வெள்ளி, 3 ஜூலை, 2009

எனக்கும் ஒரு அனுபவம் எழுத ஆசை.... உஷாவுக்கு மாப்பிள்ளைப் பார்க்க அலைந்த நேரம். T. Nagar ல ஒரு வரன். Railway ல கலாசி என்று ஏதோ உத்யோகம்..... நானும் அப்பாவும் ஒரு மதிய வேளையில் போய் உட்கார்ந்தோம். போனதிலிருந்தே தூய (?) தெலுங்கில் அவர்கள் 'மாட்லாட' ஆரம்பிக்க.... நாங்கள் சற்றே நெளிந்து சமாளித்தவாறு பேசிக் கொண்டிருந்தோம். அப்போது நடந்த ஒரு சிறு உரையாடல்..... "மீ இண்டி பேரு ஏமி?" (உங்கள் வீட்டுப் பெயர் என்ன?) நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். "அதை நாம் கேட்காமலேயே வந்து விட்டோமே.... பார்த்துட்டு வந்திருக்கலாம்...." ஆனால்.... இதை எல்லாம் ஏன் கேட்கிறார்கள்? "ஏதோ..... லக்ஷ்மி இல்லம்னு போட்டுருக்கும்னு நினைக்கறேன்.... சரிகா ஞாபகம் லேது.... (தெலுகு!) மதுரையில் நாங்கள் இருந்த வீட்டின் மேல் இருந்த பெயரை சரியாய் நினைவுக்குக் கொண்டு வந்த பெருமை எனக்கு.... அதி காதண்டி....என்று தொடங்கி அவர்கள் எங்களுக்கு 'இண்டி பேரு'வை புரிய வைக்க முயற்சி செய்ய.....பிறகு அடுத்த கேள்வி வந்தது.... "மீ இண்டி 'அம்மயீ' எக்கட உந்தி இப்புடு? "ஓ... இவர்கள் எல்லோரைப் பற்றியும் கேட்கிறார்கள்.... என்று எண்ணிக் கொண்டு "அம்மயீ மதுரைல உந்தி" என்றோம்.... அதாவது உஷாவின் அம்மாவை, ஹேமாவை கேட்கிறார்கள் என்று நினைத்து........ "ஏன் செஸ்துந்தி?" "இண்டில ஊர்க்யதா உந்தி...." "மீரு ஏ அம்மயீன சௌஸாரு.... (உஷா வேலைல இருக்கானு சொல்லி இருந்தோம்) அப்பா சற்றே சந்தேகத்துடன் "மீரு நா அம்மயீனப் பத்தி அடூசாரோ..... அதி நா செல்லலு இண்டில உந்தி...." என்று தயக்கத்துடன், 'இந்த பதில் சரியாய் இருக்குமோ' என்று பார்க்க.... அவர்கள் முகத்தில் ஒரே குழப்பம். "அதி யால அக்கட உந்தி?" இந்த உரையாடல்களை எல்லாம் கடந்து அந்த சம்பந்தம் வாய்க்கவில்லை என்பது வேறு விஷயம்.... இன்னொரு வரன் பார்த்தோம். மாப்பிள்ளை பெயர் ஸ்ரீராம். அவன் அண்ணன் பெயர் விசுவேஸ்வரன்... அப்பா பெயர் பாலசுப்பிரமணியம்....சுகுமாருக்கு உறவினர். புதுக் கோட்டை வரன். அதுவும் தட்டிப் போனது....

ஸ்ரீராம்.

3 கருத்துகள்:

 1. நல்லாத்தான் இருக்கு;
  ஆனா பாருங்க - நம்
  வலைக்குள் வரும் தமிழ் மீன்கள்
  மிரண்டு விடுமோ - என்று ஒரு பயம்.
  எனினும் முதல் பதிவு என்பதால்
  ஒரு very good.

  பதிலளிநீக்கு
 2. நன்றாக இருக்கிறது. இன்னும் நிறைய எழுதலாம்.

  yraman

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!