புதன், 21 அக்டோபர், 2009

வாழ்க்கையில் முன்னேற ...009


அரை நிமிடம் ப - இரண்டு நிமிடங்கள் யோ - உடன் கடை.
பாடம் ஒன்பது: நீங்க இந்த நிமிடம் - இதைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்க கணினிக்கு அருகில் நீங்க வந்து, அதை ஆன் செய்வதற்கு முந்தைய ஒரு நிமிட நேரத்தில் - என்ன செய்தீர்கள்; இந்த வலைப்பதிவை விட்டு அகன்ற பின் வருகின்ற ஒரு நிமிடம் என்ன செய்யப் போகிறீர்கள்?
பதில் எதுவும் எனக்குச் சொல்ல வேண்டும் என்கிற அவசியம் இல்லை. சொன்னால்  - நான் கேட்டுக் கொள்வேன்.
நான் என்ன செய்தேன்? கணினிக்கு அருகில் இந்தப் பதிவை இட வருவதற்கு முன் - ஐந்து வயதுக்குட் பட்ட இரண்டு பையன்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தேன். 
என்ன செய்வேன்? இந்தப் பதிவை வலைக்கு அனுப்பியவுடன், அதை Tamilish பக்கத்திற்கு Submit செய்வேன். பிறகு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை - ஒரு நிமிட நேரம் - இந்தப் பதிவிற்கு எவ்வளவு வோட்டுகள் விழுந்துள்ளன, என்னென்ன பின்னூட்டங்கள் வந்துள்ளன என்பதை - முழு கவனத்துடன் படிப்பேன். ஏன் என்பதை, அடுத்த பதிவில் பார்ப்போம்.
(தொடரும்)

2 கருத்துகள்:

  1. வலையாபதி அவர்களே - வந்து வந்து பார்த்து நல்லா ஏமாந்தீங்களா? பின்னூட்டங்களே காணோமே - இப்ப என்ன செய்வீங்க? இப்ப என்ன செய்வீங்க!!

    பதிலளிநீக்கு
  2. கடமையைச் செய்வேன்; பலனைப் பற்றி கணக்குகள் போடாமல்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!