செவ்வாய், 28 ஜூலை, 2009

நகுமோமு

நண்பர்கள் அரட்டைக் கச்சேரி சுவாரஸ்யமாக நடந்து கொண்டிருந்தது.
ஒருவர் சொன்னார். "டேய் நான் ஒரு சூப்பர் ஜோக் சொல்றேன்"
மற்றவர்கள் ஆவலுடன்: "எங்கே சொல்லு?"
சொன்னார்.
நண்பர்கள் யாரும் சிரிக்கவில்லை.
சில வினாடிகளுக்குப் பிறகு நண்பர்களில் ஒருவர், ஜோக்
சொன்னவரைப் பார்த்துச் சொன்னார்
"டேய் இதை எல்லாம் ஜோக்குன்னு யார் கிட்டயும் சொல்லாதே - சிரிப்பாங்க!"
எல்லோரும் சிரித்தார்கள்.

6 கருத்துகள்:

  1. மன்னார்குடி பள்ளி தலைமை ஆசிரியர் SVS யாராவது ஜோக் சொல்கிறேன் என்று ஆரம்பித்தால், உடனே சிரிக்க ஆரம்பித்து விடுவார். சொல்ல ஆரம்பித்தவர்கள் முடிக்க முடியாமல் கஷ்டப் படுவர். அது பார்த்து எல்லோருக்கும் சிரிப்பு வந்துவிடும்.

    பதிலளிநீக்கு
  2. உலக யுத்தத்துக்குப் பின் ஜப்பானில் நடந்ததாகச் சொல்லப்படுவது:
    Gen McArthur மேடையில் பேசிக் கொண்டிருந்தார். ஒரு ஜப்பானியர் மொழி பெயர்த்துக் கொண்டிருந்தார். ஜெனரல் ஒரு அமெரிக்க ஜோக்கை சாங்கோ பாங்கமாக விவரித்தார். அவர் எடுத்துக் கொண்ட நேரத்தில் பத்தில் ஒரு பங்கு கூட எடுக்காமல் மொழி பெயர்ப்பு செய்து கொண்டிருந்தவர் என்னவோ சொல்ல அரங்கமே அதிரும்படி எல்லோரும் கை தட்டி ஆரவாரம் செய்து தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பிறகு இரவில் தம் அறைக்குத் திரும்பிய ஜெனரல் மொழி ஜப்பானிய உதவியாளரைக் கேட்டார்:"நான் சொன்ன ஜோக் உங்கள் ஊரில் எல்லோருக்கும் முன்பே தெரியுமோ?"
    மொழி பெயர்ப்பாளர் "நீங்கள் சொன்ன அமெரிக்க ஜோக் எங்கள் ஊரில் ஒருவருக்கும் புரியாது. ஆகையால் நான் நீங்கள் ஒரு நல்ல ஜோக் சொல்லியிருப்பதாகவும் எல்லோரும் தயவு செய்து சிரிக்கவேண்டும் என்று மட்டுமே சொன்னேன் " என்றார்.

    பதிலளிநீக்கு
  3. "எங்கள்" நண்பர் ஒருவர் ஏதாவது ஜோக் சொன்னால் நான் உடனே சிரித்து விடுவேன்.
    இல்லை என்றால் நான் சிரிக்கும் வரை அதை அவர் திரும்ப திரும்ப சொல்லி .....

    பதிலளிநீக்கு
  4. இதே மாதிரி ஒரு ஆப்பிரிக்க அமெரிக்க ஜோக் உண்டு.

    அப்பிரிக்காவில் அமெரிக்கர் பேசிக் கொண்டிருக்க, சற்றைக்கொருதரம் "நூஸா..நூஸா" என்ற இரைச்சலும் ஆரவாரமுமாக இருந்தது. அமெரிக்கர் உற்சாகமாக பேச்சைத் தொடர்ந்தார். கூட்டம் முடிந்து அவரை ஹோட்டலுக்குக் கூட்டிப் போனார் அவரது ஹோஸ்ட்-ஆப்பிரிக்கர். நூஸா என்றால் என்னவென்று அவரிடம் உடனே கேட்டால் நன்றாக இருக்காது. பாராட்டு வார்த்தைக்கு மயங்குகிறவன் என்று நினைப்பார் என்பதால் அப்புறமாகக் கேட்க வேண்டுமென்று இருந்தார்.

    காரிலிருந்து இறங்கப் போனவரை பார்த்து டிரைவர்

    "கீழே எல்லாம் நூஸா. மிதிக்காமல் பார்த்து வாருங்கள்" என்றான்.

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு
  5. கடைசி வரி இப்படிக் கூட அமையலாம்.....

    "அது சரி...ஏதோ ஜோக் சொல்றேன்னு சொன்னியே.. அதை சொல்லு..."

    பதிலளிநீக்கு
  6. When we tell a joke, after hearing the last punch line, my friend, Bharathi Swaminathan of Madurai used to ask, "Venakka vaadu emi choppinum?" -- meaning, what was the response from the other guy - after the jovial 'cut' in the joke!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!