வெள்ளி, 29 டிசம்பர், 2017

வெள்ளி வீடியோ 171229 : சில உள்ளங்களில் ஏனோ பெருமூச்சு



மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம் நிலவு எப்படி சாட்சி ஆகுமோ? 

எனினும் நல்ல பாடல்.

சந்திக்கும் பாதைகளில் பயணம் செல்பவரெல்லாம் அதைச் சிந்திக்கிறார்களா?  ஏனோ?

எனினும் நல்ல பாடல்.

இறைவனுக்கு வேறு வேலை எதுவும் இல்லை போலும்.  காதலில் குழப்பம் வரும்போது சிரிப்பதும், இருவரை இணைத்துத் திரை போட்டு விளையாடுவதும்...

எனினும் நல்ல பாடல்.

பல்லாண்டுகாலம் மருத்துவத்தால் சாதிக்க முடியாததை ஒரு பாடல் மூலம் சரிசெய்து விடும் தமிழ்ப்பட இயக்குனர்களின் மருத்துவ சேவை... முதல் இரண்டு வரிகளிலேயே நாயகனுக்கு திரும்பும் நினைவுகள்!

எனினும் நல்ல பாடல்.

ஒரு நேரத்தில் இந்தப் பாடல் பதிவுக்கு கிடைக்காமல் ("நீங்கதான் கேட்கறீங்க..  இந்த ரெகார்ட் எங்க கிட்ட இல்லை ஸார்...") மதுரையில் அலைந்ததுண்டு.  இளங்கோ என்னும் உதகை நண்பர் ஒருவர்,  அவர் கெஸெட்டில் வைத்திருந்ததை (துபாய் ரெக்கார்டிங்!) காபி செய்து கொண்டேன்.  

எம் எஸ் விஸ்வநாதன் இசையில் எஸ் பி பாலசுப்ரமணியம் பாடிய எனக்குப் பிடித்த ஒரு பாடல்.








64 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம் :) ஹாஹ்ஹா :) லேப்டாப் சார்ஜர் உடைஞ்சாலும் டேப்லட் சார்ஜரை ஜெசி கடிச்சாலும் எப்படியாவது முதல் வந்திட்டேன் :)வெற்றி வெற்றீ :)

    பதிலளிநீக்கு
  2. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  3. ஹாஹாஹா :) டெஸ்க் டாப் சதி செய்தது :)

    பதிலளிநீக்கு
  4. இனிய காலை வணக்கம் ஏஞ்சல். அங்கே துண்டு போட்ட நேரத்தில்... இங்கே ஸார் முந்திக்கிட்டார் போல!

    பதிலளிநீக்கு
  5. துரை சகோ, ஸ்ரீராம், ஏஞ்சல் எல்லோருக்கும் இனிய காலை வணக்கம்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் இனிய காலை வணக்கம் :) ஹாஹ்ஹா :) லேப்டாப் சார்ஜர் உடைஞ்சாலும் டேப்லட் சார்ஜரை ஜெசி கடிச்சாலும் எப்படியாவது முதல் வந்திட்டேன் :)வெற்றி வெற்றீ :)//

    ஹா ஹா ஹா ஹா ஹா ....ஹையோ எனக்கும் அப்படித்தான் எப்பவுமே!! ஹிஹிஹி

    ஸ்ரீராம் துண்டு போட்ட நேரம்// ஹா ஹா ஹா கரீக்டு!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. ஆமாம் ஸ்ரீராம் .laptop சார்ஜர் உடைஞ்சி சாம்சங் ஐ பேடை ஜெஸ்ஸி கடிச்சிட்டா சார்ஜிங் ஒயரை டெஸ்க் டாப் அவ்ளோ வேகமில்ல

    பதிலளிநீக்கு
  8. பல்லாண்டுகாலம் மருத்துவத்தால் சாதிக்க முடியாததை ஒரு பாடல் மூலம் சரிசெய்து விடும் தமிழ்ப்பட இயக்குனர்களின் மருத்துவ சேவை... முதல் இரண்டு வரிகளிலேயே நாயகனுக்கு திரும்பும் நினைவுகள்!//

    ஹா ஹா ஹா பின்ன என்ன ஸ்ரீராம் அதுக்காக நம்மள அவருக்கு மருத்துவ சிகிச்சை முடிஞ்சு நினைவு திரும்பும் வரை தியேட்டர்ல உக்காத்தியா வைக்க முடியும்?!!! ஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  9. சரியாய் கமெண்ட் பேஸ்ட் செய்றநேரம் எலி ஹாங் ஆகிடுச்சு

    பதிலளிநீக்கு
  10. அடப்பாவமே... குறும்புக்கார ஜெஸ்ஸி!

    பதிலளிநீக்கு
  11. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

    பதிலளிநீக்கு
  12. //ஹா ஹா ஹா பின்ன என்ன ஸ்ரீராம் அதுக்காக நம்மள அவருக்கு மருத்துவ சிகிச்சை முடிஞ்சு நினைவு திரும்பும் வரை தியேட்டர்ல உக்காத்தியா வைக்க முடியும்?!!! ஹிஹிஹிஹி//

    எசப்பாட்டு இருக்கட்டும் கீதா... இந்தப் பாட்டைக் கேட்டீங்களா? ஏற்கெனவே கேட்டிருக்கீங்களா? எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  13. நல்ல பாடல் இயக்குனர் என்ன செய்வார் பாவம் ? கதை எழுதியவர் செய்தது.

    பதிலளிநீக்கு
  14. பல்லாண்டுகாலம் மருத்துவத்தால் சாதிக்க முடியாததை ஒரு பாடல் மூலம் சரிசெய்து விடும் தமிழ்ப்பட இயக்குனர்களின் மருத்துவ சேவை//ஆனா இந்த ஐடியா அப்போதான் :) காதல் bharath படத்துக்கு வரலையே இந்த ட்ரீட்மெண்ட் :)

    பதிலளிநீக்கு
  15. வாங்க கில்லர்ஜி. பாடல் உங்களுக்கும் பிடிக்கும் என்பதில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  16. //காதல் bharath படத்துக்கு வரலையே இந்த ட்ரீட்மெண்ட் :)//

    @ஏஞ்சல்... அந்த இயக்குனர் அந்த முடிவ விரும்பவில்லை போல!

    பதிலளிநீக்கு
  17. ஹ்ம்ம் இருக்கலாம் :) சரி நல்ல பாடலை கேட்டாச்சு நாளைக்கு வரேன்

    பதிலளிநீக்கு
  18. ஓகே ஓகே குட்நைட் ஏஞ்சல். நாளை வந்து பாடல் பற்றி சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
  19. /ஜெசிக்கு நன்றி.. //

    ஹா.... ஹா... ஹா... துரை செல்வராஜூ ஸார்!!!

    பதிலளிநீக்கு
  20. வலையில் விழுந்த மீன்கள் என- சில
    வாலிப உள்ளங்கள் துடிப்பதென்ன!...

    இந்தப் பாடலை தங்களுக்கு நினைவுபடுத்த எண்ணியிருந்தேன்...

    மகிழ்ச்சி.. நன்றி...

    ஏனென்றால்....!?..

    பதிலளிநீக்கு
  21. வலையில் விழுந்த மீன்கள் என- சில
    வாலிப உள்ளங்கள் துடிப்பதென்ன!...

    இந்தப் பாடலை தங்களுக்கு நினைவுபடுத்த எண்ணியிருந்தேன்... ஏனென்றால்....!?..

    ஏனென்றால்? அது இதே பாடலின் இன்னொரு வெர்ஷன் வரிகள். ஏன் துரை செல்வராஜூ ஸார்?

    பதிலளிநீக்கு
  22. ஜெஸியின் குறும்பு// ஏஞ்சல் ஹையோ ரசித்தேன்...இங்கயும் செல்லங்கள் பப்பியா இருந்தப்போ எல்லாம் கடிக்கப்படும்....இப்ப கூட பட்டாசு வெடிச்சா கண்ணழகி எதையாவது கடிச்சு வைப்பா....ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  23. இந்தப் படத்தில் நாயகன் நாயகி பெயர்கள் மோகன் கஸ்தூரி...

    சக வகுப்புத் தோழமைகள்...

    அலையும் உறங்க முயல்வதென்ன.. மன
    ஆசைகள் உறங்க மறுப்பதென்ன!..

    ஆகா... அந்த நாட்கள் இனி என்று வந்திடும்?...

    பதிலளிநீக்கு
  24. ஜெஸியின் குறும்பு ரசிக்கத்தக்கதுதான் இல்லையா கீதா?

    பதிலளிநீக்கு
  25. //சக வகுப்புத் தோழமைகள்...//

    ஓ... பழைய நினைவுகள்! விளக்கம் தந்ததற்கு நன்றி துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  26. இன்னிக்கு நம்பெருமாளைப் பார்த்துட்டு இருந்ததால் காலையில் வரலை. அவரை ஆயிரங்கால் மண்டபத்தில் உட்கார்த்தி வைச்சுட்டு அப்புறமாத் தான் வீட்டு வேலைகளைப் பார்க்க எழுந்தேன். :)

    பதிலளிநீக்கு
  27. படம் பார்த்தது இல்லை! ஆனால் பாட்டல் கேட்டிருக்கேன்.

    பதிலளிநீக்கு
  28. வாங்க கீதா அக்கா... நன்றி. பெருமாள் தரிசனம் ஆச்சா?

    பதிலளிநீக்கு
  29. ஹா ஹா இரண்டே வரியில் நினைவு திரும்பி அவரே முழுப்பாடலையும் பாடிவிடுகிறார் அதற்க்கு அவர் நெற்றில் வரும் காட்சிகள் சிரிப்பை வர வைத்தன கேட்டது போல்தான் இருக்கிறது

    பதிலளிநீக்கு
  30. நெல்லைத்தமிழன்..

    //பாடலைக் கேட்ட நினைவு இல்லை. ​//

    ஆச்சர்யம்.

    பதிலளிநீக்கு
  31. வணக்கம் சகோதரர் ஸ்ரீராம்!

    அருமையான பழைய பாடல். நீண்ண்ண்ட காலத்திற்குப் பின்பு கேட்கிறேன்.

    உண்மையில் நிலவு சாட்சியாகுதோ இல்லையோ
    பலபேருக்குப் பிடித்தமான பிடித்துப் போகின்ற ஒன்று.
    என் கடந்த கால வாழ்க்கையிலும், என் பெயரிலும் பல சம்பவங்களில்
    இந்த நிலவிற்கு முக்கிய பங்கு இருக்கிறது..:)
    பாடலின் படம் பார்த்த நினைவில்லை.
    பாடலும் இசையும் எஸ் பி பியின் குரலும் மனதைக்
    கொள்ளைகொள்கின்றன இன்றும்.

    நல்ல பகிர்வு! நன்றி! எல்லோருக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  32. இந்த படம் பார்த்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
  33. நன்றி சகோதரி இளமதி. ஆம் உங்கள் பெயரிலும் நிலவு இருக்கிறது. நன்றி.

    பதிலளிநீக்கு
  34. இது வரை கேட்டிராத பாடல். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  35. பாடல் நேற்றே கேட்டேன் ஸ்ரீராம் ..spb குரல் எப்பவும் சூப்பர்ப் ..காணொளியில்தான் கே ஆர் விஜயா தான் ரொம்ப feelings எக்ஸ்பிரெஷன்ஸ் கொட்டறார்

    பதிலளிநீக்கு
  36. கர்ர்ர் 100000 டைம்ஸ் :) துரை அண்ணாக்கு ..ஜெசியால் போஸ்டும் போடமுடில எனக்கு :) லாப்டாப் சார்ஜர் ஜனவரி தான் டெலிவரி ஆகுமாம்

    பதிலளிநீக்கு
  37. ஏஞ்சல்... கே ஆர் விஜயா என்னால் தாங்கிக் கொள்ளவே முடியாத நடிகை. இவராலேயே அந்தக் காலத்தில் விவசாயி படத்தில் இடைவெளியுடன் வெளிநடப்பு செய்தேன்!

    லாப்டாப் சார்ஜர் ஜனவரி தான் டெலிவரி ஆகுமாம் //

    ஏதோ ஜனவரி இன்னும் அறுபது நாள் இருக்கற மாதிரி....!!!

    :)))

    பதிலளிநீக்கு
  38. கர்ர்ர் :) என்னோட அச்சப்பத்துக்காக உலகெங்கும் ரசிகர்கள் வெயிட்டிங் :) அதிலும் என் சமையல் ரெசிப்பிக்கு அமெரிக்கா பஹ்ரேய்ன் லெல்லாம் fan கிளப் இருக்குன்னு சொன்னா நம்பவா போறீங்க :)இப்போ டெஸ்க் டாப்பில் போஸ்ட் போட்டாலும் பின்னூட்டம் கொடுக்க லேப்டாப் வேணும் :) ஜனவரி 5 த் தான் கிடைக்குமாம் சார்ஜர்

    பதிலளிநீக்கு
  39. அருமையான பாடல் ஸ்ரீராம்....ஹையோ எத்தனை வருஷங்கள் ஆச்சு!! கேட்டு!! கல்யாணி ராகத்தின் டிஃப்ரன்ட் பரிணாமத்தில்...

    ஜெஸியின் குறும்பு ரசிக்கத்தக்கதுதான் இல்லையா கீதா?// ஆமாம் நிச்சயமா!! அதுவும் வயர கடிச்சு வைச்சிருக்கே...

    எங்க வீட்டுச் செல்லங்களும் இப்படித்தான் முன்னாடி பப்பியா இருந்தப்ப எல்லாத்தையும் கடிச்சு வைக்கும் ஹா ஹா ஹா ...அப்புறம் ஏம்மா கடிச்சனு கேட்டா போதும் என்னவோ அப்படியே ஃபீல் பண்ணறா மாதிரி ஒரு பாவ லுக் விட்டு ஓரமா போயி இனிமே பண்ணவே மாட்டேனு அந்த நேரத்துக்கு மல்லாந்து படுத்து ஒரு ஸீன் போடுவாங்க பாருங்க...காமெடியா இருக்கும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  40. இந்தப் பாடல்ல பிடிக்காத ஒன்னு அந்த கே ஆர் வி தான்!! ஹயோ!!! அதனால் ஸீன் பாக்காம பாட்டு மட்டும் கேட்டேன் ஸ்ரீராம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  41. வாங்க கீதா... கல்யாணி ராக பேஸா? பேஷ்... ! உங்களுக்கும் கே ஆர் வி அலர்ஜியா? ஹை....​

    பதிலளிநீக்கு
  42. துரை ஸார், ஏஞ்சல், கீதா அக்கா..... ஷெட்யூல் செய்தது என்ன ஆச்சு என்று தெரியாமல் டிராப்டாகவே நின்றது. எங்கள் தளத்தை மீண்டும் என்னால் அடைய முடிய்ய்யாமல் முகநூலைத் தஞ்சம் அடைந்து அங்கிருந்து இங்கு பாய்ந்து திறந்து.. அப்புறம் போய்ப்பார்த்தால் டிராப்ட் டிராப்டாகவே... மீண்டும் சரிசெய்து, பப்லிஷ்ட்! இதுதான் நடந்தது. தம மீண்டும் கண்ணுக்குத் தெரியாததால் ஏஞ்சல் உதவியால் நானும் வாக்களித்து, லிங்க் இணைத்தேன்.

    பதிலளிநீக்கு
  43. அருமையான பாடல்.. முத்துராமன் மாமாவை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும்... படத்தின் பெயர் என்னவோ.. ?.. நிலவே நீ சாட்சி என்பது படப் பெயராக இருக்குமோ..

    // சில உள்ளங்களில் ஏனோ பெருமூச்சு//
    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எதுக்கு இப்படி ஒரு தலைப்பு:))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!