சனி, 9 டிசம்பர், 2017

ரவி, சம்பத் என்று இரண்டு போலீஸ் அதிகாரிகள்..






1) தாங்கள் செய்யும் பிசினஸ் மூலமே ஒரு சிறிய சமூக உதவி செய்யும் மணிப்பூர் தம்பதி.






2)  ரவி என்னும் போலீஸ் அதிகாரியும், சம்பத் என்னும் கான்ஸ்டபிள் உதவியுடன் தகுந்த நேரத்தில் புத்திசாலித்தனமாக செயல்பட்டு 47 வயதான விகாஸ் உயிரைக் காப்பாற்றியிருக்கும் செயல்.






3)  எல்லோருக்கும் நிம்மதி என்றாலும் சசிகலாவை குடும்பத்துடன் சேர்த்து வைக்க ரொம்பவே பாடுபட்ட ஈரநெஞ்சம் மகேந்திரனுக்கு மட்டும் இன்று காலைதான் கூடுதல் நிம்மதி மற்றும் சந்தோஷம் அதற்கு காரணம் ஜானகிராமனிடம் இருந்து வந்த போன்தான்.










4)  அறுபது எழுபது வயதான பெண்கள் சிலர் ஒன்றுகூடி பார்வையற்றவர்களுக்கு இலவசமாக செவிவழியாக கல்வி கற்றுத்தரும் நுாலகம் நடத்துகின்றனர்,இவர்கள் நடத்திவரும் நுாலகத்தால் இதுவரை 1100க்கும் அதிகமான பார்வையற்ற மாணவர்கள் பட்டம் பெற்றுள்ளனர்.










5)  ........வியப்புடன் இந்த சூழ்நிலையை மனதில் வாங்கி ரசித்துக் கொண்டிருந்த நேரம் ஒரு வயதான வெளிநாட்டுக்காரர் அந்த இடத்திற்குள் நுழைந்தார் அவரைப்பார்த்ததும் அத்துணை நாய்களும் அவர் மீது பாய்ந்து அவர் மேல் ஏறி கொஞ்சி விளையாடி தங்களது பாசத்தை பொழிந்தன.அவரும் அத்தனை நாய்களுக்கும் வஞ்சகமில்லாமல் முத்தத்தை வாரி வழங்கி கொஞ்சி மகிழ்ந்தார்.  அவர்தான் 82 வயதாகும் லெஸ்லி ராபின்சன்.







சரணாலயத்தை விட்டு வெளியே வரும் போது வெளிச்சுவரில் மகாத்மா காந்தி சொன்ன வாசகம் எழுதப்பட்டு இருந்தது,அந்த வாசகம் இதுதான் 
'ஒரு நாட்டின் பெருமையையும் அறத்தின் வளர்ச்சியையும் அங்கு விலங்குள் நடத்தப்படுவதைக் கொண்டு மதிப்பிடலாம்'..







தமிழ்மணம்.

37 கருத்துகள்:

  1. ஆஆஆஆவ்வ்வ்வ்வ் மீ தான் இன்று 1ஸ்ட்டூஊஊஊஊஊ.... இனிய சனி வணக்கம் எல்லோருக்கும் _()_

    பதிலளிநீக்கு
  2. காலை வணக்கம் ஸ்ரீராம்!! மிட் நைட் ஃபார் அதிரா!!

    இது என்ன நடக்கிறது இங்கே ஹா ஹா ஹா...நான் ஓபன் ஆனதும் வந்தால் அதிரா உள்ளே நுழைந்துருக்காங்க....ஆ ஆ ஆ இது எப்படி...

    கீதா

    பதிலளிநீக்கு
  3. காலை வணக்கம் துரை சகோ!! பாருங்க உங்களுக்கு முந்தி தேம்ஸ் இங்கு பாய்கிறது!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  4. நல்லெண்ணம் கொண்டவர் அனைவருக்கும் அன்பின் வணக்கம்..

    பதிலளிநீக்கு
  5. ஸ்ரீராம் வாவ்!! செல்லங்களைப் பார்த்துட்டேன்....ரொம்ப க்யூட்...செய்தி படிக்க பின்னர்...என் செல்லம் வெளியில் செல்ல காத்திருக்கிறாள். வெயிட் என்று சொல்லி அவளை அமர வைத்து.. கொஞ்சம் வெளிச்சம் வரக் காத்திருக்கேன்...சமத்து அவளும் உட்கார்ந்திருக்காள் அழகாக!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  6. மீ தான் இங்கின 1ஸ்ட்டூஊஉ துரை அண்ணனால இன்று ஓட முடியல்லே:)... இனிய காலை வணக்கம் கீதா.. துரை அண்ணன் மற்றும் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  7. மாஸ்டர் செஃப் மரைன் லிண்டா
    மற்றும் கீதா அனைவருக்கும் வணக்கம்..

    பதிலளிநீக்கு
  8. என் இங்கு ஒரு
    நண்பியின் பெயரும் லெஸ்லி தான், அதனால் உள்ளே போய்ப் படிச்சேன்... நாய்களின் சரணாலயம் ... மிக நல்ல விடயம்.

    பதிலளிநீக்கு
  9. இனிய காலை வணக்கம் துரை செலவராஜு ஸார்.

    பதிலளிநீக்கு
  10. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

    பதிலளிநீக்கு
  11. ஆச்சர்யம்.. முதல் வருகையில் மூன்று நண்பர்கள் முந்திக் கொண்டிருப்பது.. நட்பு வணக்கங்கள்.​

    பதிலளிநீக்கு
  12. ////துரை செல்வராஜூDecember 9, 2017 at 6:06 AM
    மாஸ்டர் செஃப் மரைன் லிண்டா////

    https://media.giphy.com/media/rdOPzaSExHpXq/giphy.gif

    நல்லிரவு... குட்நைட்... பொன்நுய்:)...

    பதிலளிநீக்கு
  13. மனிதநேயமிக்க உள்ளங்களை போற்றுவோம்.

    பதிலளிநீக்கு
  14. பெருமைமிக்கவர்களைப் போற்றும் வழக்கமான பதிவு. தேர்ந்தெடுத்துப் பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. செல்லங்களைவிட அவைகளைக் கண்ணாகப் பார்த்துக் கொள்பவர் தான்
    மிக அருமை..

    பதிலளிநீக்கு
  16. முதலில் செல்லங்களைப் பற்றி...மிக மிக நல்ல செய்தி. இப்போதுதான் அறிகிறேன் ஸ்ரீராம். 2007ல் தான் மகன் பாண்டிச்சேரியில் கால்நடை மருத்துவம் சேர்ந்தான். அப்போது அங்கிருக்கும் வரையிலும் அறியவில்லை. இப்பொது மகனுக்கு அனுப்பியுள்ளேன்...அவனுக்கும் இப்படியான ஆசை உண்டு என்பதால்...பார்ப்போம் வாழ்கை என்ன சொல்கிறது என்று..

    அந்த இணைப்பில் சென்று பார்த்த போது நிறைய அறிய முடிந்தது. படங்களும் நிறைய சொல்கிறது. நானும் நேரில் சென்று பார்க்க எண்ணியுள்ளேன். வாழ்க லெஸ்லி!!!!! இன்றைய செய்திகளில் வாயில்லா ஜீவன்களுக்காக வாழும் இவரின் செய்தி மனதிற்கு மிகவும் பிடித்தது முதன்மையாகப் பட்டது....இதோ அடுத்த செய்திகளுக்குப் போகிறேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
  17. என்ன ஆச்சரியம் அத்தனைச் செல்லங்களும் சண்டை போடாமல் ஃப்ரீஅயாக வளைய வருகிறதே!! எங்கள் வீட்டில் ப்ரௌனி இருந்த வரை இருவரும் பங்காளிகள். ஆனால் அதில் எங்கள் தவறு இருக்கிறது. அவர்கள் வயதுக்கு வந்த போது இருவரும் யார் தலைவி என்பதில் சண்டை வந்தது அப்போது நாங்கள் அவர்களுக்குப் பஞ்சாயத்து நடத்தி ப்ரௌனிக்கு சப்போர்ட் செய்தோம். அப்படிச் செய்யக் கூடாதாம்...பின்னர் தான் தெரிந்தது...

    இந்தச் சரணாலயத்தில் எப்படி இத்தனையும் சண்டை போடாமல் உர் உர் என்று சொல்லாமல் இருக்குனு போய்ப் பார்க்கணும்..அவர்களுக்கு ஏரிய பிரிக்கும் பழக்கம் உண்டே!!..அருமை!! அன்பு என்பது கட்டிப் போட்டிருக்கு போலும். போய் அந்த ரகசியத்தைத் தெரிந்து கொண்டு வரணும்னு ஆவல்...

    கீதா

    பதிலளிநீக்கு
  18. ஹாங்க் சொல்ல விட்டுவிட்டதே!! நான் பெட்டெர் இண்டியா தளத்திலும் இவரைப் பார்த்தேன் ஸ்ரீராம். உங்கள் இணைப்புடன்....அதில் இன்னும் நிறைய படங்களும் தகவல்களும் ஆங்கிலத்தில் இருக்கின்றன...இப்படியான செய்திகள் வந்துவிட்டால் இதை மட்டுமே மனது நாடிச் சென்று வாசிக்கிறது!!! ரொம்ப சுத்தமாக இருக்கிறது. அந்த இணைப்பையும் அனுப்பியுள்ளேன் மகனுக்கு....மிக்க நன்றி ஸ்ரீராம்....

    கீதா

    பதிலளிநீக்கு
  19. அனைவரையும் மனது பாராட்டுகிறது. செய்திகளை வாசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  20. மணிப்பூர் தம்பதியர் சூப்பர்!!! வெல்த் ஃப்ரம் வேஸ்ட் என்பதை மிக அழகாகப் பயன்படுத்துகின்றனர்.

    என் மாமியார் வீட்டில் தென்னைமரம் அரிக்கப்பட்டு விழுந்து அது வெட்டப்பட வேண்டிய சூழல் வந்த பொழுது நல்ல பகுதியை ஸ்டூல் உயரத்திற்கு வெட்டி அதை வார்னிஷ் அடித்து வைத்திருந்தார் மைத்துனர். நான் அதை ஸ்டூல் போன்றோ இல்லை ஒரு மினி டீப்பாய் போன்று மாற்றலாம் என்று வீட்டில் மைக்ரோவேவ் பழுதான போது இருந்த சுற்றும் கண்ணாடியை அதன் மேல் பதித்து டீப்பாயாகப் பயன்படுத்த வைத்திருந்த வேளை அங்கு வேலை செய்பவரின் கனவக் குறைவால் அந்தக் கண்ணாடி உடைந்துவிட்டது..அது போன்று அங்கு நிறைய ப்ளாஸ்டிக் குழாய்கள் பெரிய சைசில் இருக்கும் அது மைத்துனர் செய்யும் பிஸினஸில் அப்படி வரும் என்று அவர் எடுத்து வைத்திருந்ததில் நான் ஒன்று எடுத்து வந்து அடியில் வீட்டில் வேஸ்ட் என்று போடப்பட்டிருந்த ஒரு மரப்பலகையை வைத்து அதில் சிப்பிகள், கூழாங்கற்கள் எல்லாம் பதித்து, குழாயின் மேல் மற்றோரு மைக்கா ஒட்டிய பலகை ஒன்று வேஸ்ட் என்று இருந்ததை எடுத்துப் பதித்து குழாயில் கைவண்ணத்தைக் காட்டிப் பெயின்ட் செய்து பூக்கள் டிசைன் போட்டு அதிலும் சிப்பிகள், பூஷணி விதைகள் என்று ஒட்டி வார்னிஷ் அடித்து வைக்க அது என் கஸினுக்குப் பிடித்துப் போக எடுத்துக் கொண்டுப் போய்விட்டாள்.....

    மணிப்பூர் தம்பதியின் கைவேலைத் திறனால் சிறைவாசிகளின் குடும்பத்திற்கு மறுவாழ்வு கொடுப்பது அருமையான சேவை..பாராட்டுகள்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  21. போலீஸார் ரவி சம்பத் இருவருக்கும் பூங்கொத்து!! டைம்லி ஹெல்ப்!! சமயோஜித நடவடிக்கை...

    ஈரநெஞ்சம் மகேந்திரனுக்கு வாழ்த்துகள்! பாராட்டுகள். ஜானகிராமன், சசியின் செய்தி மனதை நெகிழ வைத்துவிட்டது வாசிக்கும் போது கண்கள் கசிந்தது..

    பெண்களின் நூலகச் செவையைப் போற்றுவோம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  22. மனதை கொள்ளை கொல்லும் செய்திகள் அதுவும் மூத்த பெண்மனிகள் நடத்தும்பார்வையற்றவர்களுக்கு இலவசமாக செவிவழியாக கல்வி கற்றுத்தரும் நுாலகம் படித்து மனது மிகவும் சந்தோசம் பின்பு விலங்குகள் சரணாலயம் சூப்பர் மிகவும் நன்றி நண்பர் ஸ்ரீராம்

    பதிலளிநீக்கு
  23. நண்பர் ஸ்ரீராம் படித்ததில் பிடித்தது என்று சமீபத்தில் ஒரு அப்பா மகனுடைய பரிவர்த்தனை கொடுத்திருந்தேன் அது யாருடையது என்று நீங்கள் கேட்ட போது அன்று எனக்கு தெரியவில்லை ஏனென்றால் வாட்ஸ் அப்பில் இதை படித்து எழுதி கொண்டேன் பகிர்வதற்க்காக இன்று ஜம்புலிங்கம் சார் இதை படித்து
    //இது அக்டோபர் 28, 2017இல் என் நண்பர் திரு டி.வி.எஸ்.சோமு (பத்திரிக்கையாளர்)தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் அப்பா அதிகாரம் என்ற துணைத்தலைப்பில் இரண்டாவது பதிவாக எழுதியது. அவர் இப்பதிவில் குறிப்பிட்டுள்ள, அவருடைய தந்தையார் திரு அழகிரி விசுவநாதன் தஞ்சாவூரில் உள்ளார். மிகச் சிறந்த எழுத்தாளர். பல நூல்களை எழுதியுள்ளார். அண்மையில்கூட நான் அவரைச் சந்தித்துவிட்டு வந்தேன். பழகுவதற்கு இனியவர். இவரைப் பற்றி விக்கிபீடியாவில் (அழகிரி விசுவநாதன்) எழுதியுள்ளேன். உங்களுக்குத் தகவலுக்காக இதனைத் தெரிவிக்கிறேன். நல்ல செய்தியைப் பகிர்ந்தமைக்கு நன்றி.//
    என்று பின்னுட்டமிட்டுள்ளார் நேற்று யார் என்று தெரிந்தவுடன் உங்களுக்கும் பகிர நினைத்து இங்கே

    பதிலளிநீக்கு
  24. இவ்ளோ நல்லவங்க இருக்காங்களா? பகிர்வுக்கு நன்றி !

    பதிலளிநீக்கு
  25. போலீஸ் ... என்றாலே .. (அவரவர் மனதில் இருப்பதை இங்கு பூர்த்தி செய்து கொள்ளவும்) என்று நினைக்கும் இந்த நாட்டில் இப்படியும் சில போலீஸ் மனிதர்கள். பாராட்டப் பட வேண்டியவர்கள். நானும் தெருநாய்களை நேசிப்பவன்தான்.

    பதிலளிநீக்கு
  26. பூவிழி முனைவர் ஐயா கொடுத்த செய்தியைப் படித்தேன். பாருங்க ஃபேஸ்புக் செய்தி வாட்சப்பில் இப்படி யார் என்பதைக் குறிப்பிடப்படாமல் பகிரப்பட்டிருந்ததோ? அதை ஏன் கேக்கறீங்க...இப்படி நிறைய ஃபேஸ்புக் பதிவுகள், ப்ளாக் போஸ்ட் எல்லாமே வாட்சப்பில் "திருநெல்வேலிக்கே அல்வாவா" என்று கேட்பது போல் அவரது பதிவு அவருக்கே போய்ச் சேரும் நிலைமை!!! என்ன சொல்ல!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  27. ஸ்ரீராம் அனைத்துச் செய்திகளும் அருமை வழக்கம் போல். முதல் செய்தி சிறையில் இருப்பவர்களை நாம் தரக் குறைவாகப் பார்க்கக் கூடாது என்ற நல்ல செய்தி... அவர்களுக்கும் புனர்வாழ்வு கொடுக்கும் அந்தத் தம்பதியரை மனதாராப் பாராட்டுவோம்.

    போலீஸில் நல்லவரும் உள்ளனர் என்பதை நீங்கள் அடிக்கடி எடுத்துக் காட்டுகிறீர்கள். நல்ல விஷயம்.

    வயதானப் பெண்மணிகள் பார்வையற்றவர்களுக்காகச் செவி வழிக் கல்வி கற்றுத்ஹ்டரும் நூலகம் நடத்தும் சேவை போற்றுதற்குரியது.

    லெஸ்லி ரொம்பவே வியப்படைய வைக்கிறார்!! வாழ்த்துகள் அவருக்கும்!!

    ஈரநெஞ்சம் நிஜமாகவே நெஞ்சை ஈரப்படுத்திவிட்டது! ஈரநெஞ்சம் மகேந்திரனை பாராட்ட வார்த்தைகளே இல்லை...

    அனைத்தும் நல்ல செய்திகள்

    பதிலளிநீக்கு
  28. போற்றுதலுக்கு உரியவரகள்
    போற்றுவோம்
    தம +1

    பதிலளிநீக்கு
  29. காவலர்கள் செயல் பாராட்டுக்குரியது பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  30. நல்ல பகிர்வு.
    போற்றுதலுக்கு உரியவர்களைப் போற்றுவோம்.

    பதிலளிநீக்கு
  31. //முன்னங்கால் பின்னங்கால் அடிபட்டு நடக்கமுடியாமல் இழுந்து //
    இதைப்போல ஒரு உண்மை சம்பவம் எழுத வச்சிருக்கேன் விரைவில் சொல்கிறேன் .
    இறைவன் லெஸ்லிக்கும் மற்றும் அவருக்கு உறுதுணையாய் இருக்கும் அனைவருக்கும் உதவிகள் அளவில்லாமல் கிடைக்க செய்வாராக

    பதிலளிநீக்கு
  32. மணிப்பூர் தம்பதிகளை வாழ்த்தி பாராட்டி அவர்களின் ரீசைக்கிள் ரீயூஸ் போன்ற நல்ல இயற்கையை பாதுகாக்கும் விஷயத்துக்கு உறுதுணையா இருக்கணும் .எனக்கு மீள்சுழற்சி ரொம்ப பிடிக்கும்

    சாந்தி,சுலோச்சனா,பூர்ணிமா,முத்துலட்சுமி சங்கரன்,கீதா அனந்தநாராயணன்,ஆகியோரின் பார்வையற்றோருக்கான நூலக சேவை ஈர நெஞ்சம் மகேந்திரன் இணைத்து வாய்த்த தாயும் குடும்பமும் ,போலீஸ் உங்கள் பாதுகாவலன் என்பதற்கேற்ப உயிர் காத்த போலீஸ் அண்ணாக்கள் அனைத்தும் அருமையான செய்திபகிர்வுகள்

    பதிலளிநீக்கு
  33. சிறப்பான மனிதர்களுக்கு எனது பாராட்டுகள். தொடரட்டும் நற்செய்திகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!