Saturday, October 31, 2009

நண்பர்களுக்கு வலை விரிக்கும் ...


Here, I have written an article about my friends with the hope I may get some lead about our old school friends. Please help me ... Rangan.

என் இனிய நண்பர்கள்.
நான் நாகையில் 1953யிலிருந்து 1964வரை பள்ளியில் படித்த காலத்தில் எனக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள். பலவேறு கால கட்டத்தில் நட்பு பலப்பட்டது. பல்கிப் பெருகியது. சில நட்புக்கள் ஆழப்பட்டது. சில சுருங்கின. சில நண்பரகள் கருத்து வேறுபட்டு விலகினர்.ஆனால் பொதுவாக நட்பு வட்டம் பெருகி வளர்ந்தது. சந்தானம், ராமன், சிவராமகிருஷ்ணன், முத்து ரத்தினம்.போன்றோரின் நட்பு முதல் வகுப்பு தொடங்கி, பள்ளி இறுதிவரை தொடர்ந்தது. சில நண்பர்கள் அவர் தம் பெற்றோரின் அலுவல் மாற்றம் காரணமாகத் தொடர இயலவில்லை. அந்த வகையில் நான் நாகநாதர் கோவில் சன்னதி தெருவில் வசித்த ஜி.ராம்குமார், ஞானப்பிரகாசம், திருக்கடையூர் நாகராஜன், பாண்டியன், வங்கி ஏஜண்ட் மகன் மூர்த்திவாசன், கஸ்டம்ஸ் ஆபிஸ் சூபரிண்டெண்ட் மக்ன் ,மணி (பாலக்காட்டு கொழுக்குமொழுக்கு பையன்) போன்றோரின் பிரிவை இன்றும் உணர்கிறேன். பள்ளி இறுதிவரை வலுப் பட்ட நட்பு, கல்லூரியில் சேர்ந்த பின் விடுபட்டது. அப்படியும் விடேன் தொடேன் என்று வளர்ந்த நட்பு இன்று வரை தொடர்கிறது.

சந்தானம், புஷ்பவனம், ராமன்(சாக்ரடீஸ்), ஷ்யாம்சுந்தர்,, உப்பிலி ஸ்ரீனிவாசன், தேவாஜி (audco valves), ஜோசஃப் ராயன் போன்றவர்களின் நட்பு இறுக்கம் 1964க்குப் பின்பும் தொடர்ந்தது, தொடர்கிறது. பின்பு அலுவலகத்தில் சேர்ந்த பின்அங்கும் ஒரு நட்பு வட்டம் மலர்ந்து வளர்ந்தது. சிறு வயது முதலே ஒரு சில நட்புதான் தொடர்கிறது. எல்லோரிடமும் பிரியமாக இருந்தாலும் ஒரு சிலரிடம் மட்டும்தான் நாம் இணைந்து பழகுகிறோம். காதலுக்குமட்டுமல்ல. நட்புக்கும் ரசாயனம் தேவைப்படுகிறது.


நட்பு வட்டத்திலும் ஒரு நெருங்கிய வட்டம் உண்டு. சந்தானத்திடம் பழகிய அளவு வேறு யாரிடமும் நான் பழகவில்லை. சந்தானம் மறைந்த பின்பும் அந்த ஸ்தானத்தை யாருக்கும் அளிக்கும் மனப்பாங்கும் வரவில்லை. நெருங்கிய நண்பர்களும் மிகச சிலரே. நானும் என் நெருங்கிய நண்பர் ஷ்யாமும் 55 வயதிலேயே இருக்கும் நட்பை வளர்ப்பதில் மிகுந்த கவனம் செலுத்தினோம். அந்த வயதிற்கு பிறகு புது நட்பு வருவது கடினம். வந்தாலும் அது சுய நலமில்லா நட்பாக வளர்வது அரிது. எங்கள் உடன் படித்த ஒரு அன்பருடன் நட்பை வளர்க்க முயற்சி செய்து மிகப் பெரிய பாடம் கற்றோம். 15வயதில் பார்த்தவர் 50 வய்திலும் அதே உள்ளப் பாங்குடன் இருப்பதில்லை.
 
அலுவலக நண்பர்கள் அலுவல் காரணமாகவோ, உயர்பதவி பெறுவதாலோ பல வேறு காரணங்களால் நட்பு இடைவெளி அதிகமாக சாத்தியங்கள் உண்டு.. எனக்கு பல நட்பு வட்டங்கள் உணடு. நாகை நண்பர்கள், அலுவலக் நண்பர்கள், சபரிமலை செல்வதால் வளர்ந்த நட்பு, கூட்டு முயற்சியில் வர்த்தகம் செய்வதால் உருவான (time tested) நண்பர் குழாம் என. அதிகமான நண்பர்களைப் பெற்றிருப்பதில் எனக்கு மிகுந்த சந்தோஷம். நண்பர்களுடன் பேசுவதில்,பழகுவதில்.அவர்கள் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்வதில் விவரிக்க இயலாத மன திருப்தி உண்டாகிறது. Tell me your friends, I will tell you who you are என்று சொலவடை உண்டு. சில நண்பர்களை இனனமும் நான் தேடிக்கொண்டு இருக்கிறேன். திரு.ஜோசஃப் ராயன் ( microbiologist KMC) குப்புசாமி (Ex police wireless dept), ஸ்ரீதர் ( sivakavi family) மாங்குடி சிவராமகிருஷ்ணன்,(M.K.Varadarajan's brother) என சிலர்.


நாங்கள் கடந்த 15 வருடங்களாக Ngt Friends' Meet தொடர்ந்து நடத்தி வருகிறோம். எல்லோரும் வருடத்தில் ஒரு நாள் அல்லது நண்பர்கள் வசதிக்கேற்ப வேறிடத்திலோ சேர்ந்து, பழைய, நாகையில் வாழ்ந்த,வளர்ந்த நாட்களை, நினைவுகளை அசை போடுவதில் சுவை காண்போம். பழைய நண்பர்கள் புது வரவாக மீண்டும் கிடைப்பார்களோ என்ற எதிர்பார்ப்பும் உண்டு!!

with love and affection,
rangmani1951@gmail.com

12 comments:

Ravichandran said...

நட்பைக் கூட கற்பைப் போல எண்ணுவேன் என்று நண்பர்களை அடைய வாழ்த்துக்கள். இன்னும் பலப்பல பழைய நண்பர்கள் ஒன்று சேரவும், பழைய நண்பர்களாகவே இருக்கவும், புதிய குணங்கள் பாதிக்காமல் இருக்க நட்பாண்டவரை வேண்டிக் கொள்கிறேன்.

kggouthaman said...

ரங்கன் சார் - என் கூட தேர்முட்டி ஸ்கூல்ல - அஞ்சாம் கிளாஸ்ல ஞானப்ரகாசம் என்று ஒருவர் படித்தார் - அவரை எல்லோருமே 'ஈ புடிச்சான்' என்று செல்லமாக அழைப்பார்கள் -- நீங்க சொன்ன ஞானப்ரகாசம் - இவர் கிடையாதே?

Jawahar said...

அனுமார் கோயில் ராமன் பற்றி தனி இடுகையே போடலாம்.

http://kgjawarlal.wordpress.com

செ.சரவணக்குமார் said...

நட்பின் மீதான உங்களின் நேசமும், இழந்த நட்பைத் திரும்பப்பெற முனையும் உங்கள் ஆர்வமும் வியப்பிற்குரியது. பகிர்வுக்கு நன்றி

ஸ்ரீராம். said...

நன்றி ரவி....

ஸ்ரீராம். said...

அனுமார் கோயில் ராமன் இடுகை சீக்கிரம் எதிர்பார்க்கலாமா ஜவர்லால்? நாங்க எப்போ தெரிஞ்சிக்கறது?

ஸ்ரீராம். said...

வீடு வரை உறவு...கடைசி வரை இடுக்கண் களையும் நட்பு அல்லவா சரவணக் குமார்? அதான்...

kggouthaman said...

ரங்கன் சார் - நம்ம காங்குல - ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபது வரை இருந்து - பின் மலேசியா சென்று - அங்கு தமிழ்ப் பத்திரிகை உலகில் தனி இடம் பிடித்த நண்பர் திரு குமணபூபதி என்கிற ஆதி குமணன் பற்றி எழுத மறந்துவிட்டீர்களே! மறைந்துவிட்ட போதிலும், மறக்க முடியாத நண்பர் அவர். வெகு நாட்கள் கழித்து, எம் ஜி யார் அவர்கள் நடத்திய உலகத் தமிழ் மகா நாட்டிற்கு வந்துவிட்டு, அப்படியே அவருடைய நண்பர் மாலனின் - 'திசைகள்' வார ஏடு வெளியீட்டு விழாவிற்கும் வந்திருந்தார். நானும், ஜவகரும், ச்யாமும் - அவரைச் சந்தித்து வெகு நேரம் உரையாடிக் கொண்டிருந்தோம்.

ஹேமா said...

காதல் போல நட்பும் சில சமயம் வலியையும் சந்தோசத்தையும் தருகிறது.நட்பின் ஆழத்தையும் ஏக்கத்தயும் கண்டு ஆச்சர்யமாயிருக்கு.

வடுவூர் குமார் said...

1964 வரை - அப்ப எனக்கு 3 வயசு.
நான் நாகை வந்த வருடம் 1968.

Anonymous said...

என் இனிய நண்பர்களுக்கும் எனக்கும் ராசி இல்லை என்றுதான் சொல்லவேண்டும். நீண்ட நாளைய பள்ளிக்காலம் முதலான நட்பு என்று எனக்கு யாரும் அமையவில்லை. காரணம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதுப் பள்ளிக்கூடத்தில் வெட்கம் மிக்க அன்னியனாகச் சேர்ந்து ஒரே ஆண்டில் அதை விட்டு வெளி வந்ததாக இருக்கலாம். மேலும் விளையாட்டுக்களில் ஆர்வம் திறன் இல்லாததால் விளையாட்டு நண்பர்களும் இல்லை. வசதிக் குறைவு காரணமாக பிடித்த இரண்டொருவருடன் தபால் தொடர்பு வைத்துக் கொள்ள வாய்ப்பில்லை!

என் பள்ளிக் கால நண்பன் நீண்ட நாட்களுக்குப் பின் என்னை சந்தித்து மகிழ்வைத் தெரிவித்துக் கொண்டான். ஆனால் அவன் வாழ்க்கையில் சில சிக்கல்கள் காரணமாக அவன் திடீர் திடீரென்று மௌனம் சாதித்து தொடர்பை புதுப்பிக்க மறந்துவிடுவான். இன்னொரு நண்பனுக்கு மணம் ஆகி மனைவி வந்து நட்புக்கு அணைபோட்டு தடுத்துவிட்டாள்.

அலுவலக நண்பர்கள் சிலர் இன்னும் என்னோடு தொடர்பு கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு நன்றி. .

Anonymous said...

புகைப் படங்களில், கீழே இடதுபக்கம் இருக்கும் படத்தில் நடுவில் இருப்பவர் யார்? பாம்பே கண்ணனாட்டம் இருக்கு?

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!