நாற்பது வயதில், ஐம்பது வயதில், அறுபது வயதில்... நம்முடன் பிறந்தவர்கள் எல்லோரும் திருமணமாகி வெவ்வேறு ஊர்களில், வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு அந்தஸ்தில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
'ஒரு காலத்தில் அப்பா அம்மாவுடன் ஒரு வீட்டில் வளர்ந்தோம் நாங்கள்' என்று அவ்வப்போது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்ததை, கட்டிப்புரண்டு சண்டை போட்டதை, வெளியாட்கள் திட்டும்போதோ, அடிக்க வரும்போதோ துணையாக ஒன்றுபட்டு நின்ற நினைவுகள் வந்திருக்கிறதா?
ஆனால் ஒரு கட்டத்தில் இப்போது?
சம்சாரம் அது மின்சாரம் லட்சுமி சொல்வதுபோல "நீ சௌக்கியமா? நான் சௌக்கியம்" என்று முடித்துக்கொண்டு 'என் மனைவி, என் மக்கள் என்று ஒதுங்கி விடுகிறோம்..
கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையே பெரும்பாலும் மறந்து விட்ட / மறைந்து விட்ட இந்நாளில் அப்படி சேர்ந்து வாழும் சிலரும் இன்றும் இருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் இந்தப் பாட்டு சமர்ப்பணம். மறக்க முடியாத பாடல். என்ன குரல்.. என்ன bhaவம்...
கண்ணதாசன் வரிகளுக்கு கே வி மகாதேவன் இசையில் கண்டசாலா பாடல். அன்பு சகோதரர்கள் படம். தமிழில் கண்டசாலா பாடிய கடைசிப் பாடலாம் இது.
What a great singer - No singer in the whole history of Indian cinema had exhibited such a great depth of sorrow as Gantasala had done in the sad version of the song - No one can hold back tears when hearing the sad song - Hear the same song sung in happy mood also - You can see how amazingly Gantasala had differentiated between the happy and sad songs. என்கிறது விக்கி.
ராஜாக்கள் மாளிகையும் காணாத இன்பமடா
நாலுகால் மண்டபம் போல் நாங்கள் கொண்ட சொந்தமடா
ரோஜாவின் இதழ்களைப்போல் தீராத வாசமடா
நூறாண்டு வாழவைக்கும் மாறாத பாசமடா...
முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக...
அன்பின் நலம் வாழ்க..
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம்..
பதிலளிநீக்குவணக்கம் துரை செல்வராஜூ ஸார்.
பதிலளிநீக்குகேட்கும்போதெல்லாம் மனதை என்னவோ செய்யும்...
பதிலளிநீக்குமிக மிக கனமான பாடல்...
அண்ணன் தங்கை பாசத்திற்கு மலர்ந்தும் மலராத - எனும் பாடல் என்றால்
அண்ணன் தம்பி பாசத்திற்கு இந்தப் பாடல்..
இனிய காலை வணக்கம் துரை செல்வராஜு சகோ, ஸ்ரீராம்,
பதிலளிநீக்குவீடியோ பார்த்துவிட்டு பின்னர் வருகிறேன்...
கீதா
பாடலை இன்னமும் கேட்கவில்லை. கேட்டுவிட்டுப் பின்னர் வரேன்.
பதிலளிநீக்குஆமாம் துரை செல்வராஜூ ஸார். சில பாடல்கள் மட்டும் இதுபோல் சாகாவரம் பெற்றவை.
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா. முன்னரே நீங்கள் கேட்டிருக்கக் கூடிய பாடல்தானே..
பதிலளிநீக்குகாலை வணக்கம் கீதா ரெங்கன்.
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குதம +1
நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.
பதிலளிநீக்குஇதயம் ஒரு நிமிடம் கலங்கி இயங்கும் திரு. கண்டசாலாவின் குரலில் பாடல் வரிகளை கேட்கும்போது...
பதிலளிநீக்குஆமாம் கில்லர்ஜி. வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்குநூறாண்டு வாழவைக்கும் மாறாத பாசமடா.. என்கிறது கண்ணதாசன் பாடலின் கடைசிவரி. இந்தமாதிரி பாசத்துக்குத்தான் ஒவ்வொரு மனமும் ஏங்குகிறது. இதுதான் ஏனோ பெரும்பாலோருக்குக் கிடைப்பதில்லை. அனாவசியத் தந்திரங்களையும், சாமர்த்தியங்களையும் சம்பாதித்துக்கொள்ளும் மனது, அன்பை போகிறபோக்கில் இழந்துவிடுகிறது. மண்ணில் மனிதரின் வாழ்க்கை..
பதிலளிநீக்குகண்டசாலா சோகப்பாடல் மன்னன். இன்னுமொரு பாடலையும் சேர்த்திருக்கலாம்.
'ஒரு காலத்தில் அப்பா அம்மாவுடன் ஒரு வீட்டில் வளர்ந்தோம் நாங்கள்' என்று அவ்வப்போது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்ததை, கட்டிப்புரண்டு சண்டை போட்டதை, வெளியாட்கள் திட்டும்போதோ, அடிக்க வரும்போதோ துணையாக ஒன்றுபட்டு நின்ற நினைவுகள் வந்திருக்கிறதா?//
பதிலளிநீக்குஸ்ரீராம் தினமும் நினைத்துக் கொள்வதுண்டு. அதுவும் நாங்கள் ஒன்றாக வளர்ந்த ஒரே கூரையின் கீழ் வள்ர்ந்த என் தங்கைகள், தம்பி, அக்கா (கஸின்ஸ்) அனைவரும் என்னுடன் தொடர்பில் இருப்பதால்...அதுவும் தினமும்...வெளிநாட்டவர் வீக் எண்டில் என்று அந்த நினைவுகள் பசுமை...அந்த இனிய நினைவுகள் தான் இயக்கிக் கொண்டிருக்கிறது..
கீதா
அனாவசியத் தந்திரங்களையும், சாமர்த்தியங்களையும் சம்பாதித்துக்கொள்ளும் மனது, அன்பை போகிறபோக்கில் இழந்துவிடுகிறது. மண்ணில் மனிதரின் வாழ்க்கை..//
பதிலளிநீக்குஅருமையான கருத்து ஏகாந்தன் சகோ...என் கருத்தைப் போட்டுவிட்டு வரும் போது இந்த வரி கண்ணில் பட்டுவிட்டது...!!!!
கீதா
ஸ்ரீராம் பாடலைக் கேட்டதும் கண்ணில் நீர் வந்துவிட்டது. அந்தக் குரல் அப்படியோ?!! அப்படியே அந்த ஃபீலைக் கொண்டுவருது இல்லையா!! கண்டசாலாவின் குரல் காந்தம்! நம்மை அப்படியே அதில் லயித்துவிடச் செய்யும். ஹப்பா என்ன ஃபீல் ஒவ்வொரு வார்த்தையிலும்...பாடிவிடலாம் ஆனால் அந்த உணர்வுகளைக் கொண்டுவருவது என்பது அவ்வளவு சுலபமல்ல...!!!
பதிலளிநீக்குநெகட்டிவ் நிகழ்வுகள் நினைவுக்கு வந்து மனதை வருத்திவிட்டது...இரத்த பந்தங்களில் கூட அந்த அன்பு எப்படி மறைகிறது.?!?!ம்ம்ம்..
கீதா
பாடலைப் பலவருடங்களுக்குப் பிறகு கேட்கிறேன் ஸ்ரீராம்..அப்போது நிறைய கேட்டிருக்கேன்...
பதிலளிநீக்குகீதா
In my fav song list... Like the sad one too, though it'll bring tears..
பதிலளிநீக்குAlso compare acting of the different characters in both the songs!!
Muthukku muthaana songs!
வாங்க ஏகாந்தன் ஸார்..
பதிலளிநீக்கு//அனாவசியத் தந்திரங்களையும், சாமர்த்தியங்களையும் சம்பாதித்துக்கொள்ளும் மனது, அன்பை போகிறபோக்கில் இழந்துவிடுகிறது. மண்ணில் மனிதரின் வாழ்க்கை..//
குறுகிய வட்டத்துக்குள் சிக்கி சுயநலம் ஆகிப்போகிறான் மனிதன்.
இன்னொரு பாடல் என்றால் இதே பாடலின் சோக வெர்ஷனையா?
வாங்க கீதா
பதிலளிநீக்கு//தினமும் நினைத்துக் கொள்வதுண்டு. அதுவும் நாங்கள் ஒன்றாக வளர்ந்த ஒரே கூரையின் கீழ் வள்ர்ந்த என் தங்கைகள், தம்பி, அக்கா (கஸின்ஸ்) அனைவரும் என்னுடன் தொடர்பில் இருப்பதால்//
தொடர்பில் இருக்கலாம் கீதா. இப்போதும் அந்த சௌஜன்யம் 100% இருக்கிறதா?
//அப்போது நிறைய கேட்டிருக்கேன்.//
தஞ்சையில் இருந்தபோது இந்தப் படம் பார்த்து கண்களில் குளம் சேர்த்திருக்கிறேன்!
வாங்க மிடில்க்ளாஸ்மாதவி
பதிலளிநீக்குநன்றி. இந்தப் பாடலே கொஞ்சம் சோகம் கலந்துதான் ஒலிக்கும்.
அருமையான பாடல். மீண்டுமொரு முறை கேட்டு ரசித்தேன்.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்:
பதிலளிநீக்கு//..இன்னொரு பாடல் என்றால் இதே பாடலின் சோக வெர்ஷனையா?//
கண்டசாலாவின் வேறேதாவது பாடல் என்ற அர்த்தத்தில் சொன்னேன்.
’ஆஹா இன்ப நிலாவினிலே…’, ’நீதானா எனை நினைத்தது.., ’கோடை மறைந்தால் இன்பம் வரும்..’- இப்படி ஏதாவதொரு காதல்வழியும் பாடல்..
வெள்ளி காலையில் இழந்ததை நினைத்து சோகமா? மனதில் வருத்தத்தை வரவழைக்கும் பாட்டு.
பதிலளிநீக்குஏகாந்தன் சார்- அனாவசிய தந்திரங்களையும் சாமர்த்தியங்களையும் - நல்ல வரி - இதைப் புரிய வைப்பது கடைசி காலம், அப்போது வாழ்ந்த வாழ்க்கையை மீண்டும் மாற்றமுடியாத, திருத்தமுடியாத பருவம்.
@ நெல்லைத் தமிழன்:
பதிலளிநீக்கு//..அப்போது வாழ்ந்த வாழ்க்கையை மீண்டும் மாற்றமுடியாத, திருத்தமுடியாத பருவம்.//
கம்ப்யூட்டரைப்போலவே வாழ்க்கையிலும் ஒரு ‘undo’ பட்டன் இருக்கக்கூடாதா ?
தொடர்பில் இருக்கலாம் கீதா. இப்போதும் அந்த சௌஜன்யம் 100% இருக்கிறதா?//
பதிலளிநீக்குஸ்ரீராம் 100% என்று சொல்ல முடியாதுதான். ஆனால் ஒருவருக்கொருவர் வீட்டில் சென்று தங்கும் அளவுக்கு இருக்கிறது இதுவரை. ஒருவருக்கு ஏதேனும் பணப் பிரச்சனை என்றால் இருப்பவர் தானாகவே கேட்டுக் கொடுத்து உதவும் வரை இருக்கிறது. பணத்தால் முடியலைனா ஃபிசிக்கலாக உதவி செய்யும் அளவு இருக்கிரது யாரையும் விட்டுக் கொடுப்பதில்லை.ஸ்ரீராம் இதுவே பெரிய விஷயம்தானே! இல்லையா...
கீதா
சற்று மென்மையான இதயம் உள்ளவர்கள் இந்தப் பாட்டினைக் கேட்கும்போது அழுதேவிடுவார்கள். நான் அனுபவித்து ரசித்த பாடல்களில் இதுவும் ஒன்று.
பதிலளிநீக்குஅருமையாக எழுதியிருக்கிறீர்கள் ஸ்ரீராம்! மனசு கனமாகி விட்டது. வாழ்க்கையின் நிஜங்கள் மனசை கனமாக்கும்தானே?
பதிலளிநீக்குநீங்கள் எழுதியிருப்பது போல அந்த நாட்களில் இந்தப்பாட்டும் படமும் நிறைய பேரின் கண்களில் குளம் கட்டியதும் மனதை கனமாக்கியதும் உண்மை தான்! ஜமுனா நடிப்பு மிகவும் பேசப்பட்டது. எனக்கு மிகவும் பிடித்த படங்களில் இதுவும் ஒன்று.
என் கணவரின் கூடப்பிறந்தவர்கள் ஏழு பேர்
நானும் மாமா மகள். கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தபோது அத்தனை மகிழ்வு!
சிரித்துக்கொண்டே, அரட்டையடித்துக்கொண்டே சமைத்தது, மன வேறுபாடுகள், கோபதாபங்கள், காலப்போக்கில் விலகல்கள், இப்படி அனைத்துமே ' ஞாபகம் வருதே' பாடலில் வருவது போல அடிக்கடி நினைவில் எழுவது தான்!
இப்போதும் சகோதரர்கள் அனைவரும் சமயம் கிடைக்கும்போது கூடி பேசி சிரிப்பதுண்டு. பழைய நினைவலைகளில் மிதப்பதுண்டு. ஆனாலும் 'சம்சாரம் அது மின்சாரம்' படத்தில் லக்ஷ்மி கடைசியில் சொல்வது தான் வாழ்க்கையின் யதார்த்தம்!!!
இடையிலே ஒரு செய்தி.
பதிலளிநீக்குதமிழின் சிறந்த ஹாஸ்ய எழுத்தாளரான ‘அப்புசாமி-சீதாப்பாட்டி புகழ்’ பாக்கியம் ராமசாமி (ஜரா. சுந்தரேசன்) நேற்றிரவு (07-12-17) உடல்நலக்குறைவால் சென்னையில் மறைந்துவிட்டார். தமிழின் அருமையான படைப்பாளிக்கு நம் மனமார்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்வோம்.
மனதை நெகிழ வைக்கும் குரல் பாடல் வரிகள் '
பதிலளிநீக்குபதிவின் வரிகளாலும் மனதை கனமாகியது
அந்த நாட்கள் இன்று நண்பர்கள்குழம் என்று மாற்றி கொண்டது
பாக்கியம் ராமசாமி அவர்களுக்கு நம் எல்லோரது ஆழ்ந்த இரங்கல்கள்.
பதிலளிநீக்குவாட்சப்பில் குழுவில் ஜீவி அண்ண மிக அழகாக ஒன்று சொல்லியிருந்தார்.
//பாக்யம் ராமசாமி மறையவில்லை. அவர் அவரது எழுத்துகளில் வாழ்கிறார். ஜ ரா சுந்தரேசன் அவர்கள் தான் மறைந்துவிட்டார்// என்று. உண்மைதானே!!
நான் என் கணினி கொஞ்சம் பிரச்சனை ஆகும் முன்னr ரொம்ப நாள் ஆகிவிட்டதே சீதாப்பாட்டியையும், அப்புசாமியையும் கண்டு என்று அவரது தளத்தில் பார்த்தபோது அப்புசாமி வாரிசு தேடுகிறார்னு 11 வது பாகம் பார்த்தேன் அது செப்டம்பரில் வெளியிட்டது போலும். அப்புறன் அதன் பாகம் வரவில்லை. இப்போது நிஜமாகவே அவர் வாரிசு தேடுகிறார் என்பது பொருந்திப் போவது போல் உள்ளது. இப்பாகத்தை யார் முடிப்பார்கள்?
கல்கி மறைந்த பிறகு அவரது வாழ்க்கை வரலாற்றினைத் திரு சுந்தா எழுதத் தொடங்கிய போது அவர் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் கொண்டு வந்து தருமாறு கேட்டிருந்தாராம். திரு ராஜேந்திரன் அவர்களின் வரிகளில், "பலமாகச் சோதனை நடத்தினேன். சுவர்களில் ஏதாவது ரகசிய அறைகள் உள்ளனவா என்ரு கூடத் தட்டிக் கொட்டிப் பார்த்தேன். தோட்டத்தைக் கொத்தியதில் எடை சற்றுக் குறைந்தது! அலமாரிகள், மேஜை இழுப்பறைகள் எல்லாவற்றையும் குடைந்து பார்த்ததில் உத்தகங்கள், குறிப்புகள், கடிதங்கள் புகைப்படங்கள், நாளிதழ் செய்தித் தொகுப்புகள் என்று பலப்பல கிடைத்ததில் ஒரு புதையலும் கிடைத்தது. திரைப்படம் ஒன்றிற்காக கல்கி அவர்கள் தமது இரு சிறுகதைகளை இணைத்து நாவலலாக உழிதியிருந்த மூன்று நோட்டுப் புத்தகங்கள். முதலில் 40 பக்கங்களில் எழுதிய கதையை இரண்டாவது முறையாக விரிவு படுத்தி 185 பக்கங்களில் வளர்த்திருந்தாராம். அப்புறம் நேயர்களுடன் அதைப் பகிர்ந்து கொள்ள் நினைத்த ராஜேந்திரன் அவர்கள் அதைத் தொடர்ந்து எழுதினார். எனும் நாவலை ராஜேந்திரன் அவர்கள் முடித்தார். "அரும்பு அம்புகள்"
அப்படி அப்புசாமி வாரிசு தேடுகிறார் என்ம்பதும் முடிக்கப்படுமா?!! ஆவலுடன் வெயிட்டிங்க்!! அவரது தளம் www.appusami.com
கீதா
ரசனைகள் பலவிதம் இல்லாததை நினைத்து ஏங்கும் மனம்
பதிலளிநீக்குமேலே உள்ள கருத்தில் கணினியின் கர்சர் ஜம்ப் ஆகிக் கொண்டே இருந்ததில் இறுதி வரிக்கு முந்தைய வரி மாறியுள்ளது...எழுத்துப் பிழைகளும் நிறைய உள்ளன...
பதிலளிநீக்குஅதிராவின் கண்ணில் படாமல் இருக்கணும் வைரவா!!
கீதா
ஸ்ரீராம் அருமையான பாடலைப் பகிர்ந்துள்ளீர்கள். ரசித்தேன். எத்தனை நாட்களாயிற்று. உங்கள் மூலம் தான் கேட்க முடிகிறது. தமிழ்ப்பாடல்களே உங்கள் மூலம் தான். அதற்கு மிக்க நன்றி. கண்டசாலாவின் பாடல்கள் எல்லாமே மிகவும் நன்றாக இருக்கும்.
பதிலளிநீக்குஎனக்குக் கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்த அனுபவம் இல்லை. நான் தான் கடைசி எங்கள் வீட்டில். உறவினர் வீட்டில் சென்று தங்கியதுண்டு. இப்போதும் செல்வதுண்டு. இருந்தாலும் என்னுடன் இப்போது இருக்கும் என் அக்காவைத் தவிர மற்ற சகோரர்களுடன் தொடர்பு இருந்தாலும் சம்சாரம் மின்சாரம் டயலாக்தான் பொருந்தும். நல்ல பதிவு.
பாக்கியம் ராமசாமி அவர்களுக்கு மறைவேது...
பதிலளிநீக்குஎனினும் மனம் கலங்குகின்றது..
மிக அருமையான பாடல்.. பாட்டுக் கேட்கும்போதெல்லாம் ஒரு வித சோகம் மனதில் ததும்பினாலும்.. தொடர்ந்து கேட்கத் தூண்டும் பாட்டு... இந்தப்பாடலுக்காகவே படம் பார்க்கிறேன் பார்க்கிறேன்ன்.. ஆரம்பத்தோடயே நிற்கிறேன்:))..
பதிலளிநீக்கு//திருமணமாகி, குழந்தைகள் பிறந்தபின் உங்கள் இளமைக் காலத்தை நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? ///
பதிலளிநீக்குநானும் ஆத்துக்காரரும் கதை கதையாப் பேசுவதுண்டு... சில நேரத்தில் பேசுவதற்கு எப்புதினமும் இல்லாமல் போய் விடும் பாருங்கோ:).. அப்போ ஸ்ராட் மூசிக் என்பதுபோல... ஓகே உங்கள் சின்ன வயசுக் கதைகளைச் சொல்லுங்கோ எனக் கேட்டு சின்ன வயசு நினைவுகளைப் பேசுவதுண்டு... சில கதைகள் திரும்பத் திரும்பச் சொன்னாலும்... சொல்பவருக்கும் கேட்பவருக்கும் .. இளமைக் காலக் கதைகள் ஆனந்தத்தையே குடுக்கும்...
//ஏகாந்தன் Aekaanthan ! said...
பதிலளிநீக்குஇடையிலே ஒரு செய்தி.
தமிழின் சிறந்த ஹாஸ்ய எழுத்தாளரான ‘அப்புசாமி-சீதாப்பாட்டி புகழ்’ பாக்கியம் ராமசாமி (ஜரா. சுந்தரேசன்) நேற்றிரவு (07-12-17) உடல்நலக்குறைவால் சென்னையில் மறைந்துவிட்டார். ////
எனக்கு இவர்பற்றி தெரியாது... அவரின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கிறேன்.
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை...
பதிலளிநீக்குhttps://www.youtube.com/watch?v=aE8i-KSbTMU
அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்.. அது ஒரு அழகிய நிலாக்காலம்...
https://www.youtube.com/watch?v=UUgj-Ze1z1k
இவ்விரண்டு பாடல்களும் நெஞ்சை என்னமோ பண்ணும்...
//அதிராவின் கண்ணில் படாமல் இருக்கணும் வைரவா!!
பதிலளிநீக்குகீதா///
இன்று நான் கண் மூடி இருக்கும் விரதம்:))
/// நாற்பது வயதில், ஐம்பது வயதில், அறுபது வயதில்... நம்முடன் பிறந்தவர்கள் எல்லோரும் திருமணமாகி வெவ்வேறு ஊர்களில், வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு அந்தஸ்தில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
பதிலளிநீக்கு///
இளமை.. வருங்காலக் கற்பனையில் வாழ்கிறது.. ஃபோ அன் எக்ஸ்சாம்பிள்.. சுவீட் 16 அதிரா:))
முதுமை ... இளமை நினைவுகளில் வாழ்கிறது.. ஃபோர் அன் எக்ஸாம்பிள்.. சுவீட் 66 அஞ்சு:))..
ஹையோ ஜாமீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ மீ ரன்னிங்:))
பாக்கியம் ராமசாமி (ஜரா. சுந்தரேசன்)அவர்களுக்கு அஞ்சலிகள்
பதிலளிநீக்குஸ்கூல் நாட்களில் இருந்து சீதா பாட்டி அப்புசாமி கதைகளை வாசிக்க பிடிக்கும் .அதுல கேரக்டர்ஸின் குணங்களை வெளிக்கொணர்ந்த ஓவியர் ஜெயராஜையும் மறக்க முடியாது .
பாடலை மட்டுமே கேட்டேன்! அருமை!
பதிலளிநீக்குஎனக்கு இந்த பாட்டை கேட்டதும் என்னாமோ மனதை அழுத்தின மாதிரி இருக்கு :(
பதிலளிநீக்குஎன்ன ஒரு அருமையான குரல் ..சில பாடல்கள் பாடகர்களாலேயே காலத்தால் அழியாமல் நிலைத்திருக்கு என்பதற்கு இதுவும் சாட்சி .
சிறுவயதில்.. படம் வெளியான புதிதில்.. அப்பா, சித்தப்பா, பெரியப்பாக்கள் என குடும்பத்தோடு தியேட்டர் சென்று பார்த்த போதே இந்தப் பாடல் மனதில் பதிந்து விட்டிருந்தது. நல்ல பகிர்வு.
பதிலளிநீக்கு/ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்ததை, கட்டிப்புரண்டு சண்டை போட்டதை, வெளியாட்கள் திட்டும்போதோ, அடிக்க வரும்போதோ துணையாக ஒன்றுபட்டு நின்ற நினைவுகள் வந்திருக்கிறதா?//
பதிலளிநீக்குஎனக்கு இப்படிப்பட்ட ஆனந்தமான நினைவுகளோ அனுபவமோ இல்லை ,,ஆனால் என் கணவர் சொல்வார் ஒவ்வொரு சம்பவம் அவருடன் பிறந்தவர்கள் நிறையபேர் சகோதரர்கள் செய்த அட்டகாசம் எல்லாம் சொல்லுவார்
அதை சொல்லும்போதே முகமெல்லாம் பூரிக்கும்:)
/ திருமணமாகி, குழந்தைகள் பிறந்தபின் உங்கள் இளமைக் காலத்தை நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? /
பதிலளிநீக்குகர்ர்ர்ர் :) அந்த சோகக்கதையை ஏன் கேக்கறீங்க :)
என்னனு சொல்லுவேன் என்னத்தை சொல்லுவேன் .
கையில் ஒரு மசாலா வாசனை கூட இருந்ததில்லை ,ஏன்னா காய்கறிலாம் வெட்னதில்லை
கிச்சனுக்கே போனதில்லை சாப்பிட்ட தட்டை கூட கழுவினதில்லை ,துவரம்பருப்புக்கும் கடலை பருப்புக்கும் வித்யாசம் தெரிஞ்சதில்லை பெட் காபி குடிக்காதநாளில்லை . எல்லாமே எனக்கு ரெடியா டேபிள் மேலே இருக்குமே .
டைமெஷின் திரும்பி என்னை கூட்டிப்போய் விட்டா நல்லா இருக்கும் :)
இன்னொரு விஷயம் சொல்லணும் அப்பா இறந்த பின் சில நாட்கள் கழித்து எங்க ஏரியாவில் உள்ள ஹோட்டலுக்கு சென்றோம் நானும் தங்கச்சியும் அங்கிருந்த ஸ்வீட் மாஸ்டர் தங்கச்சிகிட்ட கேட்டார் //அப்பா எங்கம்மா அவர் டெய்லி 6 ஸ்வீட் தேங்கா போளி சுடசுட 6 மணிக்கு வாங்கிட்டு போவாரே என்றார் ..தங்கைக்கு ஆச்சர்யம் எங்க வீட்டுக்கு ஸ்வீட் வந்ததில்லை இந்த நேரத்தில் யாருக்கு கொடுத்திருப்பார் என்று வீட்டில் விசாரிச்சா உண்மை வருது அப்பா அவரது மூத்த அக்கா , இன்னோர் அண்ணன் இவங்களுக்கு அப்பா தினமும் ஸ்வீட் போளிகளை வாங்கிட்டுப்போய் கொடுத்திருக்கார் . மூணு பெரும் பேசிக்கிட்டே சாப்பிடுவார்களாம் .எதுக்கு சொல்றேன்னா இந்த மாதிரி காட்சிகள் இப்போல்லாம் கேள்விப்படறதே அபூர்வம் :(
பதிலளிநீக்குஏகாந்தன் சார் //அனாவசியத் தந்திரங்களையும், சாமர்த்தியங்களையும் சம்பாதித்துக்கொள்ளும் மனது, அன்பை போகிறபோக்கில் இழந்துவிடுகிறது. மண்ணில் மனிதரின் வாழ்க்கை//அற்புதமாக சொல்லியிருக்கார்
காலப்போக்கில் அன்பையும் கூட்டுக்குடும்ப வாழ்வையும் தொலைத்த மானிடர்களாகிப்போனோம் :(
இது போன்ற பாடல்கள் தற்போது கேட்க முடிவதில்லலை பகிர்வுக்கு பாராட்டுகள்
பதிலளிநீக்குநன்றி நெல்லைத்தமிழன்.
பதிலளிநீக்குநன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
பதிலளிநீக்குநன்றி மனோ சாமிநாதன் மேடம்.
பதிலளிநீக்குநன்றி ஏகாந்தன் ஸார். ஜ ரா சு மறைவு குறித்து காலை முதல் செய்தியாய்ப் பார்த்து அதிர்ந்தேன். முகநூலில் அவர் மறைந்த நாளில் கூட பதிவு போட்டிருந்தார்.
பதிலளிநீக்குநன்றி பூவிழி.
பதிலளிநீக்குநன்றி ஜி எம் பி ஸார்.
பதிலளிநீக்குநன்றி துளஸிஜி.
பதிலளிநீக்குநன்றி அதிரா.
பதிலளிநீக்குநன்றி ஏஞ்சலின்.
பதிலளிநீக்குநன்றி புலவர் ஐயா.
பதிலளிநீக்குநன்றி ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குகவி.கா.மு.ஷெரிப் தெரியுமா, ஸ்ரீராம்?.. சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யின் அணுக்கத் தோழர். அவர் 'மக்களைப் பெற்ற மகராசி' படத்திற்காக எழுதிய
பதிலளிநீக்கு'ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா? உண்மைக் காதல் மாறிப்போகுமா?.." என்ற பாடல் தான் தலைப்பைப் படித்ததும் நினைவுக்கு வந்து என்னையறியாமல் அந்தப் பாடலை ஹம் பண்ணினேன்.
நன்றி ஜீவி ஸார். எனக்கும் அந்தப் பாடல் பிடிக்கும். பி பி ஸ்ரீனிவாஸ் பாடல் அது.
பதிலளிநீக்குகண்டசாலாவின் குரலே வித்தியாசமானது. இவருக்கு முன்னால், பின்னால் என்று யாருக்கும் அப்படியான குரல் அமையவில்லை.
பதிலளிநீக்குகண்டசாலாவுக்கென்றே அமைந்த படம், நாகேஸ்வர ராவ்-- சாவித்திரி ஜோடி சேர்ந்து நடித்த 'தேவதாஸ்' படம்.
அந்தப் படத்திற்காக கண்டசாலா பாடிய 'உலகே மாயம்.. வாழ்வே மாயம்'
'துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே-- சோகம் பொல்லாது..' 'கனவு இது தான்..' 'ஓஓ தேவதாஸ்.. படிப்பும் இதானா?'-- போன்ற பாடல்களை மறக்கவே முடியாது.
ஜீவீ ஸார் சொன்னது போல அந்தக் குரலைப் போல்
பதிலளிநீக்குஒரு குரல் இன்னும் கேட்கவில்லை.
உலகே மாயம் மறக்க முடியுமா. இதோ நீங்கள்
கொடுத்திருக்கும் பாடலில் ரங்கராவையும் பிடிக்கும். இந்தப் பாடலைக் கேட்டு
மனம் உருகிப் போவதும் வழக்கம். எனக்காகப் பாடுகிறாப் போலே
இருக்கும்.
எங்கள் குடும்பமும் அப்படித்தான் இருந்தது.
இனிக் குழந்தைகள் அதே பாசத்தோடு இருக்கணும்.
இப்போதைக்கு சித்தப்பா குழந்தைகளும் மாமா குழந்தைகளுமே என்
உயிர்த் தொடர்பு.
அக்கா அக்கா என்று ஆசையுடன் இருக்கிறார்கள்.
மிக நன்றி ஸ்ரீராம்.
அதிரா சொன்ன பாண்டவர் பூமி பாடல் மிக மிகப் பாசம் கொண்டாடும்.
அனைத்து அன்பு நெஞ்சங்களும் வாழ்க.