வியாழன், 14 டிசம்பர், 2017

முத்தமும் சத்தமும்





இப்போ பரவாயில்லை!  


கல்கி, தமிழன், நாடோடி, எஸ்.வி.வி., தேவன், ராஜாஜி, டி.கே.சி., சோமு, பி.ஸ்ரீ ஆகியோரின், ஜனரஞ்சக எழுத்துகளின் முன், மணிக்கொடி எழுத்தாளர்களின், கலைப்படைப்புகள் நிற்க முடியவில்லை.

நான்கே ஆண்டுகளில், 'மணிக்கொடி'யும், அடுத்த ஒன்றரை ஆண்டுகளில், க.நா. சுப்ரமணியத்தின், 'சூறாவளி'யும், கடையை கட்டி விட்டன. 1939ல், இரண்டாம் உலக யுத்தம் துவங்கிய வேளையில், மணிக்கொடி எழுத்தாளர்களில், ஒரு சிலர் (பி.எஸ்.ராமையா, கி.ரா.,) ஜெமினி, ஜூபிடர் ஸ்டுடியோக்களிலும், ஒருவர் (சிட்டி) அகில இந்திய ரேடியோவிலும், மற்றொருவர், இந்து அறநிலையத் துறையிலும், (ந.பிச்ச மூர்த்தி) இன்னுமொருவர், வாகினி ஸ்டுடியோவிலும், (ந.சிதம்பர சுப்பிரமணியன்) வேலைக்கு சேர்ந்தனர்.

மவுனி, ரைஸ் மில் தொழில் நடத்தத் துவங்கினார். புதுமைப்பித்தனுக்கு, தினமணியில், உதவி ஆசிரியர் உத்தியோகம்.

கு.ப.ரா., - க.நா.சு., - சி.சு. செல்லப்பா ஆகியோருக்கு, வேலையில்லாத் திண்டாட்டம். இவ்வாறாக, அவிழ்த்து விட்ட, நெல்லிக்காய் மூட்டை போல், பொருளாதார நெருக்கடியைத் தாங்க முடியாமல், மணிக்கொடி கோஷ்டி சிதறுண்டு போயிற்று.

- தாமரை, ஜூன் 1962 இதழில், டி.கே.சி., கட்டுரையிலிருந்து..


"எழுத்தாளர்கள் பாடு எப்பவுமே கஷ்டம்தான்பா...."


=======================================================================================================




"யுத்தம்...  சத்தம்....  முத்தம்...  பித்தம் தலைக்கேறி விட்டதோ ஸ்ரீராம்...?"
============================================================================================================



"நான் பிழைப்புக்காக, என்னென்னமோ தொழில்கள் செய்திருக்கிறேன். இதில், மறக்க முடியாதது மதுரையில், ஜட்கா வண்டிக்காரனுக்கு உதவியாக இருந்தது. 

அந்த வண்டிக்காரனின் மனைவிக்கு, பெரு வியாதி.  வீட்டை கவனிப்பது, சமைப்பது எல்லாம், அவனுடைய மகள் தான். அவளுக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கும். காதிலே, ஈயத்தாலான பாம்படம் அணிந்திருப்பாள்.

அவள் தான் எனக்கு சோறிடுவாள்; மரியாதையாக நடத்துவாள். என்னை, 'மாப்பிள்ளை' என்று அழைத்து, ஜட்கா வண்டிக்காரன் கேலி செய்யும் போது, அவள், ஓடி ஒளிவாள்; செல்லமாக சிணுங்குவாள்.

'நானும், இந்தக் கிழவன் சீக்கிரம் செத்துப் போனால், நாம் தான், இந்த வண்டியையும், குதிரையையும் வைத்துக் கொண்டு, இவளை திருமணம் செய்து, இந்தக் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்து, ஒரு ஜட்கா வண்டிக்காரனாக மாற, தீர்மானித்திருந்தேன்.

வீட்டை விட்டு ஓடிப் போன என்னை, ஒருநாள், சினிமா கொட்டகையில் கண்டுபிடித்த, என் மாமா மகன், பிடித்த பிடியில், என்னை இழுத்து வந்து விட்டார். அதன் பின், அந்த வாழ்க்கையும் மாறிப் போயிற்று"

-- ஜெயகாந்தன் ஒரு கட்டுரையில்.

"நல்ல வேலை செய்தீர்கள் மாமா...  இல்லாக்காட்டி எங்களுக்கு ஒரு நல்ல எழுத்தாளர் கிடைக்காமல் போயிருப்பார்...!"

====================================================================================================






"இவனை என்ன பண்ணலாம்...?"
==========================================================================================================




.......அந்த அரங்கில், எங்கள், யு.ஏ.ஏ., குழுவின் நாடக விழா நடந்து கொண்டிருந்தது. அங்கு, பொதுவாக நாடகங்கள் இரவு, 8:00 மணிக்கு ஆரம்பமாகும். இந்நிலையில், எங்கள் அறையில், நாங்கள் இருந்த போது, ஒரு வட மாநில சிறுவன் வந்து, 'கோன் ஒய்.ஜி.,?' (யார் ஒய்.ஜி.,) என்று கேட்டான்.

'நான் தான்...' என்றேன்.

'கோயி சிவாஜி கணேசன் புலாதா ஹை...' (யாரோ சிவாஜி கணேசனாம்... டெலிபோனில் அழைக்கிறார்) என்றான்.

சிவாஜியிடமிருந்து போன் என்றதும், ஆடிப் போய் விட்டேன். யாரோ கிண்டல் செய்கின்றனர் என்று தான், முதலில் நினைத்தேன்.

தயக்கத்துடன் போனை எடுத்தால், கம்பீரமான குரலில், 'என்னடா பண்றே பம்பாயிலே...' என்றார் சிவாஜி.

'சார் நீங்களா...' என்றேன் தயக்கத்துடன்

'நீ, எங்கே போனாலும் மடக்கிட்டேன் பார்த்தாயா... இந்தியன் எக்ஸ்பிரஸ் ரங்க நாதன், இன்னிக்கு, உன் டிராமா இருக்குன்னு சொன்னான்...' என்றவர், கிண்டலாக, 'சென்னையில ஆடியன்சை கெடுத்தது போதாது என்று, பம்பாயிலும் கெடுக்க போயிட்டீயா...சரி டிராமா எட்டு மணிக்கு தானே... நான் லீலா பேலஸ்லிலே இருக்கேன். வந்து பார்த்துட்டு போ.... தனியாக வராதே. சோட்டாவையும் கூட அழைத்து வா...' என்றார். சோட்டா என்று, அவர் குறிப்பிட்டது, எங்கள் குழுவின் காமெடி நடிகர் சுப்புணியை. அவர் கொஞ்சம் குள்ளமாக இருப்பார்.

சிவாஜி கூப்பிட்டு இருக்கிறாரே என்று, அரக்க பரக்க சுப்புணி, நான், மற்றும் எங்க மானேஜர் கண்ணன் போன்றோர் ஆட்டோ பிடித்துக் கிளம்பினோம்.

ஏழு நட்சத்திர ஓட்டலின் பெரிய பிரமாண்டமான அறையில், (அப்போது அதுதான் பெரிய ஸ்டார் ஓட்டல்) சிம்மாசனம் போன்ற சோபாவில், சிவாஜி உட்கார்ந்திருந்தார்; அருகே, மற்றொரு இருக்கையில், கமலாம்மா. சிவாஜி உட்கார்ந்திருந்த சோபாவுக்கு அருகே, தரையில், கார்ப்பெட்டில், நன்றாக உடை அணிந்திருந்த ஒரு நபர் உட்கார்ந்திருந்தார். 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ரங்கநாதனை தெரியுமென்பதால், அவருக்கு வணக்கம் சொன்னேன். அருகே இருந்த சோபாவில், எங்களை உட்கார சொன்னார் சிவாஜி.

தரையில் கார்ப்பெட்டில் அமர்ந்திருப்பவரை காட்டி, 'இவர் யார் தெரியுமா?' என்று, கேட்டார் சிவாஜி.

'தெரியலையே சார். உங்க ரசிகரோ...' என்று, கேட்டேன்.

'ரசிகர் தான். ஆனால், அதை விட, முக்கியமானது, இவர் தான் இந்த லீலா பேலஸ் ஓட்டலுக்கு, சொந்தக்காரர்...' என்றார்.

ஏழு நட்சத்திர ஓட்டல் அதிபர், தரையில் அமர்ந்திருக்க, நாங்கள் சோபாவில் அமர்ந்திருப்பது சங்கடத்தை ஏற்படுத்த, நானும், சுப்புணியும் எழுந்து நின்றோம். நான் ஓட்டல் உரிமையாளரான நாயரைப் பார்த்து, 'சோபாவிலே வந்து உட்காருங்க...' என்றேன்.

மலையாளம் கலந்த தமிழில், 'எனக்கு இந்த இடம் போதும். ஞான் சாரிண்ட பரம ரசிகனானு. கட்டபொம்மன் படம் எத்தர டயம் நோக்கிட்ட உண்டு...' என்றதும், எனக்கு பேச்சே வரவில்லை.

- தினமலர் வாரமலர் - நான் சுவாசிக்கும் சிவாஜி! (10) - ஒய்.ஜி. மகேந்திரா! -


"சிவாஜி...  உங்களைப் பற்றி மேல ஏதோ சொல்லியிருக்காக போல...!"

======================================================================================================

எல்லாமே யாவாரம்தேன்....



"ஹா....  ஹா....  ஹா...  எழுதிக் கொடுத்தாராமா?"
==============================================================================================



85 கருத்துகள்:

  1. இனிய வியாழன் காலை வணக்கம் :)

    பதிலளிநீக்கு
  2. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்

    பதிலளிநீக்கு
  3. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் அண்ட் துரை சகோ...எல்லாருக்கும் காலை வணக்கம்..

    ஸ்ரீராம் கணினி எழுந்துருக்கு....கல்கி, ஜெயகாந்தன் ஆஹா ஈர்க்கிறார்கள்...வருகிறேன் நம்ம ஏரியாவுக்கும் விஸிட் கொடுத்துட்டு வரேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  4. யுத்தம், சத்தம், முத்தம் = பித்தம்!..

    இதுதானே நித்தம்!..

    பதிலளிநீக்கு
  5. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

    பதிலளிநீக்கு
  6. //யுத்தம், சத்தம், முத்தம் = பித்தம்!..

    இதுதானே நித்தம்!​//

    மொத்தமா சொல்லிட்டீங்க துரை செல்வராஜூ ஸார்.​

    பதிலளிநீக்கு
  7. காலை வணக்கம் ஸ்ரீராம் அண்ட் கீதா :)
    பதிவுக்கு நாளை வரேன் எனக்கு முதல் கமெண்ட் போடணும்னே கார்ட்ஸ் செய்றதை விட்டு ஓடி வந்தேன் :) கையெல்லாம் க்ளு :)
    நாளைக்கு படிச்சி பின்னூட்டம்போடரேன்

    பதிலளிநீக்கு
  8. வாங்க ஏஞ்சல்...காலை வணக்கம்...

    ஸ்ரீராம் தலைப்பு கிளு கிளுப்பு!!! ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  9. வாங்க கீதா... தலைப்பு இழுக்கத்தான். மற்றவைகளை படிக்கவைக்க படிக்கவேண்டுமே!!!

    பதிலளிநீக்கு
  10. எல்லாத்தையும் விடப் பிடித்தது வாசனும்,நம்பியாரும் தான்.
    அற்புதமான வாசகங்கள்.ஜெயகாந்தனின் யதார்த்தம்.
    எல்லாவற்றையும் எங்கே பிடித்தீர்களோ தெரியவில்லை. கட்டபொம்மன் கட்டபொம்மன் தான்..
    அதற்காகத் தரையில் உட்காரணுமா அந்த மனுஷன் பாவம்.

    வந்திருக்கும் அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  11. இனிய (இந்திய நேரக்) காலை வணக்கம் வல்லிம்மா!!!

    //எல்லாவற்றையும் எங்கே பிடித்தீர்களோ தெரியவில்லை.//

    நம்மிடம் இல்லாத கலெக்ஷனா! நன்றி வல்லிம்மா.

    பதிலளிநீக்கு
  12. முத்தமும் சத்தமும்!...
    என்றதும் பாருங்கள் - கம்பெனி களை கட்டி விட்டது...

    பதிலளிநீக்கு
  13. கையிலே க்ளூ..வா!...

    அதைத்தான் நானும் யோசிச்சேன்..

    கிறிஸ்துமஸ் முடிஞ்சதும் கொறட்டை தானே!?...

    பதிலளிநீக்கு
  14. யுத்தம், சத்தம், முத்தம் = பித்தம்!..

    இதுதானே நித்தம்!../

    வாவ்! இதுவே ஒரு கவிதை போல அழகு!! துரை சகோ...

    கீதா

    பதிலளிநீக்கு
  15. ஸ்ரீராம் முதல் பகுதி வாசித்ததும் மனம் கொஞ்சம் வேதனைப்பட்டது பாவம் அவர்கள் எழுத்தாளர்கள்..இல்லையா...

    எப்பவுமே கொஞ்சம் ஜனங்களின் நாடித்துடிப்போடு போனால் வெற்றி அடையலாம் தான்...ஜனரஞ்சகமாக...

    ஆம் தலைப்பு ஈர்க்க வேண்டும் அப்போதான் உள் கன்டெட் வாசிக்கப்படும்...

    ஜனரஞ்சகம்!!!!!!

    நல்ல பொருத்தமான படம் நம்பியார்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  16. "யுத்தம்... சத்தம்.... முத்தம்... பித்தம் தலைக்கேறி விட்டதோ ஸ்ரீராம்...?"// ஆஹா இது இங்கருந்தா....அது நித்தம் என்றது சரியாகச் சொன்னார் துரை சகோ!!!

    கவிதை சூப்பர் ஸ்ரீராம்....ரொம்பவே ஆ என்னென்னவோ கதைகள் எழுதத் தோனுதே!!!!!!

    ரொம்ப ரசித்தேன்...

    படம் ஏன் உங்களை மிரட்டுவது போட்டீர்கள் ஸ்ரீராம்..என்ன தப்பு உங்கள் கவிதையில் ஹிஹிஹிஹி.....கேலி செய்வது போல்/கலாய்ப்பது போல் போட்டிருக்கலாமோ....ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  17. இதில் அந்த நாயர் தரையில் அமர்ந்திருந்ததை நம்ப மனம் வரவில்லை.

    காரணம் தமிழரான சிவாஜிமீது நாயருக்கு இவ்வளவு பக்தியா ?

    ஒருபுறம் பெருமை என்றாலும் இவ்வளவு பெரிய ஹோட்டலின் அதிபருக்கு இறைவன் கொடுத்த புத்தி இவ்வளவுதானோ...

    நேற்று முன்தினம் ரஜினி பிறந்தநாளுக்கு ஒரு தமிழன் பக்கத்தில் கை கட்டி பவ்யமாக நிற்கிறான் (பண்டைகால அடிமை போலவே) ரஜினி கம்பீரமாக நிற்கிறான் (நான் ரஜினியை குற்றம் சொல்லவேயில்லை)

    தமிழன் கீழே வசனம் போட்டு இருக்கிறான் "உனக்காகவே வாழ்கிறேன்) என்று இதைப்படித்ததும் நான் நினைத்தேன் இவனின் மனைவி என்ன நினைப்பாள் ? என்று...

    இவனுக்கும், அந்த நாயருக்கும் வித்யாசம் இல்லை.

    பதிலளிநீக்கு
  18. கட்டுரையே ஒரு கதை போல் பயணிக்கிறதே!! அதுதான் ஜெயகாந்தன்!! அதற்கு நம்பியாரின் கமென்ட் சூப்பர்...அது அவரைப் பற்றி என்பதால்.உண்மைதானே!!

    கீதா

    பதிலளிநீக்கு
  19. ஸ்ரீராம்...மழையைத்தான் காணோம் சரிதான்...

    காலியான இடங்களை நிரப்பும் வேலையற்ற என்பதற்குப் பதில் அழகு அல்லது அழகு தேவதைகளாய் என்றால்??!!!

    இவனை என்ன பண்ணலாம் முந்தைய கவிதைக்குப் போட்டிருக்கலாமோ...ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  20. வாசன், நம்பியார் வாசகங்கள், ஜெயகாந்தனை ரசித்தேன். ரசிகமணியின் வார்த்தைகள் சார்புடையவையாகத் தோன்றுகின்றன. அவர் ராஜாஜியின் ஆப்தர் அல்லவா?

    பதிலளிநீக்கு
  21. அன்பின் துளசி/ கீதா அவர்களுக்கு..

    நம்ம ஏரியாவில் தங்களது கதை மிகுந்த நெகிழ்ச்சியைக் கொடுத்து விட்டது...
    அன்பின் உறவுகள் என்றென்றும் வாழ்க..

    பதிலளிநீக்கு
  22. சிவாஜியைப் பற்றியதற்கு அந்தப் பத்த வைக்கும் படம் நல்லா இருக்கு..ஹா ஹா

    ஆனால் அந்த நபர் ரங்கநாதன் தரையில் அமர்ந்திருப்பது மனதை ஏனோ என்னவோ செய்தது. நாகரீகம் அல்ல என்று தோன்றியது. அவர் ஓனர் என்பதால் அல்ல....அவரும் ஒரு மனிதன் என்பதால்....அவர் ஓனராக இல்லாமல் ரசிகராகவே இருந்தாலும் கொஞ்சம் மனதை உறுத்துகிறது...

    கீதா

    பதிலளிநீக்கு
  23. நம்ம ஏரியாவில் தங்களது கதை மிகுந்த நெகிழ்ச்சியைக் கொடுத்து விட்டது...
    அன்பின் உறவுகள் என்றென்றும் வாழ்க..//

    புரிகிறது துரை சகோ....மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு இங்கும் சொன்னமைக்கு...

    கீதா

    பதிலளிநீக்கு
  24. எழுத்திக் கொடுங்கள்!! ஆஹா சூப்பர்..!! ஒருவருக்கு நல்லது விஞ்ஞானம் என்று தோன்றுவது மற்றவருக்கு ஆபாசமாகத் தோன்றுகிறது....ஒவ்வொருவரின் எண்ணங்கள், சிந்தனைகள் ...அதனால் தான் நம்மூரில் இன்னும் உடற்கூறு கல்வி வருவதற்கு பல தயக்கங்கள் இருக்கு போல...

    அதற்குப் போட்டிருக்கும் கமென்ட் அண்ட் படம் ஹா ஹா ஹா அருமை...

    கீதா

    பதிலளிநீக்கு
  25. பதிவுக்கு நாளை வரேன் எனக்கு முதல் கமெண்ட் போடணும்னே கார்ட்ஸ் செய்றதை விட்டு ஓடி வந்தேன் :) கையெல்லாம் க்ளு :)//

    அஞ்சு ஹீல்ஸ் போடலையோ?!! ஹீல்ஸ் போடாமல் ஓடி வந்தாவா அதான் வேகமா ஒடி வந்துருக்கா..இல்லையென்றால் துரைஅண்ணன் தான் ஃபர்ஸ்டூஊஊஊ.// .எனக்கு வேண்டும் நீதி நியாயம் நேர்மை எருமை......ஹிஹிஹி இது நான் அல்ல அதிரா இப்படிச் சொல்லிக் கொண்டு ஓடிவருவாங்கனு ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  26. 7 ½-மணிக்கு எ.பி.க்கு வந்தால் இருபது பின்னூட்டம் ஏற்கனவே. அதிரா-ஸ்டைல் பாக்கேஜிங்தான் காரணம்!

    உங்களிடம் பழைய சரக்கு நிறைய இருக்கிறது என்பது தெரிகிறது! நல்லது.

    //..கல்கி, தமிழன், நாடோடி, எஸ்.வி.வி., தேவன், ராஜாஜி, டி.கே.சி., சோமு, பி.ஸ்ரீ ஆகியோரின், ஜனரஞ்சக எழுத்துகளின் முன், மணிக்கொடி எழுத்தாளர்களின், கலைப்படைப்புகள் நிற்க முடியவில்லை..//

    இந்தமாதிரி தத்துப்பித்தென்று எழுத டிகேசி-யால்தான் முடியும். கல்கி, நாடோடி, சோமு, தேவன் போன்ற ’வெற்றி’ பெற்றவர்களோடு தன் பெயரையும் சேர்த்துக்கொண்டிருக்கிறார்! ’புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றிகாண்பதில்லை.. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை..’ என்று செல்லும் சந்திரபாபு பாடல் இவர்காலத்தில்தான் வந்தது. அதையாவது ஒருமுறை இவர் கேட்டிருக்கலாம்.

    ‘கலைப்படைப்புகள்’ என்று இவரே குறிப்பிட்டிருக்கிறார். இத்தகைய படைப்புகள், அவற்றைப்படைத்தவர்களின் காலத்தில் புகழடைந்திருக்காமல், அவர்களின் வயத்துப்பாட்டுக்கு வழிசெய்யாமல் இருந்திருக்கலாம். {அது எங்குமே கலைஞனின் சாபக்கேடு. சரஸ்வதியோடு ஒத்துப்போகாத லக்ஷ்மி! (இங்கும் பெண்களே ப்ரச்னை!)}. ஆனால் கலைப்படைப்புகளும் அதைப் படைத்தவர்களும் காலங்கடந்தும் மனதில் நிற்பார்கள். பேசப்படுவார்கள். அதுதான் அவைகளின், அவர்களின் இறுதிவெற்றி. ஜனரஞ்சகத்தையும், கலையையும் ஒப்பிடுவது மணல்குன்றையும் மலையையும் ஒப்பிடுவதுபோன்றது. ஆதலால் அசட்டுத்தனமானது.

    மற்றவைகளுக்குப் பிறகு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  27. வாசன், நம்பியார் வசனங்கள் நல்லா ரசிக்கும்படி இருந்தன. ரசிகமணி டி.கே.சி அவர்கள் biased ஆக எழுதியிருக்கார். ஜனரஞ்சகமான எழுத்துன்னு இராஜாஜி போன்றவர்களையும் சேர்த்திருக்கிறார், புதுமைப்பித்தனைக் குறைகூறியுமிருக்கிறார். ஆனால் இலக்கியம் என்று பேசும்போது, நாம டிகேசி சொன்ன எல்லோரையும் மனசுல வச்சுக்கறதேயில்லை.

    எப்போதுமே புலமையும் வறுமையும் சேர்ந்தது. ஒருவர் பணத்தளவில் குறைவில்லாமல் இருந்தால் அவரிடம் புலமை குறைவு என்றே சொல்லிவிடலாம் (அல்லது அவரைவிட புலமை மிக்கவர்கள் ஏராளம் என்றும் கொள்ளலாம்).

    பதிலளிநீக்கு
  28. பலருடைய பழைய எழுத்துக்கள் ஸ்ரீராமின் கையில் ரசிக்கத்தெரிந்தவர்

    பதிலளிநீக்கு
  29. For Sriram: ‘- தாமரை, ஜூன் 1962 இதழில், டி.கே.சி., கட்டுரையிலிருந்து..’ எனப்போட்டிருக்கிறீர்கள்.

    கட்டுரையாளரின் பெயர் ‘தி.க.சி.’ என்று இருக்கவேண்டும் என நினைக்கிறேன். அதுவே சரியாக இருக்கம்முடியும். அதாவது, ’தி.க.சி.’ என அழைக்கப்பட்ட தி.க.சிவசங்கரன், எழுத்தாளர், தாமரை இதழின் ஆசிரியராக இருந்தவர். இடதுசாரி அல்லது ‘முற்போக்கு’ (இதற்கு என்ன அர்த்தம் என இதுவரைப் புலப்படவில்லை) எழுத்தாளரென அறியப்பட்டவர். மார்க்ஸிய திறனாய்வாளர் (வண்ணதாசனின் அப்பா என்பது மேலதிகத் தகவல்). இவர்தான் நீங்கள் போட்டிருக்கும் அந்தக் கட்டுரையின் ஆசிரியராக இருந்திருக்கவேண்டும்.

    நெல்லைத்தமிழன் பின்னூட்டத்தில் ‘ரசிகமணி டி.கே.சி.’ என்றதும் எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. டி.கே.சிதம்பரநாத முதலியார் ( டி.கே.சி., ’ரசிகமணி’ என அன்பர்களால் அழைக்கப்பட்டவர். எழுத்தாளர், இலக்கியத் திறனாய்வாளர், தமிழ்ப்பிரியர், பண்பாளர், அருமையான பேச்சாளர், தொமு.பாஸ்கரத் தொண்டமான், ராபி.சேதுப்பிள்ளை, மீ.ப.சோமு, ராஜகோபாலாச்சாரி, கல்கி ஆகிய அறிஞர்கள்/எழுத்தாளர்களின் இனிய நண்பர். (தமிழ்நாடு அரசின் இலச்சினையாக (TN Govt Emblem) ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம் இருக்கவேண்டும் என முதன்மந்திரி ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்குப் பரிந்துரை செய்தவர்). இப்படிப் பல சிறப்புகள் ரசிகமணிக்கு உண்டு. இவர் 16-2-1954-ல் காலமானார். இவரா ‘தாமரை’யில் 1962-ல் அந்தக்கட்டுரையை எழுதியிருக்கமுடியும்? தயவுசெய்து சரிபாருங்கள், ஸ்ரீராம்.

    நான் தி.க.சி. (தி.க.சிவசங்கரன்) எனப் புரிந்தே, எனது மேல்கண்ட பின்னூட்டத்தை எழுதியுள்ளேன்.

    பதிலளிநீக்கு
  30. மேல்கண்ட என் முதல் பின்னூட்டத்தில் ‘இந்தமாதிரித் தத்துப்பித்தென்று எழுத தி.க.சி.யினால்தான் முடியும்’ எனத் திருத்தி வாசிக்கவும்.

    பதிலளிநீக்கு
  31. @ஏகாந்தன் - ராஜாஜியை உள்ளடக்கியதால், நான் ரசிகமணி டிகேசி என்று நினைத்தேன் (அவர், கல்கி போன்றவர்களெல்லாம் ஒரு குரூப். டிகேசிதான், கம்ப ராமாயணத்தில், கம்பர் எழுதாதது என்று பிரச்சனைக்குரிய விதத்தில் கம்பராமாயணப் பாடல்களைத் திருத்ததமுயன்றவர்). உங்கள் correctionக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  32. பாவம் இல்லையா எத்தனை ஆசையோடு ஒரு குழுவாக பத்திரிகை துவங்கி இருப்பாங்க மணிக்கொடி ஆசிரியர்கள் .

    ஹாஹ்ஹா நம்பியார் அங்கிள் எதுக்கு முறைக்கிறார் :)

    ஆவ் !! ஜெயகாந்தன் !! கண்டுபிடித்த மாமா மகனுக்கு நன்றி இல்லைனா என்னவாயிருக்கும் நானா மனதில் நினைத்து எழுத வந்ததை அகெயின் நம்பி அங்கிள் சொல்லிட்டாரே :)


    ஹாஹ்ஹா :) நம்பியாரையே குழப்பிட்டீங்க :)
    மேகம் குடை பிடிக்குதுன்னு நினைச்சுக்கோங்க

    நல்ல விஷயத்தை சொல்லிட்டு பத்த வைக்கிறது இதுதானா :))
    கடைசி செய்தியும் நம்பி அங்கிள் நக்கல் சிரிப்பும் :) ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  33. @துரை செல்வராஜூ அண்ணா .

    அது பேப்பர் ஒட்டு பசை .glue ..கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை செஞ்சிட்டிருந்தேன் பதிவை பார்த்ததும் ஓடோடி வந்தேன் :)

    பதிலளிநீக்கு
  34. ஆஆஆவ்வ் வர வர வியாசக்கிழமை:)) ஹொட்டாகிட்டே வருதே.. ஸ்ரீராமின் கவிதைகளால்:).. என் கவிப்புயல் பட்டத்தை டக்கெனத் தூக்கி ஸ்ரீராமுக்குக் கொடுத்திடலாமோ என எண்ணம் வருதெனக்கு:)...

    அது சரி.. அனுக்காவைப்போட்டீக:)).. ஓகே.. பின்பு தமனாவைப்போட்டீக அதுவும் ஓகே:)) எல்லாத்துக்கும் ஒரு பின்னணி இருக்கு:)).. இப்போ எதுக்கு நம்பியார் வந்திருக்கிறார்ர்:)).. யாருக்காக.. இது ஆருக்காக... என் சிஐடி வேலை ஆரம்பம்ம்ம்:))

    ///வீட்டை விட்டு ஓடிப் போன என்னை, ஒருநாள், சினிமா கொட்டகையில் கண்டுபிடித்த, என் மாமா மகன், பிடித்த பிடியில், என்னை இழுத்து வந்து விட்டார். அதன் பின், அந்த வாழ்க்கையும் மாறிப் போயிற்று"///

    இந்த விசயத்திலே நான் உங்கள் எல்லோரோடும் சற்று மாறுபட்ட்டே நிற்கிறேன்ன்... ஆதரவு கொடுத்து, சமைத்து அன்பாக சோறு பரிமாறி.. இவர்தான் தன்னை மணக்கப் போகிறார் என எண்ணியிருந்த பெண்ணையும் அக்குடும்பத்தையும் அம்போ என விட்டிட்டு வந்திட்டாரே.. அப் பெண் எவ்வளவு வருந்தியிருப்பா.. அது பாவமில்லையா?....

    கதை எழுதுவது, வண்டில் ஓட்டினால்ல்கூட எழுதலாமே... நமக்கு எத்தனையோ எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.. ஆனா நம்பியிருந்த அக்குடும்பத்துக்கு?.. சரி விட்டிடுவோம் எனக்கெதுக்கு ஊர் வம்பு..

    பதிலளிநீக்கு
  35. ///"இவனை என்ன பண்ணலாம்...?"///

    இதில ஓசிக்க என்ன இருக்கு.. ச்றெயிட்டாஆஅ காவே... நோ நோ அங்கின கீதாக்கா ஜம்ப் பண்ணிப்பண்ணி.. தண்ணியே வத்திப் போச்சூஉ:)).. கங்கையில தள்ளிட வேண்டியதுதேன்ன்ன்ன்:)).

    வாயிலே கொள்ளிக்கட்டை வச்சிருக்கும் படத்திலே, சிவாஜி அங்கிள் இந்தப் பக்கம் சிவாஜி போலவும்.. அந்தப் பக்கம் விக்ரம் போலவு இருக்கிறாரே:))

    பதிலளிநீக்கு
  36. @ PaperCrafts Angel said...
    >>> @துரை செல்வராஜூ அண்ணா .

    அது பேப்பர் ஒட்டு பசை.glue .. கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை செஞ்சிட்டிருந்தேன்.. <<<

    கையெல்லாம் க்ளூ - என்றதும் நீங்கள் வாழ்த்து மடல் தான் செஞ்சிட்டு இருப்பீங்க.. என்பது தெரியாத அளவுக்கு புரியாத அளவுக்கு -

    நான் என்ன ஜேம்ஸ் ஊரணிக் கரையிலயா இருக்கேன்!?..
    தண்ணியெல்லாம் வத்திப் போகட்டும்..ண்டு!?..

    பதிலளிநீக்கு
  37. முத்தமும் சத்தமும் முத்து அண்ணா.
    செம...
    கவிதை கலக்கல்.
    நம்பியார் கமெண்ட்ஸ் அடிபொலி...

    பதிலளிநீக்கு
  38. //நான் என்ன ஜேம்ஸ் ஊரணிக் கரையிலயா இருக்கேன்!?..
    தண்ணியெல்லாம் வத்திப் போகட்டும்..ண்டு!?..///

    ஹா ஹா ஹா துரை அண்ணன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது தேம்ஸ் என சொல்லோணும்.. எங்கே ஜொள்ளுங்கோ.. ஜேஏஏஏ ஹையோ எனக்கும் டங்கு ஸ்லிப் ஆகுதே.. தே....ஏஏஏஏஏஏ..ம்ஸ்:):)).. ஜேம்ஸ் எண்டால்ல் இங்கின பலபேர் ஜண்டைக்கு வந்திடுவினம்:))

    பதிலளிநீக்கு
  39. @கம்பபாரதி athira :

    //..இவர்தான் தன்னை மணக்கப் போகிறார் என எண்ணியிருந்த பெண்ணையும் அக்குடும்பத்தையும் அம்போ என விட்டிட்டு வந்திட்டாரே.//

    கிட்டத்தட்ட இதேமாதிரி எனக்குள்ளும் சிந்தனை ஓடியது காலையில். இவர் எழுத்தாளர் ஆயிட்டார். நாம் செஞ்ச புண்ணியம். அந்த அப்பாவி? அவள் மனத்திற்கு வந்ததே தீராத வேதனை?



    பதிலளிநீக்கு
  40. @கம்பபாரதி athira :


    //..கதை எழுதுவது, வண்டில் ஓட்டினால்ல்கூட எழுதலாமே..

    இதைக்கேட்காது அவர்தான் போய்விட்டார். இப்போது எழுதிக்கொண்டிருப்பவர்களாவது இதைப்படிச்சிட்டு அலட்டிக்காமக் கிடங்கப்பா..

    பதிலளிநீக்கு
  41. @ ஸ்ரீராம்:

    அதென்ன 2013-14 காலகட்டத்தில் உங்களிடமிருந்து கவிதைகள் குதிச்சு வெளிவந்திருக்கே..ஏதேனும் விசேஷமா?

    பதிலளிநீக்கு
  42. அஆவ் !! ஓகே ஓகே ..துரை அண்ணா

    பதிலளிநீக்கு
  43. உண்மையிலே மணிக்கொடி காலம் மிகவும் அருமையான பொற்காலமாக இருந்திருக்கணும். அதைக் குறித்த ஓர் தொகுப்பு நூலும் வந்திருக்கு! ஹூஸ்டன் மீனாக்ஷி கோயில் நூலகத்திலே கிடைச்சது. எடுத்துப் படித்தேன். அரிய பல எழுத்தாளர்களின் அற்புதமான எழுத்து!

    பதிலளிநீக்கு
  44. எனக்கும் டி.கே.சி. அப்படிச் சொல்லி இருக்கமாட்டார் என்றே தோன்றியது. ஏகாந்தனின் பின்னூட்டம் சந்தேகத்தைப் போக்கியது. ஶ்ரீராமின் மேகங்கள் பற்றிய கவிதை அருமை! அதென்ன ஜிவாஜியைக் கொண்டு வரீங்க எதுக்கெடுத்தாலும்! நானும் அதுக்கு ஆக்ஷேபணை தெரிவித்துக் காவிரியிலே குதிக்க வேண்டியது தான்! என்ன இருந்தாலும் ஒரு பெரிய நக்ஷத்திர ஓட்டல் அதிபர் கீழே உட்கார்ந்திருந்தார் என்பதெல்லாம் டூ மச் மட்டும் இல்லை. ஃபோர், ஃபைவ் மச்! ஜிவாஜியும் கீழே உட்கார்ந்திருந்தால் எருமையாக, சேச்சே, சகவாச தோஷம்! பெருமையாக இருந்திருக்கும். :)

    பதிலளிநீக்கு
  45. எல்லாரும் பட்டம் சூட்டிக்கிறதைப் பார்த்து நானும் சூட்டிக்கலாமானு ஜிந்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  46. கம்ப பாரதி, கவிப்புயல், மாஸ்டர் செஃப், மியாவ் அதிரா, உங்க பக்கம் போக எத்தனை முயற்சித்தாலும் திறக்கவே மாட்டேன் என ஒரே அடம்! ஊசிக்குறிப்புக்கு அப்புறம் பக்கம் வருவதே இல்லை. :)

    பதிலளிநீக்கு
  47. @Geetha akka :))
    //போர், ஃபைவ் மச்! ஜிவாஜியும் கீழே உட்கார்ந்திருந்தால் எருமையாக, சேச்சே, சகவாச தோஷம்! பெருமையாக இருந்திருக்கும். :)//

    ஹாஹாஆ ஹா :)


    பதிலளிநீக்கு
  48. பதிவுகள் பகிர்வுக்கு பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  49. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  50. வாங்க கீதா...

    வரிவரியாய் ரசித்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  51. வாங்க கில்லர்ஜி,

    மரியாதை என்பது மனதிலிருந்து வருவது. அதை அவரவர்கள் எப்படிக் காட்டுகிறார்கள் என்பது அவரவர்களைப் பொறுத்தது. இதில் என்ன இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  52. வாங்க ஏகாந்தன் ஸார்.

    நான் படிக்கும்போது நன்றாய் இருந்தால் அவ்வப்போது எழுதி வைத்துவிடுவேன். எப்போது தேவையோ, அப்போது உபயோகித்துக் கொள்வேன். அதுபோல இதுவும் நான்கு வருடங்களுக்கு முன்னர் மதுரையில் ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருந்தபோது எழுதி வைத்தது. எங்கு படித்தேன் என்று தேட வேண்டுமென்றால் தேடுவது கஷ்டம். நீங்கள் ஆனால் அதில் என்ன போட்டிருந்தது,அதைத்தான் எழுதியிருப்பேன்.

    பதிலளிநீக்கு
  53. வாங்க நெல்லை

    கருத்துக் பகிர்வுகளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  54. வாங்க அதிரா

    கவிப்புயல் பட்டம் எல்லாம் எனக்கு வேண்டாம். அது கவிஞர்களுக்குத்தான் பொருந்தும். அந்தப் பெண்ணுக்காக இரங்கும் உங்கள் மனம் ஆச்சர்யப்படுத்துகிறது. நீங்கள் சொன்னதும்தான் மனதில் படுகிறது. அனுஷ்க்கா தமன்னா வரிசையில் நம்பி அங்கிள் ( ! ) வந்திருப்பதற்கு ஸ்பெஷல் காரணம் எதுவுமில்லை. இது ஒரு பாணியாய் ஸ்தாபிதம் ஆகிவிட்டதே என்றுதான்....!

    பதிலளிநீக்கு
  55. வாங்க ஏஞ்சல்.. நம்பி அங்கிளை ரசித்ததற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  56. மீள் வருகைக்கும் சுவாரஸ்ய பின்னூட்டங்களுக்கு நன்றி துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  57. ஏகாந்தன் ஸார்..

    //அதென்ன 2013-14 காலகட்டத்தில் உங்களிடமிருந்து கவிதைகள் குதிச்சு வெளிவந்திருக்கே..ஏதேனும் விசேஷமா?//


    முதற்கண் அவற்றைக் கவிதை என்று சொன்னதற்கு நன்றி! அப்போது வேறு எதுவும் தோன்றவில்லை. எனவே இப்படி...!!

    பதிலளிநீக்கு
  58. வாங்க கீதா அக்கா.. எங்கள் வீட்டில் பி எஸ் ராமையா எழுதிய மணிக்கொடி காலம் என்ற புத்தகம் இருந்தது. இங்கு எங்கள் தளத்திலேயே அதை பற்றி பகிர்ந்திருக்கிறேன்.இப்போது அந்தப் புத்தக(மு)ம் காணோம்... என்ன .செய்ய.

    பதிலளிநீக்கு
  59. நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி ஸார்.

    பதிலளிநீக்கு
  60. @ஸ்ரீராம் அது அதிரா அந்த பொண்ணுக்கு கவலைப்பட்டாங்க ..ஆனான் நான் அந்த குதிரையை வண்டியோட்டியின் காலத்துக்குப்பின் ..இப்போ மாமா கையில் ஜெயகாந்தன் போனபின்னே யார் பரர்த்துப்பாங்களோன்னு கவலைப்பட்டேன் ..:) எழுத விடுபட்டுச்சி

    பதிலளிநீக்கு
  61. @ அதிராவ்

    //க்குடும்பத்தையும் அம்போ என விட்டிட்டு வந்திட்டாரே.. அப் பெண் எவ்வளவு வருந்தியிருப்பா.. அது பாவமில்லையா?....//
    இந்த சம்பவத்தை ஜெயகாந்தன் உயிருடன் இருந்தப்போ ஸ்ரீராம் போட்டிருந்தா உங்க பின்னூட்டம் அவர் கண்ணில் பட்டிருக்கலாம் .நௌ tooo லேட் ..துரை அண்ணன் கதை மாதிரி அந்த பொண்ணு மன்னிச்சு மேலே இருக்கிறார்னு நினைச்சிப்போம்

    பதிலளிநீக்கு
  62. ஸ்ரீராம் இன்றும் தாமதம் பதிவை வாசிக்க.

    தொகுப்பு அருமை. சிவாஜி மேலே உட்கார்ந்திருக்க அவர் கீழே அமர்ந்திருப்பதை ஏனோ மனம் ஏற்க மறுக்கிறது. நல்ல பண்பாடு இல்லை.

    உங்கள் கவிதைகள் இரண்டுமே ரொம்ப ரசிக்க வைத்தது. முத்தம் சத்தம் கேட்டால் ஐயகோ வில்லன்களுக்குக் கேட்டு (காதலுக்குப் பலரும் வில்லன்கள் தானே!!!!) வந்து பாவம் அங்கு யுத்தம் தான் நடக்கும்... மேகங்களுக்கு வேலை இல்லாமல் போனது பாருங்கள். இல்லை என்றால் முட்டிமோதி இடியுடன் மழையைத் தந்துவிடுமே!! அருமை!

    பதிலளிநீக்கு
  63. ///ஏகாந்தன் Aekaanthan ! said...
    @கம்பபாரதி athira :


    //..கதை எழுதுவது, வண்டில் ஓட்டினால்ல்கூட எழுதலாமே..

    இதைக்கேட்காது அவர்தான் போய்விட்டார். இப்போது எழுதிக்கொண்டிருப்பவர்களாவது இதைப்படிச்சிட்டு அலட்டிக்காமக் கிடங்கப்பா..///

    ஹா ஹா ஹா அதுதானே:)..

    மற்றது “அந்த” 2013/2014 மட்டரையும் நான் ஓசிச்சேன் ஏகாந்தன் அண்ணன்:)).. ஒரே “- - -” மழையாக் கொட்டுதே ஸ்ரீராமுக்கு என:)) ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
  64. //Geetha Sambasivam said...
    எல்லாரும் பட்டம் சூட்டிக்கிறதைப் பார்த்து நானும் சூட்டிக்கலாமானு ஜிந்திக்கிறேன்.///

    ஹா ஹா ஹா கீதாக்கா நீங்க எதுக்கு இப்பூடி விபரீதமாவெல்லாம் ஜிந்திக்கிறீங்க:)

    பதிலளிநீக்கு
  65. ///Geetha Sambasivam said...
    கம்ப பாரதி, கவிப்புயல், மாஸ்டர் செஃப், மியாவ் அதிரா, உங்க பக்கம் போக எத்தனை முயற்சித்தாலும் திறக்கவே மாட்டேன் என ஒரே அடம்! ஊசிக்குறிப்புக்கு அப்புறம் பக்கம் வருவதே இல்லை. :)//

    ஹா ஹா ஹா கீதாக்கா உங்களுக்கு நான் ஒரு வைர மோதிரம் போடுவதாக முடிவெடுத்திட்டேன்ன் ஏன் தெரியுமோ?:).. என் அத்தனை பட்டங்களையும் அயகா:)) ரைப் பண்ணியிருக்கிறீங்களே.. அதுக்குத்தான்.. இன்னும் ரெண்டு விடுபட்டுப் போச்ச்ச்ச்:)) ஒன்று ஆஷா போஸ்லே மற்றது உலகறிஞ்ச “அப்பாவி”:) ஹா ஹா ஹா.

    அது கீதாக்கா கூகிள் குரோம் உதவவே உதவாது... அதில் ஓபின் பண்ணினால் எனக்கும் அப்படித்தான்.. Opera browser or Maxthon browser இவற்றில் ஒன்றை டவுண்லோட் பண்ணுங்கோ.. இப்போ ஒபரா தான் எனக்கு நல்லா இருக்கு. இண்டநெட் எக்ஸ்புளோரர்... என் எச் எம் றைட்டருக்கு சப்போர்ட் பண்ணுதில்லை:).

    பதிலளிநீக்கு
  66. ///ஸ்ரீராம். said...
    வாங்க அதிரா

    // நம்பி அங்கிள் (///

    ஹா ஹா ஹா இங்கின வர வர பலரின் எழுத்துப் பாணி:).. அதிராவினுடையதைப்
    ப்போலவே மாறி வருதே:)) ஆவ்வ்வ்வ்வ்வ் எழுத்துலகில் வெரி சோரி வலையுலகில் இது ஒரு மாபெரும் வெற்றி அதிராவுக்கு ஹா ஹா ஹா:)).. ஹையோ அதாரது கல்லெடுக்கிறதூஊஊஊ:))

    பதிலளிநீக்கு
  67. ///PaperCrafts Angel said...
    @ அதிராவ்

    //க்குடும்பத்தையும் அம்போ என விட்டிட்டு வந்திட்டாரே.. அப் பெண் எவ்வளவு வருந்தியிருப்பா.. அது பாவமில்லையா?....//
    இந்த சம்பவத்தை ஜெயகாந்தன் உயிருடன் இருந்தப்போ ஸ்ரீராம் போட்டிருந்தா உங்க பின்னூட்டம் அவர் கண்ணில் பட்டிருக்கலாம் .நௌ tooo லேட் ..துரை அண்ணன் கதை மாதிரி அந்த பொண்ணு மன்னிச்சு மேலே இருக்கிறார்னு நினைச்சிப்போம்///

    ஹலோ மிஸ்டர்:)) ஹா ஹா ஹா ரூ லேட் எல்லாம் இல்லை:).. அனுபவம்தானே வாழ்க்கை... இதுபோல இனிமேல் ஆரும் தவறு செய்ய நினைச்சால்.. இதைப் பார்த்து மனம் மாறக்கூடும் எல்லோ?:))... ஹையோ சரி சரி நான் என் புளொக்குக்கே ஓடிடுறேன்ன்:))

    பதிலளிநீக்கு
  68. ஜனரஞ்சக எழுத்து ஓட்டப்பந்தயம், கலைப்படைப்புகள் ஸ்லோ சைக்ளிங் ரேஸ்.எதோடு எதை ஓப்பிடுவது? மணிக்கொடி காலம் தமிழ் இலக்கிய உலகின் பொற்காலம்.

    கவிஞர்களுக்கு மேகம் எப்போதுமே நல்ல இன்ஸ்பிரேஷன்.

    நட்சத்திர ஹோட்டல் அதிபர் கீழே உட்கார்ந்தாலும் சிவாஜி அவரை அனுமதித்திருக்கலாமா? ரசனைக்கும் வெறிக்கும் வித்தியாசம் உண்டு. கலஞர்களை கெடுப்பவர்கள் இம்மாதிரி வெறியர்கள்தான்.

    எங்கிருந்து பிடிக்கிறீர்கள் வித்தியாசமான புகைப்படங்களை?

    பதிலளிநீக்கு
  69. //இவ்வாறாக, அவிழ்த்து விட்ட, நெல்லிக்காய் மூட்டை போல்..//

    ரசனைகள் வேறாக இருக்கலாம். ரஸிகமணிக்குக் கூடவா/..

    பதிலளிநீக்கு
  70. //அது வெறும் சத்தம்.//

    சத்தம்? யார் சொன்ன அபத்தம்?..

    தொழிலில் கை தேர்ந்தவர்கள் இடுகையில் சத்தம் வராது.

    பதிலளிநீக்கு
  71. புது மாதிரி நடிப்பில் மந்திரி குமாரியில் ராஜகுருவை நடமாட விட்டிருந்தார் எம்.என்.என். ராஜகுருவுக்கு நியமித்த பணி இது தான் என்று அந்தக் காலத்தில் வழிவழி பழக்கமாக இருந்ததை மாற்றிக் காட்டியவர் அவர்.

    பதிலளிநீக்கு
  72. //அதன் பின், அந்த வாழ்க்கையும் மாறிப் போயிற்று"//

    வாழ்க்கை மாறிப் போனது என்பது மயக்கம். ஒவ்வொரு கால வாழ்க்கையும் எழுத்தில் சாஸனமாகி அந்தந்த கால எழுத்தை பதிப்பதே வாழ்க்கையாகிப் போனது.

    பதிலளிநீக்கு
  73. //எனக்கு இந்த இடம் போதும். //

    வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களை அறிந்த ஞானவான்கள் வாழ்க்கைத் திலகங்கள். அந்த ஞானம் இல்லாதவர்களைப் பற்றிச் சொல்வதற்கு ஏதுமில்லை..

    பதிலளிநீக்கு
  74. திரு. வாசனின் அந்த நூல் என்னிடம் இருந்தது. ஊர் ஊராக மாற்றி வந்ததில் தொலைந்து போயிற்று. அல்லது யாருக்காவது கொடுத்தேனோ தெரியவில்லை.
    பொதுவாக நினைக்கிற மாதிரி இல்லாமல் இல்லற வாழ்க்கையை ஆரோக்கியமாக பார்க்கிற நூல் அது.

    தலைப்பிட்ட மாதிரி 'எல்லாம் வியாபாரம் தான்' என்பதில் சிறு வயதிலிருந்தே தெளிவாக இருந்தவர் ஜெமினி அதிபர். எதைச் செய்தாலும் அந்தத் துறையில் தனித்துவமாய் தீர்மானமாகச் செய்ய வேண்டும் என்பதில் சரித்திரம் படைத்தவர் அவர்.

    பதிலளிநீக்கு
  75. சற்று முன் வெளியிட்ட என் பதிவிலும் நிறைய பத்திரிகை ஆசிரியர்களின் படங்களை வெளியிட்டிருக்கிறேன். இந்தப் பதிவில் இருக்கும் சிலரும் அந்தப் பதிவில் உண்டு. இந்தப் பதிவை பார்க்காத போதே நிகழ்ந்த ஒற்றுமை அது.

    பதிலளிநீக்கு
  76. //வாயிலே கொள்ளிக்கட்டை வச்சிருக்கும் படத்திலே, சிவாஜி அங்கிள்...//

    ஹா..ஹா.. அதிராவின் நகைச்சுவையை அடிச்சிக்க ஆளில்லை!... கங்கிராட்ஸ்..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!