புதன், 13 டிசம்பர், 2017

புதன் 171213 வார வம்பு


சென்ற வார வம்பு பகுதியில் பங்கேற்று கருத்துக்களைப்  பகிர்ந்த எல்லோருக்கும் நன்றி. குறிப்பாக அவர்கள் உண்மைகள் , நெல்லைத் தமிழன், ஏகாந்தன் , கீதா , ஆகியோரது கருத்துகள் சிந்திக்க வைத்தன.


காபி குடித்தல் , இருமலுக்கு மருந்து குடிப்பது போன்ற விஷயங்கள் கெட்ட பழக்கம் என்று எனக்குத் தோன்றவில்லை. நான் அவ்வப்போது காபி குடிப்பதை ஒரு மாதம், இரண்டு மாதங்கள் என்று நிறுத்தி வைப்பேன். 2017 ல் அதிக பட்சம் நூறு நாட்கள் காபி குடித்திருப்பேன் என்று நினைக்கிறேன். இப்போ காபி குடிக்காமல் இரண்டாவது வாரம். இருமல் வந்தால் கடுக்காய்த்தோல் வாயில் அடக்கிக்கொள்வேன்!

இந்த வார வம்பு:

தற்கால சூழ்நிலையில் தனிக்குடித்தனம் நல்லதா அல்லது கூட்டுக் குடித்தனம் நல்லதா? உங்கள் கருத்து என்ன? ஏன்?


தமிழ்மணம்.64 கருத்துகள்:

 1. நற்காலை வணக்கம், தனிக்குடுத்தனம்தன் .feasibilty. By the way label"vendetta" does not look appropriate. "Fuss" may be

  பதிலளிநீக்கு
 2. ஒற்றைப் பிள்ளையே சுமையாகிப் போன இந்த காலகட்டத்தில் உறவு முறைகளும் அற்றுப் போயின..

  இதில் கூட்டுக் குடும்பம்!?...

  பதிலளிநீக்கு
 3. ஒற்றைப்பிள்ளையே சுமையாகிப் போன இந்த காலகட்டத்தில் உறவு முறைகளும் அற்றுப் போயின..

  இதில் கூட்டுக் குடும்பம்!?..

  பதிலளிநீக்கு
 4. கூட்டுக்குடும்பங்களின் நன்மைகளை அறியாத அறியாமைகள் அதை குழி தோண்டி புதைத்து விட்டோமே...

  இனி மீட்டெடுப்பது நடவாத காரியம்.

  பதிலளிநீக்கு
 5. (பறவை போல்) கூடு கட்டி குடும்பம் நடத்துவது (கூட்டுக் குடும்பம் ) எப்படி சாத்யம் ?

  பதிலளிநீக்கு
 6. கௌதம் அண்ணா போன வார வம்பில் என் பெயர் இங்கு சொல்லப்பட்டதற்கு மிக்க நன்றி...ஆ அண்ணா 2 வாரம் காபி குடிக்காம இருக்கீங்களா?!!!! எனக்கு மயக்கமே வந்துரும் போல இருக்கு இருங்க போய் ஒரு கப் சூடா காப்பி (ஏகாந்த சகோ பாதகமில்லை கீதா குடியுங்கள் என்று எனக்கு சப்போர்ட் தருவார் என்ற நம்பிக்கையில் அவரது ஆதரவுடன் இதோ காபியுடன்!!!) குடித்துக் கொண்டே இந்த வார வம்புக்கு வரேன்...எனர்ஜி வேனும் இந்த வார வம்புக்கு....ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 7. இப்போதைய சூழல் மற்றும் எதிர்கால சூழலில் கூட்டுக் குடும்பம் என்பது சாத்தியமா என்று தெரியலை. பின்னர் வருகிறேன் எது நலல்து என்பதற்கு....முதலில் சாத்தியக் கூறுகள்...

  சென்ற தலைமுறையிலிருந்து இன்றைய தலை முறை வரை மிஞ்சி மிஞ்சிப் போனா மூன்று குழந்தைகள். பெரும்பாலும் இரண்டு அல்லது ஒன்று. எனவே எதிர்காலத்தில் ஒரே பெற்றோர் வயிற்றுக் குழந்தைகள் கூட்டாக வாழ சாத்தியம் இல்லை.

  இல்லை சித்தப்பா பெரியப்பா, சித்தி, பெரியம்மா மாமா அத்தை குழந்தைகள் எல்லோரும் ஒற்றுமையாக??!! இருந்தால் இருக்கலாம் என்றாலும் எல்லோரும் எங்கு ஒரே இடத்தில் இருக்கிறார்கள்??!!! ஒவ்வொரு, வட்டத்தில், மாவட்டத்தில், மாநிலத்தில், ஒவ்வொரு நாட்டில்...ஸோ நோ கூட்டுக் குடும்பம்.

  சரி குடும்ப உறுப்பினர்களை விடுங்கள்...மிகப் பெரிய சவால் என்ன தெரியுமா? தனி வீடு எனப்தே இல்லாமல் ஆகிறதே....எப்படி ஒன்று ரியல் எஸ்டெட்டுக்கு இல்லை என்றால் சொத்து பிரித்தல்....எப்படிக் கூட்டுக் குடும்பம் நடத்த முடியும்?

  இதற்கும் ஒரு ஐடியா உள்ளது...ஒரு தனி வீட்டை அதன் குழந்தைகள் பிரிக்கிறார்கள் என்றால் அதையே ஃப்ளாட்டாக மாற்றி அதிலேயே அந்தக் குழந்தைகள் ஆளுக்கொரு ஃப்ளாட்டில் குடியிருக்கலாம்..அவரவர் குடும்பம்....அவரவர் தனிச் செலவுகள், காமனாக தண்ணீர், கரன்ட், மெயின்டெனன்ஸ் (வேறு ஃப்ளாட்டில் இருந்தாலும் கொடுக்கத்தானெ வேணும்...).இப்படியாவது செய்தால் அட்லீஸ்ட் அடுத்த தலைமுறை கொஞ்சம் உறவாட வாய்ப்புண்டு.....சில செலிப்ரேஷன்ஸ் எல்லோரும் சேர்ந்து கொண்டாடலாம்...தனி தனிக் கிச்சன் தானே..கிச்சனில்தானே அரசியல் ஆரம்பம்... பாட்லக் என்று கொண்டாடலாம்..அதாவது எல்லோரும் ஒரே ஊரில் இருந்தால் அல்லது வயதானால் இது ஒருவருக்கொருவர் துணையாக இருக்க உதவும்.....ஆனால் எத்தனை குடும்பங்கள் இதை யோகிக்கும் என்று தெரியவில்லை...இது ஒரு நல்ல ஆப்ஷன்...தனித் தனியே ஆனால் கூட்டாக என்று....ஒட்டுக் குடித்தனங்களில் ஒத்துப் போபவர்கள் கூட இது போன்ற ஐடியாவுக்கு ஏனோ சம்மதம் தெரிவிப்பதில்லை.......மீண்டும் வரேன்

  கீதா

  பதிலளிநீக்கு
 8. மேலே சொன்ன ஆப்ஷனில், வீடு இல்லை பிரிப்பதற்கு என்றாலும், எல்லோரும் ஒரே குடியிருப்பிலேனும் வாங்கலாம்...ஆனால் அங்கும் குழந்தைகள் ஒவ்வொருவரது பொருளாதாரம், பட்ஜெட் யோசிக்க வைக்கும். அட்லீஸ்ட் அவரவர் பட்ஜெட்டிற்கு ஏற்ப அருகிலாவது வாங்கிக் கொள்ளலாம்..இதெல்லாம் ஐடியலிஸ்டிக் திங்கிங்க்தான்...ஆனால் கூட்டாக சிறு வயதில் வாழ்ந்த எனக்கு (இங்கு பலரும் வாழ்ந்திருப்போம் தான்) தேவையில்லாமல் இப்படி எல்லாம் தோன்றும்.

  மேலே சொல்லப்பட்ட ஆப்ஷன்ஸ் வயதான மாமானார், மாமியார் இருந்தால் அவர்களை ஒவ்வொருவரும் மாற்றிமாற்றி தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று வயதானவர்களுக்குச் சிரமத்தைக் கொடுத்து.... பார்த்துக் கொள்வதை விட ஒரே குடியிருப்பு என்றால் எளிதாக இருக்கும்...(இது ஒரே மகனோ, மகளோ இருப்பவர்களுக்கல்ல)

  பெரும்பாலும் தற்போதைய குழந்தைகள் பெரும்பாலும் வெளிநாட்டில் தான் எனவே கூட்டுக் குடும்பம் அரிது

  கீதா

  பதிலளிநீக்கு
 9. நான் மோடியை பற்றி எழுதுவதை நிறுத்த சொல்லுங்க அதை கூட கஷ்டப்பட்டு நிறுத்திவிடுவேன் ஆனால் காபியை மட்டும் என்னால் அப்படி எளிதாக என்னால் நிறுத்த முடியாது இரவு ஒரு மணிக்கு படுக்க போதும் காபி குடித்துவிட்டுதான் படுப்பேன் அதுமாதரி காலையில் 6 மணிக்கு எழுந்திருந்த உடனே காபியை குடித்தாக வேண்டும் நான் தண்ணிர் அருந்துவது ஒரு நாளைக்கு இரண்டு க்ளாஸ்மட்டும்தான் அதுவும் காலையில் மாத்திரை சாப்பிடும்பொது இரவில் சாப்பிடும் போதுதான்.. மூன்று மாதம் ஒரு முறை இரத்த பரிசோதனை பண்ண செல்லும் போது தவித்து விடுவேன் காப்பி குடிக்காமல் இருக்கும் போது ஹும்ம்

  பதிலளிநீக்கு
 10. எது நலல்து என்பதற்கு என் தனிப்பட்டக் கருத்து கூட்டுக் குடும்பம் என்பதே. அந்தக் கூட்டு ஒரே வீட்டில் இல்லை என்றாலும் அட்லீஸ்ட் மேலே சொல்லப்பட்ட ஆப்ஷனிலாவது இருக்கலாம் என்பது... உறவுகள் வளர்வதற்கும், ஒற்றுமை, விட்டுக் கொடுத்தல், மிகக் குறிப்பாக பொருளாதார ரீதியாக மிகவும் மிகவும் உதவும்...ஆதியிலிருந்து என்றால் மட்டுமே இது சாத்தியம்....ஒவ்வொரு குழந்தையும் வேறு வேறு ஊர்களுக்குச் சென்று வாழ்ந்துவிட்டு பின்னர் கூட்டைப் பற்றி யோசித்தால்..ஒவ்வொருவரது லைஃப் ஸ்டைலும் மாறியிருக்கும் என்பதால் சாத்தியமே இல்லை. அதனால்தான் நான் மேலே சொன்ன ஆப்ஷன்ஸ் தனி தனியே ஆனால் கூட்டாக ....

  புரிதல்கள் இருந்தால் மட்டுமே கூட்டுக் குடும்பம் சாத்தியம். அட்லீஸ்ட் தனித் தனியே ஆனால் கூட்டாக...

  என்னவோ போங்க கௌதம் அண்ணா...இந்தக் கேள்வியக் கேட்டு மனசை என்னவெல்லாமோ அசை போட வைச்சுட்டீங்க....!!!!!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 11. கூட்டுக் குடும்ப முறை மிக நல்ல முறைதான் ஆனால் இந்த காலத்தில் அப்படி வாழவது என்பது இயலாது போய்விட்டதுதான். இன்றைய செய்தியை பார்க்கும் போது ஒருததர் தன் அம்மா மனைவி குழந்தையை கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு செய்ய முயற்சித்தாக கேள்விபட்டேன் அதற்கு அவர் எழுதி வைத்த காரணம் புதிய பொருளாதாரக் கொள்கையின் காரணமாக வியாபாரம் வளராமல் கடனையும் திருப்பி கொடுக்க முடியாமல் கஷடப்பட்டதால் இந்த முயற்சி எடுத்தாக சொல்லி இருக்கிறார்.


  இந்த நபர் அந்த கால கூட்டுக் குடும்ப முறைப்படி வாழ்ந்திருந்தால் அது போல நிகழ்வுகள் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்று அடித்து கூறலாம் காரண்ம இந்த மனிதர் தான் இருக்கும் போதே தன் குடும்பம் இப்படி கஷ்டப்படும் போது தான் இல்லாவிட்டால் எந்த அளவிற்கு கஷ்டப்படுவார்கள் என்று நினைத்தே கொண்ரு இருக்கிறார். இவர் மட்டும் கூட்டு குடும்பத்தில் வாழ்ந்து இருந்தால் தாம் இல்லாவிட்டாலும் தன் குடும்பம் வாழ்ந்துவிடும் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கும், அதனால் அப்படி நிகழ்ந்து இருக்காது அதுமட்டுமல்லாமல் ஒருவருக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் மற்ற்வர்களால் அதை சரிக்கட்டிவிடுவார்கள்


  கூட்டுக் குடும்பமுறையிலும் சில பளஸ் மைனஸ்கள் இருக்கதான் செய்யும்..


  சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து வாழ்கிறோமோ இல்லையோ தாத்தா பாட்டியுடன் சேர்ந்து வாழாத பேரக் குழந்தைகள் துரதிருஷ்டசாலிகள்தான்


  இன்றைய காலகட்டத்தில் கூட்டுக் குடும்ப முறையில் வாழ்கிறோமோ இல்லையோ ஆனால் ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள் சாப்பிடும்போதாவது அல்லது ஒரு குறிப்பிட்ட நேரத்திலாவது ஒன்று கூடி அன்றைய அவர்கள் வாழ்வில் நடந்ததை கூடிப் பேசி மகிழவேண்டும் அது மிக முக்கியம்...

  பதிலளிநீக்கு
 12. அன்றையகாலத்தில் கூட்டுக் குடும்ப முறையில் வாழ்ந்தார்கள் ஆனால் இன்றோ குடும்பத்தினர் வாட்சப்பில் ஒரு குருப்பாக இணைந்து செயல்படுகிறார்கள் அதுதான் இந்த கால கூட்டுக் குடும்ப முறை

  பதிலளிநீக்கு
 13. "தனிக்குடித்தனம் நல்லதா அல்லது கூட்டுக் குடித்தனம் நல்லதா?"

  இந்தக் காலத்துல இந்தக் கேள்விக்கே அர்த்தம் இல்லை. 'சுயநலம்' ஜாஸ்தியா 'பொது நலம்-குடும்பத்துக்குள்ளேயே ஜாஸ்தியா' என்ற கேள்வி கேட்டுக்கொண்டால் இதற்கு விடை சுலபம்.

  சுயநலம் மிக அதிகமாகிக்கொண்டே இருக்கின்ற காலம். இங்கு தனிக் குடும்பங்கள் வாழ்க்கைமுறையே கேள்விக்குறியாக ஆகிக்கொண்டிருக்கிறது. அதாவது பசங்க, பெற்றோர் இவங்களுக்குள்ளேயே communication மிகவும் குறைவாகிக்கொண்டிருக்கிறது. Consideration for others குறைந்துகொண்டே வருகிறது. அவரவர் குடும்பங்களிலேயே இப்படி இருக்கும்போது, பல குடும்பங்கள் சேர்ந்துவாழ்வது எப்படி? ஒருவேளை, பல குடும்பங்கள் சேர்ந்து கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தால், சுயநலம் என்ற aspect குறையுமோ என்னவோ.

  பழைய காலம் போல, வேலை ஒரே இடத்தில் அல்லது ஒரே மாவட்டத்தில் கிடையாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு திக்கில். ஒவ்வொருவருக்கும் தன் பிள்ளைகள் இன்னும் மேலே வரவேண்டும் என்ற எண்ணம். அதைத் தவிர தங்கள் சுகங்களையும் விட்டுத்தர விருப்பம் கிடையாது. அப்புறம் எங்கே கூட்டுக்குடும்பம் சாத்தியம்?

  வாழ்க்கைப் பயணத்தில் கடந்த மைல் கல்களை, மீண்டும் திரும்பிப்பார்ப்பது என்பது சாத்தியமில்லை.

  சில வருடங்களுக்கு முன்பு என்னுடன் ஒரு Projectல் பாகிஸ்தானி ஒருவன் வேலை செய்தான். அவன் சொன்னான் இப்போதும் அவர்கள் குடும்பம் கூட்டுக்குடும்பம்தான் (பெற்றோர், 5-6 சகோதரர்கள், அவர்கள் குடும்பம் எல்லாம் சேர்ந்தது. ஒரே உலை). அவன் துபாயில் வேலை செய்வதால் நல்லா சம்பாதிக்கிறான். ஆனால் பணம் பெரும்பாலும் வீட்டுக்கு. அவன் மனைவி குழந்தைகள் அங்குதான். சில சகோதரர்கள் சம்பாதிக்கவில்லை. இன்னும் ஒருவன் அங்கேயே நல்ல வேலை பார்க்கிறான். எல்லோரும், குடும்பத் தலைவர் சொல்வதைத்தான் கேட்போம். எங்களுக்கென்று தனிச் சலுகைகள் கிடையாது. நான் துபாயில் இருக்கிறேன், கொஞ்சம் சௌகரியமாக இருக்கிறேன், விதவித உணவு. அவ்வளவுதான். ஊரில் எல்லோரும் ஒரே மாதிரித்தான் நடத்தப்படுவார்கள். வேலை வித்தியாசம் இருப்பதால் உடை வித்தியாசம் இருக்கும். வேலை பார்க்காத என் தம்பி Pant, TShirtலாம் வைத்திருக்கமாட்டான். அந்த மாதிரி வித்தியாசம்தான். அதுவும் அவரவர் தேர்ந்தெடுத்துக்கொள்வது. இதைக் கேட்க எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

  மாதம் ஒருதரம் (அது எங்கே.. வருடம் ஒரு தரம்) சந்திப்பு, பொதுவான விஷயங்களைப் பேசுதல் போன்றவை இருந்தாலே ஆச்சர்யம்தான்.

  பதிலளிநீக்கு
 14. இந்த நபர் அந்த கால கூட்டுக் குடும்ப முறைப்படி வாழ்ந்திருந்தால் அது போல நிகழ்வுகள் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்று அடித்து கூறலாம் காரண்ம இந்த மனிதர் தான் இருக்கும் போதே தன் குடும்பம் இப்படி கஷ்டப்படும் போது தான் இல்லாவிட்டால் எந்த அளவிற்கு கஷ்டப்படுவார்கள் என்று நினைத்தே கொண்ரு இருக்கிறார். இவர் மட்டும் கூட்டு குடும்பத்தில் வாழ்ந்து இருந்தால் தாம் இல்லாவிட்டாலும் தன் குடும்பம் வாழ்ந்துவிடும் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கும், அதனால் அப்படி நிகழ்ந்து இருக்காது அதுமட்டுமல்லாமல் ஒருவருக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் மற்ற்வர்களால் அதை சரிக்கட்டிவிடுவார்கள் //

  யெஸ் மதுரை சகோ...இதைத்தான் ஒரு லைனில் என் கருத்திர்லும்.......பொருளாதார ரீதியாகக் கூட்டுக் குடும்பம் மிகவும் உதவும்.

  //சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து வாழ்கிறோமோ இல்லையோ தாத்தா பாட்டியுடன் சேர்ந்து வாழாத பேரக் குழந்தைகள் துரதிருஷ்டசாலிகள்தான்//

  உண்மை உண்மைஉண்மை!!!! நான் என் தாத்தா பாட்டியுடனான என் சிறுவயது வாக்கையை மிக மிக அனுபவித்து வாழ்ந்திருக்கேன்....என் மகனும் தாத்தா பாட்டி என்று இருந்திருக்கிறார்...என் மகனின் வாரிசு என்று வந்தால், எனக்கு அது வரை மூச்சிருந்தால் கண்டிப்பாக அக்குழந்தைகளுடன் நான் எஞ்சாய் செய்வேன்....அவர்களுக்கு என்னால் முடிந்த அளவு கற்றுக் கொடுக்கணும்ன்ற ஆசை எல்லாம் இருக்கு. இறைவன் தான் வழிவகுக்கணும். இப்பவே கூட என் தங்கை பெண் அங்கு நார்த் கரோலினாவில் இருக்கிறாள். இரு குழந்தைகள். மூத்தவன் 2 வயது அடுத்தவள் கைக்குழந்தை...என்னைக் கூப்பிட்டுக் கொண்டே இருக்கிறாள்....வா வந்து என் குழந்தைகளுக்குக் கதை சொல்லு விளையாடு என்று...முடியலைனா ஸ்கைப்பில் குழந்தையோடு பேசு கதை சொல்லு என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறாள்.....

  அடுத்து இதைப் பற்றி எல்லாம் எழுதணும்னு நினைச்சிருந்தேன்...நீங்களும் சொல்லிவிட்டீர்கள்...

  கீதா

  பதிலளிநீக்கு
 15. கூட்டுக் குடும்பம் பல வகையிலும் நலல்துதான் என்றாலும் தற்போதைய சூழலில், இனி வரும் காலத்தில் முடியுமா என்று தெரியவில்லை.

  என் அம்மா அப்பா இருந்தவரை என்னுடன் தான் இருந்தார்கள். மூத்த சகோதரன் இருந்த போதும் அம்மா அப்பா என்னுடன் தான் இருந்தார்கள். இப்போதும் திருமணம் ஆகாத என் அக்கா (வாய் பேச முடியாது, செவியும் கேட்காது) என்னுடனேயேதான் ஆரம்ப நாளிலிருந்து இருந்து வருகிறார். எங்களுக்கு உறு துணையாக. அவர் எங்களுக்கு உதவியாகவும், நாங்கள் அவரைப் பராமரித்தும் என்று என் மனைவியும் ஆசிரியை என்பதால் அக்காதான் வீட்டைப் பொறுப்பாகக் கவனித்துக் கொள்வார். குழந்தைகளும் அவரிடம் அன்பாக இருப்பார்கள். அவரும் குழந்தைகளிடம் அன்பாகவும் திருத்தவும் செய்வார். அவர் கடிந்துகொண்டாலும் நாங்கள் தலையிட மாட்டோம். இறைவன் அருளால் இதுவரை நன்றாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. நல்ல புரிதல் இருந்தால் கூட்டுக் குடும்பம் சாத்தியம். குறிப்பாக வீட்டுப் பெண்களிடையே ஒரு சில கருத்து வேறுபாடுகள் வந்தாலும், ஆண்கள் அதைக் கயிறு மேல் நடக்கும் சர்க்கஸ் வித்தைகாரன்போல எந்தப் பக்கமும் சாயாமல் பேலன்ஸ்டாட இருந்துக் கொண்டு சென்றால் நல்லவிதமாகப் போகலாம் என்பது என் தனிப்பட்டக் கருத்து. என் அனுபவமும்...

  கருத்துகள் பல வந்துவிட்டதால் அதை ரிப்பீட் செய்யலை. இதற்கு முன் சொல்லப்பட்டக் கருத்துகளும் மிகவும் சரியே

  பதிலளிநீக்கு
 16. இந்தக் காலத்துல இந்தக் கேள்விக்கே அர்த்தம் இல்லை. 'சுயநலம்' ஜாஸ்தியா 'பொது நலம்-குடும்பத்துக்குள்ளேயே ஜாஸ்தியா' என்ற கேள்வி கேட்டுக்கொண்டால் இதற்கு விடை சுலபம். //

  யெஸ் நெல்லை. இப்போது அண்ணன் தம்பி, அக்கா தங்கைக்குள்ளேயே உன் வீடு என் வீடு என்று ஆகிவிட்டது அதை விடுங்கள் அம்மா அப்பா, பிள்ளைகளே அப்படியாகிப் போனது. பெற்றோர் பிள்ளைகள் சந்திப்பே வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது வெளிநாடு என்றால் இரண்டு அலல்து இபப்டித்தான் சந்திப்புகள். வந்தாலும் இருக்கிற நாட்களில் பெற்றோருடன் எங்கு இருக்கிறார்கள்...உறவினர் பார்த்தல் என்பதையும் விட ஷாப்பிங்க் தான் அதிகமாக இருக்கிறது....கேளிக்கைகள் என்று இருந்துவிட்டு கடைசி நாள் மீண்டும் ஏதோ பிரிதலை நினைத்து வருந்துவது போல நாலு வார்த்தைகள் சொல்லிவிட்டுச் சென்றுவிடுவார்கள்.....லிப் வேர்ட்ஸ்...

  உங்கள் கருத்து அனைத்தும் மிகவும் சரியே....பாகிஸ்தானியின் குடும்பம் வியப்போ வியப்பு!! அதே சமயம் ஏக்கமும் வந்துவிட்டது....ஆனால், தலைவன் சொற்படிதான் என்றால் இப்போது அது கூட்டாகவே இருந்தாலும் எங்கு நடக்கும். எல்லோருமே இண்டிப்பெண்டன்ட் திங்கிங்க் என்று வந்தாச்சு. குட்டியூண்டு குழந்தைகள் கூட சுய சிந்தனை என்று அவர்கள் சொல்வதுதான் சட்டம் என்றான பின்...சுயசிந்தனை நலல்து ஆனால் அந்த சிந்தனைகள் தாந்தோன்றித்தனமாகச் செல்வதுதான் விதண்டாவாதங்களைக் கிள்ப்பி வீட்டில் பல பிரச்சனைகளை உண்டாக்குகிறது.

  கூட்டுக் குடும்பத்தில் பார்த்தீகள் என்றால் கிச்சனில்தான் பாலிட்டிக்ஸ்....அங்குதான் மாமியார், மரும்கள்கள். ஸேம் ஜாதியாகவே பிரிவு கூட ஒரே பிரிவாக இருந்தாலுமே ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான பழக்க வழக்கங்கள் கொண்ட குடுமப்த்திலிருந்து வந்திருபபர்கள். ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்து வழக்கம் தான் சரி என்று வேறும் விவாதம்...என் அம்மா இப்படித்தான் செய்வார் அப்படித்தானெ வரும்போது கொஞ்சம் கொஞ்சமாக விரிசல்கள் தோன்றத் தொடங்குகின்றன...இப்ப்டி வரும் போது.எல்லா பழக்கவழக்கங்களையும் ஓபனாக ஏற்றுக் கொண்டுவிட்டால், புதிதாகக் கற்கும் ஆர்வம் இருந்துவிட்டால்... பிரச்சனைகளை ஈசியாகச் சமாளித்துவிடலாம்...ஆனால்??!!!!!!!

  வாழ்க்கையில் இஃப் அண்ட் பட் நிறையவே!!

  கீதா

  பதிலளிநீக்கு
 17. அவரவர் சூழ்நிலை பொறுத்து.. எதுவா இருந்தாலும் மனசு ஏத்துக்கனும்...

  பதிலளிநீக்கு
 18. முன்பெல்லாம் கூட்டு குடித்தனம் என்பது பெற்றோர்கள்,அவர்களின் பிள்ளைகள், மருமகள்கள், பேரன் பேத்திகள் என்று எல்லோரும் சேர்ந்து வாழ்வதைத்தான் குறித்தது. சில குடும்பங்களில் பெண்களின் குடும்பமும் இதில் சேரும். இப்பொழுதோ கணவன் மனைவியோடு மாமனார் மாமியார் சேர்ந்து இருந்தாலே அதை கூட்டு குடும்பம் என்கிறார்கள்.

  பெண்ணுக்கு வரன் பார்க்கும் பொழுதே, பையனின் பெற்றோரிடமே நீங்களும் இவர்களோடு சேர்ந்துதான் இருப்பீர்களா என்று கேட்கிறார்கள். திருமண பந்தம் என்பது கணவனோடு மட்டும்தான் என்றே பெண் குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள்.

  இளையவர்கள் இப்படி என்றால் மூத்தவர்கள்? இப்போது 50+இல் இருக்கும் பெரும்பான்மையோர் கணவன்,மனைவி இரண்டு பெரும் வேலைக்குச் சென்றவர்கள். அதுவும் அப்போதெல்லாம் இப்போது போல வசதிகள் கிடையாது. பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள், குழந்தைகள் இவர்களுக்காக தங்கள் சொந்த விருப்பங்களை தியாகம் செய்து மேலே வந்திருப்பவர்கள். ஓய்வு பெற்ற பிறகாவது தங்களுக்காக வாழலாம் என்று நினைக்கும் பொழுது, மீண்டும் பேரன் பேத்திக்கு டயாபர் மாற்றி, குளிப்பாட்டி, சோறு ஊட்டி, என்று இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்க வேண்டுமா என்று நினைக்கிறார்கள்.

  எல்லாவற்றையும் விட மிக முக்கியமான விஷயம் கூட்டு குடித்தனம் நடத்த குடும்பத்தில் குறைந்த பட்சம் இரண்டு மூன்று குழந்தைகளாவது வேண்டாமா? இப்போதெல்லாம் யார் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்கிறார்கள்?

  பதிலளிநீக்கு
 19. ஐ ஒப்ஜக்‌ஷன் யுவர் ஆனர்ர்ர்ர்:)).. இங்கின எல்லோரும் பிடி கொடுக்காமல் பேசுகின்றனர்:).. இரு தோணியில் கால் வச்சுப் பேசுகினம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. நான் அடிச்சுச் ஜொள்ளுவேன் தனிக்குடித்தனம் தான் சிறந்தது...

  தனிக்குடித்தனம் போனால், குழந்தைகளுக்கு பேரன் பேத்தியின் அன்பு ஏன் கிடைக்காது???.. எந்த ஊரில் எந்த நாட்டில் இருந்தாலும்.. இருபகுதி பெற்றோரையும் 6 , 6 மாதத்துக்கு மாத்தி மாத்திக் கூப்பிட்டு வச்சுக் கவனித்தால்... ஏன் பேரன் பேத்தியின் அன்பு கிடைக்காமல் போகுது, ..

  ஆரும் சண்டைக்கு வந்தால் டக்குப் பக்கென என் பட்டத்தை அப்பாவி:) என மாத்திடுவேன் ஜொள்ளிட்டேன்ன்:))..

  அதாவது கூட்டுக் குடும்ப வாழ்க்கை என்பது இந்தியாவில்தானே இருக்கிறது... அங்கு கூட்டுக் குடும்பம் எனும்போது, ஆண் வீட்டினருடன் தானே கூட்டுக் குடும்பம் அமைகிறது?.. அப்போ பெண்ணின் பெற்றோரோடு குழந்தைகள் ஒட்டுவது குறைவுதானே?..

  அத்தோடு, ஒரு பகுதி பெற்றோருடன் நாம் இருக்கும்போது, மற்ற பகுதி பெற்றோர் வந்து தங்க மாட்டினம், அது ஒத்து வராது... அப்போ தனிக்குடித்தனம் இருப்பின், இரு பகுதிப் பெற்றோரும் வந்து போக வசதி எல்லோ...

  இல்லை எனில் 6 மாதம் மாப்பிள்ளை வீட்டில் கூட்டுக் குடும்பம்.. 6 மாதம் பெண் வீட்டில் கூட்டுக்குடும்பம் என இருந்தால் ஓகே:).. எனக்குத் தேவை நீதி நியாயம் கடமை நேர்மை எருமை:)).. ஹையோ ஒரு ஃபுலோல வந்திட்டுது.. விட்டிடுங்கோ:))..

  நம் நாட்டிலும் கூட்டுக் குடும்ப வாழ்க்கை இருக்குதுதான் அது எப்படி எனில் சட்டம் எல்லாம் இல்லை... ஆனா பெற்றோர் இருக்கும் வீட்டை எந்த மகளுக்கு கொடுக்கினமோ.. அந்தத் தம்பதிகள் அவ்வீட்டில், கூட்டுக் குடும்பமாக இருப்பார்கள்... அதாவது அப்பா அம்மா தம்பி தங்கை உடன், ஆனால் அதில் ஒரு தம்பியோ தங்கையோ மணமாகிட்டால்ல் பின்பு அவர்கள் இங்கு சேர்ந்திருக்க மாட்டினம்.. அதாவது ஒரு வீட்டில் ஒரு தம்பதி மட்டுமே இருப்பார்கள்.. ஒரு கொட்டிலாவது போட்டுக் கொண்டு போய் விடுவார்கள்.

  பதிலளிநீக்கு
 20. ///Thulasidharan V Thillaiakathu said...
  கௌதம் அண்ணா போன வார வம்பில் என் பெயர் இங்கு சொல்லப்பட்டதற்கு மிக்க நன்றி.////

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

  இன்னொன்று இத்தலைப்பில் 2008,9 இலயே பெரிய பட்டிமன்றம் எல்லாம் நடத்தி மின்னி முழக்கியிருக்கிறோம்:)

  பதிலளிநீக்கு
 21. இக்காலத்தில எல்லாக் கணவன்மாரும் ரொம்ப நல்லவிங்க பாருங்கோ:)).. மனைவிக்கு முடியவில்லை எனில் ரீ போட்டுக் குடுப்பினம், சமைச்சோ இல்லை கடையில் எடுத்தோ கவனிப்பினம்:)).. இல்லையெண்டாலும் கத்தி, துவக்கு காட்டி மாத்திடுவம் எல்லோ:))..

  ஆனா கூட்டுக் குடும்பத்தில் இதெல்லாம் முடியுமோ?:) நினைச்சாலும் செய்ய முடியாது, சில அம்மாக்களுக்குப் பிடிக்காது மகன் வேலை செய்வது...மகன் ஆசைப்பட்டாலும் செய்ய முடியாது... எத்தனை எத்தனை கதைகள் கேள்விப்படுகிறோம்... சரி அதை விடுங்கோ..

  கனக்க எல்லாம் வாணாம்.. அஞ்சுவை ஒரு நாளைக்கு மட்டும், கூட்டுக் குடும்பத்தில் இருந்து சந்தோசமாக வெளில வரச்சொல்லுங்கோ:)).. அப்பூடி நடந்தால்ல்ல்..

  எனக்கு, ஆயிரம் பேர் முன்னிலையில் அளிக்கப்பட்ட இந்த “கம்பபாரதி” ப்பட்டத்தை:).. இப்பவே தேம்ஸ்ல வீசிடுறேன்ன்ன்.. எனக்கூறி என் பேனாவை உடைக்கிறேன்ன்ன்ன்ன்ன்:)))..

  ஊசிக்குறிப்பு: அஞ்சு இங்கின வரமாட்டா எனும் தெகிரியத்தில சவுண்டு விட்டிட்டேன்ன்:)). வைரவா.. வைரவேல் இம்முறை ஏமாத்தாமல் தருவேன் பிளீஸ்ஸ் சேஃப் மீஈஈஈஈஈ:))

  பதிலளிநீக்கு
 22. நான் மோடியை பற்றி எழுதுவதை நிறுத்த சொல்லுங்க அதை கூட கஷ்டப்பட்டு நிறுத்திவிடுவேன் ஆனால் காபியை மட்டும் என்னால் அப்படி எளிதாக என்னால் நிறுத்த முடியாது //

  மதுரை மீ டூ!!! சேர்த்துக்கங்க என்னையும்...பால் போட்ட காஃபிதான்ன்னு இல்லை ப்ளாக் காஃபியும்!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 23. அதாவது கூட்டுக் குடும்ப வாழ்க்கை என்பது இந்தியாவில்தானே இருக்கிறது... அங்கு கூட்டுக் குடும்பம் எனும்போது, ஆண் வீட்டினருடன் தானே கூட்டுக் குடும்பம் அமைகிறது?.. அப்போ பெண்ணின் பெற்றோரோடு குழந்தைகள் ஒட்டுவது குறைவுதானே?.. //

  இல்லை அதிரா.....பல குழந்தைகள் அம்மா வீட்டாருடந்தான் அதிகம் பழக்கமாகிறார்கள். இந்தியக் குடும்பங்கள், பெண்கள் குறித்து இன்னும் நீங்கள் சரியா ஆராய்ச்சி பண்ணவில்லை...இதெல்லாம் காலம் காலமாக நடக்குதூஊஊஉ....

  இப்ப இன்னும் மோசம்....பல பெண்களின் பெற்றோர்கள் கல்யாணம் பார்க்கும் போதே (இன்று நானும் பானுக்காவும் இதைத்தான் பேசிக் கொண்டோம்!!) ஆண் வீட்டில் "நீங்களும் இவங்களோடுதான் இருப்பீங்களா" என்று ஆணின் பெற்றோரை நேரடியாவே கேட்கிறார்கள்.....இது மகா கொடுமை அல்லவா!!!! என்னைப் போல் ஒரே பையன் உள்ளவர்களின் கதி!! ஸ்ரீராமைப் போல் இரு மகன்கள் இருப்போரின் கதி!!! அப்பாவிகள் நாங்கள்!!!!

  என் மகன் இரு குடும்பத்திலும் ஒரே போல்தான்....எல்லோரிடமும் ஒரே போன்று...என் கஸின்களில் குழந்தைகளும் அப்படித்தான். இரு குடும்பத்தினருடனும் ...ஆனால் என் உறவினர்கள் பலரின் குழந்தைகள் அம்மா வழி உறவுடன் தான் அதிகம்.

  இதெல்லாம் அம்மாக்களைப் பொருத்து ஆதிரா.. வீட்டுப் பெரியவர்களும் இதற்குக் காரணமாகிறார்கள்... அப்பாக்கள் பாவம்!!! குழந்தைகளுக்குச் சுயசிந்தனை இருந்தால் அவர்கள் பேலன்ஸ்டாகப் போவார்கள்.

  கீதா

  பதிலளிநீக்கு
 24. இல்லை அதிரா.....பல குழந்தைகள் அம்மா வீட்டாருடந்தான் அதிகம் பழக்கமாகிறார்கள். இந்தியக் குடும்பங்கள், பெண்கள் குறித்து இன்னும் நீங்கள் சரியா ஆராய்ச்சி பண்ணவில்லை// இதில் ஹா ஹா ஹா சேர்க்க மறந்துடுச்சு....அதிரா...

  கீதா

  பதிலளிநீக்கு
 25. ///இல்லை அதிரா.....பல குழந்தைகள் அம்மா வீட்டாருடந்தான் அதிகம் பழக்கமாகிறார்கள். இந்தியக் குடும்பங்கள், பெண்கள் குறித்து இன்னும் நீங்கள் சரியா ஆராய்ச்சி பண்ணவில்லை/////

  கீதா இதுபற்றியும் அறிகிறேன்.. அதுக்குக் காரணம் கட்டாயக் கூட்டுக்குடும்பம் எனும் திணிப்பாக கூட இருக்கலாம்.. பெண்களுக்கு ஒரு விரக்தி ஏற்பட்டதாலேயே, என் வீட்டினர் மட்டும் குறைவோ என நினைச்சு, பிள்ளைகளை தம் பக்கம் ஒட்ட வைத்து விடுகிறார்களோ என எண்ணத் தோணுது...

  இன்னுமொன்று கீதா, நம் நாட்டில்கூட இப்படியும் முறை இருக்கிறது.. அதாவது ஒரு மகன் மட்டும் வைத்திருக்கும் பெற்ரோர், திருமணம் பேசும்போதே சொல்லி விடுவார்கள், மருமகள் நம் வீட்டில்தான் இருக்க வேண்டும் என, அதுக்க்கு ஒத்துக் கொண்டால் திருமணம் நடக்கும், இல்லை எனில் அடுத்த வரன் பார்ப்பார்கள்.. சிலர் பெண் பிள்ளைக்கு தம்மிடம் வீடில்லை எனில்.. இதுக்கு ஒத்துக் கொண்டு விடுவார்கள்.. அது அவரவர் விருப்பமே ஒழிய கட்டாயமில்லை.

  இப்போ 2 மாதம் முன், கனடாவில் எனக்கு தெரிந்த பெண் ஒருவருக்கு 23 வயசு.. திருமணம் பேசி.. எல்லாமே பொருந்தி.. இனி பெண்ணையும் மாப்பிள்ளையையும் நேரில் பேச விடுவோம் எனும் கட்டம் வந்தபோது, மாப்பிள்ளை வீட்டார் சொன்னார்கள், திருமணத்தின் பின்பு எம்மோடுதான் இருக்க வேண்டும் என... அதனால அப்படியே திருமணம் நிறுத்தி விட்டாச்சு... பெண் வீட்டினருக்கு விருப்பமில்லை அதனால் நிறுத்தி விட்டார்கள்... ஆனா காதல் கல்யாணம் என வந்தால் அது எப்படியும் மாறலாம்..

  பதிலளிநீக்கு
 26. அதிரா எனக்கு மகன் என்பதால் அல்ல நானும் ஒரு பெண் தானே...ஆனால் இப்போது பெண் பெற்றொர் செய்யும் அட்ராசிட்டிஸ் சொல்லி முடியாது. எனக்குத் தெரிந்த மிகவும் நெருங்கிய மாமி ஓருவர் அவருக்கு இரு மகன்கள். 38 வயது...முதல் பையனுக்கே..பெண் வீட்டார் கேட்ட கேள்விகள் பெண்ணே பல கேள்விகள் கேட்டாள்...கார் இருக்கா, தனி வீடு இருக்கா, அமெரிக்கா போவியா...மெக்கானிக்கல் இஞ்சினியரா....சாஃப்ட்வேர் தான் நாங்கள் ப்ரிஃபெர் பண்ணறோம்...என்றெல்லாம்....

  பானுக்கா சொன்னார்கள்...ஒரு சிலரி சேவிங்க்ஸ் லிக்விட் கேஷா இத்தனை லாக்ஸ் இருக்கானும் கேட்கிறாங்கனு....

  கீதாக்காவைக் காணலை...அவங்க வந்தா நிறைய சொல்லுவாங்க....

  ஆண் பிள்ளைகளுக்குத் திருமணம் என்பது இப்போது கொஞ்சம் கடினமாகி வருது...இதுல எங்க கூட்டுக் குடும்பம்???????

  கீதா

  பதிலளிநீக்கு
 27. அதிரா இப்போதெல்லாம் ஆண் வீட்டில் கண்டிஷன்ஸ் போடுவதில்லை.....அதாவது சேர்ந்து இருக்கணும்னு.....அது போல பையன்கல் இங்கு இருந்தாத்தானே....இதிலும் வெளிநாட்டில் இருக்கும் பெண்கள் கூட ஒரு சிலர் தங்கள் மாமியார் வருவதை விரும்புவதில்லை....

  மாமியார் என்பவர் நல்லபடியாக இருந்தாலே பல வீடுகளில் ஏற்பதில்லை....பெண்களும் கொஞ்சம் விட்டுக் கொடுத்தல் வேண்டும்....ஓவர் எக்ஸ்பெக்டேஷன்ஸ் கூடாது...

  என் கருத்து பெண்களே பெண்களுக்கு எதிரி....

  கீதா

  பதிலளிநீக்கு
 28. நீங்கள் இப்போ சொல்வது உண்மைதான் கீதா, அதுக்குக் காரணம், பெண்களை அடிமையாக்குகிறார்கள் எனும் கருத்து பல காலமாக இருந்து வந்தமையாலும் பெண் சிசுக்கொலை இப்படிப் பல பிரச்சனைகளாலும்.. பெண்களுக்குச் சாதமாகப் பல சட்டங்களைக் கொண்டு வந்தார்கள்...

  அதைச் சாட்டாக வைத்து, பெண்கள் பொயிங்கத் தொடங்கியிருக்கிறார்கள்... இப்போ நிலைமை தலைகீழாகிக் கொண்டே போகிறது என அறிகிறேன்.. தொட்டதுக்கெல்லாம் கணவரைப் பொலிசில் புகார் பண்ணி உள்ளே தள்ளுகிறார்கள்..

  சமீபத்தில்கூட இந்தியா ருடே யில் படிச்சேன்... கொதி எண்ணெய் ஊற்றினார் மதுரைப் பெண் கணவருக்கு என, ஆனா அப்பெண் விடுதலையாகி இருக்கிறாராமே.. பொலிஸ் உள்ளே வைக்கவில்லையாமே.... அப்போ இதிலிருந்து என்ன தெரிகிறது, அதிகம் பெண்களுக்கு சப்போர்ட்டாக இப்போ அனைத்தும் இயங்குவதால்.. நிலைமை மோசமாகிக் கொண்டு போகிறது.

  கீதாக்காவாஆஆஆஆஆ .. அவதான் சீதைக்கே எனமி ஆச்சே அவ்வ்வ்வ்வ்வ்வ்:))

  பதிலளிநீக்கு
 29. மற்றொரு கருத்தும் சொல்வேன் அதிரா...பெண் குழந்தைகள் மட்டும் உள்ள பெற்றோர் உள்ளனர் இல்லையா...அப்படியான பெண்கள் திருமணமாகிப் போகும் போது பெற்றோர் வருவார் எனச் சொல்லி பையனிடமே என் பெற்றோரும் வருவார்கள் நம்முடன் தங்குவார்களெ என்று....அதையும் கண்டிப்பாக ஆண் வீட்டார் ஏற்க வேண்டும்....

  .இருகுடும்பத்தாரின் புரிதலில்தான் இருக்கிறது இல்லையா...ஆண் பெண் புரிதலிலும் தான் இருக்கிறது...கூட்டுக்குடும்பமும், தனிக் குடித்தனும்...

  கீதா

  பதிலளிநீக்கு
 30. இந்தக் கூட்டுக் குடும்ப விஷயத்திலே ராஜஸ்தான், குஜராத் காரங்களை யாரும் மிஞ்ச முடியாது. எனக்குத் தெரிந்து பலரும் இன்னமும் கூட்டுக் குடும்பம் தான். இளைஞர்கள் படிப்பு, வேலை எனத் தனியாகப் போனவர்களைத் தவிர்த்து மற்றவர் குடும்பம் பிரியாமல் இருக்கவே விரும்புகின்றனர். இன்னும் சொல்லப் போனால் பெரியவங்களைப் பார்த்தால் கீழே விழுந்து காலைத் தொட்டு நமஸ்கரிக்கும் வழக்கமும் வட இந்தியரிடையே இன்னமும் மாறவில்லை. முன்னெல்லாம் வெளி ஊரிலிருந்து ஊருக்கு வந்தால் உடனே வீட்டுப் பெரியவங்களை நமஸ்காரம் பண்ணச் சொல்லுவாங்க! இப்போல்லாம் அப்படிச் சொன்னால் சிரிப்பாங்க! :)

  பதிலளிநீக்கு
 31. ஆனா பெண் பிள்ளைகளே ரூல்ஸ் போட்டு திருமணம் செய்யும் இடங்களில்.. கஸ்டம்தான்.. வளர்ப்பு அப்படி என்றுகூட எடுக்கலாம்.. நல்ல வளர்ப்பில் இருக்கும் ஒரு பெண்பிள்ளை இப்படி எல்லாம் பேச மாட்டார்ர். கூட்டுக் குடும்பத்தை விரும்பும் பெண்களும் இருக்கிறர்கள் கீதா.

  என்னைக் கேட்டால், மாமா மாமியுடன் இருக்க மீ ரெடீஈஈஈஈ ஆனா கணவரின் சகோதரங்களும் சேர்ந்து இருப்பதாயின்.. ஸ்ரிக்லி நோஓஓஓஓஓஒ:)) ஹா ஹா ஹா:))..

  பெண்ணுக்கு பெண்ணே எதிரி அது கரீட்டு...

  ஒரு கவிதை நினைவு வருகிறது.. ..

  அன்று பல லட்சங்கள் வாங்கித்
  திருமணம் முடித்தவர்
  இன்று பல மேடைகளில்
  ஏறி முழங்குகிறார்
  வரதட்சணையை ஒழிப்போம் என
  காரணம் அவர்
  மூன்று பெண்களின் தந்தையாம்..

  அவசரமாக இடை வெளியில் ஓடி வந்து ரைப் பண்ணிச் செல்கிறேன்.. தவறுகள் இருக்கலாம்..

  பதிலளிநீக்கு
 32. அதைச் சாட்டாக வைத்து, பெண்கள் பொயிங்கத் தொடங்கியிருக்கிறார்கள்... இப்போ நிலைமை தலைகீழாகிக் கொண்டே போகிறது என அறிகிறேன்.. தொட்டதுக்கெல்லாம் கணவரைப் பொலிசில் புகார் பண்ணி உள்ளே தள்ளுகிறார்கள்..// ஹையோ அதை ஏன் கேட்கிறீர்கள் அதிரா.....தங்களுக்கானச் சட்டங்களை ரொமப்வே அட்வாண்டேஜ் எடுக்கிறார்கள் பெண்கள்....

  கீதா

  பதிலளிநீக்கு
 33. இங்கே எங்க குடியிருப்பில் எங்களோட தளத்திலேயே ஒரு குடும்பம் இன்னமும் கூட்டுக் குடும்பம் தான். அவங்களுக்குத் திருவானைக்காவிலே பூர்விக வீடு. அதை அண்ணன், தம்பி மூன்று பேர் பிரித்துக் கொண்டதில் எல்லோருடைய பிள்ளைகள், பெண்கள் எல்லோருக்கும் ஒவ்வொரு ஃப்ளாட் கிடைத்தது. அனைவரும் அந்தக் குடியிருப்பிலேயே ஒருவருக்கொருவர் இன்னமும் தொடர்பு வைத்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்கின்றனர். அதே போல் சென்னையில் மாம்பலத்திலும் எங்க பெண்ணின் புக்ககத்து உறவினர் ஒருவர் இப்படித் தான் பூர்விக வீட்டைப் பிரித்துக் கொண்டு அண்ணன், தம்பி, அக்கா, தங்கைகளுடன் சந்தோஷமாக வாழ்கின்றார். அதே இன்னும் சிலர் அநாவசியமாகச் சண்டை போட்டுக் கொண்டு ஒத்துப் போகாமல் பிரிந்ததும் உண்டு. அதையும் பார்க்கிறேன். இதையும் பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 34. கவிதை நலலருக்கே அதிரா...ஒரு சிலர் அப்படித்தான் ஹிப்போக்ரிட்ஸ் இருக்காங்க...

  கீதா

  பதிலளிநீக்கு
 35. கீதாக்காவாஆஆஆஆஆ .. அவதான் சீதைக்கே எனமி ஆச்சே அவ்வ்வ்வ்வ்வ்வ்:))/// க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். நான் எங்கே சீதைக்கு எனிமி? :))) அப்புறமாக் காவிரியில் குதிக்க வேண்டியது தான்! நல்ல மாமியாரைக் கூட இந்தக் காலப் பெண்கள் விரும்புவதில்லை என்பது முழு உண்மை!

  பதிலளிநீக்கு
 36. //என்னைக் கேட்டால், மாமா மாமியுடன் இருக்க மீ ரெடீஈஈஈஈ ஆனா கணவரின் சகோதரங்களும் சேர்ந்து இருப்பதாயின்.. ஸ்ரிக்லி நோஓஓஓஓஓஒ:)) ஹா ஹா ஹா:))..//

  இந்த விஷயத்தில் எனக்கு நிறைய அனுபவம் இருப்பதால் நான் கம்பபாரதி,மாஸ்டர் செஃப், கவிப்புயல்,மியாவ் அதிராவைக் கன்னா&பின்னாவென ஆதரிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 37. ஆண் குழந்தை இல்லாத பெற்றோர் பெண்ணுடன் தங்குவது சரிதான்! ஆனால் அவங்க பெண்ணின் குடும்ப வாழ்க்கையில் தலையிடக் கூடாது! பெண்ணை அநாவசியமாகப் புக்ககத்தினருக்கு எதிராகத் தூண்டி விடக் கூடாது! பெண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் அபிப்பிராய பேதத்தினால் சண்டை வந்தால் இவங்க தலையிடக் கூடாது. அவங்களே பேசித் தீர்த்துக்கணும் அதான் சரி!

  பதிலளிநீக்கு
 38. கீதாக்க்காஆஆஆஆ இப்பவும் பலர் கூட்டுக் குடும்பமாக இருக்கிறார்கள்தான்ன்.. பார்ப்பதற்கு பளபள என இருக்கும் கத்தரிக்காய் போல தெரியும் வெளியே.. ஆனா அவ்வீட்டுப் பெண்களைப் பேட்டி எடுத்தால் மட்டுமே உள்ளே எவ்வளவு புழுக்குத்தல் இருக்குதென தெரியும்:)).. கூட்டுக் குடும்பமாக இருப்பது பெரிய விசயமில்லை ஆனா அதில் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்பதே முக்கியம்:))

  பதிலளிநீக்கு
 39. இன்றைய சூழலில் கூட்டுக் குடும்பம் என்பது சாத்தியமில்லாத ஒன்றுதான்... வேலை, குழந்தைகள் படிப்பு என ஆளாளுக்கு ஒரு திசையில் இருக்கும் போது கூட்டுக்குடும்ப வாழ்க்கை எப்படித் தொடரும். கிராமங்களில் கூட மெல்ல மெல்ல கூட்டுக்குடும்பங்கள் அழிந்து வருகின்றன.

  திருமணத்துக்குப் பின் அவரவர் தனித்தனியே வசிக்க ஆரம்பித்து நல்லது, கெட்டதுகளில் மட்டுமே ஒன்றாய் கலந்து கொள்வதைத்தான் இப்போது கிராமங்களில் பார்க்க முடிகிறது.

  சண்டையில்லாமல் தனித்தனி குடும்பங்களாய் இருந்து பார்க்கும் இடங்களில் மகிழ்வோடும் அன்போடும் பேசினாலே போதும் என்பதாய்த்தான் இன்றைய உறவு நிலை இருக்கிறது.

  நாங்கள் நால்வரும் தனித்தனியாய்த்தான் இருக்கிறோம்.. சொத்துக்கள் பிரிக்கப்படவில்லை... நல்லது கெட்டதில் ஒன்றிணைந்து கலந்து கொள்கிறோம். இதுவே போதுமானதாய் இருக்கிறது நிறைவான அன்பிற்கு.

  இனி வரும் காலங்களில் கூட்டுக் குடித்தனம் என்பது இருக்க வாய்ப்பில்லை... எங்கேனும் ஒன்றிரண்டு இருக்கலாம்...

  பதிலளிநீக்கு

 40. அதிராவின் முதல் கமெண்டில் கூட்டுக் குடும்ப முறையில் உள்ள நெகட்டிவ்களை மட்டுமே சொல்லி சென்று இருக்கிறார்.... நாங்கள் கூட்டு குடும்ப முறையில் ஏற்படும் நன்மைகளை சொல்லி இருக்கிறோம்.... இந்த கால மனநிலையில் உள்ளவர்களுக்கு கூட்டுகுடும்ப முறை சாத்தியமில்லை..காரணம் நாம் குழந்தைகளை அப்படி வாழ சொல்லிக் கொடுக்காமல் செல்ஃபிஷாக வாழ அல்லவா கற்றுக் கொடுக்கிறோம்..அப்படி இருக்கும் போது கூட்டுக் குடும்ப முறை ஒத்துவராது...


  இங்கே சொன்னவங்க இந்த காலப் பெண்கள் பையன் வீட்டை அனுசரித்து போகமால் தன் பெற்றோருடன் வாழ விரும்புவதாக சொல்லி இருக்கிறீர்கள் அப்படி அந்த பெண்கள் சொல்லுவதற்கு காரணம் அவ்ர்களை வளர்த்த பெற்றோர்கள்தான் காரணம்

  பதிலளிநீக்கு
 41. இங்கே கூட்டுக் குடும்ப முறையை பற்றி பேசும் போது பெற்றோர்களுடன் சகோதர சகோதரிகளுடன் வாழுவதை மட்டுமே பேசுகிறோம்... ஆனால் இரண்டு மனைவி இரண்டு குடும்பங்கள் சேர்ந்து வாழ்வதை பற்றி பேசவில்லை... சரி சரி இதைப்பற்றி பேசினால் உனக்கு என்ன இரண்டு பெண்டாடியா என்று கேளிவி கேட்டு என் குடும்பத்தில் அதிரா குழப்பதை உண்டாக்கிவிடுவார் நான் அப்பாவி ஒரு பெண்டாட்டிகிட்டே மாட்டிக்கிட்டு தவிக்கும் போது அடுத்தற்கு ஆசைப்பட முடியுமா> இருந்தாலும் நய்ன் தாரா மேலே ஆசையாகத்தான் இருக்கு ஆனால் அந்த பெண் பார்க்க அழகாகத்தான் இருக்கும் ஆனால் எடுத்து எறிந்து பேசும் பெண்ணாம். என் மனைவியாவது பூரிக்கட்டையால்தான் அடிக்கிறாள் ஆனால் நயன் எடுத்து எறிந்து பேசும் பெண்ணாக இருப்பதால் எனையையே தூக்கி எறிந்து பேசினால் நான் என்னாவது என்பதால் இப்படிக்கா உடகார்ந்துகிறேன்... எனக்கு எதற்கு இந்த 16 வயசில் இப்படிப்பட்ட வம்பு

  பதிலளிநீக்கு

 42. இந்தமாதிரி ’ஹாட்-வம்பு’ சப்ஜெக்ட்டை க்ரிக்கெட் மேட்ச் நாளில் வைத்திருக்கக்கூடாது!

  க்ரிக்கெட்டில் நாள் போய்க்கொண்டிருப்பதால் ரோஹித் ஷர்மாவையும் பின்னூட்டத்தையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டிருந்தேன். இதுவரைப் பார்த்ததில் ஒரு உருப்படியான கருத்து வந்துசேர்ந்திருக்கிறது - கீதாவிடமிருந்து: //.. என் கருத்து பெண்களே பெண்களுக்கு எதிரி....// சத்யத்திலும் சத்யம். மாமியார் மாமிகளும், நாட்டுபெண்களும், நாத்தனார் இத்யாதி பெண் உறவுகளும் இதனைப் புரிந்துகொண்டால், குடும்பத்தில் கலாட்டாக்கள், சிக்கல்கள் வெகுவாய்க்குறையும்.

  அந்தக்கால சமூகசூழல் கூட்டுக்குடும்பத்துக்கு ஏதுவாக இருந்தது. உறவிலே பெண்ணெடுத்தல், பெண்கள் வீட்டுக்குள்ளே இருத்தல், ஆண்கள் அக்கம்பக்கத்திலே வேலை தேடிக்கொள்ளல் எல்லாம் அற்புதம். அந்த அமைப்பிலும் சின்னச்சின்ன சண்டை சச்சரவுகள் இருந்தாலும், பொதுவாக உறவுகளும் வளர்ந்தன. குழந்தைகளும் வளர்ந்தன நன்றாகவே. பெண்-ஆண் இருபாலாருக்கும் அனுசரித்துப்போதல் என்றால் என்ன என்பது சிறுவயதிலிருந்தே விளங்கிவிட்டிருந்தது. குடும்பத்தில் அமைதி, அன்பு, பெரியவர்கள்மீது அக்கறை, மரியாதை எல்லாமிருந்தன.

  இப்போது நிலைமை என்ன என்பதை கீதாவும், அதிராவும் போட்டிபோட்டு விளக்கியிருக்கிறார்கள். வேலைக்காக வெளியூர், வெளிமாநிலம் என்பதோடு நில்லாமல், அடிக்கடி கொல்லைக்குப் போவதுபோல் அமெரிக்காவில், கனடாவில், யூகே-யில் எனப் போய் உட்கார்ந்துவிடுகிறார்கள். பையன், பெண் வெளிநாட்டிலே என்றால் வருங்கால மாமியார், மாமனார்களின் கால்கள் தரையிலே படுவதில்லை இங்கே. கல்யாணத்துக்கு நிற்கும் பெண்களும் உயர்படிப்பில் கவனம் செலுத்தி, வேலைபார்த்துக்கொண்டு சாதித்துமிருப்பதால், கை-பை நிறைய சம்பாதிப்பதால், ஆண்களையே ஒரு அலட்சியமாக தூரத்திலிருந்து பார்த்துவிட்டுப் போய்விடுகிறார்கள். படிப்பு, வேலை என்று கவனத்தை முடுக்கிவிட்ட அவர்களின் பெற்றோர், குடும்ப உறவுகளின் முக்கியம்பற்றி, பெரியவர்கள்பற்றி, குடும்பங்களில் அனுசரித்துப்போதல்பற்றியெல்லாம் பெரும்பாலும் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க மறந்துவிட்டிருக்கிறார்கள். அவர்கள் படித்தார்கள், வேலைக்குப்போனார்கள். இவர்கள் டிவி-யில் வில்லி-வில்லன் வேலைகளை விடாது பார்த்துத் தங்களைத் தயாராக்கிக்கொண்டிருந்தார்கள். சமூக வாழ்வில், மாறிவரும் காலம் செய்த கோலம்.. இப்படி எல்லாமே இசகுபிசகாக ஆகிவிட்டிருக்கையில், கூட்டுக்குடும்பம் என்பது ‘அது ஒரு கனாக்காலம்’ என்பதுபோலன்றோ ?

  தனிக்குடும்பமோ, கூட்டுக்குடும்பமோ சம்பந்தப்பட்டவர்கள் மனப்பக்குவம் அடைந்தவர்களாயின் ஏதோ கொஞ்சம் அமைதி இருக்கும். இல்லையென்றால்..

  ரொம்ப நீள்கிறது..நிறுத்திவிடுகிறேன்.

  பதிலளிநீக்கு
 43. நிறைய பேரின் பின்னூட்டம் படிக்கலை. கண்ணுல கீதா ரங்கனின் கீழே உள்ள வரிகள் அகப்பட்டது.

  "காலைத் தொட்டு நமஸ்கரிக்கும் வழக்கமும் வட இந்தியரிடையே"

  என்னுடைய நண்பனின் அம்மா (நமக்குப் புரியவேண்டும் என்பதற்காகச் சொல்லுகிறேன், அவர் கோயமுத்தூர் செட்டியார்) துபாய்க்கு வந்தபோது, நாங்கள் வெளியில் நடந்துகொண்டிருந்தோம். நண்பனின் அலுவலகத்தில் வேலை பார்க்கும் நண்பர் (சிந்தி இனம்) எதேச்சையாக வழியில் பார்த்தார். நண்பன், அவரிடம், 'என் அம்மா' என்று அறிமுகம் செய்தபோது (ரோடில்), உடனே அவர் குனிந்து அவனுடைய அம்மாவின் காலைத் தொட்டு வணங்கினார்.

  நான் உண்மைய சிலிர்த்துப்போயிட்டேன். நான் வீட்டில் காலில் விழுந்து வணங்காமல் கிளம்பமாட்டேன் (எந்தப் பெரியவர் வீட்டுக்குச் சென்றாலும், conditions applied). பொது இடத்தில் வணக்கத்தோடு சரி. ஆனால் இந்த காலைத் தொட்டு வணங்கும் குணம் வட இந்தியரிடையே பரவலாக இருக்கிறது.

  சுகா (இணையத்தில் எழுதுபவர்) அவர்கள் ஜெயகாந்தனைச் சந்தித்தபோது, அவர் காலைத் தொட்டுக் கும்பிட்டேன், அதற்கு ஜெ.கே, இது தமிழரின் குணம், பெரியோரைப் பார்த்து காலில் விழுந்து வணங்குவது, என்று சொன்னார் என எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது.

  பதிலளிநீக்கு
 44. //கனக்க எல்லாம் வாணாம்.. அஞ்சுவை ஒரு நாளைக்கு மட்டும், கூட்டுக் குடும்பத்தில் இருந்து சந்தோசமாக வெளில வரச்சொல்லுங்கோ:)).. அப்பூடி நடந்தால்ல்ல்..

  எனக்கு, ஆயிரம் பேர் முன்னிலையில் அளிக்கப்பட்ட இந்த “கம்பபாரதி” ப்பட்டத்தை:).. இப்பவே தேம்ஸ்ல வீசிடுறேன்ன்ன்.. எனக்கூறி என் பேனாவை உடைக்கிறேன்ன்ன்ன்ன்ன்:)))//


  கர்ர்ர்ர்ர் இதுக்காகவே நான் இருந்து பார்க்கலாமான்னு தோணுது :)

  பதிலளிநீக்கு
 45. நெல்லை... சுகா ஒரு நல்ல எழுத்தாளர். திரைத்துறையில் கால் பதித்திருக்கிறார். நல்ல நூல்கள் எழுதி இருக்கிறார். இணையத்தில் மட்டும் எழுதுபவர் இல்லை. நெல்லை கண்ணன் அவர்களின் மகன். உங்கள் ஊர்க்காரர். உங்களுக்குத் தெரிந்திருக்கும்!

  பதிலளிநீக்கு
 46. கூட்டுக்குடும்பமோ, அவியல் குடும்பமோ இனி ஒத்துவராது! கீதா அக்கா சொல்லி இருப்பது போல, நானும் சில இடங்களில் பார்த்திருப்பது போல, ஒரு அபார்ட்மெண்டில் அடுத்தடுத்த ஃபிளாட்களிலோ, ஒரு காம்பவுண்டுக்குள் தனித்தனி வீடுகளிலோ இருக்கும் குடும்பங்களை பார்த்திருக்கிறேன். அதுவே பெரிது.

  பதிலளிநீக்கு
 47. கீதா அக்கா அண்ட் அதிராவோடு நான் அப்படியே ஒத்துப்போகிறேன் :)
  என்னால் மாமனார் மாமியாருடன் கூட்டு குடும்பமாக இருக்க முடியும் ஆனால் மற்ற இன்லாஸ் கணவரின் சகோதரர் மனைவியர் உடன் இருக்க சான்ஸே கிடையாதது :)

  பதிலளிநீக்கு
 48. ஆனால் இங்கே பஞ்சாபியர் வட இந்தியர் இந்த காலத்திலும் வரிசையாக உள்ள மிட் டெரஸ் வீடுகள் அப்புறம் ட்வின் ஹவுசஸ் இவற்றை வாங்கி குடியிருக்கிறாரகள் ..

  பதிலளிநீக்கு
 49. ஒரே அபார்ட்மெண்ட் பக்கத்து வீடுகள் இருந்தால் ஓகே அவசரத்துக்கு உதவிக்கு போகலாம் வரலாம் .மற்றபடி தனிக்குடித்தனம் .அடிக்கடி கெட் டு கெதர் இப்படி வைத்து சந்தித்துக்கொள்ளலாம் .

  பதிலளிநீக்கு
 50. என் விருப்பங்களை யார் மீதும் திணித்ததில்லை அது போல பிறருக்காக எனது சொந்த விஷயங்களை மாற்றிக்கொண்டதில்லை .
  கூட்டுக்குடும்பத்தில் இதெல்லாம் சாத்தியமாகுமா ?? உணவு விஷயத்திலேயே நான் பெயில் ஆகிடுவேன் முதலில் கூட்டுக்குடும்பமாக இருந்தால் :)

  பதிலளிநீக்கு
 51. @ஸ்ரீராம் - சுஹா இணையம் மற்ற விஷயங்கள் தெரியும். 'தாயார் சன்னிதி' இன்னும் வாங்கலை. நான் பாளையங்கோட்டை. அவர் நெல்லை டவுன். ஜங்க்ஷன்ல என் அம்மாவின் உறவினர்கள். டவுனுக்கு படம் பார்க்க எப்போவாவது போவேன்.

  @அதிரா - சிலர் உங்களைப் பார்த்து COPY CAT வேலை பண்றாங்க. அதைப் பண்ணவேண்டாம்னு நீங்கதான் எச்சரிக்கை செய்யணும். அது யாரு, CRAFTSஆ என்றெல்லாம் நான் சொல்லமாட்டேன். யார் வேணும்னாலும் அல்வா செய்து 'திருனெவேலி அல்வா'ன்னு லேபிள் போட்டுக்கமுடியுமா?

  பதிலளிநீக்கு
 52. OMG!Where is my comment? et me repost it

  முன்பெல்லாம் கூட்டு குடித்தனம் என்பது பெற்றோர்கள்,அவர்களின் பிள்ளைகள், மருமகள்கள், பேரன் பேத்திகள் என்று எல்லோரும் சேர்ந்து வாழ்வதைத்தான் குறித்தது. சில குடும்பங்களில் பெண்களின் குடும்பமும் இதில் சேரும். இப்பொழுதோ கணவன் மனைவியோடு மாமனார் மாமியார் சேர்ந்து இருந்தாலே அதை கூட்டு குடும்பம் என்கிறார்கள்.

  பெண்ணுக்கு வரன் பார்க்கும் பொழுதே, பையனின் பெற்றோரிடமே நீங்களும் இவர்களோடு சேர்ந்துதான் இருப்பீர்களா என்று கேட்கிறார்கள். திருமண பந்தம் என்பது கணவனோடு மட்டும்தான் என்றே பெண் குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள்.

  இளையவர்கள் இப்படி என்றால் மூத்தவர்கள்? இப்போது 50+இல் இருக்கும் பெரும்பான்மையோர் கணவன்,மனைவி இரண்டு பெரும் வேலைக்குச் சென்றவர்கள். அதுவும் அப்போதெல்லாம் இப்போது போல வசதிகள் கிடையாது. பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள், குழந்தைகள் இவர்களுக்காக தங்கள் சொந்த விருப்பங்களை தியாகம் செய்து மேலே வந்திருப்பவர்கள். ஓய்வு பெற்ற பிறகாவது தங்களுக்காக வாழலாம் என்று நினைக்கும் பொழுது, மீண்டும் பேரன் பேத்திக்கு டயாபர் மாற்றி, குளிப்பாட்டி, சோறு ஊட்டி, என்று இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்க வேண்டுமா என்று நினைக்கிறார்கள்.

  எல்லாவற்றையும் விட மிக முக்கியமான விஷயம் கூட்டு குடித்தனம் நடத்த குடும்பத்தில் குறைந்த பட்சம் இரண்டு மூன்று குழந்தைகளாவது வேண்டாமா? இப்போதெல்லாம் யார் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்கிறார்கள்?

  பதிலளிநீக்கு
 53. கூட்டுக் குடும்பம் என்றால் பெண்களையும் சேர்த்துதானே கூட்டுக் குடும்பத்துக்கே முதலும் கடைசியுமான எதிரிகள் பெண்களே அண்ணன் தம்பிகள் ஒற்றுமையாக இருப்பது இந்தப் பெண்டாட்டிகளுக்குப் பிடிக்காதே கூட்டுக் குடும்பம் என்பதெல்லாம் இக்காலத்துக்கு ஒத்து வராது

  பதிலளிநீக்கு
 54. நம்ம ஏரியாவில்

  கீதா ரெங்கன் எழுதிய கதை. க க க போ ஐந்தாம் தீம்; இரண்டாம் கதை.

  https://engalcreations.blogspot.in/2017/12/blog-post_13.html​

  பதிலளிநீக்கு
 55. நெல்லை தமிழன் அவருடன் பணியாற்றிய பாகிஸ்தானியரைப் பற்றி எழுதியிருக்கிறார். அந்த மாதிரி குடும்பங்கள் நம் நாட்டிலும் இருந்திருக்கின்றன. நன்றாக சம்பாதிக்கும் ஒரு மகன், அதிகம் சம்பாதிக்காத இன்னொரு மகன் இரண்டு குடும்பங்களும் சேர்ந்து வசிக்கும் பொழுது இரண்டாமவர் குடும்பம் ஒரு புழுக்கத்தோடும், பொறாமையோடும்தான் இருக்கும்.

  பதிலளிநீக்கு
 56. ஹஹ்ஹா :) நெல்லை தமிழன் ..கொஞ்சம் என் இங்கிலிஷ் பிளக்க எட்டி பாருங்க :) அந்த பிளாக் பெரும் பேப்பர் க்ராப்ட்ஸ் தான் எதோ ஒரு ஆசையில பிளாக் பேரையும் சேர்த்து போட்டுட்டேன் கனம் கோர்ட்டரை அவர்களே :) மற்றபடி கம்ப பாரதிலாம் நான் நினைச்சும் பார்க்கமுடியாதது :)

  பதிலளிநீக்கு
 57. @பானுமதி அக்கா ..சரியா சொன்னிங்க ..பணத்தை விடுங்க ஒரு சகோதரன் தனது மனைவிக்கு தரும் மரியாதை கூட சில இன்லாசுக்கு பிடிப்பதில்லை ..கோபம் பொறாமை எல்லாம் மனிதரில் இயல்பான குணங்கள் அவற்றை ஊற்றி வளர்க்க காரணமாக்கிடக்கூடாதது ஆகவே தனிக்குடித்தனம் தானே பெஸ்ட்

  பதிலளிநீக்கு
 58. ஆவ் !!டார்வின் finches பற்றிலாம் எழுதின என் கமெண்டை காணோம் கர்ர்ர்ர்

  பதிலளிநீக்கு
 59. ஹலோ ஹலோ நான் ரொம்ப லேட்டாகிட்டேன் போல இருப்பினும் ஒரு நம்பிக்கை.. கிரிக்கெட் மச்சில கூட இடைவேளை எடுத்து கொமெண்ட்ஸ் படிப்போர் இருக்கையில்:)[நான் ஏ.அண்ணனைச் சொல்லல்லே:)] .. கடசியாப் போட்டாலும் என் கொமெண்ட்டை எல்லோரும் படிப்பினம்தானே எனும் நம்பிகையில் எழுதுறேன்..

  மாமி மாமா வீட்டில கூட்டுக்குடும்பமாயினும் இல்ல அப்பா அம்மா வோடு கூட்டுக் குடும்பமாயினும்.. இரு இடத்திலும் சொகுசா இருப்பது ஆண்கள்தான்:).. அதனாலதான் ஆண்கள் எல்லோருமே கூட்டுக்குடும்பத்தை விரும்புபவர்களாக இருக்கிறார்கள்.. இல்லை தனிக்குடும்பத்தில் இருந்தாலும்.. அவர்கள் இப்ப கூட கூட்டுக்குடும்பத்துள் வந்து வாழ ரெடீஈஈஈஈஈ:)).. ஏன் தெரியுமோ?:))...

  மாமா மாமி வீட்டில இருந்தாலும் சொகுசு வாழ்க்கைதான், அப்பா அம்மாவோடு இருந்தாலும் அவர்களுக்கு சொகுசு வாழ்க்கைதான்.. ஆனா தனிக் குடித்தனம் எனில்.. மனைவி எந்நேரமும் தேடிக்கொண்டிருப்பா... 5 மணிக்கு வேர்க் முடிஞ்சால் 5.15 க்கு வீட்டில நிக்காட்டில் 15 கோல்ஸ் வந்திடும்...

  ஆனா கூட்டுக் குடும்பம் எனில் ஃபிரெண்ட்ஸ் உடன் ஊர் சுத்தினாலும்.. மனைவி அடிக்கடி கேட்க முடியாது, எதுக்கு இப்போ தொந்தரவு பண்றாய்? வந்திடுவார்தானே என கூட இருப்போரும் சொல்வார்கள்.. அத்தோடு மனைவியின் 100 வீத ஃபோகஸ் உம் கணவன் மேலயே இருப்பதும் கடினம்:))... அப்போ கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் ஆண்களுக்கு ஜாலியோ ஜாலிதானே:))...

  எங்காவது கூட்டிப்போங்கோ எண்டாலும்.. அம்மாவுடன் போ... தங்கையுடன் போ அண்ணியுடன் போ எனக்கு வேலையிருக்கு என எஸ்கேப் ஆகிடலாமெல்லோ?:)).. இப்போ இதெல்லாம் புரிஞ்சதாலதான் நாங்க உசாராகிட்டோமாக்கும்..க்கும்..க்கும்..:)).. ஹா ஹா ஹா..

  பதிலளிநீக்கு
 60. நெல்லைத் தமிழன் said...
  //@அதிரா - சிலர் உங்களைப் பார்த்து COPY CAT வேலை பண்றாங்க. அதைப் பண்ணவேண்டாம்னு நீங்கதான் எச்சரிக்கை செய்யணும். அது யாரு, CRAFTSஆ என்றெல்லாம் நான் சொல்லமாட்டேன். யார் வேணும்னாலும் அல்வா செய்து 'திருனெவேலி அல்வா'ன்னு லேபிள் போட்டுக்கமுடியுமா?//

  ஹா ஹா ஹா நானும் இப்போதான் பார்த்து அப்பூடியே ஷாக்ட் ஆகிட்டேன்ன்ன்ன்:)), ஹா ஹா ஹா ரொம்ப மிரட்டினா மிரண்டு போயிடுவா:) அதனால வாணாம் விட்டிடலாம்:))... ஆவ்வ்வ்வ் அதிராவுக்குத் தங்க:) மனசு எனச் சொல்வது கேய்க்குது:)) இருக்கட்டும் இருக்கட்டும் மீக்கு புகழ்ச்சி புய்க்காதூஊஊஊ:)).. ஹையோ அஞ்சு இப்போ எதுக்குக் கலைக்கிறா?:) அப்பூடி என்ன நான் தப்பாச் சொல்லிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்??:)).

  பதிலளிநீக்கு
 61. ///Avargal Unmaigal said...

  அதிராவின் முதல் கமெண்டில் கூட்டுக் குடும்ப முறையில் உள்ள நெகட்டிவ்களை மட்டுமே சொல்லி சென்று இருக்கிறார்.... நாங்கள் கூட்டு குடும்ப முறையில் ஏற்படும் நன்மைகளை சொல்லி இருக்கிறோம்....///

  ஹலோ ட்றுத்:).. என், மேல் கொமெண்ட்டிலை சொல்லியிருப்பதும் இதற்கான பதில்தான்.. அதாவது நெகடிவ்வான விசயங்கள் எல்லாம் நடப்பது பெண்களுக்கு:).... நன்மைகள் நடப்பது ஆண்களுக்கு:))... புரிய மாட்டேன் என்கிறதே உங்களுக்கு:).. ஸ்ஸ்ஸ்ஸ் நல்லவேளை இங்கின இப்போ ஆருமே இல்லை ஜாமீஈஈஈ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்:))..

  பதிலளிநீக்கு
 62. Geetha Sambasivam said...
  க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். நான் எங்கே சீதைக்கு எனிமி? :))) அப்புறமாக் காவிரியில் குதிக்க வேண்டியது தான்!///

  ஹா ஹா ஹா அப்போ காவிரியில் குதிச்சிடாதீங்க:) அடுத்த செவ்வாய், நீங்க ராமனைத்திட்டோணும் அதை நான் கண்குளிரப்பார்க்கோணும் ஓகே?:)) ஹா ஹா ஹா:))..

  //இந்த விஷயத்தில் எனக்கு நிறைய அனுபவம் இருப்பதால் நான் கம்பபாரதி,மாஸ்டர் செஃப், கவிப்புயல்,மியாவ் அதிராவைக் கன்னா&பின்னாவென ஆதரிக்கிறேன்.///

  ஹா ஹா ஹா ஹை ஃபைவ்:))

  பதிலளிநீக்கு
 63. கண்ணுல கீதா ரங்கனின் கீழே உள்ள வரிகள் அகப்பட்டது.

  "காலைத் தொட்டு நமஸ்கரிக்கும் வழக்கமும் வட இந்தியரிடையே"

  //காலைத் தொட்டு நமஸ்கரிக்கும் வழக்கமும் வட இந்தியரிடையே"//

  நெ.த. இது நான் சொன்னது. கீதா ரெங்கன் இல்லை! :))))) வட இந்தியாவில் இன்னமும் பலரும் கூட்டுக் குடும்ப வாழ்க்கையையே விரும்புகின்றனர். அதிரா சொல்வது போல் பெண்கள் பயப்படுவது இல்லை. புகார்கள் கொடுப்பதும் இல்லை. எங்கானும் இருக்கலாம். ரயில் பயணங்களில், வட இந்தியப் பயணங்களில் என பல சமயங்களில் அவர்களிடம் பேசிப் பார்த்திருக்கேன். ஆனால் வருஷத்துக்கு இரண்டு மாதம் அவர்களுடையது. அதாவது கணவன், மனைவி, குழந்தைகள் இணைந்து எங்காவது சுற்றுலா போய் வருவார்கள். அந்த இரு மாதங்களிலும் அவங்களுக்குள்ளே தான்! அம்பத்தூரில் உள்ள நகைக்கடைகள் எல்லாம் ராஜஸ்தானியருடையது. அவங்க இப்போவும் கூட்டுக் குடும்பம் தான். ஒரே வீட்டில் நடுவில் பெரிய கூடம்! தனித் தனி சமையலறை, படுக்கை அறை. மற்றபடி குடும்ப உறுப்பினர்கள் கலந்து பேசுவதெல்லாம் கூடத்தில். அப்பா, அம்மா இருந்தால் அவங்க விரும்பினால் எந்தப் பையர் வீட்டிலாவது சாப்பிடுவாங்க. இல்லைனா சமைச்சுச் சாப்பிடுவாங்க! ஒரு நாளைக்கு ஒரு பிள்ளை வீடு என இருப்பதும் உண்டு. பொது நிர்வாகம் பெரியவராக அப்பாவோ, அல்லது வீட்டின் மூத்த மகனோ பார்த்துக் கொள்கின்றனர். மேலும் வட இந்தியரெல்லாம் ஒரே குழந்தையோடு நிறுத்துவதும் இல்லை.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!