தேங்காய் பர்பி என்பது பாரம்பர்யமான இனிப்பு. நிறைய கடைகளில் இதனைக் கெடுத்துவைத்திருப்பார்கள். இது ரொம்ப சுலபமான இனிப்பு வகை. எனக்குத் தெரிந்த வரையில் அடையார் கிராண்ட் ஸ்வீட்ஸ் & ஸ்னாக்ஸில் பாரம்பர்யமாகச் செய்வதுபோல் தேங்காய்பர்பி கிடைக்கும்.
இங்கு தேங்காய் துருவல் கடைகளில் ஃப்ரெஷ் ஆகக் கிடைக்கும். கறுப்பு இல்லாமல், வெண்மையாகத் துருவச் சொல்லி வாங்கினேன். என்னிடம், என் ஆபீஸ் நண்பர் வாங்கிவந்திருந்த பால்கோவா (அம்பாசமுத்திரம்) இருந்தது. அதனால் தேங்காய் பர்பி செய்துபார்த்தேன். இது பாரம்பர்ய செய்முறையில் செய்யவில்லை.
என்ன பொருட்கள் வேணும்?
தேங்காய்த் துருவல் 1 கப்
சர்க்கரை 1 கப்
பால் கொஞ்சம் (ஓரிரண்டு டேபிள் ஸ்பூன்கள். இதுவும் அவசியமில்லை)
பால்கோவா – 2 ஸ்பூன் எடுத்துக்கொண்டேன் (இது தேங்காய் பர்பிக்கு அவசியம் இல்லை. வெறும் கோவா உபயோகப்படுத்தலாம். பால்கோவா உபயோகப்படுத்தினால் சர்க்கரையின் அளவைச் சிறிது குறைத்துக்கொள்ளலாம்)
எப்போதும்போல், ஏலப்பொடியும், முந்திரி கொஞ்சமும் (நான் எதற்குமே எவ்வளவு தேவையோ அதைவிட ரெண்டு மூணு மடங்கு முந்திரி சேர்ப்பேன்).
வேற எதுவும் தேவையில்லை. இல்லை அழகுபடுத்துகிறேன் பேர்வழி என்றால், குங்குமப்பூ சேர்க்கலாம். தேங்காய் பர்பியை வேறு கலரில்தான் நான் பார்க்கணும்னா, மஞ்சள் கலரோ, கேசரி பவுடரோ சேர்ப்பார்கள். நான் இவை எவற்றையும் உபயோகப்படுத்தலை. உங்களையும் படுத்தலை.
எப்படிச் செய்வது?
முதல்ல முந்திரியை சிறியதாக்கி, நெய்யில் வறுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
ஒரு தட்டில் கொஞ்சம் நெய் விட்டு தடவிக்கொள்ளுங்கள். இதில்தான் கடைசியில் தேங்காய் பர்பியைப் போடப்போகிறோம்.
தேங்காய்த் துருவலை கொஞ்சம் பால் விட்டு நன்றாக மிக்சியில் அரைத்துக்கொள்ளுங்கள். 1-2 ஸ்பூனுக்குமேல் பால் விடக்கூடாது. ரொம்ப வழ வழன்னு வேண்டாம். தேங்காய் துருவலை நல்லா அரைத்துக்கொள்ளவில்லை என்றால், பர்பி சாப்பிடும்போது திரி திரியா தேங்காய் அகப்படும்.
வாணலில, அரைத்த தேங்காய் விழுதையும் ஜீனியையும் போட்டுக் கிளறவும். கொஞ்சம் கிளறுவதை நிறுத்தினீங்கனா அடி பிடிக்கும் வாய்ப்பு இருக்கு. சூடு கம்மியா இருக்கணும். இல்லைனா வெள்ளைத் தேங்காய் விரைவில் ஆழ்ந்த பிரௌன் நிறத்துக்குப் போயிடும்.
கொஞ்சம் இறுக ஆரம்பிக்கும்போது, பால்கோவாவும் சேர்த்துக் கிளறி, வாணலியில் ஒட்டாமல் கொஞ்சம் சுருண்டு வரும்போது ஏலப்பொடி சேர்த்துக் கொஞ்சம் கிளறவும். பிறகு இதனை நெய் தடவிய தட்டில் அழுத்தாமல் பரத்திவைக்கவும். மேலே கொஞ்சமாக முந்திரித் துண்டங்களைத் தூவி, ஆறிய பின்பு, நமக்குத் தேவையானபடி சதுரமாகவோ டைமன்ட் ஷேப்பிலோ வில்லைகளைப் போடலாம்.
பால்கோவாவும் சேர்ப்பதால், தேங்காய்பர்பி கொஞ்சம் சாஃப்டா இருக்கும்.
நான் செய்திருப்பதில் அளவுக்கு அதிகமாக முந்திரிப் பருப்புகளைச் சேர்த்துள்ளேன். அவ்வளவு போடவேண்டாம். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நல்ல வேளையாக என் ஹஸ்பண்ட் இங்கு வந்தபோது 4 துண்டங்கள் மீதி இருந்தன. அவளுக்கும் ஒன்றைக் கொடுத்து, வசிஷ்டர் வாயால் ‘பிரம்ம ரிஷி’ பட்டம் வாங்கியாகிவிட்டது.
பாரம்பர்ய முறை என்ன? தேங்காய் துருவலும் சர்க்கரையும் மட்டும்தான். மிகக் கொஞ்சமாக முந்திரித் துண்டங்கள் (சிறிய சைஸ்) சேர்ப்பார்கள். வேறு ஒன்றும் கிடையாது.
நான் சொல்லியிருக்கும் முறையில் செய்துபார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.
அன்புடன்
நெல்லைத்தமிழன்
============================== ============================== ===
குழிப்பணியாரம்
‘நான் சென்னை சென்றிருந்தபோது வீட்டில் நான் ஸ்டிக் ஆப்பக்கடாயைப் பார்த்தேன். உடனே, இங்கு கேரளத்தவர்கள் செய்வதுபோல் அப்பம் செய்யலாமே என்று தோன்றிவிட்டது. அங்கிருந்து எடுத்துக்கொண்டுவந்துவிட்டேன். அதற்கு அப்புறம் செய்யும் சந்தர்ப்பமே அமையவில்லை. எனக்கும் ஆப்பக்கடாயை எப்படி உபயோகப்படுத்துவது என்றும் தெரியவில்லை. இந்தத் தடவை என் ஹஸ்பண்ட் இங்கு வந்திருந்தபோது, ஊருக்கும் கிளம்பும் நாள், தோசை மாவை வைத்து குழிப்பணியாரம் செய்யேன் என்றேன். இட்லி/தோசை மாவு பாக்கெட்டில் முக்காலுக்கும் மேல் இருந்தது. அதை வைத்து அவள் செய்தாள். என் வேலை படம் பிடிக்கவேண்டியது.
நீங்கள் எல்லாரும் செய்துபார்த்திருக்கக்கூடும்.. ரொம்ப சுலபமான செய்முறை. ஆனால் மிக ருசியாக இருந்தது.
தோசைமாவின் ருசியைக் கூட்ட, பச்சை மிளகாய், வெங்காயம், கொஞ்சம் இஞ்சி, கொத்தமல்லித் தழை, கொஞ்சம் கருவேப்பிலைத் தழைகள் எடுத்துக்கோங்க. அவற்றை பொடிப்பொடியாக திருத்திக்கொள்ளுங்கள்.
இதனை தோசைமாவுடன் சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். அதோட கொஞ்சம் மைதாமாவும் சேர்த்துக்கோங்க. இதுல தேவைனா, கொஞ்சம் கேரட்டைச் சீவிப் போடலாம். குடமிளகாயையும் பொடியாகத் திருத்திப்போடலாம். பார்க்க வண்ணமயமா இருக்கும். ஆனால் அன்று இந்த இரண்டையும் போடவில்லை. இதோட கடுகு திருவமாறி சேர்க்கவும். உப்பு சரிபார்த்துக்கோங்க.
கடாயின் குழிகளில் எண்ணெய் தடவி (ஊற்றி இல்லை) அடுப்பில் வைங்க. கொஞ்சம் சூடானதும், அதில் ஸ்பூனால் மாவை விடுங்கள். கொஞ்ச நேரத்துல பணியாரத்தைத் திருப்பிப்போடுங்கள் (கம்பிமத்தாப்பு கம்பியாலயோ அல்லது சிறிய மரக் குச்சியை வைத்தோ). நல்ல பொன்னிறமா இருக்கும். இரண்டு பக்கமும் வெந்ததும் எடுத்துத் தட்டுல வச்சிருங்க.
இதுக்கு தொட்டுக்க எனக்கு எதுவுமே தேவையிருக்கவில்லை. மிளகாய் காரத்தோட ரொம்ப நல்லா இருந்தது. தேவைனா, வெங்காயச் சட்னி செய்துகொள்ளலாம்.
நான் ‘குழிப்பணியாரம்’, அடையாறு கிராண்ட் ஸ்வீட் & ஸ்னேக்ஸ் கடையில்தான் செய்வதைப் பார்த்திருக்கிறேன். டிரெடிஷனல் குழிப்பணியார கடாயில் செய்வார்கள். எண்ணெயை ஒவ்வொரு குழிக்குள்ளும் ஊற்றி, மாவை மிதக்கவிட்டு, நன்கு பொரிந்துவந்தவுடன் திருப்பிப் போட்டு, பிளேட்டில் கொடுப்பார்கள். அந்த எண்ணெய் அளவைப் பார்த்தபின்பு, ‘குழிப்பணியாரம்’ என்றாலே எனக்கு அலர்ஜி. (இனிப்பைத் தேடி ஓடும் கட்டெறும்பு நான். ஆனால் எண்ணெய் அதிகமாகச் சேர்ந்த எந்த ஐட்டமும் எனக்குப் பிடிக்காது. அதுவும் கையில் தொடும்போது என் விரலில் எண்ணெய் படிந்தால் அந்த ஐட்டத்தை நான் சாப்பிடமாட்டேன். எல்லாம் ஹெல்த் பயம்தான்) நான் ஸ்டிக் கடாயைப் பார்த்ததனால்தான் நான் வாங்கிவந்தேன். இதில் எண்ணெய் மிகவும் குறைவு (இல்லைனே சொல்லிடலாம்). குழிப்பணியாரமும் யம்மி, ஹெல்த்துக்கும் நல்லது.
செய்துபார்த்துவிட்டுச் சொல்லுங்கள். இல்லை, இது சர்வசாதாரணமானது என்று நினைத்தால், நீங்கள் செய்யும்போது சொல்லுங்கள், நான் வந்து சாப்பிடுகிறேன்.
அடுத்து இந்தக் கடாயைவைத்து, கேரளத்தவர்கள் செய்யும் ‘உன்னியப்பம்’ செய்து பதிவு அனுப்புகிறேன் (நல்லா வந்தால்).
அன்புடன்
நெல்லைத்தமிழன்
==============================================================================
ஜில்லுன்னு இனிய திங்கள் காலை வணக்கம் :)
பதிலளிநீக்குஆஜர்! இனிய காலை வணக்கம் துரை சசகோ, ஸ்ரீராம், அண்ட் எல்லோருக்கும்...
பதிலளிநீக்குஹை குழிப்பணியாரம்!! நெல்லையின் ரெசிப்பி...
அப்புறமா பந்திக்கு வரேன்...கொஞ்சம் பந்தி போட்டும்...
கீதா
ஹேய் ஏஞ்சல் வாட் அ ஸர்ப்ரைஸ்....இரவு வணக்கம் ஏஞ்சல்!!
பதிலளிநீக்குகீதா
பனிபொழிவிலும் எனக்கே முதலிடம் :) ஹாஹ்ஹா :) துரை அண்ணாக்கும் ஸ்ரீராமுக்கும் இனிய காலை வணக்கங்கள் :)
பதிலளிநீக்குஇப்போ தூங்க போய்ட்டு நாளைக்கு வரேன் :) துரை அண்ணா நீங்க முதலில் ரெசிப்பியை டேஸ்ட் பண்ணுங்க :)
என்ன ஆச்சு துரை சகோவைக் காணலை?!!! ஆச்சரியமா இருக்கே..
பதிலளிநீக்குஇன்னிக்கு ஏஞ்சல் உங்களுக்கு அதிராகிட்டருந்து .கர்ர்ர்ர்ர்ர்ர்...ஹா ஹா ஹா
கீதா
அஆவ் !! கீதாவா !!! :)
பதிலளிநீக்குகீதா இங்கே ஹெவி ஸ்னோ ..இப்போ தான் தூங்க போறேன் :) எப்படியாச்சும் இன்னிக்கு முதல் கமெண்ட் போடணும்னு கண்ணை திறந்து வச்சிக்கிட்டு இருந்தேன் இன்னிக்கு
பதிலளிநீக்குஇன்னைக்கு வேலை அதிகம்.. ஆட்குறைப்பு செய்திருக்கிறார்கள்..
பதிலளிநீக்குசில வேலைகளை - வழக்கம் போல -நானே முன்னின்று செய்யவேண்டியதாக இருக்கின்றது.. அது நமது கடமையும் கூட..
அனைவருக்கும் அன்பின் வணக்கம்...
ரெண்டு நாளா தூங்கி வழிந்த நிலையில்
இன்று குழிப் பணியாரமும் தேங்காய் பர்பியும்..
வாழ்க வளமுடன்..
வாவ் !! தேங்காய் பர்பி ..எங்கம்மா அடிக்கடி செய்வாங்க ..இது இந்த டைம் உங்க ரெசிப்பி க்ளூட்டன் free அதனால் நான் கண்டிப்பா செய்வேன் :)
பதிலளிநீக்குஎன் கணவருக்கு ரொம்ப பிடிச்ச இனிப்பு இது .சொல்லியிருக்கும் அளவு கரெக்ட்டா எங்க வீட்டுக்கு போதும் ..
எங்கப்பா குளோப் ஜாமூன் செய்யும்போது இந்த கோவா சேர்ப்பார் :)
பிரம்மரிஷி பட்டம் வாங்கியதற்கு பாராட்டுக்கள் :)
குழிப்பணியாரம் நல்ல இருக்கே !! நானும் ஊரிலிருந்து non ஸ்டிக் ஆப்ப செய்ற சட்டி கொண்டுவந்தேன் ஆனால் இது வரைக்கும் அதில் எதையும் செய்யவே முடியலை ..ஏதாவது ரெசிப்பி அதில் செய்றதுக்கு இருந்தா சொல்லுங்களேன் இல்லேன்னா எண்ணெய் சட்டியா தான் அதை மாத்தணும் :)
பதிலளிநீக்குநாளை சந்திப்போம் கீதா bye for now :)
பதிலளிநீக்குயெஸ்ஸு..பந்திக்கு முந்திக்கோனு சொல்லுவாங்க....ஆனா நான் பின்னாடி பந்திக்கு வரேன்...கண்ணழகி..வெயிட்டிங்க்..
பதிலளிநீக்குகீதா.
பதிலளிநீக்குதேங்காய் பர்பி செய்ய தெரிந்தாலும் ஏனோ அதிகம் செய்ததில்லை ஆனால் குழிப்பணியாரம் இது வரை செய்தது இல்லை.. இந்த ரிசிப்பயை பார்த்து ஒரு நாளைக்கு கண்டிப்பாக செய்யனும். ஏனென்றால் எங்க வீட்டு மாமிக்கு ரொம்ப பிடிக்கும் செய்து அசத்திவிட வேண்டியதுதான்
இனிய காலை வணக்கம் ஏஞ்சலின்.
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.
பதிலளிநீக்குஆகா
பதிலளிநீக்குஅருமை
தம +1
குழிப்பணியாரம் நான் விருப்பி சாப்பிடுவேன்.
பதிலளிநீக்குஎங்கள் ஊரில் முக்குழி என்று சொல்வோம்.
தனித் தேங்காய் பர்ஃபி அதிகம் செய்யறதில்லை. அதோடு கடலைமாவு போட்டுச் செய்வேன். பால்கோவா சேர்த்ததில்லை. சர்க்கரை போடாத கோவா வடமாநிலங்களில் நிறையக் கிடைக்கும் என்பதால் அது போட்டுத் தான். அதோடு கடலைமாவும் தேங்காய்த் துருவலும் சேர்த்துப் பண்ணுவேன்.
பதிலளிநீக்குகுழிப்பணியாரம் அலுத்து விட்டது. சிறு தானியங்களில் கூடச் செய்தாகி விட்டது. சிறு தானியத்தில் இன்னும் நன்றாக வருகிறது. என்னிடம் நான் ஸ்டிக் குழிப்பணியாரச் சட்டி இல்லை. இரும்பு தான். புராதனமானது. 100 வயசுக்குக் குறையாது. நாலே நாலு குழி தான். ஆனால் ஒவ்வொன்றும் பெரிதாக இருக்கும். மைதா மாவெல்லாம் சேர்க்காமல் இட்லி, தோசை மாவை அப்படியே இஞ்சி, பச்சைமிளகாய், கருகப்பிலை, கொத்துமல்லி, கொஞ்சம் கடுகு, கொஞ்சம் பெருங்காயம் போட்டுத் தாளித்துக் கொண்டு தேவையானால் வெங்காயமும் வதக்கிச் சேர்ப்பேன். அப்படியே குழிப்பணியாரச் சட்டியில் ஊற்றி எடுத்துடலாம். அல்லது எண்ணெயில் போட்டுப் பொரிக்கலாம்.
http://sivamgss.blogspot.in/2015/10/blog-post_4.html தினையில் செய்த குழிப்பணியாரத்தின் செய்முறைச் சுட்டி!
பதிலளிநீக்குஏஞ்சல் ஸ்னோவா..ஆஹா....என் மகன் இப்போது 15 நாள் எமர்ஜென்ஸி அண்ட் க்ரிட்டிக்கல் கேர் இன்டெர்ன்ஷிப்/பயிற்சி பெறப் போயிருக்கும் மின்னியபோலிஸிலும் சென்ற வாரம் ஸ்னோ முட்டி அளவிற்குப் பெய்ததாகச் சொன்னான்...எனக்கு ஸ்னோ ரொம்பப் பிடிக்கும் என்று என்னை வெறுப்பேற்றினான்...அவனுக்கும் பிடிக்கும். நேற்று சொல்லியது பல இடங்களில் போக்குவரத்திற்காக அகற்றிவிட்டாலும், சில இடங்களில் ஐஸ் கட்டியாக உறைந்திருப்பதாகச் சொன்னன். சென்ற வாரம் -13 வரை சென்றதாகச் சொன்னான்..
பதிலளிநீக்குகீதா
ஹையோ நெல்லை என் பிள்ளைக்கு பால்/கோவா/பால்கோவா சேர்த்த பர்ஃபி அலல்து ஸ்வீட் ரொம்பப் பிடிக்கும்.
பதிலளிநீக்குரொம்ப நல்லா செஞ்சுருக்கீங்க நெல்லை. பேசாம ஒரு ஸ்டால் போட்டுடலாம் போல!!!!!!! படங்களே சொல்லுது. பரவால்ல முந்திரி கூடுதலா இருந்தா என்ன...நல்லாத்தான் இருக்கும்...
என் அம்மா என் பிள்ளைக்காகவே தேங்காய் பர்ஃபியில் (தேங்காய் மிக்ஸியில் அரைத்துக் கொண்டு) பாலும் சேர்த்துக் கிளறிச் செய்வார் (அப்போ கிராமம் ஸோ கோவா அல்லது ஸ்வீட் கோவா கிடைக்காது டக்கென்று. அதனால் பால் மற்றபடி உங்கள் ரெசிப்பியேதான்..அப்படிக் கிளறுவது கொஞ்சம் லைட் சாக்கலெட் கலரில் வரும். பசும் பால் கொஞ்சம் தண்ணியா வேறு இருக்குமே..ஆனால் அம்மா பேரனுக்காகப் பசும்பால் தான் சேர்ப்பார்...நான் பால் சேர்த்து கிளற நேரம் ஆகும் என்று பால்கோவா சேர்த்து நீங்கள் சொல்லியிருப்பது போல் சர்க்கரை குறைத்துச் செய்வேன். அப்புறம் ஸ்வீட் சேர்க்காத கோவாவும் பாரிஸ் கார்னரில் கிடைக்கிறதை நேரில் பார்த்ததும் வாங்கி வந்து மகனுக்குச் செய்து கொடுத்தேன்... என் அம்மாவும் மாமியாரும் கொஞ்சம் முந்திருபருபப்பும் சேர்த்து அரைப்பார்கள் பாரம்பரியமாகச் செய்யும் போது நீங்கள் சொல்லியிருக்கீங்களெ அப்படித்தான். நானும் பாரம்பரியமும் செய்ததுண்டு....சமீபத்தில் கூடச் செய்தேன். நாங்கொஞ்சம் சர்க்கரை அளவைக் குறைத்துச் செய்வேன். ஒன்றுக்கு ஒன்று போடுவதில்லை. கோவா சேர்த்தால் மட்டுமே ஒன்றுக்கு ஒன்று. அல்லது கொஞ்சம் குறைவாகத்தான்....நன்றாகவே வருகிறது. படங்கள் சூப்பர்!!!
கீதா
குழிப்பணியாரம் எங்கள் வீட்டில் சென்ற வாரம் செய்தேன். எனக்கு என் தோழி (வெல்லுர்காரர்) கிட்டத்தட்ட 26 வருடங்களுக்கு முன் சொல்லிக் கொடுத்தது. அதற்கென்று அரைத்துச் செய்வது. இதுவரை அப்படித்தான் செய்து வரேன். 2 புழுங்கள் அரிசி அல்லது 1 பு அ 1 ப அ, 1 உளுந்து போட்டு உளுந்தை நன்றாகக் கொட கொடவென்று அரைத்து அரிசியை கொஞ்சம் ஃபைன் ரவை போல அரைத்துக் கலந்து விட்டு புளித்ததும் அதில் நீங்கள் சொல்லியிருக்கும் எல்லாம் போட்டுச் செய்வது. மைதா சேர்த்ததில்லை. அந்தத் தோழி சின்ன வெங்காயம் போடச் சொல்லிக் கொடுத்ததால் அதுவும் போடுவேன்..
பதிலளிநீக்குகுழியில் அடையார் க்ரான்ட் ஸ்வீட்ஸில் போல் எண்ணெய் விடுவதில்லை. நான் பயன்படுத்துவது இரும்பு குழிப்பணியாரக் கல் என்னிடம் ஹிண்டாலியமும் இருக்கு. சின்ன ஸ்பூனால் (எண்னெய்க்கு என்று சின்ன குழி ஸ்பூன் இருக்குமே அதால்) ஒருஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும், மாவு விட்டு மூடி வைத்து விட்டு, அப்புறம் திருப்பிக் கொடுத்து மூடி போடாமல் விட்டு பின்னர் எடுத்துவிடுவேன். திருப்பிப் போடும் போது பெரும்பாலும் எண்ணை தேவை இருக்காது. சில சமயம் மட்டும்....ரொம்ப நலலா வரும். இதே மாவில் கொஞ்சம் கெட்டியாக வைத்துக் கொண்டு வெல்லம் கரைத்து விட்டு ஏலம் சேர்த்தும் ஸ்வீட் பணியாரம் செய்வதுண்டு....
கீதா
கீதாக்கா சொல்லியிருப்பது போல் சிறுதானியத்திலும் செய்ததுண்டு...குழிப்பணியாரம்.
பதிலளிநீக்குகுழிப்பணியாரம் நான் கொஞ்சம் சிம்மில் (ரொம்பச்சிம்மில் அல்ல) வைத்துச் செய்வேன்..ஏனென்றால் கல் அடியில் குழியாக கேப் இருக்கும் என்பதால் கேஸ் அடுப்பில் சரியாக நிற்காது. அதற்கு இப்போது நான் அடுப்பில் சிறிய பாத்திரம் வைக்க ஒரு ஸ்டான்ட் ரவுன்ட் அல்லது சதுரமாக இருக்கும் இல்லையா அதைப் போட்டுவிட்டுக் குழிப்பணியாரக் கல்லை வைத்தால் ஆடாமல் நிற்கிறது...
ஆப்பம் மாதத்தில் கண்டிப்பாக இரு முறை இருக்கும். ஒன்று தமிழ்நாட்டு ஆப்பம். மற்றொன்று கேரளத்து ஆப்பம். என்று....கேரளத்து ஆப்பம் எங்கள் வீட்டில் செய்யும் களிக்கஞ்சி தோசை/தேங்காய்த் தோசை போலத்தான் வீட்டில் அதை தோசைக்கல்லில் செய்வார்கள். ஆப்பம் ஆப்பச் சட்டியில் செய்வார்கள் அவ்வளவுதான்...ஆப்ப மாவில் ஆப்ப சோடா சேர்ப்பார்கள். நான் சேர்க்காமலேயே செய்வேன் நன்ராகவே வரும். புளித்தால் நன்றாக வரும்.....
ஆப்பச் சட்டியில் மாவை ஊற்றி (கொஞ்சம் ஃப்ளோயியா இருக்கணும்) சட்டியைப் பிடித்துச் சுழற்றணும் அப்போ நுனியில் மெலிதாகவும் நடுவில் ஊத்தப்ப்ம் போன்றும் இருக்கும்....செய்து பாருங்கள் நெல்லை. முதலில் செய்து பார்க்க, தோசை மாவு வாங்குவீய்ர்கள் இல்லையா அதைக் கொஞ்சம் நீர் விட்டு ஃப்ளோயியா செஞ்சுக்கோங்க, அப்புறம் அதை இப்படிச் செய்து பாருங்கள்...சிம்மில் வைத்துத்தான் செய்யனும். சுழற்றிவிட்டு மூடி போட்டு விடுங்கள். வெந்ததும் எடுக்க வேண்டும் அவ்வளவுதான். எடுப்பது ரொம்ப சுலபம்.
கீதா
உங்கள் குழிப்பணியாரம் பார்த்ததும் ஆசை வந்துவிட்டது...ஆனால் சமீபத்தில்தான் செய்தேன். ஸோ இன்னும் கொஞ்ச நாள் போட்டும்....நாளை ஆப்பம்....ரெட் ரைஸ் ஆப்பம்.....
பதிலளிநீக்குகீதா
கேரளத்து ஆப்பத்திற்குப் பச்சை அரிசிதான் போட்டுச் செய்வதுண்டு....(களிக்கஞ்சி தோசை/தேங்காய்தோசை)
பதிலளிநீக்குகீதா
நிறைய முந்திரிபோட்டு பர்பி. என்னுடையஆரம்பகாலத்திலே முதலில் செய்தது தேங்காய் பர்பிதான். கற்றுக் கொண்டது என்று வேண்டுமானாலும் சொல்லலாம். சர்க்கரையைப் பாகாகக் காய்ச்சி, துளிபால் விட்டால் அழுக்கெல்லாம் திரண்டு ஓரத்தில் ஒதுங்கும். ஒரு கரண்டியால் அதை எல்லாம் எடுத்து விட்டுப் பிறகுதான் தேங்காய் சேர்ப்பேன். அதென்னவோ அப்போதெல்லாம் சர்க்கரையில் அழுக்கெடுப்பதென்பது அவசியமானதொன்று. பர்பி வெள்ளை வெளேரென்று பளிச்சென்று வரும். அழுக்கெடுக்காவிட்டால் எதையாவது சேர்த்து கலரை மாற்றிவிடுவோம். தேங்காயை பூவாகத்துருவவேண்டும்.கலர்மாறினால் பர்பியும் கலர்மாறிவிடும் என்ற பயம் உண்டு.தேங்காயுடன் கடலைமாவு,நெய்சேர்த்துச் செய்வது கோல்டன் ஜூபிலி என்று பெயர். இப்போது எதுவும் செய்வதில்லை என்பதுதான் உண்மை. உங்களுடையபர்பி நன்றாக வந்துள்ளது.
பதிலளிநீக்குஅப்புறம் அந்த குழிப்பணியாரம் எண்ணெயே விடாது நான்ஸ்டிக்கில் செய்யலாமா. மிகவும் நல்லது.எப்பொழுதாவது செய்வது வழக்கம். நான் எண்ணெய் விட்டுதான் செய்வேன். நல்ல குறிப்பு. வெல்லத்தைப் பொடித்துச் சேர்த்து இனிப்பு அப்பமும் தோசைமாவில் செய்யலாம். போடலாம் மெல்லிய தேங்காய்த்துண்டங்கள்,உலர் பருப்பு வகைகள். உங்கள் ஆர்வம் சமையலில் வியக்க வைக்கிறது. சாப்பிடலாம் இன்னொரு குழிப்பணியாரம். அன்புடன்
பார்த்தாலே சாப்பிட தோன்றுகிறது
பதிலளிநீக்குஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ் விடிஞ்சிடுச்சோஓஓ.... மீதான்ன்ன்ன் 1ஸ்ட்டூஊஊ:) ஓஓஓ இனிப்புப்பிரியர் ரெசிப்பியா இன்று.... அவருடையதாய்த்தான் இருக்கும் என நினைச்சேன்....
பதிலளிநீக்குஅதாரது ஜாமத்தில வந்து கூவிட்டுப் போனது..:).. அடக்கொடுக்கமா 10 மணிக்கு ஸ்லீப் பண்ணிடோணும் அதிராவைப்போல கர்ர்ர்ர்ர்ர்:)...
நானும் இந்த பர்பி செய்திருக்கிறேனே... ஆனா ஆரும் சாப்பிடேல்லை 2 சுவீட்... அத்தோடு, தேங்காய்ப்பூவை அப்படியே போட்டமையால் வாயில் கடிபடத் தொடங்கிட்டுது.
பதிலளிநீக்குநீங்கதான் அரைச்சுப் போடச்சொல்லி, கரெக்ட் முறை சொல்லியிருக்கிறீங்க.
ஒரு ரெசிப்பிக்கு இன்னொரு பொருளைச் சேர்க்கச் சொன்னால்... பால்கோவா வுக்கு எங்க போவேன் யான்ன்ன்?.. முதல்ல பால்கோவா சாப்பிட்டிருக்கிறேனோ தெரியல்ல... அப்பப்ப பொக்ஸ் உடன் வாங்கி இந்திய சுவீட்ஸ் சாப்பிட்டதுண்டு, ஆனா இதுக்கு என்ன பெயர் எனக் கேட்டால் சொல்லத்தெரியாது.
நீங்க பர்பியை இந்தியாவில ஆரம்பிச்சு இலங்கையில் கொண்டு வந்து முடிச்சிருக்கிறீங்க நெல்லைத் தமிழன்... :)... சக்கரையில் ஆரம்பிச்சு... சீனியைக் கொட்டுங்கோ என முடிச்சிட்டீங்க:)..
பர்பி நல்லா வந்திருக்கு.. நட்ஸ் அதிகம் சேர்ப்பது நல்லதுதானே, ஆனா இங்கு நட்ஸ் சேர்த்தால் பிள்ளைகள் விரும்ப மாட்டினம், சும்மா நட்ஸ் சாப்பிடுவினம்.
பதிலளிநீக்குஎன்னா பெரிய பீஸ் ஆ கட் பண்ணியிருக்கிறீங்க பர்பியை கர்ர்ர்ர்ர்ர்:)..
///நல்ல வேளையாக என் ஹஸ்பண்ட் இங்கு வந்தபோது 4 துண்டங்கள் மீதி இருந்தன///
ஆஹா அவற்றைமிச்சப்படுத்தி வைக்க எவ்ளோ கஸ்டப்பட்டிருப்பீங்க என்பது எங்களுக்குப் புரியுது:)..
தேங்காய் பர்பி...சூப்பரா இருக்கு...ரொம்ப பிடிக்கும் ஆன செஞ்சது இல்லை..
பதிலளிநீக்குகுழிப்பணியாரம் ...வழக்கமா செய்றது தான்
ஆங்ங்ங்பொயிண்ட்டுக்குவந்தாச்சூஊஊ... எனக்கு ரொம்பப் பிடிச்ச குழிப்பணியாரம்... இதை நாங்கள் குண்டுத்தோசை என்றுதான் சொல்லுவோம்.
பதிலளிநீக்குகுண்டுத்தோசைக்கல்லிலும் என்னிடம் இருக்கு , கனடாவில் நொன் - ஸ்ரிக் இலும் பார்த்து வாங்கி வந்திட்டேனே:)... அப்போ மீ மாஸ்டர்செவ் தானே?:)...
இந்தக் குண்டுத் தோசை என்றாலே நண்ணெய் ஊத்திச் சுட்டால்தான் சுசி:)... இல்லையெனில் அதே சுவை கிடைக்காது.. இட்லி போலாகிடும்.
ஆனா நொன் ஸ்ரிக் என்பதனால் கொஞ்சமா எண்ணெய் விட்டால் போதும். நானும் செய்து நீண்ட நாளாகிட்டுது, செய்ய வேணும்.
இன்னொன்று நெல்லைத்தமிழன், நாங்கள் எப்பவும் தோசை இட்டலிக்கு நிறைய வெங்காயம் செத்தல் மிளகாய் தாளிச்சுப் போட்டேதான் செய்வது வழக்கம். இப்போ நான் மட்டும்தான் எண்ணெய் அதிகம் எதுக்கு என தாளிப்பதை நிறுத்திட்டேன்...
அம்மா எனில் தாளிச்சுக் கொட்டாமல் தோசை சுடவே மாட்டா... நேரம் போகுதம்மா என்றாலும்... இந்தா ஒரு ரெண்டு நிமிடம்தான் எனச் சொல்லிச் சொல்லியே தாளிச்சுக் கொட்டிடுவா...
உங்கள் குழிப்பணியாரம் நல்ல கலரா வந்திருக்கு... வாழ்த்துக்கள் :) உங்களுக்கல்ல:)..
அச்சச்சோஒ அப்புசாமிக்கு ஹொட் சோஸ் , கெச்சப் எல்லாம் படைச்சிருக்கிறார் நெல்லைத் தமிழன் கர்ர்ர்ர்ர்ர்:)...
பதிலளிநீக்குவெளியிட்டதுக்கு நன்றி எங்கள் பிளாக் ஸ்ரீராம். இரண்டையும் சேர்த்து ஒரே பதிவா போட்டுட்டீங்க. நிறைய ஸ்டாக் இருக்கோ? உங்க கமென்ட்ஸைக் காணோம். ரொம்ப பிசியா இருக்கீங்களா?
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி அதிரா. நான் கொஞ்ச நேரம் கழித்து பதில் போடலாம்னு நினைத்தேன் (எல்லோருக்கும்). உங்க கடைசி கமென்ட் பார்த்தேன். (அதுக்கு சற்று முன்பு என் ஹஸ்பண்ட், உங்க தமிழ் நல்லா வித்தியாசமா இருக்குன்னு ஸ்கைப் பண்ணினா. அதுனாலதான் இங்க வந்து தளத்தைப் பார்த்தேன்
பதிலளிநீக்கு"i like athira's tamil. when we hear malayalam or kannadam, telugu in svbc, i used to think they are all very sweet. when i read her tamil, it is also sweet."
"Athira says she does not know many sweets name. thani thaniyaa sweet pictures pottu, perai ezhudhi kamikalaame. may be you can't put it in reply; i don't know"
இது எங்க வீட்டின் அதிகாரியின் கமென்ட். (அவள் அனுமதி பெறவில்லை)
எனக்கு ஹாட் சாஸ், கெச்சப்லாம் சுத்தமாப் பிடிக்காது. நான் பாரம்பர்ய உணவு மட்டும்தான் சாப்பிடுவேன். விதி விலக்கால, பிட்சா சாப்பிட நேர்ந்தால், அதன்மீது கெச்சப் போட்டுக்கொள்வேன்.
இரண்டு போத்தல்களிலும் இருப்பது, மெலன் ஜூஸ். அன்றைக்கு நான் மெலன் ஜூஸ் தயாரித்தேன். பக்கத்தில், மாதுளை முத்துக்கள். நான் பெரும்பாலும் பழவகைகள் நிறைய சாப்பிடுவேன்.
பிறகு வந்து பதிலளிக்கிறேன்.
உங்க தமிழ்.... அதாவது மாஸ்டர் செஃப் அதிராவின் தமிழ்... நல்லா!?....
பதிலளிநீக்குஇனிமேதான் இருக்குது சலங்கை ஒலி!!..
தேங்காய் பர்பி நிறைய தடவை செய்திருக்கிறேன்..பாரம்பரிய முறையிலும், ஒருமுறை டபுள் லேயராக கோக்கோ பவுடர் சேர்த்தும்.
பதிலளிநீக்குகுழிப்பணியாரம் எப்போதுமே அடிமாவு வந்தால் செய்வது தான்..
பாரம்பரிய முறையில் தேங்காய் பர்பி செய்து முன்பெல்லாம் என் மக்களுக்கு கூரியரில் அனுப்புவேன் குழிப் பணியாரம் எண்ணை விடாமல் வெறுமனே தடவினால் போதுமா இதுவரை செய்து பார்த்ததில்லை
பதிலளிநீக்குமுதல் வருகைக்கு நன்றி. ஞாயிற்றுக்கிழமையே, திங்களுக்குக் காலை வணக்கம் சொன்ன முதல் ஆள் உலகத்துலயே நீங்கதான். இதுல நீங்க 'புயலை' மிஞ்சிட்டீங்க.
பதிலளிநீக்குபனிப்பொழிவு - இதைப் பார்க்கணும், அதுல காலாற நடக்கணும் என்பது என் கனவு. எப்போ நிறைவேறுதுன்னு பார்க்கலாம்.
ஆப்பச் சட்டியிலேயே, கொஞ்சமா மாவு போட்டு, இரட்டை விளிம்பு தோசை வார்க்கலாம். மற்றபடி எனக்கு 'ஆப்பம்' பிடிக்காது.
வாங்க தில்லையகத்து கீதா ரங்கன். குழிப்பணியாரமும் விரைவில் செய்துவிடுங்கள். ரொம்ப நல்லா இருந்தது. உங்கள் கருத்துக்கு நன்றி.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி துரை செல்வராஜு சார்... அரபு தேசங்களில் எல்லாவற்றிலும் ஆள் குறைப்பு, வியாபாரம் ரொம்ப டல்.. உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது செய்துபார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.
பதிலளிநீக்குவாங்க அவர்கள் உண்மைகள் மதுரைத்தமிழன். கருத்துக்கு நன்றி. செய்துபாருங்கள். (அங்க கடாய் இருக்கோ?)
பதிலளிநீக்குஸ்ரீராம் - காலை வணக்கத்துக்கப்பறம் உங்களைக் காணமுடிவதில்லை. அவ்வளவு வேலைப் பளுவா? உங்க கருத்தைப் பார்க்கணும்னா, நான்லாம், சில பல தளங்களுக்குச் சென்றால்தான் காணமுடியும் போலிருக்கு.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் சார். நீங்க இடுகை இட்டு ரொம்ப நாளாகிவிட்டதே. நாட்டில் பாசிடிவ் ஆட்கள் குறைந்துவிட்டார்களா அல்லது உங்களுக்கும் வேலைப் பளுவா?
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி கில்லர்ஜி. அபுதாபியில் இருந்தபோது இதெல்லாம் எங்கே சாப்பிட்டிருக்கப்போகிறீர்கள். இப்போது இவையெல்லாம் கிடைக்கின்றனவா?
பதிலளிநீக்குஆஆஆஆஆஆவ் எல்லோரும் ஓரமா ஒதுங்கி நில்லுங்கோ:) நேக்கு லெக்ஸ்ஸும் ஆடல்ல காண்ட்ஸ்ஸும் ஓடல்ல:)).. பிறகு என் கை கால் பட்டு நீங்க தட்டுத்தடுமாறி தேம்ஸ்லே விழுந்தால் அதுக்கு மி பொறுப்பல்ல:))...
பதிலளிநீக்கு///"i like athira's tamil. when i read her tamil, it is also sweet."
ஆவ்வ்வ்வ்வ்வ்வ் அஞ்சூஊஊஊஊ இப்போ பார்த்து ஊர் சுத்தப் போயிருப்பாவே கர்ர்ர்ர்ர்:)) இங்கின ஓடிவந்து சத்தமாப் படிங்கோ:)).. கீதாஆஆஆஆ இன்னுமா கண்ணழகியுடன் வீடு திரும்பல்ல கர்ர்ர்:)).. எனக்கு புது ரசிகை கிடைச்சிருக்கிறா ஃபுரொம் நெல்லை:))... அதாவது மிஸ்டர் நெல்லைத்தமிழன்:))[ஹஒயோ ஹஸ்பண்ட் எனில் மிஸ்டர் தானே போடோணும்?:))]..
ஹா ஹா ஹா சந்தோசம் பொயிங்கு தே....சந்தோசம் பொயிங்குதே..:).. நன்ற்றி நெல்லைத்தமிழன், அவவின் கொமெண்ட்டை இங்கு போட்டுக் காட்டியமைக்கு.. இல்லை எனில் இங்கு வருவோருக்கு என் புகழ் தெரிய நியாயமில்லை எல்லோ ஹா ஹா ஹா...:)..
///நெல்லைத் தமிழன் said...
பதிலளிநீக்குஇரண்டையும் சேர்த்து ஒரே பதிவா போட்டுட்டீங்க. நிறைய ஸ்டாக் இருக்கோ? ///
ஹா ஹா ஹா அதுவா சங்கதி? நான் நினைச்சேன்ன்.. ஒரு இனிப்பும் ஒரு உறைப்புமாக அனைவர் விருப்பத்துக்கும் ஏற்ப நீங்கதான் போட்டிருக்கிறீங்கள் என:)..
///உங்க கமென்ட்ஸைக் காணோம். ரொம்ப பிசியா இருக்கீங்களா?///
ஹா ஹா ஹா பிஸி உடன் அவருக்கு இப்போ மறதி அதிகமாகுது:)).. சரி சரி படிச்சதும் கிழிச்சிடுங்கோ பிளீஸ்ஸ்:) எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)).
///இரண்டு போத்தல்களிலும் இருப்பது, மெலன் ஜூஸ். அன்றைக்கு நான் மெலன் ஜூஸ் தயாரித்தேன். பக்கத்தில், மாதுளை முத்துக்கள். நான் பெரும்பாலும் பழவகைகள் நிறைய சாப்பிடுவேன். //
பதிலளிநீக்குஎன்ன இது புதுக்கதை? லெமென் யூஸ் சிவப்பாவோ இருக்கும்??:)
///துரை செல்வராஜூ said...
பதிலளிநீக்குஉங்க தமிழ்.... அதாவது மாஸ்டர் செஃப் அதிராவின் தமிழ்... நல்லா!?....
இனிமேதான் இருக்குது சலங்கை ஒலி!!..///
ஹா ஹா ஹா... நிண்ட இடத்திலேயே பலமாஆஆஆஆஆஆஆஆச் சிரிச்சிட்டேன்ன்ன்ன்:)).. பின்ன நமக்கு நாமளே.. பட்டம் சூட்டிக்கொண்டிருந்தபோது.. இப்படி ஒருவர் வந்து சுவீட் எனச் சொல்லுவது சிம்பிளோ... ஆவ்வ்வ்வ்வ் என் அடுத்த பட்டம் ரெடீஈஈஈஈஈஈஈ:) ஹா ஹா ஹா ஹையோ என் செக்:) இதைப் பார்த்திடக்கூடா ஜாமீ:))
வருகைக்கு நன்றி கீதா சாம்பசிவம் மேடம். தேங்காய் பர்பியில் கடலைமாவா? இது என்ன புதிதாக இருக்கு? அதுக்குப்பேர் தேங்காய்மைசூர் பர்பியா? :-)
பதிலளிநீக்குஉங்கள் பின்னூட்டத்தைப் படித்துவிட்டு, இடுகையையும் போய்ப்பார்த்து, என் ஹஸ்பண்ட், வீட்டில் தினை இருப்பதால் இந்த வாரம் செய்துபார்க்கப்போகிறேன் என்று சொன்னாள். செய்தபின்பு எப்படி வந்தது என்று சொல்லச்சொல்கிறேன்.
http://sivamgss.blogspot.in/2014/10/blog-post_22.html செய்முறை போடலை. ஆனாலும் தேங்காய் பர்ஃபி, கடலைமாவு சேர்த்தது அங்கே வைச்சிருக்கேன். தீபாவளிப் பதிவு. போய்ப் பார்த்துட்டு வாங்க. சாப்பிட முடியாது. 2014 ஆம் ஆண்டில் செய்தது. சமீபத்தில் செய்ய நேர்ந்தால் படம் எடுத்துப் போடறேன். :)
பதிலளிநீக்குமீள் வருகைக்கு நன்றி தில்லையகத்து கீதா ரங்கன்.
பதிலளிநீக்குபாட்டி 50கள்ல இருக்கும்போதே, பேரன் இருந்தா (அதாவது பெரியவங்க நல்ல உடல் நிலைல இருக்கும்போது), எல்லாம் செய்துதர முடியும்.
நானே கொஞ்சம் ஸ்வீட்ஸ் செய்ய ஆரம்பித்தபிறகு, கடையில் வாங்குவதில் அவ்வளவு இஷ்டம் இருப்பதில்லை. நாம செய்யும்போது, நெய்/எண்ணெய் கம்மியா, நமக்குத் தேவையான முறையில் செய்துகொள்ளலாம். இதுக்கு விதிவிலக்கு, லட்டு போன்றவைதான்.
கீதா ரங்கன் - இங்கு தோசை/இட்லி மாவு, ஆப்பம் மாவுலாம் நிறைய கிடைக்கும். துபாய்ல, காஞ்சீபுரம் இட்லி மாவுங்கற பேர்லயும் ஒண்ணு கிடைக்கும். எனக்கு ஆப்பம் பிடிப்பதில்லை. அது கொஞ்சம் இனிப்பு கலந்ததுபோல் இருக்கும். நல்லாத்தான் இருக்கும், ஆனால் அதற்குத் தேவையான சைட் டிஷ் எனக்குச் செய்ய இயலாது (சோம்பேறித்தனம்தான்). பெரும்பாலும், தோசை பண்ணுவதே, 'சரி..உடனே சாப்பிடலாம்' என்பதற்காகத்தான். அதுனால இட்லி மிளகாய்ப்பொடி மட்டும்தான் தொட்டுக்கொள்வேன்.
இங்க இப்போ ரெடிமேட் சப்பாத்தி கிடைக்கிறது (3 நாள் எக்ஸ்பயரி). அதை தவாலபோட்டு சூடாக்கினால் பஃப்னு நல்லா சப்பாத்தி ரெடியாயிடும். இப்போ ரெண்டு வாரமா அதுலதான் எனக்கு இன்டெரெஸ்ட்.
காமாட்சியம்மா... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. இப்போல்லாம், ஜீனியும் வெல்லமும் ரொம்ப சுத்தமாக வருதுன்னு நினைக்கறேன். அதுனால பெரும்பாலும் அழுக்கு இருக்காது.
பதிலளிநீக்கு"இப்போது எதுவும் செய்வதில்லை " - பொங்கலுக்கு ஒரு இனிப்பு செய்யும்படி உடல் ஆக்டிவ் ஆக ஆகிவிடும்.
'சித்திரமும் கைப்பழக்கம்' இல்லையா? இப்போ 4 வருஷமா, நானே வித விதமா செய்துபார்க்கிறேன். ஒவ்வொரு முறையும் ஏதாவது கற்றுக்கொள்கிறேன். நான் செய்ய ஆரம்பித்தபிறகுதான், ஒவ்வொன்றையும் செய்ய எவ்வளவு நேரமாகிறது, என்ன efforts தேவையாயிருக்கு என்றெல்லாம் புரிந்துகொள்கிறேன்.
தோசைமாவில் வெல்லம் சேர்த்து - இது என் மனதில் இருக்கு. நான் அதிரச மாவு இந்தத்தடவை வாங்கிவந்தேன். அதனை உபயோகப்படுத்தியும் இந்த ஆப்பக்குழியில் இனிப்பு செய்யும் எண்ணம் இருக்கு.
ஜாலியா செய்து எழுதறதை, Encourage செய்யும் விதமா நீங்க எழுதற பின்னூட்டம் மகிழ்ச்சி அளிக்கிறது.
வருக அசோகன் குப்புசாமி. சமீபத்துல Masterchef நிகழ்ச்சியில் சொன்னது, ஒரு உணவை, முதலில் பார்க்கும்போது, 'சாப்பிடும் ஆசை வரவேண்டும்'. கச்சா முச்சான்னு present பண்ணினால் சாப்பிடும் ஆர்வம் வராது. அதுக்கு அப்புறம் உணவு சுவையாக இருக்கணும். பார்க்க நல்லா இருந்து சுவை மட்டமா இருந்தால் சரிப்படாது. அதுக்கு பார்க்க அவ்வளவு நல்லா present பண்ணாமல் சுவை அட்டஹாசமா இருந்தால் எல்லோரும் விரும்புவார்கள் என்று சொன்னார்கள். அது நினைவுக்கு வந்தது.
பதிலளிநீக்கு//இங்க இப்போ ரெடிமேட் சப்பாத்தி கிடைக்கிறது (3 நாள் எக்ஸ்பயரி). அதை தவாலபோட்டு சூடாக்கினால் பஃப்னு நல்லா சப்பாத்தி ரெடியாயிடும். இப்போ ரெண்டு வாரமா அதுலதான் எனக்கு இன்டெரெஸ்ட்.//
பதிலளிநீக்குshana சப்பாத்தி இங்கு கிடைக்கும்.. உடைக்காமல் இருந்தால் பல நாட்கள், உடைச்சால் பத்திரமா சுத்தி வச்சிட்டால் இருக்கும் சில நாட்களுக்கு.
ஃபுரோசின் பரோட்டா நிறையக் கிடைக்குது, பிள்ளைகளுக்காக வாங்கி வச்சிருப்போம்.. எமேஜென்சிக்கு டக்குப் பக்கென சுட்டுக் கொடுத்திடலாம்.. சூப்பர் ரேஸ்ட்டா இருக்கும்...
அதிரா உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி. (மாஸ்டர்செஃப் என்று, நீங்கள் செய்த எதையும் சாப்பிட்டுப் பார்க்காமல் உங்களை அழைக்க என் மனசாட்சி ஒத்துக்கொள்ளவில்லை. Masterchef Program பார்க்கும் நான், யாரையாவது மாஸ்டர்செஃப் என்று அழைத்துவிடமுடியுமா?).
பதிலளிநீக்கு//என்னா பெரிய பீஸ்// - என்ன 2 இஞ்ச் அளவு. இது ஒரு பெரிய பீஸா? எங்க திருமணத்துல (முன்னால இந்த வழக்கம் இருந்தது. இப்போவும் இருக்கான்னு தெரியலை), பெண்வீட்டார், திருமணத்துக்கு மறு நாள், பெண்ணைக் கொண்டுவிடும்போது, 101 மைசூர்பாக்கு, லட்டு, அப்பம்/அதிரசம், முருக்கு போன்ற இனிப்புகளையும் கொண்டுவந்து கொடுப்பார்கள் (இந்த 101 என்ற எண், 21ஆகவும் இருக்கலாம், 51 ஆகவும் இருக்கலாம் அல்லது மிக அதிகமாகவும் இருக்கலாம். அது அவங்க அவங்களுக்குத் தகுந்த மாதிரின்னு நினைக்கறேன்). இதனை 'சீர் பட்சணம்' என்பார்கள். இது சாதாரண அளவை விட பலமடங்கு பெரியதாக இருக்கும். மைசூர் பாக்குன்னா, அது 5-7 இஞ்ச் நீளமா இருக்கும், தடிமனும் 1 1/2 அல்லது அதற்கு கொஞ்சம் அதிக அளவு இருக்கும். இந்த மாதிரி டார்ச்சர்லாம் இலங்கைல கிடையாதுன்னு நினைக்கறேன். அதுனாலதான், சின்ன அளவுல நான் செய்தது உங்களுக்கு ரொம்பப் பெரிதாகத் தெரிகிறது. ம்.. கண் போட்டுட்டீங்க. நல்லவேளை, தேங்காய் பர்பி செய்து, சாப்பிட்டு பல மாதங்கள் கழித்துத்தான் ஸ்ரீராம் வெளியிடுகிறார்.
தோசைக்கு நாங்கள் தாளிப்பதில்லை (ஐயோ.. திருவமாறுவதில்லை. வேற பாஷை கத்துக்கிட்டா எங்க வீடுகள்ல வம்பு வந்து சேரும்). இருந்தாலும் அதனையும் ஒருமுறை செய்துபார்க்கிறேன். செத்தல் மிளகாய்க்குப் பதிலாக, நான், 'வறு மிளகாய்' எண்ணெயில் பொரித்து அதனைச் சேர்க்கிறேன். நன்றாக இருக்கும்னு தோணுது.
//வாழ்த்துக்கள் :) உங்களுக்கல்ல:)..// - அந்தப் பெண்ணை வாழ்த்தினாலும் அது என்னைத்தானே சேரும். உங்கட பாஷைல, அவ 'என்ட மனுஷிதானே' ஆமாம்.. ஏன் Better half என்ற பதம் உபயோகப்படுத்துகிறார்கள்?
அதிரா - நான் சொன்னது Frozen அல்ல. அது, பல Brands எல்லா varietiesம் கிடைக்கிறது (விதவித பராத்தா, சப்பாத்தி, வெஜ் ரோல் போன்று பல. நான் முன்பு துபாயில், Frozen மசால்தோசை, வடை-உளுந்து, மசால்-கீரைஐஐஐ வடை இல்லை, போன்ற பலவற்றைப் பார்த்திருக்கிறேன்). Frozen நல்லதில்லை. அதில் உப்பு மற்றும் கெமிக்கல்ஸ் அதிகம். அதை நான் உபயோகப்படுத்துவதில்லை.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி அனுராதா பிரேம்குமார். தேங்காய் பர்பி மிக மிக சுலபமான ஸ்வீட். செய்துபாருங்கள்.
பதிலளிநீக்குமீள் வருகைக்கு நன்றி துரை செல்வராஜு சார்.
பதிலளிநீக்கு"இனிமேதான் இருக்குது சலங்கை ஒலி!!.." - இது பரத நாட்டிய சலங்கை ஒலியென்றால் கேட்க நல்லாத்தான் இருக்கும். ஆனால் நீங்க சொன்னது, 'லக லக லக' சலங்கை ஒலிபோல் தெரியுதே.
வருகைக்கு நன்றி ஆதி வெங்கட். 'கோகோ பவுடர் லேயர்' - நல்ல ஐடியாவாத் தெரியுதே. என் பையனுக்கு கோகோ ரொம்பப் பிடிக்கும். அதனை உபயோகப்படுத்தணும்னா, தேங்காயை ரொம்பவும் வழுமூன அரைக்கணும்னு நினைக்கிறேன். செய்துபார்க்கிறேன்.
பதிலளிநீக்குஜிஎம்பி சார்... இரண்டாவது வாரமா, உங்களுக்குப் பிடித்த ஐட்டம் என்று தோன்றுகிறது. நாம் செய்து, நமக்குப் பிரியமானவர்கள் சாப்பிட்டு, 'நன்றாக இருக்கு'ன்னு சொல்லும்போது நமக்கு ஒரு மகிழ்ச்சி உண்டாகிறது. அப்போதுதான் தோணும், 'அடப்பாவீ... மனைவி இப்படிச் செய்துபோட்டபோதெல்லாம் சொல்லாமல் இருந்துவிட்டாயே' என்று.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி.
மீள் வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்கு"என் புகழ் தெரிய நியாயமில்லை எல்லோ" - இங்கு ரெகுலரா வர்றவங்களுக்கு அதிரா புகழ் தெரியாம இருக்க வாய்ப்பு இல்லையே. - To be fair, நீங்க நகைச்சுவையா எழுதறீங்க. பொதுவா ஹர்ட் ஆகிறமாதிரி எழுதறதில்லை, அந்த மாதிரி பின்னூட்டங்களையும் அமைதியாவோ நகைச்சுவையாவோ கடந்துவிடுகிறீர்கள்.
வாட்டர் மெலன் - இதன் யூஸ் (ஜூஸ்) இந்த நிறத்தில்தான் இருக்கும். லெமன் என்பது எலுமிச்சை அல்லது உங்கட பாசைல தேசிக்காய். மெலன் 4 கிலோ சைசுல இருக்கும்னா, லெமன் 40 கிராம் சைசுல இருக்கும். அட ஆண்டவா... மாஸ்டர் செஃப் கிளாஸ் இவங்களுக்கு எடுக்க வச்சுட்டயேப்பா....உனக்கு ஏன் என்மேல் இவ்வளவு கோபம்.
மீள் வருகைக்கு நன்றி கீதா சாம்பசிவம் மேடம்
பதிலளிநீக்கு//சமீபத்தில் செய்ய நேர்ந்தால் படம் எடுத்துப் போடறேன். :)// - வேண்டாம். நான் உங்கள் பதிவுகளைப் படித்து அதில் சிலவற்றைச் செய்து படத்துடன் எங்கள் பிளாக்குக்கு அனுப்பறேன். You are an experienced chef.
அது இருக்கட்டும். நீங்க இதுவரை செய்திராத ஒன்றை நான் ஸ்ரீராமுக்கு அனுப்பியிருக்கேன். அது என்ன என்று கண்டுபிடியுங்கள் (திங்கக் கிழமைக்கு). ஆனால் அது ஜனவரி முடிவில்தான் வெளியாகும்னு நினைக்கறேன்.
ஹா ஹா ஹா மெலன் என்றா சொன்னீங்க... அது தெரியும் , நான் லெமன் எனப் படிச்சுட்டேன்ன்ன்ன்ன்:)...
பதிலளிநீக்குஅது சத்தியமா உங்கட மற்றும் உங்கள் பெட்டர் ஹாவ் கொமெண்ட்ஸ் படிச்சு கண்ணெல்லாம் கலங்கிப்போச்ச்ச்ச்ச்... சத்தியமா....
அஞ்சூஊஊஊஊ ரிசூ பிளீஸ்ஸ்ஸ்:) பிங் கலரில தாங்கோ... இது ஆனந்தக் கண்ணீர் துடைக்கவாக்கும்ம்ம்:)...
அஆவ் !!கார்ட்ஸ் செய்ய ரெடியாகற நேரமா நெல்லைத்தமிழன் இவ்ளோ டவ்ட்ஸ் கேட்கிறாரே
பதிலளிநீக்கு//ஏன் Better half என்ற பதம் உபயோகப்படுத்துகிறார்கள்?
December 11, 2017 at 4:14 PM//
அது வாழ்விலும் தாழ்விலும் சுகத்திலும் துக்கத்திலும் சரி பாதி பங்கெடுக்கிறோமே அதுக்குதான் பெட்டர் half :) சொல்றாங்க
//To be fair, நீங்க நகைச்சுவையா எழுதறீங்க. பொதுவா ஹர்ட் ஆகிறமாதிரி எழுதறதில்லை, அந்த மாதிரி பின்னூட்டங்களையும் அமைதியாவோ நகைச்சுவையாவோ கடந்துவிடுகிறீர்கள்.//
பதிலளிநீக்குமுடியாது நான் ஒத்துக்க மாட்டேன் ..அவங்க செய்ற சமையல் எல்லாம் எதனை பேருக்கு ஹார்ட் அட்டாக் panic அட்டாக் தந்திருக்கு தெரியுமா ????/கர்ர்ர்ர் for நெல்லைத்தமிழன்
@நெல்லை தமிழன்
பதிலளிநீக்கு====================
இங்கே பாருங்க உங்க பெட்டர் ஹால்ப் கிட்ட தெளிவா சொல்லொடுங்க அந்த அதிகம்பேர் வாசித்த இடுகைல பதிவில் கீரை வடையில் இருக்கும் படம் ஏஞ்சல் not அதிரான்னு
@நெல்லைத்தமிழன்
பதிலளிநீக்கு//நெல்லைத் தமிழன் said...
முதல் வருகைக்கு நன்றி. ஞாயிற்றுக்கிழமையே, திங்களுக்குக் காலை வணக்கம் சொன்ன முதல் ஆள் உலகத்துலயே நீங்கதான். இதுல நீங்க 'புயலை' மிஞ்சிட்டீங்க.//
ஹாஹா திங்கள்கிழமைக்கு முதல் வரணும்னு எப்பவும் ஆசை ..டைம் வித்யாசம் ஆனாலும் சில நேரம் விழிச்சிருந்தா இங்கே வருவேன் ..நேத்து கார்ட்ஸ் செஞ்சிட்டே refresh செஞ்சி பார்த்தா போஸ்ட் வந்து உடனே குதிச்சிட்டேன் கமெண்ட்ட
நெல்லைத்தமிழன்... திருமணத்துக்கு அடுத்தநாள் பொம்பிளை மாப்பிளை பார்க்கச் செல்வது என பெண் வீட்டார்ர் ஒற்றை எண்ணில் தட்டுக்கள் எடுத்து மாப்பிள்ளை வீட்டுப் போவது வழக்கம்... அதில் தேங்காய் பழம் பலகாரம் என இருக்கும்... எண்ணிக்கை எல்லாம் இல்லை.
பதிலளிநீக்குநம் வழக்கம் திருமணநாள் அன்று மாப்பிள்ளை வீட்டில்தான் பெண் தங்குவார்... 4 ம் நாள்... தம்பதிகள் சகிதம் பெண் வீட்டுக்கு வந்துஅங்கு நான்காம் சடங்கு என ரிஷப்ஷன் நடக்கும்... அத்தோடு மாம்பிள்ளை நம்மோடுதான்ன் ஹா ஹா ஹா...
@நெல்லைத்தமிழன் ..நேத்து நிறைய படமெடுத்தேன் இன்னிக்கு போஸ்டர் போடறேன் படங்களை ..
பதிலளிநீக்குஜெர்மனில வின்டர் wonderland தான் ஆல்வேஸ் ஒயிட் Christmas.
இங்கே 2010 இல் செம ஸ்னோ அப்புறம் பல வருஷம் கொட்டும் கரையும் இந்த வருஷம்தான் கொட்டி இன்னும் கரையலை
ஆக்சுவலா நேற்று எங்க ஏரியா மான்செஸ்டர் மிட்லாண்ட்ஸ் ஆக்ஸ்போர்ட் பக்கம்தான் ஸ்னோ .லண்டனில் ஒண்ணுமில்லை :)
என் செக்:) இங்கின வந்தாவா?:).. 35 வர்சத்துக்கு முந்தின படத்தைப் போட்டிட்டு கூக்குரலைப் பாருங்கோ... இருங்கோ ஒருநாளைக்கு என் கமெராவில் பிடிச்சு இங்கின போடுறேன்ன்ன் :) நேரில் அகப்பட மாட்டாவாமே:)...
பதிலளிநீக்கு@athiraav meister chef
பதிலளிநீக்கு//அத்தோடு மாம்பிள்ளை நம்மோடுதான்ன் ஹா ஹா ஹா...
//
என் பையன் பிரபு எங்கவீட்லதான் இருப்பான் ஒழுங்கா உங்க குண்டு பொண்ணை ஜிம்முக்கு அனுப்பி மெலியவச்சி பெட்டிக்கட்டி அனுப்பி வைங்க சொல்லிட்டேன்
@நெல்லைத்தமிழன் //ஆப்பச் சட்டியிலேயே, கொஞ்சமா மாவு போட்டு, இரட்டை விளிம்பு தோசை வார்க்கலாம். மற்றபடி எனக்கு 'ஆப்பம்' பிடிக்காது.//
பதிலளிநீக்குகீகீகீ :) எனக்கு செய்யவே தெரியாதது இங்கே nirapara ப்ராண்ட் வாங்கி சும்மா செஞ்சேன் தட்ஸ் இட் சரியா வரலை ..ஓகே ரெட்டை விளிம்பு தோசை ட்ரை பண்றேன் :)
எனக்கு செய்ய தெரிலனாலும் நிறைய இப்படிப்பட்ட சாமான் வச்சிருக்கேன் :) என்னிக்காச்சும் செய்வேன்னு ஒரு நம்பிக்கை ..ரெண்டு மூன்று கண்ணு வச்ச கரண்டி அப்புறம் ரோஸ் முறுக்கு அச்சு எல்லாமே இருக்கே வீட்ல
@ஏஞ்சலின் - அதுக்குதான் பெட்டர் half :) சொல்றாங்க - இது ஒரு விளக்கமா? The other half னு simpleஆச் சொல்லாம, ஏன் பெட்டர் ஹாஃப் என்று சொல்கிறார்கள்? இதுதான் கேள்வி.
பதிலளிநீக்கு@ angel
பதிலளிநீக்குDecember 11, 2017 at 4:14 PM//
அது வாழ்விலும் தாழ்விலும் சுகத்திலும் துக்கத்திலும் சரி பாதி பங்கெடுக்கிறோமே அதுக்குதான் பெட்டர் half :) சொல்றாங்க/////
கர்ர்ர்ர்ர்ர்ர் இதை நான் படு பயங்கரமா எதிர்க்கிறேன்ன்ன்:)... ஏன் முழுசா பங்கெடுத்தா குறஞ்சோ போயிடுவினம்??:))) அட்லீஸ்ட் துன்பத்தையாவது முழுசா எடுத்திட்டு நம்மை பிரீயா விடலாமெல்லோ:).... ஹையோ சனி மாறமுன்பே என் நாக்கில சனி வந்திருக்குதே முருகா:)..
////கீகீகீ :) எனக்கு செய்யவே தெரியாதது இங்கே nirapara ப்ராண்ட் வாங்கி சும்மா செஞ்சேன் தட்ஸ் இட் சரியா வரலை ..ஓகே ரெட்டை விளிம்பு தோசை ட்ரை பண்றேன் ///
பதிலளிநீக்குஏதோ அப்பம் மட்டும்தான் தெரியாதாம் மற்றத வீராங்கணையாம் என்பது போலவேஏ பேச்டு வேற:)... கர்ர்ர்ர்ர்:) இந்த வாயும் இல்லை எண்டால் , எப்பவோ பப்பி தூக்கிட்டுப் போயிருக்கும் இவவை:)...
@ஏஞ்சலின் //வாழ்விலும் தாழ்விலும் சுகத்திலும் துக்கத்திலும் சரி பாதி பங்கெடுக்கிறோமே// - இதுவுமே உண்மையா? மனைவியின் உறவினர்கள் மறையும்போது, அந்த துக்கம் நமக்கும் அதே அளவு இருக்குமா? (அவங்களுக்கும் இதே கதைதான்). மனுஷன் துக்கத்துலயே இருந்தான்னா, நம்ம குடும்பம்னா பாதிக்கப்படும் என்பதால்தான், மனைவியும் துக்கமாக இருப்பதுபோல் நடிக்கிறார்களோ, ஆறுதல் சொல்கிறார்களோ? ஒருத்தருக்கு வரும் சந்தோஷம், அதே அளவு எப்படி மற்றவர்களுக்கு வர முடியும்? இரண்டும் இரண்டு உயிர்தானே.
பதிலளிநீக்குகேஜிஜி அவர்கள் இதைப் படிக்க நேர்ந்தால், 'புதன் வம்பு' க்கு, விஷய தானம் செய்தேன் என்று பாராட்டுவார்கள் என நினைக்கிறேன்.
///
பதிலளிநீக்குஎன் பையன் பிரபு எங்கவீட்லதான் இருப்பான் ஒழுங்கா உங்க குண்டு பொண்ணை ஜிம்முக்கு அனுப்பி மெலியவச்சி பெட்டிக்கட்டி அனுப்பி வைங்க சொல்லிட்டேன்///
ம்ஹூம்ம்ம்ம் ... அவருக்கு ஒழுங்கா வீட்டிலிருக்கவும் தெரியாது:).. இதில ஒவ்வொரு வீடு வீடாய்ப் போய் ஓசிச் சாப்பாடு வேறு:)... இதில என் செல்லம் கேய்க்குதோ அவருக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்:)...
other half ஐ விட நாங்க பெஸ்ட் அதனால்தான் கணவர்கள் தங்கள் மனைவியரை இண்ட்ரொட்யூஸ் செய்யும்போது மை பெட்டர் half னு சொல்வாங்க :)
பதிலளிநீக்குஇதுக்கு ஒரு காரணம் சொன்னார் ஒரு ஆங்கிலேயர் ..சி;ல வழக்கங்கள் ரோமன் நாட்டினர் கிட்டருந்து வந்தது more than half of a person's being அண்ட் the superior most half of a married couple..
இட் மீன்ஸ் மனைவி சிறந்தவரினாலே அப்படி சொல்றாங்க
@அதிரா - அத்தோடு மாப்பிள்ளை நம்மோடுதான்ன் ஹா ஹா ஹா...// - இலங்கைத் தமிழர்கள் வழக்கம் எனக்குத் தெரியும். அதில் நிறைய அர்த்தம் இருக்குன்னுதான் நான் நினைக்கறேன். மாப்பிள்ளை பெண் வீட்டிலேயே தங்கிவிடுவார். அதனால், தன் பெண்களுக்கான வீடுகளை முதலில் பெண்ணின் தந்தை தயார் செய்துவிடுவார் (ஒன்றுக்கு மேல் பெண்கள் இருந்தால்). அதேபோல், பையன், திருமணம் ஆனபின்பு பெண்வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். இந்த முறையில், பெரும்பாலும், பெண்கள் வாழ்வு ஓரளவு சுகமாக இருக்கும், வம்புச் சண்டை போன்றவைகளுக்கு வாய்ப்பு குறைவு. பெண் எப்போதும் பெற்றவர்களை, ஆணைவிட நன்றாக கவனித்துக்கொள்வாள்.
பதிலளிநீக்குஅய்ய்ய்ய்ய்ய் இப்போ நான் கண்டுபிடிச்சிட்டேன்ன்ன் பெட்டர் காவ் என்பது குழந்தைக்காக மட்டுமே சொல்லப்பட்டிருக்கு... மற்றும்படி... சிலதில முழுசு சிலதில கால் பங்கு இப்படியெல்லோ வரும்.... எப்பூடி என் கிட்னியா:?:)....
பதிலளிநீக்குஹையோ நல்லவேளை துரை அண்ணன் இங்கின இல்ல ஜாமீஈஈஈ:).
@நெல்லைத்தமிழன்
பதிலளிநீக்கு//மனைவியின் உறவினர்கள் மறையும்போது, அந்த துக்கம் நமக்கும் அதே அளவு இருக்குமா?//
100 பெர்சன்ட் இருக்கும் ..//அதே அளவு எப்படி மற்றவர்களுக்கு வர முடியும்? இரண்டும் இரண்டு உயிர்தானே.
//
கர்ர்ர்ர் இருங்க அந்த பிரம்ம ரிஷி பட்டத்தை திருப்பி எடுக்க சொல்றேன் வஸிஷ்டர்க்கிட்டருந்து :)
சரி புதன் வம்பு இந்த தலைப்பில் ஆரம்பிச்சா அங்கே கலக்குவோம் :)
உங்க வீக்னெஸையெல்லாம் பாசிட்டிவ் ஆக்கி வலிமையா ஆக்கிரோமே ஸோ நான்கதான் பெட்டர் half
பதிலளிநீக்கு////AngelinDecember 11, 2017 at 5:58 PM
பதிலளிநீக்குஉங்க வீக்னெஸையெல்லாம் பாசிட்டிவ் ஆக்கி வலிமையா ஆக்கிரோமே ஸோ நான்கதான் பெட்டர் half////
ஹலோ மிஸ்டர்:) அப்போ உங்களுக்கு வீக்னெஸ் ஏ இல்லையா:).... ஹா ஹா ஹா ஹையோ மீக்கு கண்டத்தில சனீஈஈஈஈ:))..
Garrrrrrrrrr 1000000000 times for miyaav chef
பதிலளிநீக்கு//நெல்லைத் தமிழன் said...//
பதிலளிநீக்குஇந்த முறையில், பெரும்பாலும், பெண்கள் வாழ்வு ஓரளவு சுகமாக இருக்கும், வம்புச் சண்டை போன்றவைகளுக்கு வாய்ப்பு குறைவு. பெண் எப்போதும் பெற்றவர்களை, ஆணைவிட நன்றாக கவனித்துக்கொள்வாள்.///
இதுபற்றி நிறையவே சொல்லலாம் நெல்லைத்தமிழன்... பெண்ணுக்கு மட்டுமல்ல.. மாப்பிள்ளைக்கும் சொகுசு வாழ்க்கைதான்.. அவருக்குப் பிடிச்சதா பார்த்துப் பார்த்து மாமி செய்து குடுப்பா.. வேர்க் போய் வரும்போது மாமனார்(எவ்வளவு பெரிய உத்தியோகத்தில் இருப்பினும்).. ஓடிப்போய் பிரீஃப்கேஸ் ஐ வாங்குவது.. இப்படி பல உபசரிப்புக்கள் நடக்கும்.. உண்மையைச் சொன்னால்., ஒரு ஆணுக்கு தன் பெற்றோரிடம் கிடைச்சிராத உபசரிப்பெல்லாம் இங்கு கிடைக்கும்....
இதேபோல, ஆண்களும் திருமணத்தின் பின்பு, மனைவி சொல்வதைக் கேட்பினம், தன் பெற்றோர்தான் பெரிசு எண்டெல்லாம் சொல்ல மாட்டினம்.. திருமணத்தின் பின்பு தன் சலரியைக்கூட மனைவியிடமேதான் கொடுப்பார்கள்.. பின்பு தம் தேவைக்கு மனைவியைக் கேட்டுக் கேட்டு வாங்குவினம்.. இது பரம்பரையாக நடக்கும் ஒன்று:)... இப்போ எல்லாம் பாங் என்றானபின்... ஜொயிண்ட் எக்கவுண்ட் ஆகி விட்டது.
///Angelin said...
பதிலளிநீக்குGarrrrrrrrrr 1000000000 times for miyaav chef///
//Angelin said...
உங்க வீக்னெஸையெல்லாம் பாசிட்டிவ் ஆக்கி வலிமையா ஆக்கிரோமே ஸோ நான்கதான் பெட்டர் half///
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நேக்கு நீதி நேர்மை கடமை எருமைதேன் :) முக்கியம்:)).. இருபாலாரும் எனப் போட்டிருந்தால் பேசாமல் போயிருப்பேன்:)).. எங்கிட்டயேவா?:).. விடமாட்டேன்ன்ன்ன் பொயிங்கிடுவேன்ன்:))
//இருபாலாரும் எனப் போட்டிருந்தால் பேசாமல் போயிருப்பேன்:)).. எங்கிட்டயேவா?:).. விடமாட்டேன்ன்ன்ன் பொயிங்கிடுவேன்ன்:))
பதிலளிநீக்குDecember 11, 2017 at 7:38 PM//
ஆங் கர்ர்ர்ர் :) ஒரு பிள்ளைப்பூச்சியை இப்படியா வாட்டுவாங்க :) இனிமே நான் உங்களுக்கு செகரட்டரி இல்லை :)) ரிசைன் செய்றேன் எனக்கான சேலரி பாக்கியை உடனே குடுங்க ..இட்ஸ் 50,000 பவுண்ட்ஸ்
தேங்காய் பர்ஃபி எனக்கும் பிடிக்கும். குழிப்பணியாரம் வீட்டில் அடிக்கடி செய்வார்கள்....
பதிலளிநீக்குசெய்முறை குறிப்புகளுக்கு நன்றி நெல்லைத் தமிழன்.
வாணாம் அஞ்சு வாணாம்:) ஜமாதானமாகிடலாம்ம்ம்:)...
பதிலளிநீக்குhttps://media.giphy.com/media/RQ7jEZTiuNRV6/giphy.gif
நான் தேங்காய் பர்ஃபியில் கோவா, முந்திரி போன்றவை சேர்க்காமல்தான் செய்வேன். Pure genuine coconut burfi. அரைக்கவும் மாட்டேன். காமாட்சி அம்மா சொல்லியிருப்பதை போல் சர்க்கரை பாகில் பால் ஊற்றி அழுக்கை எடுத்த பிறகு பூப்போல துருவிய தேங்காய் துருவலை சேர்த்து கிளறுவேன். வெள்ளை வெளேரென்று சாஃப்ட் ஆக வரும்.
பதிலளிநீக்குகுழிப்பணியாரம் அடிக்கடி செய்வேன். மைதா மாவு மற்றும் ரவை இவற்றோடு போன்ற.மிளகாய், இஞ்சி, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்தும், மைதா, ரவை சேர்க்காமலும் செய்வதுண்டு.
அருமையான படங்கள்.
பதிலளிநீக்குதேங்காய் பர்ஃபி ,வெறுமனே செய்துதான்
சாப்பிடுவது. கோவா,பால் கோவா மிக்ஸ் செய்தது கிடையாது.
திரட்டிப்பால் தனியா சாப்பிடலாமே.
வித விதமாகச் செய்யுங்கள் .நான் கண்களால் பார்த்துக்
கொள்கிறேன்.
குழிப் பணியாரம் அமிர்தம் மாதிரித் தெரிகிறது.
மூன்றாம் நாள் மாவுதான் நல்ல பொருத்தம்
வருகைக்கு நன்றி வெங்கட். நீங்க 'அங்க' செஞ்சுபார்க்கிறீர்களா?
பதிலளிநீக்குவாங்க பானுமதி வெங்கடேஸ்வரன். எனக்கு எப்போவும் டிரெடிஷனல் தேங்காய் பர்பிதான் பிடிக்கும். எக்மோர் சாந்தி (அல்லது நெல்லை) ஸ்வீட்ஸில் அந்தக் காலத்தில் நான் வாங்கிய தேங்காய்பர்பி ரொம்ப வெள்ளையாவும், உதிர் உதிராகவும் இருக்கும். அது எனக்குப் பிடித்ததில்லை. இப்போவும் கிராண்ட் ஸ்வீட்ஸ் டிரெடிஷனல் முறையில்தான் செய்கிறார்கள்.
பதிலளிநீக்குஇப்போ உங்கள் பின்னூட்டத்தைப் படித்தபிறகு, இன்று குழிப்பணியாரம் செய்யணும்னு தோன்றிவிட்டது. வருகைக்கு நன்றி.
நன்றி வல்லிசிம்ஹன் அம்மா. நீங்க 'திரட்டிப்பால்'னு சொன்னவுடனே எனக்கு ஞாபகம் வந்தது, கர்னாடகாவில் நந்தினி பிராண்ட் 'குந்தா' என்ற திரட்டுப்பால். ரொம்ப அருமையா இருக்கும். வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் வாங்கிவருவேன்.
பதிலளிநீக்கு'கண்களால் பார்த்துக்கொள்கிறேன்' - நானும் அப்படித்தான். எனக்கு 'கடவுள்' திடும் என்று பிரத்யட்சமாகி என்ன வரம் வேண்டும் என்று கேட்டால், உடனே என் மனதில் வருவது, 'என்ன சாப்பிட்டாலும் எடை கூடக்கூடாது, கட்டுப்பாடு இருக்கக்கூடாது-ஜீனி சாப்பிடாதே, எண்ணெய் வேண்டாம் போன்று'. சில சமயம் நான் நினைத்துக்கொள்வேன், வேறு எதுவும் கேட்கத் தோணாதா என்று (ஒரு தடவை சத்ய சாய்பாபா கனவில் வந்தபோது-அது இருக்கும் 24 வருடங்கள்- அவர் என்னிடம் ஒன்று சொன்னார். அது சில மாதங்களில் அவர் சொன்ன தினத்தில் நடந்தது. பிறகு, உனக்கு வேற என்ன வேணும் என்று கேட்டார். நான் 'என் எடை குறையணும்'னு அவர்கிட்ட கேட்டேன். அதுக்கு சிரித்துக்கொண்டே அவர் மறைந்தார். எனக்கு அவ்வளவு obsession)
ஐ லைக் தேங்காய் பர்பி. ஈசியா இருக்கு செஞ்சு பார்த்துட்டு வந்து சொல்றேன்
பதிலளிநீக்குநன்றி ராஜி. கண்டிப்பா செய்யுங்க. உங்க குழக்கட்டை ரெசிப்பி எடுத்து வச்சிருக்கேன் (அந்தப் படங்கள்தான் ரொம்ப நல்லா இருந்தது). அதனை ஒரு நாள் செய்யணும்.
பதிலளிநீக்கு