1) ".........குரூப் - 1 தேர்வு எழுதி, 2013ல், டி.எஸ்.பி.,யானேன்.சிறுவனாக இருந்த போது, கிராம குழந்தைகள் பலர், ஏழ்மையால், உயர்கல்வி கற்க முடியாமல் பாதியில் நின்றுள்ளனர். பின்தங்கியுள்ள கிராம வளர்ச்சிக்கு, என்னால் இயன்ற உதவியை செய்ய முடிவு செய்தேன். இதற்காக, நண்பர்களை ஒன்றிணைத்து, குறிஞ்சி நண்பர்கள் குழு துவங்கினேன்...." சேலம் மாவட்டம், மேட்டூர், பி.என்.பட்டி பேரூராட்சி, சின்னகாவூரைச் சேர்ந்தவர் சங்கு, 44. ஊட்டி புறநகர், டி.எஸ்.பி.,யாக பணிபுரிகிறார்.
2) திருச்சியிலும் ஒரு அன்புச்சுவர்.
3) தொழிலாக அல்ல, சேவையாக.... வீடு தேடி வரும் (முதியோர்) மருத்துவம். மரு. வி எஸ் நடராசன் அவர்கள். அவர்பற்றி அறிந்து கொள்ள...
4) விளக்கம் தேவையா என்ன? வாட்ஸாப்பில் வந்தது.
தமிழ்மணம்.
வாழ்க..
பதிலளிநீக்குஇந்த நாள் அனைவருக்கும் இனிய நாளாக அமையட்டும் :)
பதிலளிநீக்குyesterday here sevaii only
பதிலளிநீக்குthengai sevai, puli sevai, dahi sevai. will come afterwards
பதிலளிநீக்குgrrrrrrrrrrrrrr even then I came third only! :)
பதிலளிநீக்குகாலைவணக்கம் துரை அண்ணா :) அண்ட் கீதா அக்கா :) கர்ர்ர்ர்ர் :) இது ஸ்ரீராமுக்கு
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், ஏஞ்சல் மற்றும் கீதா அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் ஏஞ்சல். மீண்டும் பழைய பிரச்னை. தளத்தை முக நூலிலிருந்து திறந்து கொண்டு வருகிறேன். தம காணோம்... லிங்க் ப்ளீஸ்....
பதிலளிநீக்குபதிவில் சொல்லப்பட்டுள்ள
பதிலளிநீக்குநல்ல உள்ளங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்...
இனிய காலை வணக்கம் கீதா அக்கா,. தளம் திறப்பதிலும், தம சப்மிட் செய்வதிலும் லிங்க் எடுப்பதிலும் பிரச்னை.
பதிலளிநீக்குகாலை வணக்கம்.
பதிலளிநீக்குநல்லுள்ளம் கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.
ஏஞ்சல்... அதிரா ஊருக்குப் போயிருக்கிறாரோ... இரண்டு நாட்களாய் காணோமே...
பதிலளிநீக்குhttp://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1481153
பதிலளிநீக்குநன்றி காலை வணக்கம் வெங்கட்.
பதிலளிநீக்குஇப்போ லிங்க் வந்ததா
பதிலளிநீக்குநன்றி ஏஞ்சல். வாக்களித்து, லிங்க் இணைத்து விட்டேன்.
பதிலளிநீக்குஅவங்க இப்போ பிஸியாம் அதான் காணோம் அதோட எங்க ஏரியா ஸ்நோவெல்லாம் அங்கே ஸ்காட்லாண்டில் லாண்ட் ஆகி :) அதான் காணோம்போல
பதிலளிநீக்குஅன்புச் சுவர் நல்ல செயல். கடைசி செய்தி படித்த செய்தி.
பதிலளிநீக்குஅனைத்தும் அருமையான செய்திகள் ..ரொம்ம் ம்ம் ப பிடிச்சது அன்புசுவர் ..
பதிலளிநீக்குஇங்கே அன்பு சுவர் மாதிரி ஷூ பாக்சில் பிள்ளைங்க 5 பவுண்ட் வேல்யூக்கு மப்ளர் க்ளவுஸ் சாக்ஸ் இப்படி போட்டு ஸ்கூலில் குடுப்பாங்க அதை பள்ளிக்கூடம் வீடில்லாதவங்களுக்கு விநியோகம் செய்யும் .நாம் பயன்படுத்த முடியாத எத்தனையோ பொருட்கள் வீணாகாமல் ரீயூஸ் செய்றது ரொம்ப நல்லது
பதிலளிநீக்குஏஞ்சல்...
பதிலளிநீக்கு//நாம் பயன்படுத்த முடியாத எத்தனையோ பொருட்கள் வீணாகாமல் ரீயூஸ் செய்றது ரொம்ப நல்லது //
ஏற்கெனவே நெல்லையிலும் இன்னொரு ஊரிலும் இது போல அன்புச்சுவர் தொடங்கப்பட்டு நடந்து வருவது குறித்து ஏற்கெனவே பாஸிட்டிவ் செய்திகளில் தந்து இருக்கிறோம். நல்ல சிஸ்டம். வேண்டும் என்பவர்களுக்கு கொடுப்பதை விட, அவர்களாக எடுத்துக் கொள்வது போல வைப்பது. ஏனென்றால் நாமாகக் கேட்டால் நான் என்ன இளப்பமா என்பது பொழப்பு பார்ப்பவர்களை சந்தித்திருக்கிறேன்.
உண்மையான வார்த்தை - ஸ்ரீராம்..
பதிலளிநீக்குசென்ற வருடத்திற்கு முன்பு விடுமுறையின்போது என்னிடமிருந்த மளிகைப் பொருட்களை நண்பர் ஒருவரை எடுத்துக் கொள்ளும்படி சொன்னேன்.. கௌரவப் பிரச்சினையாக அவர் மறுத்து விட்டார்..
இங்கே அன்புச்சுவர் இதெல்லாம் கிடையாது என்பதைச் சொல்லியாக வேண்டும்...
// உண்மையான வார்த்தை - ஸ்ரீராம்.....//
பதிலளிநீக்குதுரை செல்வராஜூ ஸார்..
என் அப்பா காலமான பிறகு அவர் வாங்கி வைத்திருந்து ஆனால் உபயோகிக்காத ஒரு கதர் ஜிப்பாவை தெரிந்த ஆட்டோக்காரர் குளிர் குளிர் என்று சொன்னபோது கொடுத்தேன். காலமானவர்கள் துணியை வாங்குவதில்லை என்றார். அம்மா மறைந்தபின் அவர் நட்சத்திரத்தில் (திவசம் கொடுக்கும்போது அல்ல) அப்பா ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு பத்து பொட்டலம் வாங்கி ஏழைகளுக்குத் தருவார். அதில் இருவர், வாங்கியதை அன்று மாலையே திருப்பிக் கொடுத்து விட்டார்கள். அப்போது அப்பாவுக்கு அதில் வருத்தம். சங்கடமான கணங்கள்.
//நான் என்ன இளப்பமா என்பது பொழப்பு பார்ப்பவர்களை சந்தித்திருக்கிறேன்.//
பதிலளிநீக்குமுந்தைய கமெண்ட்டில் பொழப்பு என்று தவறாக வந்திருக்கிறது. 'என்பது போல பார்ப்பவர்களை' என்று வந்திருக்கவேண்டும். மன்னிக்கவும்.
அனைத்துச் செய்திகளும் பாராட்டும்படி இருந்தன.
பதிலளிநீக்குநல்ல உள்ளங்கள் வாழ்க!
பதிலளிநீக்குபோற்றுதலுக்கு உரியவர்கள்
பதிலளிநீக்குபோற்றுவோம்
தம+1
மனிதம் மரித்துப் போகவில்லை.
பதிலளிநீக்குஅன்புச் சுவர் படித்ததும் சில ஹோட்டல்களில் சுவரில் எழுதி வைத்து ( கரும்பலகையில்) பிறர் உபயோகிக்கக் கொடுக்கும் முறை பற்றி படித்தது நினைவுக்கு வருகிறது
பதிலளிநீக்குடாக்டர் நடராஜனும், அருணாசலமும் அறிந்தது. :) மற்றவைக்கு நன்றி. நாங்க யு.எஸ். போகையில் எல்லாம் மளிகை சாமான்களைத் தெரிந்தவர்களுக்குக் கொடுத்து விட்டுத் தான் போவோம். தடை சொல்லாமல் நல்ல ஸ்திதியில் இருப்பவர்களே வாங்கிக் கொண்டிருக்கின்றனர். சாப்பாடு மிஞ்சினாலும் இங்கே உள்ள பாதுகாப்புக் காவலர்களில் யார் இருக்காங்களோ அவங்களைக் கூப்பிட்டுக் கொடுத்துடுவோம். நேத்திக்குக் கூட சேவை, மோர்க்குழம்பு கொஞ்சம் மிச்சம். உடனே கூப்பிட்டுக் கொடுத்துட்டோம். மதியம் எனில் வீட்டு வேலை செய்யும் பெண் வந்து வாங்கிச் செல்வாள்.
பதிலளிநீக்குகாலம்பர ஃப்ர்ஷ்டு வர அவசரத்தில் தொடர க்ளிக் செய்யவே இல்லையா, கமென்டே வரலை. என்னடா இதுனு ஆச்சரியப்பட்டு வந்து பார்த்தா, ஹிஹிஹி, அவசி.
பதிலளிநீக்குசில முன்னரே படித்தவை. இருப்பினும் உங்கள் தளத்தில் உங்கள் பாணியில் படிக்கும்போது இன்னும் சிறப்புதான்.
பதிலளிநீக்குமனிதம் காப்பவர்கள் வாழ்த்துக்கள் தாங்குபவர்கள்.
பதிலளிநீக்குமனிதாபிமான அன்பர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்
பதிலளிநீக்குஅன்புச் சுவர் மற்றும் டி எஸ் பி சங்கு வாவ்!!!
பதிலளிநீக்குகீதா
சுனாமியில் பெற்றோரை இழந்த குழந்தைகளை எஸ் ஐ ஆக்கிய ஆசிரியர் மாரிமுத்து மற்றும் முதியோர் மருத்துவத்தை வீடு வரை சென்று சேவை செய்யும் மருத்துவர் நடராஜனுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...ஏற்கனவே ஒரு மருத்துவரைப் பற்றி வாசித்த நினைவு இங்கா அல்லது ஏதேனும் செய்தியிலா என்று தெரியவில்லை. வெளிநாட்டில் இருப்பவர்களின் பெற்றோர் இங்கு தனியாக இருப்பதால் மருத்துவர் ஒருவர் குழுவாகச் செயல்படுவதைப் பற்றி..வருடம் இவ்வளவு என்று கொடுத்துவிட்டால் அக்குழு நிமிடத்தில் வீடு வரை சென்று வீடியோ கான்ஃப்ரன்ஸில் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு இங்கு அவர்கள் பெற்றோருக்கு என்ன சிகிச்சை அளிக்கபப்டுகிறது என்பதைக் காட்டி பேசி மருத்துவம் அளித்து வருவதாக வாசித்த நினைவு. திருவான்மியூரில் நடந்து வந்ததாகவும், நுங்கம்ப்பாக்கம் வரை விரிவாக்கப்போவதாகவும் அப்போது வாசித்த நினைவு...இது வாசித்து இரண்டு வருடங்கள் ஆகியிருக்கும்...அதே மருத்துவர் தானோ என்று எண்ண வைக்கிறது...
பதிலளிநீக்குகீதா
ஆமாம் ஸ்ரீராம் ஒரு சிலர் வாங்கிக் கொள்வதில்லை.
பதிலளிநீக்குஅன்புச் சுவர் போல இங்கு பெஸன்ட் நகரில் பல்மருத்துவர் ஒருவர் உணவு, உடைகள் எல்லாம் வாங்கி வைத்துவிடுவார் யாருக்கு என்ன பயனோ எடுத்துச் செல்லலாம்..உணவுப் பொருட்கள் ஃப்ரிட்ஜில்..
இதுவும் உங்கள் பாசிட்டிவ் செய்தியில் வந்ததே...
கீதா
//அன்புச் சுவர் போல இங்கு பெஸன்ட் நகரில் பல்மருத்துவர் ஒருவர் உணவு, உடைகள் எல்லாம் வாங்கி வைத்துவிடுவார் யாருக்கு என்ன பயனோ எடுத்துச் செல்லலாம்..உணவுப் பொருட்கள் ஃப்ரிட்ஜில்..
பதிலளிநீக்குஇதுவும் உங்கள் பாசிட்டிவ் செய்தியில் வந்ததே...//
ஆம் கீதா. நினைவிருக்கிறது.
சிறப்பானவர்கள் எல்லோரும்
பதிலளிநீக்குபலரைச் சிந்திக்கச் செய்வார்கள்
ஆனால்,
நாமும் சிந்திக்க வேண்டுமே!
இந்தப் புத்தாண்டு இனிய புத்தாண்டாய்
எந்த உறவுக்கும் அமைய வேண்டுமென
அந்த இறைவனை வேண்டி நிற்கிறேன்!
நல்ல செய்திகள். பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குஎங்கள் ப்ளாக் ஆசிரியர் குழுவினருக்கும் வாசகர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!