வியாழன், 21 டிசம்பர், 2017

அலுவலக அனுபவங்கள் ; நண்பர் வாங்கிய லஞ்சம்அது 1970 களின் பிற்பகுதி.  
வீட்டுவசதி வாரியத்தில் ஒரு வீடு விலைக்கு வாங்க ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது.  சொந்த வீடு ஒன்று வந்துவிட வேண்டும் என்கிற எண்ணத்தில் வாசு அலைந்து கொண்டிருந்தார்.  அவர் வேலை பார்ப்பது ஒரு மலைவாசஸ்தலத்தில் எனினும் வீடு இந்த ஊரில் வாங்கக் காரணம் இங்குதான் விளம்பரம் வெளியிடப்பட்டு விற்பனை நடக்கிறது, இது அவர் மாமனார் ஊர்.


அன்று ஊரிலிருந்து வந்த வாசு மாமனார் பாலுவை சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு உடன் வரச்சொல்லி அழைத்தார்.

"நான் எதுக்கு வாசு?  நீயே போயிட்டு வந்துடேன்..."

"அட, லஞ்சம் கொடுக்கணும் மாமா...  எனக்கு எப்படி, என்ன செய்யறதுன்னு தெரியலை.  நீங்களும் வாங்க..."

"எனக்கு மட்டும் லஞ்சம் கொடுத்துக் கொடுத்துப் பழக்கமா என்ன?  கைகால் எல்லாம் உதறுது..  நீயே போயிட்டு வந்துடேன்...  எனக்கு வாங்கியும் பழக்கமில்லை, கொடுத்தும்  பழக்கமில்லை"

"நான் மட்டும் என்ன மாமா?  தினசரி அஞ்சு பேருக்கு லஞ்சம் கொடுத்துக்கிட்டு, ஆறு பேர் கிட்ட வாங்கிட்டு பழகி இருக்கேனா?  கொடுக்காம நடக்காது...  வாங்க..."

இருவரும் பாலம் தாண்டி அந்த அலுவலகத்தை அடைந்தார்கள்.  குறிப்பிட்ட அறைக்குள் நுழையும் முன்பு உள்ளே இருந்தவரைப் பார்த்த பாலு பின்வாங்கினார்.

"இவரா உன்னிடம் லஞ்சம் கேட்டார்?"

"ஆமாம்... ஏன்?"

"வாசு..  இவர் தீர்த்தலிங்கம்..  எனக்குத் தெரிந்த நண்பர்.."

"நல்லதாப் போச்சு..  குறைக்கப் பார்க்கலாம்... வாங்க"

"வேணாம் வாசு..  நீ உள்ளே போய்க் கொடுத்துட்டு  வா...  நான் இங்கேயே இருக்கேன்...  உனக்குத் தெரியாததா?  வேலை நடக்கணும்" -  இது மாதிரி சமயங்களில் இவர்களிடம் லஞ்சம் வாங்கவும் முடியாமல், வரவை விடவும் முடியாமல் ஏதாவது சாக்குபோக்கு சொல்லி வேறொருவருக்கு வேலையை முடித்துக் கொடுத்து விடுவார்கள் இதுமாதிரி ஆட்கள்.  அந்த அனுபவம் ஏற்கெனவே இவருக்கு தன்னுடைய அலுவலகத்திலேயே உண்டு.

எனவே பாலு வெளியிலேயே காத்திருக்க, வாசு வேலையை முடித்துவிட்டு வெளியே வந்தான்.

பாலுவுக்கு மனசே ஆறவில்லை.  'இவரா இப்படி!  என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

அந்த வாரம் ஊருக்குச் சென்று விட்டு பத்து நாட்கள் கழித்து மறுபடி ஒரு வேலையாய் வாசு வந்தபோது பாலு புன்னகையுடன் வரவேற்றார்.

சிரமபரிகாரங்கள் முடிந்து பேசிக்கொண்டிருந்தபோது பாலு சொன்னார்.

"உன் கிட்ட லஞ்சம் வாங்கினார் இல்லையா?  அவர் நான்கு நாட்களுக்கு முன்னால் இங்கு வந்திருந்தார்...  நீ அவருக்கு எவ்வளவு கொடுத்தே?"

"இரண்டாயிரம்..  ஏன்?  அவர்கிட்ட ஏதும் கேட்டு விட்டீர்களா?  ஐயோ..."

"சேச்சே...  இல்லை வாசு...  அப்படிச் செய்வேனா?  வேறு ஏதோ வேலையாய் வந்தவர் வாசலில் நான் உட்கார்ந்திருப்பதை பார்த்ததும் நின்று பேசிவிட்டுப் போனார்.  விஷயம் என்னன்னா..  உன்கிட்ட பணம் வாங்கினார் இல்லையா?  அன்னிக்கி சாயந்திரமே அவரோட புது சைக்கிள் தொலைந்துபோச்சாம்...  சொல்லிட்டிருந்தார்.  அன்னிக்கிதான்னு  அவர் சொன்னதிலிருந்து புரிஞ்சுக்கிட்டேன்.  'என் மாப்பிள்ளை கிட்ட வாங்கினே இல்ல..  அதான்னு நினைச்சுக்கிட்டேன்""அது சரி, என்கிட்டே மட்டுமா வாங்கியிருப்பார்?  எவ்வளவு பேர்கிட்ட வாங்கி இருப்பார்?  ஒரு சைக்கிள் போச்சு.. அவ்வளவுதானே?  விடுங்க மாமா..." 

உள்ளே சென்ற வாசு திரும்பிப் பார்த்து, "புது சைக்கிள்ன்னா சொன்னீங்க?  பாவம்" என்று உள்ளே சென்றான்."நியாயம் இவருக்கு மட்டும் கிடைச்சா போதுமாப்பா?"


================================================================================


நம்முடைய நாட்டில் நீராடுவதிலும், நீரை உண்ணுவதிலும் பெரியவர்கள் மிகவும் கவனமாக இருப்பார்கள். "புறந்தூய்மை நீரான் அமையும்" என்று வள்ளுவர் சொல்லி இருக்கிறார். ஆதலால் நாள்தோறும் நீராடலை இன்றியமையாத கடமையென்று விதித்து இருக்கிறார்கள்.விடியற்காலையில் எழுந்து நீராடுவது மிகவும் உத்தமமானது. விடியல் நான்கு மணி முதல் ஐந்து மணிக்குள் செய்யும் ஸ்நானத்தை ரிஷி ஸ்நானம் என்பார்கள். இது உத்தமம். ஐந்து மணிக்குமேல் ஆறரைக்குள் செய்வது மனித ஸ்நானம். இது மத்திமம். அதற்குப் பிறகு செய்வது ராட்சச ஸ்நானம். இது அதமம்.

சூரியன் உதித்தபிறகு நீராடுவது சிறப்பன்று.


- ஸ்ரீ ராமச்சந்திர டாங்க்ரே -
கலைமகள் பிப்ரவரி 1971 இதழிலிருந்து....


"தம்பி...  கவிதை இன்னும் வரல....."


===========================================================================================================================
முன்பு முகநூலில் கேட்ட கேள்விதான்.  அடுத்து வரும் இரண்டு படங்களும் எந்தெந்தக் கதைக்கான படங்கள்?  கீதா அக்கா....  இரண்டாவதை  நீங்கள் சொல்லி விடுவீர்கள்.

"ஈஸியான கேள்வியாவே கேக்குது பயபுள்ள...  நல்லா இருப்பா...  நல்லா இரு!"


========================================================================================


 என்னாது...  ஸ்ரீராமோட கவிதை இல்லையா?  


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++தமிழ்மணம்.

77 கருத்துகள்:

 1. காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்...

  பதிலளிநீக்கு
 2. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜு சகோ அண்ட் ஸ்ரீராம்,,,

  தேம்ஸ் ஆஜர் என்றால் காக்கையைக் காத்த காரிகைக்கும் காலை வணக்கம்...

  நான் ஆஜர்!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 3. காலை வணக்கம் ஏஞ்சல்.. (காக்கையைக் காப்பாற்றிய காரிகை!)

  பதிலளிநீக்கு
 4. ஹாஹாஹா :) எல்லா புகழும் ஸ்ரீராமுக்கே :) எனக்கு அந்த பேரை சஜஸ்ட் செஞ்சது அவர்தான் @கீதா :)

  பதிலளிநீக்கு
 5. அவுரோட பேரு தீர்த்தலிங்கம் தானே..

  பேருக்கு இடையில ஒரு (எ)லி வந்துடுத்து!...

  பதிலளிநீக்கு
 6. நன்றி ஏஞ்சல். நானும் வாக்களித்து, பதிவிலும் இணைத்துவிட்டேன்.

  பதிலளிநீக்கு
 7. //வீடு இந்த ஊரில் வெங்கட் காரணம் // ???

  பதிலளிநீக்கு
 8. அதுக்குள்ளே இவ்வளவு நடந்துடுச்சா!!!..

  பதிலளிநீக்கு
 9. ஸ்ரீராம், கீதா மற்றும் காரிகையைக் காத்த காக்.....

  அடடா...
  காக்கையைக் காத்த காரிகை அனைவருக்கும் வணக்கம்...

  பதிலளிநீக்கு
 10. கூகிளில் vaangak (வாங்கக்) என்று டைப் அடித்தால் வெங்கட் என்று வருகிறது ஏஞ்சல்!

  பதிலளிநீக்கு
 11. /நியாயம் இவருக்கு மட்டும் கிடைச்சா போதுமாப்பா?"//
  சரி அப்போ ஒவ்வொரு முறையும் சைக்கிள் வாங்கும்போதும் காணாம போகட்டும் :) ஓகேவா வெடிவேலு சித்தப்ஸ் :)
  அங்கிள்னு சொன்னா காபி டீனு ஒருத்தர் வருவாங்க :)

  பதிலளிநீக்கு
 12. அன்பின் ஸ்ரீராம். கீதா மற்றும் காரிகையைக் காத்த காக்.....

  அடடா...

  காக்கையைக் காத்த காரிகை அனைவருக்கும் வணக்கம்..

  பதிலளிநீக்கு
 13. ஓ!! ஏஞ்சல்!! ஸ்ரீராம் தான் காரணமா!! ஓகே ஒகே காட் இட்!!!! உங்களின் பதிவு!!! நேற்றைய பதிவு காக்கையைக் காப்பாற்றிய காரிகை!! பெயர் சூப்பர்! ஸ்ரீராம் பெயர் அருமை!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 14. @ஸ்ரீராம் இது எவ்ளோ பரவாயில்லை எனக்கு எதை எழுதினாலும் மிஸ்டேக்ஸ் நிறைய :)

  பதிலளிநீக்கு
 15. ஏஞ்சல்... நீங்கள் சுட்டிக்காட்டியதையும், துரை செல்வராஜூ ஸார் சுட்டிக்காட்டியதையும் அடுத்த நொடியே திருத்தி விட்டுதான் பதில் கொடுத்தேன்! நன்றி.

  பதிலளிநீக்கு
 16. அன்பின் ஸ்ரீராம். கீதா மற்றும் காரிகையைக் காத்த காக்.....// துரை சகோ..

  ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 17. //வீடு இந்த ஊரில் வெங்கட் காரணம் //

  நான் கேட்க நினைத்த கேள்வியை ஏஞ்சலும் கேட்டிருக்கிறார்! Auto Correction இங்கேயுமா?

  வடிவேலு... வெடிவேலு!

  பதிலளிநீக்கு
 18. ரிஷி ஸ்நானமா !! இங்கே எங்க ஊர்லயா ..ஆனாலும் கொதிக்கிற தண்ணி வரத்தால் பிரச்சினை இல்லை :) ஆனா 5 மணிக்கு எழும்பணுமே

  பதிலளிநீக்கு
 19. //பெயர் சூப்பர்! ஸ்ரீராம் பெயர் அருமை!!!//

  இன்னொரு பெயரும் கொடுத்திருந்தேன் கீதா. சேவல் சம்பந்தப்பட்டது. அதை ஏஞ்சல் ரிஜெக்ட் செய்துவிட்டார்கள்!

  பதிலளிநீக்கு
 20. //நான் கேட்க நினைத்த கேள்வியை ஏஞ்சலும் கேட்டிருக்கிறார்! Auto Correction இங்கேயுமா? //

  வெங்கட்... நான் திருத்தும் முன்னரே வந்து வாசித்து விட்டீர்கள் போல! என் கணினி உங்கள் நினைவாகவே இருக்கிறது போலும்!​

  பதிலளிநீக்கு
 21. முதல் பகுதி ஹா ஹா ஹா ஹா..

  அதானே எத்தனையோ பேர்ட்ட லஞ்சம் வாங்குறது...ல ஹேய் நில்லுங்க...அப்ப அந்த புது சைக்கிள் ஆட்டையைப் போட்டது வாசுதானா??!!!!! ஹா ஹா ஹா

  மீதிப் பகுதிக்கு வரேன் பின்னால..

  கீதா

  பதிலளிநீக்கு
 22. எலலாருக்கும் BYE :) தூங்கிட்டு வரேன்

  பதிலளிநீக்கு
 23. //அப்ப அந்த புது சைக்கிள் ஆட்டையைப் போட்டது வாசுதானா??!!!!!//

  ஐயோ... கீதா.. புதுக்கதை சொல்றீங்க... அப்படித் தோன்றும்படியா எழுதி இருக்கேன்.. அடக் கடவுளே.. அவர் வெளியூர்க்காரர். இங்கு வந்திருக்கும் பாலு பாஹே என்று அறிக! (ரகசியம்... வெளில சொல்லிடாதீங்க)

  பதிலளிநீக்கு
 24. //அதை ஏஞ்சல் ரிஜெக்ட் செய்துவிட்டார்கள்!

  December 21, 2017 at 6:13 AM//

  நோவ் !! ரிஜெக்ட் செய்யலை அது ரொம்ப பெரிசாகிடும் ப்ரொபைல்ன்னு நாளைக்கு அடுத்த பாதியை வச்சி உலாவருவேன் :)

  பதிலளிநீக்கு
 25. // நாளைக்கு அடுத்த பாதியை வச்சி உலாவருவேன் :) //

  ஹா.... ஹா... ஹா... நடத்துங்க... நடத்துங்க...

  பதிலளிநீக்கு
 26. கதை படித்தேன். மாமனார் மாப்பிள்ளையை "நீ, வா, போ" என்று ஒருமையில் பேசுவாங்களா?

  பொருத்தமான வடிவேல் குறிப்புகள். நல்லா இருந்தது.

  பதிலளிநீக்கு
 27. வாங்க நெல்லை.. மாப்பிள்ளை தனது மைத்துனர்தான் என்றால் பேசுவார்கள்!

  பதிலளிநீக்கு
 28. நான் வாயே திறக்கலை! எல்லோரும் சொல்லட்டும். அப்புறமா வரேன்! :)

  பதிலளிநீக்கு
 29. காக்கையைக் காத்த காரிகை? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தினம் தினம் புதுப் பட்டமா? வெளுத்து வாங்குங்க! :) நமக்கு யாருமே தர மாட்டேங்கறாங்க!

  பதிலளிநீக்கு
 30. ஐயோ... கீதா.. புதுக்கதை சொல்றீங்க... அப்படித் தோன்றும்படியா எழுதி இருக்கேன்.. அடக் கடவுளே.. அவர் வெளியூர்க்காரர். இங்கு வந்திருக்கும் பாலு பாஹே என்று அறிக! (ரகசியம்... வெளில சொல்லிடாதீங்க)//

  ஆ!!!!!! சாரி ஸ்ரீராம்!!!!! ஸாரி!!! வெரி வெரி ஸாரி...ஹஒயோ...புரிந்துவிட்டது....ப்ளீஸ் ப்ளீஸ் மன்னிச்சுக்கோங்க....

  கீதா

  பதிலளிநீக்கு
 31. //நான் வாயே திறக்கலை! எல்லோரும் சொல்லட்டும். அப்புறமா வரேன்! ://

  அச்சச்சோ.... என்ன சொல்லப் போறீங்களோ தெரியலையே கீதா அக்கா...

  //நமக்கு யாருமே தர மாட்டேங்கறாங்க! //

  இதெல்லாம் யாராவது வந்து தருவார்களா... நமக்கு நாமே திட்டம்தான்!

  பதிலளிநீக்கு
 32. சேச்சே... இதில் என்ன இருக்கு கீதா ரெங்கன்?

  பதிலளிநீக்கு
 33. ஶ்ரீராம்.... பின்னூட்டம் காணோம்.

  மாமனார், நீ, போ என்றெல்லாம் பேசுவதி வழக்கமா?

  த ம செக் பண்ணுங்க. அதுவும் காணாமலே போகுதான்னு.

  பதிலளிநீக்கு
 34. ஶ்ரீராம்.... பின்னூட்டம் காணோம்.

  மாமனார், நீ, போ என்றெல்லாம் பேசுவதி வழக்கமா?

  த ம செக் பண்ணுங்க. அதுவும் காணாமலே போகுதான்னு.

  பதிலளிநீக்கு
 35. ஶ்ரீராம்.... பின்னூட்டம் காணோம்.

  மாமனார், நீ, போ என்றெல்லாம் பேசுவதி வழக்கமா?

  த ம செக் பண்ணுங்க. அதுவும் காணாமலே போகுதான்னு.

  பதிலளிநீக்கு
 36. பாஹேயிடம் மானசீகமாக மன்னிப்பும் கேட்டுட்டேன்!! கடவுளிடமும்ம் கேட்டுட்டேன்...நீங்க ஏதோ உங்க அலுவலக விஷயம் முன்னாடி போடற மாதிரி போட்டுருக்கீங்கனு நினைச்சு வாசித்ததில் வந்த வினை....சிலர் இப்படி லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழல் வரும் போது கொடுக்க மனது வேதனைப் படும் போது வாங்கியவரின் வீட்டில் சும்மா அதாவது ஆட்டையைப் போடணும்னு இல்லை ஆனா அவரை பயமுறுத்த அந்நியன் ஸ்டைல்ல இப்படிச் செய்வதுண்டு எங்க கிராமத்துல அப்படி ஒரு ஆள் இருந்தார்...அந்த மாதிரி நினைச்சுட்டேன்...அதுவும் அவர் புது சைக்கிளா பாவம்னு சொல்லிட்டுப் போறதா சொல்லிருந்தீங்களா அதான்...எங்க ஊர்க்காரர் நினைவு வந்துருச்சு..அவரும் தானே பனிஷ்மென்ட் கொடுத்துட்டு ஒன்னுமே தெரியாத மாதிரி அப்படியானு சொல்லிட்டுப் போவார்.....எங்க ஊர்க்காரரின் கதையும் சொல்லனும்னு நினைச்சேன் அதுக்குள்ள கண்ணழகிய கூட்டிட்டுப் போய்ட்டேனா...அதான்....ஸாரிப்பா ....சே இனி இப்படி முந்திரிக் கொட்டைத்தனமா விபரீதமான கற்பனைக்குப் போகக் கூடாதுனு நினைச்சுக்கிட்டேன் ஸ்ரீராம்...


  கீதா

  பதிலளிநீக்கு
 37. நெல்லையின் பின்னூட்டம் காணொம் உங்க பதில் மட்டும் வந்துருக்கு?!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 38. //மாமனார், நீ, போ என்றெல்லாம் பேசுவதி வழக்கமா?//

  நெ.த. என் அம்மாவழித் தாத்தா எங்க அப்பாவை, "வா, போ" என்றே சொல்லுவார். அடுத்தடுத்து வந்த இளைய மாப்பிள்ளைகளைச் சொன்னதில்லை. ஏனெனில் அப்பா சின்ன வயசு முதல் தெரிந்தவர்! தாத்தாவின் நண்பரின் தம்பி! அதுமாதிரி இங்கேயும் சொந்தமோ, தெரிந்தவர்களாகவோ இருக்கலாம்.

  எங்க மாமனாரும் என் பெரிய நாத்தனாரின் கணவரை வா,போ மட்டும் இல்லாமல் வாடா, போடா என்றே சொல்லுவார். ஏனெனில் அக்கா பிள்ளை.

  பதிலளிநீக்கு
 39. ஈஸியான கேள்வியா இருக்கலாம் ஸ்ரீராம் ஆனா எனக்கு அந்த அளவு ஞானம் இல்லையே!!! ஸ்ரீராமசந்திர டாங்க்ரே சொல்லியிருக்கறபடி தினமும் செஞ்சுருந்தா ஞானம் வந்துருக்குமோ!!!!! ஹா ஹா ஹா ஹா . வாக்கிங்க் போகத் தொடங்கிய பிறகு லேட்டாத்தானே குளிக்க முடியுது!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 40. லஞ்சக்கதை வஞ்சம் தீர்த்தகதையாகி விட்டதே... குறுக்கு வழிபணம் நிலைக்காது.

  பதிலளிநீக்கு
 41. லஞ்சக் கதையில் சொன்னதை விட சொல்லாமல் விட்டது அதிகம் என்று நினைக்கிறேன்
  நீராடுவது என்றால் என்ன உடம்பிலே நீர் ஊற்றுவதா தலைக்கும் சேர்த்து ஊற்றுவதா பலரும்தலைக்குக் குளிக்காமலேயே நீராடுகிறார்கள்

  பதிலளிநீக்கு
 42. நமது அநியாய வரவுகளுக்கும் அநியாய செலவுகளுக்கும் நிச்சயம் ஏதோ தொடர்பு இருக்கிறது. இது பற்றி ஆனந்த விகடனில் 'சங்கிலி' என்றொரு சிறுகதையை நான் எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது.

  அரசு ஊழியர்களுக்கும், அவர்களின் அநியாய வரவுகளுக்கும், அவர்களின் டாஸ்மாக் செலவுகளுக்கும் அந்நோன்ய தொடர்பு இருப்பதாக என் நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்வார்.

  பதிலளிநீக்கு
 43. ரிஷிகளாய் இருப்பதை விட மனிதர்களாய் இருப்பதே பலவிதங்களில் நல்லது.

  பதிலளிநீக்கு
 44. அடுத்து வரும் இரண்டு படங்களும் இந்தக் கதைக்கான படங்கள்?

  'இந்த'வை 'எந்த' என்று திருத்திக் கொள்ளலாம்.

  பதிலளிநீக்கு
 45. //அடுத்து வரும் இரண்டு படங்களும்... //

  முதல் படம் ராமு வரைந்த மாதிரியும்--

  இரண்டாவது படம் கல்பனா வரைந்த மாதிரியும்--

  இருக்கிறது. ஒரே கதைக்கு இரு ஓவியர்களின் படங்களா?.. தெரியவில்லை..

  பதிலளிநீக்கு
 46. அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 47. லஞ்சம் என்பது இப்போது ஊசி நுழையும் இடத்தில் கூட நுழைந்துவிட்டதாகத் தெரிகிறது. சில லஞ்சங்கள் வெளிப்படையாகவே ஃபீஸ் என்ற பெயரிலும் வாங்கப்படுகிறதே! கேரளத்திலும் உண்டுதான் என்றாலும் கொஞ்சம் குறைவுதான் கண்டிப்பாகப் பயம் இருக்கிறது. கொடி பிடித்துவிடுவார்கள் என்ற காரணமாக இருக்கலாம்! தமிழ்நாட்டில் நிறையவே இருப்பதாகப்படுகிறது.

  பதிலளிநீக்கு
 48. //சேச்சே... இதில் என்ன இருக்கு கீதா ரெங்கன்?//

  மிக்க நன்றி ஸ்ரீராம்...

  கீதா

  பதிலளிநீக்கு
 49. நெல்லைத்தமிழன்.... கமெண்ட் இன்னும் அங்கே இருக்கே... மறையவில்லை. தம என் கண்ணுக்கே தெரியவில்லை. ஏஞ்சல் புண்ணியத்தில் அவ்வப்போது வாக்களித்து, லிங்க் தந்து கொண்டிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 50. கீதா,,, அவ்வளவு வருத்தப்படத் தேவையில்லை. நெல்லை கமெண்ட் என் கணினியில் தெரிகிறதே...

  பதிலளிநீக்கு
 51. நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

  பதிலளிநீக்கு
 52. மீள்வருகைக்கும் விளக்கத்துக்கும் நன்றி கீதா அக்கா.

  பதிலளிநீக்கு
 53. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

  பதிலளிநீக்கு
 54. கீதா.... ஹா.... ஹா.... நான் புத்தகத்தைப் பார்த்து ஈஸியா கேள்வி கேட்கிறேன். பார்க்காத உங்களுக்கு சிரமமாகத்தான் இருக்கும். ஆனால் முகநூலில் ரிஷபன் ஸார் சட்சட்டென சொல்லிவிட்டிருந்தார்.

  பதிலளிநீக்கு
 55. வாங்க ஜி எம் பி ஸார்... சொல்லாமல் விட பெரிதாக ஒன்றுமில்லை. நானும் தினமும் தலைக்குக் குளிப்பவன்தான்!

  பதிலளிநீக்கு
 56. வாங்க ஜீவி ஸார்.. தவறான வழியில் வரும் பணம் அளவிறந்தாவது போலக்கெடும். இந்த / எந்த திருத்தம் செய்துவிட்டேன்!!

  பதிலளிநீக்கு
 57. நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி ஸார்.

  பதிலளிநீக்கு
 58. /லஞ்சம் என்பது இப்போது ஊசி நுழையும் இடத்தில் கூட நுழைந்துவிட்டதாகத் தெரிகிறது.//

  கீதா இப்போதா? எப்போதுமே! இதுவே ரொம்ப முன்னாடி நடந்தது இல்லையா?

  பதிலளிநீக்கு
 59. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது போல் ......
  வடிவேலு படங்கள் எல்லாம் மிக பொருத்தம் .....

  பதிலளிநீக்கு
 60. @ கீதாக்கா :)

  சீக்கிரம் உங்களுக்கு ஒரு பட்டத்தை தயார் பண்ணிடறோம் :)அது ரொம்ப யோசிச்சா வராதது திடீர்னு பல்ப் எரியறமாதிரி டக்குனு தோணும் உடனே பட்டமளிப்புவிழா நடத்திடனும் :)

  பதிலளிநீக்கு
 61. முதலாவது மாமாவும் மருமகனும் ஆரெனப் புரிஞ்சு போச்ச்ச்ச்ச்ச்:))..

  ///ஆதலால் நாள்தோறும் நீராடலை இன்றியமையாத கடமையென்று விதித்து இருக்கிறார்கள்.///
  அச்சச்சோஓஓஓ அச்சோஓஓ இந்தக் கொடுமையைக் கேய்க்க இங்கின ஆருமே இல்லையே... பாத் ரப் இல் குளிக்கும் அனுக்காவை இவர் எப்பூடிப் படம் புடிச்சுப் பப்புளிக்கில போடலாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. விடுங்கோ விடுங்கோ ஆட்டைக் கடிச்சூஊஊஊஊஊஊ மாட்டைக் கடிச்சூஊஊஊஊஊஊஉ... இப்போ.. சரி வாணாம் எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)..

  ///என்னாது... ஸ்ரீராமோட கவிதை இல்லையா? ///

  ஹா ஹா ஹா மேலே அனுக்காவின் படம் பார்த்தபின் கவிதை எப்பூடி எழுத வரும்:) ஹையோ என் வாய் தேன் நேக்கு எடிரி:))...

  எங்களுக்கு நேற்றோடு ஸ்கூல் ஹொலிடே ஆரம்பமாகிட்டுதூஊஊஊஊஊஊ:))..

  பதிலளிநீக்கு
 62. வாங்க அதிரா... எத்தனை நாள் ஹாலிடே ? எத்தனை நாளாயிருந்தால் என்ன? என்ஜாய்!

  பதிலளிநீக்கு
 63. @ஸ்ரீராம்: இரவு 10-40 க்குதான் உங்கள் கதவு திறந்தது. நீட்டி முழக்க நேரமில்லை.

  @ ஏஞ்சலின்: பெயரை சுருக்கிப்பார்த்தேன்; காகாகா என்று கத்துகிறதே..!

  பதிலளிநீக்கு
 64. லஞ்சம வாங்குவது கொடுப்பதற்கும் அனுபவம் வேண்டும் திறமை வேண்டும் இப்படித்தான் நான் பாஸ்போர்ட்டிற்கு அப்ளை செய்து இருந்தேன் அதற்காக வெரிபிகேஷனுக்காக போலீஸ் என் நண்பரின் வீட்டிற்கு வந்த போது நான் அங்கே இல்லாததால் போலீஸ் நிலையத்திற்கு வர சொல்லிவிட்டு சென்று இருக்கிறா. நான் வீட்டிற்கு வந்தது என் நண்பர் நாளை காலை காவல் நிலையத்திற்கு சென்று அந்த போலீஸுக்கு பணம் கொடுத்துவிட்டு வந்துவிடு அதன் பின் பாஸ்போர்ட் வந்துவிடும் என்றார் பணத்திற்காகத்தான் அந்த போலீஸ் உன்னை அலுவலகத்திற்கு கூப்பிடுகிறார் என்றார். நானும் பணத்தை எடுத்து சென்று அந்த போலிஸ்ஸை சந்தித்துவிட்டு வந்து சொன்னேன் அந்த போலீஸ் என்னிடம் பணம் ஏது கேட்கவில்லை என்றேன்... அதற்கு நண்பர்கள் அவர் கேட்க மாட்டார்கள் நீயாகத்தான் கொடுக்க வேண்டும் பாரு உன்னை இன்னும் ஒரு தடவை அலைக்கழிப்பார் என்றாகள் அது போலத்தான் நடந்தது. அதனால் அடுத்த தடவை என் நண்பரை கூட்டி சென்றேன் அவர் அந்த பொலீஸை பார்த்து சார் இவன் நம்ம பையந்தான் சார் இவுனுக்கு இந்த மாதிரி கொடுத்து பழக்கம் இல்லை என்று சொல்லி என்னிடம் 100 ரூபாய் வாங்கி கொடுத்தார் என்ன அதிசியம் 2 வாரத்தில் பாஸ்போர்ட் என் கையில் கிடைத்துவிட்டது


  இப்ப உங்க பதிவை படித்த பின் எனக்கு தோன்றியது அந்த போலீஸ்காரரின் சைக்கிள் தொலைத்து போய் இருக்குமா எனப்துதான்.......யாருவாது சிந்தாதரிப் பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகில் இருந்தால் 20 வருடங்களுக்கு முன்னால் அந்த போலீஸ் ஸ்டேசனில் உள்ள காவல்காரரின் சைக்கில் காணாமல் போனதா என்று விசாரித்து சொல்லவும்... ஸ்ரீராம் முடிந்தால் ஒரு விசிட் பண்ணி கேட்டு சொல்லுங்களேன் ஹீஹீ

  பதிலளிநீக்கு
 65. @ ஏகாந்தன் சார் இப்போ பாருங்க சே கா சே என்று வருது :))

  பதிலளிநீக்கு
 66. வாங்க ஏகாந்தன் ஸார்... இன்னும் சரியாகவில்லையா? காணோமே என்று நினைத்துக்கொண்டிருந்தேன். கா கா கா ... நல்ல அவதானிப்பு!

  பதிலளிநீக்கு
 67. வாங்க மதுரை.. எல்லோருக்கும் சைக்கிள் தொலையுமா என்ன! அவருக்கு வேறு ஏதாவது நஷ்டம் வந்திருக்கும். சில வருடங்களுக்கு முன் என் மகனுக்கு பாஸ்போர்ட் வெரிஃபிகேஷன் நடந்தபோது கிட்டத்தட்ட இதே அனுபவம். நான் என் மகனிடம் சொல்லி அனுப்பினேன். அவன் வந்து இதே.... இதே பதிலைச் சொன்னான். அவர் அப்புறம் இரண்டுமுறை இவன் அலைபேசிக்கு பேசி கேஷுவலாக "நலம் விசாரித்திருக்கிறார்"! நேரமின்மை காரணமாக இவன் கடைசி வரை "அதை" கொடுக்கவேயில்லை. எனினும் பா.போ வந்து விட்டது!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!