செவ்வாய், 12 டிசம்பர், 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை : பெண் பாவம் பொல்லாதது - அதிரா - சீதை 31


பெண் பாவம் பொல்லாதது!:)

ன்று செவ்வாய்க் கிழமை:) அதனால இன்று சேவல் கூவுவதற்குள் சீதை, ராமனை மன்னிச்சே ஆகோணும்:).. நான் சீதையின் கைல..விரல்ல:) விழுந்தாவது.. ராமனை மன்னிக்கச் சொல்லப் போகிறேன்:). அதுவரை அனைவரையும் அமைதி காக்கும்படி வேண்டுகிறேன்.. அமைதி.. அமைதி...:)

இங்கு நான் சொல்லப்போவது முழுக்க முழுக்க என் கற்பனைக் கதைதான் என்பதனை:), புஷ்பா அங்கிள் கடையில் விற்கும், புகை வராத கற்பூரத்தின் மேல் அடிச்சுச் சத்தியம் பண்றேன்:).. அதனால யாரும் இதை சரித்திரக் கதையோடு ஒப்பிட்டு மீயுடன் ஜண்டைக்கு:) வந்திடக்கூடாது என்பதனை முன்னமே ஜொள்ளி வைக்கிறேன்ன்:) பிக்கோஸ் மீ ஒரு “அப்பாவீஈஈஈஈ”:).

எனக்குப் பாருங்கோ அலட்டுவது பிடிக்காது:).. ஹா..(இங்கின ஒரு ஹா தான் போடோணும் என ஏகாந்தன் அண்ணன் சொல்லியிருக்கிறார்:)).. அதனால ஸ்ரெயிட்டா என் பிரசங்கத்தை ஆரம்பிக்கிறேன்:)..

ஆவ்வ்வ் மேடையில் லைட் போதாது, நான் கஸ்டப்பட்டுச் செய்த மேக்கப் தெரிய வாணாமோ?:).. பிங் லைட்டாப் போடுங்கோ அப்போதான் மீ பிங்கியாத் தெரிவேன்:)..
நான் இங்கு சொல்லப் போவது “அதிர-பதம்”.. வருங்காலத்தில் இது ஸ்கூல் சிலபஸ் ல:) சேர்க்கப்படலாம்:), எனவே நோட் எடுக்க விரும்புவோர் எடுத்துக்கோங்க.. “நா ஒண்ணும் வாணாம் சொல்ல மாட்டேன்”:).
()()()()()() _()_ ()()()()()()

ணக்கம் _()_ அன்பு நெஞ்சம் கொண்ட எங்கள்புளொக் வாசகர்கள்.. பெரியோர்கள், அம்மா, ஐயா, அக்கா, அண்ணா, தம்பி.. அனைவருக்கும்:).{இங்கு எனக்கு தங்கை கிடையாது:) மீ மட்டும்தான் தங்கை:)}  சரி சரி முறைக்காதீங்க:).

உண்ட மயக்கத்திலே, சற்றுக் கண்களை மூடிக்கொண்டிருக்கும் சீதாவுக்கு எல்லாமே கனவுபோலத் தெரிகிறது... கண்மூடித் திறப்பதற்குள்... எத்தனை பிரச்சனைகள்.. எத்தனை சோதனைகள் எத்தனை அனுபவங்களைச் சந்தித்து வந்தாயிற்று..

அன்று “அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்” என்பதில் ஆரம்பிச்ச பயணம்:) இன்று லவ..குஸா வுடன் அழகிய குட்டிக் குடும்பமாகி நிற்கிறது.

நாம் யாருடனோ பேசும் போது.. நோக்கினேன் எனச் சொல்வது தப்பாம், நோக்குதல் என்பது, அடையவேண்டும் எனும் ஆசையோடு பார்த்தலாம், எனவே ஒரு பெண்ணை/ஆணை பார்த்தேன் அல்லது கண்டேன் எனச் சொல்வதுதான் சரியாம்.

கண்ணை மூடிய சீதாவின் மனதில், முனிப்பாட்டி சொன்னவைகள்  ஓடத் தொடங்கின..!!!!..

சீதைக்குப் பல நாளாக மனதிலே இருந்த கவலை யாதெனில், தானோ ராமனோ மனதறிந்து தவறு செய்தவர்கள் அல்ல.  அனைத்தாலும் சிறந்தவர்கள், அனைவராலும் விரும்பப்படுபவர்கள்.  அப்போ தமக்கு ஏன் இவ்ளோ துன்பங்கள் வாழ்வில் வந்தன என்பதே.  அதற்கு, முனிப்பாட்டி:) ஒரு சரித்திரத்தையே அவிட்டு விட்டா...

ராமன், விசுமாமா என்றொருவரால்,  தன் அம்பை எய்து “தாடகை” எனும் பெண்ணைக் கொன்றார்.  பெண்ணை நான் கொல்லேன் என்றுதான் ராமன் சொன்னார், ஆனா விசுமாமாதான், 'அது உருவம்தான் பெண் ,  உள்ளம் பேய் அதனால் தயங்காதே கொன்றுவிடு'  எனச் சொன்னார்..  “சிலரின் வார்த்தைகள் சுடும்”.. அதுபோல ராமனின் அம்பும் சுட்டுக்கொண்டு போய் தாடகையைக் கொன்றது..  ராமனின் துன்பத்திற்கான முதல் அத்தியாயம் அங்கு ஆரம்பமானது.

அடுத்து, “மந்தரை” என்றொரு பாட்டி இருந்தா, அவவுக்கு முதுகு கூனலாக இருக்கும், அதனால் அவவைக் கூனி எனவும் அழைப்பார்கள். ராமன் மண்கட்டிகளால், அந்தக் கூனல் முதுகில் அடித்து விளையாடுவார், அதனை விளையாட்டாகவும் நகைச்சுவையாகவும் நினைத்தார் ராமன்.

ஆனால் ஒருவரின் உணர்வுகளோடும், குறைபாடுகளோடும், கிண்டல் கேலி பண்ணி விளையாடுவது நகைச்சுவை ஆகாது.   இதனால் கூனி மிகவும் வருந்தினா மனதில்.  அவவால் ராமனை எதிர்த்துப் பேச முடியவில்லை..  “மண்கட்டியால் என்னை அடித்துக் கேலி பண்ணுகிறாயா?  உனக்கு மண்ணே இல்லாமல் பண்ணுகிறேன் பார்” எனச் சாபம் கொடுத்தார்...  அதனால் ராமன் நாடிழந்து காட்டுக்குப் போனார்.

அந்த அடர்ந்த காட்டிலே ஒரு குடிசை..   குடிசையின் உள்ளே பெரீய பார்த்றூம்.. அதன் ஷவரை திறந்துவிட்டு, சீதா குளிச்சுக் கொண்டிருக்கிறா, அது பெரீய காடு என்பதால் கொடிய மிருகங்கள் ஏதும் வந்துவிடக்கூடும் எனும் பயத்தில், குடிசையின் வாசலில் இருக்கும் கதிரையில், ராமன் இருக்கிறார் காவல்போல.

ராமன் அழகான வாலிபன், கம்பீரமான தோற்றம், பெண்களை மனதாலும் தப்பாக நினைக்காத கற்புக்கு அரசன்...   ஆனால் கொஞ்சம் விளையாட்டுப் பிள்ளை:).

தனியே வாசலில் இருந்த ராமனுக்குப் பொழுது போகவில்லை:).   இந்நேரம் அவ்வழியால் போய்க் கொண்டிருந்த சூப்பனா எனும் ஒரு அக்கா, ராமனைப் பார்த்து விடுகிறா.  அவ அரக்கர்கள் குலத்தைச் சேர்ந்தவ, அசிங்கமான தோற்றத்தை உடையவ..   பார்த்ததும்..  'அடடா இவ்ளோ அழகான வாலிபனா? அதுவும் இக்காட்டில்?' என நினைச்சு அவவுக்கு காதல் அரும்பி விடுகிறது.

சீதை..,  ராமனின் உள்ளத்தைக் காதலிச்சா, ஆனா இந்த சூர்ப்பனாவுக்கு வந்தது உடல் கவர்ச்சி..  அதனால், தன்னை ஒரு மிக அழகிய தேவதைபோல மாற்றி, நேரே ராமனிடம் வருகிறா...

வந்து காதல் மொழிகள் பேசி, தன்னை மணந்துகொள் என்பதுபோல பேசுகிறா. இந்த சூப்பனா அக்காவுக்கு ராமன் திருமணமானவர் என்பது தெரியாது, அதனால அவ ஆசைப்பட்டதில் தப்பில்லைத்தானே?.

ஆனா, இந்த ராமன் என்ன பண்ணியிருக்கோணும், உடனேயே சொல்லியிருக்கோணும்..  'பெண்ணே எனக்குத் திருமணமாகி விட்டது, நீ வேறு ஆளைப்பார்' என:).   ஆனா இவர் அப்படிச் சொல்லாமல் ரைம் பாஸ் பண்ணலாமே என எண்ணிப் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்..

திடீரென ஷவர் ஓவ் ஆனதும், சீதை குளித்து முடிச்சிட்டா என எண்ணி, அவசரமாக, “உன்னை என்னால் மணம் முடிக்க முடியாது, ஆனா அதோ பார் என்னை விட அழகான வாலிபன் “லக்கு” அங்கிருக்கிறான் போய் அவனோடு பேசிப்பார்”.. எனச் சொல்லி தன் தம்பி லக்கு விடம் அனுப்பி விடுகிறார்..   தம்பி படு கோபக்காரன், இவவை ஏதும் பண்ணி விடுவான் என நன்கு தெரிஞ்சே அங்கு அனுப்பினார்.  இவ்விடத்தில் ராமன், சூப்பனாக்கா ஒரு பெண் என்பதால் நகையாடினார், அத்தோடு லக்குவிடம் போய்க் கேள் எனச் சொல்லியது மிகப் பெரிய தப்பு, தானே?  இங்கிருந்து சென்றுவிடு எனச் சொல்லியிருக்கலாம்.

அதை நம்பி சூப்பனா அக்கா லக்குவிடம் போய் காதல் மொழி பேச... லக்குவுக்கு கோபம் அதிகமாகி, அந்தக்காவின் மூக்கை வெட்டி அனுப்பி விடுகிறார். ஒரு பெண்ணுக்கு லட்சணம் கொடுப்பது மூக்கும் முழியும்தான், அந்த அழகையே கெடுத்து விட்டாரே,  இதுக்கெல்லாம் காரணம் ராமன்தான் என சூர்ப்பனாக்கா ராமனுக்குச் சாபம் கொடுத்து விடுகிறார்.
அதாவது “ஒரு பெண் என்பதால் கிண்டல் பண்ணி விட்டாயே, உனக்குப் பெண்ணே இல்லாமல் பண்ணுகிறேன் பார்” என...  அதனால்தான் சீதையைப் பிரிய நேர்ந்தது.

”பொதுவாகப் பெண்கள், எதில் மிக ஆழமாக, ஆர்வமாக, அன்பாக இருக்கிறார்களோ, அவர்கள் மனம் ஒடியும்போது, அதன் எதிர்ப்பக்கமாக, அதைத் தூக்கி எறிந்து, எக்ஸ்றீம் லெவலுக்குப் போகக்கூடியவர்கள்”:).

இப்படி இந்த மூன்று பெண்களின் சாபத்திற்கும் ஆளானமையாலேயே, உங்கள் இருவருக்கும் இவ்ளோ துன்பம் நேர்ந்தது... எனக்கூறி, முனிப்பாட்டி மெல்லிய நெருப்பைக் கொழுத்தி, சீதைமேல் போட்டு விட்டா. அது இப்போ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

இப்படிப்பட்டவரா ராமன்?,  இவரோடா இத்தனை துன்பங்களையும் அனுபவித்துக் கொண்டு குடும்பம் நடத்துகிறேன்?  இப்படி ஒரு வாழ்க்கை எனக்குத் தேவை இல்லை,  இப்பவே நான் என் பிறந்த வீடு செல்லப்போகிறேன்,  ராமனுக்கு டிவோஸ் நோட்டீஸ் அனுப்பப்போகிறேன் என மனதால பொங்கிய வேளை...

இரு கரங்கள் மெதுவாக சீதையின் தோளைத் தொட்டன.. கண் திறந்து பார்த்தால், புன்னகையோடு ராமன்.

நடந்தவற்றை எல்லாம் சொல்லி,  'கையை எடுங்கள்.. எனக்கு விடுதலை தாருங்கள், நான் என் அம்மா வீட்டுக்கே போய் விடுகிறேன் ...'   என்றா சீதை.

ராமன் மிக அமைதியாக,  'இங்கே பார் சீதா!.. நமக்கு இரு குழந்தைகளும் ஆகிவிட்டது, இப்போ போய் டிவோஸ் ஆ?:).. அதெல்லாம் பழையகதை சீதா, அதை மறந்து விடு' என்றார்.

அதை எப்படி மறப்பது?:).. “ஆண்கள் செய்யும் தவறுகளைப் பெண்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என, புளொக்கிலே ஒருவர் நோட்டீஸ் ஒட்டியிருக்கிறார், அப்போ இதை நான் மறந்தால், அவரின் நோட்டீஸ் பொய்யாகிடாது?:)”.. என்றா சீதை..:).

"அவரை விடு சீதா:), நான் சொல்வதைக் கேள்.. ராமன் எனும்எனக்கு இவ்ளோ பெரிய மதிப்புக் கிடைத்தது , என்னால் என்றா நினைக்கிறாய்?..   சத்தியமாக இல்லை, எனக்குக் கிடைத்த புகழ், பெருமை, கெளரவம் அத்தனையும், உன்னால்தான் கிடைத்தது சீதா..."

"உலகில் பல ராமன்களைக் காட்டலாம், ஆனால் ஒரு சீதையைக் காட்டுவதென்பது மிகப்பெரிய கஸ்டம்.."

 “ஒரு கணவனுக்கு அமையும் மனைவி, மிக நல்லவவாக, ஒழுக்கமுடையவவாக, அன்பாலும்  அறிவாலும் சிறந்து விளங்குவதால் மட்டுமே, அக்கணவனுக்குப் பெருமை, அக் கணவனால் தலை நிமிர்ந்து நடக்க முடியும்.  ஒரு ஆண் மிக நல்லவர், வல்லவர், ஒழுக்கமானவராக இருப்பினும், அவரது மனைவி ஒழுக்கமின்றி இருப்பின், அவ் ஆணால் தலை நிமிர்ந்து நடக்க முடியாது”.

அதனால்தான் சீதா, என் பெயரோடு உன்பெயரையும் இணைத்து வைத்தேன்.. சீதாராமன், வைதேகிராமன், ஜானகிராமன், லக்ஸ்மிராமன் இப்படி. இப்போ சொல் சீதா என்னை மன்னிக்க மாட்டாயா?..."

செண்டிமெண்ட்டுக்கு அடிமையானவர்கள்தானே பெண்கள்:),  சீதா மட்டும் விதிவிலக்கா என்ன?:)..

"மன்னிப்பதென்ன.. நான் பழசை எல்லாம் மறந்தே விட்டேன், இனிமேல் அதுபற்றிப் பேசமாட்டேன்.. " எனக்கூறி, கண்ணால் ஜாடை காட்டி, சீதா, ராமனை மன்னித்தா:).. சீதாவும் ராமனும் நல்ல கணவன் மனைவி மட்டுமல்ல, நல்ல நண்பர்களும்தான்:).

ஊசிக்குறிப்பு:
 “நல்ல நண்பர்கள் மறப்பார்கள்..  நம்மை அல்ல நாம் விட்ட தவறுகளை.. அதனை நாம் உணர்ந்து வருந்தும்போது”.... இவ்வரிய தத்துவத்தை, உங்களுக்காகக் காவி வந்தவர், 
உங்கள் பேரன்புக்கும், பெருமதிப்பிற்கும் உரிய புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்:)..

[ஆவ்வ்வ்வ்வ் பென்சில் பேப்பர், நோட்புக் என பல எடுத்து, பலபக்கத்தாலும் தொகுத்து, கிட்டத்தட்ட ஒரு புரொஜக்ட் ஆகவே இதை செய்து முடித்தேன் என்பது.. அந்தப் பரம் பொருளுக்கே வெளிச்சம்:)].. நன்றி வயக்கம் _()_.







தமிழ்மணம்.

128 கருத்துகள்:

  1. ஆஆவ் !! மியாவ் கதைக்கு நான்தான் first tttttt :)

    பதிலளிநீக்கு
  2. அம்மாடியோவ் மூச்சு வாங்குது டாஷ்போர்டுக்கும் எங்காபிளாக்குக்கும் மாறி மாறி பாய்ஞ்சி ஓடியதில்

    பதிலளிநீக்கு
  3. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.....துரை சகோ,

    துரை சகோ நேற்று பணிச்சுமை என்று சொல்லியிருந்தீர்கள் நலமா?!

    கீதா

    பதிலளிநீக்கு
  4. காலை வணக்கம் துரை அண்ணா அண்ட் ஸ்ரீராம்

    பதிலளிநீக்கு
  5. ஆ இன்று அதிராவின் கதையா....வாசிக்கிறேன்....கும்மி அடிக்க நிறைய இருக்குமே!!!! பார்க்கணும்...அதிரா நீங்க இன்றைக்கு எங்க ஒளிஞ்சாலும் கண்டு பிடிச்சுருவோம்......ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  6. மிக அழுத்தமாக அமைந்திருக்கின்றது கதை.. அழகு..

    பதிலளிநீக்கு
  7. ஏஞ்சல் மீ டூ

    நான் டாஶ் போர்ட் போகாமல் எ பி தளத்தையே ரெஃப்ரெஷ் பண்ணி பார்த்துட்டேடேஏஏஏஏஏஏஏஏஏஏஏ

    கீதா

    பதிலளிநீக்கு
  8. இரவு வணக்கம் இல்ல இல்ல உங்களுக்கும் னெக்ஸ்ட் டே ஸ்டார்ட்டட் ஸோ காலை வண்க்கம்...ஏஞ்சல்

    கீதா

    பதிலளிநீக்கு
  9. குட்மார்னிங் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம்..
    நேற்று இருந்தபடிக்கு இல்லை..

    நலம் கேட்ட கீதா அவர்களுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  11. உண்மையில் இன்று செவ்வாய்க்கிழமை என்பதே மறந்து புதன் கிழமை என்றெண்ணி சும்மா இருந்தேன்! வாட்ஸாப்பில் நேற்றைய வம்பு அரட்டையில் விளைவு! உங்கள் காலை வணக்கச் செய்திகள் பார்த்தே முழித்தேன், விழித்தேன்!!!

    பதிலளிநீக்கு
  12. ஸ்ரீராம் இன்று ஓடி வருவார்....அனுஶ்கா படம்...வாவ்!!!

    எங்கள் அரம சங்கத்தின் சார்பில் அனுஷ்கா படம் போட்டு எங்களை மகிழ்வித்த அதிரா அவர்களுக்கு மிக்க நன்றியோவ்!!!! ஹான் அதுக்காக நாங்க (ஏஞ்சலும்) கதைல கும்மி அடிக்க மாட்டோம்னு நினைக்காதீங்க ஹா ஹா ஹா ஹா சரி அப்புறம் வரேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  13. உண்மையில் இன்று செவ்வாய்க்கிழமை என்பதே மறந்து புதன் கிழமை என்றெண்ணி சும்மா இருந்தேன்! வாட்ஸாப்பில் நேற்றைய வம்பு அரட்டையில் விளைவு! உங்கள் காலை வணக்கச் செய்திகள் பார்த்தே முழித்தேன், விழித்தேன்!!!//

    ஹா ஹா ஹா ஹா அதைத் தொடங்கியது யார்!!! அவரைப் பிடிக்கணும்! ஹா ஹா ஹா ஆனா ரொம்ப ரசித்தேன் அங்கு வம்பை

    கீதா

    பதிலளிநீக்கு
  14. ஹாஹாஆ :) அதிரா பாஷையில் அதிராமியாவ் குறும்போடு ஒரு கதை .சூப்பர் :)

    பதிலளிநீக்கு
  15. அனுஷ்க்கா வும் அவரது ஹீரோவும் யாரை பார்த்து அம்பு எய்யறாங்க :) எதுக்கும் ஒளிஞ்சிக்கோங்க மியாவ் :)

    பதிலளிநீக்கு
  16. அவ்வ் எங்க மங்கை மிஸ் குட்டி ராமன் கூனிபாட்டியின் முதுகில் கல்லெறிஞ்ச ஸ்டோரியை சொல்வார் ..நீங்களும் அதே ஸ்டோரியை சொன்னதால் அவர் க்ளாஸ்மேட் என்று நினைக்கிறேன் :) அதிரா டீச்கர்

    பதிலளிநீக்கு
  17. //ஆனால் ஒருவரின் உணர்வுகளோடும், குறைபாடுகளோடும், கிண்டல் கேலி பண்ணி விளையாடுவது நகைச்சுவை ஆகாது. //

    சத்தியமான உண்மை ..தெரியாம செஞ்சிடறோம் அது எவ்ளோ பாதிப்புகளை ஏற்படுத்திடுது இல்லையா .மிகவும் அருமையான கதை
    மேக்கப் மேட்டருக்கு நாளைக்கு வரேன்

    பதிலளிநீக்கு
  18. அதிரா உங்கள் அறிமுகமே ஹா ஹா ஹா ஹா ரசித்தேன் காமெடியாக வழக்கம் போல்...சூப்பர்,

    கதை எனக்குப் பிடித்திருந்தது. உங்கள் ஸ்டைலில் நன்றாக இருக்கிறது அதிரா.....நீங்கள் சொல்லும் இந்த மூன்றும் தவிர இன்னும் சில என் வினோதினி பாட்டியிடம் விவாதம் செய்வதாக அமைத்திருந்தேன்......இதைச் சொன்னதும் பாட்டி ரொம்ப வேதனைப் படுவதாகவும்...அப்புறம் ஸ்வாமி அறையில் விளக்கேற்றி ராமனிடம் பாட்டி மன்னிப்பு கேட்பதாகவும் எழுதியிருந்தேன்.....நீளம் கருதி எடுத்துவிட்டேன்...

    மீண்டும் வருகிறேன்...கதை படிக்கும் ஆவலில் கண்ணழகியை மறந்தேன்....வருகிறேன் மீண்டும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  19. ஹாஹாஹா, வழக்கமான அதிரா டச்! ஆனால் கூனியின் முதுகில் ராமர் வில்லால் அடிப்பது எல்லாம் ராமாயணத்தில் வராது. பிற்சேர்க்கை! :))) மற்றபடி எல்லாவற்றையும் நல்லா நினைவு கூர்ந்து மிக அழகாகவும் அருமையாகவும் எழுதி இருக்கிறார் அதிரா. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  20. கூனி என்ற மந்தரையின் பாத்திரமே ராமனுக்குப் பட்டாபிஷேஹம் என தசரதன் அறிவித்த பின்னால் தான் வரும்.

    பதிலளிநீக்கு
  21. அதிரா உங்களுக்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள்....பொக்கேக்கள்! எதுக்குத் தெரியுமா இப்படி ஷார்ட்டாக எழுதுவதற்கு. நானும் எவ்வளவோ முயற்சி செய்கிறேன்...முடியவில்லை. ஒரு கதைக் கரு தோன்றியதும் காட்சிகள் மனதில் விரிகிறது....கதையும் அபப்டியே நகர்கிறது. அதன் பின் லாஜிக் பற்றி மனம் சிந்திக்கிறது....யதார்த்தம் இருக்கானு யோசிக்கிறது...காட்சிகள் சரியாகக் கோர்வையாக வருதானு பார்த்து...இபப்டிப் பல தோன்றி கதை நீண்டு விடுகிறது...பின்னர் என்னதான் எடிட் செய்தாலும், யதார்த்தம் வேண்டி சொல்லப்படும் வர்ணனைகளை நீக்கினாலும்... ஓரளவிற்குத்தான் சுருக்க முடிகிறது....இந்த கீதாவிற்குச் சிறு கதை எழுதுவது என்பதே சவாலாகத்தான் இருக்கு. ஒரு பக்கக் கதை...ஆஆஆ ஹெர்குலியன் டாஸ்க்!!! என்றாலும் முயற்சி செய்கிறேன்...செய்துகொண்டேஏஏஏஏஏஏ இருக்கிறேன்... இங்கு பகிரப்படும் பல கதைகளை எழுதுபவர்கள் சிறிதாகவும், சிலர் ஒரு பக்கக் கதைகள் எழுதுவதில் வல்லவராகவும் மிளிர்கிறார்கள்....மிளிர்கிறீர்கள்!!! ஹாட்ஸ் ஆஃப்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  22. கூனியின் முதுகில் ராமர் வில்லால் அடிப்பது எல்லாம் ராமாயணத்தில் வராது. பிற்சேர்க்கை! :))) // ஓ!!!! எனக்கும் என் பாட்டி இந்தக் கதயைச் சொல்லியிருக்கிறாரே...கீதாக்கா இதையும் உங்கள் மூலமாக அறிகிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  23. குடிசையின் உள்ளே பெரீய பார்த்றூம்.. அதன் ஷவரை திறந்துவிட்டு, சீதா குளிச்சுக் கொண்டிருக்கிறா,// ஹை காட்டில் பாத்ரூம் ஷவர் எல்லாமா..அதுவும் ராமர் சீதையின் காலத்திலா அட!!.அப்போ அது சுற்றுலாத் தளமோ...ராமரும் சீதையும் போனது?!! 2017??!!! ஹா ஹா ஹா ஹா....சரி எந்தக் காடு எனச் சொல்லிவிட்டுப் போங்கோ...எங்கள் குடும்பத்தில் நெருங்கிய உறவினர்கள் யாரும் அதிகம் போகாத காட்டில் இருக்கும் இடங்களுக்குச் செல்லத் திட்டமிட்ட போது நானும் மகனும் சென்றோம்.. அப்போது அங்கு ந்தியில்தான் குளிக்கணும்....உடை மாற்றுவது கூட மரங்களுக்கிடையில்தான்....பெரிய போர்வையால் சுற்றிக் கட்டி ரூம் போலச் செய்து அதற்குள் உடை மாற்றுவோம்.

    சரி சரி போனால் போகிறது இது அதிராவின் கதையாயிற்றே!! ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  24. அனுஷ்க்கா வும் அவரது ஹீரோவும் யாரை பார்த்து அம்பு எய்யறாங்க :) எதுக்கும் ஒளிஞ்சிக்கோங்க மியாவ் :)//

    ஏஞ்சல் அது என்ன தெரியுமா...இந்த அனுஷ்கா சீதை...பாகுபலி ராமன்.....ரெண்டுபேரும் ரெடியா இருக்காங்க பூசாரைமிரட்டிட....நாங்க ஃப்ரென்ட்ஸ் ஆக்கும்...கதை அப்படித்தான் முடிக்கோணும் இல்லைனா....என்று மிரட்ட பூஸார் தப்பிச்சுட்டாரு...ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  25. @துரை செல்வராஜு சார் - எனக்கு மட்டும் சொல்லுங்கள். கதை அழுத்தமா இருக்குன்னு சொன்னது bold lettersல ஶ்ரீராம் கதையை publish பண்ணினதை நினைத்துத்தானே.

    பதிலளிநீக்கு
  26. இந்தக் கதையில், நான் படித்த பகுதிவரை ராமன் ஸ்மார்ட்போனில் வாட்சப் செய்தி பார்த்துக்கொண்டிருந்தான்னு வரலை. ஷவர், காட்டில் நாற்காலி எல்லாம் வந்தாச்சு. முழுதும் படித்துவிட்டு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  27. லக்‌ஷ்மிராமனா? இந்தக் பேரே கேள்விப்பட்டதில்லையே!

    வித்தியாசமான பிரசங்கம்தான். இன்னும், அயோத்தியாவில் இருந்த மற்றப் பெண்கள்லாம் தன்னை இராமன் திருமணம் செய்துகொள்ளாத்தால் விட்ட சாபம்னு மட்டும்தான் எழுதலை. ஒருவேளை அந்த lineஐ நான் miss பண்ணிவிட்டேனோ?

    சரி சரி.. கதைல விட்ட தவறுகளையெல்லாம் உணர்ந்து வருந்தும்போது எங்கிட்ட சொல்ல மறக்காதீங்க. நான் மறக்கணும்.

    Jokes apart, நல்லா எழுதியிருக்கீங்க. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  28. கட்சிக்காரங்க எல்லாம் வெள்ளை மெலிய சட்டையில்,பாக்கெட்ல ஜெ படத்தை வச்சுக்கிட்டே இருப்பாங்க. ஜெ கண்ணுல படணும்னு. இப்போ இடுகைல அனுஷ்கா படத்தைச் சேர்ப்பதும் அதுக்கா?

    பதிலளிநீக்கு
  29. தங்களது பாணியில் ரசிக்க வைத்தது கதை எழுதிய எழுத்தாளினி அவர்களுக்கும், பகிர்ந்த ஸ்ரீராம்ஜி அவர்களுக்கும், நன்றி.

    பதிலளிநீக்கு
  30. எல்லோரும் எழுத தோதுவாக இராமாயணக்கதை அதில் கற்பனயாக எங்கள் ப்ளாகில் ச்சிதை ராமனை மன்னிப்பது இன்னும் எத்தனை மன்னிப்புகளோ

    பதிலளிநீக்கு
  31. @துரை செல்வராஜு சார் - எனக்கு மட்டும் சொல்லுங்கள். கதை அழுத்தமா இருக்குன்னு சொன்னது bold lettersல ஶ்ரீராம் கதையை publish பண்ணினதை நினைத்துத்தானே.//

    ஹா ஹா ஹா ஹா நெல்லை செம!!

    அது போல லஷ்மி ராமன் சொல்ல வந்தேன் இப்ப நீங்களே சொல்லிருக்கீங்க...ஒரு வேளை சீதை ராமனை மன்னித்ததும் யாரேனும் மாமி மறந்து போய் ஸீதா கல்யாணம்னு பாடறதுக்குப் பதிலா லக்ஷ்மீ கல்யாணம்னு பாடி ஆரத்தி எடுத்துருப்பாங்களோ..பிரஸங்கம் முடிந்ததும்??!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  32. லக்ஷ்மி கல்யாணம் அதிராவுக்கு லஷ்மி ராமனு கேட்டுருச்சு போல!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  33. வித்தியாசமா பார்வையில்....அதிரா ... நன்று

    பதிலளிநீக்கு
  34. வந்திட்டேன்ன்ன்ன்ன்ன் நான் திரும்ப வந்திட்டேன்ன்ன் ஹா ஹா ஹா துக்கம்!!!:))..

    சீதை ராமனை மன்னிச்சிட்டாவோ நன்னி.. நன்னி...:))

    என் கதை படிக்க ஜாமம் ஜாமமா எல்லாம் மக்கள் முழிச்சிருந்திருக்கிறாங்க என நினைச்சு புல்லாஆஆஆரிச்சுப்போனேன்.

    கூகிளிடம் கேட்டேன்.. எனக்கு சீதை ராமன் படங்கள் வேணும் என.. அனுக்கா படத்தைக் காட்டினார்.. இதுவும் நல்லாத்தானே இருக்கு எனப்ப் போட்டேன் அவ்வளவே:).. இதுக்காக நான் அனுக்கா படம் தேடிப் போட்டிருக்கிறேன் என நினைச்சு எதிர்க்கட்சியினர் குமுறிடக் கூடாதெனக் கேட்டுக் கொள்கிறேன்:))[இதை நான் நெல்லைத் தமிழனுக்குச் சொல்லல்லே:))]... கீதா நோட் திஸ் பொயிண்ட்:)..

    பதிலளிநீக்கு
  35. ஐல ஒரு முக்கிய பொயிண்ட் விட்டுப்போச்ச்ச்ச்ச்:)).. அனுக்காவின் எதிர்க்கட்சி எனச் சொன்னேன்:))

    பதிலளிநீக்கு
  36. முதலாவதா எங்கள் புளொக்கிலே அஞ்சுவோ அவ்வ்வ்வ்:).. துரை அண்ணனுக்கு இடைக்கிடைதான் அட்டாக் குடுக்கச் சொன்னேன்:).. இப்பூடித்தொடர்ந்து குடுக்கிறீங்களே:))..

    ///Angelin said...
    அம்மாடியோவ் மூச்சு வாங்குது டாஷ்போர்டுக்கும் எங்காபிளாக்குக்கும் மாறி மாறி பாய்ஞ்சி ஓடியதில்///
    ஹா ஹா ஹா முதல் கொமெண்ட் போடுவதென்பது அவ்ளோ ஈசியில்லை:)).

    //Angelin said...
    அனுஷ்க்கா வும் அவரது ஹீரோவும் யாரை பார்த்து அம்பு எய்யறாங்க :) எதுக்கும் ஒளிஞ்சிக்கோங்க மியாவ் :)//

    அது அவர்கள் இருவருக்கும் குறுக்க குறுக்க வரும் ஸ்ரீராமுக்காகக் கூட இருக்கலாம்:) எனக்கெதுகு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:))

    பதிலளிநீக்கு
  37. வாங்கோ துரை அண்ணன்...

    //துரை செல்வராஜூ said...
    மிக அழுத்தமாக அமைந்திருக்கின்றது கதை.. அழகு..//
    ஹா ஹா ஹா அழுத்தம் எண்டால் என்ன?:) எனக்கும் டவுட்டு வருதே?:).. ஒரு கம்பபாரதியைச் சோதிக்கலாமோ?:))..

    ஹா ஹா ஹா மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  38. வாங்கோ கீதா வாங்கோ
    ///எங்கள் அரம சங்கத்தின் சார்பில் அனுஷ்கா படம் போட்டு எங்களை மகிழ்வித்த அதிரா அவர்களுக்கு மிக்க நன்றியோவ்!!!! ///

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:) இது எப்ப தொடக்கமாக்கும்?:).. நான் கொஞ்சம் லேட்டாத்தான் வருவேன்.. இப்போ ச்ச்சும்மா ட்ரெயிலருக்காக வந்தேன்:))

    பதிலளிநீக்கு
  39. வில்லம்போடு அனுஷ்காவைப் பார்த்ததும் வெள்ளி வீடியோவென இருந்தேன். அம்பு வருவது அதிராவிடமிருந்து எனத் தெரிந்தவுடன் அதிர்ந்தவாறே படிக்க ஆரம்பித்தேன்.
    கதைக்கு நடுவே பிங்க்கில் அதிரா PhD-யின் ஆழமான கருத்துகள்வேறு குலைநடுங்கவைத்தன. டென்ஷனில் காஃபியை உறிஞ்ச அது ஆறிப்போனதில் மனம்வெதும்பி மைக்ரோவேவை நாடினேன். செவ்வாய்க் காலையில் இத்தனை டென்ஷனா?

    அதிராவைப் படித்தமுடித்தவுடன் சீதையென்ன, எனக்கே ராமன்மேல் கோபம் கோபமாய் வருகிறது..

    பதிலளிநீக்கு
  40. வாங்கோ ஸ்ரீராம்....
    //ஸ்ரீராம். said...
    உண்மையில் இன்று செவ்வாய்க்கிழமை என்பதே மறந்து புதன் கிழமை என்றெண்ணி சும்மா இருந்தேன்! வாட்ஸாப்பில் நேற்றைய வம்பு அரட்டையில் விளைவு!///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எனக்கென்னமோ அனுக்கா படம் பார்த்த விளைவாக இருக்குமோ என எண்ணத் தோணுதே:))..
    இப்போதான் புரியுது நீங்க எதனால பிசியாக இருக்கிறீங்க என:))
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  41. @ஏகாந்தன் சார் - அதிராவைப் படித்தமுடித்தவுடன் சீதையென்ன, எனக்கே ராமன்மேல் கோபம் கோபமாய் வருகிறது.. - நீங்க சொல்ல நினைத்தது, 'ஸ்ரீராமன் மேல் கோபம் கோபமாய் வருகிறது' என்றுதானே.

    பதிலளிநீக்கு
  42. @ நெல்லைத் தமிழன் said...

    ***** @துரை செல்வராஜு சார் - எனக்கு மட்டும் சொல்லுங்கள். கதை அழுத்தமா இருக்குன்னு சொன்னது bold lettersல ஶ்ரீராம் கதையை publish பண்ணினதை நினைத்துத்தானே.*****

    அதக் கூட மன்னிச்சு விட்டுடலாம்!..

    >>> அந்த அடர்ந்த காட்டிலே ஒரு குடிசை.. குடிசையின் உள்ளே பெரீய பார்த்றூம்.. அதன் ஷவரை திறந்துவிட்டு, சீதா குளிச்சுக் கொண்டிருக்கிறா,... <<<

    இந்த வரியெல்லாம் படிச்சதும் அந்த ராமனே ஒரு நிமிஷம் திகைச்சுப் போய்ட்டதா கேள்வி..

    அது மட்டுமா?.. அனுமார் இன்னும் அரை மயக்கத்தில தான் இருக்கிறாராம்..

    கம்பபாரதியோட ராமாயணத்தைக் கேட்ட அவருக்கே இந்தக் கதி..ன்னால்
    நாமெல்லாம் எம்மாத்திரம்!?..

    ஸ்விம்மிங் பூல்... ல சீதை குளிச்சுக்கிட்டு இருந்தா..ன்னு சொன்னால் கூட ஏத்துக்கலாம்..
    ஏன்னா அம்மாம் பெரிய காட்டுக்குள்ள தாமரை பூத்த தடாகம் ஒன்னு கூடவா இல்லாம போயிடும்!...

    ஆனால் - இந்தக் கம்பன் வீட்டுக் கதிரை - கதை எழுதறேன்..ன்னு சொல்லி!.. .....!..

    நல்லவேளை.. ராமன் கிழவிய ஏகே 47 டுப்பாக்கியால சுட்டார்..ன்டு எழுதல்லை..

    அடாடா.. யாராரெல்லாம் இன்னும் எப்படியெல்லாம் கதைக்கப் போறாங்களோ..- ண்டு ராமனே கவலையா இருக்கிற இந்த நேரத்தில - அழுத்தமான கதை..ன்னு நான் சொன்னதுக்கு என்ன அர்த்தம்.. தெரியுமா!?..

    நான் சொன்னது கதையை இல்லை.. கதையை!..

    கதை அழுத்தமா இருந்தாத் தானே தலையில போடுறப்ப - டம்..ண்டு இருக்கும்!..
    அப்பளம் மாதிரி இருந்தாக்கா என்னதுக்கு ஆகும்?..

    ஸ்ரீராமனே கதையை ஏத்துக்கிட்டப்போ -
    நாம புதன் கிழமை புதிருக்காக காத்திருப்போம்!..

    பதிலளிநீக்கு
  43. @ கம்பபாரதி athira said...
    வாங்கோ துரை அண்ணன்...

    //துரை செல்வராஜூ said...
    மிக அழுத்தமாக அமைந்திருக்கின்றது கதை.. அழகு..//

    ஹா ஹா ஹா அழுத்தம் எண்டால் என்ன?:) எனக்கும் டவுட்டு வருதே?:).. ஒரு கம்பபாரதியைச் சோதிக்கலாமோ?:))..

    முழு ராமாயணத்தையும் கம்பபாரதி (!) மொழி பெயர்த்தால் எப்படி இருக்கும்!?..

    ஓ..ராமா!.. எங்களைக் காப்பாத்துங்..கோ!...

    பதிலளிநீக்கு
  44. @ கீதா//
    கதை எனக்குப் பிடித்திருந்தது. உங்கள் ஸ்டைலில் நன்றாக இருக்கிறது அதிரா.....நீங்கள் சொல்லும் இந்த மூன்றும் தவிர இன்னும் சில என் வினோதினி பாட்டியிடம் விவாதம் செய்வதாக அமைத்திருந்தேன்///

    ஹா ஹா ஹா முனிப்பாட்டி இன்னும் சொல்ல வெளிக்கிட்டா நானும் வாணாம்.. இதுவே போதும் .. என் ரசிகர்கள் பொத்துப் பொத்தென மயங்கிடுவினம்:).. இதுக்கு மேல சொக் கொடுத்தால் எனக்குச் சங்கிலி வரும் எண்டு ஜொல்லிட்டேன்ன்ன்:))

    பதிலளிநீக்கு
  45. //கரந்தை ஜெயக்குமார் said...
    கதை அருமை//

    வாங்கோ.. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  46. vஆங்கோ கீதாக்கா..

    //Geetha Sambasivam said...
    ஹாஹாஹா, வழக்கமான அதிரா டச்! ///
    மியாவும் நன்றி..

    ////ஆனால் கூனியின் முதுகில் ராமர் வில்லால் அடிப்பது எல்லாம் ராமாயணத்தில் வராது. பிற்சேர்க்கை! :)))///
    அவ்வ்வ்வ்வ் எனக்கு சின்ன வயசிலேயே இந்த கூனிக் கதை.. அப்பா சொல்லியிருக்கிறார்ர்... ராமன் குழந்தையாக இருந்தபோது விளையாடினார் என்பதாலதானே.. காக்கா போனேன்ன்:).. பெரியவரானபின்னரா விளையாடினார் இப்பூடி?:) கர்ர்ர்ர் இது தெரியாமல் போச்சே.. தெரிஞ்சிருந்தால்ல்ல்ல் தெரிஞ்சிருந்தால்ல்ல்.. சரி வாணாம் விட்டிடலாம்:)).. எல்லோரும் டென்சனாகிடப்போகினம் என்னால:)) ஹா ஹா ஹா:))

    // மற்றபடி எல்லாவற்றையும் நல்லா நினைவு கூர்ந்து மிக அழகாகவும் அருமையாகவும் எழுதி இருக்கிறார் அதிரா. பாராட்டுகள்//

    ஹா ஹா ஹா ஆவ்வ்வ்வ்வ் மிக்க நன்றி கீதாக்கா... இது எவ்ளோ கஸ்டப்பட்டுத் தொகுத்து, பின் வெட்டிக் கொத்தி.. முடிச்சேன் தெரியுமோ?:).

    பதிலளிநீக்கு
  47. //Thulasidharan V Thillaiakathu said...
    அதிரா உங்களுக்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள்....பொக்கேக்கள்! எதுக்குத் தெரியுமா இப்படி ஷார்ட்டாக எழுதுவதற்கு//

    மியாவும் நன்றி கீதா... இதுகூட, பெரிசாகி விட்டதோ எனப் பயந்து கொண்டே இருந்தேன்... ஏனெனில் எப்பவும் என் குறிக்கோள்.. படிப்போருக்கு போரடித்திடக்கூடாது என்பதே.

    பதிலளிநீக்கு
  48. ///Thulasidharan V Thillaiakathu said...
    குடிசையின் உள்ளே பெரீய பார்த்றூம்.. அதன் ஷவரை திறந்துவிட்டு, சீதா குளிச்சுக் கொண்டிருக்கிறா,// ஹை காட்டில் பாத்ரூம் ஷவர் எல்லாமா..அதுவும் ராமர் சீதையின் காலத்திலா அட!!.அப்போ அது சுற்றுலாத் தளமோ...ராமரும் சீதையும் போனது?!! 2017?//

    ஹா ஹா ஹா கீதா.. உங்களுக்கு ராமாயணமே தெரியாது போல கர்:)) .. என் பிரசங்கம் நடக்கும் இடங்களுக்கு வரலாமே:)..

    அச்சுவேலி:).. வெரி சோரி டங்கு ஸ்லிப்ட்:) ஆக்ஸுவலி.. அவர்கள் துறவு என்னும் பெயரில் வனவாச சுற்றுலா போனது ஃபிஃப்ரீன் நோட் நோட் ல என நினைக்கிறேன்:)..

    அது ஒரு வகையில் சுற்றுலாத்தானே?:) இல்லை எனில் ஒரு மாமியையே சமாளிக்க முடியாத அக்காலத்தில, வீட்டில் இருந்திருந்தா???.. கூட்டுக் குடும்பத்தில் மூன்று மாமியாட்கள்... எப்பூடிச் சீதை ஜமாளிச்சிருப்பா?? ஜொள்ளுங்கோ:)).. காட்டுக்குப் போகாமல் இருந்திருந்தாலும் ஜீதை டீக்குளிச்சே இருப்பா:)).. அதனாலதான்.. இதை விடக் காடு எவ்ளோ மேல் என ஓடித்தப்பிட்டா:) புத்திஜாலிப்பெண்:)).. ஹா ஹா ஹா..

    ஓ நீங்களும் வனவாச சுற்றுலாப் போனீங்களோ.. வெளிநாட்டிலும்.. இப்படி அடர்ந்த காட்டில்.. பல சுற்றுலாத் தளங்கள் இருக்கு.

    பதிலளிநீக்கு
  49. ///நெல்லைத் தமிழன் said...
    @துரை செல்வராஜு சார் - எனக்கு மட்டும் சொல்லுங்கள். கதை அழுத்தமா இருக்குன்னு சொன்னது bold lettersல ஶ்ரீராம் கதையை publish பண்ணினதை நினைத்துத்தானே.///

    வாங்கோ நெல்லைத்தமிழன்...
    விடிஞ்சு இவ்ளோ நேரமாச்சே.. இன்னும் எந்த அசம்பாவிதத்தையும் காணல்லியே.. அவ்ளோ ஜூப்பராவா இருக்கு என் கதை என நினைச்சு... விடிய எழும்பி மீண்டும் நித்திரையாகிட்டேனா.. சத்தியமா ஒரு கனவு...

    அது ஸ்ரீராம் வீட்டுக்கு முன்னாலே ஒரு பெரிய ஹோல்.. அதில் ஜிம் போல மெசின்கள் போடப்பட்டிருக்கு.. புளொக்கேர்ஸ் பலர் நிற்கிறார்கள்.. சரியாப் புரியவில்லை, சைட்டிலே ஒரு கதிரையில் கீதாக்கா இருக்கிறா.. என் பக்கத்திலே அஞ்சு நிக்கிறா- பொப் கெயார் கட் எடுத்ததுபோல.... ஸ்ரீராம் ஒரு எக்ஸசைஸ் சைக்கிள் ஓடினார்.. கொஞ்சம் கறுப்பாக இருந்தார்.. ஆனா கெளதமன் அண்ணனின் முகச் சாயல் தெரிஞ்சது...:)) ஹா ஹா ஹா இது அதிகாலைக் கனவு.. சத்தியமா கண்டேன்.

    பதிலளிநீக்கு
  50. Comments super! Kathai pathi ethachum sonnal Athira kalaippadhaga solla koodum :)))

    பதிலளிநீக்கு
  51. //நெல்லைத் தமிழன் said...
    இந்தக் கதையில், நான் படித்த பகுதிவரை ராமன் ஸ்மார்ட்போனில் வாட்சப் செய்தி பார்த்துக்கொண்டிருந்தான்னு வரலை. ஷவர், காட்டில் நாற்காலி எல்லாம் வந்தாச்சு. முழுதும் படித்துவிட்டு வருகிறேன்.///

    ஐயா ஜாமீஈஈஈஈஈ.. வால் தப்புவதே கஸ்டம் போல இருக்கே இன்று:))
    https://media.giphy.com/media/ER3Z7YGyFqorm/giphy.gif

    பதிலளிநீக்கு
  52. //நெல்லைத் தமிழன் said...
    லக்‌ஷ்மிராமனா? இந்தக் பேரே கேள்விப்பட்டதில்லையே!///

    ஹா ஹா ஹா நீங்க அவதாரங்களைப் பற்றி யோசிக்கிறீங்க போல:), நான் சொன்னது.. சீதையாலதான் ராமனுக்குப் புகழ் கிடைத்தது என்பதால, ஆண்குழந்தைகளுக்கு சீதையின் பெயரையும் இணைச்சு வைக்கிறார்கள்... ஆனா பெண்குழந்தைகளுக்கு எங்காவது ராமனின் பெயரை இணைச்சு வச்சதைக் கேள்விப்பட்டிருக்கிறீங்களோ இல்லைத்தானே?:).. அதைத்தான் ஜொன்னேன்:))..

    ////வித்தியாசமான பிரசங்கம்தான். இன்னும், அயோத்தியாவில் இருந்த மற்றப் பெண்கள்லாம் தன்னை இராமன் திருமணம் செய்துகொள்ளாத்தால் விட்ட சாபம்னு மட்டும்தான் எழுதலை.////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நீங்க அடிக்கடி பொல்லுக் கொடுத்தே அடி வாங்குறீங்க... பெண்களைப்பற்றி என்ன நினைச்சுக்கொண்டிருக்கிறீங்க?:)).. ராமன் எங்களுக்கு அண்ணன் மாதிரியாக்கும்:) ஹா ஹா ஹா:))..

    ////சரி சரி.. கதைல விட்ட தவறுகளையெல்லாம் உணர்ந்து வருந்தும்போது எங்கிட்ட சொல்ல மறக்காதீங்க. நான் மறக்கணும்.///

    தவறோ?:) என் கதையிலோ?:) அவ்வ்வ்வ்வ்வ் சூரியன் மேற்கே உதிச்சாலும் உதிக்கலாம் ஆனா அதிரா கதையில் தவறோ?:)).. ஈக்காதூஊஊஊஊஉ ஈக்காதூஊஊஊ ஈக்கவும் கூடாதூஊஊஊஊ:))

    ///Jokes apart, நல்லா எழுதியிருக்கீங்க. பாராட்டுகள்.///

    ஹா ஹா ஹா போட்டுப் புரட்டிப் புரட்டி அடிச்சு உருட்டிப்போட்டு, கூப்பிட்டு வச்சு சொக்கலேட் தாறமாதிரி இருக்கே:)).. ஆவ்வ்வ்வ்வ் இது எழுதாமல் போயிருந்தீங்களெண்டால்.. டக்குப் பக்கென இன்னொரு சமையல் குறிப்புப் போட்டிருப்பேன்ன்:) தப்பிட்டீங்க மிக்க நன்றி:)..

    பதிலளிநீக்கு
  53. ///நெல்லைத் தமிழன் said...
    கட்சிக்காரங்க எல்லாம் வெள்ளை மெலிய சட்டையில்,பாக்கெட்ல ஜெ படத்தை வச்சுக்கிட்டே இருப்பாங்க. ஜெ கண்ணுல படணும்னு. இப்போ இடுகைல அனுஷ்கா படத்தைச் சேர்ப்பதும் அதுக்கா?///

    ஹா ஹா ஹா இப்பூடியெல்லாம் புகை வரும் என நான் ஜத்தியமா:) ஓசிக்கவேயில்லை:)).. இப்போதான் புரியுது ஸ்ரீராம் ஏன் தலைமறைவாகிட்டார் என:))

    பதிலளிநீக்கு
  54. வாங்கோ கில்லர்ஜி.. மிக்க நன்றி. இருப்பினும் கதைபற்றி ரெண்டு வசனம் எழுதாமல் போயிட்டீங்களே கர்:)).

    பதிலளிநீக்கு
  55. //G.M Balasubramaniam said...
    எல்லோரும் எழுத தோதுவாக இராமாயணக்கதை அதில் கற்பனயாக எங்கள் ப்ளாகில் ச்சிதை ராமனை மன்னிப்பது இன்னும் எத்தனை மன்னிப்புகளோ//

    வாங்கோ ஜி எம் பி ஐயா... ராமன் செய்தது சின்னச் சின்னக் குற்றங்களா ஐயா?:).. ஒரே நாளில் டக்குப்பக்கென மன்னிச்சு விடுவதற்கு:)).. அது ஒரு யுகம் போதாது:) ஹா ஹா ஹா.. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  56. வாங்கோ அனு..

    இல்ல நீங்க என் கதையைப் படிக்கவே இல்லை:) இது அந்த தேம்ஸ் நதியின் கிழக்குப் பக்கமாக மிதக்கும் பாசிமேல் சத்தியம்:))... ஹா ஹா ஹா மிக்க நன்றி அனு..

    பதிலளிநீக்கு
  57. //ஏகாந்தன் Aekaanthan ! said...
    வில்லம்போடு அனுஷ்காவைப் பார்த்ததும் வெள்ளி வீடியோவென இருந்தேன். அம்பு வருவது அதிராவிடமிருந்து எனத் தெரிந்தவுடன் அதிர்ந்தவாறே படிக்க ஆரம்பித்தேன்.//

    ஹா ஹா ஹா வாங்கோ ஏகாந்தன் அண்ணன்.. சரவெடியோடு வந்திருக்கிறீங்க:)) என் கீரை வடை சாப்பிட்டு ரொம்ப நாளாச்சே:) இன்னுமா?:))..

    ///கதைக்கு நடுவே பிங்க்கில் அதிரா PhD-யின் ஆழமான கருத்துகள்வேறு குலைநடுங்கவைத்தன. ///

    ஆவ்வ்வ்வ் அஞ்சூஊஊஊஊஊஉ ஓடிக்கமோன்ன்.. ஏகாந்தன் அண்ணனே பட்டம் தந்திட்டார் எனக்கூஊஊஊஊ:)) ஹா ஹா ஹா:))

    ///டென்ஷனில் காஃபியை உறிஞ்ச அது ஆறிப்போனதில் மனம்வெதும்பி மைக்ரோவேவை நாடினேன். செவ்வாய்க் காலையில் இத்தனை டென்ஷனா?///

    ஹா ஹா ஹா இதைப் படிச்சு, என் கோப்பியைக் கீபோர்ட்ல ஊத்திட்டேன்ன் கர்ர்ர்ர்:))..

    ////அதிராவைப் படித்தமுடித்தவுடன் சீதையென்ன, எனக்கே ராமன்மேல் கோபம் கோபமாய் வருகிறது.///
    ஹா ஹா ஹா எறும்பூரக் கற்குழியுமாமே:)).. மெல்ல மெல்ல ராமன் மேல் கோபம் வரும்படி எல்லோர் மனதையும் மாத்திட்ட பெருமை.. அதிராவுக்கே.. சொறி.. கம்பபாரதி அதிராவுக்கே:))..

    மிக்க நன்றி ஏகாந்தன் அண்ணன்.. நீங்க என்னைப் புகழ்ந்ததைப் பார்த்து இங்கின பலருக்குப் புகை வரப்ப்போகுது.. அதுக்குள் ஃபிரீஈஈஈ மோர் சப்ளைக்கு ஏற்பாடு பண்ணப்போறென்ன்ன்:))

    பதிலளிநீக்கு
  58. ///நெல்லைத் தமிழன் said...
    @ஏகாந்தன் சார் - அதிராவைப் படித்தமுடித்தவுடன் சீதையென்ன, எனக்கே ராமன்மேல் கோபம் கோபமாய் வருகிறது.. - நீங்க சொல்ல நினைத்தது, 'ஸ்ரீராமன் மேல் கோபம் கோபமாய் வருகிறது' என்றுதானே.///

    ஹா ஹா ஹா நான் கும்பிட்ட வைரவர் என்னைக் கைவிடேல்லை:).. இப்போதான் புரியுது.. எல்லோரும் என் கதையை ரசிச்சுக்கொண்டிருக்கினம்.. கோபம் கீபம் ஏதும் என்ன்மீது இல்லை:)).. அது வேறு ஆர் மீதோதான் என்பது:)).

    பதிலளிநீக்கு
  59. //துரை செல்வராஜூ said...
    @ நெல்லைத் தமிழன் said...

    ***** @துரை செல்வராஜு சார் - எனக்கு மட்டும் சொல்லுங்கள். கதை அழுத்தமா இருக்குன்னு சொன்னது bold lettersல ஶ்ரீராம் கதையை publish பண்ணினதை நினைத்துத்தானே.*****

    அதக் கூட மன்னிச்சு விட்டுடலாம்!..//

    ஹா ஹா ஹா அப்பாடா மீ சேவ்வ்வ்வ்வ்வ்:))


    ///>>> அந்த அடர்ந்த காட்டிலே ஒரு குடிசை.. குடிசையின் உள்ளே பெரீய பார்த்றூம்.. அதன் ஷவரை திறந்துவிட்டு, சீதா குளிச்சுக் கொண்டிருக்கிறா,... <<<

    இந்த வரியெல்லாம் படிச்சதும் அந்த ராமனே ஒரு நிமிஷம் திகைச்சுப் போய்ட்டதா கேள்வி..

    அது மட்டுமா?.. அனுமார் இன்னும் அரை மயக்கத்தில தான் இருக்கிறாராம்..

    கம்பபாரதியோட ராமாயணத்தைக் கேட்ட அவருக்கே இந்தக் கதி..ன்னால்
    நாமெல்லாம் எம்மாத்திரம்!?..////

    ஹா ஹா ஹா இப்பவாவது புரிஞ்சுக்கோங்க:) என் கதைக்கு மயங்காதோர் இவ்வையகத்தில் இல்லை:) ஆளாளப்பட்ட அனுமனே மயங்கிட்டார் எனில்:)) ஹா ஹா ஹா ஹையோ மீ தேம்ஸ்க்கு ஓடிடுறென்ன்:)).. ஏதும் அந்தர ஆபத்தெனில் குதிச்சிடலாம்ம்:)..

    பதிலளிநீக்கு
  60. //துரை செல்வராஜூ said...
    ஆனால் - இந்தக் கம்பன் வீட்டுக் கதிரை - கதை எழுதறேன்..ன்னு சொல்லி!.. .....!..

    நல்லவேளை.. ராமன் கிழவிய ஏகே 47 டுப்பாக்கியால சுட்டார்..ன்டு எழுதல்லை..///

    ஹா ஹா ஹா முடியல்ல ஜாமீஈஈ என்னால:)).. சே..சே.. ராமன் அவ்ளோ கொடியவரா என்ன?:)).. நான் பொய் எல்லாம் எழுதமாட்டேனாக்கும்ம்:))

    ///ஸ்ரீராமனே கதையை ஏத்துக்கிட்டப்போ -
    நாம புதன் கிழமை புதிருக்காக காத்திருப்போம்!..///

    ஹா ஹா ஹா மனதைத்தேற்றுவதை விட வேறு வழி இல்லை துரை அண்ணன்:)).. “உரலுக்குள் தலையைக் கொடுத்திட்டு இடிக்குப் பயந்தால் முடியுமோ??:)”... இன்னும் அதிராவின் கதைகள்:)) கதை:)) வர இருக்குதெல்லோ. எதுக்கும் கப்பங்கூழ், வரகுக் கஞ்சி இப்பூடிக் குடிச்சு தென்பா இருங்கோ:)).. ஹா ஹா ஹா மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  61. வில்லம்போடு அனுஷ்காவைப் பார்த்ததும் வெள்ளி வீடியோவென இருந்தேன். அம்பு வருவது அதிராவிடமிருந்து எனத் தெரிந்தவுடன் அதிர்ந்தவாறே படிக்க ஆரம்பித்தேன்.
    கதைக்கு நடுவே பிங்க்கில் அதிரா PhD-யின் ஆழமான கருத்துகள்வேறு குலைநடுங்கவைத்தன. டென்ஷனில் காஃபியை உறிஞ்ச அது ஆறிப்போனதில் மனம்வெதும்பி மைக்ரோவேவை நாடினேன். செவ்வாய்க் காலையில் இத்தனை டென்ஷனா?

    அதிராவைப் படித்தமுடித்தவுடன் சீதையென்ன, எனக்கே ராமன்மேல் கோபம் கோபமாய் வருகிறது..//

    ஹா ஹா ஹா ஹா ஏகாந்தன் சகோ...

    கீதா

    பதிலளிநீக்கு
  62. ///துரை செல்வராஜூ said...

    ஓ..ராமா!.. எங்களைக் காப்பாத்துங்..கோ!...////

    ஸ்ஸ்ஸ்ஸ் துரை அண்ணன் என் கதை படிச்ச பின்புமோ தனியே ராமா எனக் கூப்பிடுறீங்க?:).. ஜானகிராமா.. சீதாராமா எனக் கூப்பிடோணுமாக்கும்:)).. ஹா ஹா ஹா:))

    பதிலளிநீக்கு
  63. //middleclassmadhavi said...

    வாங்கோ மிடில்கிளாஸ்மாதவி...


    Comments super!////
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

    //// Kathai pathi ethachum sonnal Athira kalaippadhaga solla koodum :)))///
    ஹா ஹா ஹா மேலே எல்லோரும் அதைத்தானே பண்ணியிருக்கினம்:) இதில உங்களை மட்டும் என்ன புதிசா சொல்லிடப்போறேன்ன்ன்:))... எல்லாமே மகிழ்ச்சிக்காகத்தானே.. சந்தோசமாய்க் கலாய்க்கலாம் என்னை.. அதில் தப்பேதும் இல்லை.. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  64. ///Thulasidharan V Thillaiakathu said...
    அதிராவைப் படித்தமுடித்தவுடன் சீதையென்ன, எனக்கே ராமன்மேல் கோபம் கோபமாய் வருகிறது..//

    ஹா ஹா ஹா ஹா ஏகாந்தன் சகோ...

    கீதா///

    கீதா ஏகாந்தன் அண்ணனே இப்போ என் கட்சிக்கு மாறிட்டார்ர்ர்:)) ஜீதை:) கட்சிக்கு:)).. ஹா ஹா ஹா .. மீ எஸ்கேப்ப்ப்ப்:)).

    பதிலளிநீக்கு
  65. @நெல்லைத்தமிழன்:

    //..நீங்க சொல்ல நினைத்தது, 'ஸ்ரீராமன் மேல் கோபம் கோபமாய் வருகிறது' என்றுதானே.//

    கலர்ப்படத்துடன் ஆரம்பிக்கும் சிறுகதை, ஸ்பாட்லைட்டில் பூனை, இடையிடையே கலர்ஃபுல் ஹைலைட்ஸ்.. ம்ம்..ஸ்ரீராமன் மீது கோபப்படக் காரணங்கள் இருக்கின்றன..

    பதிலளிநீக்கு
  66. ஆ!! இது என்ன புது அவதார்!!! கம்பபாரதினு ஓ அதிரா!!! இங்க கேட்க ஆளில்லையா ஏஞ்சல் வேர் ஆர் யு! ஓ சர்ச் ஆக்டிவிட்டிஸ்!??! இல்ல ஸ்னோனால வரலியா...ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  67. ஆஅ அதிரா ஸாரி கம்பபாரதி நீங்கள் பிரசங்கம் எல்லாம் கொடுக்கறீங்களா....கூட்டமே இருக்காதுதானே....மணல்ல கீச்சு கீச்சுத்தாம்பாளம் விளையாடும் பிள்ளைகள் மட்டும்தானெ இருப்பாங்க??!!! எங்க ஊர்ல அப்படித்தான் திருவிழாவுல பிரசங்கம் நடந்தா பிள்ளைகள் மட்டும்தான் இருப்பாங்க....

    அதான் கேட்டேன்....சரி போனா போகுத் நான் வந்து உட்காரரேன்...என்னைப் பாத்து ஒரு நாலு பேர் வரமாட்டாங்க??!!

    கீதா

    பதிலளிநீக்கு
  68. ////Thulasidharan V Thillaiakathu said...
    ஆ!! இது என்ன புது அவதார்!!! கம்பபாரதினு ஓ அதிரா!!! இங்க கேட்க ஆளில்லையா ஏஞ்சல் வேர் ஆர் யு! ஓ சர்ச் ஆக்டிவிட்டிஸ்!??! இல்ல ஸ்னோனால வரலியா...ஹா ஹா//

    இங்கின ஒரு மனிசன்:) பின்னூட்ட மழையால கதறிக் கதறி அழுதுகொண்டிருக்கிறேன்ன்ன்ன்ன்:).. இந்த ரண களத்திலயும் ஒரு குளுகிளுப்புக் கேய்க்குதோ?:)).. துணைக்கு ஆட்சேர்க்கிறாய்களாமாம்ம்ம்ம்ம்:))... அவ இப்ப வருவா பாருங்கோ சென்னை எக்ஸ்பிரெஸ் வேகத்தில:)) ஹா ஹா ஹா..:)

    பதிலளிநீக்கு
  69. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கம்பபாரதி ???
      எது மதுரை மாவட்டம் தேனி பக்கத்தில் உள்ள கம்பமா ???

      நீக்கு
  70. பிபிசி .பிளாஷ் நியூஸ்..

    இன்று அதிகாலை காகிதப்பூக்கள் பதிவு ஓனர் லண்டன் மருத்துவமனையில் அவசரப்பிரிவில் சேர்க்கப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.
    அவரது கணவரை விசாரித்ததில் அவர் கூறியது

    //என்ன ஆனது என்று தெரியலை இரவு எங்கள் பிளாக்கில் முதல் பின்னூட்டம் எதோ கதை வெளிவருகிறது அதற்க்கு பின்னூட்டம் இடனும் என்று கண் விழித்திருந்தார் பிறகு அரை மணி நேரத்தில் மயங்கி விழுந்தவர் உடனே ஏர் லிப்டிங் மூலம் ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றோம் மருத்துவர்களுக்கே அதிர்ச்சி என்ன காரணம் என்று விழித்தனர் ..பிறகு சிகிச்சை அளிக்கப்பட்டது .
    வீட்டுக்கு வந்ததும் அதே எங்கள் ப்லாகில் நெல்லை தமிழன் என்பவரது சீராக ரசத்தை கொஞ்சம் சாதத்தில் கரைத்து உண்டார்
    இப்போ பரவாயில்லை அப்புறம் முக்கியமாக ..கண் விழித்தவுடன் துரை அண்ணா கீதா ரெங்கன் ஸ்ரீராம் எல்லாரும் பத்திரமான்னு கேட்டார் ..

    அநேகமாக அந்த கதை படித்துதான் அவருக்கு இந்நிலை ..

    பதிலளிநீக்கு
  71. கீதாஆ !!! நானா இப்போதான் ஹாஸ்பிடலில் இருந்து ரிட்டர்ன் என்னை கொஞ்சம் தெம்பாக்கி விட்டதே இங்கே நெல்லைத்தமிழன் ரெசிப்பி ரசம்தான் .அதனால் எல்லாரும் ஸ்டோரி படிச்சி முடிச்சதும் மறக்காம ரசம் செஞ்சி குடிங்க ..
    எனக்கு வந்தது panic attack ஆம் ..

    ஆண்டவரே எல்லாரையும் காப்பாற்றுங்க ..நேற்று என்ன மனநிலையில் இருந்தேன் என்ன செஞ்சேன்னே தெரில 12:30 க்கு இங்கே வந்தேன் படிச்சேன் பின்னூட்டமிட்டேன் அதுக்கப்புறம் ஒண்ணுமே நினைவில்லை


    பதிலளிநீக்கு
  72. /மெல்ல மெல்ல ராமன் மேல் கோபம் வரும்படி எல்லோர் மனதையும் மாத்திட்ட பெருமை.. அதிராவுக்கே.. சொறி.. கம்பபாரதி அதிராவுக்கே:))..//
    நல்ல மனநிலையில் இருந்த என்னையும் இங்குள்ளோரையும் தலையை பிச்சிக்குவச்ச புகழ் உங்களைத்தான் சேரும் ஆஆவ் ..கண்ணுகூட தெரிலா இன்னிக்கு

    பதிலளிநீக்கு
  73. @கில்லர்ஜி ..அவ்வ்வ் கம்பம் தேனிலாம் இல்லைங்க ..அது இந்தம்மா ராமாயணத்தையும் மகாபாரத்தையும் இணைச்சி ஒரு புது பாரதத்தை உண்டாக்கி அதுக்கு பேரை கம்பபாரதம்னு சூட்டிட்டாங்க ..

    பதிலளிநீக்கு
  74. December 12, 2017 at 6:04 AM
    துரை செல்வராஜூ said...
    மிக அழுத்தமாக அமைந்திருக்கின்றது கதை.. ..//



    பாவம் துரை அண்ணன் நெஞ்சை பிடிச்சி அழுத்தியிருக்கு போல கதை படிச்ச effect ..
    அண்ணா லேசா சுடுதண்ணி வச்சி குடிங்க

    பதிலளிநீக்கு
  75. அதுவரை அனைவரையும் அமைதி காக்கும்படி வேண்டுகிறேன்.. அமைதி.. அமைதி...:)//
    ம்ம்க்கும் மூச்சே விட முடில எல்லாருமே அரை முழு மயக்கத்துக்கு போயிட்டாங்க ..இதில் அமைதி இல்லாமா இருக்குமா ..

    பதிலளிநீக்கு
  76. லக்ஸ்மிராமன் இப்படி//

    ஹையோ இதை பார்த்து மீண்டும் தலை கிறுகிருங்குதே

    பதிலளிநீக்கு
  77. /ஸ்ரீராம் இன்று ஓடி வருவார்....அனுஶ்கா படம்...வாவ்!!!//

    ஓ... படத்துக்கு கீழே கதை வேறு இருக்கா? நான் இன்னும் படத்தையே தாண்டவில்லை!

    பதிலளிநீக்கு
  78. //குடிசையின் உள்ளே பெரீய பார்த்றூம்.. அதன் ஷவரை திறந்துவிட்டு, சீதா குளிச்சுக் கொண்டிருக்கிறா,// //

    இந்த ரேஞ்சில் போனால் சொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணனிடம்தான் தீர்ப்புக்கு போகும் போல!

    பதிலளிநீக்கு
  79. //கண்ணுல படணும்னு. இப்போ இடுகைல அனுஷ்கா படத்தைச் சேர்ப்பதும் அதுக்கா?//

    சிரிப்பு!

    பதிலளிநீக்கு
  80. // bold lettersல ஶ்ரீராம் கதையை publish பண்ணினதை நினைத்துத்தானே.///


    எனக்கு இங்கே வேலை கம்மி. அதிரா அனுப்புவதை போர்வை விரிப்பது போல விரித்தால் போதும்! கடை பரப்புவது போல சமையல் குறிப்போ, கதையோ... படங்களுடன் விரிந்து விடும்! சுலபம்!!

    பதிலளிநீக்கு
  81. //@ஏகாந்தன் சார் - அதிராவைப் படித்தமுடித்தவுடன் சீதையென்ன, எனக்கே ராமன்மேல் கோபம் கோபமாய் வருகிறது.. - நீங்க சொல்ல நினைத்தது, 'ஸ்ரீராமன் மேல் கோபம் கோபமாய் வருகிறது' என்றுதானே.//

    நெல்லை.. என்னை மாட்டி விடுவதிலேயே குறியாய் இருக்கீங்களே!!!!

    பதிலளிநீக்கு
  82. /ஸ்ரீராம் ஒரு எக்ஸசைஸ் சைக்கிள் ஓடினார்.. கொஞ்சம் கறுப்பாக இருந்தார்.. ஆனா கெளதமன் அண்ணனின் முகச் சாயல் தெரிஞ்சது...:)) ஹா ஹா ஹா இது அதிகாலைக் கனவு.. சத்தியமா கண்டேன்.//

    அதிரா... கனவு கிணவு கண்டீங்களா ன்று யாரும் கேட்டுடாப் போறாங்களேன்னு முந்திக்கறீங்களோ!

    பதிலளிநீக்கு
  83. ஏஞ்சலின் காலையில் பார்த்ததுக்கு சாயங்காலம் அப்படியே வேற ரூபம் எடுக்கறீங்க!

    பதிலளிநீக்கு
  84. அதிரா -கதையை எப்படி எழுதியிருக்கீங்கன்னு பார்த்தால் நல்லாத்தான் இருக்கு. அதுல நகைச்சுவையும் இருக்கு. சிலபேர் எழுதினதை criticise பண்ணினா, அஎங்களுக்கு நாம ஜென்ம விரோதி ஆகிடுவோம். ஆனா, friendly கலாய்த்தலையும் நகைச்சுவையா எடுத்துக்கிட்டு கடந்து போயிடறீங்க. அதுக்கே ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

    இன்னைக்கு என் ஹஸ்பண்ட் கீரை வடை மாதிரி செய்து கீரைக்கு பதிலா காப்சிகம் வட்டமா கட் பண்ணி செய்திருந்தா. படங்கள் அனுப்பியிருந்தா. நல்லா இருந்ததாம்.

    பதிலளிநீக்கு
  85. //ஸ்ரீராம். said...
    ஏஞ்சலின் காலையில் பார்த்ததுக்கு சாயங்காலம் அப்படியே வேற ரூபம் எடுக்கறீங்க!//
    ஹ்ம்ம் :) இன்னிக்கு காலைல எழும்பவே முடிலா எழும்பறேன் விழறேன் :)
    அதிகாலை மயக்கத்தில் பாராட்டிட்டேன் இப்போ ஹாஸ்பிடல் போயிட்டு வந்தப்புறம் பாராட்டுக்களை எடுத்துக்கறேன் :)#இருங்க எங்காத்துக்கார்ரர் உங்களைத்தான் வலை வீசி தேடறார் :)
    ஸ்நாப் சாட்டில் அவருக்கு காட்டுச்சாம் ..ஏஞ்சல் வாஸ் லாஸ்ட் ஸீன் அட் எங்கள் பிளாக் :)




    பதிலளிநீக்கு
  86. @நெல்லைத்தமிழன் ..நீங்க சொல்றது 100 % கரெக்ட் ..நானலாம் ஒரு சின்ன க்ரிட்டிஸைஸ் வந்தாலே நடுகிடுவேன் :)
    ஆனால் இப்படி கலகலப்பா எழுத மட்டுமில்லாம அனைவரையும் சிரிக்க வைப்பது என்பதும் ஒரு பிளெஸ்ஸிங்க்தான் ..எவ்ளோ அடிச்சாலும் தாங்குற நல்ல மனசையும் கடவுள் அதிராக்கு கொடுத்திருப்பதாலேயே நானா அடிக்கடி காலை வாரி விடுவேன் ..

    பதிலளிநீக்கு
  87. /ஸ்ரீராம். said...
    //குடிசையின் உள்ளே பெரீய பார்த்றூம்.. அதன் ஷவரை திறந்துவிட்டு, சீதா குளிச்சுக் கொண்டிருக்கிறா,// //

    இந்த ரேஞ்சில் போனால் சொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணனிடம்தான் தீர்ப்புக்கு போகும் போல!//

    அதானே ஸ்ரீராம் :) அந்த எபக்ட்டில் தான் மேடம் லக்ஸ்மி ராமன் என்று எக்ஸ்ட்ரா பேரை ஆட் செஞ்சிருக்காங்க :)

    பதிலளிநீக்கு
  88. ஆவ்வ்வ்வ் மீ இப்போதான் மோலுக்குப் போய் ஒரு மிக்ஸ்ட் ஃபுரூட்:)) கூலாக்க்க்க்க் குடிச்சிட்டு வந்தேன்:))... ஆங்ங்ங் இப்போ ஆரும் இல்லை கம்பிமேல:)) ச்ச்சும்மா மின்னி முழங்கிட்டு ஓடிடலாம்ம்ம்:))

    பதிலளிநீக்கு
  89. //ஆங்ங்ங் இப்போ ஆரும் இல்லை கம்பிமேல:)) ச்ச்சும்மா மின்னி முழங்கிட்டு ஓடிடலாம்ம்ம்:))//
    அதுக்கு நான் விட மாட்டேன் :)
    என்னை அதிகாலை A அன்ட் E போக வசிட்டிங்க :)
    இப்போ ட்ரிப்ஸ் ஏத்தி காம்பிளான் குடிச்சி வந்திருக்கேன் உங்களை இழுத்து விட

    பதிலளிநீக்கு
  90. ///KILLERGEE Devakottai said...
    கம்பபாரதி ???
    எது மதுரை மாவட்டம் தேனி பக்கத்தில் உள்ள கம்பமா ???///

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நல்லவேளை தேவகோட்டைக் கம்பமோ எனக் கேட்கேல்லை:)) இன்று கில்லர்ஜி ரெண்டாம் தடவையா லாண்ட்டட்:)).. பின்ன என் கதை எல்லோரையும் ஈஈஈஈஈர்ர்துக்கொண்டு வருதே இங்கின மீண்டும் மீண்டும்:))

    பதிலளிநீக்கு
  91. ///Angelin said...
    பிபிசி .பிளாஷ் நியூஸ்..

    இன்று அதிகாலை காகிதப்பூக்கள் பதிவு ஓனர் லண்டன் மருத்துவமனையில் அவசரப்பிரிவில் சேர்க்கப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.///

    ம்ஹூம்ம்ம் சந்தடி சாக்கில அதிராவை கதையை வச்சே.. பேமஸ் ஆகிடப்பார்க்கிறாங்க கர்:)).. அது அன்று ஆப்பிட்ட:) தட்டை இட்டலி இன்றுதான் வேர்க் பண்ணத் தொடங்கியிருக்கு:))..

    ///என்ன ஆனது என்று தெரியலை இரவு எங்கள் பிளாக்கில் முதல் பின்னூட்டம் எதோ கதை வெளிவருகிறது அதற்க்கு பின்னூட்டம் இடனும் என்று கண் விழித்திருந்தார் பிறகு அரை மணி நேரத்தில் மயங்கி விழுந்தவர் ///

    கண்விழிச்சதுக்கே மயக்கமோ?:) ஹையோ ரொம்ப நோஞ்சானா இருப்பாரோ:)) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:))...

    ///இப்போ பரவாயில்லை அப்புறம் முக்கியமாக ..கண் விழித்தவுடன் துரை அண்ணா கீதா ரெங்கன் ஸ்ரீராம் எல்லாரும் பத்திரமான்னு கேட்டார் ///
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அப்பகூடப் பாருங்கோ அதிரா பத்திரமோ எனக் கேட்க மனசு வரல்ல கர்:)).. இருங்கோ என் அடுத்த ரெசிப்பி வெளிவருது:))

    பதிலளிநீக்கு
  92. //Angelin said...
    /
    நல்ல மனநிலையில் இருந்த என்னையும் இங்குள்ளோரையும் தலையை பிச்சிக்குவச்ச புகழ் உங்களைத்தான் சேரும் ஆஆவ் ..கண்ணுகூட தெரிலா இன்னிக்கு///

    ஆவ்வ்வ்வ் இப்போ கண்ணை வடிவாத் திறந்து பாருங்கோ அஞ்சு.. இப்பவும் தெரியேல்லையோ?:)) ஆஅவ்வ்வ்வ் பாதி வெற்றி:) இனிப் பயப்பூடாமல் சமைச்சுச் சமைச்சுப் போடுவேன்ன்:))

    பதிலளிநீக்கு
  93. ///Angelin said...
    December 12, 2017 at 6:04 AM
    பாவம் துரை அண்ணன் நெஞ்சை பிடிச்சி அழுத்தியிருக்கு போல கதை படிச்ச effect ..
    அண்ணா லேசா சுடுதண்ணி வச்சி குடிங்க///

    ஹா ஹா ஹா கர்ர்ர்:)) அது நீங்க ஜாமத்தில வந்து அவரைப் பயமுறுத்தினா:)).. அவரோட குட்டி இதயம் எப்பூடித்தாங்கும்:))

    பதிலளிநீக்கு
  94. ///Angelin said...
    லக்ஸ்மிராமன் இப்படி//

    ஹையோ இதை பார்த்து மீண்டும் தலை கிறுகிருங்குதே ///

    ஹா ஹா ஹா கர்:) வயசான காலத்தில ரெஸ்ட் எடுங்கோ எண்டால் ஆரு கேட்கிறா:)).. ஜாமம் ஜாமமா ஓடித்திரிஞ்சிட்டு .. இப்ப போய் தலை கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ந்க்குதே எண்டால்ல்ல்:))

    பதிலளிநீக்கு
  95. //ஸ்ரீராம். said...
    /ஸ்ரீராம் இன்று ஓடி வருவார்....அனுஶ்கா படம்...வாவ்!!!//

    ஓ... படத்துக்கு கீழே கதை வேறு இருக்கா? நான் இன்னும் படத்தையே தாண்டவில்லை!///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
  96. ///ஸ்ரீராம். said...
    //
    இந்த ரேஞ்சில் போனால் சொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணனிடம்தான் தீர்ப்புக்கு போகும் போல!///
    ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன், துரை அண்ணன், அஞ்சு, கீதாவையும் கையோடயே கூட்டிப்போங்கோ:)).. தமனாவையும் அனுஸ்காவையும் சேர்த்துக் காட்டுறென் எனச் சொன்னால்தான் வருவினம்:)..

    பதிலளிநீக்கு
  97. //ஸ்ரீராம். said...
    //

    எனக்கு இங்கே வேலை கம்மி. அதிரா அனுப்புவதை போர்வை விரிப்பது போல விரித்தால் போதும்! கடை பரப்புவது போல சமையல் குறிப்போ, கதையோ... படங்களுடன் விரிந்து விடும்! சுலபம்!!///

    மியாவும் நன்றி.

    ///நெல்லை.. என்னை மாட்டி விடுவதிலேயே குறியாய் இருக்கீங்களே!!!!//

    அது ஒரு சின்னத் தப்பு நடந்துபோச்சு ஸ்ரீராம்ம்:)) அது என்னான்னா.. முடிவில நான் ஒரு தமனா படத்தை இணைக்காமல் விட்டிட்டேன்ன்ன்:)) ஹா ஹா ஹா:))

    பதிலளிநீக்கு
  98. ஸ்ரீராம். said...//
    அதிரா... கனவு கிணவு கண்டீங்களா ன்று யாரும் கேட்டுடாப் போறாங்களேன்னு முந்திக்கறீங்களோ!///

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர் சத்தியமா கனவு கண்டேன்...

    ///ஏஞ்சலின் காலையில் பார்த்ததுக்கு சாயங்காலம் அப்படியே வேற ரூபம் எடுக்கறீங்க!///

    ஹா ஹா ஹா அதே அதே.. அது அவ வந்து பின்னணிப் பாடகி ஆச்சே:)) ஹையோ படிச்சதும் கிழிச்சிடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:)).. இல்லை எனில் என்னைக் காண்ட் கோட் ஏத்தாமல் விட மாட்டா:))..

    பதிலளிநீக்கு
  99. //நெல்லைத் தமிழன் said...
    அதிரா -கதையை எப்படி எழுதியிருக்கீங்கன்னு பார்த்தால் நல்லாத்தான் இருக்கு. அதுல நகைச்சுவையும் இருக்கு. சிலபேர் எழுதினதை criticise பண்ணினா, அஎங்களுக்கு நாம ஜென்ம விரோதி ஆகிடுவோம். ஆனா, friendly கலாய்த்தலையும் நகைச்சுவையா எடுத்துக்கிட்டு கடந்து போயிடறீங்க. அதுக்கே ஸ்பெஷல் பாராட்டுக்கள்.///

    ஹா ஹா ஹா மிக்க நன்றி. இல்ல நான் எப்பவும் நினைப்பதில்லை என்னுடையதுதான் பெஸ்ட், எல்லோரும் பாராட்டோணும் எண்டெல்லாம்:).. இப்படி எல்லோரும் குத்து வெட்டுப் பட்டு:) ஊரே இரண்டுபட்டு:).. கும்மாளம் போடோணும் எனத்தான் நினைப்பேன்ன்... கதை நல்லா இருக்கு.. வாழ்த்துக்கள் இப்பூடி ஒரு சொல்லில் சொல்லிப் போவது விருப்பமில்லை எனக்கு:)) ஹா ஹா ஹா:))



    //இன்னைக்கு என் ஹஸ்பண்ட் கீரை வடை மாதிரி செய்து கீரைக்கு பதிலா காப்சிகம் வட்டமா கட் பண்ணி செய்திருந்தா. படங்கள் அனுப்பியிருந்தா. நல்லா இருந்ததாம்.///

    ஓ கீரை போடாமல் கப்சிகம் மட்டுமோ? அதுவும் நல்ல ஐடியாத்தான், நான் அப்படி கபேஜ் சேர்த்தும் செய்வேன்.. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  100. //Angelin said...
    //ஸ்ரீராம். said...
    ஏஞ்சலின் காலையில் பார்த்ததுக்கு சாயங்காலம் அப்படியே வேற ரூபம் எடுக்கறீங்க!//
    ஹ்ம்ம் :) இன்னிக்கு காலைல எழும்பவே முடிலா எழும்பறேன் விழறேன் :)
    அதிகாலை மயக்கத்தில் பாராட்டிட்டேன் //

    ஹா ஹா ஹா கர்:)) அது ஸ்னோல உருண்டு பிரண்டதால வந்த எபெக்ட்டூஊஊஊ:)).. இனிமேல் எப்பவும் என் போஸ்ட்டுக்கு ஜாமத்திலயே வரவும் பிளீஸ்ஸ்ஸ்:))..

    பதிலளிநீக்கு
  101. //Angelin said...
    @நெல்லைத்தமிழன் ..நீங்க சொல்றது 100 % கரெக்ட் ..நானலாம் ஒரு சின்ன க்ரிட்டிஸைஸ் வந்தாலே நடுகிடுவேன் :)
    ஆனால் இப்படி கலகலப்பா எழுத மட்டுமில்லாம அனைவரையும் சிரிக்க வைப்பது என்பதும் ஒரு பிளெஸ்ஸிங்க்தான் ..எவ்ளோ அடிச்சாலும் தாங்குற நல்ல மனசையும் கடவுள் அதிராக்கு கொடுத்திருப்பதாலேயே நானா அடிக்கடி காலை வாரி விடுவேன் ..//

    ஆவ்வ்வ்வ் இப்போ அஞ்சு ஆர் கட்சீஈஈஈஈஈஈ:) ஹையோ நேக்கு லெக்ஸ்சும் ஓடல்ல:) காண்ட்ஸ்ஸும் ஆடல்ல:))... ஹா ஹா ஹா தங்கூ அஞ்சு தங்கூ:))

    பதிலளிநீக்கு
  102. ///Angelin said...

    அதானே ஸ்ரீராம் :) அந்த எபக்ட்டில் தான் மேடம் லக்ஸ்மி ராமன் என்று எக்ஸ்ட்ரா பேரை ஆட் செஞ்சிருக்காங்க :)///

    ஹா ஹா ஹா எப்பூடி இப்பூடி எல்லாம் கண்டு பிடிக்கிறீங்க?:) ஸ்னோவில நிண்டு ஓசிச்சிருப்பாவோ:))

    பதிலளிநீக்கு
  103. //Asokan Kuppusamy said...
    மிகவும் நன்று//

    வாங்கோ மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  104. //பரிவை சே.குமார் said...
    கதை அருமை.
    வாழ்த்துக்கள்.//

    வாங்கோ குமார்., மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  105. அஞ்சூஊஊஊஊ ட்றுத்தை ஆராவது நயகராவில் தள்ளிட்டினமோ?:) ஆளைக் காணல்லியே:).. சத்தியமா நான் ஒண்ணும் பண்ணல்ல:) நீங்க ஜாமத்தில இருந்து இங்கின இருப்பதால, எனக்கு சாட்சிக்கு நீங்க வரோணும்:))

    பதிலளிநீக்கு
  106. தமாஷா ராமன் கதை. அழகாகப் பதிவு செய்திருக்கிறீர்கள்
    அதிரா. கம்ப பாரதி அதிரா.
    மிக அருமை. கலகலப்பாக இருக்கிறது உங்களுடைய ஏஞ்சலுடைய சம்பாஷணைகளால். அருமையான குடும்பம் எங்கள் ப்ளாக்.வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  107. @மியாவ்

    //கம்பபாரதி athira said...
    அஞ்சூஊஊஊஊ ட்றுத்தை ஆராவது நயகராவில் தள்ளிட்டினமோ?:) ஆளைக் காணல்லியே:).. சத்தியமா நான் ஒண்ணும் பண்ணல்ல:) //



    ம்ம்ம்க்கும் :) நீங்க ஒண்ணுமே செய்ய வேணாம் உங்க கம்பு தோசைக்கே அவர் கொஞ்சம் டிஸ்டர்ப்ட் ஆகியிருந்தார் அது :) என்னருந்தாலும் அவர் எனக்கு பல வருஷ பிளாக் நட்பு நானே அவரை அலெர்ட் பண்ணிட்டேன் கொஞ்சம் லேட்டா :) வருவார் ..எத்தினி பேர் மயங்கி இருக்காங்கன்னு கணக்கெடுக்க

    பதிலளிநீக்கு
  108. இன்று எங்கள் வீட்டில் பெரிய ப்ரோகிராமுக்காக ஸத்ரியா டான்ஸ் ப்ராக்டிஸ் நடந்துகொண்டு இருந்தது. எனக்கு பின்னூட்டம் எழுத வசதிகிடைக்கவில்லை. டேபிள் கிடைக்கலே!
    எல்லா குடும்பட்டு பெண்களும் தொடர்ந்து கஷ்டங்களாக வரும்போது யாராவது ஒருபாட்டி அந்த குற்றம்,இந்த குற்றம் என்று சொல்லி பரிகாரமும் சொல்லுவார்கள். மனதில் அதை யோசிக்க ஸீதைதான் முன்னோடி. கண்ணை மூடினால் யோசனைகளாகவே விரியும். எங்கள் பிலாகில் மன்னிப்புதான் பரிகாரம். உங்கள் கற்பனையும், பின்னூட்டங்களும் பூரா படித்தால்தான் தூங்கமுடியும். படிச்சுட்டேன். கண்ணை மூடிக்கொண்டு கற்பனையில் மூழ்க வேண்டியதுதான். நல்ல மன்னிப்பு. அன்புடன்

    பதிலளிநீக்கு
  109. @வல்லிம்மா :) தாங்க்ஸ் மா அண்ட் தாங்க்ஸ் டு எங்கள் பிளாக் ..

    பதிலளிநீக்கு
  110. ///வல்லிசிம்ஹன் said...
    தமாஷா ராமன் கதை. அழகாகப் பதிவு செய்திருக்கிறீர்கள்
    அதிரா. கம்ப பாரதி அதிரா.///

    வாங்கோ வல்லிம்மா...
    என் பெயரை அழகா [//கம்ப பாரதி அதிரா//] உச்சரிச்சிருக்கிறீங்க ஹா ஹா ஹா அதுக்கு முதலில் மிக்க நன்றிகள்...

    ///மிக அருமை. கலகலப்பாக இருக்கிறது உங்களுடைய ஏஞ்சலுடைய சம்பாஷணைகளால். அருமையான குடும்பம் எங்கள் ப்ளாக்.வாழ்க வளமுடன்.//////

    எல்லாப் புகழும் கம்பபாரதிக்கே.. வெரி சோரி:) டங்கு அடிக்கடி ஸ்லிபாகுது இப்போ:)).. எல்லாப் புகழும் அனுக்கா ரசிகருக்கே:).. மிக்க நன்றிகள் வல்லிம்மா.

    பதிலளிநீக்கு
  111. //Angelin said...
    @மியாவ்

    // :) நீங்க ஒண்ணுமே செய்ய வேணாம் உங்க கம்பு தோசைக்கே அவர் கொஞ்சம் டிஸ்டர்ப்ட் ஆகியிருந்தார் அது :) என்னருந்தாலும் அவர் எனக்கு பல வருஷ பிளாக் நட்பு நானே அவரை அலெர்ட் பண்ணிட்டேன் கொஞ்சம் லேட்டா :) வருவார் ..எத்தினி பேர் மயங்கி இருக்காங்கன்னு கணக்கெடுக்க///

    http://www.likecool.com/Gear/Pic/Picture%20of%20day%20%20nbsp%20running%20cat/Picture-of-day--nbsp-running-cat.jpg

    பதிலளிநீக்கு
  112. வாங்கோ காமாட்ஷி அம்மா... காத்திருந்து தூங்க முன் வந்திடோணும் என வந்து படிச்சுக் கொமெண்ட் போட்டிருக்கிறீங்க.. மிக்க மிக்க நன்றிகள்..

    பதிலளிநீக்கு

  113. "பெண் பாவம் பொல்லாதது அதிரா "என்ற தலைப்பை பார்த்ததும் என்னடா அதிரா ஏதோ சமைச்சு அதை சாப்பிட ஒரு பெண்ணிற்கு கொடுத்தாய் பார்த்த அவர் வூட்டுகாரார்தான் இப்படி சொல்லி இருக்கிறாரோ என்று பதறி உள்லே வந்தால் ஏதோ ஒரு கதையாம்

    பதிலளிநீக்கு
  114. கதையின் முன்னுரையை படிக்கும் போதே மூச்சு வாங்குது.... அதனால இந்த கதையை நோட் பண்ணி வைச்சுகிட்டேன் வேலையில் இருந்து ரிட்டையர் ஆனதும் கண்டிப்பா படிச்சுருவேன்

    பதிலளிநீக்கு
  115. Super super eppavum Pola kalakiting neraiya sola mudiyalaye vartutha maga iruku engu pH Sariya seya varathu so again super super late solvathergu sorry signal kidaikalai

    பதிலளிநீக்கு
  116. நேற்று கணினி மீண்டும் பாவம் மெமரி பிரச்சனையால் கொஞ்சம் படுத்துத்தான் எழுந்தது....இப்ப பார்த்தா ஹா கமென்ட்ஸ் எல்லாம் கும்மி அடிக்க முடியாம போச்சேனு ஃபீலிங்க்...

    ஸ்ரீராம், ஏஞ்சல், நெல்லை அதிரா உங்க கமென்ட்ஸ் எல்லாம் பார்த்தேன் ரசித்து சிரித்து....

    துரை சகோ அட்டகாசமான நகைச்சுவை...ஹையோ சிரிச்சு முடில...

    நிறைய பேருக்கு மூச்சு திணறிடுச்சாமே!!! ஏஞ்சல் டேக் கேர் அடுத்த திங்க வோ இல்லை கதையோ
    மாஸ்டர் செஃப் கம்பபாரதியிடம் இருந்து வருவதற்குள்!!!.. ஹா ஹா ஹா ஹா ஹா...

    கீதா

    பதிலளிநீக்கு
  117. அதிரா உங்கள் பிரசங்கக் கதை நன்றாகவே இருக்கிறது. தாமதமாகத்தான் வாசிக்க முடிந்தது.

    நல்ல நகைச்சுவையுடன். ராமர் வில் வீரர் என்பதால் இங்கு பாகுபலியும் வந்தது சரி. சீதியயும் வில் வித்தை அறிவாரோ?! பாகுபலி கதாநாயகியும் வில்லேந்திய படம் வந்ததால் இந்தச் சந்தேகம்...

    நல்ல நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறீர்கள். ஆமாம் பிரசங்கம் செய்பவர்களும் இடையில் நகைச்சுவை சேற்பதில்லையா...

    கதையை ரசித்தேன். பாராட்டுகள், வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  118. ட்றுத், பூவிழி கீதா அனைவருக்கும் மியாவும் நன்றி...

    https://i.pinimg.com/736x/e4/45/2c/e4452cc8ef5d6dac58d8b0b0aa290ac8--adorable-kittens-cute-kitty.jpg

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!