சென்ற வார வம்பு பகுதியில் தனி / கூட்டுக் குடித்தனம் எல்லோருமே அழகாக ஆணித்தரமாக இயல்பாக கருத்துகள் கூறியிருக்கிறார்கள். கீதா ரெங்கன் நிறைய கருத்துகள் கூறியிருக்கிறார்கள்.
அவர்கள் உண்மைகள், நெல்லைத் தமிழன், ஏகாந்தன், கீதா சாம்பசிவம் , பானுமதி வெ, அதிரடி அதிரா, ஏஞ்சலின், பரிவை சே குமார் ...... வாவ் ..... நீளமான பட்டியல் ...... எல்லோருக்கும் நன்றி.
இந்த வார வம்பு கேள்வி:
தேர்தல்களில், குறிப்பாக இடைத் தேர்தல்களில், வோட்டுக்கு நோட்டு / நோட்டுக்கு வோட்டு என்ற மனோபாவம் வந்துள்ளது.
இது ஆரோக்கியமான நிலையா?
தவிர்க்க வேண்டிய நிலை என்றால், எப்படி தவிர்க்கலாம்?
(நான் 1971 முதல், இதுநாள் வரை என் தொகுதியில் நடந்த எல்லா தேர்தலிலும் ஓட்டுப் போட்டுள்ளேன் . எந்த தேர்தலிலும் பணம் வாங்கியது இல்லை. எந்தக் கட்சியும் கொடுத்த எந்த இலவசப் பொருளையும் வாங்கியதில்லை. )
ஓட்டுக்கு பணம் வாங்குபவனைவிட, ஓட்டுப்போடாமல் தேர்தலை புறக்கணிப்பவன் மனிதரில் உயர்ந்தவன்.
பதிலளிநீக்குஓட்டுப்போடாமல் இருப்பது தவறு என்று சொல்பவர்களுக்கு....
நீங்கள் இதுவரை வாழ்வில் அப்பழுக்கின்றி வாழ்ந்து வந்து இருக்கின்றீர்களா ???
இனி காந்திஜி வழி சரியாகாது, நேதாஜி வழியே சரி.
அடிக்கு அடி, உதைக்கு உதை.
ஒன்றும் சொல்வதற்கு இல்லை..
பதிலளிநீக்குஎனக்குத் தெரிந்த யாரிடமிருந்தும் எதையும் இலவசமாக வாங்கப் பிடிக்காது (உணவு முதற்கொண்டு). இதுல தெரியாத அரசியல்வாதிகளிடமிருந்தா?
பதிலளிநீக்குகாரணமில்லாமல் காரியம் இல்லை என்பதைத் தெரியாத ஏழை வாக்காளர்கள் இருக்கும்வரை, இதைத் தவிர்க்கமுடியாது. There is no free lunch in the world.
இங்கே ஶ்ரீரங்கத்தில் ஜெயலலிதா தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தப்போப்புடைவை, வேஷ்டி, பணம் எல்லாம் கொண்டு வந்தாங்க! நாங்க அப்படியே திருப்பி அனுப்பிட்டோம். வாங்காதவங்க வீட்டிலே வெளியே இருந்து தூக்கிப் போடறதாச் சொன்னாங்க. நல்லவேளையா இங்கே அதெல்லாம் செய்யலை! எப்போவுமே எங்களுக்கு யாருக்கு ஓட்டுப் போடணும்னு மனசிலே தோணுதோ அவங்களுக்குத் தான் ஓட்டுப் போட்டிருக்கோம். இலவசம் எதுவும் வாங்கியதில்லை.
பதிலளிநீக்குஎனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் தான் எதிர்பார்ப்பு அதிகம். எந்த வேலைக்கும் எப்போவும் அதிகப் பணம் கேட்பது! ஆட்டோக்காரங்க கேட்கவே வேண்டாம்! இலவசமா எது கிடைக்கும் என எதிர்பார்ப்பது! அதுக்காக அடிச்சுப் பிடிச்சு ஓடி வாங்க வேண்டியது! பார்க்கவே மனதுக்குக் கஷ்டமா இருக்கும்!
பதிலளிநீக்குஆரோக்கியமான நிலைமை கிடையாது. நோட்டுக்கு ஓட்டும் சரி ஓட்டுக்கு நோட்டும் சரி. இதுவரை நாங்களும் நோட்டும் சரி எந்த இலவசப் பொருளும் வாங்கியது இல்லை. திருப்பி அனுப்பிவிடுவோம்.
பதிலளிநீக்குஎங்கெல்லாம் இது போன்ற இலவசங்கள் புழங்குகிறதோ அங்கு நிச்சயமாக ஊழல்கள் அதிகம் என்பது சர்வ நிச்சயம்.
விழிப்புணர்வு இல்லாத மக்கள், எல்லாவற்றிற்கும் இலவசம். அல்லது எல்லாமே ஃப்ரீயாகக் கிடைக்கணும் என்று நினைக்கும் மக்கள் இருக்கும் வரை நாடு உருப்படப் போவதில்லை. உழைககத காசு தங்காது என்று என் பாட்டி அடிக்கடிச் சொல்வார்.
ஆனால் இப்போதெல்லாம் உழைக்காத காசும் கொள்ளைஅடிக்கும் காசும் தான் தங்குது. அப்படி என்றால் அதற்கு என்ன அர்த்தம் ஊழல் என்று அர்த்தம்.
இதை எப்படி நீக்குவது? ஆஹா!!! இந்தக் கேள்விதான் இதுவரை நீங்க கேட்டதிலேயே ரொம்பக் கடினமானக் கேள்வி ஹா ஹா ஹா ஹா....ஒழிய வேண்டும் என்றால் ஸிஸ்டம் ஒழுங்கா இருக்கணுமே...
அந்த ஸிஸ்டமே புரையோடிப் போயிருக்கு...எங்கிருந்து தொடங்குவது??!! எல்லாத்தையும் ஒழிச்சுட்டு ஆதியிலிருந்து தொடங்கணும்..இது நடக்குமா? ஒரு ஹெர்குலியன் டாஸ்க், மில்லியன் டாலருக்கும் மேலான கேள்வியைக் கேட்டுட்டீங்க கௌதம் அண்ணா...
கீதா
C.மானிடம் விடை கிடைக்கலாம்.
நீக்குஇது தவிர்க்கமுடியாதது என்று கூறுமளவிற்கு நம்மை ஆக்கிவிட்டார்கள். வெட்கப்படவேண்டியதே. பிடிக்கவில்லையென்றால் ஒதுங்கிவிடுவதே சரி. இதுவரை நானோ எங்கள் குடும்பத்தினரோ ஓட்டுக்காக பணம் வாங்கியதில்லை. மறுத்துவந்துள்ளோம்.
பதிலளிநீக்குஎன் தகப்பனார் வோட்டு போடச் செல்லும் போது , கட்சிகள் ஏற்பாடு செய்யும் வாகனத்தில் செல்ல மாட்டார். தன்னுடைய சைக்கிளில் சென்றுதான் ஒட்டு போடுவார்.
பதிலளிநீக்குஎனக்கு வோட்டு போடும் வாய்ப்பு நான் ஸ்ரீரங்கத்தில் இருந்த பொழுது கிடைத்தது. அப்பொழுது நாங்கள் குடியிருந்த வீட்டுக்கு பக்கத்து தெருவில்தான் வோட்டுச் சாவடி. நான் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது ஒரு வேட்பாளரின் தொண்டர்கள் என்னை வற்புறுத்தி ரிக்க்ஷாவில் ஏற்றிக் கொண்டு சென்றனர். அவருடைய வண்டியில் வந்து விட்டேனே என்று அவருக்கே வோட்டு போட்டேன். நான் வாக்களித்த வேட்பாளர் வென்றார் என்றாலும், எனக்கு வருத்தம்தான்,ஏனென்றால் நான் வாக்களிக்க விரும்பியது அவர் கிடையாதே.
என்னுடைய நியாய உணர்வை வெளியே சொன்ன பொழுது, எல்லோரும், "அந்த வண்டியில் போனால் என்ன? நீயா போய் அவரிடம் கேட்டாய்? அவர்களாக அந்த வசதியை உனக்களித்தார்கள், அதை அனுபவித்து கொண்டு உனக்கு யாருக்கு வாக்களிக்க வேண்டுமோ அவருக்கு வோட்டு போட வேண்டியதுதானே..?" என்றார்கள். மக்கள் அந்த மன நிலைக்கு வந்து விட்டால் நாம் பணம் கொடுத்தாலும் இவர்கள் ஒட்டு போடுவதில்லை, எனவே கொடுக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வேட்பாளர்கள் வருவார்கள். கில்லர்ஜி சொன்னதை நான் வேறு விதமாக சொல்கிறேன். அயோக்கியர்களை ஏமாற்றுவது தவறு கிடையாது.
ஜனநாயகத்தில் நாம்தான் எஜமானர்கள், ஆள்பவர்கள்,நமக்கு உழைக்க நம்மால் நியமிக்கப்பட்டவர்கள் அவர்களிடம் பணம் வாங்கி விட்டால் நாம் அவர்களுக்கு அடிமை ஆகி விடுவோம் என்பதை உணர்ந்தால், மக்கள் வோட்டுக்கு பணம் வாங்க மாட்டார்கள். இதை மக்களுக்கு உணர்த்த வேண்டியது மீடியாக்களின் கடமை. நம் நாட்டில் நிலவிய எத்தனையோ கொடுமைகள் மீண்டும் மீண்டும் செய்யப்பட்ட பிரச்சாரங்களால் ஒழிக்கப்படவில்லையா?
மக்கள் இலவசங்களையும், நோட்டையும் புறக்கணித்தார்கள் என்றால் பெரிய மாற்றம் வரும். அதுவும் நோட்டு கொடுத்தால் ஓட்டு போட மாட்டோம் என்று!!! மக்கள் செய்வார்களா?
பதிலளிநீக்குநம் மக்கள் இலவசங்களுக்குப் பழகிவிட்டார்கள். மட்டுமல்ல...அரசியலை விடுங்கள் ஒரு ஸாரி வாங்கினால் இன்னொரு ஸாரி ஃப்ரீ அல்லது இந்தக் காப்பி பொடி வாங்கினால் டம்ப்ளர் ஃப்ரீ என்று விளம்பரங்களும் தான் மக்களைப் பாடாய்படுத்துகிறதே...இலவசம் என்றாலே மக்கள் வாயைப் பிளந்து இதில் படித்தவர்களும் அடக்க்ம் ....அப்படி இருக்கும் போது...என்ன மாற்றத்தைக் கொண்டு வர முடியும்?
எனக்கு அடிக்கடி எழும் கேள்வி இது இந்த இலவசம் என்பது வீட்டிலிருந்துதான் தொடங்குதோ என்று.
இத்தனை மார்க் வாங்கு உனக்கு ஒரு கிஃப்ட் கிடைக்கும்...பொம்மை கிடைக்கும்.வாட்ச் கிடைக்கும் மொபைல் கிடைக்கும்...என்று ஊக்கப்படுத்துகிறேன் என்று இப்படியான ஆசைகளை வளர்ப்பது. படிக்க வேண்டும் என்பது அக்குழந்தைக்கு நல்லது என்பதை அன்போடு வலியுறுத்தாமல் குழந்தையை ஊக்குவிப்பதற்காக என்று சொன்னாலும்....இதுவும் ஒரு லஞ்சம் தானோ?!!! அது போலத்தான் நீங்கள் என்னை ஆட்சியில் அமர்த்துங்கள் உங்களுக்கு நாங்கள் இதைத் தருகிறோம் அதைத் தருகிறோம் .. என்பது...ஆட்சிக்கு வந்தால் நல்லது செய்வோம் என்று எந்த நல்லதும் செய்யாதவர்களுக்கு...மக்கள் என்ன அவர்கள் செய்வார்கள் என்ற நம்பிக்கையிலா காசை வாங்கிக் கொண்டு ஓட்டு போடுகிறார்கள்? இல்லையே...
அது போல பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு "கண்ணா நீ எனக்கு இந்த ஹெல்ப் செய்யறியா...என்னால முடியல இன்னிக்கு..செஞ்சியானா.உனக்கு பாக்கெட் பணி தரேன்...அல்லது ஏதாவது வாங்கித்தரேன் என்று கெடுப்பதிலிருந்து தொடங்குகிறதோ என்றும் கூடத் தோன்றும்..குழந்தைகளும் அம்மாவிடம்....அப்பாவிடம்....சரி நான் செய்யறேன் அதுக்கு நீ என்ன தருவ? என்று கேட்பது....இதுவே என்னைப் பொருத்தவரை நல்ல வளர்ப்பு முறை இல்லை...அப்படியிருக்க....அரசியலை என்னவென்று சொல்ல....
கீதா
என் மகனுக்கு எந்த இனாமும் அளித்ததில்லை. மகனிடம் பேரம் பேசியதில்லை.
ஏதோ ஒரு கிராமம் பெயர் மறந்து போய்விட்டது. அந்தக் கிராமம் முழுவதுமே ஓட்டு போடமாட்டோம் என்று எந்த அரசியல்வாதியையும் உள்ளே விடவில்லை. அவர்களுக்கு அரசியல்வாதிகளிடம் நம்பிக்கை இல்லை. எனவே புறக்கணித்தார்கள். ஒரு கிராமம் தான் புறக்கணித்தது. இப்படி எல்லா கிராமங்களும் புறக்கணித்தால் அட்லீஸ்ட் மெஜாரிட்டி புறக்கணித்தால் அல்லது எனக்கு எந்த வேட்பாளரும் பிடிக்கவில்லை என்று நோட்டா ஓட்டு போட்டால் மெஜாரிட்டி போட்டால் ஒரு வேளை இது ஒழிய சான்ஸ் இருக்குமோ என்னவோ...இப்படி நானும் கில்லர்ஜியும் சொன்னால், நிறைய பேர் சண்டைக்கு வந்துவிடுவார்கள் ஜனநாயகத்திற்கு இது சரியல்ல என்று....ஜனநாயகம்? ஜனத்துக்கு நல்லது செஞ்சா ஜனநாயகம் என்று சொல்வது சரி...ஜனங்களையே கண்டு கொள்ளாமல் இருப்பதை எப்படி ஜனநாயகம் என்று சொல்ல முடியும்?!!
பதிலளிநீக்குகீதா
தனி மனித ஒழுக்கம் மட்டுமே எல்லாத்துக்கும் தீர்வு. சட்டம் போட்டுலாம் தேர்தலில் பணப்புழக்கத்தை தடுக்க முடியாது. பணம்,பொருளின்மீது மக்களின் ஆசை ஆபத்தானது
பதிலளிநீக்கு//என் மகனுக்கு எந்த இனாமும் அளித்ததில்லை. மகனிடம் பேரம் பேசியதில்லை.//
பதிலளிநீக்குமன்னிகக்வும் இந்த வரி தெரியாமல் அக்கருத்துடன் வந்துவிட்டது. ஒரு சைல்ட் சைக்காலஜி மற்றும் பேரண்டிங்க் பற்றி எப்போதோ எழுதி வைச்சிருந்த ஒரு பின்னூட்டம்...வேர்ட் ட்ராஃப்டில் அதில்தான் இக்கருத்தை அடித்தேன்...காப்பி செய்யும் போது இந்த வரியும் அப்படியே வந்துவிட்டது...
கீதா
என்னிடம்யாருமிதுவரை இலவசமாக எதுவும் கொடுத்ததில்லை என்பதிவில் ஒரு வாழைப்பழ வீடியோ வெளியிட்டிருந்தேனே தலைப்பாக எமகாதகர்கள் என்றும் எழுதி இருந்தேன்
பதிலளிநீக்குவெளிநாட்டில் வாழ்வதால் வாக்கு சாவடிக்குச் சென்று இதுவரை 2 தடவை தான் ஓட்டு போட்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குலஞ்சத்தையும் நோட்டையும் அவரவர் மனக்கட்டுப்பாட்டுடன்
தவிர்த்தாலே போதும்.
ஆனால் புரையோடிப்போன புண்ணுக்கு மருந்து இன்றைய இளைஞர்கள் கரங்களில் மட்டுமே உள்ளது.
ஓட்டுக்கு நோட்டு என்பது ஆரோக்கியமான நிலையா என்று ஒரு கேள்வியா? இப்படித்தான்
பதிலளிநீக்குகெட்டதெல்லாம் பழக்கப்பட்டுப்போயிருக்கிறது இங்கே. இதுவும் நல்லதுதான் என்றுகூட நாலுபேர் மேடையேறி அல்லது டிவி ஸ்டூடியோவில் பல்லிளித்து முழக்குவார்கள் தமிழ்நாட்டில்! A wonderful place to live in..!
எத்தனையோப் பிரச்சினைகளைத்தாண்டியும், இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதில் நாம் பெருமை கொள்ளலாம்தான். உண்மையில் அப்படித்தான் உலகப்பெரும் நாடுகள் நம்மைப் பார்க்கின்றன. ஆச்சரியப்படுகின்றன. அது ஒருபக்கம் இருக்கட்டும்.
பிறிதொரு கோணத்திலிருந்து நம்மை நாமே ஆராய்ந்தால், ஜனநாயகம், சுதந்திரம் ஆகிய அரசுமுறை, உரிமை ஆகியவற்றிற்கு சராசரி இந்தியன், குறிப்பாக சராசரித் தமிழன் லாயக்கானவன் அல்ல என்பது சிலவருடங்களாக இங்கே அரசியல், சமூக நிகழ்வுகளை பாரபட்சமின்றிப் பார்ப்போருக்கு எளிதாகவே விளங்கும். தேசபக்தியோ, சமூகப் பொறுப்புணர்ச்சியோ இல்லாதவர்களின் கையில் ஜனநாயகம், பேச்சு, எழுத்து சுதந்திரமெல்லாம் அகப்படுவது குரங்குகளின் கையில் பூமாலையின் கதிதான். அதன் விளைவுகளையே இந்தியாவும், குறிப்பாகத் தமிழ்நாடும் சமீபகாலமாக அனுபவித்துவருகின்றன.
ஆசைதான் மனிதனை நகர்த்துகிறது. ஆசை தவறில்லை. ஆனால் பேராசையும், நியாயமற்ற ஆசையும் ஆபத்தானது. கேடுவிளைவிப்பது. எவன், எதற்காக, எதைக் கொடுத்தால் என்ன, ஆதாயந்தான்.. வாங்கி உள்ளே போடு என்கிற மனப்போக்கு அநாகரிகமானது, முட்டாள்தனமானது. தேர்தலின்போது குறிப்பாக இதுதான் நடக்கிறது -தமிழ்நாடு இதில் முதலிடம் வகிக்கிறது என்பது நமது சமூக, ஒழுக்க மதிப்பீடுகள், ஜனநாயகப் பொறுப்புணர்வு போன்றவை எவ்வளவு அதளபாதாளத்தில் கிடக்கின்றன என்பதற்கு அத்தாட்சி.
இந்த நிலை மாறுமா? கேள்விதான் விஸ்வரூபமெடுத்து நிற்கிறது. பதிலென்பது தொலைவிலும் சரியாகத் தென்படவில்லை. ஆனால் ஏதாவது உடனடியாக செய்யப்படவேண்டும். சமூக மாற்றத்திற்கு கல்வி வழி, தனிமனித ஒழுக்கம், நேர்மை, தேசப்பற்று, சமூகப்பொறுப்புணர்ச்சி போன்றவை சிறுவயதிலிருந்தே சரியாகப்புகட்டபடல் வேண்டும். இளைய சமுதாயம் நமது மாநிலம், நமது நாடு, நமது மக்கள் என உயர்வாக சிந்திக்கவேண்டும். அதற்கேற்றபடி செயல்பட ஆயத்தமாகவேண்டும். பெரியவர்களின் , கற்றோரின், சாதனையாளர்களின் துணை இதற்கு இன்றியமையாதது.
மாற்றம் காலப்போக்கில் நிகழலாம். ஆனால் வெகுமந்தமாக, பொறுமையைச் சோதித்தவாறே நிகழும்..Radical changes are not easily possible. Social reforms /changes for the good of the country, for the betterment of our society will always be painfully slow..
எங்க ஊரில் இந்த கேன்வாசிங்கே நான் பார்த்ததில்லை ..கில்லர்ஜி பதிவில் பார்த்தேன் சமீபத்தில் முன்னூறு ரூபாய்க்கெல்லாம் வோட்டு கேட்டாங்கன்னு .. நோட்டுக்கு ஓட்டு நாட்டுக்கு வேட்டு ..இது மகா கேவலமில்லையா :(
பதிலளிநீக்குதவிர்க்க ஒரு வழி இருக்கு ..கூடுமானவரை பொய் சொல்லாத ஏமாற்றாத அடுத்தவரை ஏமாற்றி பிழைக்காத சமுதாயத்தை உருவாக்கணும் பொய் சொல்லும் பெற்றோரை பார்த்து வளரும் பிள்ளை பொய்யய்தானே சொல்லும் .
நாம் இப்படிப்பட்ட அன்பளிப்புகளை தவிர்த்தா நம்மை பார்த்து வீட்டில் உள்ளோரும் அதையே கடைபிடிப்ப்பாங்க ..
அரசியல் மிக மிகக் கேவலமான, தாழ்ந்த நிலை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. மக்கள் வாங்குகிறார்கள் அதனால் கொடுக்கிறோம் என்பார்கள் அரசியல்வாதிகள். மக்களோ, அவர்கள் கொடுக்கிறார்கள், நாங்கள் வாங்கிக் கொள்கிறோம் என்பார்கள். மொத்தத்தில் மற்றவரை குற்றம் சொல்லி தன் தவறை மறைப்பதில் நமக்கு நிகர் நாமே.
பதிலளிநீக்குகுறிப்பாக தமிழகத்தில் இப்படி வோட்டுக்குப் பணம் கொடுப்பது ரொம்பவும் அதிகமாக நடக்கிறது. தலைநகரில் இப்படி பார்த்ததில்லை.
இது ஆரோக்கியமானது அல்ல....
பதிலளிநீக்குஆர்.கே. நகர் அவலங்களைப் பார்க்கும் போது... அதாவது எனக்கு பணம் கிடைக்கலை, குக்கர் கிடைக்கலை என்று மக்கள் சொல்வதைக் கேட்கும் போது எவ்வளவு பட்டும் நாம் இன்னும் திருந்தவில்லையே என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
கடலுக்குப் போனவனைக் காணோம் என ஒரு பகுதியில் மக்கள் கதறிக் கொண்டிருக்க, பிரியாணிக்கும் பணத்துக்கும் இன்னும் மல்லுக்கட்டிக் கொண்டு நிற்கிறோம்.
நம்மை நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள் அரசியல் வியாதிகள்... அவர்கள் கொள்ளை அடிக்க, நமக்கு கொடுக்கும் ஐநூறுக்கு ஆயிரத்துக்கும் நம்மை விலையாய் கொடுத்துவிட்டு அரசு சரியில்லை... அதைச் செய்யலை... இதைச் செய்யலை என்று சொல்வதற்கு நமக்கென்ன தகுதியிருக்கு...
வெள்ளத்தில் போனோமா... புயலில் போனோமா எதைப் பற்றியும் கவலைப்படாது பதவி காக்க... கொள்ளை அடித்ததைக் காக்க... அடிமைகளாய் அரசாளுவார்கள்... அவர்கள் வரவில்லை என்று கேட்டால் பணம் வாங்கிக் கொண்டுதானே ஓட்டுப்போட்டாய் என்று சொல்லிச் சிரிப்பார்கள்.
கிராமங்களில் ஓட்டுக்கு காசு நீங்க வாங்கலைன்னாலும் எங்க ஊரில் இத்தனை ஓட்டு இருக்கு என வாங்கித் திங்க ஆளிருக்கு...
எது எப்படி என்றாலும் நாம் தான் திருடன்... நாம் திருந்தாவிட்டால் அரசியல் திருட்டுக் கும்பலை ஒழிக்க முடியாது.
இனி ஓட்டுக்கு துட்டு என்பது மறையுமா தெரியாது...
ஆனால் மாற்றம் வந்தால் நல்லாயிருக்கும்.
வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான் மக்களுக்குத்தான் இது மற்றபடி படி அளப்பவர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்
பதிலளிநீக்குஉலகத்தில் முதன்மைக் கலாச்சாரமாக வாழ்ந்த தமிழர்கள்,ஏழ்மையின் ,கையிலும்,பேராசையின் கையிலும்
பதிலளிநீக்குபிடிபட்டுச் சீரழிகிறார்கள்.
வினைதினை அனுபவியாமல் யாரும்
எந்த அரசியல் வாதியும் போகப் போவதில்லை.
மக்கள் மனம் திருந்த நாட்களாகும்.
2011இல் வோட் செய்தோம்,
நிற்பவர்களில் யார் யோக்கியம் என்று காண
பூதக் கண்ணாடி தான் வேண்டும்.
தந்தை தாய் இருக்கும் வரை நடந்து போய்தான் வோட் செய்தார்கள்.
அதைத் தன் கடமையாக அப்பா செய்தார்.
நல்ல வேளை அவர்கள் இப்போது இந்த
கோரத் தாண்டவங்களைப் பார்க்க.
என்னைப் பொருத்தவரையில் வோட்டுக்கு பணம் கொடுப்பது மற்றும் வாங்குவது மிக மிக தவறே அப்படி செய்பவர்கள் அனைவரின் வோட்டு உரிமை மற்றும் தேர்தலில் வேட்பாளர்களாக நிற்கும் உரிமையை குறைந்த பட்சம் 15 ஆண்டுகளுக்காக பறிந்துவிடனும்
பதிலளிநீக்குஇந்த வோட்டுக்கு பணப் பிரச்சனைமட்டுமல்ல நமது தேர்தல் பிரச்சார முறைகளும் தப்பாகவே எனக்கு தெரிகிறது அதுவும் அமெரிக்க வந்த பின் இங்கு இருக்கும் முறையை பார்த்தபிந்தான் நம் முறை எவ்வளவு மோசம் என்று புரிகிறது
அடுத்தாக வோட்டுக்கு பணம் வாங்கிவிட்டு போடுவதை போலத்தான் நமக்கு பிடித்தவர்களுக்கு போடுவது அல்லது நமது மதத்தை அல்லது சாதியை சார்ந்தவர்களுக்கு வோட்டு போடுவது என்பதும் காரணம் இப்படி செய்வது தேர்தலுக்கு அப்புறம் அவர்கள் நமக்கு அல்லது நம் சாதியை மதத்தை சார்ந்தவர்கள் ஏதாவது செய்வார்கள் என்பதால். வோட்டுக்கு பணம் வாங்குபவர்கள் அட்வான்ஸாக வாங்குகிறார்கள் சாதி மத சுயநலனுக்காக போடுபவர் தேர்தலுக்கு பின் எதிர் பார்ப்பவர் அதனால் இரண்டும் பேருக்கு எந்த வித்தியாசமும் இல்லை..
நம் தொகுதியில் நிற்பவர் யார் அவர் எந்த அளவிற்கு நல்லவர் அவரால் நம் ஒட்டுமொத்த சமுகத்திற்கும் அந்த தொகுதிக்கும் நல்லது செய்வாரா என்று பார்த்துதான் வோட்டு போட வேண்டும் அதுதான் சரி அப்படி நாம் செய்யாமல் ஏழைகள் பணத்திற்காக வோட்டு போடுவதை நாம் சுட்டிக் காட்டுவதும் கேலி பேசுவதும் தவறே
ஏழைகளில் அநேகம் பேருக்குப் பணம் தேவை என்பதால் வாங்கிவிடுகிறார்கள் .வேறு வழி இல்லை
பதிலளிநீக்கு