செவ்வாய், 14 ஜூலை, 2009

அன்புள்ள அனானி... 06

கே: சூடா ஏதாவது இருக்கா?
ப: என்னிடம் இல்லை; வேறு அனானிகள் யாராவது சூடு / சொரணை ஏதாவது இருந்தால் comments போடட்டும் பார்க்கலாம்!

3 கருத்துகள்:

  1. மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணைகள் போகும் போக்கு நாம் அறிந்ததே....ஜனநாயக நாடு, மனித உரிமை என்றெல்லாம் சொல்லிக் கொண்டு அந்த வழக்கு படும் பாடு, கசாப் அனுபவிக்கும் சலுகைகள் எல்லாமும் தெரிந்ததுதான்... மைனாரிட்டி வோட்டு வேட்டையில் பார்லிமென்ட் தாக்குதல் புகழ் அப்சல் குரு தப்பிப்பதையும் அவன் மீது பொழியப்படும் கருணையையும் பார்க்கிறோம். பாகிஸ்தான் ஆகட்டும், நம்மால் உருவாக்கப் பட்ட பங்களாதேஷ் ஆகட்டும், இவர்கள் எல்லாம் இந்தியாவுக்குத் தரும் தொல்லைகளையும் நாம் அறிவோம். எப்படி நம் வளர்ச்சியைத் தடுக்கலாம், என்னென்ன பயங்கரவாதங்களை செயல் படுத்தலாம் என்று அலையும் இவர்கள் வளர்க்கும் தீவிரவாதம் இவர்களையே ஒரு நாள் திருப்பி அடிக்கும் என்றாலும் இந்த மாதிரி விஷயங்களில் எல்லாம் இந்தியா ஏன் ஒரு உறுதியான பதில் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது? தற்போது நாடாளும் தலைமை சரி இல்லையா, அல்லது எந்தக் கட்சி வந்தாலும் இந்த நிலைதானா? இது போதாது என்று சீனா பண்ணும் அட்டகாசம் வேறு.... ஏற்கெனவே அருணாச்சல் பிரதேசம் அவர்களுடையது என்று சொல்லும் அட்டூழியத்துக்கே இந்தியா இன்னும் எந்த பதில் நடவடிக்கையும் எடுக்கவில்லை..... இந்த நிலையில் சீனாவின் போர்க் கப்பல் இந்துமாக் கடலில் நுழைந்து கொச்சி துறை முகத்தில் நிறுத்த அனுமதி கேட்கிறதாம்....சர்வதேச ஒப்பந்தத்தின் படி அனுமதி மறுக்கவும் முடியாதாம்.... கூடவே அதிரடியாக வங்கக் கடலிலும் நுழைந்து காஸ் மற்றும் எண்ணெய்க் குழாய்களை மியான்மர் வரை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளது என்று இன்றைய செய்தித்தாள் சொல்கிறது. என்ன செய்யப் போகிறது இந்தியா? இது வெளிநாடுகள் சம்பந்தப் பட்ட விவகாரம்.... உள் நாட்டில் தமிழ் நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள் ஒவ்வொன்றாக ஆந்த்ரா, கேரளம், கர்நாடகா தட்டிப் பறிப்பதை என்னவென்று சொல்ல? முல்லைப் பெரியாரில் கேரளா செய்யும் அட்டகாசம் சொல்லவா? பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் ஆந்த்ரா அட்டூழியம் சொல்லவா? காவிரிக் கனவின் நீண்ட வரலாற்றை சொல்வதா? இந்தியா.....எங்கே போகிறாய் நீ? என்ன ஆகப் போகிறாய்?

    பதிலளிநீக்கு
  2. இந்திய அளவுல Australian Racism, இங்க உள்ளூர்ல ஹோகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை choice ல விட்டுட்டீங்களா?

    பதிலளிநீக்கு
  3. அட இரண்டு அனானிகள் சூ & சொ உள்ளது என்று காட்டிவிட்டார்களே!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!