Captions displayed in VIJAY TV programs .....
மாம்பலம் சகோதரிகள் பாடும்பொழுது : "மாம்பழம் சகோதரிகள்"
நாஞ்சில் நாடன் பேசும் பொழுது : " நாஞ்சில் நாதன்"
ஆச்சி தமிழ் பேச்சி எங்கள் மூச்சி (ஹி ஹி - ஆச்சி தமிழ் ... அப்புறம் இருப்பது எல்லாம் என் சரக்கு) - ஒரு சிறுமி பேசும் பொழுது ---
" பயம் கொல்லல் ஆகாது பாப்பா "
(கடைசி வரியில் என்ன தவறு என்று கேட்பவர்கள் விஜய் டி வி யில் வேலையில் சேரலாம்!)
குறைகள் கண்டு கூத்தாடும்
பதிலளிநீக்குகுறும்பரே! -- நீவிர் நிறைகள்
என்றும் காண்பதில்லையோ?
பல நிகழ்ச்சிகளை காணும் போது சீத்தலை சாத்தனாராக பொங்கி போவது உண்டு.
பதிலளிநீக்குதலையைக் குத்திக்கொள்வது இல்லை என்றாலும் ரத்தக் கொதிப்பு உயர்வது என்னவோ உண்மை.
முன்பெல்லாம், தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் அறிவிப்பாளர்களும், செய்தி வாசிப்பவர்களும் தமிழ் உச்சரிப்பில் சரியாக இருந்தனர். ஆனால், நேர் காணல் நிகழ்ச்சிகளில் வரும் விருந்தினர் உச்சரிப்பு தமிழ் கொலையாக இருக்கும். அதை அவர் தமிழ் வித்தகர் இல்லை, அவர் தன துறையில் நிபுணர் என்பதால் அழைக்கப்பட்டிருக்கிறார் என ஆறுதல் அடைந்தோம்.
பின்பு விளம்பரங்களில் (குறிப்பாக மொழிபெயர்ப்பு விளம்பரங்கள் ) தமிழ் உச்சச்சரிப்பு கொடுமை ஆகியது. . பிறகு, நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் ல ,ழ ,ள வேறுபாடுகள், ந, ண, ன வேறுபாடுகள் பற்றி கண்டு கொள்வது இல்லை என ஆகிவிட்டது.
இன்னும் செய்தி வாசிப்பவர்கள் குறைந்த பட்சம் ல, ழ, ள சரியாக உச்சரிக்கிறார்கள். . ஆனால் வேற்று மொழி வேர்ச் சொல்லான தமிழ்ச் சொற்களையும் வேறு மாநிலத்தவரின் பெயர்களையும் கொலை செய்கிறார்கள். (செய்தி வாசிப்பவர்கள் சம்பந்தப்பட்ட நபரின் தாய் மொழி ஒலிபரப்பைக் கேட்டு சரியான உச்சரிப்பு தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் இல்ல. அவர்களை யாரும் திருத்துவது இல்லை.) குடியரசுத் தலைவி பெயரை, prathipa என்று சொல்பவர்கள் இருப்பது வேற்று மாநிலங்களில் உள்ள மற்றும் வேற்று மொழிகள் அறிந்த தமிழர்களை வெட்கப் பட வைக்கிறது.
இதைப் பற்றி என் மனக் குமுறலை சொல்ல ஒரு வாய்ப்பு அளித்த உங்கள் பதிவுக்கு நன்றி.
பி.கு. : இப்பதிவுக்கு வந்த ஒரே பின்னூட்டமும், தவறு இருக்கிறது என்றோ, இருந்தால் திருத்திக்கொள்ள வேண்டும் என்றோ இல்லாமல், குறை சொல்வதை குறை சொல்கிறது. இது சராசரி தமிழரின் response.
Thank you Thumbigaaru - for your views and comment.
பதிலளிநீக்குஇந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குபிரசுரத்துக்கு அல்ல என்று நினைத்தும் பிரசுரம் ஆகி விட்டது தும்பி அவர்களின் விபரங்கள். காரணம் கமென்ட் போஸ்ட் செய்யும் போது அதை பிரசுரம் ஆகாமல் செய்ய இயலாது. ஆசிரியர் குழு இந்த மாதிரி பிரைவேட் கமெண்ட் அனுப்ப ஒரு மெயில் அடையாளத்தை முதல் பக்கத்தில் தரலாம். வாசகர்கள் தம்மைப் பற்றிய விபரங்களை அம்பலம் செய்யாமல் அறிவித்துக் கொள்ளலாம்.
பதிலளிநீக்குமீண்டும் பார்க்கும் பொது தனிப்பட்ட மெயில் அடையாளமும் கொடுக்கப் பட்டுதான் இருக்கிறது. தும்பி அவசரத்தில் தாவிவிட்டார்.
பதிலளிநீக்குyraman