சனி, 23 டிசம்பர், 2017

மரிக்காத மனிதம்




1)  மாற்றி யோசித்த மாற்றுத் திறனாளியின் புதுமை முயற்சி. 
இந்தியாவிலேயே முதல்முறையாக பைக் டாக்சி சர்வீஸ்.






2)  தெய்வத்தந்தை.  இதில் இவர் குடியிருக்கும் தெருக்காரர்களை கையெடுத்து கும்பிடவேண்டும் என்கிறார் ஏழை எளியவர்கள் என்றாலும் மனதால் அவர்கள் பெரும் பணக்காரர்கள்.









ஒரு சின்ன பிரச்னை வந்தால் கூட தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் மாய்த்துக்கொள்ளும் கோழையான இந்த உலகத்தில், மகளுக்காக சகலத்தையும் இழந்தாலும் மறந்தாலும் துறந்தாலும் இன்னும் எத்தனை சோதனை வந்தாலும் மகளுக்காக சந்திக்க துணிந்த பாசக்கார தந்தையாக வெங்கடேசன் மனதில் தனித்து நிற்கிறார்.யாரிடம் போவது எவரிடம் கேட்பது என்ற திக்கு தெரியாமல் இருக்கும் இவருக்கு உதவவேண்டும் என்பவர்கள் தொடர்பு கொள்ளவேண்டிய எண்:9941878329.



3)  மதுரை எஸ்எஸ் காலனியில் வசிப்பவர் அப்பா இல்லை அம்மா தனலட்சுமி மட்டும்தான். அம்மாவை பிரிந்துதான் சந்தோஷம் என்றால் அது வேண்டாம் என்பதற்க்காக வேறு ஊருக்கு மாற்றலாக மறுத்து உயர்பதவியை விட்டவர்.








யாருமற்ற நிலையில் அனாதை பிணம் என்று ஓன்று கூட மதுரையில் புதைக்கக்கூடாது என்பதற்காக அரும்பாடுபட்டு வருபவர்.இதானல் ஆதரவற்ற பிணத்தை யார் பார்த்தாலும் 'கூப்பிடு மணிகண்டனை' என்று சொல்லுமளவிற்கு பிரபலமாகியிருப்பவர்.



4)  இப்படியும் ஒரு தன்னம்பிக்கை.  









"ஒரு குடும்பத்தை போட்டோ எடுத்து அடுத்து இரண்டு நிமிடத்தில் பிரிண்ட் போட்டு கொடுத்து முப்பது ரூபாய் வாங்குகிறேன்.எதற்கு முப்பது ரூபாய் என்று பேரம் பேசுபர்களும் இருக்கிறார்கள், என்கிட்ட ஐம்பாதயிரம் ரூபாய் போன் இருக்கு அதுலேயே நாங்க எடுத்துக்குவோம் நீ போம்மா அப்பால என்று அலட்சியப்படுத்தி துரத்துபவர்களும் இருக்கிறார்கள்,இந்த வயதில் இவ்வளவு எடையை துாக்கிக் கொண்டு படம் எடுத்து பிழைக்குதே இந்த அம்மா என்று இதற்காகவே படம் எடுத்து முப்பது ரூபாய் கேட்ட இடத்தில் ஐம்பது ரூபாய் கொடுக்கும் புண்ணியவான்களும் இருக்கிறார்கள்.



சனி ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் பிழைப்பு நல்லா ஓடும் மற்ற நாட்களில் சுமராகத்தான் இருக்கும் சில நாட்கள் ஒரு படம் கூட எடுக்காமல் சும்மாவே சுற்றிவிட்டு போகவேண்டியிருக்கும் இருந்தாலும் இந்த தொழில் எனக்கு பிடிச்சிருக்கு...."  -  லட்சுமி அக்கா.



5)  தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை பூர்வீகமாக கொண்ட இவர்களது மகள் சுருதி யசோதன், 15. இவர், லண்டன், கேம்பிரிட்ஜ் பகுதியில் உள்ள, 'தி பெர்ஸ்' பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வருகிறார்.   மனவளர்ச்சி குன்றிய பள்ளி மாணவர்கள் சுயதொழில் செய்ய, மிதியடி தயாரிக்கும் மிஷினை வழங்கி இருக்கிறார் இவர்.  மேலும் பல சமூகசேவைகளும் செய்துவருகிறார்.







6)  வீட்டில் தாயார் மனைவி மற்றும் உறவினர்கள் இருக்கின்றனர் எல்லோருமே சமையலில் உதவுவதால் சமையல் கூலி என்று தனியாக செலவு இல்லை மேலும் நானே எனது மோட்டார் சைக்கிளில் எல்லா இடங்களுக்கும் கொண்டு போய்க்கொடுப்பதால் போக்குவரத்து செலவும் டூவிலருக்கான பெட்ரோல் செலவு மட்டுமே ,ஆகவே இதன் மிச்சங்கள் எல்லாம் சாப்பாடு செலவை குறைவாக்குகின்றன.இப்போதும் முப்பது ரூபாய்க்கு என்னால் முழுச்சாப்பாடு கொடுக்கமுடியும் சாப்பாடும் நாங்கள் என்ன சாப்பிடுகிறோமே அதே தரமான சாப்பாடுதான் இன்னும் சொல்வதானால் அவர்களுக்கான சாப்பாட்டில்தான் எங்கள் சாப்பாடு இருக்கிறது.







சைவம்,அசைவம் எது கேட்டாலும் கொடுத்துவிடுவேன் வாரத்தில் ஏழு நாளும் என் வண்டி ஒடிக்கிட்டேதான் இருக்கும், எனக்கு ஆர்டரே இல்லைன்னாலும் அன்னதானம் நடக்கும் இடத்திற்கு போய் அங்கே என்னால் முடிந்த சேவையை செய்துவிட்டு வருவேன்.  


காரணம்ஆதரவற்றவர்களுக்கு உதவுவது அதுவும் அன்னதானம் மூலமாக உதவுவது என்பது எனக்கு மிகவும் பிடித்தவிஷயம்.இதற்காக ஒரு நாளைக்கு நுாறு கிலோ மீட்டருக்கு மேல் அலைகிறேமே என்ற அலுப்பெல்லாம் கிடையாது 'கனி உன் சாப்பாடு நல்லாயிருந்துச்சுப்பா' என்று பெரியவர்கள் என் கன்னம் தடவி சொல்லும் அந்த ஒற்றைச் சொல்லுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் அலையலாம், உழைக்கலாம் என்று சொல்லும் கனியிடம் பேசுவதற்க்கான எண்:8608127024.


29 கருத்துகள்:

  1. இனிய சனிக்கிழமை வணக்கம் :)

    பதிலளிநீக்கு
  2. இங்கேயும் மனிதம் நிறைந்த மனிதர்கள்...

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் ஸ்ரீராம்... வணக்கம் PC ஏஞ்சல்..

    பதிலளிநீக்கு
  4. காலை வணக்கம் துரை அண்ணா .வணக்கம் ஸ்ரீராம்

    பதிலளிநீக்கு
  5. காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  6. நன்றி ஏஞ்சல். சற்றே தாமதம் நான். வாக்களித்து, லிங்க் இணைத்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
  7. பாராட்டுக்குரிய மனிதர்கள். பகிர்வுக்கு நன்றி.

    வித்தியாசமான துறையைத் தேர்ந்தெடுத்து செயல்படுகிறார் லட்சுமி அக்கா.

    முதல் செய்திக்கான இணைப்பு கொடுக்கப்படவில்லை. கவனியுங்கள்.

    பதிலளிநீக்கு
  8. போற்றுதலுக்கு உரியவர்கள்
    போற்றுவோம்
    தம=1

    பதிலளிநீக்கு
  9. //முதல் செய்திக்கான இணைப்பு கொடுக்கப்படவில்லை. கவனியுங்கள். //

    நன்றி ராமலக்ஷ்மி. கொடுத்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
  10. மணிகண்டன் மாமனிதரே... வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
  11. புதுமையாக யோசித்திருக்கிறார் முகமது கடாபி. தொழில் விருத்தியடைய வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
  12. புகைப்படம் எடுத்துப் பிழைக்கும் பெண்மணியைத் தவிர மற்றவற்றைப் படித்ததில்லை. வந்து படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  14. அனைவரையும் வாழ்த்தும் விதமாக வோட் போட்டேன்:).. _()_

    பதிலளிநீக்கு
  15. அனைவரின் உழைப்புக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள். மணி கண்டன்
    மணியான மனிதர். வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  16. அனைத்தும் நல்ல செய்திகள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  17. இன்னும் படிக்கலை. படிச்சுட்டுச் சொல்றேன். இன்னிக்கு நான் முதலே கமென்ட முடியுமானு பார்க்கறதுக்காக வந்தேன்! :) ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நாட்கள் கழிச்சுக் காலையில் கணினியில் உட்கார்ந்திருக்கேன். :)

    பதிலளிநீக்கு
  18. இன்னும் ஒண்ணும் காணோமே! ஶ்ரீராம்! ஞாயிற்றுக் கிழமை என்பதால் தூக்கமா? :))))

    பதிலளிநீக்கு
  19. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சதி! போங்கு ஆட்டம்!

    பதிலளிநீக்கு
  20. வாட்சப்பில் தான்னு நினைச்சா இங்கேயும் நாம வந்தா உடனே எல்லோரும் ஓடி ஒளிஞ்சுக்கறாங்கப்பா! :))))

    பதிலளிநீக்கு
  21. akkaa :) geethaa akkaa :) இனிய ஞாயிறு வணக்கம் :)

    பதிலளிநீக்கு
  22. வாங்க ஏஞ்சலின், காலை வணக்கம்! :)

    பதிலளிநீக்கு
  23. முதல் இரண்டும் படிச்சேன். மற்றவை புதுசு! எல்லோரும் நல்லவர்களாகவே இருந்துட்டால்!

    பதிலளிநீக்கு
  24. நல்லவர்கள் திறமைசாலிகள் மனிதத்தோடு எல்லோரும் வாழும் இடத்தில் தான் இருக்கிறோம் என்று மனம் நெகிழ்கிறது

    பதிலளிநீக்கு
  25. அத்தனையும் நல்ல செய்திகள். பைக் டாக்ஸி செர்வீஸ் மற்றும் பாசக்காரதந்தைக்கான எண்களைக் குறித்தும் கொண்டுவிட்டேன். கனி அவர்களின் எண்ணையும்...

    லட்சுமி அக்கா சூப்பர்!!!

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!