ஞாயிறு, 3 டிசம்பர், 2017

ஞாயிறு 171203 : குறைந்தபட்சம் ஆறு வித்தியாசங்கள்.







பெரிய மலைகள்தான் நம்மை எவ்வளவு சிறியவராக்கி விடுகிறது!



வளைந்து வளைந்து கயிறாய் மலையை இறுக்கும் முடிவில்லாப் பாதைகள்...



உணவகத்தின் பெயர் தெரிகிறதா?!


மேகம், மலை, சிறு அருவி, சிறு கட்டிடங்கள்....  பின்னால் வெயில் தெரிகிறதா?




ஒரு ஆறு ஓடையானதோ! 



பூ......!



ஹர்பஜன் மந்திர் வாசலில் 


அதே இடம்தான்........  



.........ஆனால் வெவ்வேறு மனித நடமாட்டங்களுடன்.





ஓரிரு தெரிந்த முகங்களும் உண்டு. (இந்தப் படத் தொகுப்பில் ஏற்கெனவே இடம் பெற்ற வகையில்)  தேடினால் கிடைக்கலாம் ஆறு வித்தியாசங்கள்.



கையில் கேமிரா இருக்கும்போது சும்மா இருக்க முடிகிறதா?  இப்படி எதையாவது எடுக்க வேண்டியதுதான்!



"பாதை தெரியுது பார்" என்று செல்ஃபி எடுக்க ஓடுகிறாரோ...." 







தமிழ்மணம்.

25 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  2. பெரிய மலைகள் தான் மனிதனை சிறியவனாக்கிக் காட்டுகின்றது..

    ஆனாலும் மனிதன் இதைப் புரிந்து கொள்ளாமல் தானே பெரியவன் என்று பிதற்றித் திரிகின்றான்..

    பதிலளிநீக்கு
  3. படங்கள் ஸூப்பர் இரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  4. துளசி : படங்கள் நல்லாருக்கு...ஸ்ரீராம்..

    கீதா: ஆம் இயற்கையின் முன் நாம் அனைவருமே சிறுவர்கள் தான். ஒரு ஓடை நதியாகிறது மாறி இங்கு ஒரு நதி ஓடையாகிறது!!!

    ஆறு வித்தியாசங்கள் என்ன அதற்கும் மேலேயே தெரியுது...அந்த முகங்களும் தெரியுதே!! நல்ல காலம் அதுலயும் ஆறு வித்தியாசம் கண்டுபிடிக்கச் சொல்லையே!! ஹிஹிஹி..

    காமேரா கையில் இருந்தால் ஹையோ நானும் எடுத்துத் தள்ளிடுவேன்..இப்ப ஸ்டோர் செய்யத்தான் வழி இல்லாமல். சில சமயங்களில் தவிக்கிறேன்...ஸ்டோர் ரூம் எல்லாம் ஃபுல்!! ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
  5. அதென்ன Cafe 13 thousand, Friday the 13th ஆங்கில திரைப்படத்தை நினைவுபடுத்துவதைப் போல.

    பதிலளிநீக்கு
  6. இந்தமாதிரி இடங்களுக்கு பிரயாணம் செய்துவந்தவர் தன் அனுபவங்களை எழுதாமல் வெறும் படம் ஓட்டுகிறாரே. ஶ்ரீராம்... நீங்கள் இதைக் கேட்கக் கூடாதோ?

    பதிலளிநீக்கு
  7. பூ வை பூ என்று சொல்லி அமர்க்களம் இயற்கை எழிலும் அழகு

    பதிலளிநீக்கு
  8. அழகான படங்கள். மலைப்பகுதியில் இப்படி பார்க்க ஏராளம். மலைப்பகுதியை விட்டு விலக மனம் வருவதில்லை!

    பதிலளிநீக்கு
  9. எனக்கு இப்படி ஒரு மலைவாசஸ்தலத்தில் குடி இருகனும்ன்னு ஆசை

    பதிலளிநீக்கு
  10. //பெரிய மலைகள்தான் நம்மை எவ்வளவு சிறியவராக்கி விடுகிறது!//

    நான் இதை மாத்தி ஓசிக்கிறேனாக்கும்:).. நாம் சிறியவர்களாக இருப்பதாலதான் மலைகள் பெரிசாத் தெரியுது எப்பூடீ?:).

    //
    ஒரு ஆறு ஓடையானதோ! //

    அது ஓடை அல்ல குளம் ஆக்கும்:) அல்லது குட்டை:).

    ///பூ......!///

    ஹையோ விடுங்கோ விடுங்கோ என்னை விடுங்கோ... சும்மாவே நான் அரை:).. இந்த ஞாயிறுப் போஸ்ட் வந்தாலே முழுசா:) ஆகிடுறேன்ன்ன்ன்ன்:).. இங்கின வந்தா ஏதும் ஏடாகூடமா எழுதி வம்பை விலைக்கு வாங்கிடுவனோ எனக் கொன்றோல் பண்ணுவேன் என்னை:))... ஆனா முடியல்ல முருகா என்னால முடியல்ல:)).. ஹையோ...விடுங்கோ மீ தேம்ஸ்க்குப் போயிடுறேன்ன்ன்ன்ன்:))..

    ஊசிக்குறிப்பு:
    இன்று துரை அண்ணனை முந்தோணும் என கங்கணம் கட்டி இருந்தேன்:).. ஆனா பகலெல்லாம் பிசியா இருந்தமையால் ... முடியல்ல.. தூக்கம் என் கண்களைத் தழுவிட்டுதே:)...

    பதிலளிநீக்கு
  11. ////நெல்லைத் தமிழன் said...
    இந்தமாதிரி இடங்களுக்கு பிரயாணம் செய்துவந்தவர் தன் அனுபவங்களை எழுதாமல் வெறும் படம் ஓட்டுகிறாரே. ஶ்ரீராம்... நீங்கள் இதைக் கேட்கக் கூடாதோ?///

    ஆங்ங்ங் இது கிளவி:) ஹையோ கேய்வி.. சே..சே.. கேள்வி:)... ஒரு மாதம் போடுவதை ஒரு நாள்ல போட்ட்டிருக்கலாம்ம்:).. சரி அதை விடுவோம்ம்..

    ஞாயிற்றுகிழமையை நீங்க குத்தகைக்கு எடுங்கோ நெல்லைத்தமிழன்...:) ஏதும் அரட்டை ... கொமெடி பண்ணுறமதிரி:))... நான் ஜொன்னனே என் வாய்தேன் நேக்கு எதிரி:)

    பதிலளிநீக்கு
  12. @அதிரா - "ஞாயிற்றுகிழமையை நீங்க குத்தகைக்கு எடுங்கோ நெல்லைத்தமிழன்...:) ஏதும் அரட்டை ... கொமெடி பண்ணுறமதிரி:))... நான் ஜொன்னனே என் வாய்தேன் நேக்கு எதிரி:)" - ஞாயிற்றுக்கிழமை SLOT ஸ்ரீராமுக்கே கிடையாதுன்னு நினைக்கறேன். இது எங்கள் பிளாக் ஆசிரியர் ஒருவர் மேற்கொண்ட டிரிப். அந்தப் பயணம் முடிஞ்சாச்சா அல்லது இன்னும் தொடர்கிறதா என்பது எனக்குத் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  13. பயணம் ஒருவருக்கு படங்கள் இவருக்கு அழகான இயற்கைக் காட்சிகள் நல்லாத்தான் இருக்கு

    பதிலளிநீக்கு
  14. படங்கள் அருமை!இரசித்தேன்

    பதிலளிநீக்கு
  15. படங்களையும் படங்களுக்கான தலைப்புகளையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  16. நெல்லைத் தமிழன் said...
    ///ஞாயிற்றுக்கிழமை SLOT ஸ்ரீராமுக்கே கிடையாதுன்னு நினைக்கறேன். இது எங்கள் பிளாக் ஆசிரியர் ஒருவர் மேற்கொண்ட டிரிப். அந்தப் பயணம் முடிஞ்சாச்சா அல்லது இன்னும் தொடர்கிறதா என்பது எனக்குத் தெரியவில்லை.//

    ஓ அதுவோ சங்கதி?:).. ஆனாலும் அப்பூடியெனில் படங்களைக் கொஞ்சம் மேலே தள்ளி விட்டிட்டு:) ஸ்ரீராம் தான் கவிஞர் ஆச்சே... ஒவ்வொரு கவிதையையாவது கீழே இணைச்சு விடலாம்:).. சரி சரி அப்பூடியெனில் எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்:))..

    ஆனாலும் நெல்லைத்தமிழன் நான், அஞ்சு வீட்டு கறுப்பணிலாருக்கு திருப்பதியில் வச்சு மொட்டை போடுவதாக நேர்த்தி வச்சிட்டேன்ன்ன்ன்ன்ன்:)).. ஏன் எதுக்கெனக் கேய்க்காதீங்க:).. மீ ஒரு அப்பாஆஆஆஆஆஅவீஈஈஈ:)

    பதிலளிநீக்கு
  17. இயற்கையை ரசித்தால் படங்களுக்கு பஞ்சம் ஏது?
    வெளியிட அருமையான தளம் கிடைத்து இருக்கிறது.

    இரண்டு படங்களை மட்டும் கொடுத்து ஆறு வித்தியாசம்கேட்கலாம்.

    முதன் முதலில் ஒரு ஞாயிறு வெளியிட்ட இரண்டு படங்களைப் பார்தது
    ஆறு வித்தியாசம் கேட்கலாம் குறிப்பிட்டவள் நான் தான்.

    இங்கு ஒரே மாதிரி இருக்கும் மூண்று படத்தில் ஆறுக்கு மேல் குறிப்பிடலாம்.

    பதிலளிநீக்கு
  18. //ஞாயிற்றுக்கிழமை SLOT ஸ்ரீராமுக்கே கிடையாதுன்னு நினைக்கறேன். //

    சரியே நெல்லைத்தமிழன்.

    //இது எங்கள் பிளாக் ஆசிரியர் ஒருவர் மேற்கொண்ட டிரிப். அந்தப் பயணம் முடிஞ்சாச்சா அல்லது இன்னும் தொடர்கிறதா என்பது எனக்குத் தெரியவில்லை.//

    ஹி ஹி ஹி... எனக்கும் தெரியவில்லை!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!