அமெரிக்கக் கலாச்சாரம் நம் நாட்டில் எப்படி வேரூன்றி வருகிறது என்பதற்கு சமீபத்தில் நடந்த ரயில் யானை மீது மோதிய சம்பவமே சான்று.
யானை தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தது. அதை ரயில் மோதி விட்டது. இது தான் நிகழ்வு.
டைம்ஸ் ஆஃப் இண்டியா சொல்கிறது:
Tusker Run over by train!காட்டிலாக்கா அதிகாரி வழக்கு போடுகிறார்: பாதுகாக்கப் பட்ட மிருகங்கள் வதை சட்டத்தின் கீழ்.
பாதுகாக்கப் பட்ட பிராணிகள் என்றால் வெறும் அறிவிப்பு மட்டும் போதுமா? வேறு யார் யாருக்கெல்லாமோ
பாதுகாப்புப் படை கூடவே வருகிறது. நம் கொம்பனுக்கும் ஒன்று போட்டிருந்தால் இப்படி நடக்குமா என்கிறார் நம் அறிவு.
யானைக்குக் குடி நீர் கிடைக்காமல் தானே சுற்றித் திரிகிறது? என்னிடம் ஒரு காண்டிராக்ட் கொடுத்தால் யானை விழுந்து முழுக முடியாத ஆழத்துடன் ஒரு பெரிய தொட்டி கட்டி அதில் நாள் தோறும் நீர் நிரப்ப ஒரு அப்ரோச் ரோடு, அது வழியே போய், தண்ணீர் குடிக்க வரும் யானைகளைப் பார்க்க வரும் கூட்டத்தினரிடமிருந்து வசூல் செய்ய ஒரு டோல் ப்ளாசா ..... இப்படி நீள்கிறது சமீபத்தில் தன் மணல் லாரிகளை விற்று விட்ட அகழ்வாரின் அங்கலாய்ப்பு.
பாலக்காடு டிவிஷன் மிகவும் பிசி.: யானை தண்டவாளத்தில் நின்று மறியல் செய்தது சட்டப்படி தண்டிக்கப் பட வேண்டிய விஷயம். இதனால் நாங்கள் மிகவும் கஷ்டப் பட்டு சம்பாதித்து வைத்திருக்கும் நேரம் தவறாத டிவிஷன் என்ற பெயர் கெடுவதுடன், பொருள் விரயமும் கூட. ஆகையால் யானைகளைத் தன் கட்டுப்பாட்டில் வைக்கத் தவறிய காட்டிலாக்காவிடமிருந்து நஷ்ட ஈடு கோரி வழக்குப் போடத்தான்.
//யார் யாருக்கெல்லாமோ பாதுகாப்புப் படை கூடவே வருகிறது. நம் கொம்பனுக்கும் ஒன்று போட்டிருந்தால் இப்படி நடக்குமா //
பதிலளிநீக்குயானைக்கெல்லாம் 'பூனைப்' படை எம்மாத்திரம்?
//ஆழத்துடன் ஒரு பெரிய தொட்டி கட்டி அதில் நாள் தோறும் நீர் நிரப்ப ஒரு அப்ரோச் ரோடு, அது வழியே போய், தண்ணீர் குடிக்க வரும் யானைகளைப்....//
பதிலளிநீக்குநாங்கள் இதை அனுமதிக்க மாட்டோம்.
இப்படிக்கு
யா.த.கொ..மா சங்கம்
நீர் யானைகள் முன்னேற்றக் கழகம்.
யாருக்கும் தண்ணீர் கொடுக்காத மாக்கள்
பதிலளிநீக்குயானைக்குத் தண்ணீர் கொடுக்காத மாக்கள்
யானைக்கும் தண்ணீர் கொடுக்காத மாவட்டம்?
யாருக்கும் தண்ணீர் கொடுக்க மாட்டோம்?
பதிலளிநீக்குYaarukkum thanneer kodukka maattom. Aanaal ellaarukkum Thanneer Kaattuvom. Athuthanya thamizh kalachaaram.
பதிலளிநீக்கு