சென்ற வார வம்பு பகுதியில் பலரும் தெரிவித்திருந்த கருத்து, நோட்டுக்கு வோட்டு தவறு, ஆரோக்கியமான நிலை அல்ல என்பதுதான்.
நாம் எல்லோரும் படித்தவர்கள், legal & moral values தெரிந்தவர்கள் என்பதால் அதுதான் நம் எண்ணமாகவும் இருக்கிறது.
ஆனால் பெரும்பான்மை அப்படி இல்லை என்பது பிரத்யஷ நிலை.
தேர்தல் நடைமுறைச் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால், ஒருவேளை விடிவு வரலாம்.... லாம் ...... ஆம் ........... ம்ம்ம் ........... !
இந்த வார வம்பு பகுதியில் என் கேள்வி :
இந்தியாவில், சுத்ந்திரத்திற்குப் பிறகு, மொழி அடிப்படையில் மாகாணங்களைப் பிரித்தது இமாலயத் தவறு என்று எனக்குத் தோன்றுகிறது.
உங்களுக்கும் அப்படித் தோன்றுகிறதா?
ஆம் என்றாலும், இல்லை என்றாலும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது, ஏன் என்று எழுதுங்கள்.
( சென்ற வார வம்பு பகுதியில் கருத்து கூறியிருந்தவர்கள் எல்லோருக்கும் நன்றி. கில்லர்ஜி, நெல்லைத்தமிழன், கீதா ரெங்கன், கீதா சாம்பசிவன், அவர்கள் உண்மைகள், பரிவை சே குமார் , வல்லிசிம்ஹன், ஏகாந்தன், மனோ சாமிநாதன், பானுமதி, ஏஞ்சல், ஜம்புலிங்கம் ஐயா, ஜி எம் பி, அபயாஅருணா, வெங்கட் , பூவிழி, ராஜி, .........thanks. )
தமிழ்மணம்.
அக்காலகட்டத்தில் மொழிவாரியாகப் பிரிப்பது என்பது தவிர்க்கமுடியாமலிருந்தக்கலாம் என்று நினைக்கிறேன். இருந்தபோதிலும் மொழிவாரியாகப் பிரிப்பது என்பது சரியல்ல. குறிப்பிட்ட ஒரு மொழியினைப் பேசுபவர் பல மாநிலங்களில் பரவியுள்ளனர். அப்போது பிற மாநிலங்களில் உள்ள இவர்கள் தம்மை சிறுபான்மையாகக் கருதிக்கொள்ளும் சூழல் ஏற்படும். தற்போதெல்லாம் நிர்வாகக் காரணங்களுக்காக என்று கூறி மாநிலங்களைப் பிரித்து வந்துள்ளனர். ஆனால் அதிலும் முழுக்க முழுக்க அரசியலே உள்ளது.
பதிலளிநீக்குமொழி அடிப்படையில் பிரித்தது தவறென்றால் வேறு எந்த அடிப்படையில் பிரித்திருக்க வேண்டும் என நீங்கள் எண்ணுகிறீர்கள் என்பதையும் சொல்லி இருக்கலாம்!
பதிலளிநீக்குஅவர்கள் மொழிவாரியாக சேர்த்துச் சென்ற மாநிலங்களை, இப்போது நாம் பிரித்துக் கொண்டிருக்கிறோம்! ஒரே மொழி பேசுபவர்களாக இருந்தாலும், அரசியல் காரணங்கள் இப்படி பிரிவுக்கு வழி வகுக்கின்றன. உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய இரண்டும் பிரிந்து விட்டாலும், இன்னமும் ஒரு பிரிவு தேவை என்பவர்கள் உண்டு!
மொழியில் ஒன்றுபட்டு இருந்த ஆந்திராவிலிருந்து தெலுங்கானா உருவானது எப்படி ?
பதிலளிநீக்குஎல்லாமே அரசியல்வாதிகளின் சுயநலத்துக்காக எடுத்த தீர்மானங்களே... மக்களை கேட்டு தீர்மானிக்கும் அரசே மக்களாட்சி நடத்துகிறது என்பது எனது கருத்து.
ஏதோ ஒரு வகையில் மாகாணங்களைப் பிரிக்கணும். அவங்க, மொழி என்பதை ஒரு அளவுகோலாக எடுத்துக்கொண்டாங்க. இன்றைக்கு மொழி வெறி என்றெல்லாம் தோன்றினாலும், பிரித்ததில் தவறில்லை. கொஞ்சம் கற்பனை பண்ணிப் பாருங்க. கேரளாவில் பாதி தமிழ் நாட்டிலும், மீதி கர்னாடகாவிலும் இணைந்து இரண்டே மானிலமாக இருக்கு என்று. அப்போது, மலையாளிகள் தமிழ் நாட்டில் சிறுபான்மையினமாகிவிடுவார்கள், பிரச்சனை நிறைய தோன்றும். அதுனால, ஏதேனும் அளவுகோலை எடுத்துக்கொண்டு மானிலங்களாகப் பிரித்ததில் தவறில்லை.
பதிலளிநீக்குதவறு எது என்றால், பொதுச் சொத்துக்களை (நதி, மின்சாரம், கனிம வளம் போன்ற பல) மத்திய அரசின் கீழ் கொண்டுவந்திருக்கவேண்டும். அதில் மானிலங்கள் உரிமை கொண்டாடக்கூடாது. அப்போதுதான், முழு இந்தியாவிற்கும் பரவலாக வளங்கள் சென்று சேரும்.
என்னா சொல்றாங்க..ன்னு ஒரு ஓரமா நின்னு கேட்போம்!..
பதிலளிநீக்கு// வார வம்பு // நோட்டுக்கு வோட்டு // மொழி அடிப்படையில் மாகாணங்களைப் பிரித்தது //
பதிலளிநீக்குஎனக்கெதுக்கு (வீண்) வம்பு...
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள்.. இப்போது புதன் கிடைத்தாலும் புதிர் கிடைக்காது போல் இருக்கிறது..
பதிலளிநீக்கு( என்னமோ புதிர் போட்டால் எல்லாத்துக்கும் விடை சொல்ற மாதிரி தான்!?..)
இருந்தாலும் திண்ணை இன்னும் களை கட்டலையே!?...
துரை செல்வராஜு சார் - சும்மா இருந்துகொண்டே, "திண்ணை இன்னும் களை கட்டலையே!?..." என்று சொல்லலாமா? நீங்களும் எடுத்துவிடுங்கள். தேவாரத் திருப்பதிகங்கள், பிரபந்தங்கள் பாடப்பட்ட கோவில்கள் எல்லாவற்றையும் உள்ளடக்கி தமிழகத்தை அமைத்திருக்கவேண்டும். அப்படி இருந்தால் ஆந்திரத்தின் பகுதிகளும், மலையாள தேசத்தின் பகுதிகளும், ஏன் இலங்கையின் பகுதிகளுமே தமிழகமாக ஆயிருக்கும் என்று.
பதிலளிநீக்குமொழிவாரியாகப் பிரித்தது தவறு என்றே என் எண்ணம். பொதுவாகத் தென்னிந்தியா, மத்திய இந்தியா, கிழக்கு, மேற்கு இந்தியா, வட இந்தியானு பிரிச்சிருக்கலாமோ? தென்னிந்தியாவில் ஆந்திரம், கர்நாடகம், கேரளா, தமிழ்நாடு அடக்கம். மத்தியில் மஹாராஷ்ட்ரா கொஞ்சம், இப்போதைய தெலங்கானா, மத்தியப் பிரதேசம். மேற்கே மஹாராஷ்ட்ரா, குஜராத், ராஜஸ்தான், கிழக்கே ஜார்க்கண்ட், வங்காளம், அசாம், நாகாலாந்து, திரிபுரா, வடக்கே உத்தரப்பிரதேசம், பிஹார், உத்தராகண்ட், ஹிமாசல், இன்னும் மேற்கே ஹரியானா பஞ்சாப், எல்லாத்துக்கும் மேலே காஷ்மீர், லடாக் ஆகியவையும் வட மாநிலங்களில் அடக்கி இருக்கலாம்! நிர்வாகத்துக்குக் கஷ்டமாக இருந்திருக்குமோ? பெரிய மாநிலங்களை ஆங்கிலேயே அரசு கட்டி ஆளவில்லையா? நாம் மட்டும் என்ன குறைந்தவர்களா? குறைந்த பட்சமாக நதிநீர்ப் பிரச்னை வந்திருக்காது. மொழி வெறி தோன்றி இருக்காது. கேரளக் கழிவுகள் தமிழ்நாட்டுக்கு வந்திருக்காது!
பதிலளிநீக்குநான் கொஞ்ச நேரம் கழித்து வருகின்றேன்...
பதிலளிநீக்குஅன்பின் நெல்லை தமிழன் மற்றும் கீதா அவர்கள் தம் கருத்துரையே என்னுடையதும்..
இருந்தாலும் சமையல் / சாப்பாடு முடித்துவிட்டு வருகின்றேன்..
///இருந்தாலும் திண்ணை இன்னும் களை கட்டலையே!?...///
பதிலளிநீக்குதுரை அண்ணன்.. திண்ணையில் இருந்து புறுணம்:) பார்த்தது போதுமாம், வந்து லஞ் ஐ முடிச்சிட்டுப் போய்க் கொண்டினியூ பண்ணச்சொல்லிச் சொல்லிட்டுவரும்படி கலா அண்ணி என்னை அனுப்பினா:).. ஜொல்லிட்டேன்ன்ன்:))
// ஏன் இலங்கையின் பகுதிகளுமே தமிழகமாக ஆயிருக்கும் என்று.///
பதிலளிநீக்குஅச்சச்சோஓஓ சிவனே எனத் தன் பாட்டில இருக்கும் இலங்கையையும் டச்சூப் பண்ணிட்டார்ர் நெல்லைத்தமிழன்ன்ன்:).. ஹா ஹா ஹா.. இதுக்கு மேலயும் நான் இங்கின நிண்டால், உண்மையிலேயே புதன் வம்பாகிடும் அதனால கீதாக்காவோடு கொஞ்சம் தனகிட்டு வாறேன்ன்:))
என்ன, தனகிட்டு வரீங்களா? கடவுளே, நான் ஓட்டமா ஓடிடறேன்! :)
பதிலளிநீக்குகாலையில் தேங்காய்ப் பால் கஞ்சி..
பதிலளிநீக்குமதியத்திற்கு -
பாஸ்மதி + குண்டு கத்தரிக்காய் சாம்பார் + தக்காளிக் கூட்டு.,
ஆயிற்று சுவையான சாப்பாடு!..
சுபம்..
வேறு வழியில்லையே அன்றைய நிலை
பதிலளிநீக்குஅப்படி பிரித்துமே இன்னும் பிரிய பிரச்னை நடக்கிறது
பொது விஷயத்தை பொதுவில் வைத்திருக்கலாம் பிரச்னைகளை தவிர்க்க
நான் பத்தாம் வகுப்பு படித்தபோது வரலாற்றுப் பாடத்திற்கான ஆசிரியர் திரு S.R. கோவிந்தராஜன் அவர்கள்.. அப்போதே அவருக்கு ஐம்பது வயதிருக்கும்...
பதிலளிநீக்குசில வரையறைகளை நடைமுறைப்படுத்தாமல் மொழிவாரியாக நாட்டைப் பிரித்தது மிகப்பெரிய தவறு.. என்று பாடம் நடத்துவார்..
ஆறுகளில் புது வெள்ளம் வரும் வரைக்கும் பழைய தண்ணீர் ஒரு புற்மாக சலசலத்துக் கொண்டிருந்த அந்த நாட்களிலேயே - பின்னாளில் ஏற்படக் கூடிய தண்ணீர்ப் பிரச்னைகளைப் பேசியிருக்கின்றார்..
தென்னகத்தில் ஜீவ நதிகள் இல்லை.. அத்தோடு ஒவ்வொரு திசைக்கும் வெவ்வேறு வகையான பருவ காலங்கள்.. குடகு மலையில் மழை பெய்து காவிரியில் தண்ணீர் பெருகி வந்தாலும் தமிழகத்திலும் நிறைவான மழை பெய்ய வேண்டும்.. அப்படிப் பெய்ய வில்லை என்றால் கண்டிப்பாக பற்றாக்குறை ஏற்படும்..
வரலாற்றுக் காலம் தொட்டு மைசூர் அரசு காவிரியில் தண்ணீர் திறப்பதில் பிரச்னை செய்கின்றது.
பின்னாளில் காவிரியில் பிரச்னை ஏற்பட்டு விட்டால் விவசாயம் தவறிப் போகும்..
விளைநிலங்கள் தரிசாகப் போகும்.. தமிழகத்தின் நெற்களஞ்சியம் வறண்டு போகும்..
எங்கள் ஆசிரியர் அன்றைக்குச் சொன்னது தான் இன்றைக்கு நேர்ந்திருக்கின்றது..
ஏற்கனவே சேணம் கிடையாது.. கடிவாளத்தையும் கையில் பிடிக்காமல் முரட்டுக் குதிரையின் முதுகில் அமர்ந்த கதையாகி விட்டது..
//ஏற்கனவே சேணம் கிடையாது.. கடிவாளத்தையும் கையில் பிடிக்காமல் முரட்டுக் குதிரையின் முதுகில் அமர்ந்த கதையாகி விட்டது..//
பதிலளிநீக்குதத்ரூபமான வர்ணிப்பு. ஆனால் உங்கள் ஆசிரியர் தீர்க்கமாக சொன்னதை எப்படி அந்நாளைய அரசியல்வாதிகள் அறியாது போயினர்?.. அறிந்தும் ஆட்சியில் அமரும் ஆசை அவர்களின் கண்களை மறைத்து விட்டதோ?
இந்த லட்சணத்தில் தனியாகப் பிரிய வேண்டும் என்று எழும்பிய கோஷங்கள்
வேறு தூக்கலாக இருந்த காலம் அது!
நம்ம கருத்து சொல்லி.....அது எங்க சேரணுமோ சேர்ந்தது......அப்டியே நிலைமை மாறி உட்ட்ட்டனே நமக்கேத்த மாதிரி மாறும்னா தான் கருத்து சொல்றது:p ...இல்லாட்டி ஓரமா குந்திக்கிட்டு வேடிக்கை பாத்துட்டு அடுத்த வம்புக்கு ரெடி ~!!
பதிலளிநீக்குசில முடிவுகள் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப எடுக்கப்படுகிறதுஇவற்றை ஒரு ஹைண்ட் சைட்டில் ஆராய்வது பலன் தராது
பதிலளிநீக்கு@கீதாக்கா ..பலசமயம் உங்களுடைய பின்னூட்டங்கள் என்னை பிரமிக்க வைக்கின்றன .
பதிலளிநீக்குஅந்த ஈஸ்ட் வெஸ்ட் நார்த் சவுத் சூப்பர் ஐடியா !
இப்போ மொழி வாரியா பிரிச்சதால் எல்லாருக்கும் அவங்கவங்க ஐடென்டிட்டியை மொழியை கலாச்சாரத்தை பாதுகாக்கணும் அப்புறம் அதை மேலே கொண்டுவரணும்னும் போராட்டம் நடக்கிறதே இது குறுகிய மனப்பான்மைக்கு வழிவகுக்கப்படுகிறது ..
மொழி வாரியா பிரிச்சதால்தானே தண்ணீருக்கு கையேந்தும் நிலை :(
ஆனா அதே சமயம் மைனாரிட்டிகளின் நிலையையும் யோசிச்சு பார்க்கணும் மெஜாரிட்டி அப்பர் ஹேண்ட் எடுக்கக்கூடும் .இயல்பிலேயே மனுஷரிடம் அமைந்த ஆழ்மனதில் தூங்கி கிடக்கும் பொறாமை எழும்பினா அதன் விளைவுகள் மோசமானதாகவே முடியும் .ஆனா இப்போ மாத்திரம் என்னவாம் ஏதாவது பிரச்சினைன்னா உடனே வார்த்தைகள் ஸ்டேட் பேரை - - - என்றுதானே வெறுப்பில் உமிழப்படுகிறது :(
ஓ! நேற்று வம்பு இருந்ததா...இதைத்தான் நான் குழுவில் கேட்டிருந்தேன்.....வெளியில் இருந்ததால் மொபைலிலும் வலை பார்க்க முடியலை....இப்போ எபிகாலை வணக்கம் சொல்ல வந்த போதுதான் வந்தது தெரிந்தது...பார்த்தால் நிறைய கருத்துகள்...என்ன சொல்லியிருக்காங்கனு பார்க்கவும் முடியலை...
பதிலளிநீக்குசரி இம்முறை தாமதமாகிப் போனதால்..ஒரே ஒரு கருத்துடன்....நிறைய மொழிகள் இருந்ததால் இப்படி மொழி வாரியாகப் பிரித்துவிட்டார்கள் போலும். ஆனால் இப்படி இல்லாமல், ஜஸ்ட் வடக்கு, வடகிழக்கு, வட மேற்கு, மேற்கு, மத்திய, கிழக்கு, தெற்கு...(தெற்கில் வட தெற்கு, கிழ தெற்கு என்று பிரிக்க முடியாது ஒடுங்கி விடுவதால்.) ஆனால் எப்படிப் பிரித்திருந்தாலும் இப்போது இன்னும் பிரிக்கப்படுவது போல் மக்கள் பிரிக்கணும் என்று போராடி இருப்பார்கள். தெற்கு முழுவதும் ஒன்றாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருகுமோ என்று தோன்றும்,முல்லைப் பெரியாறு, காவிரிப் பிரச்சனை எழுந்திருக்காதோ...
இப்ப பார்த்தீங்கனா தனித் தமிழ்நாடு வேணும்னே கூட போராட்டம் அவ்வப்போது எழுகிறது..ஆனா எப்படிப் பிரித்திருந்தாலும் நம்ம மக்கள் போராட்டம் பண்ணாம இருந்திருப்பாங்கனு நினைக்கறீங்களா?!!!
கீதா
வாழ்க..
பதிலளிநீக்குஹை கீதாக்காவும் கிட்டத்தட்ட இதுதான் சொல்லிருக்காங்க போல ஏஞ்சலின் கருத்தைப் பார்த்தப்ப....
பதிலளிநீக்குஅக்கா சொல்லியிருக்கும் காரணங்களை நானும் ஹைஃபைவ் சொல்லுகிறேன்...
கீதா
அன்று இருந்த சூழ்நிலைக்கு அது சரியே!
பதிலளிநீக்குபிரிவு என்று வரும் போது ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும் அல்லவா..? அந்த வகையில் மொழியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
பதிலளிநீக்குமொழி வாரியான பிரிவு சரியானதுதான் என்றே தோன்றுகிறது... ஆனாலும் மொழி வாரி மாநிலங்களில் நம்மைப் போல் வந்தாரை வாழ வைக்கும் பூமி வேறெதுவும் இல்லை.
நாம் மட்டும்தான் எங்கிருந்து வந்தாலும் பதவி கொடுத்து பட்டம் கொடுத்து தலையில் தூக்கி வைத்து ஆடுவோம்.
பக்கத்தில் இருக்கும் கேரளாவில் நமக்கு மரியாதை இல்லை...
இங்கிட்டு இருக்கும் கர்நாடகாவில் நமக்கு தண்ணீர் தர மாட்டேன் என்கிறார்கள்.
ஆந்திராவில் அடிக்கிறார்கள்.
மும்பையில் அடிக்கிறார்கள்...
ஒரு மொழி தனி மாநிலம் ஆகும் போது மற்ற இடத்தில் சிறுபான்மையினராகிவிடுகிறது... அதுவே பிரச்சினைகளுக்கு காரணியாக அமைகிறது.
தண்ணீர், மின்சாரம் போன்றவை மொத்தமாக இருந்திருக்க வேண்டும். அதை அந்தந்த மாநில அரசுகளின் கையில் கொடுத்ததே இந்தியா சிதறி விடுமோ என்ற எண்ணத்தை தற்போது உண்டாக்கிக் கொண்டிருக்கிறது.