சில வாரங்களுக்கு முன் தேங்காய் நடிப்பில் ஒரு பாடல் பார்த்தோம். இந்தப் பாடலின் காட்சியிலும் தேங்காய் உண்டு!
நாளை மார்கழி ஒன்று. ஏஞ்சல் அவங்க ஊர் பனி பற்றி ஒரு பதிவு போட்டிருந்தார்.
எஸ் பி பியின் இந்தப் பாடல் எனக்கு மிகமிகப் பிடித்த பாடல்களில் ஒன்று. வாலியின் வரிகளில் எம் எஸ் வி இசையில் 1976 ஆம் ஆண்டு வெளியான 'முத்தான முத்தல்லவோ' படப்பாடல்.
முதல் சரணம் முடிந்து பல்லவி பாடும்போது எஸ் பி பி குரலில் செய்யும் சேஷ்டை கிஷோர் சில பாடல்களில் ஹிந்தியில் செய்திருப்பது.
வானத்தில் ஆயிரம் தாரகைப் பூக்கள்
வேடிக்கைப் பார்க்கையிலே
கானத்தில் நாங்கள் கலந்திருந்தோம்
இனி வேறென்ன வாழ்க்கையிலே
இனி வேறென்ன வாழ்க்கையிலே
கோமகள் என்னும் பூமகள்
நெஞ்சில் சாய்ந்துவர
தாமரைப்பொய்கை
போலொரு வைகைப்
பாய்ந்து வர
தேவலோகமும்
தெய்வகீதமும்
ராஜயோகமும்
சேர்ந்து வந்ததோ...
"ஆசை நாடகம் ஆடிப்பார்க்கவும் ஓசை கேட்குமோ பேசக்கூடுமோ" என்கிற வரிகளையும், "தேவலோகமும் தெய்வகீதமும் ராஜயோகமும் சேர்ந்து வந்ததோ" என்னும் வரிகளையும் எஸ்பிபி பாடும் வசீகரம் இருக்கிறதே.. நான் அடிக்கடி கேட்டு ரசிக்கக் காரணமான இடங்கள்.
கடைசி சரணத்தை முடித்துவிட்டு நேரடியாக பல்லவிக்கு வராமல் மீண்டும் 'கார்குழல் தடவி கனியிதழ் பருகி என்று பாடலை முடிக்கும் இடமும் ரசிக்கத்தக்கது.
காட்சியில் எனக்குப் பிடிக்காத ஜெய்கணேஷ். அவருடன் தேங்காய் சீனிவாசன். இசை அமைப்பாளராம்! தயவு செய்து காட்சியைப் பார்க்காமல் பாடலை மட்டும் கேட்கவும்.
முன்பு 'எஸ் பி பி தனிப்பாடல்கள்' என்று நான் வைத்திருந்த கேஸட்டில் ''இசைபாடி...'' என்று எஸ்பிபி முடித்தவுடன் கமல் குரலில் "சின்ன இதழ்கள்.... செம்பவளக்கன்னங்கள்.. சிவந்த மேனி... செதுக்காத பொற்சிலை... ஆ.... வண்ணவிழி மலராதோ... வாய்திறந்து பேசாதோ... பள்ளிகொள்ள விடமாட்டேன்... என்னுயிரே எழுந்தென்னைப் பார்... பார்... பார்..." அலற, எஸ் பி பி குரலில் "கண்ணே நான் பாட கற்சிலையும் எழுந்தாடும்..." என்று ஒலிக்கத் தொடங்கும்! இந்தப் பாடல் முடிந்ததும் அந்த நினைவில் மனதில் அந்த வரிகள் ஒலிக்கத் தொடங்கி விடுகின்றன!
நன்றிநண்பரே
பதிலளிநீக்குஇதோ காணொலியினைக்காணச் செல்கிறேன்
தம+1
ஆ!! இன்று துரை சகோ, ஏஞ்சல் எல்லோரும் என்னைப் போல் காத்திருந்து காத்திருந்து உறங்கச் சென்றுவிட்டார்கள் போலும். துரை சகோ நைட் ட்யூட்டி முடிந்து வந்திருப்பார்...
பதிலளிநீக்குவெள்ளி விடிய தாமதம் ஏனோ?!!!!!!!!!
கரந்தை சகோ அண்ட் ஸ்ரீராம் இனிய காலை வணக்கம்...
இதோ பதிவுக்குப் போய்ட்டு வரேன்
கீதா
கரந்தை jk, ஸ்ரீராம், துளசி அனைவருக்கும் வணக்கம்....
பதிலளிநீக்குஇதில் வெளிநாட்டு சதி இருக்குமோ?...
பதிலளிநீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்,......
நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் கீதா. இன்று "தொழில்நுட்பக்க கோளாறுகள்" காரணமாக சற்றே தாமதம்! ! மன்னிக்கவும்!
பதிலளிநீக்குவாங்க துரை செல்வராஜூ ஸார். காலை வணக்கம்.
பதிலளிநீக்கு//வெளிநாட்டுச்சதி!! // ஹா... ஹா... ஹா... அவங்க ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பாங்க!
பாடல் நன்றாக இருக்கிறது ஸ்ரீராம். அதிகம் கேட்டதில்லை. எனவே நினைவில் இல்லை. இந்தப் படமும் தெரியாதே!! சி கே (ஜி கே போல சி கே!!!) ரொம்பவே புவர் என்று தோன்றுகிறது. ஒரு சிலதான் தெரிகிறது.
பதிலளிநீக்குஎஸ்பிபி குரல் இளமை!!!! யெஸ் கிமிக்ஸ் இன் பல்லவி!!! அது எஸ்பிபிக்குக் கைவந்த கலையாயிற்றே!!!
வரிகளும் நன்றாக இருக்கிறது!
கீதா
இதில் வெளிநாட்டு சதி இருக்குமோ?...
பதிலளிநீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்,......//
ஹா ஹா ஹா ஹா ஸ்ரீராம் சொல்லுவது போல் ஹா ஹா இருங்க எல்லாம் மதியமா வரும் பாருங்க...
துரை சகோ காலை வணக்கம்..
கீதா
ஸ்ரீராம் ஹோயோ இதுக்கு எதுக்கு மன்னிப்பு பா....!!!உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!!ஹா ஹா ஹா
பதிலளிநீக்குகீதா
வாங்க கீதா.. எனக்கு ஸி கே கொஞ்சம் அதிகம்!!! ஜி கே புவர்!! பாடல்கள் காரணமாகத்தான் இது போன்ற படங்கள் அறிமுகம்.
பதிலளிநீக்கு//இதுக்கு எதுக்கு மன்னிப்பு பா....!!//
ஆறு மணிக்கு மூன்று நான்கு நண்பர்கள் ப்ளாக் வாசலில் காத்திருப்பது போலவும் கதவு திறக்காமல் வைத்திருப்பது போலவும் ஒரு குற்ற உணர்வு! அதுதான்... பாருங்க நண்பர் துரை செலவராஜு நேற்றைய பதிவில் 15/12? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அதெல்லாம் ஒன்றுமில்லை..
பதிலளிநீக்குகோயிலில் சுண்டல் கடலை வாங்கும் வரிசையில் முதல் ஆளாக நிற்பது போன்ற மகிழ்ச்சி தான்...
நாளைக்கு மார்கழி!..
வாங்க துரை செல்வராஜூ ஸார்..
பதிலளிநீக்கு//அதெல்லாம் ஒன்றுமில்லை..//
நன்றி. பாடல் இன்னும் கேட்கவில்லையா?
நான் அப்போதே கேட்டு விட்டேன்...
பதிலளிநீக்குபாடல் அந்த காலத்தில் மனப்பாடம்..
வயல் வெளிகளின் ஊடாக வண்டிச் சாலையில் சைக்கிளில் செல்லும்போது பாடிக் கொண்டு சென்ற நாட்கள் நினைவுக்கு வருகின்றன..
காணொளி இப்போது தான்..
// நான் அப்போதே கேட்டு விட்டேன்...
பதிலளிநீக்குபாடல் அந்த காலத்தில் மனப்பாடம்.. //
ஆஹா... ஒரே கட்சி.
//காணொளி இப்போது தான்.. //
வேண்டவே வேண்டாம் காணொளி! பாடல் மட்டும் போதும். ஆனால் என்ன செய்வது/ வீடியோ நாளாச்சே!
நன்றி துரை செல்வராஜூ ஸார்.
@ ஸ்ரீராம்:
பதிலளிநீக்கு//..நாளை மார்கழி ஒன்று//
பனிமூட்டத்துக்குள் அமர்ந்துதான் ஃபில்டர் காஃபியை உறிஞ்சுகிறேன். இருந்தும் ஆனந்த ஜோதிதான் ஆரம்பித்துவைக்கிறது மார்கழியை:
பனியில்லாத மார்கழியா
படையில்லாத மன்னவரா
இனிப்பில்லாத முக்கனியா
இசையில்லாத முத்தமிழா...
இப்பாடல் கேட்டதில்லை என்று தான் தோன்றுகிறது. கேட்கத் தந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குவாங்க ஏகாந்தன் ஸார்.. மார்கழி என்றாலே பனி! "இது மார்கழி மாதம்... இது முன்பனிக்காலம்... " என்கிற எல் ஆர் ஈஸ்வரி பாடல் நினைவுக்கு வருகிறது.
பதிலளிநீக்குநன்றி வெங்கட். கேட்கலாம். நல்ல பாடல்.
பதிலளிநீக்குபழங்கால ஸூட்டிங், ரெக்கார்டிங் தியேட்டர் மீண்டும் ஒருமுறை காணத் தந்தமைக்கு நன்றி ஸ்ரீராம்ஜி.
பதிலளிநீக்குஅன்றைய நடிகர்கள் பாடலை சரியாக உச்சரித்து நடித்தார்கள்.
காரணம் அன்று பாடலில் அர்த்தங்கள் இருந்தது.
வாங்க கில்லர்ஜி. நன்றி.
பதிலளிநீக்குஇந்தப்பாடலை இப்போதுதான் கேட்கிறேன். நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குகுரலிலே இளமை
வார்த்தையில் இனிமை
நிலைமையோ தனிமை
வாழ்விலேது வளமை?
பாடல் கேட்டு ரசித்தேன். தேங்காய் முகபாவம் நல்லாத்தான் இருக்கு. ஒருவேளை இது பெண் குரல் பாடலாயிருந்தால் தேங்காய் சேஷ்டை எப்படி இருந்திருக்கும்?
பதிலளிநீக்குபாடலை இப்போதுதான் முதல்முறை கேட்கிறீர்கள் என்பது ஆச்சர்யம் ஏகாந்தன் ஸார்.
பதிலளிநீக்குவரிகள் வசமாக, குரல் (bhaa)பாவமாக, இசை உணர்வாக அமைந்த பாடல்.
நெல்லை.. இந்தப் பாடல் உங்கள் ஹாஸ்டல் காலத்தில் கேட்டிருக்கிறீர்களா?
பதிலளிநீக்குநான் ஒரு அரசாங்க ஒப்புதல் மற்றும் சான்றிதழ் கடன் நிறுவனத்திடமிருந்து கடனளிப்பவர் ஆஸ்டின் பார்ரி. நீங்கள் தனிப்பட்ட அல்லது வணிக கடன் தேவைப்பட்டால், நீங்கள் தாளில் இருக்கிறீர்கள் மற்றும் ஒருங்கிணைப்பு நிதியுதவி தேவைப்படுகிறது. நாங்கள் குறைந்த வட்டி விகிதத்தில் 2% கடன் வழங்குகிறோம். கடன் தேவைக்காக, நாங்கள் முழுமையாக இங்கே இருக்கிறோம் மற்றும் உங்களுடைய நிதி பிரச்சனைகளிலிருந்து உங்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறோம் .. உங்களை மிரட்டுகிறீர்கள், ஏன் மவுனமாக இறந்து போகிறீர்கள்? உங்கள் கடன் விண்ணப்பிக்கவும் பெறவும். எங்களுக்கு மின்னஞ்சல் வழியாக (austinebarry50@gmail.com)
பதிலளிநீக்குபின்னூட்டம் எங்கே? நேற்றைக்கும் இதுபோல் ஆச்சே.
பதிலளிநீக்குநான் ஒரு அரசாங்க ஒப்புதல் மற்றும் சான்றிதழ் கடன் நிறுவனத்திடமிருந்து கடன் வழங்குபவர் டேவிட் ஜான்சன். நீ தனிப்பட்ட அல்லது வணிக கடன் தேவைப்பட்டால், நீ தட்டிக்கேட்க மற்றும் ஒருங்கிணைப்பு நிதி தேவை.நாம் குறைந்த வட்டி விகிதத்தில் 2% கடன் வழங்குகிறோம். கடன் தேவைக்காக, நாங்கள் முழுமையாக இங்கே இருக்கிறோம் மற்றும் உங்களுடைய நிதி பிரச்சனைகளிலிருந்து உங்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறோம் .. உங்களை மிரட்டுகிறீர்கள், ஏன் மவுனமாக இறந்து போகிறீர்கள்? உங்கள் கடன் விண்ணப்பிக்கவும் பெறவும். எங்களுக்கு மின்னஞ்சல் வழியாக (davidjohnsonloanfirm1@gmail.com)
பதிலளிநீக்குIs Thengai imitating MSV?
பதிலளிநீக்குஎன் கல்லூரி காலத்தில் கேட்ட பாடல். அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் சினிமா பாட்டு கேட்பது தண்டனைக்குறிய குற்றம். அதனால் அப்பாவுக்கு தெரியாமல் ஒலி அளவை மிகவும் குறைத்து வைத்து ட்ரான்ஸிஸ்டரோடு காதை ஓட்ட வைத்து பாட்டு கேட்போம். சில சமயம் பக்கத்து வீட்டில் வால்யூம் அதிகம் வைக்கச் சொல்வோம் and vice versa!
பதிலளிநீக்குஅது சரி முதலில் அட்டண்டென்ஸ் போடுகிறவர்களுக்கு பரிசு ஏதாவது உண்டா?
மார்கழி ஃபீவர் ஆரம்பிச்சுட்டுதுபோல!
பதிலளிநீக்குஸ்ரீராமுக்கு வயது ஏறிக் கொண்டே போவது நன்கு தெரிகிறது பழைய நினைவுகளும் பாடல்களும் சாட்சியா
பதிலளிநீக்குபனியில்லாத மார்கழியா
பதிலளிநீக்குபடையில்லாத மன்னவரா
இனிப்பில்லாத முக்கனியா
இசையில்லாத முத்தமிழா...//
//குரலிலே இளமை
வார்த்தையில் இனிமை
நிலைமையோ தனிமை
வாழ்விலேது வளமை?//
இப்படி பின்னூட்டமே கவிதையாய் வந்து கொட்டுதே!!!
ஏகாந்தன் சகோ நீங்களும் ஸ்ரீராமும் போட்டி போட்டு!! வாவ்! துரை சகோ செமையா எழுதுவார்..கவிதை...
ஆ!! கவிப்புயலை...சொல்லாம விட்டதுக்கு ...நீதி நியாயம் நேர்மை, எருமைனு வந்து நிப்பாங்க...ஹா ஹாஹா
கீதா
இந்தப் பாடலை நான் அப்போது கேட்டதுண்டு. நல்ல பாடல். படமும் பார்த்ததுண்டு. வரிகளும் அப்போது நினைவு இப்போது சில பாடல்கள் தான் நினைவில் இருக்கின்றன அதாவது வரிகள். இப்படமும் அத்தனை நினைவில் இல்லை...
பதிலளிநீக்குபாடல் பகிர்விற்கு மிக்க நன்றி.
ஆறு மணிக்கு மூன்று நான்கு நண்பர்கள் ப்ளாக் வாசலில் காத்திருப்பது போலவும் கதவு திறக்காமல் வைத்திருப்பது போலவும் ஒரு குற்ற உணர்வு! அதுதான்... //
பதிலளிநீக்குஅதெல்லாம் ஒன்னுமில்லை ஸ்ரீராம்...நாங்க ஜாலியா நிக்கிறோம் அவ்வளவுதான்...
பாருங்க நண்பர் துரை செலவராஜு நேற்றைய பதிவில் 15/12? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.//
ஹா ஹா ஆனா நேத்து வீடியோ எதுவும் இல்லையே...ஓ !! நம்பியார் படம் எல்லாம் போட்டதற்கா....
கீதா
@ கீதா:
பதிலளிநீக்கு//..இப்படி பின்னூட்டமே கவிதையாய் வந்து கொட்டுதே..//
முதலில் வரும் ‘பனியில்லாத மார்கழியா..’ ஆனந்தஜோதி படத்தில் எம்எஸ்வி/டிகேஆர் இசையில் டிஎம்எஸ்/சுசீலா ரீங்கரித்த பாடல். நன்றி கண்ணதாசனுக்கு. கேட்டிருக்கிறீர்களில்லையா இந்தப் பாட்டை?
நண்பர் திரு. ஏகாந்தன் அவர்களுக்கு....
நீக்குபாடல் எழுதியவர், பாடியவர்கள், இசையமைத்தவர்கள் பெயர்களை அழகாக சொன்னமைக்கு மிக்க நன்றி.
சிலரைப்போல் வாயசைத்த பாவத்திற்காக எம்ஜிஆர் பாடல் என்று சொல்லவில்லை நன்றி.
பாவம்-அபிநயம் (வேறு ஏதும் நினைக்க வேண்டாம்)
மனதுக்கு இனிமை தரும் பாடல்...
பதிலளிநீக்கு//ஆ.... வண்ணவிழி மலராதோ... வாய்திறந்து பேசாதோ... பள்ளிகொள்ள விடமாட்டேன்... என்னுயிரே எழுந்தென்னைப் பார்... பார்... பார்..."/// இக்கட்டம் நானும் ரேடியோவில் முன்பு கேட்டிருக்கிறேன்ன்...
இதில்தான் வருமோ...
“வெஞ்சிறையில் போட்டாலும் வாழ் முனையில் கேட்டாலும்.. உடலன்றி உள்ளமுன்னை நாடாது”... எனும் வசனமும்..?..
துரை அண்ணன்.. என்னாச்சு இப்போதெல்லாம் 3 ர்ட் பிளேசிலயே நிற்கிறீங்க:).. பூஸ்ட் குடிச்சிட்டு நாளைக்கு வேகமா ஓடி வாங்கோ:).. ஹையோ நாளைக்குச் சனிக்கிழமை வேறு:).. தேம்ஸ் பக்கமிருந்து குட்டித்தவளை:).. பெரியம்மாத் தவளை ஏதும் பாயகூடும்:) எதுக்கும் ஜாக்க்க்க்க்க்ர்ர்ர்ர்தை:).
பதிலளிநீக்கு@ கம்பபாரதி athira said...
பதிலளிநீக்கு>>> துரை அண்ணன்.. என்னாச்சு இப்போதெல்லாம் 3 ர்ட் பிளேசிலயே நிற்கிறீங்க:).. <<<
இன்னிக்கு ஸ்ரீராம் சீக்கிரமா முழிச்சாலும் அவரோட கம்பியூட்டர் தூங்கிடுச்சு...
நான் தான் சொல்லணும்..ன்னு இல்லை..
யார் வேணாலும் முதல் ஆளா வரவேற்கலாம்..
>>> பூஸ்ட் குடிச்சிட்டு நாளைக்கு வேகமா ஓடி வாங்கோ:).. <<<
நான் பூஸ்ட் எல்லாம் குடிக்கிறதில்லை..
விடியற்காலையில் காஃபி!.. Coffee w Milk..
அது தான் இஷ்டம்!...
அப்புறம் அந்தக் குட்டித் தவளை - இன்னும் தண்ணியில குதிக்கலையா!?..
‘பனியில்லாத மார்கழியா..’ ஆனந்தஜோதி படத்தில் எம்எஸ்வி/டிகேஆர் இசையில் டிஎம்எஸ்/சுசீலா ரீங்கரித்த பாடல். நன்றி கண்ணதாசனுக்கு. கேட்டிருக்கிறீர்களில்லையா இந்தப் பாட்டை?//
பதிலளிநீக்குஆஹா! ஏகாந்தன் சகோ! இப்படி எடுத்துக் கொடுத்தப்புறம்தான் நினைவுக்கு எட்டுகிறது. அருமையான பாடல் அதுவும். அதை ஏன் கேக்கறீங்க எனக்கு சிகே ரொம்ப புவர். (ஜிகே அதைவிட புவர்!!) ஸோ பாட்டு கேட்டிருப்பேன் ஆனால் வரிகள் டக்கென்று பிடிபடாது. வேறொன்றுமில்லை வீட்டில், பானுக்கா சொல்லியிருப்பது போல் திரைப்படப் பாடல் கேட்டால் மாபெரும் குற்றம்...படிக்கிற பொண்ணுக்கு என்னதுஇது என்று அதனால் வீட்டில் பெரியவர்கள் இல்லாத போது எங்கள் கஸினில் மூத்தவள் இலங்கை வானொலி அலைவரிசை வைப்பாள் அப்போது நாங்கள் கேட்டு என்னை ஆட விட்டு வேடிக்கைபார்த்து சிரிப்பது....அப்புறம் பெரியவர்கள் வருவதைச் சொல்ல ஒரு பொடிசு திண்ணையில் உட்கார்ந்திருக்கும் அதற்கு நாங்கள் எத்தனை லஞ்சம் கொடுக்கணும் அதற்கு நாங்கள் படும் பாடு என்பது வேறு கதை...லஞ்சம் கொடுத்தாலும் அதற்குக் கொடுத்தது பத்தவில்லை என்றால் பத்தவைத்துவிடும் அபாயமும் நடக்கும். ரேடியோ டிஸ்கனெக்ட் செய்யப்படும். எங்கள் ப்ரோக்ரஸ் மார்க் கேட்கப்படும். குறிப்பாக எனது மார்க். ஏனென்றால் மற்ற எல்லோரும் ரேங்க் ஹோல்டர்ஸ்!!!! நான் ஏதேனும் இரண்டில் ஜஸ்ட் பாஸ் குறிப்பாக கணக்கு, அறிவியல். எனவே எனக்கு அதிர்வேட்டு முதுகில் வைக்கப்படும்!!!! என் பெரிய மாமா ஹெட்மாஸ்டர். சின்னமாமாவும் டீச்சர்...கணக்கில் புலி!!! ட்யூஷன் வேறு,,,பெரிய மாமா வேறு ட்யூஷன் எடுப்பார் வீட்டில் அதில் ஆ ஆ வேண்டாம் அப்புறம் என் வண்டவாளம் எல்லாம் இங்கு விரியும் ஹா ஹா ஹா ஹா..பாடப்புத்தகத்திற்கு இடையில் வைத்து கதைபுக் படித்தது அதை ரேங்க் ஹோல்டர்ஸ் போட்டுக் கொடுப்பது. எக்ஸ்ட்ராகரிக்குலர்ஸுக்கு 144....நான் கள்ளத்தனமாக வீட்டுக்குத் தெரியாமல் எல்லா போட்டிகளிலும் கலந்து கொள்வது என்று...ஹிஹிஹி..அதனால கேட்டதும் பல மறந்துவிட்டது டக்கென்று எது என்றெல்லாம் நினைவுக்கு வருவதில்லை. ஒரு சில மட்டும் நினைவுக்கு டக்கென்று வரும் ஆனால் விளக்கமாக எல்லாம் சொல்லத் தெரியாது... அதுவும் அது கல்லூரிக்காலத்தில் அப்பாடல்களைக் கேட்டதால்..(வீட்டில் திருட்துத்தனமாக), பேருந்து நிலையத்தில் அப்புறம் போட்டிகளுக்கு என்று தோழிகளுடன்
...
கீதா
நெல்லைத்தமிழன்.. என்ன ஆயிற்று உங்கள் பின்னூட்டம்? அதைப் பார்த்துதானே பதில் கொடுத்தேன்? டெலிட் செய்தால் அந்த மெசேஜ் கூட அங்கு இருக்குமே...
பதிலளிநீக்குவாங்க மிடில்க்ளாஸ்மாதவி... தேங்காய் எம் எஸ் வியை இமிடேட் செய்வதாய்த் தெரியவில்லை.
பதிலளிநீக்குவாங்க பானுமதி மேடம்..
பதிலளிநீக்கு//அது சரி முதலில் அட்டண்டென்ஸ் போடுகிறவர்களுக்கு பரிசு ஏதாவது உண்டா?//
ஆர் கே நகர் தேர்தல் செய்தி பார்த்து இப்படிக் கேட்டுட்டீங்க போல... அங்கதான் இலவசம் எல்லாம்!!!!!
வாங்க ராஜி... இந்தக் குளிருக்கு ஃபீவர் வர்ற மாதிரிதான் இருக்கு!!
பதிலளிநீக்குவாங்க ஜி எம் பி ஸார்.. என்ன வயது ஏறினாலும் உங்களை எல்லாம் ஓவர்டேக் செய்ய முடியாது!!
பதிலளிநீக்குவாங்க கீதா ரெங்கன்... மீள் வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்குவாங்க துளஸிஜி. ரசனைக்கு நன்றி.
பதிலளிநீக்குமீள்வருகைக்கு நன்றி கில்லர்ஜி. நான் அப்படிச் சொல்லமாட்டேன் என்று நினைக்கிறேன்!!! சொல்லியிருக்கேனோ?
பதிலளிநீக்குஹையோ நாளைக்குச் சனிக்கிழமை வேறு:).. தேம்ஸ் பக்கமிருந்து குட்டித்தவளை:).. பெரியம்மாத் தவளை ஏதும் பாயகூடும்:) எதுக்கும் ஜாக்க்க்க்க்க்ர்ர்ர்ர்தை:).//
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஹா இதுதான் சைக்கிள் கேப்பில் புகுந்துக் கொண்டு பூசார்.. ஜெஸியை பெரியம்மா என்பது!!! பாருங்க ஜெஸி கர்ர்ர்ர்ர்ர் நு வருவாங்க...பூஸாரைத் துரத்திக் கொண்டு
கீதா
வாங்க அதிரா... நான் சொல்லி இருக்கும் பாடல் 'தாயில்லாமல் நானில்லை' படப் பாடல்.
பதிலளிநீக்குமீள்வருகைக்கு நன்றி துரை செல்வராஜூ ஸார்.
பதிலளிநீக்குபடம் பார்த்த நினைவில்லை!
பதிலளிநீக்குபாடல் நன்றாக உள்ளது
பதிலளிநீக்குபாடல் நன்றாக உள்ளது
பதிலளிநீக்குnooo நான் ஒத்துக்க மாட்டேன் ..யாரோ சதிசெஞ்சு சரியா 12:30ன்மணிக்கு என்னை தூங்க வச்சிட்டாங்க :)
பதிலளிநீக்கு@ துரை அண்ணா :))))) அதே அதே அந்த சுண்டல் வாங்குற சுகமே தாய் முதல் ஆளா வந்து :)
பதிலளிநீக்குரெண்டோ விண்டோ திறந்து வச்சி டாஷ்போர்ட் எங்கள் பிளாக் மாறிமாறி வந்து refresh செஞ்சு மூச்சு வாங்கி முதல் இடம் பிடிக்கிறது தனி சந்தோஷம்
நன்றி புலவர் ஐயா...
பதிலளிநீக்குஎன்ன தவம் செய்தோம், இப்படி நண்பர்கள் அமைய? நன்றி ஏஞ்சல், நன்றி துரை செல்வராஜூ ஸார், நன்றி கீதா, நன்றி அதிரா.
பதிலளிநீக்கு/தயவு செய்து காட்சியைப் பார்க்காமல் பாடலை மட்டும் கேட்க//
பதிலளிநீக்குஇப்படி சொன்னா நாங்க கியூரியாசிட்டில ப்பார்ப்போம் :)
அதுல வர ஹீரோ விஜயகுமார் ஹீரோயின் யார் ?
பின்னணி பாடிய spb குரல் எப்பவும் எத்த்னைமுறைகேட்டாலும் அலுக்காது
@ கில்லர்ஜி:
பதிலளிநீக்கு//.. வாயசைத்த பாவத்திற்காக எம்ஜிஆர் பாடல் என்று சொல்லவில்லை..//
சிறுவயதிலிருந்தே படம் குறைவாகப் பார்த்து, பாடல் நிறைய - ஆல் இண்டியா ரேடியோ, ரேடியோ சிலோனில் கேட்டு, ஆஹா..எப்பேர்ப்பட்ட குரல், யார் பாடியது, இப்படியெல்லாம் யார் எழுதியது என்றெல்லாம் மயங்கியவன் நான். பொதுவாகவே, ஹீரோ, ஹீரோயினுடன் நான் மனதில் பாடல்களைத் தொடுத்துக்கொள்பவன் அல்ல. அரிதாரம் பூசிய முகங்கள் அவ்வளவாக என்னைஒன்றும் செய்ததில்லை!
@ கீதா:
பதிலளிநீக்கு//..ரேடியோ டிஸ்கனெக்ட் செய்யப்படும். எங்கள் ப்ரோக்ரஸ் மார்க் கேட்கப்படும். குறிப்பாக எனது மார்க்... எனவே எனக்கு அதிர்வேட்டு முதுகில் வைக்கப்படும்!..//
இப்படி ஒரு அடாவடி சர்வாதிகார ஆட்சியில் இளமைக்காலத்தைக் கழித்திருக்கிறீர்கள். இருந்தும் விடாது பாட்டு, போட்டி என்றெல்லாம் வேறு! ‘புரட்சி ரசிகை’, ’புரட்சிக்காரிகை’ என்ற பட்டங்கள் எதுவும் யாரும் உங்களுக்கு கொடுக்காமல் எப்படி இருந்தார்கள்? மேலிடத்து அனுமதி மறுக்கப்பட்டதோ அதற்கும்?
அருமையான பாடல்
பதிலளிநீக்குபகிர்ந்தமைக்குப் பாராட்டுகள்