பட்டம்மாள் இல்லை பாட்டம்மாள் என்று அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் புகழ்ந்த டி. கே. பட்டம்மாள் நேற்று அமரரானார். அவருக்கு வயது 90 க்கும் மேலே இருக்கும். கர்நாடக சங்கீத உலகில் மும்மணிகள் என்று MS, DKP, MLV ஆகியோர் கிட்டத் தட்ட ஆராதிக்கப் பட்டனர். மூன்றாவது மணியும் ஓய்ந்து விட்டது!
சம்பிரதாயமான சுத்த சங்கீதம் பட்டம்மாளுடைய விசேஷத் திறன் ஆகும். சம்பிரதாயம் என்ற போர்வையில் அழுமூஞ்சி சங்கீதமாக இல்லாமல் ரஞ்சகமாகவும் இலக்கண சுத்தமாகவும் பாடும் திறன் கொண்டவர். தமிழ் கிருதிகள் பாரதியார் பாடல்கள் என்று தேர்ந்தெடுத்து இனிமையாக அளிக்கும் திறன் பெற்றவர். எப்படிப பாடினரோ, ஆடுவோமே பள்ளூ பாடுவோமே, தீராத விளையாட்டுப் பிள்ளை போன்ற சிரஞ்சீவி பாடல்களைத தந்தவர். மணிரங்கு ராகத்தில் மாமவ பட்டாபி ராமா, பிருந்தாவன சாரங்கா வில் ரங்கா புர விஹாரா போன்ற வெகுஜன ரஞ்சகமான கிருதிகளுடன் சிக்கல் இல்லாத ராகம் தானம் பல்லவி பாடும் திறன் கொண்டவர். தீக்ஷிதர் கிருதிகளில் பெரிய authority காந்தி மறைந்த வேளையில் அவர் கொடுத்த "சாந்தி நிலவ வேண்டும் " இசைத்தட்டு மிகப் பிரபலமானதும் இன்றும் மேடைகளில் பாடப்படுவதுமாகும்.
இன்சொல்லும் சாந்தமான முகமும் மிக அமைதியான அடக்கமான குணமும் இவரின் தனிச் சிறப்புகள்.
இசை மேதை டி.கே.ஜெயராமன், நித்யஸ்ரீ ஆகியவர்களுக்கு குரு. எண்ணற்ற பாடகர்களுக்கு விசேஷ ஆசிரியர். ஒரு அத்தை அல்லது பாட்டி நம்மிடம் பழகுவது போல பாந்தவ்யத்துடன் பழகும் அற்புதப பெண்மணி.
சாந்தி அடைவதும், சுவர்க்கம் புகுவதும் சிலருக்கு இயல்பான வரம். பட்டம்மாள் அவர்களில் ஒருவர் என்பதில் சந்தேகம் இல்லை. . .
YRaman
இது வலை உலகின் சிறந்த முதல் அஞ்சலி.
பதிலளிநீக்குசுருக்கமாக, அதே நேரத்தில் உருக்கமாக உள்ளது.
குறிப்பாக கடைசி இரண்டு வரிகள் மெய் சிலிர்க்க
வைத்து விட்டது.
முதலில் பறந்து போன குயிலைப் பற்றிக் குறிப்பிட மறந்து விட்டீர்களே?
பதிலளிநீக்குN C வசந்த கோகிலம் அவர்களும் DKP யின் சம காலத்தவர்தான்.
.
பட்டம்மா பாடிய இசைத்தட்டுக்களில் அவர்
பதிலளிநீக்குபடத்தைப்போட அவர் தந்தையார் முதலில்
சம்மதிக்கவில்லையாம். பல வருடங்கள்
கழித்து தான் அவர் படம் போடப்பட்டதாம்.
rojulu maaraayi!
மாலி
very good point Maali !
பதிலளிநீக்குKeep on commenting.