ராமனை மன்னிக்கப் போகும் இன்றைய சீதை நெய்வேலி மாலாவின் படைப்பு. இவர் முன்பு கூறாமல் சன்யாசம் என்கிற பெயரில் நமது தளத்தில் ஒரு சிறுகதை கேவாபோ வுக்குக் கொடுத்திருக்கிறார்.
வாசுதேவி
நெய்வேலி மாலா
அழகிய நந்தவனம்.
ராமனும் சீதையும் மெல்லிய குரலில் காற்றுக்கும் வலிக்குமோ என்பதுபோல உரையாடிக்கொண்டிருந்த அழகில்,
செடி கொடி இலை மலர் கனி யாவும் அசைவற்ற பிரபஞ்ச அமைதியில் உறைந்திருக்க, காலமே நின்று போனது போல ஒரு மாயத்தோற்றம்.
அந்த அமைதியை கிழிப்பது போல ஒரு கர்ண கடூர அவலமான அழுகைக்குரல்.
என்ன???
ராமராஜ்ஜியத்தில் அழுகையா?
அப்படி ஒன்றை கற்பனையாக நினைத்துப்பார்ப்பது கூட அபத்தமல்லவா?
ஆனாலும் அந்த நெஞ்சைப்பிசையும் அழுகைக்குரல் உண்மையே என்பது போல விட்டு விட்டு தொடர்ந்தது.
சீதையின் தாய்மனம் துடித்தது.
சீதை துடித்ததை காணப்பொறுக்காத இராமனின் இதயமோ அதைவிட பன்மடங்கு துடித்தது.... உயிரின் பாதியல்லவோ?
சீதே... மனம் கலங்காதே. என்னவென்று விசாரிப்போம்.. இதோ இங்கே என்னைப்பார்...பாரேன்........ சீதா... சீதா....
டேய் அண்ணா....எந்திரிடா .... அண்ண்ண்ண்ணாஆஆஆஆஆ டேய்.....
சொம்புத்தண்ணீரையும் துளிக்கூட ஈவிரக்கமே இல்லாமல்
அவன் மீது ஊற்றினாள் கமலி.
மனு அலறியடித்து எழுந்தான். பிசாசே....எந்த நேரத்திலடி பெத்தாங்க உன்ன?
நைட்டு வந்து படுக்க மணி ரெண்டாச்சு தெரியுமா?
ஓ..அப்டியா ?... ஏன் ரெண்டாச்சு...? சொல்லேன், தெரிஞ்சுக்கிறேன்.
அது வந்து.....வேலையிருந்தது. அதான்.
என்ன வேலை?
அதெல்லாம் எல்லாத்தையும் உன்னிட்ட சொல்லிட்டு இருக்க முடியாது, போடி.
போடா டேய்.... போடா ... பெரிசா ஐ.டி. கம்பெனில வேலை பார்த்துட்டு வந்த மாதிரி என்னா.... பில்டப்பு....?
பொழுதன்னிக்கும் ஊர் சுத்த வேண்டியது. டிராமா மண்ணாங்கட்டி தெருப்புழுதி ன்னு திரிய வேண்டியது. நடுராத்திரில வந்து கொட்டிக்காம தூங்க வேண்டியது. சீதே, நளாயினி, கண்ணகி மாதவி ன்னு எட்டூர்ருக்கு கேக்கிற மாதிரி அலற வேண்டியது.
ஏண்டா டேய் தெரியாமத்தான் கேக்கிறேன். உனக்கு சம்பாதிக்கணும், வாழ்க்கைல செட்டில் ஆகணும் ங்கிற எண்ணமே கிடையாதா?
தன்பாட்டுக்கு பேசிக்கொண்டிருந்த கமலி, என்னடா இது சத்தமே காணும்...? ரொம்ப திட்டிட்டமோ....ஃ பீல் ஆயிட்டானோ... ன்னு திரும்பி பார்க்க,
மனு எழுந்து முகம் கழுவி, தலையை சீப்பெடுத்து வாராமல், இப்படியும் அப்படியுமாய் கையால் அழுத்தி கொஞ்சம் ஒழுங்கு படுத்திக்கொண்டு சட்டையை மாட்டி கிளம்பிக்கொண்டிருந்தவனின் எதி ரே சென்று வழிமறித்தாற்போல கையை இரண்டு பக்கமும் விரித்து நீட்டி
மனு ப்ளீஸ்...இன்னிக்காச்சும் வீட்ல இருடா... அம்மா பாவம் டா. இன்னிக்கு அவங்க அனிவர்சரி டே டா....
அவ்வளவுதான் .. கண்கள் சிவக்க நெற்றி நரம்பு புடைக்க அவன் நின்ற கோலம் டோன்கேர் டைப்பான கமலிக்கே கொஞ்சம் நடுக்கம் ஏற்படுத்தியது. அம்மா அம்மா.! .நீ கட்டிக்கிட்டு அழு உங்கம்மாவை. தள்ளு சொல்றேன், அவளை ஒரே தள்ளாக தள்ளிவிட்டு, யமஹாவை எடுத்துக்கொண்டு போயே போய்விட்டான்.
வாசுதேவனும் தேவிகாவும் ஊர்கண் மொத்தமும் படும்படி அவ்வளவு அன்யோன்யம். எந்த நேரத்தில் யார் விட்டுக்கொடுக்கணுமோ அப்படி இருப்பார்கள். கமலியும் மனுவுமாக இரண்டு குழந்தைகள். வசதி வாய்ப்புக்கு ஏதும் குறைவில்லை. இரண்டு குழந்தைகளுக்கும் இடையே சரியாக ஐந்து ஆண்டு வித்யாசம். மனு காலேஜ் கடைசிவருடம் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் முடிக்கும்போது கமலி பள்ளிப்படிப்பை முடித்து காலேஜ். அவளுக்கு பெரிதாக படிப்பில் ஏதும் நாட்டமில்லை, பி.ஏ.இலக்கியம் எடுத்து காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தாள். மனுவுமே படித்தது என்னவோ மெக்கானிக்கல் இஞ்சினியரிங் ஆக இருந்தாலும், இலக்கியப்பிரியன். எழுதணும், நடிக்கணும், டைரக்ட் பண்ணனும் என்று ஊர்ப்பட்ட கனவுகளை வைத்திருப்பவன்.
அப்போதுதான் அது நடந்தது. ஆம். வாசுவும் தேவியும் பிரிந்தனர். மனுவும் கமலியும் அம்மாவுடன் இருந்தாலும் மனு என்னவோ அப்பா பக்கம்தான். ஆனால் அவனால் அப்பாவுடனும் இருக்கமுடியாத சூழல். தனியாகத்தான் இருந்தார். ஆனால் மனு வந்தால் விசாரிப்பதோ சாப்பிடச்சொல்வதோ ஏதுமில்லை, வருகிறாயா, சரி. போகிறாயா சரி என்று இருந்தார். மிக கவனமாக அவன் தன்னை ஏதும் கேட்பதை தவிர்த்தார்.
வாசு தொழிலில் செழிப்பாக இருந்த நேரம். ஒரு தொழில்முறை மீட்டிங்கின் போதுதான் ஆனந்தியை சந்திக்க நேர்ந்தது. அன்றோடு தொலைந்தது அவன் ஆனந்தம்.
ஆனந்தியும் அவள் கணவன் விஜயனும், வாசு-தேவிகாவுக்கு நேர் எதிர். ஒரு விஷயத்தில் கூட ஒத்துப்போனதாக வரலாறே கிடையாது. வீம்புக்கேனும் சரியாக இருப்பதை கூட அது சரியில்லை என்று கட்சி கட்டுவதில் மட்டுமே அவ்வளவு ஒற்றுமை. பிறந்த இடத்து செல்வமும், ஒற்றையாய் பிறந்திருந்த ஆளுமையும் அவளை மேலும் திமிரோடு இருக்க வைத்தது.
விஜயனும் பரம்பரை பணக்கார குடும்பமே. ஆனாலும் நியாயம் நேர்மைக்கு பெரிதும் கட்டுப்படுபவன். அவனும் உடன்பிறப்பு இல்லாதவன் தான். ஆனால் வளர்ப்பு அவ்வளவு நேர்த்தி.
என்னமோ அவன் நேரம், அவனுக்கு வந்து வாய்த்தவள் ஆனந்தி. முதலில் இதெல்லாம் அவனுக்கு பெரிய விஷயமாக படவில்லை. ரொம்ப செல்லம் போல என்று கொஞ்சம் அசால்டாக இருந்துவிட்டான். ஆனந்தியோ இஷ்டத்துக்கும் ஊர் சுற்றுவது, நினைத்த நேரத்துக்கு வீட்டுக்கு வருவது என்று இருந்தாள். நினைத்த நேரத்துக்கு வீட்டுக்கு வருவது கூட பரவாயில்லை. டிரைவர் இருக்கார். பத்திரத்துக்கு கேரண்டி. ஆனால் அவளின் நட்புவட்டம்? அது விஜயனுக்கு கொஞ்சம் கவலையளிக்கவே செய்தது.
ஆனாலும் எதுவும் கேட்டு விட முடியாது. பேச்சே ஒரு ஆளுமையுடன், அப்படித்தான் அதுக்கென்ன என்பது போலத்தான் இருக்கும். அவளை வாசுவின் வசீகரமும் ஆளுமையும் மிகவும் கவர்ந்தது. ஆனால் வாசு, ஆனந்தி எங்கேனும் அழைத்தால் வருவதில்லை, அவன் உண்டு அவன் தொழில் உண்டு, மீட்டிங் உண்டு என்று இருப்பது என்னவோ, தனக்கு பெரிய அவமானம் போல உணர்ந்தாள்.
அவள் வேறு ஒரு கணக்கு போட்டாள். விஜயனை அழைத்துக்கொண்டு வாசு வீட்டுக்கு ஒருநாள் சென்றாள். வாசுவும் தேவிகாவும் அவர்களை வரவேற்றனர். வாசுவின் அத்தனை நெருக்கமான நண்பர்கள் மட்டுமல்லாது, தொழில் முறை நண்பர்களை பற்றியும் தேவிகாவுக்கு நன்றாகவே தெரியும். அவர்களின் அன்யோன்யம் விஜயனைக் கவர்ந்தது. தேவிகாவின் குளுமையான அழகும், அமைதியும் விஜயனைக்கவர, கொஞ்சம் அதிகமாகவே அடிக்கடி அவன் பார்வை அங்கே தங்க, அதைத்தானே எதிர்பார்த்தாள் ஆனந்தி! சாதாரணம் போல பேசிக்கொண்டிருந்துவிட்டு திரும்பி விட்டனர்.
இப்போது ஆனந்தி இல்லாமலேயே விஜயன் அடிக்கடி வாசு வீட்டுக்கு போய் வர ஆரம்பித்தான், ஆனந்தி எதிர்பார்த்தது போலவே. எப்படியாவது ஆனந்தியை பொறாமை கொள்ளவைக்கவோ, எரிச்சல் உண்டாக்கவோ அவன் செய்த இந்தக்காரியம் வேறொரு பாதக விளைவை உண்டாக்கியது. விஜயனின் அடிக்கடி தனித்த வருகையும், ஆனந்தியின் தொடர்ச்சியான அருகாமையும் வாசுவுக்கு கொஞ்சம் யோசனையாக இருந்தது. கோபத்திற்கும் எரிச்சலுக்கும் இடைப்பட்ட உணர்வில் அல்லாடினான். ஆண் என்கிற எண்ணம் அவனின் ஒவ்வொரு செல்லிலும் கிளைத்தெழ தேவிகாவுக்கு டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பினான். இது ஆனந்திக்கே தெரியாது.
தேவிகா திகைத்துப்போனாள். என்ன ஏது என்று கேட்கலாம் என்று பார்த்தால் அதற்கு இடமே கொடுக்கவில்லை வாசு. ஒழுங்காக நேரத்துக்கு வராமல் இருப்பதில் தொடங்கி, ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்வது வரை கவனமாக தூரவே இருந்தான்.
வாசுவின் இந்த பாராமுகமும், பதில் சொல்லாமல் தவிர்க்கும் நிலையும், விரைவிலேயே தேவிகாவுக்கு பிடிபட, அவள் மௌனமாக டைவர்ஸ் நோட்டீசில் கையெழுத்து இட்டு வாசுவின் ஆஃபீஸ் அட்ரசுக்கே அனுப்பி வைத்தாள்;
இன்னும் கடுப்பானான், வாசு. ஒரு வார்த்தை தன்னிடம் விளக்கம் கேட்கக்கூட முடியலை போல என்று; தான் தான் அதற்கு இடம் கொடுக்காமல் நடந்து கொண்டோம் என்பதை அறவே மறந்தவனாக.
ஆயிற்று. இது நடந்து ஐந்து வருடங்கள். அதன் பிறகு ஆனந்தியோ விஜயனோ இவர்களுடன் தொடர்பில் இல்லை. அவர்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்தும் ஏதும் தகவல் இல்லை. முயற்சித்தால் தெரிந்து கொண்டிருக்கலாம் தான். ஆனால் வாசுவோ தேவகியோ அதை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை. முக்கிய காரணம் அவர்கள் தான் என்பதை வாசு உணர்ந்திருந்தான். ஆனால், தேவிக்கு அப்படி நினைக்ககூட தோன்றவில்லை.
ஏதோ நாடக ஒத்திகையிலிருந்து திரும்பிய மனு, வீடு வந்தபோது வாசலில் புதிதாக ஒரு ஜோடி ஷூஸ்.... வாசலில் ஏதும், காரைக்காணோமே...யாரு...?
ஹாலில் இருப்பவர்கள் அறியாமல் பக்கவாட்டு வழியாக மனு தன் ரூமுக்கு போக வழி உண்டு, ஆனால் வந்திருப்பது யார் என்று தெரிந்து கொள்ளணும் போல ஒரு பேராவல் அலையாய் உந்தியது. அப்பாவாக இருக்குமோ? அப்பாவாய்த்தான் இருக்கும் என்று கொஞ்சம் சந்தேகமும் கொஞ்சம் சந்தோஷமுமாக எட்டிப் பார்க்க, அங்கே இருந்த நபரை அவனால் அடையாளம் காண முடியவில்லை. பார்த்ததே இல்லை. பேச்சும் ரொம்ப மெலிதாக கேட்டது...கேட்டவரைக்கும், என்னவோ, ராமன், சீதை என்று காதில் விழ... கமலி!... என்று வேண்டுமென்றே உரக்க குரல் கொடுத்தவாறு மாடியேறினான்.
வந்தவர், மனுவா இது அடையாளமே தெரியலை, ரொம்ப வளர்ந்துட்டான் என்ற அவரின் குரலில் அவ்வளவு வாத்சல்யம் இருந்தது. கமலி எங்கே? என்றார். மாடில தான் என்றாள் தேவி. சரி நான் கிளம்பறேன், என்ன சொல்லட்டும்? என்று தயங்கி நின்றார்.
கொஞ்சம் கூட தயங்காமல், யோசிக்காமல் பட்டென்று, எதுவும் சொல்ல வேண்டாம். பாத்துக்கலாம், நீங்க கிளம்புங்க என்றாள் தேவி. இத்தனை நாளாய் எத்தனை தடவை வந்திருப்பேன், எத்தனை தடவை இதைக் கேட்டிருப்பேன் ; நீயும் இதே பதிலைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறாய் என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே மனுவும் கமலியும் இறங்கி வர அவர் கிளம்பிக்கொண்டிருந்தார்.
நல்ல உயரம். கொஞ்சம் காதோர நரை. வேக நடை. கமலியும் மனுவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டே,
யாரும்மா அவங்க என்று கமலி ஆரம்பிக்க, தேவியோ அவள் எதுவும் கேட்காதது போல பாவித்து சாப்பிட உக்காருங்க என்றாள்.
மனு உட்கார வந்தவன் அப்படியே ரூமுக்கு கிளம்ப, முதன்முறையாக, மனு இங்கே வா என்றாள் அம்மா. குரலில் அவ்வளவு அழுத்தம் மீறவே முடியாது போல.
மனுவா அசருபவன்?
சாப்பிட்டுட்டேன்ன்னு சொல்லு கமலி என்றவன் ரூமுக்கு போய் கதவை சாத்திக்கொண்டான். தேவிகா மகளைப் பார்த்தால். கமலியின் கண்களில் இன்னும் அந்த கேள்வி இருந்தது.
அதை பொருட்படுத்தாமல், உனக்கு தெரியுமா கமலி? அப்பா ஏன் என்னை டைவர்ஸ் பண்ணார் ன்னு என்றாள்.
தெரியாதும்மா. தெரியவும் வேண்டாம், எங்களுக்கு நீ போதும், என்று அம்மாவை ஆதரவாக அணைத்துக்கொள்ள, தேவி கொஞ்சம் கசந்த புன்னகையுடன், எனக்கே தெரியாது கமலி....உனக்கு எப்படி சொல்வேன்? என்றாள்.
என்னம்மா இது என்றாள் கமலி அதிர்ந்து போய். ஏன்யா ன்னு சட்டையைப்பிடிச்சு கேட்டிருக்க வேண்டாமா?
கேட்டிருக்கலாம்தான். அவ்வளவு புரிதல் இருந்ததுதான். ஆனால் எதுவுமே கேட்க வாய்ப்பு தராமல் பாராமுகமாய் இருந்து, எத்தனை விதமாய் என்னை அவாய்ட் பண்ண முடியுமோ அவ்வளவும் செய்தார். சரி... அவருக்கு இதுதான் நிம்மதி என்றால் அதை நாம் கெடுப்பானேன் ன்னு விட்டுட்டேன் என்றவளுக்கு அப்போது வராத கண்ணீர் இப்போது மளமளவென்று பெருக்கெடுத்தது.
அதற்கப்புறமாவது பேசியிருக்கலாமேம்மா என்றாள் கமலி அம்மா அழுவது தாங்காமல். .
பேசியிருக்கலாம்தான்..யார் முதலடி எடுத்து வைப்பது? என்ற தயக்கத்திலேயே போய்விட்டது காலம்.
எனக்குத்தெரியும் கமலி, அவர் மீது ஏதும் தப்பு இருக்காது, அது நிச்சயம். தப்பு இருந்தாலுமே நான் அவரை மன்னிக்கத்தயாராகவே இருந்தேன், இருப்பேன். அவரன்றி எனக்கு வேறு ஒரு உலகமே கிடையாது. என் சந்தோஷத்தை விட்டுவிட்டுத்தான் அவர் நிம்மதிக்கு கையெழுத்து போட்டேன் என்றாள்.
கமலிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
சரி... எனக்கு தூக்கம் வருது. நீ சாப்பிட்டுவிட்டு, தூங்கப்போ என்றாள் அம்மா.
இத்தனையையும் மனு கேட்டுக்கொண்டு தான் இருந்தான், கதவை சும்மாதான் சாத்தியிருந்தான், வந்தது யார் என்று அம்மா கமலியிடம் சொல்லக்கூடுமோ என்கிற நப்பாசையில். ஆனால், அம்மா இந்த ஐந்து வருடங்களாக கூறாத இந்த கதையில் அவன் திகைத்துப் போனான். ஐயோ...அப்பா... என்ன பைத்தியக்காரத்தனம் செய்துவிட்டீர்கள். இப்படி ஒரு அம்மாவை...!
மறுநாள் காலை அப்பாவிடம் போய் இதெல்லாம் கூறி, சண்டைபோட்டாவது சேர்த்து வைக்கவேண்டியது தன் கடமை என்றெல்லாம் பிரமாதமாக முடிவு செய்துகொண்டான், தன் முடிவின் படி ஏதும் நடக்கப்போவதில்லை என்பதை அறியாமல்.
மறுநாள் காலை. கமலி எழுந்து படித்துக்கொண்டிருந்தாள். அம்மா வாசல் கதவை திறந்தவள் அப்படியே திகைத்து நின்றுவிட்டாள். வாசு. வெளியில் குளிரில் அப்படியே மடங்கி உட்கார்ந்த வாகில் தூங்கிக்கொண்டிருந்தான். கதவு திறக்கும் சத்தம் கேட்டு வாசு எழ, அண்ணலும் நோக்கி, அவளும் நோக்க... வார்த்தைகளுக்கு ஏதும் தேவையே இருக்கவில்லை அங்கே.
விஜயன்தான், அவனுக்கும், வாசுவுக்கும் பொதுவான ஒரு நண்பரை அனுப்பி அவர்களை சேர்த்து வைக்க பாடுபட்டவன். ஐந்து வருடங்களாக முயன்றும் (அவர் முயன்றாலும் விதி வேடிக்கையல்லவா பார்துக்கொண்டிருந்தது). இன்று தடாலடியாக வாசுவை இங்கே கூட்டி வந்து இருவரையும் சந்திக்க வைத்தே ஆகவேண்டும் என்று தோன்ற, வெகுவான வாக்குவாதம் மற்றும் தயக்கங்களுக்கு பின் வாசு இங்கு வர சம்மதித்தார்.
.........இங்கிருந்து போனவர் வாசுவை கூட்டி வந்து இங்கே விட்டுவிட்டு அப்படியே கிளம்பிவிட்டார். வாசு, கதவின் காலிங் பெல் மீது கை வைக்க போனவர் உள்ளே நடந்த சம்பாஷணைகள் பெரும்பாலும் கேட்காவிட்டாலும், சட்டையைப்பிடிச்சு கேட்டிருக்கலாமேம்மா என்கிற கமலியின் ஆத்திரக்குரலும் தேவியின் பதிலும் நன்றாகவே கேட்க அப்படியே மடங்கி உட்கார்ந்துவிட்டார்.
அவள் நோக்கியதிலேயே புரிந்தது வாசுவுக்கு
அத்தனை அவலங்களையும் பொறுக்கும் பூமித்தாயின் மகளல்லவோ சீதை?
சரித்திர காவியத்தை நாம் எதுக்கு மாற்றுவானேன்? கற்பனையாகக்கூட?! சீதை இராமனை மன்னித்தாளா இல்லையா என்று நமக்குத்தெரியாது, மன்னித்தாள் என்று முடித்தால் காலகாலமாக நமக்குள் செட் ஆகியிருக்கும் ஈகோவுக்கு திருப்தியாக இருக்கும்! அவ்வளவுதான்.
வாழ்க நலம்..
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம்..
பதிலளிநீக்குஇன்னிக்கு நானே தாமதம்! :)
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் கீதா அக்கா...
பதிலளிநீக்குஸ்ரீராம், துரை சகோ, கீதாக்கா காலை வணக்கம்
பதிலளிநீக்குகீதா
இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.
பதிலளிநீக்குவிறுவிறுப்பான நடை..
பதிலளிநீக்குபுதிய கோணம்...
ஆர அமர மீண்டும் படிக்க வேண்டும்..
வாழ்த்துக்களுடன்...
மிக்க நன்றி
நீக்குமனம் விட்டுப் பேசிக் கொள்ள மறுத்ததால் வந்த விளைவு. இத்தனைக்கும் வாசுவுக்கு இதற்கு யார் காரணம் என்று நன்றாகவே தெரியும். அப்போ அந்நியோன்னியமான மனைவியிடம் இதைக் குறித்துப் பேசிப் புரிந்து கொண்டிருக்கலாம். நேரம்!
பதிலளிநீக்குஆம். பாயிண்ட்👍
நீக்குமனம் விட்டு பேசிக் கொள்வதில்லை இப்போது பலரும். அதனாலேயே தொல்லைகள். பேச ஆரம்பித்தால் சண்டை தான் போட்டுக் கொள்கிறார்கள் பல தம்பதிகள்!
பதிலளிநீக்குஎங்கள் ஊர்க்காரருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
ஆம். வாழ்த்துக்கு நன்றி
நீக்குஇக்காலத்தில் பலரும் தனித் தனித் தீவுகளாக தம்மை அமைத்துக்கொண்டு ஏமாற்றிக்கொள்கிறார்கள்.
பதிலளிநீக்குஉண்மை.
நீக்குஅருமை
பதிலளிநீக்குதம+1
மிக்க நன்றி. அது என்ன தம+?
நீக்குகதாசிரியருக்குப் பாராட்டுகள். அருமை
பதிலளிநீக்குமிக்க நன்றிகள்
நீக்குஉலகில் பேசித்தீர்க்க முடியாத விடயங்கள் இல்லை ஆனால் பேஞுவதற்கு மனிதர்களுக்கு நேரமில்லை, இருந்தாலும் பேசும் எண்ணமில்லை.
பதிலளிநீக்குபலரது வாழ்க்கை இப்படியே கடந்து முடிகிறது.
உண்மை.
நீக்குமனம் விட்டுப் பேசினாலே பல பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.
பதிலளிநீக்குஆனால் யாரும் பேசுவதில்லை... அங்குதான் ஈகோ முன்னிற்கிறது.
அருமையான கதை...
முடிவில் கொஞ்சம் சினிமாத்தனமாக தெரிந்தாலும் நன்று...
கதையாசிரியருக்கு வாழ்த்துக்கள்.
ஆம். தயக்கம். அதுக்கு ஈகோ, விருப்பு வெறுப்பு என காரணம் வேறாக இருந்தாலும்.
நீக்குஆசிரியரின் முன்வந்த கதையான சந்நியாசத்துக்குப் போய்வருவது உசிதம் எனத் தோன்றுகிறது. (அப்போது எபி எனக்கு அறிமுகமாகியிருக்கவில்லை!)
பதிலளிநீக்குஹஹஹ!
நீக்குகதை மிக அருமை!!! நடையும் நன்றாக இருக்கிறது. எப்போதுமே நான் சொல்லுவது எந்த ஒரு பிரச்சனைக்கும் அமிக்கபில் தீர்வு உண்டு. நாம் கொஞ்சம் நிதானமாக ஆய்ந்து செயல்பட்டால் தீர்வு கிடைக்கும். பெரும்பாலான நேரங்களில் இப்படியான நேரடியாக மனம் திறந்து பேசாமல் போவதாலும் , ஏதோ ஒரு வகை ஈகோ மனைவியையோ, அல்லது கணவனையோ ஆட்கொள்வதால் இப்படியாகிப் போகிறது. இத்தனைக்கும் வாசுவும், தேவிகாவும் அன்யோன்யமாக வாழ்பவர்கள் எப்படி? எங்கு அந்த ஸ்ருதியில் பிசகானதோ....அதை முளையிலேயே சரிசெய்திருக்கலாமோ அன்யோன்யம் எப்படி இப்படி டக்கென்று பிரிந்தது...ம்ம்ம் இதைத்தான் விதி என்று சொல்கிறார்களோ...
பதிலளிநீக்குவாழ்த்துகள்! பாராட்டுகள் கதாசிரியருக்கு! நன்றாக எழுதியிருக்கிறார்...
கீதா
மிகக நன்றி🙏
நீக்குபெயரைப் பார்த்ததும் முன்பே இவர் ஒரு கதை எழுதிய நினைவு வந்தது...அப்புறம் நீங்களே அதைச் சொல்லியிருக்கீங்க....கூறாமல் சன்யாசம்...... கொஞ்சம் யோசித்ததும் நினைவுக்கு வந்துவிட்டது..
பதிலளிநீக்குகீதா
😍😍😍🙏
நீக்குபின்னூட்டம் இன்னும் காணாமல் போகிறதே.
பதிலளிநீக்குஎன்ன பின்னூட்டம்?
நீக்குஒருவர் பேச நினைத்தாலும்,மற்றவரின் ஈகோவால் வாய்திறக்கவே வழி இல்லாது செய்து விடுவார்கள். ஈகோ அதிகமாகத்தான் வழியாகுமே தவிர பிரயோசனமில்லாது போய்விடும். தானாகக் கனியவேண்டிய பழம். எங்கோ ஒருவருக்குத்தான் ஸமயத்தில் ஸரியாகஆகிறது. காலந்தாழ்ந்தாவது அண்ணலும் நோக்க அவளும் நோக்கினது நல்லது. அன்புடன்
பதிலளிநீக்குமிக்க நன்றி
நீக்குநெல்லை.. உங்கள் பின்னூட்டங்கள் SPAMல போய் மாட்டிக் கொள்கின்றன. ஏனென்று தெரியவில்லை.
பதிலளிநீக்குஇல்லை. நான் பதிலளிக்க முடிகிறதே. பார்க்கிறேன் ஸார்
நீக்குஅருமையான கதை பாராட்டுக்குரியது
பதிலளிநீக்குமிக்க நன்றி
நீக்குமுதலடி யார் எடுத்துவைப்பது இந்த தயக்கம்தான் பல விஷயங்களுக்கு தீர்வு கிடைக்காமல் போவது உடனடி
பதிலளிநீக்குஒருவிதத்தில் கேட்காமல்விட்டதால் பெரும் வலியில் இருந்து தப்பித்தாயிற்று அவளுக்கு சேர்ந்தாலும் இனி குற்ற உணர்ச்சியோடு காலம் தள்ள வேண்டிய நிலை வாசுவுக்கு அருமை வாழ்த்துக்கள்
கதையும் சம்பாசனைகளும் மிக அருமை.... ஆரம்பம்தான் எனக்குப் புரியவில்லை.. ஆரம்பப் பந்தி புறிம்பாகவும் பின்பு கதை புறிம்பாகவும் வருவதுபோல ஒரு உணர்வு... எனக்குத்தான் இப்படித்தோணுதோ என்னவோ...
பதிலளிநீக்குஅதிரடி, மனு நாடகக் காவலன் இல்லையா? அவன் போடும் நாடகத்தைக் கனவில் காண்கிறான். அதான் ஆரம்பம். அந்த அழுகை சப்தம் கேட்கிறது மட்டும் எனக்கும் புரியலை! :)
பதிலளிநீக்குஹா ஹா ஹா கீதாக்கா எப்பவும் என் கச்சியேதான் ஹையோ அது கட்சியாக்கும்:)...
நீக்குஒன்றுக்கு இருமுறை வாசிக்க வேண்டும் போல் இருக்கிறது யார் யாரென்று அறிய
பதிலளிநீக்குபேசாதவர்கள் திருமணம் செய்யக் கூடாது.
பதிலளிநீக்குஎத்தனை அன்புகள் பிரிகின்றன இவ்வாறு.
மிக அருமையான கதை.
எழுதியவருக்கு மனம் நிறை பாராட்டுகள்.
வாவ் !! சூப்பர் ..மனம் விட்டு பேசாததால் தானே இப்பவும் பல குடும்பங்களில் பிளவும் பிரிவும் ..
பதிலளிநீக்குஇதற்கெல்லாம் மேலே சில பேய்கள் பெண்கள் வடிவில் இன்னமும் உலவிக்கொண்டிருக்கிறாரகள்.குடும்பங்களில் குழப்பம் உண்டாக்கும் ஆனந்தி போன்றோர் .
எதையும் அவ்வப்போதே பேசி தெளிவது நல்லது .வாழ்த்துக்கள் மாலா .
அருமையான எண்ணங்களை அழகாகத் தொகுத்துப் புனைந்த கதை!
பதிலளிநீக்குஇன்னைக்கும் நான் தாமதம். ஆனாலும் புதன் வம்பு/புதிர் வரலை. கேஜிஜி பெண்களூர்க் குளிரில் தூங்கிட்டாரா? :)
பதிலளிநீக்குக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இன்னும் வரலை!
பதிலளிநீக்குகீதா அக்கா... 1. கௌ அங்கிள் பெங்களூரில் இல்லை.
பதிலளிநீக்குசென்னையில்.
இசைவிழா!
இரண்டாவது நான் வெளியிடும் பதிவுகளை (மட்டுமே) ஆறு மணிக்கு வெளியாகும்!
ஓஹோ! சரிதான்! :))) நான் போறேன், காவிரியில் குதிக்க!
பதிலளிநீக்குஅப்போ ஜாலி...
பதிலளிநீக்கு!?....
பதிலளிநீக்குபதிவு லேட்டா வர்றதால டென்ஷன் கம்மி..
//அப்போ ஜாலி... //
பதிலளிநீக்குஆமாம்... இன்னிக்கி குட்மார்னிங்குக்கு லீவு....! ஸ்ட்ரெயிட்டா குட் ஆப்டர்நூன்தான்!!!