறகு பொதுமக்களுக்குச் சொந்தமானதை வயிரமுத்துக்கு பரிசாக அளித்ததும்-ஓசி குடியிருப்பு, நிலம் போன்று) மனதை உறுத்துகிறது. அரசியல்வியாதிகளுக்கு போலிப் பாராட்டுகள்தாம் பூஸ்ட் எனத் தோன்றுகிறது. சமீபத்தைய உதாரணம், ஒருவர், ஸ்டாலின் ஒரு லட்சத்து இருபதாயிரம் மனுக்கள் மீது தீர்வு கண்டுவிட்டார், தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும், ஓரிரண்டு தொஇர நிறைவேற்றிவிட்டார் எனப் பேசியது.

    போலியான பாராட்டுகளால், பாராட்டைக் கேட்டுக்கொண்டிருப்பவன் அடிமுட்டாள் எனத் தெரியவரும். பரிசும் கொடுத்தால் இளிச்சவாயன் என்பது புலப்படும். ஓட்ட வேண்டாம், வந்த வேலையைச் சொல்லு என பதில் வந்தால் கறார் ஆசாமி, புத்திசாலி என்பது வெளிப்படும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // (உதா. கோஹ்லியைப் பார்த்து கேஜிஜி சார் கை கொடுத்து சூப்பரா விளையாடுறீங்கன்னு சொன்னா மதிக்கக்கூட மாட்டான். Note. இப்போ அவன் விளையாடற லட்சணத்துல இதை டிரை பண்ணா, கோபத்துல பேட்டாலயே அடிச்சுடுவான்)// ஏன் என்றால், கோஹ்லிக்கு தமிழ் தெரியாது !!

      நீக்கு
  5. 94 மிமீ என்பது கணக்குப் பிரகாரம். அட்டையைத் துளைத்து நான் பார்த்தது அபூர்வத்திலும் அபூர்வம். மூடிய புத்தகத்தில் குறுக்காகத் துளைக்க வாய்ப்பே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட்டையைத் துளைத்து நான் பார்த்திருக்கிறேன்.

      நீக்கு
  6. ரிசார்ட் அனுபவம் நன்று. மெக்சிகோ ரிசார்ட் பற்றி ஒரு ஞாயிறு படங்களுடன் எழுதுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் எழுதுங்கள்.

      நீக்கு
    2. எனக்கு என்னமோ மெக்ஸிகோ என்றாலே மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் தான் கற்பனையில் தோன்றுகிறது

      நீக்கு
    3. //மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்// படத்துடன் அனுப்பினால் கேஜிஜி சார் வெளியிட மாட்டார். இல்லைனா அனுப்பிடுவேன்

      நீக்கு
    4. அனுப்பினா நான் மட்டுமாவது படிப்பேன்.

      நீக்கு
  7. மேடைக் கச்சேரிகளில்.... இவனுவ வாசிச்சாலும் எது எப்போ ஒலிக்கணும்னு நான்தான் முடிவு பண்ணியிருக்கேன். பரிமாறுபவர்கள் இவர்கள். செய்தது நானே என பொதுமக்களுக்கு, பார்வையாளர்களுக்கு உணர்த்தும் முயற்சியோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கையாட்டுதல்கள் ஒரு குழுவாக இசைப்பவர்களை, ஒரே நேரத்தில் இசைக்க ஆரம்பிக்கவும், தாளம் தப்பாமல் இருக்கவும் செய்யப்படும் அங்க சேஷ்டை.

      நீக்கு
  8. ஒரு வருஷத்துல சாகப் போற நாள் தெரிஞ்சா, போட வேண்டிய கையெழுத்துகள், பெஇர வேண்டிய சேமிப்பு, கடன் விஷயங்கள், கிளம்புவதற்கு தயாராக வேண்டியது, வர வேண்டியவர்கள் அறுபது நாட்களுக்குள் இரயில் விமானம் டிக்கட் புக் பண்ணுவது என எல்லாமே நல்லா நடக்குமே... இதுல ஒரே ஒரு பிரச்சனை, கடவுள் தவறா இன்னொருத்தர் தேதியை நம்மிடமும் நம் தேதியை இன்னொருவரிடமும் தெரிவித்துவிட்டால்தான் ஆபத்து, இனித்தான் பிரயாணமே, அதுக்குள்ள போய்ட்டானே, வாழ்ந்தபோதுதான் ஒழுங்குமுறை இல்லை, சாகும்போதுமா. போன்றோ, இல்லை, திரும்ப கிளம்புற நாள் வந்தாச்சு, போட்டது போட்டபடி கிடக்கு, போகாம அடம் பிடிக்கிறானே என்றோ ஏச்சுக்களைக் கேட்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் எழுதிய கடவுள் காலம் அல்லது கடவுள் சிறுகதை படிச்சிருக்கீங்களோ?

      நீக்கு
    2. ​சுஜாதா தான் ​கடவுள் வந்திருந்தார் என்று கதை எழுதினர் என்றால் நீங்களுமா?

      Jayakumar​

      நீக்கு
  9. அம்மாட்ட கேட்டுத் தெரிந்துகொள்ள ரெசிப்பிகள் இருக்கு. அப்பாட்ட பகிர ஏகப்பட்ட விஷயங்களும் ஆலோசனை கேட்கவும் நிறைய இருக்கு. மனம் நெகிழ்ந்து மன்னிப்பு கேட்கவும் , செய்த தவறுகளை மன்னிக்கச் சொல்லி வேண்டவும் சந்தர்ப்பமாக அமையும்.

    பதிலளிநீக்கு
  10. மழை நல்லதே, நெல்லை. மனுஷங்கதான் இயற்கையைப் புரிந்து கொள்ளாமல் தவறு செய்கிறோம். இயற்கையை நாம் மீறினால், அதை எதிர்த்தால் நமக்கு நஷ்டமே. அதைத்தானே நாம இப்ப அனுபவிச்சுட்டுருக்கோம்.

    பாருங்க Turahalli காடுன்னு இப்ப இருக்கற நிலப்பரப்பை வளைச்சு வேலி போட்டு காடுன்னு சொல்லிக்கறாங்க. ட்ரெக்கிங்க், ஹைக்கிங்க் சைக்கிளிங்க்னு சொல்லறாங்க ஆனா பாருங்க.... அதைத் சுத்தி பனசங்கரி 6 வது extension னோ என்னவோ இருக்கு. அங்க இருக்கற குடியிருப்புல இருக்கற ஒரு பெண்மனி அவங்க வீட்டு ஜன்னல் வழியா இந்தக் காட்டுக்குள்ள (காடுனா உடனே ரொம்ப மரங்கள் அப்படின்னு சொல்றதுக்கில்ல பாறைகளும் மரங்கலும்...) ஒரு பாறை மேல ஓர் ஆண் சிறுத்தை உக்காந்துருக்கறத பார்த்திருக்காங்க.

    அப்புறம் இன்னொரு குடியிருப்பில் ஒரு சிறுத்தை குட்டிகள் போட்டு வைச்சிருக்கு. சிசிடிவி காமேராவுல தெரிஞ்சுருக்கு....அது ராத்திரி துராஹல்லி காட்டுக்குள்ள போய்டுமாம்...பகல்ல இங்க வந்திருமாம்....

    இப்படி அங்கிருக்கறவங்க கண்ணுல சிறுத்தை படுது.

    இது யார் குற்றம்? சிறுத்தையின் குற்றமா?

    கீதா

    பதிலளிநீக்கு
  11. கேள்விகளும் பதில்களும் சிறப்பு. பாண்டிச்சேரி தொடர் முதலிலிருந்து படிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  12. 2. எந்த வயதில் நம்மைவிடப் பொடியனான குழந்தைகள் சொல்லைக் கேட்டுக் கடைபிடிக்கிறோம்? //

    நெல்லை பொடியன்னு வயசை வைச்சு சொல்லவே கூடாதுன்னு தோணும் எனக்கு. ஏன்னு பார்த்தீங்கனா அவங்க நல்லா சிந்திக்கறவங்களா இருந்தா, நமக்கு நிறைய நல்ல விஷயங்கள், பார்க்கப் போனா நல்ல பக்குவமான அறிவுடன் தீர்வுகள் அறிவுரைகள் சொல்வதுண்டு. நம் எந்த வயசிலும். நாம ஈகோ இல்லாம அதை அணுகினால் புரிந்து கொண்டு செயல்படலாம்

    கீதா

    பதிலளிநீக்கு
  13. நம் உடம்பிறந்தாங்களுடன் பேசுவதுபோல் மனைவி/கணவன் உடம்பொறந்தான்களிடம் நெருக்கம் வருமா?//

    ஹாஹாஹா அந்த வீட்டுல என்ன ஆட்சியோ அதன்படி!!!!!

    கௌ அண்ணாவின் பதில் ஓரளவு சரி எனலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  14. இறப்பு தெரிந்தால் ஒவ்வொருவரின் மனமும் அவரவர் மனவலிமை சார்ந்து செயல்படும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூடவே இன்னொரு கருத்தும்.....தெரிந்தால் சாதாரண மனுஷங்க நமக்கு கண்டிப்பா கலங்கி மனம் கூட பிறழலாம். எனவே தெரியாம இருக்கறது தான் நலல்து. அதுக்குத்தானே சொல்றது நேற்று பற்றியும் வேண்டாம் நாளை என்ன என்பதும் வேண்டாம் இன்றே இந்த நொடியை அனுபவித்து வாழ்னு!!

      கீதா

      நீக்கு
    2. அட!! ப்ளூ நம்ம ஸ்ரீராமும் கிட்டத்தட்ட அதே பதில்!!!

      சூப்பர் டயலாக்!!!!!!!!!!!!!!!!!! வீடியோ பார்த்தேன்.

      கீதா

      நீக்கு
  15. ​1) எந்த வயதிலும் மற்றவர்களின் பாராட்டுகளை விரும்புவது மனித குணம் என்று சொல்கிறார் என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர். எனக்கு அப்படித் தோன்றவில்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
    சிறு வயதில் பாராட்டை எதிர்பார்ப்பதில் ஆவல் அதிகம். இளமை பருவத்தில் பாராட்டுகளை சாதித்த பெருமையாக கொள்வது சகஜம். முதுமையில் விருப்போ வெறுப்போ இன்றி பாராட்டுகளை சாதாரணமாகக் கொள்வது முதிர்ச்சி.
    ஆக பாராட்டுக்கள் விரும்பப்படுபவை தான், ஆனால் எதிர்பார்ப்புகள் வயதின் தன்மையைப் பொறுத்தது.

    2) பாராட்டு போலியான பாராட்டு என்று தெரிந்தால் அதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?
    ​அப்படி போலி என்று இருந்தால் அது பெறுபவருக்கும் கொடுப்பவருக்கும் தெரியும், சிறு குழந்தை உட்பட. ஆனால் வயதுக்கேற்ப அப்பாராட்டுகளை ஏற்றுக்கொள்வதும் கொள்ளாததும் நிகழும்.

    3) அப்படிப்பட்ட போலியான பாராட்டுகளால் என்ன நன்மை விளையும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

    ​அன்பு, பாசம், நட்பு, பிரச்னையை தவிர்த்தல், வெகுமதிபெறுதல் என்று இடம, பொருள், காலத்திற்கேற்ப வேறுபடும்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  16. my sin என்று சொற் பிரயோகம் செய்து சக்ரபாணி சார் கேட்ட கேள்வியை மிகவும் ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  17. 1. பாராட்டுகளை ரொம்ப விரும்புவது சின்ன வயசு. அதன் பின்னும் பாராட்டுகளை விரும்புவது ஓரளவு வரும்....வேலை பார்க்கும் இடம் வரை ஆனால் மனம் பக்குவம் அடைய அடைய ...அடைந்தால், எதிர்பார்ப்புகள் குறைந்தால்.....பாராட்டுகள் வந்தாலும் சரி வரலைனாலும் சரி என்று கடந்து செல்ல முடியும் தலைக்கு ஏறாது!!!

    2. போலியான பாராட்டுகளை ஏற்பது சிரமம். அது சொல்பவரைப் பொருத்து தெரிந்துவிடும். (பெரும்பான்மையான மேடைகளில் நிகழ்வதுதானே!!!!)

    3. போலியான பாராட்டுகள் என்று அறிய முடியாதவர் இருந்தால் கண்டிப்பாக அவர் ஒன்று innocent, இல்லைனா அறிவிலி, இல்லைனா காரியம் சாதித்துக் கொள்ளப் பயன்படுத்திக்குவார்...அப்படிப்பட்ட சூழலில் பெறுபவரும் சரி சொல்பவரும் சரி ஆதாயங்கள் அடிப்படையில் ஒருவருக்கொருவர் எம்டெனாக இருப்பாங்க. அரசியலில் இதெல்லம் சர்வசகஜமப்பா...

    4. ஹையோ எனக்கில்லை எனக்கில்லை...இதெல்லாம் ஜெ கே அண்ணாவின் பிரிவு....

    கீதா

    பதிலளிநீக்கு
  18. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து நேரே டைனிங் ஹால் - அங்கே கிடைத்தவைகளை கபகபவென்று அவரவர்கள் டேஸ்ட்டுக்கு ஏற்ப சாப்பிட்டு //

    என்னண்ணே.....என்ன மெனுன்னு சொல்லாமப் போய்ட்டீங்களே, நெல்லை, எனக்கு எல்லாம் அதானே முக்கியம்!!!!!! நாங்க கொஞ்சம் அதை வைச்சு ஓட்டிப்போம்ல!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறந்து போச்சு. மசாலா தோசை மட்டும் ஞாபகம் இருக்கு. ஐஸ்கிரீம் ஞாபகம் இருக்கு. காபி ஞாபகம் இருக்கு. மத்தது எல்லாம் இப்போ மறந்து போச்சு!

      நீக்கு
  19. நீங்க ஸ்னூக்கர் விளையாடியதைச் சொன்ன பகுதியை ரசித்தேன், கௌ அண்ணா. சிரித்துவிட்டேன்.

    காணொளிகள் இரண்டுமே நல்லாருக்கு. கேம்ஸ் இருப்பது நல்ல பொழுது போக்கு. ரிலாக்சேஷன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  20. நமக்குப் ப்ரார்த்தனை பண்ணிக்கவே நேரம் சரியா இருக்கு, இதில் ஊருக்கெங்க ப்ரார்த்தனை பண்ணுவது என்பதால் கமலா ஹரிஹரன் மேடம் வரலையா இல்லை பயணங்களா?

    பதிலளிநீக்கு
  21. நமக்கு தெரிந்திராத புதிய, நல்ல ,விடயங்களை சிறுவர்கள் கூறினாலும் அதை ஏற்றுக் கொள்வேன்.

    பலியான பாராட்டுகள் ஏற்கக் கூடியவை அல்ல . கூறுபவர் நம்மிடம் எதையோ எதிர்பார்க்கிறார் எனப் புரிந்து கொள்ளலாம்.

    இறப்பை பற்றி முன்பே அறிவது சில முக்கியமான விடயங்களை முடிக்க உதவும் .ஆனால் நெருங்கியவர்கள் தெரிந்து அவர்கள் கவலை கொண்டு கலங்கும் போது நாமும் கலங்க வேண்டி வரும் .

    புத்தகம் அரிப்பதில் பூச்சிக்கு நீள அகலம் எங்கே தெரியப்போகிறது. :)
    கேள்வி பதில்களை ரசித்தோம் .

    பதிலளிநீக்கு
  22. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  23. /// பாராட்டுகளை விரும்புவது மனித குணம் ///

    உண்மை..
    உண்மை..

    தன் மகனோ மகளோ பிறரால் பாராட்டப்படும் போது பெற்றெடுத்த தாயின் மனம் குளிர்கின்றது என்று வள்ளுவப் பெருந்தகை குறிக்கின்றார்..

    பதிலளிநீக்கு
  24. மனைவியைப் புகழ்ந்ததாலேயே ஆண்களுக்கு வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கின்றது..

    பதிலளிநீக்கு
  25. மழை இல்லையேல்....,

    ரெயின் ரெயின் கோயவே.. - - எனும் பாடத் திட்டத்தின் கீழ்ப் படித்தவர்களுக்கு விஷயம் புரிவதற்கான வாய்ப்புகள் குறைவு...

    திருவள்ளுவர் உரைத்திருக்கின்ற போதிலும்!...

    பதிலளிநீக்கு
  26. ​கும்பமேளா என்பது எவ்வாறு உருவாகியது, எதன் அடிப்படையில் அதன் நாட்களை தீர்மானிக்கின்றனர். அவ்வாறு முங்கி குளிப்பதால் என்ன பயன், அழுக்கு நீங்கும் என்பதைத் தவிர?

    தமிழ் நாட்டில் கும்பகோணத்தில் மாத்திரம் மகாமகம் கொண்டாடப்படுகிறது, அதுவும் குளத்தில், என் அதை ஆற்றில் (காவேரி) வைத்துக்கொள்ளவில்லை?

    Jayakumar

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை. பரிசு யாருக்கு கிடைத்தது என அறிய ஆவலாக உள்ளது. தங்களின் பயண பக்கமும் சுவாரஸ்யமாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு நன்றி. நான்காவது கேள்விக்கு சரியான விடை யாரும் இதுவரை இங்கே சொல்லவில்லை. ஒரு வாசகர் மட்டும் வாட்ஸ்அப் மூலமாக சரியான விடை அனுப்பி பரிசுத் தொகை பெற்றுள்ளார்.

      நீக்கு
    2. நல்லது. பரிசு பெற்றவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

      பயணங்கள் சென்று வந்த அலுப்பினால் காலை தாமதமாகத்தான் எழுகிறேன். பிறகு வழக்கமான வேலைகள் வந்து விடுகின்றன. அதனால் பதிவுகளுக்கு சில சமயம் தாமதமாகி விடுகிறது. கருத்துரையில் என்னை தேடிய சகோதரர் நெல்லைத் தமிழர் அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி. 🙏.

      நீக்கு
  28. வணக்கம் சகோதரரே

    அனைவரின் கருத்துரைகள் அனைத்தும் நன்றாக உள்ளது. அவரவர் கற்ற திறமையை பறைசாற்றுகிறது. இது எனது உண்மையான மனம் நிறைந்த பாராட்டுக்கள் .பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  29. கேள்விகளும், பதில்களும் அருமை.
    நெல் வயல்களில் அறுவடை சமயம் மழை கஷ்டம் தான். ஒருவர் அவர் வயலில் கதிர் நன்கு வந்து இருக்கும் நேரம் மழை இல்லை இடத்தில் தண்ணீர் கொண்டு வந்து கொஞ்சம் கொஞ்சமாக நீர் விட்டுக் கொண்டு இருந்தார். மழை பெய்தும் கெடுக்கும், பெய்யாமலும் கெடுக்கும்.

    வயலில் விளைந்த பயிர் வீடு வந்து சேரும் வரை விவசாயி பாடு பெரும்பாடுதான்.

    பதிலளிநீக்கு
  30. //இப்போதும் நம் பெற்றோர்களிடம் பேச பகிர்ந்துகொள்ள அன்பைக் காண்பிக்க விஷயங்கள் இருக்கிறதா? என்ன என்ன?//

    என் அப்பாவிடம் நிறைய பேச வேண்டும். 50 வயதில் எங்களை விட்டு இறைவனிடம் போய் விட்டார்கள். அவர்களிடம் பேச நிறைய விஷயங்கள் இருக்கிறது, நானும் என் கணவரும் என் அப்பாவை பற்றி அடிக்கடி பேசுவோம். என் கணவருடன் அவர்கள் பல விஷயங்களை உரையாடி இருக்கலாம் , அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது.

    என் குழந்தைகள் அப்பாவின் அப்பாவுடன் மகிழ்ந்து இருந்தார்கள். அம்மாவின் அப்பாவை பார்க்கவில்லை, தாத்தாவின் அன்பை, ஆதரவை பெறவில்லை, அது குறைதான் எனக்கு இப்போதும்.
    அப்பாவுக்கு குழந்தைகள் என்றால் பிடிக்கும் அவர்களுடன் விளையாடுவார்கள், விளையாடும் போது அவர்களும் குழந்தை போல ஆகிவிடுவார்கள், சிரித்து மகிழ்வார்கள்.

    பதிலளிநீக்கு
  31. பாண்டிச்சேரி ரிசார்ட் அனுபவ பகிர்வு, மற்றும் படங்கள், காணொளி அருமை.

    பதிலளிநீக்கு
  32. எத்தனை வயதானாலும் புகழ்ச்சிக்கு மயங்காதவர் இருக்க முடியாது. ஆனால் வயதாகி புகழ்ச்சியை விரும்புகிறவர்களை பார்க்கும் பொழுது சற்று அருவருப்பாக இருக்கும்.
    போலியாக புகழும்போது பேச்சை மாற்றி விடுவேன்.
    போலியாக  புகழ்கிறவர்கள் தாங்கள் யார் என்று அடையாளம் காட்டிக் கொள்கிறார்கள். 

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!