வியாழன், 17 ஜனவரி, 2019

உங்களுக்கு சிவாஜியை தெரியுமா?


உங்க கிட்ட மட்டும்....
சிறுகதை - ஸ்ரீராம் 


"அங்கிள்...   நான் வாணி பேசறேன்...   ஆஸ்பத்திரியிலா இருக்கீங்க?"

"ஆமாம்மா...  ராஜூவைப்பார்க்க வந்தேன்..."  ராஜு எங்கள் இருவருக்குமே உறவினர்.

"தெரியும்...  ஆண்ட்டி சொன்னாங்க..  அதே ஆஸ்பத்திரில்தான் என் தம்பி இருக்கான்... மூன்றாவது மாடியில் A 10...    என்னால வர முடியலை அங்கிள்...    அவனுக்கு துணை கூட யாரும் இல்லை.  ரெண்டு லிட்டர் தண்ணி பாட்டில் ஒன்றும், ரெண்டு பிஸ்கட் பாக்கெட்டும், ஒரு தயிர் சாதப் பாக்கெட்டும் வாங்கித்தர முடியுமா?"

"அதற்கென்னம்மா...   செஞ்சுடுறேன்..."

வாணி நண்பரின் மகள்.  அவள் புகுந்த வீட்டில் இல்லாத கெடுபிடி எல்லாம் செய்வார்கள் என்று என் மனைவியிடம்  சொல்லியிருக்கிறாள்.

"வேற யார் கிட்டயும் சொல்ல முடியாது ஆண்ட்டி...  அதனால உங்க கிட்ட மட்டும் சொல்றேன்...   அங்கிள் கிட்ட கூட சொல்லிக்க வேண்டாம்" 

"நான் அங்கிள் கிட்ட எதையும் மறைக்கறதில்லைம்மா...  ஆனா கவலைப்படாதே...  அவர் தன் நண்பர் கிட்ட மட்டும் அதான் உன் மாமனார் கிட்டனு இல்லே, யார் கிட்டயுமே சொல்ல மாட்டார்"

"அப்ப சரி...  எனக்கு யார் கிட்டயாவது கொட்டினா ஒரு நிம்மதி...   கொஞ்சம் பாரம் குறைஞ்சா மாதிரி இருக்கும்...   அவ்வளவுதான்..."

வாணி யாருக்கும் ஒரு உதவி என்றால் ஓடிவந்து விடுவாள்.  அவள் புகுந்த வீட்டில் அவளின்றி ஒரு அணுவும் அசையாது.  

அடிக்கடி பேசுவாள்.  குறைகளைப் பகிர்ந்து கொள்வாள்.  பாவமாக இருக்கும். நல்ல பெண்.  என் மனைவியும் ஆறுதல் கூறி பேசுவாள்.

எனவே அவள் கேட்ட உதவியைச் செய்துவிடுவது என்று ராஜுவின் அம்மாவிடம் ஒரு நண்பரைப் பார்க்கப் போவதாய்ச் சொல்லிக்கொண்டு அவள் கேட்டதை எல்லாம் வாங்கிக்கொண்டு அவள் சொன்ன வார்டுக்குச் சென்றேன்.  

அங்கு என் நண்பர் - வாணியின் மாமனார் -  இருந்தார்.   ஆச்சர்யப்பட்டு போனேன்.  

மேஜை மேல் ரெண்டு லிட்டர் தண்ணீர் பாட்டில் ஒன்று, இரண்டு பிஸ்கட் பாக்கெட், ஒரு பொட்டலம் - அநேகமாக தயிர்சாதமாக இருக்க வேண்டும் - ஆகியவை இருந்தன.   என்னை அலைக்கழித்த வாணி மேல் முதலில் கோபம் வந்தது..  'சரி, என்ன நிலைமையோ...'

பேசிக்கொண்டு இருக்கும்போதே வாணியின் புகுந்த வீட்டு உறவினக்காரப்பையன் ஒருவன் வந்தான்.   அவன் கையிலும் அதே லிஸ்ட்.

கொஞ்ச நேரம் இருந்துவிட்டு வாணியின் தம்பியிடமும், என் நண்பனிடமும் தலையசைத்து விடை பெற்றுக் கிளம்பும்போது எதிரே ராஜுவின் தாயார் வந்தாள்.  அவள் கையிலும் மேற்படி ஐட்டங்கள்.

"பாவம் வாணி...   அவள் என்னிடம் மட்டும்தான் விஷயங்கள் சொல்வாள்...   உதவி கேட்பாள்....  இதோ இதைக் கொடுத்து விட்டு வந்துடறேன்..    அவள் தம்பி இங்க அட்மிட் ஆகி இருக்கிறானாம்....  உதவிக்கு ஆள் யாரும் இல்லையாம்.  புகுந்த வீட்டிலும் கெடுபிடி"

'புத்திசாலிதான்'  

சிரிப்புடன் தலையசைத்து விட்டு லிஃப்டின் முன் நின்றேன்.   லிஃப்ட் வந்து, கதவு திறந்தது.  இன்னும் இரண்டு உறவினர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்ட ஒருவித அசட்டுச் சிரிப்புடன் கையில் அதே லிஸ்ட் ஐட்டங்களுடன் வெளியில் வந்தார்கள்.

இன்னும் எவ்வளவு ரெண்டு லிட்டர் தண்ணீர் பாட்டில் சேரப்போகிறதோ....


=====================================================================================================


தினமலரில் 2013 இல் வெளியான 'நான் சுவாசிக்கும் சிவாஜி' என்கிற YG மகேந்திரனின் அனுபவங்களை ரசித்துப் படித்து ஏற்கெனவே இங்கு சிலவற்றைப் பகிர்ந்தும் இருக்கிறேன்.  இன்னொன்று இங்கே....


***

கடந்த, 1959ல் வெளி வந்த, பாகப்பிரிவினை ஒரு அற்புதமான படம். தமிழகத்தின் பெரிய ஹீரோவாக, சிவாஜி கொடிக் கட்டி பறந்து கொண்டிருந்த நேரம் அது. ஸ்டைலிஷ் ஹீரோவாக தன்னை நிரூபித்தவர், பாகப்பிரிவினை படத்தில், ஊனமுற்றவர் கதாபாத்திரத்தில், தன்னை விகாரப்படுத்தி, நடித்திருப்பார். எம்.ஆர்.ராதா, டி.எஸ்.பாலையா, எஸ்.வி.சுப்பையா போன்ற ஜாம்பவான்களுக்கு மத்தியில், அவர்களிட மிருந்து தன்னை நடிப்பால் வேறுப்படுத்திக் காட்ட வேண்டிய சவாலான ரோல் அது.


நாற்பது நாட்கள் நடந்த படப்பிடிப்பில், கை ஊனத்தையும், காலை இழுத்து இழுத்து நடந்து, கால் ஊனத்தை காட்டுவதாகட்டும், கொஞ்சம் கூட வித்தியாசம் இல்லாமல், ஒரே மாதிரி நடித்திப்பார். அத்துடன், 'தேரோடும் நம்ம சீரான மதுரையிலே...' என்ற பாடலில், கை, கால் ஊனத்துடனே, நடனமாடி, கை தட்டல் வாங்கியிருப்பார் சிவாஜி.

இந்த படத்தை, இந்தியில் ரீ-மேக் செய்தனர். அதுவும், வெற்றிப்படமாக அமைந்தது. சிவாஜி நடித்த ரோலில், இந்தியில் சுனீல் தத் நடித்திருந்தார். 'படப்பிடிப்பின் போது, முந்தின காட்சியில் கையை எப்படி வைத்துக் கொண்டிருந்தோம் என்பது அடிக்கடி மறந்து விடும். ஆனால், சிவாஜி எப்படி தான் ஒரே மாதிரி, கையையும், காலையும் வைத்து, அற்புதமாக நடித்தாரோ...' என்று, வியந்து கூறினார் சுனில் தத்.


இப்படத்தின் வெற்றிக்கு, சிவாஜி - கண்ணதாசன் - எம்.எஸ்.வி., - டைரக்டர் பீம்சிங் இணைந்த கூட்டணியே, காரணம்.
ஹாலிவுட் நடிகர்கள், மார்லன் பிராண்டோ, கிளார்க் கேபிள் ஸ்பென்ஸர் ட்ரேஸி, அலைக் கென்னெஸ், ஜேம்ஸ் காக்னி போன்றவர்களின் நடிப்பை பற்றி, அடிகடி பாராட்டி பேசுவார். ஆதே போல், சக நடிகர்களுக்கு, 'எந்த நடிகரையும், 'இமிடேட்' செய்யாதீங்க, அவங்க நடிப்பிலே, 'இன்ஸ்பயர்' ஆகும் போது, அதை, 'இம்ப்ரூவ்' செய்யுங்க...' என்று அறிவுரை கூறுவார்.

சிவாஜிக்கு எத்தனையோ ரசிகர்கள் இருக்கின்றனர். இப்படி ரசிகையாக இருந்து, குடும்ப நண்பர்களாகி, உடன் பிறவா சகோதரிகளாக ஆனவர்கள், லதா மங்கேஷ்கர் மற்றும் அவரது தங்கைகள். சிவாஜியை அவர்கள், 'அண்ணா' என்று பாசத்துடன் அழைப்பதுடன் மட்டுமல்லாமல், ஆண்டுதோறும், ரக்க்ஷா பந்தன் தினந்தன்று, ராக்கி கயிறு, அனுப்புவர். இவரும் தங்கைகளுக்கு சீர் வரிசை மற்றும் பரிசுப் பொருட்களை அனுப்புவார். சிவாஜி இறந்த பின்னரும், இந்த பழக்கம், இன்னும் தொடர்கிறது.

சிவாஜி வீட்டில், எந்த முக்கியமான நிகழ்ச்சி நடந்தாலும், லதா குடும்பத்திலிருந்து, ஒருவர் கண்டிப்பாக, கலந்து கொள்வர்.

சிவாஜி படங்களை, லதா விரும்பிப் பார்த்து ரசிப்பார். பாவமன்னிப்பு படத்தை பார்க்க விரும்புவதாக, லதா மங்கேஷ்கர் கூறியதும், அப்படத்தின் பிரின்ட்டை, பிரத்யேகமாக அனுப்பி வைத்தார் சிவாஜி. பொதுவாக, ஒருவர் நம்மை, 'இடியட்' என்று சொன்னால், உடனே, நமக்கு கோபம் வரும்; குறைந்தபட்சம் வருத்தமாவது வரும். ஆனால், என்னை ஒருவர், 'இடியட்' என்று குறிப்பிட்ட போது, நான் மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்தேன். என்னை, அவ்வாறு குறிப்பிட்டவர், லதா மங்கேஷ்கர் தான்.

ஒரு சமயம், சிவாஜியின் வீட்டுக்கு, லதா மற்றும் அவரது தங்கைகள் உஷா மங்கேஷ்கர் மற்றும் ஆஷா போன்ஸ்லே என, மூவரும் வந்திருந்தனர். சிவாஜி காலமாகிய பின், நடந்த நிகழ்ச்சி, அது. சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், போனில் என்னிடம், லதா மங்கேஷ்கர் வந்திருப்பதாக கூறினார். என் மனைவி சுதா, என் சித்தி சீதாவுடன் சிவாஜி வீட்டுக்கு சென்றேன்.

ராம்குமார், லதாவிடம் என்னை அறிமுகப்படுத்திய போது, 'அப்பாவுடன் நிறைய படங்களில், ஒய்.ஜி.மகேந்திரன் நடித்திருக்கிறார்...' என்று சொல்லி, பரிட்சைக்கு நேரமாச்சு படத்தை பற்றி குறிப்பிட்டார். 'அந்த முட்டாள் பையன் கதைதானே?' என்று கேட்டார் லதா. 'ஆமாம் லதாஜி. நான் தான், அந்த இடியட்...' என்று, பெருமையோடு சொன்னேன். 'அந்த ரோலில் நன்றாக நடித்திருக்கிறீர்கள்...' என்று பாராட்டினார். இந்த பாராட்டுக்கு முழு காரணம், சிவாஜிதான்.


லதாவின் சகோதரி உஷா மங்கேஷ்கர் பாடகி என்பதோடு, சிறந்த ஓவியரும் கூட. சிவாஜியை, மிக அழகாக, தத்ரூபமாக வண்ண ஓவியமாக தீட்டி, சிவாஜிக்கு அன்பளிப்பாக வழங்கினார். கையில் புகைப்படம் வைத்துக் கொள்ளாமல், தன் மனதில், சிவாஜியின் முகத்தை வைத்து, வரைந்த படம் அது.
மும்பையிலிருந்து வெளியான பிரபல ஆங்கில வாரப்பத்திரிகை, 'இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி!' அதில், கலைப் பகுதியை எழுதி வந்த ராஜூ பரதன் என்ற பிரபல பத்திரிகையாளர், மும்பை, ஷண்முகானந்தா அரங்கில் நடைபெற்ற, சிவாஜி நாடக விழா பற்றி எழுதியிருந்த கட்டுரையில், 'வியட்நாம் வீடு' தமிழ் நாடகம் நடைபெற்றது. முதல் வரிசையில், பிருத்வி ராஜ்கபூர், ராஜ்கபூர், சசி கபூர் மற்றும் இந்தி திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள் அமர்திருந்தனர். தமிழ் தெரியாவிட்டாலும், சிவாஜி நாடகங்களை பார்ப்பதற்காகவே அவர்கள் வந்திருந்தனர்.

'விழாவில் பயங்கர கூட்டம். என்ன தான் இருக்கப் போகிறது என்ற மனநிலையில் தான், சிவாஜியின் நாடகத்தை பார்க்கச் சென்றேன். அவரது நடிப்பு என்னை உலுக்கி விட்டது. நாடக அரங்கிலிருந்து வெளியே வரும்போது, சிவாஜியின், பரம ரசிகனாக வந்தேன். நாடகத்தில் பல இடங்களில், என்னையும் அறியாமல், அழுதேன்...' என்று எழுதியிருந்தார் ராஜூ பரதன்.

பிரபல இந்தி நடிகரும், தாதா சாஹேப் பால்கே விருது பெற்ற சாதனையாளரும் ஆன நடிகர் பிரானுக்கு, சிவாஜி மீது அளவு கடந்த மரியாதை உண்டு. ஏக் முட்டி ஆஸ்மான் என்ற இந்தி படத்தில், விஜய் அரோரா, ஹீரோ. எனக்கு கவுரவ வேடம். இந்தியாவின் போர் கப்பலான ஐ.என்.எஸ்., விக்ராந்த்தில், படமாக்கினர். விஜய் அரோராவும், நானும் கப்பற்படை வீரர்கள்; பிரான் எங்கள் தளபதி. படப்பிடிப்பின் போது, பிரானிடம் என்னை அறிமுகம் செய்தனர்.

'உங்களுக்கு சிவாஜியை தெரியுமா?' என்று கேட்டார் பிரான். 'நன்றாகவே தெரியும். அவர், எங்களுடைய குடும்ப நண்பர். அவரோடு நான், சில படங்கள் நடித்திருக்கிறேன்...' என்றேன்.
'
நான் சிவாஜி சாரின் தீவிர ரசிகன். சிவாஜி நடித்த எமோஷனலான படத்தை, இந்தியில் ரீ-மேக் செய்ய கேட்டனர். (பிரான் சொன்ன, ஓரிரு காட்சிகளை வைத்து, அவர் குறிப்பிடுவது, ஞான ஒளி படம் என்பது புரிந்தது.) என்னால் அவர் வெளிப்படுத்திய உணர்ச்சிகளை, கண்டிப்பாக செய்ய முடியாது. வேண்டாம் என்று சொல்லி விட்டேன்...' என்று கூறினார் பிரான்.


நடிகர் விஜய் அரோரா, புனே திரைப்படக் கல்லூரியில், நடிப்புக்கான படிப்பில், தங்கப் பதக்கம் பெற்றவர். 'சமீபத்தில், சிவாஜி படம் பார்த்தேன். அப்படத்தில், ரொம்ப கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக வருவார். படத்தின் பெயர் கூட, கோல்டு மெடல். (தங்கப்பதக்கம்) அதில், தன் மனைவி இறந்ததும், சிவாஜி கொடுத்திருக்கும், 'எக்ஸ்பிரஷன்ஸ்' ரொம்ப சிறப்பானவை. என் வயிற்றில் யாரோ குத்துவது போன்ற வலி எனக்குள் ஏற்பட்டது. வீட்டுக்கு சென்றதும். அந்த காட்சியில், சிவாஜி நடித்தது போல, கண்ணாடி முன் நின்று நடித்துப் பார்த்தேன். அவர் செய்ததில், ஒரு சதவீதம் கூட செய்ய என்னால் முடியவில்லை...' என்றார் விஜய் அரோரா.



==============================================================================================


சில விஷயங்கள் காரண காரியங்களுக்கு அப்பாற்பட்டவை. நம்ப முடியாதவை.

மூன்றாம் வகுப்போ என்னவோ படிக்கும் சமயம் என் தங்கையை வம்பிழுத்துவிட்டு ஓடிப்போய் வாசலில் இருந்த கொய்யா மரத்தில் ஏறிவிட்டேன். கொஞ்ச நேரத்தில் அவள் அங்கிருந்து விலகியும் கூட நம்பிக்கை வராமல் இறங்காமல் இருந்தேன். ஏதோ ஒரு கணத்தில் பிடி நழுவி நான் தலைகீழாகக் கீழ்நோக்கிவந்தபோது கடைசியாய்க் கண்ணில் பட்டது கீழே பாதி வெட்டி கூராய் வைத்திருந்த பாதிக் கிளை. நாள் நினைவில்லாமல் ஒரு நாளோ, இரண்டு நாட்களோ ஏதேதோ உளறிக்கொண்டிருந்தேன் என்று அம்மா சொல்லி இருக்கிறார். ஆனால் வேறு பாஷை எல்லாம் பேசவில்லை! அல்லது அப்படிப் பேசிதான் அம்மாவுக்குப் புரியவில்லையா என்னவோ!





==============================================================================================


அன்றொருநாள் முகநூலில் மறுநாள் வரவேண்டிய திங்கற பதிவுக்கு டீசர் வெளியிட்டபோது!!!




================================================================================================

155 கருத்துகள்:

  1. அனைவருக்கும் காலை வணக்கம். சற்று பெரிய பதிவு போல தெரிகிறது, பின்னர் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானு அக்கா.. காலை வணக்கம்.
      பெரிய பதிவில்லை. பிட் பிட்டாய் இருக்கும்.

      நீக்கு
    2. ஜிவாஜியக்கூட இன்னிக்கு பிட்டு பிட்டாத்தான் பார்க்கவே சகிக்கும் ஸ்ரீராம்! கூட்டாஞ்சோறு ஆர்வியின் பதிவில் ஒரு பின்னூட்டப் போராட்டமே ஏழெட்டு வருஷத்துக்கு முன்னாடி நடத்தினது ஞாபகம் வருது!

      ஜிவாஜி பத்தி எயுதறவங்க கண்டிப்பா சொந்தத்தயாரிப்பு என் தமிழ் என் மக்கள் படத்தை மொதல்ல பாத்துட்டு அப்புறமா .....!!

      நீக்கு
  2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் நல்வரவு....

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  4. சுவையான கதம்பம்....

    உங்க கிட்ட மட்டும் கதை - சிறப்பாக இருக்கிறது. சிலர் இப்படித்தான்.

    பதிலளிநீக்கு
  5. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம். சிவாஜியையை இப்பதான் முடித்தேன். உண்மையில் நடிகர் திலகம் தான். பாவம் வேண்டாத சிலபடங்களில் மாட்டிக் கொண்டு விட்டார். ஞானொளி சிறந்த படம்.

    மற்ற நடிகர்களும் பாராட்டி இருப்பது அவரின் திறமையைக் காண்பிக்கிறது.

    தலைகீழாக விழுந்தீர்களா. அடப்பாவமே..

    ஆங்கிலத்திலிருந்து ஃப்ரென்சிற்கு மாறிய பெண் என்ன ஆனாரோ.
    சுவையான கதம்பப் பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் வல்லிம்மா..கீழே விழுந்தது சின்ன வயசில்.

      நீக்கு
    2. ஞானஒளி மதுரையில் ஏதோ ஒரு தியேட்டரில் பார்த்தேன். எங்க பொண்ணு அப்போ வயித்திலே இருந்தானு நினைக்கிறேன்.

      நீக்கு
  6. இஃகி,இஃகி, ஜிவாஜி புராணம் எழுதும்போது என்னை நினைத்துக் கொண்டு எழுதி இருப்பீர்கள் என நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதாக்கா.. நினைத்தேன். நினைவு வராமல் இருக்குமா?

      நீக்கு
    2. ஓவர் நினைப்பு உடம்புக்கு ஆகாது கீசாக்கா:)... ஹையோ மீ ... மெ மே மே மே:)..

      நீக்கு
  7. வாணி மாதிரி கேரக்டர் இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.
    எல்லாரையும் கூட்டமாகச் சேர்த்த திறமைக்கு ஓ போடவேண்டியதுதான். இனிமேல் ஜாக்கிரதையாக இருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் வல்லிம்மா... ஜாக்கிரதையாக இருக்க ஒன்றும் இல்லை. சுவாரஸ்யமான நல்ல கேரக்டர்.

      நீக்கு
  8. உங்கள் கதையில் வரும் வாணி கற்பனை அல்ல. என் உறவுக்காரப் பெண்மணி ஒருத்தரும் இப்படித் தான்! மற்றவர்களின் பரிதாபத்தைச் சம்பாதித்துக் கொண்டே தன்னைத் தியாகியாக நிலை நாட்டிக் கொண்டு விட்டார். :))))) ஆச்சரியமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருவேளை ஶ்ரீராமிடம் இதை ஏற்கனவே பகிர்ந்துகொண்டீர்களோ? இந்த எழுத்தாளர்களை நம்பி எதுவும் சொல்ல முடியாது போலிருக்கே. ஹா ஹா

      நீக்கு
    2. தினம் தினம் பல்வேறு வகை மனிதர்களைப் பார்க்கும் ஸ்ரீராமுக்கு இல்லாத அனுபவமா? என்றாலும் எப்போவேனும் சொல்லி இருக்கலாம்! :)))))

      நீக்கு
    3. கீதாக்கா... இப்படி ஒரு கேரக்டர் நிஜமாவே இருக்கா?

      நீக்கு
    4. 14 பிஸ்கட் பாக்கெட், மொத்தம் ஏழு பேர் கணக்கு வருது, 7 தண்ணீர் பாட்டில், 7 தயிர் சாதப் பொட்டலம்! பிஸ்கட்டைக் கொஞ்ச நாட்கள் வைச்சிருந்து சாப்பிடலாம். தண்ணீர் பாட்டிலும் பயன்படுத்திடலாம். தயிர்சாதம்? அதான் கவலையா இருக்கு! என்ன பண்ணி இருப்பார் அந்த வாணியின் தம்பி? ம்ம்ம்ம்ம்? ம.கு. தாங்கலை! :)))))

      நீக்கு
    5. //கீதாக்கா... இப்படி ஒரு கேரக்டர் நிஜமாவே இருக்கா?// கிட்டத்தட்ட இப்படி ஒரு காரக்டர் உண்டு. புகுந்த வீட்டில் ரொம்பக் கஷ்டம், கட்டுப்பாடு என்பது போல் சொல்லிக்கொண்டே உறவினர் வீட்டு விசேஷங்கள் எல்லாத்துக்கும் முதல் ஆளாக வந்துடுவார். கடைசி ஆளாகப் போவார். ஒரு முறை உங்க வீட்டில் கண்டிப்பு ஆச்சே, இப்படிச் சீக்கிரம் வந்துட்டு லேட்டாப் போனா ஒண்ணும் சொல்ல மாட்டாங்களானு கேட்டுட்டேன். (நம்ம வாய் தான் சும்மா இருக்காதே!) தூக்கிவாரிப் போட்டுவிட்டது அவருக்கு. பதில் சொல்லலை. காது கேட்காத மாதிரி நகர்ந்துட்டார். அப்புறமாப் பார்த்தால் புகுந்த வீட்டில் உறவினர்கள் உதவிக்காகச் சீக்கிரம் வரச் சொன்னதாகவும் எல்லாத்தையும் முடிச்சுக் கொடுத்துட்டு வருவதாகவும் சொல்லிக் கொண்டு இருந்திருக்கார். ஆனால் மாட்டிக்கலை, பிழைச்சார்! எல்லோருக்கும் புரிந்து விட்டது. ஆனால் யாரும் எதுவும் சொல்லலை! :)))))

      நீக்கு
  9. ஒய்.ஜி.எம்மின் இந்தப் பேட்டி/கட்டுரை படித்த நினைவு இருக்கு. பரிட்சைக்கு நேரமாச்சு படம்/நாடகம் இரண்டும் பார்த்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
  10. அந்தப் பெண்மணிஃப்ரெஞ்சில் எத்தனை நாட்கள்/மாதங்கள் பேசினாராம்? பின்னால் சரியாகி விட்டாரா?

    பதிலளிநீக்கு
  11. கதம்பத்தை ரசித்தேன்.

    நீங்கள் எழுதிய கதையும் ரசிக்க முடிந்தது. அந்தப் பெண்ணுக்கு யார்மீதும் நம்பிக்கை இல்லையோ? யாராவது ஓரிருவர் கொடுத்தால் போதும் என்று நினைத்தாரோ?

    சிவாஜியை லெஜென்ட்ஸ் பாராட்டியபோதும் மத்தியக்குழுவினால் அவர் நடிப்பு பாராட்டப்படவில்லையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லைத் தமிழரே, இயல்பான நடிப்புக்குத் தான் பரிசு கிடைக்கும். ஜிவாஜி மாதிரி மிகை நடிப்பு எல்லோருக்கும் வராது. ஆனால் அதே சமயம் தான் நடிக்கிறோம் என்பதே தெரியாமல் ஒரு படத்தில் அந்தப் பாத்திரமாகவே ஆகி விடுவதும், நடிப்பது யார் என்பதை நம்மை மறக்க வைப்பதுமே உண்மையான நடிப்பு. அந்த வகையில் பார்த்தால் ஜிவாஜி ஆகட்டும், எம்ஜார் ஆகட்டும்,ஜெமினி, கமல், ரஜினி யாராக இருந்தாலும் இது இவங்க நடிப்பு என்பதை நினைவூட்டிக்கொண்டே இருக்கும். அந்தப் பாத்திரம் கண் முன்னே வராது.அல்லது எனக்கு வருவதில்லை. :(

      நீக்கு
    2. தான் நடிக்கிறோம் என்பதே தெரியாமல் ஒரு படத்தில் அந்தப் பாத்திரமாகவே ஆகி விடுவதும், நடிப்பது யார் என்பதை //நம்மை மறக்க வைப்பதுமே உண்மையான நடிப்பு. அந்த வகையில் பார்த்தால் ஜிவாஜி ஆகட்டும், எம்ஜார் ஆகட்டும்,ஜெமினி, கமல், ரஜினி யாராக இருந்தாலும் இது இவங்க நடிப்பு என்பதை நினைவூட்டிக்கொண்டே இருக்கும்.//
      வ.உ.சி.ஆக சிவாஜி கணேசன் நடித்ததைப் பார்த்து விட்டு, என் தந்தையை பார்ப்பது போலவே இருந்தது என்று வ.உ.சி.யின் மகன் கூறினார். காவல் தெய்வம் படத்தப் பார்த்து விட்டு, ஜெயகாந்தன் "செங்கோடனைக் கண்டேன்" என்று கூறியிருந்தார். தில்லானா மோகனாம்பாளில் எல்லோரும் சண்முகசுந்தரம் என்னும் நாதஸ்வர கலைஞனைத்தான் பார்த்தார்கள். தேவர் மகனில் எங்கள் வீட்டில் நாங்கள் எல்லோரும் எங்கள் தாத்தவைதான் பார்த்தோம்,சிவாஜியை அல்ல.

      இன்றைய காலகட்டம் கொஞ்சம் மாறி விட்டது. நடிப்பிற்கான இலக்கணங்களும் மாறி விட்டன. அப்படி இருந்தும் கூட அவ்வை சண்முகியிலும், மகாநதியிலும் சண்முகி மாமியையும், அப்பாவி கிருஷ்ணசாமியையும்தான் பாப்போம். ஏன் சலங்கை ஒலியில் நடனம் ஆடும் பொழுது நடனத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருக்கும் ஒருவனப் போல ஆடியிருப்பார். ஆனால் விஸ்வரூபத்தில் நடனம் ஆடும் பொழுது ஒரு நடன ஆசிரியரைப்போல நடனமாடியிருப்பார் கமல்.

      நீக்கு
    3. பா.வெ. அவர்கள் - சில கதாபாத்திரங்களை சிவாஜி அவர்கள் கண் முன் கொண்டுவந்து நிறுத்தினாலும், அவருடையது ஓவர் ஆக்டிங் (இயக்குநர் சொல்படி நடித்திருக்கலாம், இல்லை அல்லக்கைகள் 'ஆமாம் சாமி' போட்டு அவரைக் கெடுத்திருக்கலாம். பாருங்க பாரதிராஜா மற்றும் தேவர் மகனில் எப்படிப் பயன்படுத்தியிருக்கிறார் என்று).

      அவரது படத்தைப் பார்த்து நானும் அழுதிருக்கிறேன், உணர்ச்சிவசப்பட்டிருக்கிறேன். அது கதைக்கும் வசனத்துக்கும் சில காட்சிகளில் நடிப்புக்கும் கிடைத்த வெற்றிதான்.

      நாடகத்தை அப்படியே திரைப்படமாக்கியபோது நடிப்பு அப்படி இருந்திருக்கிறது. இது விமர்சனம்தான்.

      மற்றபடி நானும் சிவாஜி படங்களோடு ஒரு காலத்தில் பயணித்தவந்தான்.

      நீக்கு
    4. //அந்தப் பாத்திரம் கண் முன்னே வராது.அல்லது எனக்கு வருவதில்லை. :(// எனக்கு வருவதில்லை என்று சொல்லி இருக்கேன். ஆகவே இது என் தனிப்பட்ட கருத்து! இந்த என் கருத்தால் ஜிவாஜிக்கு ரசிகர்கள் குறையப் போவதில்லை. அவர் புகழ் மங்கப் போவதில்லை! )))) எங்க வீட்டிலேயே எல்லோரும் ஜிவாஜி ரசிகர்கள் தான்!

      நீக்கு
    5. ஆமாம்.... ஆமாம்... ஆமாம் நெல்லை...

      நீக்கு
    6. ஆமாம்.. ஆமாம்.. ஆமாம் அப்பூடித்தான் சொய்ன்னாங்க:))

      நீக்கு
    7. //ஏன் சலங்கை ஒலியில் நடனம் ஆடும் பொழுது நடனத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருக்கும் ஒருவனப் போல ஆடியிருப்பார். // சலங்கை ஒலி படமெல்லாம் பார்த்ததே இல்லை. ஆனால் எஸ்.பி ஷைலஜா அவரைப் போட்டிக்கு அழைக்கும் ஒரு காட்சியைத் தொலைக்காட்சிகளில் கண்டிருக்கிறேன். அனைவரும் அந்தக் காட்சியில் கமலின் நடிப்பைப் பற்றி சிலாகித்துப் பேசி இருக்கின்றனர். அது சலங்கை ஒலிதானா என்பது தெரியாது. ஆனால் சலங்கை ஒலி படத்தில் அவருடைய நடனத்தைப் பிரபல நாட்டிய மேதை பத்மா சுப்பிரமணியம் கடும் விமரிசனங்கள் செய்திருக்கிறார். பல பத்திரிகைகளிலும் வந்தது. கமல் சிறு வயதிலேயே பரதம் கற்றுக் கொண்டிருக்கிறார் என்பதும் அறிவேன். அவர் திரைப்படத்துறையில் டான்ஸ் மாஸ்டர் தங்கப்பனுக்கு உதவியாகத் தான் முதலில் நுழைந்தார். அதுவும் தெரியும்.

      நீக்கு
    8. அது கீதாக்கா... கமல் அக்குளில் முடியோடு ஆடிட்டார்னு கண்டிச்சதா ஞாபகம்... அதெல்லாம் தப்பாம்!!

      நீக்கு
    9. ஸ்ரீராம்..... கமல் நடனத்தில் திறமையானவர். ஆனால் அப்போ அவருக்கு குழந்தை இல்லை. அதனால் ரசிகர்கள் சண்டையில் அவரது தலை உருண்டுகொண்டிருந்தது. அதையும் மனதில் வைத்து, சலங்கை ஒலில மீசையோடுதான் நடிப்பேன் என்று பிடிவாதம் பிடித்தார். இந்த 'அக்குள்' பிஸினெஸ் தெரியாது.

      ஆனால் போஸ்டர்களில், அந்த வயதில் நான் கமலை பரதநாட்டியம் டிரெஸில் பார்க்கும்போது, விநோதமாகத்தான் தெரிந்தார்.

      நீக்கு
    10. கீசா மேடம்.... நாம என்னமாதிரி சொன்னாலும், அந்தக் குழு, அந்த அந்த வருடத்துல 'சிறந்த நடிகர்' என்று தேர்ந்தெடுக்கும்போது, அந்த நடிகர் நல்லா நடிச்சுருக்கார் என்று நாம 95% ஒத்துக்கும்படியாத்தான் அவங்க செலெக்‌ஷன் இருந்திருக்கு (ஒரு தடவை எம்ஜியாருக்குக் கொடுத்ததைத் தவிர என்பது என் அபிப்ராயம். எனக்கு எம்ஜியார் பிடிக்கும் என்றபோதும்)

      நீக்கு
    11. கமல் காபி அடிப்பவராக இருக்கலாம். ஆனால் அவர் நடிப்பில் உழைப்பில் குறை சொல்ல முடியாது!

      நீக்கு
    12. @கீதா சாம்பசிவம் மேடம் - ////அந்தப் பாத்திரம் கண் முன்னே வராது.அல்லது எனக்கு வருவதில்லை. :(// - இப்படி அநியாயத்துக்குச் சொல்லிட்டீங்களே. நீங்க என்ன மாதிரி உணர்ச்சிபூர்வமா திரைப்படம் பார்க்க மாட்டீங்க போலிருக்கு. பாஹுபலி பார்த்தபோது (இரண்டும், தியேட்டரிலேயே 4 முறைகள், ஒவ்வொன்றும்) அவ்வளவு ஒன்றிவிட்டேன். இன்றைக்கு அஜித்தின் விசுவாசம் படம் பார்த்தபோதும்தான்.

      வீரபாண்டிய கட்டபொம்மன் படம்லாம் பார்த்து நாம உணர்ச்சி வசப்படலைனா அது அநியாயம் இல்லையோ? அந்தப் படத்தில் 'ஜக்கம்மா' என்ற பாட்டு வரும்போது, வீரபாண்டிய கட்டபொம்மன் இந்த முறை ஜெயித்துவிடக்கூடாதா என்று நான் பலமுறை (ஒவ்வொரு முறை படம் பார்க்கும்போதும்) உணர்ச்சிவசப்பட்டிருக்கேன். நீங்க சும்மா பொசுக்குன்னு சொல்லிட்டீங்க.

      அவர் 7 லிட்டர் ரத்தத்தை வாய்வழியாக கொட்டிக்கொண்டே 20 பக்க வசனம் பேசறது, அவர் இறக்கும் காட்சிகளை அதீதமாக டிராமடைஸ் பண்ணறதுன்னு இயக்குநர்கள் சொதப்பித்தான் அவர்மேல எரிச்சல் வரும்.

      இன்னொண்ணு, நல்ல நடிகர், ரொம்ப ஊதிப்போய், கர்ணன் படம்லாம் பண்ணும்போது கொஞ்சம் பாத்திரத்திலிருந்து நாம் விலகிவிட்டோம். அவர் மட்டும் உடம்பை ரஜினி மாதிரி மெயிண்டெயின் செய்திருந்தால் (நம்ம சாவித்திரி மற்றவர்களும்தான்) இன்னும் ரசித்திருக்கமுடியும்.

      நீக்கு
    13. நான் எம்ஜார் ரசிகையும் இல்லை, ஜிவாஜி ரசிகையும் இல்லை. அதே போல் இப்போதைய எந்த நடிக, நடிகையரின் ரசிகையும் இல்லை. பலரின் பெயர் கூடத் தெரியாது. ஆனால் வீரபாண்டியக் கட்டபொம்மன் படம் நாங்க பார்த்ததே தற்செயல். வேறே ஏதோ படம் பார்க்கப் போனவங்க அங்கே டிக்கெட் கிடைக்காமல் வீரபாண்டியக்கட்டபொம்மன் படத்தைப் பார்த்தோம். அப்போ ரொம்பச் சின்ன வயசு, 7 அல்லது 8 வயசுக்குள் இருக்கும். ஆகவே நிச்சயமாய் ரசித்திருப்பேன். பின்னால் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்பதோடு ஒன்பதாம் வகுப்புப் படிக்கையில் இருந்தே என்னோட பல கருத்துக்களின் அடிப்படை புரிய ஆரம்பித்ததும் கருத்துக்களும் மாற ஆரம்பித்தன. ரசனையும் மாற ஆரம்பித்தது. ஆகவே வீரபாண்டியக்கட்டபொம்மன் பற்றிய உண்மைகள் படித்ததும் அதன் தாக்கம் எவ்வளவு தூரம் மக்கள் மனதில் வேரோடி விட்டது என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டேன். அதிலும் எட்டப்பனைக் காட்டிக் கொடுத்தவராகச் சொல்லுவது! :(

      நீக்கு
    14. இதோட நிறுத்திக்கிறேன். ஏனெனில் இங்கே எல்லோருமே ஜிவாஜி ரசிகர்கள். யாருடைய மனதையும் புண்படுத்த விரும்பவில்லை. பொறுத்துக்கொள்ளும் அனைவருக்கும் நன்றி.

      நீக்கு
  12. ஸ்ரீராம் திருப்பதிக்குப் போயாச்சுனு நினைக்கிறேன். இங்கே ஆளைக் காணோமே! என்னோட பொங்கல் பதிவிலும் கருத்துச் சொல்லவில்லை. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணத்தில் இருக்கேன் கீதாக்கா...

      நீக்கு
    2. கிளம்பறதுக்கு முன்னால சொல்லியிருந்தா, கீழ்த்திருப்பதில எத்தனை மணிக்கு வடை கிடைக்கும், அங்க என்ன கோவிலையும் பார்த்திருக்கலாம் என்றெல்லாம் சொல்லியிருப்பேன். அவர்தான் மின்னல் வீரர் மாதிரி டபக் என்று 3 நாள் பயணம்னு சொல்லிட்டார்.

      நீக்கு
  13. இந்த உருளைக்கிழங்கு எக்ளேர்ஸ் படித்த சாபகமே இல்லை. அப்போது பின்னூட்டமிட்ட பாதிப்பேர் இப்போ வருவதே இல்லையே? கீமா மேடம் மட்டும் வயதில் குறைந்து கீதா அக்காவா உங்களுக்கு ஆயிருக்காங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த நாளை ஒட்டி பதிவில் பார்த்தால் கிடைக்கும் நெல்லை...

      நீக்கு
    2. அப்போவே படித்துப்பார்த்தேன். அன்றைக்கு பின்னூட்டமிட்டவர்களில் பாதிப்பேர் இப்போது இல்லை.

      நீக்கு
    3. ஏன் இல்லை. நான் இருக்கேனே! கோமதி அரசு, அவர்கள் உண்மைகள், கரந்தை ஜெயக்குமார், டிடி, நெ.த. ராஜி, ஜிஎம்பி, கில்லர்ஜி, ஏஞ்சலின், வெங்கட், இத்தனை பேர் இருக்கோம். ராமலக்ஷ்மி எப்போதேனும் தான் வருவாங்க. அப்பாதுரை சில சமயம் தொடர்ந்து வருவார். பல சமயங்கள் வரவே மாட்டார். ராஜராஜேஸ்வரி உலகிலே இல்லை. ( பரிவை குமார் முகநூலில் மும்முரம். தளிர் சுரேஷ் இப்போது எந்தப் பதிவுகளுக்கும் வருவதில்லை. கிரேஸ் மற்றப்பதிவுகளில் காண முடிகிறது.

      நீக்கு
    4. ஆமாம்... இப்பவும் நிறைய பழைய ஆட்கள் இருக்கிறார்களே...

      நீக்கு
  14. சிவாஜி புராணம் சுவாரஸ்யமாக இருந்தது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் சுவாரஸ்யம். எம்.ஜி.ஆர். பிறந்தநாளான இன்று சிவாஜியின் நினைவுகளை பகிர்ந்து கொண்டிருக்கிறீர்களே??

      நீக்கு
    2. நன்றி பானுக்கா... இது ரொம்ப முன்னாடியே ஷெட்யூல் செய்தது!

      நீக்கு
  15. கொஞ்சம் அழுத்தம் காட்டி வந்த கதை,
    சிவாஜி நடிப்பில் ஒரு சகாப்தம்
    என்பதை தன் இறுதி நாள்வரை நிருபித்தார்,
    பதிவின் அழுத்தம் சிவாஜி கணேசன் அவர்களில்
    வந்து கால் பதித்து நின்றிருக்கிறது,
    வாழ்த்துக்கள் சார்/

    பதிலளிநீக்கு
  16. நடிகர் திலகம் குறித்த பதிவுகள் பல அறியாதவை
    வெகு சுவாரஸ்யமும் கூட

    முதல் கதையில் சுதாரிப்பு
    சுப்பம்மா போல் சிலர் இருக்கத்தான்
    செய்கிறார்கள்

    கடைசிச் செய்தியும் அதற்கான பின்னூட்டமும்
    இரண்டு மடங்கு சுவாரஸ்யம்

    வாழ்த்துக்களுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுப்பம்மா? அது யாரு? அதைத் தேட வந்ததில் ஶ்ரீராம் கீழே விழுந்து அடிபட்டுக்கொண்டு தாறுமாறாகப் பேசியதைப் பற்றி எழுதி இருப்பதை இப்போத் தான் கவனித்தேன். நல்லவேளையா விரைவில் குணம் ஆகிவிட்டது.

      நீக்கு
    2. கீதாக்கா :) அது டவுட்டிங் தாமஸ் , பீட்டர் இங்கிலன்ட் , எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் ,ரூல்ஸ் ராமானுஜம் கேர்லஸ் கேசவன்,முன்ஜாக்கிரதை முத்தம்மா மாதிரிதான் சுதாரிப்பு சுப்பம்மா :)

      நீக்கு
    3. ஓஒ ஆராச்சி அம்புஜம் மாதிரின்னு ஜொல்லுன்கோ:)

      நீக்கு
    4. கர்ர்ர்ர்...கீதாக்கா... நான் விழுந்ததை முதலில் படிக்கவில்லையா?

      நீக்கு
    5. @Sriram, படிப்பதற்கும் அதைக் கவனிச்சுப் படிக்கிறதுக்கும் வித்தியாசம் தெரியும் தானே? முதல்லேயே படிச்சேன் தான். ஆனால் கவனிச்சது பின்னாடி!

      நீக்கு
  17. ஸ்ரீராம், பயணம் இனிதாக அமைய பெருமாள் துணை நிற்பாராக!.
    பெருமாள் தரிசனத்துக்கு.. சன நெரிசலில்.. கிட்டப் போகப்போக.. பக்திப் பரவசமாகி.. மெய்சிலிர்த்து.. பெருமாளைப்பார்க்கும்போது.. அவரது கழுத்தையும்... அதிராவின் வைர அட்டியலையும் பார்க்க மறந்திடாதீங்க பிளீஸ்ஸ்ஸ்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அதிரா... அவ்வளவு இனிமையாக இல்லை பயணம். பெருமாள் மன்னிப்பாராக....

      நீக்கு
    2. ஸ்ரீராம்.... திருப்பதி பயணம் எப்போதுமே இனிமையா இருக்காது. பெருமாள் தரிசனம் செய்த பிறகுதான், அதுவரை பயணத்தில் இருந்த கஷ்டம், மறந்து மனதில் ஒரு இனிமை வரும். அது உங்களுக்கும் வரணும்.

      நீக்கு
    3. // திருப்பதி பயணம் எப்போதுமே இனிமையா இருக்காது .//

      நான் ஹோமியோபதி ட்ரீட்மெண்ட் எடுத்தபோது டாக்டர் அனந்தநாராயணன் சொன்னார், "பயப்படாதீங்க.. தான் தர்ற மருந்துல முதல்ல எல்லாம் அதிகமாகும். அப்புறம்தான் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகும்"

      அது நினைவுக்கு வந்தது!

      நீக்கு
  18. வாணிக்கதை.. ஹா ஹா ஹா.. உண்மையில் ஸ்ரீராம், வாழ்க்கையில் நடக்கும் சாதாரண சம்பவங்களை வைத்தே குட்டிக் கதைகளை சுவாரஷ்யமாக எழுதுவதில் உங்களை மிஞ்ச யாரும் இல்லை... கதை எழுதுவது சுலபம் ஆனா உங்களைப்போல, போறிங் இல்லாமலும், பந்திக்குப் பந்தி தாவி ஓடாமல் நின்று, நிதானமாக, ஒவ்வொரு வரியையும் படிக்ககூடிய வகையில், கதை எழுத உங்களால் மட்டுமே முடியும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அதிரா... நீங்க என்னை வைச்சு காமெடி பண்ணலைன்னா சரிதான்...

      நீக்கு
  19. வாணிபோல சிலரை நானும் சந்தித்திருக்கிறேன்ன்.. அதாவது பொருட்கள் வாங்கியதில்லை இப்படி, ஆனா உன்னிடம் மட்டுமே நம்பிச் சொல்கிறேன் யாருக்கும் சொல்லி விடாதே எனச் சொல்லிச் சொல்லியே உலகமெல்லாம் கதை சொல்வோர் ஹா ஹா ஹா... நாமும், ஏதோ நம்மீது மட்டுமே நம்பிக்கை வைத்துக் கதை சொல்கிறார்களே என.. அவர்களுக்காக பிராத்தித்துக் கொண்டும், வலு பத்திரமாக அக்கதையைப் பேணிக் கொண்டும் இருப்பேன்ன்.. ஹா ஹா ஹா,..

    அவரவர் செய்வது அவரவரோடு, ஆனா நாம் எப்பவும் நம்பிக்கையாளராக இருக்கோணும் இப்படியேதான் நான் நினைப்பேன்.

    நம்ப நட, நம்பி நடவாதே!!.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... நம்ப நட, நம்பி நடவாதே... ஸூப்பர். இது மாதிரி கேரக்டர்கள் நிறைய இருக்கிறார்கள். கொஞ்சம் நல்லா கவனிச்சா நம்மை வைத்து நம் நண்பர்கள் நிறைய கதை எழுதலாம்.

      நீக்கு
  20. ஆஹா நான் இப்போ அடுத்தடுத்து சிவாஜியின் படங்கள் பார்க்கிறேன்.. இப்போ பார்த்து, சிவாஜி அங்கிள் பற்றி எழுதி இருப்பது ஏதோ எனக்காக எழுதியதைப்போல மகிழ்வாக இருக்கு ஹா ஹா ஹா.. பாலும் தேனும், பாலாடை,
    கவரிமான், நீலவானம்- இது இப்போ பாதி வழியில்:))..

    ஹா ஹா ஹா யூ ரியூப்பில் ஒரு நன்மை, ஒரு படம் பர்த்தால்.. அதுவே நல்ல படமாய்த் தேடித்தரும்.. இதையும் பாரு என ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
  21. //என்றார் விஜய் அரோரா.
    //

    உண்மையில விஜய்க்கு அரோகரா:) எனச் சொல்லுறீங்கபோல.. பக்தி யாத்திரையில் இருப்பதனால் என நினைச்சு.. அடடா எழுத்துப்பிழை விட்டிட்டாரே எனவும் .. அவசரப்பட்டு நினைச்சுட்டென்ன்.. இப்படி ஒரு பெயரோ.. இன்றுதான் கேள்விப்படுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம்ம்ம்கூம் :) அப்போ பிரியா வாரியார்னா :) ப்ரியா எதை வாரியவர்னு கேப்பீங்களா

      நீக்கு
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர் அப்பூடில்லம் கேய்ப்பனோ?:) நம்ம ப்ப்ப்ப்ரியாவை நேக்குத் தெரியாதோ?:)

      நீக்கு
    3. விஜய் அரோரா ஒரு அழகான ஹிந்தி நடிகர். யாதோங் கி பாராத் படத்தில் மூன்றாவது சகோதரனாக வருபவர்.

      நீக்கு
    4. ஹா... ஹா... ஹா... ஏஞ்சல்! ப்ரியா வாரியர் பற்றி நீங்கள் சொல்லி இருக்கும் உதாரணம் சிரிப்பு வந்தது.

      நீக்கு
  22. சிட்னி நியூஸ் ஆச்ச்சரியம்.. நான் மயங்கித் தெளிஞ்சால்ல்.. தமிழ்நாட்டுத்தமிழில் பேசுவேனோ இல்ல ஹிந்தியோ தெரியல்லயே ஹா ஹா ஹா..

    டீசர் அழகு ஹா ஹா ஹா... தான் போட்ட டீசரைத் தானே எடுத்து வந்து அறிமுகப்படுத்தும் நிலைமை:) ஹா ஹா ஹா ச்சும்மா சொல்லிப் பார்த்தேன்.. அதிராவும் கொமெடி பண்ணுறேனாம்.. எங்கட கீசாக்காவைப்போல:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இஹ்திலென்ன டவுட் :) நீங்க மியாவ் மியாவ்ன்னு பேசுவீங்க அப்போ நான் எப்படி பேசுவேன் :) மே மே பா பா னு ஆடுமாதிரி :)

      நீக்கு
    2. ஹா ஹா ஹாஅ எல்லோரும் ஓடியாங்கோ:)... அஞ்சுவும் கொமெடி பண்றா:).... இருந்தாலும் இந்த ஐடியா நேக்கு வரல்லியே:)...

      நீக்கு
    3. தான் போட்ட டீஸரை தானே எடுத்து வந்து... கர்ர்ர்ர்ர்ர்ர்..... அப்போ அது ரொம்ப ஃபேமஸ் ஆச்சாக்கும்.... நம்புங்க...

      நீக்கு
    4. நல்லவேளை நீங்க ரொம்ப கதைகள் படிக்கறதில்லை (னு நினைக்கறேன்). பொன்னியின் செல்வன் போன்ற கதைகள்லாம் படிக்காமல் மற்றபடி வேறு கதைகளை மட்டும் படித்திருப்பதால், 'வெடிகுண்டு, பாதாள அறை, கவசம் எங்க' என்றெல்லாம் சொல்லிவிட மாட்டீர்கள் என்று நம்ம்புகிறேன் அப்பாவி.

      நீக்கு
    5. ஹா ஹா ஹா கர்ர்ர்ர் 4 நெ.த:).. நான் உப்பூடி பயங்கரக் கதைப்பக்கம் ஹெட்:) வச்சும் இருக்க மாட்டனே:)).. நான் படிப்பதெல்லாம்.. ஆயிரங்கால் மண்டபம்.. சிவப்புக்கல் மூக்குத்தி... அவள் ஒரு இந்துப்பெண்...போய் வருகிறேன்ன்... சொந்தம் எந்நாளும் தொடர்கதைதான்... இவை எல்லாம் படிச்சிட்டேன்ன்ன்:)).. இன்னும் லிஸ்ட் இருக்கு வாணாம்ம்:)).. முக்கால்வாசியும் கண்ணன் அங்கிள்[செல்லமாச் சொன்னேன்:)] எழுதியவை:)). ஹா ஹா ஹா.

      நீக்கு
  23. வாணி கற்பனை கதாபாத்திரம் போல் தெரியவில்லை.
    சிலர் இதுபோல நடந்து கொண்டதை பார்த்து இருக்கிறேன்.
    ஒரே மாதிரி உதவிகள் இல்லை, வேவ்வேறு உதவிகள்.


    //தினமலரில் 2013 இல் வெளியான 'நான் சுவாசிக்கும் சிவாஜி' என்கிற YG மகேந்திரனின்//

    சிவாஜியின் பகிர்வு படித்த நினைவுகள் இருக்கிறது.
    YG மகேந்திரன்
    பேட்டியில் சொன்னதும் கேட்டு இருக்கிறேன், அவருக்கு சிவாஜியிடம் பாசம், அன்பு, நெருக்கம் அதிகம். ஆஸ்பத்திரியில் இருந்த நாட்களில் அவர் அடிக்கடி அவரை போய் பார்த்துக் கொண்டு உரையாடிக் கொண்டு இருந்ததை ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அக்கா... அது முக்காலும் கற்பனையே... பார்த்தால் அப்படி நிஜமாவே ஒரு ஆளைத் தெரியும்ங்கறார் கீதா அக்கா...

      மகேந்திரனின் அந்தத் தொடர் ரொம்ப சுவாரஸ்யம். முன்னரே அதன் வேறு சில பகுதிகளைப் பகிர்ந்திருக்கிறேன்.

      நீக்கு
  24. அநேகமா வாணி உங்களையும் தயிர்சாதம் பிஸ்கட் பார்சல் எடுத்திட்டு போக வச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன் :)
    இதுமாதிரி ஒரு ஒரு பக்க கதை ஒரு கூட்டு குடும்பத்தில் அண்ணன் தன்னோட பேன்ட்டை நீளமா இருக்குன்னு வெட்டி தக்க சொல்லுவார் .சொன்னவர் அம்மா மனைவி அக்கா தங்கைன்னு நாலுபேர்கிட்டயும் சொல்லி வைக்க அடுத்தநாள் தீபாவளிக்கு பேண்ட் அரைகால்ச்சட்டையா உருமாறியிருக்கும் :)
    இந்த வாணி கேரக்டர்ஸ் நிஜத்தில் இருக்காங்க :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா குடும்பமே லூசுக்குடும்பம்போல இருக்கே:)....

      நீக்கு
    2. அது குமுதத்தில் வந்த கதை :) முதலில் எல்லாரும் ஆளாளுக்கு பிசினு சொல்லி முடியாததுன்னு சொல்வாங்க அப்புறம் அன்னான் மேல் பரிதாப்பட்டு வெட்டி தைப்பாங்களாம்

      நீக்கு
    3. எனக்கும் படிச்ச நினைவா இருக்குது அஞ்சு..

      நீக்கு
    4. ஏஞ்சல்... என்னைன்னா? என்னையா, கதைல வர்ற நான்ங்கற கேரக்டரைய!!

      நீக்கு
    5. குமுதத்தில் வந்த அந்த கதை படித்த நினைவு இருக்கிறது.

      நீக்கு
    6. அதாவது வாணி கேரக்டருக்காக நீங்களும் பார்சல் சாதம் தண்ணி கொண்டுபோயிருப்பீங்கன்னு சொன்னேன் :) நிஜ சம்பவம் போலிருந்து

      நீக்கு
  25. ஆஅ ! ஜிவாஜி அங்கிள் பற்றிய பகிர்வு .எனக்கு கர்ணன் என்றாலே ஜிவாஜி அங்கிள்தான் நினைவுக்கு வரார் :) தில்லானா மோகனாம்பாளில் சிக்கல் ஷண்முக சுந்தரமாய் வாழ்ந்தவர் சில படங்கள் சூப்பராவ் சூப்பர் ஆனா சில பல படங்கள் வேண்டாம் ..எனக்கு இப்போவே யாரோ தலையில் நங்குன்னு குத்துற உணர்வு :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எது சூப்பர் ?? எனக்கு அடிக்கடி தலைல யாரோ நங்குன்னு குட்டுற பிரமை வருதே அதுவா கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
  26. அந்த சாக்லேட் எக்லர்ஸ் :) நான் stuffed டம்ளர் இட்லின்னு நினைச்சேன் முதலில் பார்த்தப்போ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்ர்ர்ர்ர் நான் அவிச்ச மரவள்ளிக்கிழங்கும் தூளும் என நினைச்சேன் ஹா ஹா ஹா

      நீக்கு
    2. GRRRRR :) என்னை தூங்க வைக்க சதி நடக்குது :) மரவள்ளி பார்த்தாலே மயக்கம் கமிங்

      நீக்கு
    3. நான் விடா முயற்சி பண்ணி மூன்றாம் தடவையா பொரிச்சுச் சாப்பிட்டேன் ஒண்ண்ணும் ஆகல்ல ஹா ஹா ஹா:)

      நீக்கு
    4. கர்ர்ர் :) சாப்பிட்டு 24 மணிநேரம் ஆச்சா ??

      நீக்கு
  27. பாவம் அம்மா பயந்திருப்பார் ...இந்த மாதிரி புது மொழியில் பேசுவது FAS .. Foreign Accent Syndrome (FAS),
    நீங்களும் எதோ மொழியில் பேசியிருக்கிங்க :) அநேகமா நீங்க கொய்யா TREE ல் இருந்து விழுந்ததால் கொங்கணி மொழி பேசியிருக்க சான்ஸ் இருக்கு :)
    இப்படி இன்னொரு ஆஸ்திரேலிய காரர் சீன மொழியிலும் இன்னும் சிலர் புது மொழியெல்லாம் பேசியிருக்காங்க :)
    தலையில் அடிபட்டதும் கூட நிறைய ஸ்ட்ரோங் மெடிஸின்ஸும் தான் இதற்கு காரணம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாங் இன்னொன்னு உலகப்போர் காலத்தில் ஒரு நார்வே நாட்டு பெண்ணுக்கு அடிபட்டு ஜெர்மன் மொழியில் பேசபோக ஊரைவிட்டே தள்ளிவைச்ச சம்பவமும் உண்டு

      நீக்கு
    2. நான் அவ்வப்போது கீழே விழுந்து அடி பட்டுகிட்டே இருப்பேன் அப்போ... ஒருதரம் மொட்டைமாடிலேருந்து விழுந்தேன்!!!

      நீக்கு
    3. அப்போ மொட்டை மாடிலருந்து விழுந்தப்போ என்ன மொழியில் பேசினீங்க :)

      நீக்கு
  28. நானும் கீழே இப்படி விழுந்து இருக்கிறேன். ஆனால் வேறு பாசை பேசவில்லை.
    சிட்னி பெண்ணுக்கு போன ஜென்ம நினைப்பு வந்து விட்டதோ!

    பதிலளிநீக்கு
  29. திருப்பதி பெருமாளிடம் எனக்கும் சேர்த்து வணங்கி வாங்க.
    உடம்பு படுத்திக் கொண்டு இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்காகப் பிரார்த்திக்கிறேன் கோமதி.விரைவில் உங்கள் உடல் நலம் சரியாகப் பிரார்த்தனைகள். இந்தக் கமலாவைக் கூடக் காணோம் சில நாட்களாக! என்னனு தெரியலை! :( அவரும் கீழே விழுந்து பாதத்தில் அடிபட்டுக்கொண்டிருந்தார்.

      நீக்கு
    2. கண்டிப்பாக கோமதிக்கா... திருப்பதிலதானே இருக்கிறேன்... இதைப் படித்த உடன் ஒருதரம் மானசீகமாக பிரார்த்தனை செய்து விட்டேன்.

      நீக்கு
    3. கீதாமா, இன்னும் இருக்கோமே பகுதில என்னை மறந்ததேன்ன்ன்ன்ன்ன்ன்ன்.
      பூஹூ.

      நீக்கு
    4. ஹையோ, ரேவதி, எப்படியோ உங்க பெயர் விட்டுப் போயிருக்கு! :( நீங்களும் தான் ஆரம்பத்திலிருந்து எ.பி.யோடு தொடர்பில் இருக்கீங்க! நானெல்லாம் அவ்வப்போது தான் வந்து வந்து போயிட்டிருந்தேன். கௌதமன் வைத்த "அவரை" துவரை போட்டிக்கு அப்புறமாத் தான் தொடர்ந்து வர ஆரம்பிச்சேன். ஆரம்பத்தில் நீங்க பாடி அதைப் பதிவு செய்தது எல்லாம் நினைவில் இருக்கு.

      நீக்கு
  30. /வியாழன், 17 ஜனவரி, 2019
    உங்களுக்கு சிவாஜியை தெரியுமா?//

    யூ மீன் சிவாஜி ராராவ் :) மை சித்தப்ஸ் :)))))))))

    பதிலளிநீக்கு
  31. @ miyaw :))))))

    https://media0.giphy.com/media/FBTGkycQ2uT60/giphy.gif

    பதிலளிநீக்கு
  32. அன்பு ஸ்ரீராம்,
    திருச்சானூரில் நிறைய மஞ்சள் சரடுகள் கொடுப்பார்கள்.
    அதை வாங்கிக் கொண்டுவந்து தெரிந்தவர்களுக்குக் கொடுங்கள்.சரடு மாற்றிக் கொள்ள சௌகரியமாக இருக்கும். இன்னும் சரடு போட்டுக் கொள்பவர்கள் இருக்கிறார்களோ தெரியாது.

    பதிலளிநீக்கு
  33. நேற்று உங்கள் ஏரியா பக்கம் தான் இருந்தேன்... சந்திக்க முடியவில்லை... ம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா DD? அடுத்த முறை பார்ப்போம்.

      நீக்கு
    2. “அப்பாடாஆஆஆஆ தப்பிட்டேன் செல்ஃபி எடுக்காமல் டிடி உடன்:)”, என, ஸ்ரீராம் நிம்மதிப் பெருமூச்சு விடுவது, ஸ்கொட்லாந்து மலையில எதிரொலிக்குதே:)) ஹா ஹா ஹா ஹையொ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)) மீ ரொம்ப நல்ல பொண்ணு:).

      நீக்கு
    3. ஹா... ஹா... ஹா.. அதிரா... போட்டோ எடுத்தாலுமே நம்ம அன்புக் கண்டிஷன் எப்பவும் உண்டுதானே?

      நீக்கு
  34. உங்க கிட்டே மட்டும் ஒரு ரகசியம் சொல்றேன்:

    ஆஸ்பத்திரி சம்பந்தப்ப்ட்டவங்க கதை எழுதினாலே பார்த்த அனுபவமாத் தான் இருக்கும் போல!..

    பதிலளிநீக்கு
  35. சிவாஜிக்கு ஹிந்தி தெரியுமோ என்று நிச்சயமாய் கேட்க மாட்டேன்.. அவர் ஹிந்தி தெரிந்த மாதிரி காட்டிக் கொண்டதே இல்லை என்பது மட்டும் நிச்சயமாய் தெரியும்.

    சிவாஜி -- லதா மங்கேஷ்கர் ஓ.கே. அது என்ன பிரபு -- அமிதாப் பாசம்?.. சிவாஜி காலத்திலேயே இருந்த குடும்ப சினேகிதம் என்பதைத் தாண்டி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிவாஜி அமிதாப் பாசம், நட்பு எப்போதும் உண்டு ஜீவி ஸார். அது சரி சிவாஜி நடித்த இந்திப்படம் ஒன்று உண்டு தெரியுமோ?

      நீக்கு
  36. டாக்டருக்கு பிரென்சு தெரியுமான்னு ஏன் யாரும் சந்தேகப்படலே?.. அந்தப் பெண் பேசினது ஏன் மெக்ஸிகனாக இருக்கக் கூடாது? சலவையிலிருந்து வந்த சட்டையைப் போட்டுக் கொண்டதைப் பற்றி சுஜாதா கூட இப்படி ஏதோ கதை விட்டிருக்கிறார்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சார் வெளிநாட்டு டாக்டர்ஸுக்கு மோஸ்ட்லீ ரெண்டு மூன்று மொழி தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு .அவர் பிரெஞ்சு டாக்டர் ஆஸ்திரேலியா சென்று பணி புரிபவராகவும் இருக்கலாம் .அதே போல் அமெரிக்க வாழ் டாக்டர்ஸ் ஸ்பேனிஷ் தெரிஞ்சவங்களாவும் இருப்பாங்க .இங்கே ஸ்கூலிலேயே எல்லாருக்கும் அடிஷனல் லாங்க்வேஜ் இரண்டு மூன்றாவது தெரியணும்னு வலியுறுத்தறாங்க .
      பல ஐரோப்பியர்களுக்கு பிரெஞ்சு அத்துப்படி

      நீக்கு
    2. ஆவ்வ்.... அதிராமல் சொல்லியிருக்கிறீர்கள். டாக்டர்கள் என்று இல்லை. என் பேரன் தன் ஆறாவது கிரேட் படிப்பிலேயே இப்பொழுது ஸ்பேனிஷ் கற்கிறான்.

      ஸ்ரீராம் இந்த மாதிரி கோர்த்து வாங்கற பின்னூட்டங்களுக்கெல்லாம் இப்போ பதில் சொல்லாம த்ப்பிடறார். :) நீங்க கூட சுஜாதாவைக் கண்டுக்கவேயில்லைடே!.. :))

      நீக்கு
    3. கண்டுக்கவேயில்லையே!...

      நீக்கு
    4. //சலவையிலிருந்து வந்த சட்டையைப் போட்டுக் கொண்டதைப் பற்றி சுஜாதா//
      இந்த சம்பவம் கற்றதும் பெற்றதும் கட்டுரையில் வந்ததா ஜி.வி சார் ..விவரம்தெரியாததால் அப்படியே போய்ட்டேன் :)

      நீக்கு
    5. சலவை சம்பந்தப்பட்ட சுஜாதாவின் பிரபல... ஸ்ரீராம் இந்தப் பக்கமே இப்போதைக்கு வரமாட்டார்..
      அவராவது சொல்கிறாரா என்று பார்க்கலாம் என்றால், அவரை எப்படி வரவழைப்பது?,, நீங்களாவது
      ஒரு உபாயம் சொல்லுங்களேன்..

      நீக்கு
    6. ஜீவி ஸார்... சுஜாதாவைக் குறிப்பிட்டு நீங்கள் சொல்வது மெக்சிகோ தேசத்து சலவைக்காரி ஜோக். அது படிக்கக்கூடாத ஜோக் வகையறா... என்ன செய்ய!

      நீக்கு
    7. கரெக்ட்.. இதுக்குத் தான் பழைய பதிவானாலும் அப்பப்போ ஸ்ரீராம் பின்னூட்டங்களை வந்து பாக்கணும் என் கிறது.

      நீக்கு
  37. சிவாஜி என்ற ஓர் அரிய கலைஞன் நமக்குக் கிடைத்த வரப்பிரசாதம். அவர் நடிப்பைப் பார்க்க, ரசிக்க நாம் அதிகம் கொடுத்துவைத்துள்ளோம் என்றே நினைத்துக்கொள்வேன்.

    பதிலளிநீக்கு
  38. சிறுகதை.. இப்படியும் மனிதர்கள்!

    நடிகர் சிவாஜி பற்றி அறியாத பல தகவல்களின் தொகுப்பு.

    பதிலளிநீக்கு
  39. ஸ்ரீராம்ஜி உங்கள் கதை மிக மிக அருமை. ரொம்ப அழகாக எழுதியிருக்கிறீர்கள்.

    சிவாஜி பற்றி பல கருத்துகள் நிலவி வந்தாலும் அவரை நடிப்பின் பல்கலைக்கழகம் என்றும் கூடச் சொல்லலாம். அதீதமாக நடிப்பு இருந்திருக்கலாம் ஆனால் முகநூலில் நண்பர்கள் சொல்லியிருப்பது போன்று இப்போது கோடி கோடியாகக் கொடுத்தாலும் நடிக்கத் தெரிவதில்லையே பலருக்கும். அந்த வகையில அவர் ஒரு வொர்க்காலிக். சரியான நேரத்துக்கு வருதல், நடிப்பில் அந்தக் காட்சிக்கு தன் திறமையைக் கொடுத்தல் என்று பல வகைகளில் நல்ல நடிகர்.

    அவரைப் பற்றிய சில தகவல்கள் உங்கள் பதிவின் மூலம் அறிகிறேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  40. ஸ்ரீராம் உங்க க்தையை அன்னிக்கே வாசித்துவிட்டேன். ஆனால் அப்புறம் பதில்தான் போட முடியலை. கோயிலுக்குப் போய் வரும் போது உடம்பு சரியில்லாமல் போனதால்...

    சூப்பரா எழுதியிருக்கீங்க. யதார்த்தம் கதையில். இப்படியும் இருக்கிறார்கள்தான்...

    இதோ சிவாஜி பத்தி வாசித்துவிட்டு வரேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல விடுபட்ட பதிவுகளுக்கும் அங்க ஒரு கால் இங்கஒரு கால்னு சுத்திக்கிட்டுருக்கேன்...வரேன்...

      கீதா

      நீக்கு
  41. சிவாஜி பற்றிய செய்திகள் பல வியப்பு. அவரது நடிப்பிற்கு எப்படி ஒரு இம்பாக்ட்!

    உஷா ஒவியர் என்பதும் செய்தி. (நம்ம பூஸார் கண்ணில் இது படலையோ!!! ஆஷா போன்ஸ்லே, அமுதசுரபி எப்போது உஷா ஆகப் போகிறாரோ!!!!!!)

    கீதா

    பதிலளிநீக்கு
  42. சிவாஜி பத்திய உங்க முகநூல் கருத்து குறிப்பா உங்க மகன் அடித்த கமென்டும் அதற்கு வந்த பதிலும் மிகவும் ரசித்தேன். அதுவும் இப்ப உள்ள நிலைமை பத்தி சொன்ன கமென்ட் ஹா ஹா ஹா..அதானே நு சொல்ல வைச்சுது.

    நீங்க கீழ விழு...................................ந்து...... ஹப்பா நல்ல காலம் தலையில் எதுவும் ஆகாமல் இருந்ததால்தானே இன்று இப்படி அழகாக எழுதும் ஸ்ரீராம் எங்கள் எல்லோரோடும் சேர்ந்து கும்மி அடிக்கும் நண்பராகக் கிடைச்சுருக்கார் அந்த வெற்றி வேல் முருகனுக்கு நன்றிகள் ப்ளஸ் அரோகரா!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  43. தலையில் அடிபடுவதால் சிலருக்கு இப்படி வேறு மொழி பேசுவது நடக்கிறது என்று வாசித்திருக்கிறேன்...(எல்லாம் மகனின் சகவாசத்தினால் ஹிஹிஹிஹி!!) அதற்குப் பெயர் Foreign Accent Syndrome ஆம்....

    நல்ல காலம் நீங்க தப்பிச்சீங்க இல்லைனா வேறு மொழி பேசியிருப்பீங்களோ?!!! இந்த மூளை எத்தனை விஷயங்களை தன்னுள் வைத்திருக்கிறது?! இதுவும் எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷனா இருந்துச்சு அந்த ரோபோ கதை எழுதிய போது.

    எனக்குத் தெரிந்த ஒருவர் என் சிறு வயதில்....அவர் தினமும் குடிப்பவர். அவருக்கு ஆங்கிலம் சுத்தமா தெரியாது. எழுதவோ வாசிக்கவோ கூடத் தெரியாது. தமிழே தடுமாறுவார். ஆனால் குடித்தால் மிக அழகாக ஆங்கிலம், ஹிந்தி எல்லாம் பேசுவார்! எனக்கு அப்ப ரொம்பவே ஆச்சரியமா இருந்துச்ச்சு...எப்படி இப்படி என்று. அப்போது எனக்குப் புரியாத ஒன்று...எனக்கு தலையில் அதுவும் கரெக்ட்டாக பின் தலையில் அடிபட்டு நினைவில்லாமல் இருந்தப்ப நான் விழித்ததும் டாக்டர் என்னிடம் தமிழில் பேசினார் விலாசம் கேட்டார், நான் சரியாகச் சொன்னதும் அவருக்குத் திருப்தி. என் மகனும் என்னை டெஸ்ட் செய்தான் அப்பத்தான் சொன்னான் நல்ல காலம் நீ ஹிந்திலயோ தெலுங்குலயோ பேசலை நான் கஷ்ட்டப்பட்டுப் போயிருப்பேன்னு சொல்லி இப்படியான ஆர்ட்டிக்கிள்ஸ் காட்டினான். அப்ப டக்குன்னு இந்த நபர் தான் நினைவுக்கு வந்தார். ஒரு வேளை அதீதமாகக் குடித்தால் மூளையில் ஏதேனும் பாதிப்பு தற்காலிகமாக ஏற்பட்டு இப்படிப் பேச வைக்குமோ என்று..யோசித்து நெட்டில் தேடினால் ஆஹா நிறைய கதைகள் கிடைத்தது... அப்போதான் நம் மூளையின் திறனை அறிந்தேன்...அதற்குள் எத்தனை ரகசியங்கள் என்று வியந்தேன்....மூளை ஓர் ஆழ்கடல்! இயற்கை/இறைவனின் படைப்பில் மனிதனால் எக்காலத்திலும் ஜெயிக்க முடியாத ஒன்று!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலையில் அடிபடுவதற்கு முன்னாலிரண்டும் இரண்டும் எவ்வளவு என்றால் மூன்று என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அடிபட்டபின்தான் சரியாய்ச் சொல்ல ஆரம்பித்தேன்!!!

      நீக்கு
  44. அது என்ன டிஷ் ஸ்ரீராம்? ஏதோ ஸ்டஃப்ட் போன்று இருக்கு. கொழுக்கட்டை வித்தியாசமான ஷேப்லயா? டம்ப்ளர்ல? மேல மி பொ வா தூவி இருக்கு? நானும் என்னெல்லாமோ யோசித்துப் பார்த்தேன் பிடி கிடைக்கலை....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன அநியாயம்... கீதா... அந்த அருமையான மிக அருமையான அபூர்வமான டிஷைப் பற்றி நீங்கள் படித்ததில்லையா? என்ன ஒரு சோகம்...

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!