வியாழன், 7 டிசம்பர், 2017

தமன்னா(வுக்கு) ஒரு கவிதைசென்னையில், போலீசாரின் பிடியில் சிக்காமல், புதுச்சேரிக்கு தப்பிச் சென்றார் பாரதியார். புதுவையில் இருந்தபடியே, மீண்டும், 'இந்தியா' பத்திரிகையை துவக்கினார். 


     இப்போது போல், அந்தக் காலத்தில், பத்திரிகைகள், விற்பனைக்காக, கடைகளுக்கு வராது. சந்தா செலுத்துவோருக்கு மட்டுமே, தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

     இன்றுள்ளது போல், அக்காலத்தில், எல்லா ஊர்களிலும், தபால் ஆபீஸ் கிடையாது; போஸ்ட்மேனுக்கு சைக்கிளும் கிடையாது. நகரத்திலிருந்து, ஒரு ஆள், கையில் தடியுடனும், (தடியின் உச்சியில், ஒரு சலங்கை கட்டப்பட்டிருக்கும்) தோளில், தபால்கள் நிரம்பிய பையுடனும், ஓடி வருவார். நடந்து போனால், தாமதமாகும். டெலிவரி செய்ய முடியாது என்பதால், ஓட வேண்டும் என்பது உத்தரவு. ஓடும் அளவுக்கு, உடல் திறன் உள்ளவர்களே, போஸ்ட்மேனாக சேர்க்கப்பட்டனர்.     இப்படி ஓடும் தபால்காரருக்கு, 'ரன்னர்' என்று பெயர். ஒரு நாள், ஒரு ரூட்டில் போனால், மறுநாள், இன்னொரு ரூட்டில் ஓட வேண்டும். இதனால், கிராமங்களுக்கு, வாரம் ஒரு முறை தான், தபால் வரும். தினசரிப் பத்திரிகைகளும், இப்படி ஏழு நாள் பேப்பருடன், மொத்தமாக வாரக் கடைசியில் வந்து சேரும். பெரிய தலைவர்கள், பிரமுகர்கள் இறந்து போன தகவல்கள் கூட, பத்து நாள் கழித்து தான், தெரிய வரும்.

     வானொலி நிலையமும் அப்போது வரவில்லை. இப்படியான சூழலில் தான், பாரதியார் புதுவையிலிருந்து, 'இந்தியா' பத்திரிகையை, மீண்டும் துவக்கினார்.

     ஆங்கிலேயர்களின் ஆட்சி, அதிகாரம் செல்லுபடியாகாத, பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரியில் இருந்து தான், பாரதியார் பத்திரிகையை துவக்கினார் என்றாலும், புதுச்சேரியில், தபால் துறையை நடத்தி வந்தது, ஆங்கிலேய அரசு தான். பிரெஞ்சு அரசு, தபால் துறையில் இறங்கவில்லை.

     பாரதியார், 'இந்தியா' பத்திரிகையை, அச்சிட்டு, சந்தாதாரர்களுக்கு அனுப்ப, ஸ்டாம்ப் ஒட்டி, தபால் ஆபீசில் கொண்டு போய் கொடுப்பார். தபால் ஆபீசில், அதை வாங்கி, பாரதியார் தலை மறைந்ததும், அவ்வளவு பிரதிகளையும், தீயிட்டுக் கொளுத்துவர். பிரிட்டிஷ் அரசின் உத்தரவு அப்படி.

     அதுமட்டுமல்ல... பிரதிகளில் எழுதப் பட்டிருந்த, சந்தாதாரர்களின் முகவரிகளை குறித்துக் கொண்டு, பிரிட்டிஷ் போலீசார், அவர்கள் வீட்டிற்கு சென்று, விசாரணை செய்து, மிரட்டினர்.

     பயந்து போன சந்தாதாரர்கள், பாரதியாருக்கு கடிதம் எழுதி, 'இனி எங்களுக்கு, பத்திரிகையை அனுப்ப வேண்டாம். சந்தா தொகையையும், திருப்பி அனுப்ப வேண்டாம்...' என்று தெரிவித்தனர்.

      பாரதியார் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்தார். ஏகாதிபத்தியத்தின் இத்தகைய நெருக்கடியால், 'இந்தியா' தொடர்ந்து, வெளிவர இயலாமல், நின்று போயிற்று!


- ஆர்.சி.சம்பத் எழுதிய, 'சுதந்திரத்திற்கு முந்தைய தமிழ்ப் பத்திரிகைகள்' நூலிலிருந்து...

டிசம்பர் 11 -  பாரதியார் பிறந்த தினம்.

சும்மா வரல்லைங்க சுதந்திரம்.....   தெரிஞ்சுக்குங்க... 

==========================================================================================================
ஃபேஸ்புக்கில் அமுதசுரபி ஆசிரியர் திரு திருப்பூர் கிருஷ்ணன் சிலநாட்களுக்கு முன் பகிர்ந்தது :இதோ பல ஆண்டுகளுக்கு முன்னர் சுரதா ஆனந்தவிகடனில் எழுதிய செய்திக் கவிதைகளைக் கிண்டல் செய்து சோ எழுதிய கவிதையும் அதற்கு சுரதா எழுதிய பதி்ல் கவிதையும்,,, 
.......................................................................


*இதுதான் கவிதையா - சோ*


கவிதை என்றால் என்னவென்று இத்தனை

நாள் சரியாக எனக்குப் புரியாமல் இருந்தது.

சில வாரங்களாக ஆனந்த விகடனில் சுரதா

எழுதிய கவிதை படித்தேன். கவிதையென்றால்

என்ன வென்று இப்போது புரிந்தது.
எழுதுவதை எழுதிவிடவேண்டும் - எதுகை மோனை

நடை தாளம் எல்லாம் மண்ணாங் கட்டி!

மறக்காமல் ஒன்றுமட்டும் செய்ய வேண்டும்

எழுதிய 'எஸ்ஸே'யின் வார்த்தைகளை 

உடைக்க வேண்டும்
வரி வரியாகப் பிரிக்க வேண்டும்! அச்சுக்கு
அனுப்ப வேண்டும், அதுதான் கவிதை.

வார்த்தைகளை உடைப்பதும் வரிவரியாகப் பிரிப்பதும்

கவிஞனும் செய்யலாம்! கம்பாஸிடரும் செய்யலாம்!

தற்காலக் கவிதைகளைத் தருபவர் 

கவிஞரல்ல கம்பாஸிடர்தான்

என்ற உண்மையை உடைத்துக்காட்டிய 
சுரதாவிற்கு நன்றி! விகடனுக்கு நன்றி!

கவிதை என்றால் என்ன வென்றே தெரியாத எனக்கு

சுரதா சுலபமாக கவிதை யெழுத கற்றுத் தந்துவிட்டார்

இதுவே அவர் பாணியில் நான் எழுதிய கவிதை!

மற்றவற்றை கம்பாஸிடர் கவனிக்க வேண்டுகிறேன்!..................................................................................


*பழுதென்ன கண்டீர் என் பாட்டில்?- சுரதா*சிலரெழுதக் கூடாது; மேடை ஏறிச் 

சிலர்பேசக் கூடாது; சிறிதே கற்றுப்

பலரெழுதிக் கெடுக்கின்றார்! துக்ளக் என்னும்

பத்திரிகை நடத்திவரும் நண்பர் சோவோ,

அலைவரிசை வசனந்தான் கவிதை என்னும்
அவதாரம் என்றிங்கே வாதிக் கின்றார்!
தலைவரிசைக் கவிஞர்களைத் தாக்கு கின்றார்
தாக்குமிவர் தாக்கெல்லாம் பள்ளத் தாக்கு!

ஆனந்த விகடனில்யான் எழுது கின்ற

ஆசிரியப் பாக்களிலே, எதுகை மோனை

ஊனமுண்டா? ஓட்டையுண்டா? கம்பாசிட்டர்

உதவியெனக் கெதற்காக? இவர்க்குச் சொல்வேன்:

மீனெதற்குச் சைவனுக்கு? விளக்கைக் காட்ட
விளக்கெதற்கு? பாப்புனையும் நூல்கள் கற்றே
நானெழுதி வருகின்றேன். நீரூற்றாமல்
நகம்தானாய் வளராதா? வளரு மன்றோ?

ஆடுதற்குத் தெரியாத பருவ மங்கை

அழகான முற்றத்தைக் கோணல் என்றால்

வீடுகட்டி வைத்தவர்கள் சிரிப்ப தன்றி

வேறென்ன செய்வார்கள்? இலக்கியத்தில்

ஈடுபடா திருக்குமிவர் என்றன் பாட்டை
எடைபோட வந்துவிட்டார்! எந்த நாளும்
மாடுமுட்டிக் கோபுரங்கள் சாய்வ தில்லை!
மாணிக்கம் கூழாங்கல் ஆவ தில்லை!

டிஸம்பர்  7 - சோ மறைந்த நாள்.

நல்லாயிருக்கே இந்த போட்டி...  சுவாரஸ்யம்தான்.  
========================================================================================================

சோ சொல்லியிருப்பது போலத்தான் நான் எழுதும் கவிதைகள்!  அவர் இப்படிச் சொன்னதை பகிர்ந்தபின் நான் நியாயமாக வழக்கமாகப் பகிரும் "கவிதை"யைப் பகிரக் கூடாது.  நீங்களும் அப்படித்தான் எதிர்பார்த்திருப்பீர்கள்.  நல்ல மாட்டுக்கு ஒரு சூடு!  ஆனால் நான் விடுவதாயில்லை!  கீழே வருவது நான்கு வருடங்களுக்குமுன் நான் ஃபேஸ்புக்கில் பகிர்ந்தது!


சின்னச் சின்ன ஆசை...கட்டுக்கடங்கா வானத்தைக்
கட்டிப்பிடித்து
கைகளுக்குள் அடக்க ஆசை


வானத்தின் முதுகு சேர்த்து

அணைத்து

உச்சி முகர ஆசை!


அடர் வனத்தை
ஒரே சுற்றாகக் 
கயிறால் கட்டி 
நினைத்த இடத்துக்கு 
இழுத்துச் செல்ல ஆசை.


கடலைப் பெரிய
குடுவையால்
கவிழ்த்து மூட ஆசை.


விடாது கருப்பு போல, அப்புறமும் கவிதையா ஸ்ரீராம்..!  எங்கே? என்னைப் பற்றி  நெல்லைத்தமிழனை ஒரு கவிதை எழுதச் சொல்லுங்கள் பார்ப்போம்.


=================================================================================================================================
     'இந்த மொபைல்களோடு ஆதார் இணைக்கச் சொல்றாங்களே 'என்று கேட்டபோது என் உறவினர் ஒருவர் சொன்னார்...  "வேற வேலை இல்லை!  நானாய் போய் செய்யப்போறதில்லை.  வேணும்னா அவங்க வரட்டும்...  வந்து இணைக்கட்டும்..."

     "அய்யய்யோ...  கனெக்க்ஷன் கட் பண்ணிகிட்டாங்கன்னா?"

     "அப்படியெல்லாம் செய்ய மாட்டாங்க..  அப்படியே செஞ்சாத்தான் என்ன!  நிம்மதியா இருந்துட்டுப் போவோம்!!"

     அதுவும் சரிதான்!!  ஆனா நான் இணைச்சுட்டேன்!

     இரண்டு நாட்களுக்கு முன்னால் எதன் எதனோடு ஆதார் இணைக்கப்படவேண்டும் என்று படத்துடன் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது தினமலர்.  அந்தப் படத்தை மட்டும் இங்கு பகிர்கிறேன்!
இப்போ நான் என்ன செய்யட்டும் ஸ்ரீராம்?
=======================================================================================================================


63 கருத்துகள்:

 1. காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

  பதிலளிநீக்கு
 2. ஹா அதற்குள் துரை சகோ ஆஜர்!!!

  இனிய காலை வணக்கம் துரை சகோ அண்ட் ஸ்ரீராம்..

  தமனாவுக்குக் கவிதையா ஆ ஆ ஆ இன்று நெல்லை மயங்கிவிடப் போறார்...

  இருங்க அப்பால வரேன்...தேஸ் ஸ்பெஷல் கம்பு தோசை சாப்பிட்டுக் கொண்டுருக்கேன்..அங்க கொஞ்சம் கும்மி அடிச்சுட்டு வரேன்

  கீதா

  பதிலளிநீக்கு
 3. எண்ணற்ற நல்லோர் இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு சுதந்திரக் கனலை மூட்டி வளர்த்து நாட்டுக்கு நலம் விளைத்தார்கள்..

  ஆனால் இன்றைக்கு!?...

  பதிலளிநீக்கு
 4. அப்படியும் கவிதை..
  இப்படியும் கவிதை..
  ஆகா.. என்றாலும்
  ஓஹோ.. என்றாலும்
  அதுவே கவிதை..
  கவிதை..

  பதிலளிநீக்கு
 5. வானத்தின் உச்சி முகர ஆசை!?..

  சரி.. இது அவங்களுக்குத் தெரியுமா?..

  பதிலளிநீக்கு
 6. >>>> இப்போ நான் என்ன செய்யட்டும் ....!? <<<<

  காலையில வந்து தொந்தரவு பண்ணாம போய்ட்டு வாங்க அப்புறமா!..

  பதிலளிநீக்கு
 7. இன்னைக்கு கச்சேரி களை கட்டிடும்!..

  பதிலளிநீக்கு
 8. நகரத்திலிருந்து, ஒரு ஆள், கையில் தடியுடனும், (தடியின் உச்சியில், ஒரு சலங்கை கட்டப்பட்டிருக்கும்) தோளில், தபால்கள் நிரம்பிய பையுடனும், ஓடி வருவார். நடந்து போனால், தாமதமாகும். டெலிவரி செய்ய முடியாது என்பதால், ஓட வேண்டும் என்பது உத்தரவு. ஓடும் அளவுக்கு, உடல் திறன் உள்ளவர்களே, போஸ்ட்மேனாக சேர்க்கப்பட்டனர்.//

  ஹப்பா எப்படி எல்லாம் போஸ்ட் மென் இருந்திருக்காங்க அப்போ...இப்போ இத்தனை வசதிகள் இருந்தும் சில போஸ்ட் மென் செய்யும் அட்ராசிட்டிஸ்...ம்ம்ம் என்றாலும் அவர்களையும் நாம் போற்றத்தான் வேண்டும்...மழையிலும், வெயிலிலும் பாவம் அவர்கள்...இப்போதெல்லாம் அவர்கள் வந்து பொங்கல் படி, தீபாவளிப் படி கேட்பதில்லை. நல்ல முன்னேற்றம் அல்லது எங்கள் வீட்டுக்குத் தபால்கள் வருவது குறைவு என்பதால் அபப்டி தோன்றுகிறதோ?!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 9. வார்த்தைகளை உடைப்பதும் வரிவரியாகப் பிரிப்பதும்

  கவிஞனும் செய்யலாம்! கம்பாஸிடரும் செய்யலாம்!//

  ஆஹா!! இப்படித்தான் நான் எழுதுவதெல்லாம்...ஹிஹிஹிஹி..செம ஆப்பு!!

  கீதா

  பதிலளிநீக்கு
 10. //நல்ல மாட்டுக்கு ஒரு சூடு! ஆனால் நான் விடுவதாயில்லை! //

  ஹா ஹா ஹா ஹா கை கொடுங்க ஸ்ரீராம் நானும் விடுவேனா...தோன்றும் போது எழுதியே தீருவேன்...நாம கட்சி ஆரம்பிப்போம்....அதிராவும் சேர்ந்துக்குவாங்க இதுல..ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 11. வானத்தின் முதுகு சேர்த்து

  அணைத்து

  உச்சி முகர ஆசை!
  அடர் வனத்தை
  ஒரே சுற்றாகக்
  கயிறால் கட்டி
  நினைத்த இடத்துக்கு
  இழுத்துச் செல்ல ஆசை.//

  ஸ்ரீராம் ரொம்ப ரசித்தேன் இந்த வரிகளை...நான் இரவு வானத்தைப் பார்க்கும் போது இப்படித் தோன்றும்..நிலவும்...நட்சத்திரந்ங்கள் டிசைனாக இருக்கும் இந்த வானை அப்படியே என் மீது சுற்றிக் கொண்டு விரித்து நிலவு என் தலையின் பின்னால் ஒளிர (ஹிஹிஹிஹி) அப்படியே சுற்றிச் சுற்றி நடனம் ஆட வேண்டும் போல் இருக்கும்...நீங்கள் அதை அழகாகச் சொல்லிட்டீங்க...

  கீதா

  பதிலளிநீக்கு
 12. கடலைக் குவளையில் அப்பவே அடைச்சுட்டாரே அகத்தியர் இல்லையோ??!!!! அவரால் அடைக்க முடிந்தது...நம்மால் முடியுமோ..

  மீண்டும்வ் வரேன்...கண்ணி வெயிட்டிங்க் ஃபார் வாக்கிங்க்..

  கீதா

  பதிலளிநீக்கு
 13. கடலை குடுவையால் கவிழ்த்து மூட ஆசை!!!// ஹாஹாஹா ஸ்ரீராம் இம்மாம் பெரிய ஆசை...சூப்பர் ..ரசித்தேன்..

  முதலில் குவளை என்று வாசித்து கவிழ்த்து என்று வாசித்துவிட்டதால் மேலே வந்த கமென்ட்...ஹும் இதிலிருந்தே வயசாகுதுனு தெரியலையோ??!!! ஆ அதிராவுக்குப் பொருக்கி எடுக்க காட்டிக் கொடுத்துட்டேனே...நுழலும் தன் வாயால் கெடும்...

  கீதா

  பதிலளிநீக்கு
 14. நல்ல தகவல் நானும் இணைத்துவிட்டேன்..மொபைல் வழியாகவே....

  ஆதார் எண்ணை யாருக்கும் கொடுத்துவிடாதீர்கள்னு வேற பாங்கிலிருந்தும், ஏர்டெல் மொபைல் நிறுவனத்திலிருந்தும் வார்னிங்க் வந்து கொண்டே இருக்கு. வாரத்தில் இரு முறை...கணினி தன் கடமையைச் சரிவரச் செய்கிறது!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 15. அது சரி என்ன ஸ்ரீராம் தமனா(வுக்கு) ஒரு கவிதைனு போட்டுட்டு தமனா கவிதையைக் காணோமே!! தமனா படம் போட்டுட்டா ஆச்சா!!!?? நோ...நோ...கண்டிக்கிறேன்...கவிப்புயல் வரட்டும். ஏஞ்சல் வரட்டும் போராட்டம் நடத்துவோம்...நெல்லையின் ஆதரவுடன்!!! ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர், தமன்னா ஒரு கவிதை என்றுதான் எழுதியிருக்கிறார்.

   நீக்கு
  2. அப்போ அனுஷ்கா இன்னொரு கவிதையா!!!..

   நீக்கு
 16. சுரதாவின் கவிதை சந்தத்துடன் கூடியது (கம்பாசிட்டர் தவிர). ரசித்தேன்.

  நல்ல படங்களைத் தேர்ந்தெடுக்காததன்மூலம் தான் தமன்னா ரசிகர் இல்லை என்று நிரூபிக்க முயன்றிருக்கிறார் ஶ்ரீராம். அல்லது அதனால் தமன்னா ரசிகர்களில் ஒருவராவது குறைவாரா என்ற ஆசையோ?

  கொண்ட கொள்கைக்காகவும் சுதந்திர வேள்விக்காகவும் பாரதி போன்ற எத்தனை தலைவர்கள் தியாகம் செய்துள்ளனர். தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா.

  பதிலளிநீக்கு
 17. பாரதியின் வரலாற்றை பரப்புவதற்கு தமன்னாவின் உதவி தேவைப்படுகிறது.

  இன்றைய நிலை.

  பதிலளிநீக்கு
 18. தமன்னா கவிதையா அனுஷ்கா கவிதையா என்ற பட்டிமன்றத்துக்கு கேஜிஜி சார் தான் நடுவரா? நடத்துங்க நடத்துங்க! சந்தடி சாக்கில் பாரதியாருக்கும் அஞ்சலி, சோவுக்கும் அஞ்சலி!

  இந்த ரன்னர் பத்தியும் தபால் துறை பத்தியும் படிக்கும்போது கல்கி எழுதின அலை ஓசை நாவல் நினைவில் வரும். அதில் முதல் அத்தியாயத்திலேயே ரன்னர் பாலகிருஷ்ணன்(?) தபால்கள் எடுத்து வருவது தான் வரும். தலை பின்னிக் கொண்டிருந்த லலிதா தலையை வாரிக் கொண்டிருந்த அம்மாவிடமிருந்து விடுவித்துக் கொண்டு தபால்களை வாங்க ஓடுவாள்.

  பதிலளிநீக்கு
 19. ஹை கீதாக்கா வந்துட்டீங்களா...உடல் நலம் ஓகேதானே..காணவில்லையே என்று அதிரா தேடினார். நான் உங்களுக்கு மெஸேஜ் கொடுத்திருந்தேன். சரி நோட்டிஸ் ஒட்டலாமோ என்று யோசிப்பதற்குள் வந்துட்டீங்க....ஹா ஹா ஹா ஹா ஹா..

  கீதா

  பதிலளிநீக்கு
 20. அவர், தமன்னா ஒரு கவிதை என்றுதான் எழுதியிருக்கிறார்.//

  ஆஹா!! அட ஆமாம்ல..அப்படியும் சொல்லலாம்ல..!! குடுமபத்துக்கே இந்த வார்த்தை விளையாடல் பதிஞ்சு ஜீன்ல ஒன்றிப் போச்சுப் போல!!! ரசித்தேன் அண்ணா..ஹப்பா நெல்லை கொஞ்சம் ஆறுதல் அடைவார். படம் சரியாப் போடலைனு சொல்லி வருத்தப்பட்டிருக்காரே!!!

  நெல்லை தமனாவின் முதல் படம் தான் கொஞ்சம்..அப்படியும் இப்படியும்...அப்புறம் உள்ளது எல்லாம் நல்லாத்தானே இருக்கு!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 21. பாரதியைப்போன்றொரு மகாகவியைப்
  பகிர்ந்துகொள்ளவும் தெரிந்துகொள்ளவும்கூட
  பாவை ஒருத்தியின் துணை வேண்டியிருக்கு
  பாதகமான ஒரு காலகட்டத்தில்
  பாட்டெழுதுபவனின் கதியைத்தான் பாரீர்
  சுரதாவின் விகடன் கவிதை படித்தே
  சுருக்கெனக் கிள்ளிவிட்ட சோவும்
  கம்பாசிட்டர் கம்பவுண்டர் என்றெல்லாம்
  கதைத்தார் கிண்டல் செய்தார்
  இத்தனை நடந்தும்
  எவ்வளவோ பட்டும்
  அடுத்தாற்போல் இறக்கிவைத்தார் ஸ்ரீராம்
  ஆசை ஆசையாய் ஒரு கவிதை
  தாய்நாட்டிலே என்னதான் நடக்கிறதோ-அந்தத்
  தமன்னாவுக்கே வெளிச்சம் !

  பதிலளிநீக்கு
 22. அப்போ அனுஷ்கா இன்னொரு கவிதையா!!!..//

  ஹா ஹா ஹா ஹா..ஆமாம் துரை சகோ!! ஸ்ரீராம் ரசித்துக் கொண்டிருப்பார் இதை...

  கீதா

  பதிலளிநீக்கு
 23. மறு ஆய்வு (Reverification) என்ற பெயரில் உலா வரும் கையடக்க தொலைபேசியுடன் ஆதார் எண்ணை இணைக்கும் அயர்ச்சியில் சோர்ந்து போய் விட்டேன். இரு முறை சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்குப் போய் விரல் ரேகைகளைப் பதிக்கும் கருவியில் ஒவ்வொரு விரலாகத் தேர்வு செய்து விரல் ரேகைகளைப் பதிய முயற்சித்தும் எந்த விரல் ரேகையும் பதியாதது எனக்கே ஆச்சரியமாகப் போயிருக்கிறது.

  இப்படி விரல் ரேகையை பதிய முடியாதோருக்கு என்ன தான் மாற்று ஏற்பாடு?..

  BSNL அலுவலர்களுக்கேத் தெரியவில்லை. பிப்ரவரி மாதத்திற்குள் பதிய வேண்டும் என்பதினால், இப்படி விரல் ரேகை பதிய முடியாதோருக்காக அரசாங்கம் ஏதாவது மாற்று ஏற்பாடுகளை பரிந்துரைக்கிறார்களா என்று பார்க்கலாம், சார்!' என்று என்னை அனுப்பி வைத்து விட்டனர்.

  என் அனுபவம் வேறு யாருக்காவது ஏற்பட்டிருக்கிறதா என்று தெரிந்து கொள்ள ஆசை.

  பதிலளிநீக்கு
 24. நோஓஓஓஓஓஒ இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்ன்ன்ன்ன்..:) அனுஸ்கா எண்டால் மட்டும் அழகழகான படங்களாகத் தேடிப்போடுவார்ர்:).. தமனா என்றதும்.. ஒரு மாதிரிப் படங்களாப் போட்டு வச்சிருக்கிறார்ர்...:).. நெல்லைத்தமிழன் இப்போ பாலைவனத்தில் குதிக்கப்போறாரே:))...

  ////இப்போ நான் என்ன செய்யட்டும் ஸ்ரீராம்?///

  ஹையோ ஹையோ ஹையோ இக்கொடுமையைக் கேய்க்க இங்கின ஆருமே இல்லையாஆஆஆ:)).. தமனாவையும் தனக்குப் பிரெண்ட்டூஊஊஊஊஊஊஊஉ ஆக்கிட்டார்ர்ர்ர்ர்ர்:))

  பதிலளிநீக்கு
 25. மாடு முட்டி கோபுரங்கள் சாயாதிருக்கலாம் - ஆயின்
  இடிதாங்கி எனும் சின்ன இரும்புத் துண்டும்
  இடி தாக்காமல் கோபுரம் காக்கும்.
  இரும்புத் துண்டு தானே என்று
  ஏளனமாக நினைப்பதற்கு ஏதுமில்லை.
  உவமையில் சுரதாவை - அந்த
  சுப்பு ரத்தன தாசனை விஞ்சியோர் இல்லை.
  கவிதைக்கு என்று கச்சிதமான ஒரு வடிவம் உண்டு
  அந்த வடிவத்தை எப்படிப்பட்டவரும்
  எப்பொழுதெல்லாம் மீறுகிறார்களோ,
  அப்பொழுதெல்லாம் கவிதையின் செம்மாந்த அழகு
  அவர் படைப்பில் காணாமல் போவதுண்டு.
  அப்படி மீறிய கவிதை இலட்சணங்களுக்கு
  கவிதை போலவான என் இந்த முயற்சியும் ஒரு சாட்சி.

  பதிலளிநீக்கு
 26. ///எழுதிய கவிதை படித்தேன். கவிதையென்றால்
  என்ன வென்று இப்போது புரிந்தது.

  எழுதுவதை எழுதிவிடவேண்டும் - எதுகை மோனை

  நடை தாளம் எல்லாம் மண்ணாங் கட்டி!

  மறக்காமல் ஒன்றுமட்டும் செய்ய வேண்டும்

  எழுதிய 'எஸ்ஸே'யின் வார்த்தைகளை
  உடைக்க வேண்டும்
  வரி வரியாகப் பிரிக்க வேண்டும்! அச்சுக்கு
  அனுப்ப வேண்டும், அதுதான் கவிதை.///

  ஹையோ இதே.. இதே... இதேதான் இப்படி ஒரு சில வசனம் தான் ஒரு தடவை வைரமுத்து அங்கிளின் ஸ்பீஜ் ல கேட்டேன்:).. அதிலிருந்துதான் நேக்கு தெகிறியம் வந்தது.. கவிஞராகிட்டேன்ன்ன்ன்ன்:)).. இந்தத் தக்கினிக்க்கு:) எல்லோருக்கும் தெரிஞ்சிட்டால்ல்ல்.. கவிஞர்கள் கூடிடுவினம் என்னைப்போல:)) ஹா ஹா ஹா..
  வைரமுத்து அங்கிள் சொன்னதில் ஒன்று:-
  கவிஞர்கள் பொய் பேசுபவர்கள்... அப்போ எப்படியும் எழுதலாம், விளக்கம் சொல்லோணும் எனப் பயப்படத் தேவையில்லை:))

  பதிலளிநீக்கு
 27. uங்கள் கவிதை நல்லா இருக்குது ஸ்ரீராம், ஆனா காதல் கவிதை போட்டு முடிவில் தமனாக்கா:).. இதுதான் இடிக்குது:).. நீங்க அனுக்காவோடயே நில்லுங்கோ.. நெல்லைத்தமிழன் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என தமனாவை வச்சிருக்கிறார்ர்.. அதில போய் டச்சுப் பண்ணி அவரை சூசைட்டூஊஊஊஊஉ பண்ண வச்சிடக்கூடாஅ ஜொள்ளிட்டேன்ன்ன்:)).. ஹையோ எங்கே என் செக்:)).. பீஸ்ஸ்ஸ் சேஃப் மீஈஈஈ:))...

  கீதாவுக்கு வயசான விசயத்தை மீ டயறியில் நோட் பண்ணிட்டென்ன்ன்:) அப்பப்ப உதவும்:)

  ஹாய் கீதாக்கா... உங்களை மாஸ்டர் செஃப் அதிரா மட்டும்தேன் தேடினேன் தெரியுமோ?:)..

  பதிலளிநீக்கு
 28. ஜீவி சார்... உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்தபின்பு எனக்கு எழுதத் தோன்றியது.

  "இப்படி விரல் ரேகையை பதிய முடியாதோருக்கு என்ன தான் மாற்று ஏற்பாடு?"

  மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றில், நான் Recruit செய்த ஒரு ஸ்ரீலங்கனுக்கு, கையில் விரல் ரேகைகளே இல்லை. கத்தாரில், 6 தடவை அவனுடைய விரல் ரேகையைப் பதிவதற்கு அவனுக்கு அழைப்பு வந்து, எல்லா சமயங்களிலும் Failure ஆனதால், அவனுக்கு விசா தர இயலாது, அவன் தேசத்தை விட்டுப் போயாகவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். துபாயில் அந்தப் பிரச்சனை ஏற்படவில்லை (அவங்க கண்ணை ஸ்கேன் செய்வாங்க).

  நம்ம ஊரிலும், விரலில் ரேகை அழிந்துபோனவர்களுக்கு கண்ணை ஸ்கேன் செய்வதுதான் தீர்வு.

  பதிலளிநீக்கு
 29. அபுதாபியைப் போல சென்னை விமான நிலையத்திலும் கண்களை ஸ்கேன் செய்கின்றனர்..

  பதிலளிநீக்கு
 30. பாவம் தாபால்காரர்கள் அப்போது எவ்வ்ளவு கஷ்டம் அதை வாங்க ஆவலோடு காத்திருந்து வாங்குவார்கள் அவரைஒரு பிரமுகரை போல் பார்த்திருப்பார்கள் இப்போதோ போஸ்ட் என்பதை வீட்டுக்கு வீடு தாபல் பெட்டியில் போட்டுவிட்டு செல்கிறார்கள் வாங்க ஆளில்லாமல்
  நமக்கான ஒரு பத்திரிகை நடத்த எவ்வ்ளவு பாடு பட்டு இருக்கார் பாரதி இழுத்து உட்கார்ந்த இடத்தில் அவரை பற்றி படித்து கொண்டிருக்கிறோம் அவர்கள் எல்லாம் போட்ட பிச்சையில்
  கவிதை சண்டை சுவராசியாமாக தான் இருந்தது தமன்னா சொன்னது போல்
  //அடர் வனத்தை
  ஒரே சுற்றாகக்
  கயிறால் கட்டி
  நினைத்த இடத்துக்கு
  இழுத்துச் செல்ல ஆசை//
  சூப்பர்................... யார் தமண்னாக்கு சொல்வது இது கவிதைனு அனுப்பிவிடுங்கோ அவங்களுக்கு ஒரு காபியை
  ஆமாம் தலைப்பு கவிதையை காணோமே ஓ தமன்னா போட்டோ வந்து பேசியதே கவிதையா .....

  பதிலளிநீக்கு
 31. "தமன்னா(வுக்கு) ஒரு கவிதை" என்ற
  தலைப்புத் தான் - என்னை
  கொஞ்சம் தாக்கிவிட்டது - அதை
  "சோ - சுரதா மோதல் கவிதைகள்" என்ற
  தலைப்புத் தந்திருந்தால் - பதிவின்
  காரம், சாரம் தலைப்பிலே தெரிந்திருக்கும்!

  பரவாயில்லை, அருமையான பதிவு!
  சோ சீண்டியதும் சுரதா பதிலுரைத்ததும்
  வெறும் சீண்டி விளையாடிய கூத்தல்ல...
  கவிதை என்பது
  உரை நடை வரிகளை உடைத்தெழுதுவதல்ல
  எதுகை, மோனை எட்டியுதைக்க எழுதுவதல்ல
  உவமை அணி உருண்டு வரப் புனைவதல்ல
  நல்ல கவிதை எதுவென - எல்லோரும்
  உணர வைத்த சிறந்த பதிவினை
  பாராட்டுகின்றேன்.

  பதிலளிநீக்கு
 32. பழைய தமிழ் பத்திரிக்கை செய்திகளை இப்படி நிறைய பகிருங்கள் ..தமன்னா சொன்னது சரிதான் சும்மா வரலை நம்ம சுதந்திரம்.

  சோ மறைந்து அதற்குள் ஒரு ஆண்டா !!
  ம்ம் இந்த மாதிரி டீசண்ட் போட்டிகளை எந்த காலத்திலும் திரும்பி எடுத்து படிக்கலாம் ..இப்போ இருப்போர்க்கிட்ட இப்படிப்பட்ட நாகரீகத்தை எதிர்பார்க்கவே முடியாது

  பதிலளிநீக்கு
 33. உங்க சின்ன சின்ன ஆசையைத்தான் இப்போ நம்ம மக்களே செஞ்சிக்கிட்டிருக்காங்க :)
  உதாரணம் தண்ணியை பாட்டிலில் :)

  //அடர் வனத்தஒரே சுற்றாகக்

  கயிறால் கட்டி
  நினைத்த இடத்துக்கு
  இழுத்துச் செல்ல ஆசை//

  இருங்க இருங்க SAVE தி FOREST//க்ரீன் பீஸ் பீப்பிள் கிட்ட போட்டு கொடுக்கறேன் உங்களை :)

  பதிலளிநீக்கு
 34. தமன்னா :) Tic Tac Toe, Around I Go போட்டு பாரு என்ன வருதோ அதை செஞ்சிடும்மா :)

  பதிலளிநீக்கு
 35. நெல்லை சார். எனக்கும் இதே மாதிரியான அனுபவம் அமெரிக்காவில் ஏற்பட்டதுண்டு. அது பல வருடங்களுக்கு முன்னால். கண் விழியை ஸ்கேன் செய்து நகருக்குள் நுழைய அனுமதித்தார்கள். அதே மாதிரி அமெரிக்காவுக்கான விசா வழங்கும் பொழுதும் நடந்திருக்கிறது.. விசாவுக்காக எம்பஸி போவதற்கு முதல் நாள்வாழைப்பூ ஆய்ந்த அனுபவத்தினால் அப்படி நேர்ந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இதெற்கெல்லாம் அப்புறம் தான் ஆதார் அட்டைக்காக கைரேகையெல்லாம் கொடுத்தது. அப்பொழுது ரேகை கிடைத்திருக்கிறது. இனி என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். அனேகமாக நீங்கள் சொல்கிற மாதிரி கண் தான் கை கொடுக்க வேண்டும்.

  தங்கள் தொடர் பின்னூட்டத்திற்கு நன்றி, நெல்லை.

  பதிலளிநீக்கு
 36. ஆதார் எண்ணை திருமண செர்டிஃபிகேட்டில் இணைக்க வேண்டுமாம் இல்லையென்றால் உங்களை மணமானவராகக் கருத மாட்டார்களாம் வாட்ஸாப்பில் வந்தசெய்தி படித்து நண்பர் இது நல்லாயிருக்கே என்று மகிழ்ந்தார்

  பதிலளிநீக்கு
 37. கைவிரல் ரேகை பதியாதது குறித்து டாக்டர் கந்தசாமியுமொரு பதிவில் எழுதி இருந்தார்

  பதிலளிநீக்கு
 38. வாங்க துரை செல்வராஜூ ஸார்...

  ரசித்தமைக்கு நன்றி. (கவிதையை ரசித்தமைக்கு நன்றி என்று சொல்வதற்கு எனக்கே கூச்சமாய் இருக்கிறது!)

  //காலையில வந்து தொந்தரவு பண்ணாம போய்ட்டு வாங்க அப்புறமா!..//

  காலையில் என்பதை (நெல்லை) கனவில் என்று மாற்றி விடலாம் இல்லை?

  //இன்னைக்கு கச்சேரி களை கட்டிடும்!..//

  இல்லை... அவ்வளவு களை கட்டவில்லை!

  பதிலளிநீக்கு
 39. வாங்க கீதா ரெங்கன்

  இந்த போஸ்ட்மேன் பற்றி என் அப்பா அடிக்கடி சொல்வார். வரிகளை சொல்லி ரசித்திருப்பதற்கு நன்றி. போன வாரம்லாம் துளஸிஜி வந்து 'கவிதை நல்லாருக்கு ஸ்ரீராம், கவிதை நல்லாருக்கு ஸ்ரீராம்'பார்... அவரைக் காணோமே!

  மொபைல் வழியாகவே ஆதார் இணைத்துவிட்டேன் என்கிறீர்களே.. அந்த மெஷினில் விரல்வைத்து ரேகை பதிவு செய்ய வேண்டுமே... அதுஇல்லாமல் எப்படி!

  தமன்னாவே ஒரு கவிதை. தனியாக எதுக்கு அவருக்கு ஒரு கவிதை? ஆனாலும் நெல்லை கவிதை எழுதுவதில் எனக்கும் ஒன்றும் ஆட்சேபனை இல்லை!

  பதிலளிநீக்கு
 40. கேஜிஜியின் விளக்கமும் அதற்கு துரை செல்வராஜூ ஸாரின் பதிலும் ஸூப்பர்.

  ஸார்... அனுஷ்கா தனிக்கவிதை.

  பதிலளிநீக்கு
 41. வாங்க நெல்லை...

  //நல்ல படங்களைத் தேர்ந்தெடுக்காததன்மூலம் தான் தமன்னா ரசிகர் இல்லை என்று நிரூபிக்க முயன்றிருக்கிறார் ஶ்ரீராம்//

  தேடிப்பார்த்ததில் தேறிய சுமாரான படங்களை இணைத்தேன். கிடைக்கும் நிறைய படங்கள் இங்கு பகிரத் தரமானவை அல்ல!!

  பதிலளிநீக்கு
 42. வாங்க கில்லர்ஜி.. எனக்கும் அந்த வேதனைதான்!

  பதிலளிநீக்கு
 43. வாங்க கீதாக்கா... சொல்லாம கொள்ளாம எங்க ஊருக்கு வந்துட்டு போயிருக்கீங்க...

  பதிலளிநீக்கு
 44. வாங்க ஏகாந்தன் ஸார்..

  கவிதையிலேயே பதில் சொல்லி விட்டீர்கள். நன்று.

  பதிலளிநீக்கு
 45. வாங்க ஜீவி ஸார்...

  என் பாஸ் கைவிரல் ரேகை கூட முதலில் சென்ஸ் ஆகவில்லை. கையைநன்றாகத் துடைத்துக் கொண்டு ஓரிருமுறை முயற்சித்ததும் சரியானது.

  அபார கவிதை முயற்சி. நன்றி ஸார்.

  பதிலளிநீக்கு
 46. வாங்க அதிரா..

  தமன்னா நடித்த 'கண்டேன் காதலனை படம் பார்த்திருக்கிறீர்களா? ஜப் வீ மெட் நாயகி அளவுக்கு இல்லை என்றாலும் நன்றாகச் செய்திருப்பார்.

  //தமனாவையும் தனக்குப் பிரெண்ட்டூஊஊஊஊஊஊஊஉ ஆக்கிட்டார்ர்ர்ர்ர்ர்:))//

  ஹீஹீஹீ... எல்லோருமே எங்கள் நண்பர்களாக்கும்!

  //நீங்க அனுக்காவோடயே நில்லுங்கோ.. நெல்லைத்தமிழன் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என தமனாவை வச்சிருக்கிறார்ர்.//

  ஹிஹிஹி... நிச்சயமாத் தெரியுமா? அப்போ ஸ்ரீதேவி?

  பதிலளிநீக்கு
 47. வாங்க பூவிழி..

  //கவிதை சண்டை சுவராசியாமாக தான் இருந்தது தமன்னா சொன்னது போல்//


  ஆமாமாம்... தமன்னா சொன்னா சரியாத்தான் இருக்கும்.

  பதிலளிநீக்கு
 48. வாங்க மிகிமா. ரத்தினச்சுருக்கமாய் பின்னூட்டம்!?

  பதிலளிநீக்கு
 49. வாங்க யாழ்பாவாணன்.. தலைப்பு உங்கள் மனதை வருத்தி விட்டது தெரிகிறது. மன்னிக்கவும். இனிப்பு தடவி நல்ல விஷயங்களைச் சேர்த்திருக்கிறேன் என்று எடுத்துக் கொள்ளலாமே..

  பதிலளிநீக்கு
 50. வாங்க ஏஞ்சலின்..

  //பழைய தமிழ் பத்திரிக்கை செய்திகளை இப்படி நிறைய பகிருங்கள் .//


  நிச்சயம் செய்கிறேன். ஆம், ஜெ, சோ மறைந்து ஓராண்டு ஓடிவிட்டது. தண்ணியை பாட்டிலில் கொஞ்சம் கொஞ்சமாக அடைப்பத்தைச் சொல்லவில்லை. மொத்தமாக ஒரு மூடிபோட்டு மூடிவிடவேண்டும்!

  பதிலளிநீக்கு
 51. வாங்க ஜி எம் பி ஸார்... நன்றி கருத்துக்கு.

  பதிலளிநீக்கு
 52. ரன்னர் - என்னிடத்திலும் இப்படி ஒரு ரன்னர் பற்றிய விஷயம் உண்டு - பதிவாக எழுத வேண்டும் என சில நாட்களாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் எழுதுவேன்!

  பகிர்ந்துள்ள விஷயங்கள் ஸ்வாரஸ்யம்!

  அனுஷ்காவிலிருந்து தமன்னா! நடக்கட்டும்! :) இல்லை இது அடிஷனலா!

  பதிலளிநீக்கு
 53. வெங்கட்... தமன்னா நெல்லையின் நேயர் விருப்பம்!

  பதிலளிநீக்கு
 54. கவிதைகள் போட்டி அழகு. ஸ்ரீராம் கவிதையும் சொல்லழகு.
  ரன்னர்களைப் பற்றி கீதா சொன்னது அருமை. நானும் தபால்காரருக்குக் காத்திருந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. பாட்டுக்கொரு புலவன் பாரதிதான் எவ்வளவு சிரமப் பட்டிருக்கிறார்.
  நம் வாரிசுகளுக்கு இவர்களைப் பற்றித் தெரிய வேண்டுமானால்
  கப்பலோட்டிய தமிழனைப் பார்க்கச் சொல்ல வேண்டும்.
  இப்பொழுது எல்லா வசதிகளும் வந்து காத்திருத்தலின் அருமையைப்
  பறித்துக் கொண்டுவிட்டன.

  பதிலளிநீக்கு
 55. வாங்க வல்லிம்மா. நன்றி.

  //காத்திருத்தலின் அருமையைப்
  பறித்துக் கொண்டுவிட்டன.​//

  அருமை அம்மா. உங்கள் இந்த வரிகள் நிறைய சிந்தனைகளை விதைக்கிறது.​

  பதிலளிநீக்கு
 56. ஸ்ரீராம் இன்றுதான் உங்களின் இந்தப் பதிவை வாசிக்க முடிந்தது. இன்றைய வீடியோவும் இனிதான் பார்க்க வேண்டும்.

  எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. நான் இருந்தது கிராமம் இல்லையா சிறு வயதில் அப்போ தபால்காரர் பாவம் சில சமயங்களில் நடந்தே வர வேண்டிய சூழலும் ஏற்பட்டிருக்கிறது. பாரதியார் பற்றியது நல்ல பகிர்வு.

  உங்கள் கவிதை வழக்கம் போல் ரொம்ப நல்லாருந்துச்சு. சின்ன சின்ன ஆசை! மனதில் இருந்தாலும் அதையும் இப்படி அழகாகச் சொல்லத் தெரிய வேண்டுமே! அது எனக்குச் சுத்தமாக இல்லை!! ஸ்ரீராம். ரொம்ப ரசித்தேன்.

  தமன்னா என்றவுடன் அட ஸ்ரீராம் தமன்னா பற்றி எல்லாம் கவிதை எழுதுகிறாரா என்று நினைத்தேன். அப்புறம் பதிவு பார்த்ததும் புரிந்தது.

  எல்லாமே நன்றாக இருந்தது. சுரதா அவர்களின் கவிதையும் நன்றாகவே இருக்கிறதே.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!