பொருத்தமில்லாத சில காட்சிகள் என்றால் உங்களுக்கு என்னென்ன தோன்றும்? எனக்கு அப்படித் தோன்றுவதை இங்கு சொல்கிறேன். இதனுடன் எல்லாரும் ஒத்துப் போவார்கள் என்றில்லை. என்றாலும் கணிசமான எண்ணிக்கையில் என்போன்ற பிரகிருதிகள் இருப்பார்கள் என்று நான் திடமாக நம்புகிறேன்.
குடுமி வைத்துக் கடுக்கன் போட்ட புரோகிதர் தெரு ஓரத்தில் புகைத்துக் கொண்டிருப்பது.
மடிசார் கட்டு மாமி ரிபோக் ஷூ போட்டுக் கொண்டு வாக்கிங் போவது.
குடுமி கடுக்கனுடன் ஜீன்ஸ் டக் செய்த ஷர்ட்டுடன் காணப்படும் இளைஞர்.
புடவை கட்டிக் கொண்டு புகைத்துக் கொண்டிருக்கும் பெண்
மது அருந்தும் மங்கை.
என்னை மாதிரி எழுபது வயது தாத்தா terminator மாதிரி சினிமாவிற்கான வரிசையில் நிற்பது.
K.G.Y.Raman
Interesting topic.
பதிலளிநீக்குI have seen 1 or 2 of these,
in beach road, while waiting for 56H bus - in 70s.
//புடவை கட்டிக் கொண்டு புகைத்துக் கொண்டிருக்கும் பெண்.//
பதிலளிநீக்குஅந்தக் காலத்தில் விறகடுப்பில் வெந்நீர் போட்ட மாமிகள்
எல்லோரும் புடவை கட்டியவர்கள்தாம்;
அவர்கள் புகைத்த அடுப்படிகளை நீங்கள் பார்த்ததில்லையா?
ஹி ஹி !!
//மது அருந்தும் மங்கை.//
பதிலளிநீக்குகலர்ப் படங்கள் புற்றீசல் மாதிரி வரத் துவங்கிய நாட்களில்
சத்யப் பிரியா போன்ற வில்லிகள்,
(தான் ஒரு வில்லி என்பதை உணர்த்த)
பாட்டிலும் கையுமாகத் தான் காணப் படுவார்கள்!
மஞ்சள் புடவை பிரபலம் + வேப்பிலை (வேலாயுத)சாமி
நடிகை கூட மொடாக் குடியர் என்று கேள்வி.
என் மச்சினன் ஒருவன் சின்னதாய், உற்றுப் பார்த்தல் தெரியும் குடுமியும், கடுக்கனும் போட்ட, ஜீன்ஸ் போட்ட நவ இளைஞன்.....TVS ல வேலை பார்க்கறான்...
பதிலளிநீக்கு