ஜமைக்கன் நாட்டு மக்கள் நம்ம இந்திய உணவுகளை அதிகம் அவர்களின் சமையலில் சேர்ப்பாங்க .
இதன் சுவை மிகவும் பிடித்திருந்ததால் உங்களுடன் இங்கே பகிர்கின்றேன் :)
ஒரிஜினல் ரெஸிப்பியில் உப்புக்கு பதிலா வெஜிடபிள் ஸ்டாக் கியூப்ஸ் மேகி என்று நினைக்கிறேன்
அதை சேர்த்திருந்தார் நண்பி. எனக்கு அஜினோமோட்டோ, மோனோசோடியம் க்ளூட்டமேட் போன்றவற்றை சமையலில் சேர்ப்பது பிடிக்காது. ஆகவே அதற்குப்பதில் உப்பும் சோயா சாஸும் சேர்த்தேன் .
இந்த பொரியல் செய்வது மிக சுலபம். சப்பாத்தி, ரொட்டி, நான் வகைகளுக்கு தொட்டுக்கொள்ளலாம்.
மேலும் தயிர் சாதம் சாம்பார் சாதம் ரசம் சாதம் இவற்றுக்கு உகந்த கூட்டு. .
தேவையான பொருட்கள்
------------------------------ ---------------
பொரியலுக்கு
---------------------------
ஜூலியன் கட் ,மெலிதாக நீளவாக்கில் அரிந்த
முட்டைகோஸ்...... 1 கப்
சிவப்பு குடை மிளகாய் அல்லது ரெட் சில்லி பெப்பர் ..1/2 கப்
தக்காளி ......1/2 கப்
ஒரு சிறு பல் பூண்டு பொடியாக grate செய்தது ..(இது அவரவர் விருப்பம் )
சீரகம் ...1/2 தேக்கரண்டி
சோயா சாஸ் ...1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் 1/2 தேக்கரண்டி
உப்பு ,எண்ணெய் தேவையான அளவு .
நான் வெங்காயம் சேர்க்கவில்லை .(விருப்பமிருந்தால் சேர்க்கலாம் ) அதேபோல கடுகு மற்றும் மஞ்சள் தூளையும் சேர்க்கவில்லை .சேர்ப்பது optional .
இந்த நீள சிவப்பு மிளகாய் இங்கே சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்குது பார்க்கத்தான் நெருப்பு நிறம் ஆனா சும்மா பச்சையாவே கடிச்சி சாப்பிடலாம் காரமேயில்லை :) (போலி மிளகாய் போல! - ஸ்ரீராம் )
இதை pizza அப்புறம் பாஸ்தாவில் சேர்ப்பதுண்டு .சும்மா வதக்கியும் சாப்பிடலாம் சீஸுடன் .
செய்முறை
============
முதலில் அடுப்பை பற்றவைத்து கடாய் அல்லது சட்டியை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றவும்
எண்ணெய் சூடானதும் அதில் 1 தேக்கரண்டி சீரகத்தை போட்டு வதக்கவும் ..
தீய விடாமல் லேசாக வதக்கும்போதே பொடியாக நறுக்கிய பூண்டு பல்லை போடவும்
உடனே அதில் ஜூலியன் கட் போல் நீளவாக்கில் நறுக்கிய கோஸை சேர்த்து வதக்கவும்
அத்துடன் கறிவேப்பிலையும் சேர்த்து வதக்கவும்
இப்போ லேசா வதங்கி வரும்போது உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சேர்க்கவும்
பிறகு நறுக்கிய குடைமிளகாயை சேர்க்கவும்
மீண்டும் சிம்மில் வைத்து வதக்கிக்கொண்டே அரிந்த தக்காளித்துண்டுகளை சேர்க்கவும் .
சட்டியில் சமைப்பதால் சூடு எல்லாப்பக்கமும் சமமாக பரவுவதால் மூடி போட வேண்டிய அவசியமில்லை .
பிறகு 4 அல்லது 5 நிமிடங்களில் காய்கள் அந்த சூட்டிலேயே வெந்தவுடன் அரை தேக்கரண்டி சோயா சாஸ் ஊற்றி பிரட்டி இறக்கவும் இறுதியில் கொத்தமல்லி தழை சேர்க்கலாம் .
இதை நெல்லைத்தமிழன் ரெசிப்பி ஜீரக ரசத்துடன் சாப்பிட்டோம் .. மிகவும் அருமையான ருசி ..
நீங்களும் செய்து பாருங்கள் .
அன்புடன் ஏஞ்சல்.
அன்புடன் ஏஞ்சல்.
[ சாப்பிடும் ஆசை வருகிறது. சந்தர்ப்பம் எப்போது அமையுமோ.....! - ஸ்ரீராம் ]
வாழ்க நலம்..
பதிலளிநீக்குஇனிய காலைவணக்கம் ஸ்ரீராம், துரை செல்வராஜு சகோ!!! நான் ஆஜர்
பதிலளிநீக்குகீதா
இதன் எனக்குத் தெரியுமே...
பதிலளிநீக்குஹை ஏஞ்சல் ரெசிப்பி!! பாக்கவே நல்லாருக்கு....
பதிலளிநீக்குஎங்களுக்கு எல்லாம் அழைப்பே வேண்டாம் ஸ்ரீராம்..திங்க நாங்க வந்துருவோம்ல ஹா ஹா ஹா...சரி இப்ப டேஸ்ட் பார்த்தாச்சு....திங்க மீண்டும் வரேன்...
கீதா
இதன் எனக்குத் தெரியுமே..//
பதிலளிநீக்குஹா ஹா ஹா
ஹிஹீ :) இனிய காலை வணக்கம் துரை அண்ணா ,கீதா அண்ட் ஸ்ரீராம் :)
பதிலளிநீக்குநாளை வரேன்
வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.
பதிலளிநீக்குவணக்கம் கீதா ரெங்கன்.
பதிலளிநீக்குமெக்ஸிக்கன் உணவு கூட வெஜிட்டேரியன் நிறைய உண்டு....
பதிலளிநீக்குநானும் வைச்சிருக்கேன் குறிப்புகள்...திங்கவுக்கு வரும் கொஞ்சம் மெதுவா ஹா ஹா ஹா
கீதா
இந்த capsicum வகையறா எல்லம் மரபணு மாற்றப்பெற்றவை..
பதிலளிநீக்குவண்ண மயமாக கண்ணைக் கவரும்..
அவ்வப்போது செய்வதுண்டு..
சற்றே மாற்றம்.. சோயா சாஸ் சேர்ப்பதில்லை..
வணக்கம் ஏஞ்சல்.... புதுப்புது பெயர்களில் வரீங்க!
பதிலளிநீக்குநண்பர்கள் யாராவது தமிழ்மணத்தில் இணைத்து விடவும்.
பதிலளிநீக்குஆஆஆஆ இஸ் இட் ஏஞ்சல்!!! புது அவதார் எல்லாம் எடுக்க ஆரம்பிச்சுட்டீங்களா?!!!! ஜமைக்கன் செஃப்??!!!! பூஸாரின் காற்று அடித்துவிட்டது போலும்...ஹா ஹா ஹா
பதிலளிநீக்குகீதா
ஸ்ரீராம் :) எத்தனை பேர் என் புது அவதாரத்தை பார்த்து மயங்கி விழறாங்கன்னு கவுண்ட் பண்ணி வைங்க :) நாளைக்கு வரேன் இப்போ குட்நைட் :)
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்குமுதலில் அடுப்பை பற்றவைத்து கடாய் அல்லது சட்டியை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றவும்///
எண்ணெய்யை சட்டியின் உள்ளே ஊற்றனுமா அல்லது வெளியேவா ரொம்ப குழப்பமாக இருக்கிறதே ஆரம்பமே
நான் சத்தியமா மயங்கிட்டேன் இது யாரு புதுசானு ஹா ஹா ஹா
பதிலளிநீக்குஸ்ரீராம் ப்ளாகர் வழியா எபி வர மாட்டேங்குது!!!! வழக்கம் போல எபி கூகுள் வழியா வந்தா தம தெரியலை....ஸோ ஸாட்!!!
கீதா
வந்தனம்.. வந்தனம் எல்லாருக்கும்..
பதிலளிநீக்குஏஞ்சலின் ரெசிப்பி நல்லாருக்கும்..
(ஒருவழியா ஐஸ் வெச்சாச்சு!...)
>>>> புதுப்புது அவதாரம்!?.. <<<<
பதிலளிநீக்குநிறைய பவுடர் ஸ்டாக் இருக்குமோ!?..
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1480425
பதிலளிநீக்குஎதுக்கும் ஒளிஞ்சிருந்து பார்ப்போம் ரெண்டு பேர் இங்கே நம்மை ஓட்டறாங்க :) சாமீ சேவ் மீ .
பதிலளிநீக்குகீதா நான் இங்கே இருக்கேன்னு சொல்லிடாதீங்க ப்ளீஸ் :)
Bye for now Friends :)
பதிலளிநீக்குஅட பார்ரா ஜமைக்கன் ரிசிப்பி போட்டா பேரை மாத்தி வைச்சுகிடனும் போல
பதிலளிநீக்கு@sriram யாராலும் எழுத்து கூட்டி படிக்க முடியாதே என் பேரை இப்போ ஹாஹா
பதிலளிநீக்குஆகா
பதிலளிநீக்குஅருமை
நன்றிநண்பரே
தம+1
பதிலளிநீக்குஏஞ்சல் weltberühmter Chefkoch =world famous chef ஆம் அதை ஜெர்மனில் மொழியில் போட்டு இருக்காங்க ஹீஹீ
நன்றி ஏஞ்சல். நானும் வாக்களித்து, பதிவிலும் லிங்க் கொடுத்து விட்டேன்.
பதிலளிநீக்குworld famous chef ல் இரண்டு வகை உண்டு best chef or worst chef அதில் இந்த செஃப் எந்த வகை ரிசிப்பியை படித்தவர் சமைத்து பார்த்துவிட்டு சொல்லவும் ஹீ
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குசரி சரி இதற்கு மேலே கலாய்ச்சா அழுதுடுவாங்க் பாவம் தூங்க போகும் போது சந்தோஷமாக தூங்கவிடுவோம்
படங்களுடன் விளக்கம் மிக அருமை
பதிலளிநீக்குசரி நான் இப்ப போய் என் தளத்தில் போய் ஒரு பதிவு இட்டுவிட்டு நாட்டில் உள்ள நாலு பேர்களின் உணர்ச்சியை தூண்டிவிட்டுட்டு அவர்கள் என்னை திட்டுவதை கொஞ்சம் ரசித்து விட்டு மீண்டும் வருகிறேன்
பதிலளிநீக்குஇம்மாதிரிப் பூண்டு சேர்க்காமல் சோயா சாஸ் சேர்க்காமல் பச்சைக் குடமிளகாய் சேர்த்து நான் செய்வது உண்டு. மற்றவை ஏஞ்சல் சொல்லி இருக்காப்போல! அது என்ன உலகப் பிரசித்தி பெற்ற செஃப்? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நானும் ஒரு பட்டத்தைக் கூடிய விரைவில் வாங்கிக்கப் போறேன். இல்லைனாக் காவிரி தான் நேரே!
பதிலளிநீக்குஅது சரி, கவிப்புயல், மாஸ்டர் செஃப், அப்பாவி, மியாவ் எங்கே காணோம்? தூங்கியாச்சா? குறட்டை?
பதிலளிநீக்குஜமைக்கா நாட்டு மேடம் ஒருவர் எனக்கு அபுதாபியில் பழக்கம் வீடு சுத்தமாக வைத்திருப்பார்கள் எனினும் சமையலில் இறைச்சி வகைகளை கண்டால் சில சமயம் பயமாகவும், அறுவெருப்பாகவும் இருக்கும்.
பதிலளிநீக்குஇது எதோ நன்றாக இருக்கும்போல...
அந்த மேடம் பெரிய அதிகாரி அதனால் வீடு அழகாக இருந்ததோ, என்னவோ...
தகவலுக்கு நன்றி ஏஞ்சல்.
புதுப்பெயர் கண்டு நான் கொயம்பிட்டேன்.
கோஸ் கறியில் மிளகாய், சாஸ். புதுவித காம்பினேஷன். நல்லாத்தான் இருக்கும் போலிருக்கு. பார்க்க நல்லா வந்திருக்கு. செய்துபார்க்கும் வாய்ப்பு கிடையாது. பாராட்டுக்கள் ஏஞ்சலின்.
பதிலளிநீக்குஇப்போவரை பின்னூட்டம் காணாமல் போகலை
பதிலளிநீக்குஅஜினோமோட்டோ, மோனோசோடியம் க்ளூட்டமேட் போன்றவற்றை சமையலில் சேர்ப்பது பிடிக்காது. //
பதிலளிநீக்குயெஸ் ஏஞ்சல் நானும் சேர்க்க மாட்டேன்...
ரெசிப்பு நல்லாருக்கு படங்கள் செம...அழகு.
எனக்கும் ஜூலியன் கட் ரொம்பப் பிடிக்கும். நார்மலாகவே நான் கோஸ், குடைமிளகாய் சேர்த்து பொரியல் செய்யும் போது ஜூலியன் கட் தான் செய்வது வழக்கம். சில சமயம் மட்டும் நம்ம துருவல் செய்யும் க்ரேட்டர் இருக்கும்ல அதுல பின்பக்கம் நெளி நெளியா ஒன்று இருக்குமெ அதில் கோஸை சீவினால் வாவ் வெகு அழகா நீள நிளமா வரும் பாருங்க...செமையா இருக்கும் பார்க்கவும் அழகா இருக்கும் நீங்க செய்திருக்காப்ல..
சோயா சாஸ் சேர்க்காமல் இதே பொரியல் சேர்த்து செய்து நீங்கள் ஆப்ஷன்ஸ் நு கொடுத்துருக்கறதும் சேர்த்து செஞ்சுருக்கேன். கோஸ் அண்ட் குடை மிளகாய் காம்பினேஷன் செமையா இருக்கும்...டேஸ்ட்.
ஸாஸ் சேர்த்தா ப்ரெட், நான், சப்பத்திக்கு நலலருக்கும்....நம்ம ஊர் டிப்பிக்கல் சௌத் இண்டியனுக்கு சரியாகுமா? சரி ஸாஸ் சேர்த்துச் செஞ்சு பார்த்துடறேன் சப்பாத்திக்கு...
உங்க படங்கள் செமையா இருக்கு...அழகு கட்டிங்க்...
கீதா
துரை சகோ,
பதிலளிநீக்குஇங்கு சிவப்பு, மஞ்சள், பச்சை குடைமிளகாய்கள் சேர்த்து ஒரே பாக்கெட்டாகக் கூட குறைந்த விலையில் சில சமயம் திருவான்மியூர் மார்கெட், அப்புறம் மைலப்பூர்ல எல்லாம் கிடைக்கிறது. காரமே இருக்காது அந்த குடைமிளகாய்களில். ஏனென்றால் பச்சை நிறக் குடைமிளகாய்கள் நன்றாக முற்றி வரும் போது முதலில் மஞ்சளாகவும் பின்னர் மெதுவாக ஆரஞ்சு சிவப்பு நிறமாக மாறும்.
முதலில் நான் அப்படியான கலர் மிளகாய்கள் கெடுதல் பயோடெக் மிளகாய்கள் என்று நினைத்தேன். அப்புறம் விற்பனை செய்தவர் சொன்னார்...பச்சை நிறம் இப்படி மாறுகிறது என்று நான் வாங்கிய பேக்கெட்டில் மிளகாய்களை எடுத்துக் காட்டினார் அதில் பெரிதாக இருந்த இரு மிளகாய்கள் பச்சையும் மஞ்சளுமாகவும்., மற்றொன்று பச்சை கொஞ்சமாகவும், மஞ்சள் அதிகமாகவும் ஒரு பகுதி சிவப்பாகவும் மாறி இருந்தது. அவர் சொன்னார் பச்சையை விட இவை காரமே இல்லாமல் இருக்கும். வீட்டில் பச்சை மிகளகாயை நீங்கள் அப்படியே போட்டால் என்ன ஆகும் யோசிச்சு பாருங்க என்றார்.
ஆமாம் அது ஆரஞ்சாகவும் அப்புறம் சிவப்பு பழமாகவும் மாறும் இல்லையா அப்படித்தான் என்றார்...
அதனால் இப்போதெல்லாம் பார்த்தால் வாங்குகிறேன் அதை மட்டும் வைத்து குடைமிளகாய் ஃப்ரைட் ரைஸ் கலர்ஃபுல்லாகச் செய்வேன்....நலலருக்கும்
அப்புறம் கலர்ஃபுல் பருப்பு உசிலியும் செய்வதுண்டு....பச்சை மட்டும் பயனபடுத்தியும் இவை எல்லாம் செய்வதுண்டு...
ஸ்ரீராம் காரமே இருக்காது...
கீதா
ஏஞ்சல் இந்தக் கோஸ், குடைமிளகாய்கலுடன் சீஸ் சேர்த்து பெரெட் (நான் மல்டிக்ரெய்ன், ஹோல் வீட் ப்ரெட்தான் வாங்குவது) சான்ட்விச் செய்தால் சூப்பரா இருக்கும்....செய்ததுண்டு. அப்புறம் மாமியாருக்கு எல்லாருக்கும் செய்யும் போது வெங்காயம், பூண்டு சேர்க்காமல் செய்துருக்கேன். அதுவும் நல்லாருக்கும்... அஃப்கோர்ஸ் சாஸ் இதுவரை சேர்த்து செய்ததில்லை...
பதிலளிநீக்குகீதா
மேற்கொண்டு போடும் சாஸ்,பூண்டுவகைகளினால் நமக்கு மாறுபட்ட ருசி கிடைக்கிறது. இதுவே கடுகு,உளுத்தம் பருப்புடன், ஒரு பச்சைமிளகாய் கீறிப்போட்டு வதக்கினாலும், காப்ஸிகம் சேர்த்து வதக்கினாலும் அதுவும் ருசிதான் இல்லையா.சிறிது காரட்பீன்ஸ் சேர்த்து வதக்கினால் கலர்அழகாக வரும். தேங்காய் சேர்ப்பது தமிழ்நாட்டு ருசி, ஸோயாசாஸ் சேர்த்தால் ஜமைகா நாட்டு ருசி வரும்.ஸுலபமாகப் பண்ணலாம். நீளமாக,மெல்லியதாக நறுக்கினால் அதன்பெயர் ஜூலியன் கட்டா. நன்றாக இருக்கு. அன்புடன் உன் பெயரும்.
பதிலளிநீக்குஏஞ்சல் ரகசியம் பாதுகாக்கப்பட்டது...இப்ப நீங்களே ஏஞ்சல்னு போட்டுட்டீங்களே!!!!!!! எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைன்ற மாதிரி...
பதிலளிநீக்குபாருங்க தேம்ஸ் பூஸாருக்குப் புகை வந்திருக்கும்...போட்டி போட்டுட்டு வருவாங்க!!!!என்ன அவதார்ல வரப் போறாங்களோ...!!!! ஜாலிதான்...
கீதா
கோஸைப்பற்றி ஒரு இடத்தில்கூட நான் பேர் குறிப்பிடவில்லையே!. அதான் திரும்பவும் வந்தேன்.அன்புடன்
பதிலளிநீக்குஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ் இன்று அஞ்சுட ரெசிப்பியாஆஆஅ... ஹையோ அதுதானாக்கும் என்னால கண்ணைத் திறக்கவே முடியாமல் போச்சு... கட்டிலால வேற விழுந்திட்டேன்ன்ன்... :)... என்னாதூஊ அஞ்சுவைக் காணமே இங்கின:)...
பதிலளிநீக்குகோஸ், குடைமிளகாய் தவிர்த்து எல்லாமே இருக்கு. அதை வாங்கி கொடுத்துட்டா செஞ்சு பார்ப்பேன். ஏற்பாடு ப்ளீஸ்
பதிலளிநீக்கு//////weltberühmter Chefkoch//// இதென்ன இது அவசரமா அரைக்கண்ணில படிச்சேன் வைட் கொக்கொறோச் எனத் தெரிஞ்சுதேஏஏஏ....
பதிலளிநீக்குஹையோ நெல்லைத்தமிழன் அனுபவசாலி... அண்டைக்கே சொன்னார்ர் அதிரா கவனிச்சு முளையிலயே கிள்ளிடுங்கோ :) கொப்பி கட் வேலை நடக்குது என:)... நான் தான் பெரிய மனசு பண்ணி பேசாமல் விட்டேன்ன்ன்:)... இந்த ரேஞ்சில போனால் நாளைக்கு தேMஸ்ட ஓனர் அவதான் எனச் சொல்லப் போறாவே:).... ஹையோ நான் இப்போ தேம்ஸ் ஐக் காப்பாத்தப் போறேன்ன்ன்ன்ன்ன்:)....
கீதாக்காஆஆ நீங்க காவெரியில குதிச்சிடாதீங்க அங்க பெரிய பெரிய முதலை உலாவுதாம்ம்ம்ம்:)...
எல்லோரும் சத்து நேரம் நில்லுங்கோ வந்திடுறேன்:) முட்டைக்கோஸ் ரெசிப்பியாமே... முட்டை எனக் காதில கேட்டாலே முதல் ஆளா நிற்பேன் யான்:)..
/////ரை செல்வராஜூDecember 18, 2017 at 6:12 AM
பதிலளிநீக்குவந்தனம்.. வந்தனம் எல்லாருக்கும்..
ஏஞ்சலின் ரெசிப்பி நல்லாருக்கும்..////
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்👹👹👹👹கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)...
படத்தைப் பார்த்து முடிவுக்கு வந்திடக்குடாது:) லண்டன் ஸ்டைல் தட்டை இட்டலியை மறந்திடக்குடாது ஜொல்லிட்டேன்ன்ன்:)..
நான் வந்துட்டேன்ன்ன்ன்:)).. வெள்ளைக் கரப்பான் பூச்சி எல்லாம்:) அதுதாங்க வைட் கொக்கரோச்:)) ஹா ஹா ஹா சமையல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க எண்டதும், டக்கெனப் ஃபோன் பண்ணி ஸ்கூல்ல லீவு போட்டிட்டேஏஏஏன்ன்ன்ன்ன்:)).. சத்தியமா என்னா இன்று போக முடியாதூஊஊஊஊ:)..
பதிலளிநீக்குதலைப்பே என்னாஆஆஆஆ பெரிசூஊஊஊஊ:) தலை சுத்துதே ஜாமீஈஈஈ:)).. சரி சரி எதுக்கும் கிச்சினுக்குள் போயிட்டு வந்து மிகுதி பேசுறேன்ன்:)).
// இந்த நீள சிவப்பு மிளகாய் இங்கே சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்குது பார்க்கத்தான் நெருப்பு நிறம் ஆனா சும்மா பச்சையாவே கடிச்சி சாப்பிடலாம் காரமேயில்லை :) ///
பதிலளிநீக்குஅதேதான் அஞ்சு.. அதாவது சிலரைப் பார்க்க பயமாக இருக்கும் ஆனா பேசிப் பழகினால் ச்ச்சோஓஒ சுவீட்டா இருப்பாங்க:) அதுபோல:))..
//// (போலி மிளகாய் போல! - ஸ்ரீராம் )/// ஹா ஹா ஹா என்னா கண்டு பிடிப்பூஊஊஊ?:)...
அதுதானே பூனையில் சைவம் கிடையாது!!:) மிள்காயில் இனிப்புக் கிடையாது!!:) எண்ட காலமெல்லாம் மலை ஏறிட்டுது எண்டேன்ன்ன்:)) ஹா ஹா ஹா..
//இதை pizza அப்புறம் பாஸ்தாவில் சேர்ப்பதுண்டு .சும்மா வதக்கியும் சாப்பிடலாம் சீஸுடன் .//
பதிலளிநீக்குவதக்க தேவையில்லை.. எண்ணெய் சேர்க்காமல் கிரில் அல்லது வாட்டினாலே போதுமே....
நான் வந்திட்டேன் :) கொஞ்சம் லேட்டாகிடுச்சி வர்ரதுக்கு :)
பதிலளிநீக்குஅது ஒண்ணுமில்ல பிபிசில nigella lawson குட்மார்னிங் பிரிட்டன் ஷோ வுக்கு கூப்பிட்டிருந்தாங்க பேசிட்டு வர கொஞ்சம் டைம் ஆகிடுச்சு :)
AWWW :) கம்ப பாரதியும் இங்கேயா :) சபாஷ் சரியான போட்டி :)
பதிலளிநீக்குநான் ஒத்துக்கவே மாட்டேன்ன்ன் ரெட் பெப்பர் எனச் சொல்லிட்டு தலையையும் காணம்.. வாலையும் காணம்..:).. நான் அவசரத்தில பார்த்து ஹையோ அபச்சாரம் அபச்சாரம்.. எங்கள்புளொக்கில் சொசேஜ் ஆஆஆஆஆஆஆ என ஏங்கிட்டேன்ன்ன்ன்:))
பதிலளிநீக்குஆவ் !! கீதா ,,எனக்கும் நிறைய மெக்சிக்கன் உணவுகள் தெரியும் :) ஆனா எல்லாத்திலையும் இந்த ஸாஸ் எனக்கு பிடிக்காத ஒன்று ..எஸ் சீக்கிரம் இங்கே பகிருங்க :)
பதிலளிநீக்குமிகவும் சிம்பிள் அண்ட் நைஸ் அஞ்சு.. இந்த மரக்கறிகள் பெரிதாக அவியத் தேவையில்லை.. சாடையா சூடு பிடித்தாலே போதும்... ஏன் இதை அடுப்பில் வைக்காமல்.. சோயா சோஸ் க்குப் பதில் சலாட் கிரீம் போட்டு, பச்சையாவே சாப்பிடலாம்..
பதிலளிநீக்குபார்க்க கலர்ஃபுல்லா இருக்கு, இதுக்குள் ஒரு துண்டு புரோக்கோலியும் சேர்த்திருந்தால் கலர் இன்னும் சூப்பராகி இருக்கும்.
///இதை நெல்லைத்தமிழன் ரெசிப்பி ஜீரக ரசத்துடன் சாப்பிட்டோம் ..///
பதிலளிநீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எப்படியும் திங்கக்கிழமை அடி விழத்தான் போகுது:).. என தெரிஞ்சே.. சிவனே என தன்பாட்டில இருக்கும் நெல்லைத்தமிழனையும் கோர்த்து விட்டிருக்கிறா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இதைப் பார்த்தால் நெல்லைத்தமிழன் கலாய்க்க மாட்டார் எனும் தெகிறியம்:)) ஹா ஹா ஹா:) கரப்பான் பூச்சிக்கு என்னா அறிவு:)..
/Thulasidharan V Thillaiakathu said...
பதிலளிநீக்குஆஆஆஆ இஸ் இட் ஏஞ்சல்!!! புது அவதார் எல்லாம் எடுக்க ஆரம்பிச்சுட்டீங்களா?!!!! ஜமைக்கன் செஃப்??!!!! பூஸாரின் காற்று அடித்துவிட்டது போலும்...ஹா ஹா ஹா
கீதா//
ஹாஹஆ :) பூசார் ஆயிரம் பேர் முன்னிலையில் அந்த பட்டத்தை பவுண்ட்ஸ் கொடுத்து வாங்கினாங்க ஆனா நான் எங்கள் ப்லாகில் நாலு ரெசிபி போட்டு அப்புறம் அந்த ராமசேரி இட்லிக்காகவும் எனக்கு இன்டர்நெஷனல் சமையல் சபை பரிந்துரையில் ஜெர்மனியில் இந்த பட்டம் அளிக்கப்பட்டது
///weltberühmter Chefkoch Angel said...
பதிலளிநீக்குஆவ் !! கீதா ,,எனக்கும் நிறைய மெக்சிக்கன் உணவுகள் தெரியும் :) //
ஓஓஓஒ மை கடவுளேஏஏஏஏஏஏ:)) இதைப் படிச்சதும் என் உசிர் பொட்டெனப் போயிடப் பார்த்துதே:) ஹையோ ஜேசுவே:) கிரிஸ்மஸ் கொண்டாடும் வரையாவது என்னை உசிரோடு வச்சிருங்கோ:))
///
பதிலளிநீக்கு[ சாப்பிடும் ஆசை வருகிறது. சந்தர்ப்பம் எப்போது அமையுமோ.....! - ஸ்ரீராம் ] ///
எச்சூச்ச்மீஈஈஈஈஈ ஸ்ரீராம்:)).. சந்தர்ப்பம் நம்மைத்தேடி வருவதில்லை:) நாங்கதான் சந்தர்ப்பதை உருவாக்கோணும்....:)- இப்படிக்குப் புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்.:)
@அவர்கள் உண்மைகள் //Avargal Unmaigal said...
பதிலளிநீக்கு//
முதலில் அடுப்பை பற்றவைத்து கடாய் அல்லது சட்டியை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றவும்///
எண்ணெய்யை சட்டியின் உள்ளே ஊற்றனுமா அல்லது வெளியேவா ரொம்ப குழப்பமாக இருக்கிறதே ஆரம்பமே//
ஹையோ ஹையோ இந்த சந்தேகத்தையெல்லாமா வளர்ந்து வரும் சமையல் novice cook கம்பபாரதிகிட்ட தான கேட்கணும் :)
சரி இப்போ கொஞ்சம் டைம் இருக்கு அதனால் சொல்றேன் எண்ணெய் யை பாட்டிலுக்கு வெளியே சட்டியின் உள்ளே ஊற்றனும் :)))))))
///weltberühmter Chefkoch Angel said...
பதிலளிநீக்குஸ்ரீராம் :) எத்தனை பேர் என் புது அவதாரத்தை பார்த்து மயங்கி விழறாங்கன்னு கவுண்ட் பண்ணி வைங்க :) நாளைக்கு வரேன்///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கரப்பான் பூச்சியைப் பார்த்தா ஊரே மயங்கி விழும்:)... நான் இப்போ கையில ஸ்பிறே உடன் தான் இங்கின உலாவுறேன்ன்ன்:)).. ஹையோ கையில லெக்ஸ்ல:) ஏறிட்டால்ல்ல் :)
@துரை அண்ணா ..ஆமாம் அண்ணா .இங்கே இன்னொரு வகை சிவப்பு மிளகாயும் கிடைக்குது அது ரொம்ப காரம் ..நான் ஆர்கானிக் வெரைட்டிதான் வாங்குவேன் ..அடிக்கடி சமைப்பதில்லை வாரம் ஒருமுறை அப்படித்தானா செய்றேன் ..சோயா சாஸ் கூட க்ளூட்டன் இல்லாத சாஸ் தான சேர்க்கிறேன் அண்ணா
பதிலளிநீக்கு//weltberühmter Chefkoch Angel said...
பதிலளிநீக்குAWWW :) கம்ப பாரதியும் இங்கேயா :) சபாஷ் சரியான போட்டி :)//
என்னாதூஊஊஊஊ ஒரு பூனைக்குக் கரப்பான் பூச்சி போட்டியாஆஆஆஆ?:))
https://www.youtube.com/watch?v=yf_ta_KeMSU
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு@ கீதா //Thulasidharan V Thillaiakathu said...
பதிலளிநீக்குநான் சத்தியமா மயங்கிட்டேன் இது யாரு புதுசானு ஹா ஹா ஹா//
ஹையோ கீதா பூனை கண்ணில் பட்டா என் ரெசிபி பாராது மயங்கினீங்கன்னு சொல்லிடுவாங்க
பதிலளிநீக்கு@கம்பபாரதி :) மேலே என் நண்பர் எவ்ளோ அழகா என் பெயரை ட்ரான்ஸ்லேட் பண்ணி சொல்லியிருக்கார் :) அது ஜெர்மன் மொழி ஐரோப்பா வில் கிடைச்ச பட்டம் ..KOCH னா குக்
@ஸ்ரீராம் :) ஹாஹாஹா அது அவசரத்தில் ஏஞ்சல் இணைக்க மறந்துட்டேன் :)
பதிலளிநீக்கு@கரந்தை ஜெயக்குமார் ..
பதிலளிநீக்குமிக்க நன்றி அண்ணா
ஹா ஹா ஹா ஓகே கலாய்ச்சு முடிச்சிட்டேன்ன்:))... ஆனாலும் அழகான டிஸ் குடுத்த ஜேர்மன் செஃப் க்கு ஒரு பூ:) இந்தாங்கோ.. தண்ணி போட்டு வாடாமல் வச்சிருங்கோ அஞ்சு:)
பதிலளிநீக்குhttps://i1.wp.com/leelavadee.org/wp-content/uploads/2017/01/Flower-for-you.gif
/December 18, 2017 at 6:22 AM
பதிலளிநீக்குAvargal Unmaigal said...
world famous chef ல் இரண்டு வகை உண்டு best chef or worst chef அதில் இந்த செஃப் எந்த வகை ரிசிப்பியை படித்தவர் சமைத்து பார்த்துவிட்டு சொல்லவும் ஹீ//
கர்ர்ர்ர்ர்ர் நறநறநற :) ஒண்ணுமில்லை பல்லை கடிச்சேன் :)
@அவர்கள் உண்மைகள் :) நோ நோ நாங்கல்லாம் அழ மாட்டோம் இப்படி கலாய்ச்சா இன்னும் எங்களுக்கு ஊக்கம் தர மாதிரியாக்கும் :) டெய்லி ஒரு குறிப்பு போட்ருவேனே
பதிலளிநீக்கு@ட்ரூத் ப்ரண்ட் மிக்க நன்றி என்னை பாராட்டியதற்க்கு ..
பதிலளிநீக்குஸ்ஸ்ஸ் இப்போ நீங்க பாராட்டினீங்க தானே :)
@கீதா சாம்பசிவம் அக்கா ..
பதிலளிநீக்குவாங்க அக்கா ஹாஹா :) உங்களுக்கும் சீக்கிரம் ஒரு பட்டப்பெயர் தயார் செஞ்சிருவோம் :)
அக்கா பூண்டு ஒரு குட்டி பல் சேர்த்தேன் அந்த ரகசியத்தை உங்ககிட்ட மட்டும் சொல்லிடறேன் :)
எல்லா வெஜிடபிள்ஸை ம் நறுக்கும்போது பூண்டையும் உறிச்சி செஞ்சி வச்சிட்டேன் அவங்க வெங்காயம் சேர்த்தனாக என் பொண்ணுக்கு வெங்காயம் பிடிக்காது அதனால பூண்டு வெங்காயம் அவசியமில்லை .
அடுத்தது சோயா சாஸ் கூட க்ளூட்டன் free தான ஒரு குட்டி டீ ஸ்பூன் அதுவும் அவசியமில்லை தக்காளியை போதும் ..திக்கா கிரேவியா வரும் கறிவேப்பிலை மல்லித்தழை எல்லாம் சேர்ந்து தனி டேஸ்ட்
@ கீதா அக்கா ..மாஸ்டர் செப் என் சமையலை பார்த்து அவங்க பட்டத்தை திருப்பி கொடுத்திட்டாங்க :)
பதிலளிநீக்கு@ கில்லர்ஜி ..ஹாஹ்ஹா வாங்க :)
பதிலளிநீக்குஅது இன்டர்நெஷனல் சமையல் வல்லுனர்கல் மனதார உவகையுடன் எனக்களித்த பட்டம் .எல்லா புகழும் அந்த தட்டை இட்லிக்கே )
ஜமைக்கா நாட்டினர் கருவாடெல்லாம சேர்ப்பாங்க ஸ்பீனாச்சுடன் .
ஆனா நாம கீரைகளை தனியா தானே சாப்பிடுவோம் ..அதிகமா இப்படி காரம் சேர்த்துதான் சமைப்பாங்க .ஒரு முறை கிட்னி பீன்ஸ் ரைஸ் செஞ்சா ங்க அதில் உள்ளே இறைச்சி அதனால் நாலுமுறை உறுதிப்படுத்தி கேட்டு பிறகே சாப்பிடுவேன் :)
@//நெல்லைத் தமிழன் said...
பதிலளிநீக்குஇப்போவரை பின்னூட்டம் காணாமல் போகலை//
ஹாஹ்ஹா வாங்க நெல்லைத்தமிழன் ..உங்க ரெசிப்பி ரசம் செம டேஸ்டி ..
அது நாம் என்னதான் சமைச்சாலும் பிறரின் குறிப்புப்படி செய்து பார்க்கும்போது வித்யாசம் நல்லா தெரியுது ..அதுக்காக நானா உங்களை குழைசாதம் கம்பு தோசை லாம் செய்ய சொல்லலை :)
பயப்படாதீங்க :)
வாங்க கீதா ..ஆமாம் மெலிசா நீளவாக்கில் கட்டினா அது ஜூலியன் :) ஆமாம் கீதா நானா இதை தோசைக்கும் ரசம் தயிருக்கு சேர்த்தறேன் ரொம்ப சுவையா இருக்கும் .அஜினமோட்டோலாம் கம்பபாரதி மட்டும்தான் சேர்ப்பாங்க நான் சேர்க்கவே மாட்டேன் சோயா சாஸ் கூட க்ளூட்டன் இல்லாததுதான்
பதிலளிநீக்குஅருமையான ரெசிபி பாராட்டுக்குரியது
பதிலளிநீக்கு@துரை அண்ணா :) இப்போ ஐஸ் வச்சத்தில் ரொம்ப ஹாப்பியாகி நிறைய சமையல் குறிப்பு போடுவேன் சொல்லிட்டேன் :)
பதிலளிநீக்கு@ நெல்லைத்தமிழின் ..
பதிலளிநீக்கு//நெல்லைத் தமிழன் said...
கோஸ் கறியில் மிளகாய், சாஸ். புதுவித காம்பினேஷன். நல்லாத்தான் இருக்கும் போலிருக்கு. பார்க்க நல்லா வந்திருக்கு. செய்துபார்க்கும் வாய்ப்பு கிடையாது. பாராட்டுக்கள் ஏஞ்சலின்.//
நன்றி நன்றி ..
கம்பபாரதி லென்ஸ் போட்ட கண்ணாடி போட்டு இதை நன்கு வாசிக்கவும் ஆயிரம் முறை :)
@கீதா நான் இந்த ஸாலட்ஸ் கூட்ட்டுக்களை தக்காளி சட்னிஸ் எல்லாத்தையும் க்ளூட்டன் இல்லா பிரெட்டுடன் சாப்பிடுவேன் நல்ல இருக்கும்
பதிலளிநீக்கு@காமாட்சியம்மா வாங்கம்மா .அதேதான் ..பூண்டு ஒரே ஒரு குட்டி பல்லு தான சேர்த்தேன் சோயா ஸாஸ் கூட க்ளூட்டன் free ..இதெல்லாம் ஒரு tangy சுவை தருது அதனால்தான் சைனீஸ் மெக்சிகன்ஸ் இவற்றை அதிகம் சேர்க்கிறாங்க
பதிலளிநீக்குஹீ ஹீ காமாட்சியம்மா அந்த பெயர் உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் :) ஸ்விஸ் பக்கத்தில் இருந்துதான் அந்த விருது கிடைச்சது .மிக்க நன்றிம்மா
@ கீதா ..அது ரகசியமாவே இருந்தா அப்புறம் யாரோ புது பதிவர்னு நினைச்சி கலாய்க்காம போயிடுவாங்க ..
பதிலளிநீக்குநேர்மை னு ஒன்னு இருக்கே அதான் சேர்த்தேன் என் பெயரையும்
@ ராஜி வாங்க :) ஒரு டிக்கட் போடுங்க பிரிட்டிஷ் ஏர்வேஸில் எனக்கு :) நானே கையில் கொண்டாந்து கொடுக்கறேன் ஹாஹாஹா :)
பதிலளிநீக்கு/@ மியாவ் பாரதி //கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்👹👹👹👹கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)...
பதிலளிநீக்குபடத்தைப் பார்த்து முடிவுக்கு வந்திடக்குடாது:) லண்டன் ஸ்டைல் தட்டை இட்டலியை மறந்திடக்குடாது ஜொல்லிட்டேன்ன்ன்:)..//
உங்களுக்கு பொறாமை :) என் ரெசிப்பி உலகப்புகழ் அடைஞ்சதை பற்றி ..கிட்டத்தட்ட 4200 வியூஸ் தெரியுமோ :)
எனக்கே வெக்கமா போச்சு உலகமெல்லா பக்கமிருந்து வந்து வந்து பார்த்து இருக்காங்க :)))))))
@ கம்பபாரதி :) நீங்க சொன்னாலும் சொல்லமுடியும் தேம்ஸ் மகாராணி எல்லாம் எங்களுதுதான் ஸ்கொட் கேட் :) cat
பதிலளிநீக்குஹாஹா :)
நெல்லைத்தமிழனே என்னை பாராட்டிட்டார் .
அநேகமா அடுத்த பட்டப்பெயர் //நெல்லைத்தமிழன் பாராட்டிய சமையல் கலைஞி ஏன்ஜல் //இப்படி வரலாம் நான்
கம்பபாரதி மியா கம்பபாரதி athira said...
பதிலளிநீக்குமிகவும் சிம்பிள் அண்ட் நைஸ் அஞ்சு.. இந்த மரக்கறிகள் பெரிதாக அவியத் தேவையில்லை.. சாடையா சூடு பிடித்தாலே போதும்... ஏன் இதை அடுப்பில் வைக்காமல்.. சோயா சோஸ் க்குப் பதில் சலாட் கிரீம் போட்டு, பச்சையாவே சாப்பிடலாம்..
பார்க்க கலர்ஃபுல்லா இருக்கு, இதுக்குள் ஒரு துண்டு புரோக்கோலியும் சேர்த்திருந்தால் கலர் இன்னும் சூப்பராகி இருக்கும்.வ் //
ஆவ் தாங்க்யூ தாங்க்யூ :)
இருங்க திரும்பி கன்போர்ம் பண்ணிக்கறேன் பாராட்டினது நீங்கதானான்னு :)
ஹாஹா .ஆமா அதிராவ் எல்லா வெஜிஸ் போட்டும் செய்யலாம் இதே முறையில் .ப்ரோக்கோலி எனக்கு ஒத்துக்காது அதனை சேர்க்கலை
க்ரில் நல்லதுதான் நம்மூரில் இப்போ எல்லாம் கிடைக்குத்து அப்படியும் செய்யலாம்
@அசோகன் குப்புசாமி .
பதிலளிநீக்குபாராட்டுக்களுக்கு நன்றிங்க
@மியாவ் //கம்பபாரதி athira said...
பதிலளிநீக்கு//////weltberühmter Chefkoch//// இதென்ன இது அவசரமா அரைக்கண்ணில படிச்சேன் வைட் கொக்கொறோச் எனத் தெரிஞ்சுதேஏஏஏ.... //அந்த பவர் கிளாஸை காணாம போட்டேனு சொன்னிங்களே கிடைச்சுதா ??
முதல்ல கண்ணாடி போட்டு பாருங்க அந்த ஜெர்மன் மொழி
கம்பபாரதி
பதிலளிநீக்கு//இதைப் பார்த்தால் நெல்லைத்தமிழன் கலாய்க்க மாட்டார் எனும் தெகிறியம்:)) ஹா ஹா ஹா:) கரப்பான் பூச்சிக்கு என்னா அறிவு:)..//
ஹாஹா //அமைதி அமைதி :) அவர் என்னை பாராட்டினது உங்களுக்கு பொறுக்கலை :)
@மியாவ் ..அது முழுதாதான் இருந்தது கொலாஜில் வெட்டுபட்டுடுச்சி மிளகாய் ..:) உங்க ஊரில் சாசேஜ் இவ்ளோ சிவப்பாவா இருக்கும் கர்ர்ர்ர்
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம் ////
பதிலளிநீக்கு[ சாப்பிடும் ஆசை வருகிறது. சந்தர்ப்பம் எப்போது அமையுமோ.....! - ஸ்ரீராம் ] ///
சீக்கிரம் செஞ்சு அசத்துங்க :) மிளகாய் இல்லைனாலும் வெறும் தக்காளி போட்டாலும் பொது கொஞ்சம் பீன்ஸ் நீளவாக்கில் நறுக்கி சேர்த்தாலும் சுவையா இருக்கும்
and a BIG THANKS FOR ENCOURAGING MEEEEEEEE :)
ஏஞ்சலின் - உங்க ரெசிப்பில முக்கியமானது மிளகாய், கோஸ். அந்த சிவப்பு மிளகாய் கிடைக்கலைனா காப்சிகம் உபயோகப்படுத்துங்கள் என்று சொன்னால் ஞாயம். அதைவிட்டு தக்காளி உபயோகப்படுத்துங்கள் ஶ்ரீராம் என்று சொல்றீங்க. விட்டா, இப்போ கோஸ் கிடைக்கலைனா அதுக்குபதில் வெண்டைக்காய் உபயோகப்படுத்துங்கள்னு சொல்வீங்க போலிருக்கே...
பதிலளிநீக்கு@எஞ்சலின் - செஞ்சது கோஸ் மிளகாய் கறி. இதுல மிளகாய் கிடைக்கலைனா கேப்சிகம் போடலாம் என்று சொன்னால் நியாயம். அதுக்குப் பதில், தக்காளி போடச்சொல்றீங்க. கொஞ்சம் விட்டால் கோஸுக்குப் பதில் வெண்டைக்காயும் போடலாம்னு சொல்வீங்க போலிருக்கே.
பதிலளிநீக்குஸ்ரீராம் - ஐபேட்ல பின்னூட்டம் போட்டேன். திரும்ப தளத்துக்குப் போனபோது இருந்தது. இப்போ லேப்டாப்ல இருந்து பார்க்கும்போது காணலை. எதுனாலன்னு தெரியலை.
பதிலளிநீக்கு@நெல்லைத்தமிழன் :) அது ஒரு ப்ளோவில் வந்திடுச்சு ..இது வேற விதமா செய்ய்யலாம்னு சொன்னேன் ..நான் நிறைய தக்காளி சேர்ப்பேன் சமையலில் எப்பவும் கிலோ கணக்கில் தக்காளி வீட்ல இருக்கும் :) உருளை காலிப்ளவர் தக்காளி பீன்ஸ் காரட் எல்லாத்தையும் கொஞ்சம் மிளகாத்தூள் மசாலா சேர்த்து செய்வேன் எல்லா சாதத்துக்கும் கூட்டு போலசாபிடலாம் :)
பதிலளிநீக்குரெசிப்பி படிப்பவர்கள் எல்லாம் கினி பிக்சா
பதிலளிநீக்குGMB சார் :) இல்லை செஞ்சி பார்த்தாதான் கினி பிக்ஸ்
பதிலளிநீக்குஒரு பின்னூட்டத்துக்கு இவ்வளவு கடந்து வரவேண்டி இருக்கு.
பதிலளிநீக்குசுவையான சமையல் ஏஞ்சல்.
சோய சாஸ், எல்லாம் நம் பக்கமொத்துக் கொள்வதில்லை. கமகள் சமையலில் இதெல்லாம் கோலாகலமாக நடை பெறும்.
படித்துக் கொள்கிறேன். ஜூலியன் கட் எனக்கு மிகப் பிடித்தது. நன்றி கண்ணா.
நல்ல குறிப்பு. இங்கே கோஸ் மற்றும் ஷிம்லா மிர்ச் சேர்த்து செய்வது வழக்கம். சோயா சாஸ் சேர்ப்பதில்லை!
பதிலளிநீக்குவாங்க வல்லிம்மா :) நள்ளிரவில் ஆரம்பிச்சோம் அரட்டை கச்சேரி :)
பதிலளிநீக்குமிக்க நன்றிமா ..சோயா சாஸ் அவசியமில்லை வல்லிமா .நானும் எப்போதாவதுதான் சேர்க்கிறேன் .ரொம்ப உப்பு இருக்கு அதில் .
ஜூலியன் கட் ஸாலட்க்கு ரொம்ப நலல இருக்கும்
காப்ஸிகம்தான் ஷிம்லா மிர்ச் ஆ ....இன்னிக்குதான் தெரியும் :)
பதிலளிநீக்குஇந்த ரெட் காப்ஸிகம் தூளும் நம்ம சாதா கார மிளகாய்தூளுக்கு பதில் யூஸ் செய்யலாம் .மிக்க நன்றி வெங்கட் சகோ
19/12_3:32 ???
பதிலளிநீக்கு//December 18, 2017 at 3:24 PM
பதிலளிநீக்குகம்பபாரதி athira said...
ஹா ஹா ஹா ஓகே கலாய்ச்சு முடிச்சிட்டேன்ன்:))... ஆனாலும் அழகான டிஸ் குடுத்த ஜேர்மன் செஃப் க்கு ஒரு பூ:) இந்தாங்கோ.. தண்ணி போட்டு வாடாமல் வச்சிருங்கோ அஞ்சு:) //
aaaw thanks miyaav :)