நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
திங்கள், 27 ஜூலை, 2009
இடைத் தேர்தல்கள்
வாரிசுகளுக்கு முன்னுரிமை இருக்கட்டும்...இப்போது இடைத் தேர்தல் வருகிறதே....இதைப் பற்றி அவ்வப்போது ஒன்று தோன்றும். அடிக்கடி பேசிக் கொண்டதுதான்...ஏற்கெனவே அங்கு தேர்தல் நடந்து ஒரு கணக்கீடும் தெரிந்த நிலைதான்... போட்டி இட்ட ஆட்களுள் இவர் முதல், இவர் இரண்டாமவர் என்று ஏற்கெனவே முடிவு வந்து விட்டது. ஜெயித்தவர் ஏதோ அரசியல் காரணங்களுக்காக ராஜினாமா பண்ணியதாலோ, அல்லது காலமாகி விட்டதாலோ இடைத் தேர்தல் வருகிறது. ஒரு தேர்தல் வந்தால் நம் நாட்டில் எவ்வளவு செலவு, என்னென்ன ஆர்ப்பாட்டங்கள் என்று நமக்கு நன்றாகவே தெரியும். இன்னொரு முறை இந்தக் கூத்தை நடத்தி, நேரம், பணம் எல்லாவற்றையும் வீண் செய்ய வேண்டுமா? ஏற்கெனவே நடந்த தேர்தலில் இரண்டாவதாக வந்தவருக்கு வாய்ப்பு கொடுத்து விடலாமே... அதுதானே ஜன நாயகம்? இவ்வளவு செலவு நம் நாட்டுக்குத் தேவையா? மக்கள் சொல்வதை யார் கேட்கப் போகிறார்கள்?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
என்னய்யா விவரம் தெரியாத ஆளாக இருக்கிறீர்களே?
பதிலளிநீக்குகணக்கில் மட்டும் காட்டி சேர்த்த பணத்தை
கணக்கில் காட்டாது செலவு செய்கிறேன் என்கிறார்கள்
தடுக்கிறீர்களே! இது நியாயமா?
எங்கள் ஊர் தவணை முறை விற்பனை
ஒவ்வொரு தேர்தலுக்கும் இரண்டு மூன்று
மடங்கு பெருகுகிறது என்கிறார்கள்.
அடடா...நம் தொகுதியில் இப்போ இடைத் தேர்தல் வந்தால் நன்றாக இருக்குமே என்று கூடத் தோன்றலாம். அட, நம் தொகுதியில் சாலை சீரமைப்பு தண்ணீர் வசதி போன்றவை வேண்டும் என்றாலோ அல்லது ஏன், கை செலவுக்குப் பணம் வேண்டும் என்றாலோ கூட தொகுதி MLA வைக் காலி பண்ணும் கலாச்சாரம் வரும் நாள் அதிக தூரத்தில் இல்லை, பணம் வாங்கிப் பழக்கப் பட்ட வாக்காளர்கள் என்ன வேணும்னாலும் செய்வார்கள்!
பதிலளிநீக்குJust imagine this situation:
பதிலளிநீக்கு(you know many of the elected, elite members have criminal records to their credit)
If I got second place in a general election, what prevents me from eliminating the first place person through koolip padai?
I dont think - donating the seat to the second place person is tenable.